Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இணைப்பாளராக இலங்கை செல்கிறார் இமானுவேல் அடிகளார்?

Featured Replies

36 minutes ago, nedukkalapoovan said:

அதென்ன தீர்வு.. அதை தமிழ் மக்கள் ஏற்பார்களா.. ஏற்றால்.. அதை எப்படி சிங்கள மக்களிடம் கொண்டு போய் அங்கீகாரம் பெறுவது.. இது தொடர்பிலும் சொன்னால் உங்கள் கருத்து வரவேற்கப்படக் கூடிய கருத்தா என்ற தெளிவைப் பெறும்.

வடக்கு மக்கள் கடந்த தேர்தலில் தெளிவாக ஒன்றை கூறி இருக்கின்றார்கள். ஒரு நாடு இரு தேசம், பிரிந்து போகும்  உரிமையுள்ள முழுமையான சுயநிர்ணய உரிமை (உள்ளக சுய நிர்ணய உரிமையை அல்ல) போன்ற கோரிக்கைகளுடன் தேர்தலில் நின்ற கட்சியை பெரும் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்கள்.  இரண்டு பட்ட நாட்டுக்குள் தீர்வு என்பது இன்றைய உலக அரசியலின் போக்கில் சாத்தியமில்லை என்பதை உணர்ந்து இருக்கின்றார்கள்.

அங்கு வாழும் மக்கள் அவர்கள் என்ன முடிவு எடுக்கின்றார்களோ  அதை முடிவை ஒட்டித்தான் என் அரசியல் கருத்துகள் இருக்கும்.

Quote

ஏனெனில்.. இப்படி ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு தேடி செய்யப்பட்ட எத்தனையோ ஒப்பந்தங்களும் முயற்சிகளும் சிங்களவர்களால்.. சாத்தியமற்றவை என்று ஆக்கப்பட்டுள்ள நிலையில்.. அது என்ன தீர்வு.. அதை இவர் பாதர் எப்படி சாத்தியமாக்கப் போறார்..??????????! காலம் கழிப்பதற்கும் சிங்களவர்களை பாதுக்காவும் இவர் வாறார் என்றால்.. அதை நேரடியாக தமிழ் மக்களிடம் சொல்லிட்டு வாங்கோ..??! :rolleyes::unsure:

இவ் முயற்சியை  இப்ப தான் மீண்டும் ஆரம்பித்து இருக்கின்றார்கள். வெறும் அவ நம்பிக்கை ஒன்றை வைத்து எதிர்காலத்தினை கணிக்க விரும்பவில்லை. பாதிரியாரின் முயற்சி திருவினை ஆகி மக்களுக்கு நன்மை ஏற்படட்டும்  என்று விரும்புகின்றேன். எல்லாவற்றையும் இழந்த மக்களுக்கு இருக்க கூடிய குறைந்த பட்ச வழிமுறை இதுதான்.

பேரழிவை விளைவாக தரும் முயற்சியை விட  தோற்றாலும் பெரும் அழிவை தராத எந்த முயற்சியையும் பல முறை முயற்சிப்பதில் தவறில்லை

  • கருத்துக்கள உறவுகள்

த.தே.ம.மு என்பது பாரம்பரிய கட்சி அல்ல. அது கூட்டமைப்புக்கு மாற்றீடாக களத்தில் நிறகல்ல.

கூட்டமைப்பில் ஒரு கட்சியினரின் சிலரின் கருத்தியலுக்கு  எதிராக... புறக்கணிப்புக்கு எதிராக உதயமானதே த.தே.ம.மு.

கூட்டமைப்பில் தமிழ் மக்களின் அபிலாசைகளை  பிரதிபலித்த  அனந்தி.. .சிறீதரன் போன்றவர்களின் வெற்றியை நீங்கள் மக்கள் தீர்ப்பல்ல என்று சொல்ல ஒரு வழியும் இல்லை.

மக்கள் இன்னும் கூட்டமைப்பை பழைய கூட்டமைப்பாகவே பார்க்கிறார்கள்.கூட்டமைப்பு இதுதான் தீர்வென்று ஒன்றைச் சொல்லி மக்கள் முன் 2004 க்குப் பின் போனதும் இல்லை. ஜாடைமாடை பேச்சுக்கள் தான் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

ஐக்கிய இலங்கை பற்றி பேசிய எல்லா கட்சிகளும் தோல்வி. ஈபிடிபி..சங்கரி...என்று எல்லோரும்.

இதில் நீங்கள் மக்கள் இதை தான் விரும்பினம் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்.???? ??

