Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வுக்காகவே அரசாங்கத்துடன் பொறுத்துப் போகிறோம்! - மாவை சேனாதிராஜா 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வுக்காகவே அரசாங்கத்துடன் பொறுத்துப் போகிறோம்! - மாவை சேனாதிராஜா 
[Thursday 2015-12-03 09:00]

ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் எமக்கான அரசியல் தீர்வினை அடைந்து கொள்வதற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பொறுப்புடன் அமைதி காத்து அரசாங்கத்துடன் இணைந்து போகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலை வரும் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று சபையில் தெரிவித்தார்.

ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் எமக்கான அரசியல் தீர்வினை அடைந்து கொள்வதற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பொறுப்புடன் அமைதி காத்து அரசாங்கத்துடன் இணைந்து போகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலை
வரும் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று சபையில் தெரிவித்தார்.
ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் எமக்கான அரசியல் தீர்வினை அடைந்து கொள்வதற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பொறுப்புடன் அமைதி காத்து அரசாங்கத்துடன் இணைந்து போகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலை வரும் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் மீதான 9 ஆம் நாள் (இறுதிநாள்) விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கத்தின் மீது தமது வெறுப்பினைச் காட்டுவதற்கும் அதேநேரம் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டும் எமது மக்கள் தமது வாக்குகளை அளித்திருந்தனர். இதனால் ஜனவரி 8 ஆம் திகதி இந்நாட்டில் ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்பட்டது.வடக்கு- கிழக்கை பொறுத்தவரையில் அங்கு எமது மக்கள் பல்வேறு இழப்புகளுக்கு முகம் கொடுத்தவர்களாக இருக்கின்றனர். இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்களாகவும் அதேநேரம் அநீதி இழைக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். ஆட்சிமாற்றத்தின் பின்னராவது எமது மக்களுக்கு நன்மைகள் வந்து சேரும் என்று புதிய ஆட்சி மீது நம்பிக்கை வைத்தனர். இருப்பினும் புதிய ஆட்சியிலும் எமது மக்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாகிவிட்டனர்.

மக்கள் மாத்திரமின்றி அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் கூட புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எமது பிரதேசங்களில் இடம்பெறுகின்ற அரச செயற்பாடுகளில் எமது உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பில் அவர்கள் எமது தலைவரிடம் முறையிட்டுவருகின்றனர். மீள்குடியேற்றம், காணிவிடுவிப்பு, கைதிகளின் விடுதலை, புனர்வாழ்வு, அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் பேரவையில் முன்வைத்த உறுதி மொழிகளின் அடிப்படையிலேயே சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.

ஐ.நா.தீர்மானத்தின் பிரகாரம் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ளும் நோக்கில் எமது மக்கள் மீதான புறக்கணிப்புக்களையும் அதேநேரம் எமது உறுப்பினர்கள் மீதான புறக்கணிப்பையும் பொறுத்து அமைதி காக்கின்றோம். அத்துடன் இவ்விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் பேசுவதாகவும் நாம் எமது உறுப்பினர்களுக்கு அறிவித்திருக்கிறோம். புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் கூட வடக்கு – கிழக்கு என யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்திக்கு போதுமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை.

வடக்கு கிழக்கு மாகாண சபைகளையும் எமது பிரதேசங்களின் மக்கள் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டு ஆலோசனைகளைப் பெற்றிருந்தால் அரசாங்கமும் நிதியமைச்சரும் விடயங்களை தெளிவுபடுத்திக்கொண்டிருக்க முடியும். வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக இருக்க முடியாதென்ற நிலையொன்று இருந்து வருகின்ற போதிலும் கூட மேலும் ஐ.நா. பேரவையின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு எமது மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வொன்றையும் பெற்றுக்கொள்ளும் பொருட்டும் புதிய அரசாங்கம் அமையப்பெற்று சில மாதங்களே ஆகியிருக்கின்றமையாலும் இன்றைய (நேற்றைய) வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின்போது ஆதரவளிப்பதற்கு தீர்மானித்தோம்.

முன்னைய அரசாங்கம் செய்ததையே இன்றைய அரசாங்கமும் செய்து கொண்டிருப்பதாக எமது உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியிலேயே நாம் அமைதி காத்து வருகின்றோம். எம்மைப் பொறுத்தவரையில் எமது மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும். எமது மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். எமது மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் பாதுகாக்கப்படவேண்டும். இந்திய மீனவர்களால் எமது மீன்வளங்கள் அள்ளிச் செல்லப்படும் நிலை நிறுத்தப்படவேண்டும். எமது மக்களுக்கான தொழில்வாய்ப்புக்கள் வேண்டும். அத்துடன் நாம் எதிர்பார்த்திருக்கின்ற தீர்வு எமக்கு கிடைக்கப்பெற வேண்டும். இவையே எமது கோரிக்கையாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்துள்ள இன்றைய அரசாங்கமானது சர்வதேசத்தால் வழங்கப்பட்டிருக்கும் நல்ல சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது எமது நிலைப்பாடாக உள்ளது.

