Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உரிமைக்காக போராடி உயிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை யாராலும் தடுக்க முடியாது: சம்பந்தன்

Featured Replies

உரிமைக்காக போராடி உயிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை யாராலும் தடுக்க முடியாது: சம்பந்தன்

 

sampanthan%20200.jpgரிமைக்காக போராடி உயிரிழந்தவர்களுக்கு தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நாளை (27ம் தேதி) அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இதனிடையே, மாவீரர் நாள் பயங்கரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் பொது இடங்களில் விளக்கேற்றி அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் கடும்போக்குடைய சிங்கள அரசியல்வாதிகளும், இலங்கை ராணுவத்தினரும், காவல்துறையினரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், உரிமைக்காக போராடி உயிரிழந்தவர்களுக்கு தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "மரணித்த தமது உறவுகளுக்கு அமைதியான முறையில் ஈமக்கடன் நிறைவேற்றி, அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு. இதனை யாராவது தடுத்தால் அது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.

உயிரிழந்தவர்கள் மதிக்கப்பட வேண்டும். இதனைத் தடுக்க முயல்வது நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதிக்கச் செய்துவிடும். இதனை இந்த அரசிடம் சொல்லிவைக்க விரும்புகின்றேன். இந்த நாடு ஜனநாயக நாடு என்றால், இது நல்லாட்சி என்றால், தமிழ் மக்கள் தங்கள் எண்ணங்களை உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், ஒன்றுகூடுவதற்கும், மரணித்த தமது உறவுகளை நினைவுகூருவதற்கும் சுதந்திரம் உள்ளது.

தமிழர் பண்பாட்டில் இறந்தவர்களுக்கு ஈமக்கடன் நிறைவேற்றுவது முக்கியமானதாக விளங்குகின்றது. அவர்களை நினைவுகூறுவதைத் தடுக்க முயல்வது தமிழ் மக்களின் மனக்காயங்களையும், துன்ப துயரங்களையும் மேலும் ஆழப்படுத்தும்" என்று கூறினார்.

http://www.vikatan.com/news/world/55597-tamil-national-alliance-sambanthan-leader-intervie.art

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையானதா இல்ல விகடனின் விகடமா..?! சொறீலங்கா.. ஊடகங்களில் வராத செய்தி எப்படி விகடனுக்கு வந்தது..??! ஐயா பிரத்தியேகமாக விகடனுக்கு அனுப்பி வைச்சவரோ..?!:rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அடி மாதிரி அண்ணன் தம்பியும்  உதவ மாட்டான் என்று சொல்வார்கள்!

அவுசு .... செய்யிற வேலை!

இது வைல்ட்காட் ரவுண்டு ... இப்பிடித்தான் இருக்கும்.
அடுத்த ரவுண்டு ...சரியாயிடும். 

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே!!!!தாயகப் பேப்பரில் வராதது ஆனந்த விகடனுக்கு எப்படி??????

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

அதுதானே!!!!தாயகப் பேப்பரில் வராதது ஆனந்த விகடனுக்கு எப்படி??????

இது.....  ஆஆஆஆனந்த  th?id=OIP.M182089333a06921c4a68f8b42ef14        விகடன்   th?id=OIP.M5e05c4ea6d696eafb46d77a24db42      எல்லாமும் நாளைக்குப் புரிந்துவிடும்.

4 hours ago, Maruthankerny said:

அடி மாதிரி அண்ணன் தம்பியும்  உதவ மாட்டான் என்று சொல்வார்கள்!

அவுசு .... செய்யிற வேலை!

இது வைல்ட்காட் ரவுண்டு ... இப்பிடித்தான் இருக்கும்.
அடுத்த ரவுண்டு ...சரியாயிடும். 

சிரிச்சு குடல் அறுந்து போச்சு .சிங்களவன் வாசித்தால் இதை விட சிரிப்பான் .இவ்வளவு பேர் நாட்டை விட்டு ஓடியது தான் குடுத்த குடுவையால் தானோ என்று .

  • கருத்துக்கள உறவுகள்

மில்லியன் கணக்கான ரூபாய்கள் செலவில் சிறீலங்கா சிங்கள சனாதிபதியே பங்கர்வெட்டி ஓடிப் பதுங்கியது பூனைக்குப் பயந்தா..? புலிக்குப் பயந்தா..:grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, arjun said:

சிரிச்சு குடல் அறுந்து போச்சு .சிங்களவன் வாசித்தால் இதை விட சிரிப்பான் .இவ்வளவு பேர் நாட்டை விட்டு ஓடியது தான் குடுத்த குடுவையால் தானோ என்று .

ஒரே சிந்தனா அளவுடைய இரு பகுதியினர் சேர்ந்து சிரிப்பதில் .....
மனிதர்கள் பார்க்க என்ன இருக்கிறது ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.