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

வடக்கு மக்கள் கடந்த தேர்தலில் தெளிவாக ஒன்றை கூறி இருக்கின்றார்கள். ஒரு நாடு இரு தேசம், பிரிந்து போகும்  உரிமையுள்ள முழுமையான சுயநிர்ணய உரிமை (உள்ளக சுய நிர்ணய உரிமையை அல்ல) போன்ற கோரிக்கைகளுடன் தேர்தலில் நின்ற கட்சியை பெரும் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்கள்.  இரண்டு பட்ட நாட்டுக்குள் தீர்வு என்பது இன்றைய உலக அரசியலின் போக்கில் சாத்தியமில்லை என்பதை உணர்ந்து இருக்கின்றார்கள்.

தவறான  பார்வை

கூட்டமைப்புக்கான வாக்குகள் என்பது தமிழர்களின் இன்றையநிலையின் தெரிவு மட்டுமே....

2016இல் தீர்வை  வாங்கித்தருவோம் என்ற வாக்குறுதியும் உண்டு

என்ன தீர்வு தமிழர் மனதில் உள்ளது என்பதை வாக்குக்கேட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அறிவர்

சுயநிர்ணய உரிமை பற்றி  அதிகமாக சொன்னவருக்கே அதிக வாக்கும் விழுந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலையில் ஏதாவது ஒரு வகையில் மக்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய சுபீட்சமான ஒரு தீர்வு நோக்கி பயணிப்பது தவறாகாது. இதில் ஈடுபடுபவர்கள் மக்களின் இத்தனை கால இழப்புகளையும், தியாகங்களையும் மனதில் வைத்து இதய சுத்தியோடு செயல் ஆற்றுவார்கலாயின் யாரும் அவர்களை குறை சொல்ல முடியாது.

தூர நோக்குடன் செயல் பட்டு என்றாவது ஒரு நாள் தமிழ் மக்கள்  தங்கள் அரசியல் தலை விதி குறித்து முடிவெடுக்கும் ஒரு பொது ஜன வாக்கு என்ற பொறிமுறைக்குள் சர்வதேசத்தின் உதவியோடு நகர்வது நல்லது.

இன்றைய அரசியலில் சாத்தியமாக/ சாதகமாக தோன்றும் சில விடயங்கள் நாளை சிங்கள ஆட்சி முறை மாறியவுடன் ஆட்டம் காணும். இதை தான் எங்கள் வாழ் நாள் முழுதும் கண்டோம். இனிமேலும் இது தான் நடக்கும். இன்னும் ஒரு 8 ஆண்டுகள் இவர்கள் ஆட்சி, அதன் பின்னர் அவர்கள் ஆட்சி.
இன்றைய கொள்கைகள், கோட்பாடுகள், புரிந்துணர்வுகள், விட்டுக்கொடுப்புகள், இணைந்த இதயங்கள்  நாளை குப்பையில் கடாசி வீசி எறியப்படும் ... இதை புரிந்து செயல் பட்டால் நல்லது.

எங்கள் இழப்புகள் மட்டுமே எமக்கு இன்று இருக்கும் அத்திவாரம்.
இன்று அரசியல் செய்யும் தமிழ் தலைவர்கள் பொறுப்புணர்வோடு, தேவையற்ற, சந்தேகங்களை தோற்றுவிக்கக் கூடிய சவால்கள், சவுடால்களை விடாமல் நிதானமாக, நேர்மையாக  நடக்க வேண்டும் என்பதே நாம் கை கூப்பி கேட்கும் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Sasi_varnam said:

மிகவும்  நிதானமான

வரலாறோடு ஒட்டிய

தூரநோக்குடன் கூடிய கருத்து

நன்றி சகோதரா....

தொடர்ந்து எழுதுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Sasi_varnam said:

தூர நோக்குடன் செயல் பட்டு என்றாவது ஒரு நாள் தமிழ் மக்கள்  தங்கள் அரசியல் தலை விதி குறித்து முடிவெடுக்கும் ஒரு பொது ஜன வாக்கு என்ற பொறிமுறைக்குள் சர்வதேசத்தின் உதவியோடு நகர்வது நல்லது.

என்றாவது ஒரு நாள் பொது வாக்கெடுப்பு வரும் போது வடக்குப்பக்கம் 50% மேல் சிங்கள வாக்குகளாக இருக்கும். அதில் நம்ம மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் இன்னும் பலம் சேர்க்கும்......கிழக்கு பக்கத்தை சொல்லத்தேவையில்லை. அங்கை இப்பவே ஊஞ்சலாட்டம்.

இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்று சொல்லும் ஒரு காலம் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அதுவும் நல்லம்தானே .யுரோவிலும்,டொலரிலும் உழைச்ச காசை கொண்டு போய் அப்பம்,வட்டிலப்பம்,கொத்துரொட்டி பொல் சம்பல் ,கிறிபத் ,மாலுபணிஸ் எல்லாம் சப்பிட்டு வரலாம் எல்லோ..:cool:

  • கருத்துக்கள உறவுகள்

இமானுவேல் அடிகளார்  வராமல் தான் பிரச்சனையை தீர்க்க முடியாமல் உள்ளது  என்பதை பிக்கு சொன்னது போல் ஜீரணிக்க முடியாமல் உள்ளது.
உண்மையாக பிரச்சனையை தீர்க்க கூட்டமைப்பும் அரசும் போதுமானது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

இமானுவேல் அடிகளார்  வராமல் தான் பிரச்சனையை தீர்க்க முடியாமல் உள்ளது  என்பதை பிக்கு சொன்னது போல் ஜீரணிக்க முடியாமல் உள்ளது.
உண்மையாக பிரச்சனையை தீர்க்க கூட்டமைப்பும் அரசும் போதுமானது.

அடிகளார் ஆத்மீக பிரச்சனைக்கு  விடுதலையை பெற்றுகொடுப்பார்.....அரசியல் விடுதலை பற்றி அர‌சும் கூட்டமைப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இம்மானுவேல் அடிகளார் பாவமன்னிப்புக் கொடுப்பாரா?
[ புதன்கிழமை, 02 டிசெம்பர் 2015, 05:59.24 AM GMT ]
emmanuel-father.jpg
உலகத்தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எல்.ஜே.இம்மானுவேல் அடிகளாரை இலங்கை அரசு அழைக்கிறது.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இப்போது இரு தரப்புக் கொள்கைகள் காணப்படுகின்றன. அதில் ஒன்று விடுதலைப் புலிகளின் கொள்கையை அப்படியே பின்பற்றுகின்ற தரப்பு. மற்றைய தரப்பு சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் நிலைமைகளுக்கு ஏற்பவும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகின்றவர்கள். இந்த இரண்டு தரப்பில் யார் சரியான கொள்கை உடையவர்கள் என்று ஆராய்வது நன்மை தரக்கூடியதன்று.

மாறாக தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்வை வாழவேண் டும். அந்த நிம்மதி என்பது எக்காலத்திலும் குழப்ப முறாமல் நிரந்தரமானதாக இருத்தல் அவசியம் என்பதைக் கருத்தில் கொள்வதே இங்கு பொருத்து டையது. 
அப்படியானால் இத்தகையதோர் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியவர்கள் அரச தரப்பாகவே இருக்கமுடியும்.

எனினும் இலங்கையின் ஆட்சிப்பீடங்களைப் பொறுத்தவரை காலம் கடத்துதல் என்பதைத் தவிர, எச் சந்தர்ப்பத்திலும் நாட்டில் அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்ற நினைப்பு ஆளும் தரப்பிடம் அறவேயில்லை.

ஆளும் தரப்பைப் பொறுத்தவரை இந்நாடு சிங்கள மக்களுக்கும் பெளத்த சமயத்துக்குமானது. எனவே நாட்டில் உருவாக்கப்படுகின்ற அரசியல் யாப்புக்கள் மருந்துக்கேனும் சிறுபான்மை மக்களின் நலனுக்குச் சாதகமாக அமைந்து விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே அரசியல் அமைப்புக்கள் பிரசவிக்கப்படுகின்றன.

இருந்தும் 2009ம் ஆண்டு வன்னியில் நடந்த மிகப்பெரும் கொடூரப் போரின் பின்னர் சர்வதேசத்தின் அழுத்தம் ஏதோவொரு வகையில் இலங்கை அரசுக்கு உபாதையைக் கொடுக்கிறது.

இதனால்தான் முன்னைய அரசு செய்த பாவத்தை நாங்கள் சுமக்கின்றோம் என்று இந்தநாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார். பாவத்தைச் சுமப்பது வேறு. பாவத்தைக் கழுவுவது வேறு. எனவே இங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியது பாவத்தை சுமப்பது என்றாகும்.

பாவத்தைச் சுமப்பது என்பது பாவப்பட்டவன் பட்டு அனுபவித்து சுமந்த பாவத்தைத் குறைப்பது. இதனால் துன்பப்பட்டவனுக்கு எந்த விமோசனமும் கிடையாது.  ஆக, பாவப்பட்டவன் தன் பாவத்தைக் கழுவ வேண்டும். இதற்காக பிராயச்சித்தம் செய்வதே ஒரே வழியாகும். ஆகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாவம் சுமப்பதை விடுத்து பாவத்தைக் கழுவ முன்வரவேண்டும்.