மேலும் அமைச்சர்கள் எமது பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகள் என்று கூறு அங்கு தான்தோன்றித்தனமாக செயற்படுவதை விடுத்து எமது மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள எமது பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வடக்கு கிழக்கு அபிவிருத்தியை மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தில் எமது பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களையும் வடக்கு- கிழக்கு மாகாண சபைப்பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு செயற்படுவதற்கான கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். இதேவேளை 2017 இல் உதவி வழங்கும் மாநாடு வடக்கில் இடம்பெறவிருப்பதாக கூறப்படுகிறது. இங்கு உதவிகளைக் கோருவதற்கு முன்பதாக அங்குள்ள தேவைகள், குறைநிறைகள் தொடர்பில் எம்முடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=146141&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

"பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள்" என்ற வசனம் 1977 ஆம் ஆண்டுகளில் கேட்ட ஞாபகம்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, putthan said:

"பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள்" என்ற வசனம் 1977 ஆம் ஆண்டுகளில் கேட்ட ஞாபகம்......

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்.....
இந்தப்படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே...

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வுக்காகவே அரசாங்கத்துடன் பொறுத்துப் போகிறோம்! - மாவை சேனாதிராஜா 

ஐ.நா

அது இது என்று ஆவலைத்தூண்டாதீர்கள் ஐயா

31/12/2016 வரை தானே....??

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குத்து மதிப்பா சொல்லுங்கோ ஐயா எவ்வளவு காலமெண்டு. எல்லாத்தையும் அவன் விழுங்குமட்டும்?

1947 இலை இருந்து 1983 வரைக்கும்  .. 2009 ல் இருந்து  இண்று வரக்கும்  இலவு காக்கிறீயள்...   எல்லாம் கதிரைக்காக ....  

மாநகரசபை , மாகானசபை,  பாராளுமண்று  ஐனாதிபதி தேர்தல் வாற நேரம் மட்டும் தானே தமிழர் பிரச்சினை தீர்வை காணும் அவசரம் உங்களுக்கு வாறது..?  மற்றும் படி அவசரம் இல்லை காத்திருங்கோ...  

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப வரைக்கும்... அடுத்தல் தேர்தல் வரைக்கும் பொறுத்துப் போவியள் போலக் கிடக்கு. :rolleyes:tw_angry:

ஒரு நடைமுறையை ஆரம்பித்து தொடர்ந்தும் முன்னேறுவதே
அரசியலில் முக்கியமானது. உலக நாடுகளில் இவ்வாறுதான் நடக்கிறது. இதற்குக்
காலம் பிடிக்கும். ஆனால் இது வெறுமனே பொறுப்புக்கூறும் விடயம்
குறித்ததல்ல. இது இலங்கையிலுள்ள முக்கியமான விடயங்களில் ஒன்று. அடுத்த
முக்கிய விடயங்களாக, பொருளாதார முன்னேற்றமும், அபிவிருத்தியும்
இருக்கின்றன. இலங்கை அபிவிருத்தியடைய அடைய, பிணக்குகளைத் தீர்ப்பதற்கான
வாய்ப்புக்களும் அதிகரிக்கும்.

தமிழர்களின் தன்னாட்சில் பிரச்சனையைப் பொறுத்தவரை 1950 களில் அது
ஆரம்பித்தபோது, பெடரல் கட்சியினால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1970
களில் பிரபாகரனும், ஏனையோரும் இதற்காக ஆயுதம் ஏந்திப்போராடினார்கள்.
அவர்கள் தனிநாட்டுக்காக அல்லது வடக்குக் கிழக்கில் தாய்நாடு ஒன்றிற்காகப்
போராடினார்கள். இந்தப் பிரச்சனை இன்னமும் தீர்க்கப்படவில்லை. இறுதியில்
இதற்கான தீர்வு அதிகாரப் பகிர்வாகவோ, சமஷ்டி அல்லது வடக்கு கிழக்கில்
தமிழருக்கான தன்னாட்சியாக அமையவேண்டும்.

- இது எரிக் சொல்கேயும் உலக அரசியல் விளங்காத எம்மவருக்கு சொன்னது .

3 hours ago, arjun said:

சரி இப்பதான் புலிகள் இல்ல ...6 வருடமாச்சு ..எங்க உங்கட சமஸ்டி கிடச்சுட்டுதா ? இப்ப யார் தடை ...சிங்களம் இப்ப என்ன சொல்லுது ....விளக்க முடியுமா .... எங்கட தீர்வை ஏன் அவன் இன்னமும் தர மறுக்கிறான் ...அல்லது தந்துடுவான் என்று இப்பவும் நம்ப நாங்கள் முட்டாள்கள் அல்ல ....சிங்களம் எப்பவும் சிங்களம்தான் ...பொறுக்கும் மாவைக்கு களி தான் ....

