Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெருத்தம்பி - குஞ்சையாவின் குசும்பு அரசியல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமூகவெளியில் நிகழும் அரசியல்..சமூகக் குசும்புகளை கிசுகிசு..குசும்பு வடிவில்...தர விளைகிறோம். இது ருவிட்டர் காலம் என்பதால்.. குறுஞ்செய்தி எழுதவும் வாசிக்கவும் தான் நேரமிருக்குது. அதுவும் ஒரு காரணம்.

இது யாரையும் தனிப்பட்ட முறையில் நோகடிப்பதை நோக்காகக் கொண்டன்றி சமூக அக்கறை நோக்கி எழுதப்படுகிறது.

=======================================

குஞ்சையாவின் குசும்பு 1.

தெருத்தம்பி: என்ன குஞ்சு புறுபுறுத்துக் கொண்டு போறேள்...

குஞ்சையா: இல்லடாம்பி.. உவன் சாத்திரிட்ட போறன்.. சாதகத்தின் படி 2016 இல உசுரோட இருப்பனோ இல்லையோன்னு.. பார்க்க. இத்தனை வருசம் வராத வருசம் 2016இல தமிழருக்கு வரப்போதாம் என்று சொறீலங்கா. நாகதீப புகழ் ஒப்பசிசன் லீடர் சவால் விட்டிருக்காராமில்ல.!  கட்டையில போறது.. அதைப் பார்த்திட்டு போகட்டுமன் என்ற நப்பாசை தான்டாம்பி.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குஞ்சைய்யாவின் குசும்பு - 2

தெருத்தம்பி: குஞ்சைய்யா.... சங்கதி கேட்டியளே.. சோத்தில விசம் மாதிரி யாழ்ப்பாணத்தில.. தண்ணில பீ கலந்திருக்காம்...

குஞ்சைய்யா: ஏன்டா தெருத்தம்பி... யாழ்ப்பாணத்தில.. அவ்ரோ.. சகடை என்று கொண்டு வந்து.. பீக்குண்டு போட்டவைக்கு உந்தச் சங்கதி இன்னும் தெளிவா விளங்குமே. முந்தி ஆகாயத்தால வந்து போட்டாங்கள்.. இப்ப கூட குந்தி இருந்து போடுறாங்கள் அவ்வளவு தான் வித்தியாசம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

குஞ்சைய்யாவின் குசும்பு - 2

தெருத்தம்பி: குஞ்சைய்யா.... சங்கதி கேட்டியளே.. சோத்தில விசம் மாதிரி யாழ்ப்பாணத்தில.. தண்ணில பீ கலந்திருக்காம்...

குஞ்சைய்யா: ஏன்டா தெருத்தம்பி... யாழ்ப்பாணத்தில.. அவ்ரோ.. சகடை என்று கொண்டு வந்து.. பீக்குண்டு போட்டவைக்கு உந்தச் சங்கதி இன்னும் தெளிவா விளங்குமே. முந்தி ஆகாயத்தால வந்து போட்டாங்கள்.. இப்ப கூட குந்தி இருந்து போடுறாங்கள் அவ்வளவு தான் வித்தியாசம்.

:grin::grin:

இதைத்தான் சிங்களவன் "தெமழுத் எக்காய் கூத் எக்காய்" என அடிக்கடி கூறி நக்கலடிப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

கலக்குறீங்கள் ... தொடருங்கள்...!  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குஞ்சைய்யாவின் குசும்பு-3

12347919_878194445621802_858475776924965

 

தெருத்தம்பி: குஞ்சு பேஸ்புக் வெள்ள நிவாரணப் படங்கள்..பார்த்தியளோ...  எங்கட ஆக்கள் சிலதுக்கே சரி கடுப்பாம்..

குஞ்சைய்யா: சீமானைச் சொல்லிறியோ மோன.. அவன் தன் வழி தலைவன் வழி தனி வழின்னிட்டு போய்க்கிட்டிருக்கிறாப் பய. இதுங்க கொஞ்சம் பேஸ்புக்கை மதவடியாக்கி.. குந்தி இருந்து குதர்க்கம் பேசுதுங்க. சைமன் கியுமன் என்று வாய்க்கு வந்தபடி .. அதுங்க அறிவுக்கு எட்டியபடி.