இதன்மூலம் பாவத்தில் இருந்து விடுபடுவது மட்டுமன்றி துன்பப்பட்டவன் பாக்கியவானாகவும் முடியும். எது எப்படியாயினும் சர்வதேசத்தின் அழுத்தம் அல்லது காலத்துக்குக் காலம் நடைபெறும் சர்வதேசம் சார்ந்த கூட்டங்களில் அளிக்க வேண்டிய பதிலுக்கான சூழ்நிலைகாரணமாக செய்பா வத்துக்கு பாவமன்னிப்புப்பெறுவது இலங்கை அரசுக்குத் தவிர்க்க முடியாததே.

இந்நிலையில் 2016ஆம் ஆண்டில் ஏதோவொரு தீர்வுத்திட்டத்தை பாவமன்னிப்புக்கான சாட்சியமாக இலங்கை அரசு முன்வைக்கப் போகின்றது. பாவமன்னிப்பு வழங்குவதற்கு ஒரு அருட்தந்தை தேவையல்லவா? அதற்காக உலகத்தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எல்.ஜே.இம்மானுவேல் அடிகளாரை இலங்கை அரசு அழைக்கிறது.

அரசின் அழைப்பை ஏற்று இம்மானுவேல் அடிகளார் இலங்கைக்கு வருவாராயின், அவர் அரசுக்குப் பாவ மன்னிப்பு வழங்குவாரா அல்லது ஈழத்தமிழ் மக்களின் துன்பச் சுமையை தன்னில் சுமந்து மீட்சி கொடுப்பாரா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

http://www.tamilwin.com/show-RUmtzCTWSWms7I.html

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளை விடுவிக்காத அரசு இனப்பிரச்சினைக்கு எப்படி தீர்வை தரும்- தர்மலிங்கம் சித்தார்த்தன்:-

குளோபல் தமிழ் செய்தியாளர்

அரசியல் கைதிகளை விடுவிக்காத அரசு இனப்பிரச்சினைக்கு எப்படி தீர்வை தரும்-  தர்மலிங்கம் சித்தார்த்தன்:-

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் நல்லெண்ணத்துடன் நடக்காது அவர்களை விடுவிக்காத அரசு இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வினை முன்வைக்கும் என்று நம்பிக்கை இல்லாத நிலையே தோன்றும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
விட்டுக்கொடுப்புடனான கால அவகாசம் ஒன்றை இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் கூறியுள்ளார். 
 
கைதிகளின் விடயம் ஒரு சிறிய விடயம் என்று தெரிவித்த அவர் இதிலேயே தென்னிலங்கையில் நல்லெண்ணம் வெளிப்படவில்லை என்றால் பாரிய பிரச்சினையான இனப்பிரச்சினையில் எவ்வாறு நல்லெண்ணம் ஏற்படும் என்ற சந்தேகம் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 
 
புலிகளுடன் தொடர்புடைய 12ஆயிரம் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் 200 தமிழ் அரசியல் கைதிகளும் 12ஆயிரம் பேரையும் திரட்டி விடுவார்கள் என்ற தென்னிலங்கை எதிர்கட்சியினரின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். 
 
ஜனாதிபதியும் பிரதமரும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்த அவர் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதே தர்மம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 
இதேவேளை வடக்கு கிழக்கில் 30 வருடங்களாக எந்தவிதமான அபிவிருத்தி வேலையும் இடம்பெறவில்லை என்று தெரிவித்த அவர் அங்குள்ள வேலையில்லாப் பிரச்சினையை தீர்க்க பதவி வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார்.
  • 3 weeks later...
On 12/1/2015 at 7:28 PM, arjun said:

பாதர் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடுகின்றார் .

இவர் வரிசையில் சொந்த இனத்திற்கே பாவம் செய்த அனைவரும் வருவார்கள்.

வரத்தான் வேண்டும் .

நாங்கள் மன்னிப்போம் . 

12391176_649780968498402_135617876073611

பிறகென்ன குடுகுடுப்பை காறர் சொல்லுறது எல்லாம் பலிக்குது...  

ஆனால் புலம் பெயந்த அமைப்பு வேண்டாம் எண்ட வாலி ஏன் வரவேற்கிறார் எண்டது தான் எனக்கு விளங்கவில்லை... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.