இப்பவும் எங்களுக்கு சிங்களத்தை தெரியாது என்று மாவை என்ன ரீல் வெடுகின்றரா ....

பிரிக்க வந்த கொடாரிகாம்பு தான் எரிக் ...இவரை எல்லாம் ஒரு ஆள் என்று எங்களுக்கு கதை அளப்பவ்ர்களை ......என்ன சொல்வது  

Edited by நியானி
ஒருமையில் விளித்தது திருத்தம்

57 minutes ago, arjun said:

ஒரு நடைமுறையை ஆரம்பித்து தொடர்ந்தும் முன்னேறுவதே
அரசியலில் முக்கியமானது. உலக நாடுகளில் இவ்வாறுதான் நடக்கிறது. இதற்குக்
காலம் பிடிக்கும். ஆனால் இது வெறுமனே பொறுப்புக்கூறும் விடயம்
குறித்ததல்ல. இது இலங்கையிலுள்ள முக்கியமான விடயங்களில் ஒன்று. அடுத்த
முக்கிய விடயங்களாக, பொருளாதார முன்னேற்றமும், அபிவிருத்தியும்
இருக்கின்றன. இலங்கை அபிவிருத்தியடைய அடைய, பிணக்குகளைத் தீர்ப்பதற்கான
வாய்ப்புக்களும் அதிகரிக்கும்.

தமிழர்களின் தன்னாட்சில் பிரச்சனையைப் பொறுத்தவரை 1950 களில் அது
ஆரம்பித்தபோது, பெடரல் கட்சியினால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1970
களில் பிரபாகரனும், ஏனையோரும் இதற்காக ஆயுதம் ஏந்திப்போராடினார்கள்.
அவர்கள் தனிநாட்டுக்காக அல்லது வடக்குக் கிழக்கில் தாய்நாடு ஒன்றிற்காகப்
போராடினார்கள். இந்தப் பிரச்சனை இன்னமும் தீர்க்கப்படவில்லை. இறுதியில்
இதற்கான தீர்வு அதிகாரப் பகிர்வாகவோ, சமஷ்டி அல்லது வடக்கு கிழக்கில்
தமிழருக்கான தன்னாட்சியாக அமையவேண்டும்.

- இது எரிக் சொல்கேயும் உலக அரசியல் விளங்காத எம்மவருக்கு சொன்னது .

புலிகளுக்கு  கிடைத்த சந்தர்ப்பம் இவர்களுக்கும்  கிடைக்கும் எண்டு  நம்புறதே  பெரிய அதிசயம் தான்...  அதை  மற்றவர்களும்  நம்பவேணும் எண்டு சொல்லுறீயள் பாருங்கோ......   அங்கை நிக்கிறீயள்.... 

17 minutes ago, பிரபாதாசன் said:

சரி இப்பதான் புலிகள் இல்ல ...6 வருடமாச்சு ..எங்க உங்கட சமஸ்டி கிடச்சுட்டுதா ? இப்ப யார் தடை ...சிங்களம் இப்ப என்ன சொல்லுது ....விளக்க முடியுமா .... எங்கட தீர்வை ஏன் அவன் இன்னமும் தர மறுக்கிறான் ...அல்லது தந்துடுவான் என்று இப்பவும் நம்ப நாங்கள் முட்டாள்கள் அல்ல ....சிங்களம் எப்பவும் சிங்களம்தான் ...பொறுக்கும் மாவைக்கு களி தான் ....

இப்பவும் எங்களுக்கு சிங்களத்தை தெரியாது என்று மாவை என்ன ரீல் வெடுகின்றரா ....

பிரிக்க வந்த கொடாரிகாம்பு தான் எரிக் ...இவனை எல்லாம் ஒரு ஆள் என்று எங்களுக்கு கதை அளப்பவ்ர்களை ......என்ன சொல்வது  

அவசரப்படாதேங்கோ தம்பி..  அவர்களுக்கு  நல்ல சந்தப்பமாக வரும்  அதுவரைக்கும்  காத்திருங்கோ  எண்டுறார்.... 

சிங்களத்துக்கு பிரச்சினையாக இருந்த புலிகளுக்கே  பல சந்தர்ப்பங்களை  கொடுத்த சிங்கள  நல்லவர்கள்.....     எந்த பிரச்சினையும் கொடுக்காமல் நல்ல பிள்ளைகளாக இருக்கும்  கூட்டமைப்புக்கு  கொடுக்க மாட்டார்களா எண்று கேக்கிறார்...  

வெலங்கிச்சா...??? 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் மாவையின் பொறுமையைச் சோதிக்காதீர்கள்
அவர் பொறுமையிழந்தால் நாட்டில் பாரிய கலவரம் வெடிக்கும்
ஜாக்கிரதை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.