12301769_1665360563733464_35108082835920

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குஞ்சையாவின் குசும்பு-4

தெருத்தம்பி: என்ன குஞ்சைய்யா வானம் வெளிச்சிட்டுது போல.. அடுத்த மழைக்கு முன்னம் ஆக்கள் ராகூல் கூகில் என்று கொண்டு..வடக்க இருந்து சென்னைக்கு ஓடி வருகினம்...

குஞ்சைய்யா: மழைக்கு சென்னைத் தமிழன் மொத்தமா செத்திட்டானோ இல்ல மிச்சம் இருக்கானோ என்று பார்க்க வந்திருப்பாங்க. ஈழத்தில தமிழனை அழிச்ச பாவிப்பட்டாளம்..!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் நகைச்சுவைப் பகுதியில் இணைக்க வேண்டியதை அரசியல் திரியில் கொண்டு வந்து இணைச்சிட்டார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

நெடுக்கர் நகைச்சுவைப் பகுதியில் இணைக்க வேண்டியதை அரசியல் திரியில் கொண்டு வந்து இணைச்சிட்டார்

குஞ்சைய்யா: புள்ள... நாட்டில.. அரசியலின்னாவே வடிவேல் ரேஜ்ஜில தான் நடித்திக்கிட்டு இருக்காங்க. அங்க போட்டா என்ன இங்க போட்டா என்ன எல்லாம் ஒன்னு தான். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

குஞ்சையா "முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம்" ரிசாட் சொல்லுராரு, இதப்பத்தி ஒங்க குசும்பு என்ன?

 

Edited by colomban

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

குஞ்சையா "முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம்" ரிசாட் சொல்லுராரு, இதப்பத்தி ஒங்க குசும்பு என்ன?

 

குஞ்சைய்யா: என்னடாம்பி சொல்லுறது புதிசா... சட்டாம்பி இல்லா ஊரில போறவன் வாறன் வைச்சது தான் சட்டம் என்றமாதிரி இருக்கு உது. கிழக்கில 90களில் முஸ்லீம் ஊர்காவல்படை விரட்டி அடிச்ச தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் பற்றி எங்கடையள் இனச்சுத்திகரிப்பு என்று.. ஸ்ரோங்கா.. பேசாதவரைக்கும்.. ரிசாத்.. ஹக்கீம் காட்டில மழை தான்.

இன்னொரு சங்கதியடாம்பி...யாழ் ஒஸ்மேனியாவில போய் பேஸ்போல் விளையாடி.. இனச்சுத்திகரிப்பை கிளீன் பண்ணினவை.. எனி யு எஸ் க்குள்ள முஸ்லீம்களே வர விடப்படாது என்று சொல்லி இருக்கினம். அதுவும் வருங்கால யு எஸ் ஸ்பிரசிடன்ட் கன்டிடேட்...! இதெல்லாம்.. எந்த ஹட்டக்கரிக்க வருமோ.. அப்புக்காத்து சும் தான் பாடம் எடுக்கனும் அவைக்கு. :rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எதைப்பாவிக்கணும் என்பதை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்

இப்பொழுது எழுதவேண்டிய தேவையை ஒருவாக்கியுள்ளார்கள்

எழுதுங்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

நாம் எதைப்பாவிக்கணும் என்பதை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்

இப்பொழுது எழுதவேண்டிய தேவையை ஒருவாக்கியுள்ளார்கள்

எழுதுங்கள்..

குஞ்சைய்யா: வா மோன வா.. எப்படி மோன சுகமா இருக்கிறீயே மோன. "நாங்க என்ன ஆயுதத்தைப் பாவிக்கனும் என்பதை எதிரி தான் தீர்மானிக்கிறான்" - தமிழீழ தேசிய தலைவர். tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி: என்ன குஞ்சைய்யா சொறீலங்கா அமைதி பூங்காவாகிட்டாம்.. பட்டியல்..கேள்விப் பட்டியலே...

குஞ்சைய்யா: ஓமடாம்பி... பட்டியலும் கேள்விப்பட்டன் அதை வைச்சு எங்கட ஆக்கள் மைத்திரிக்கு கொடுக்கிற பட்டமும் கேள்விப்பட்டன். அந்தப் பட்டியலை வைச்சு முன்னாள் இனப்படுகொலையாள்  மைத்திரிக்கு நோபல் பரிசு சிபார்சு செய்யவும் கேள்விப்பட்டன். எல்லாம்.. வடிவேல் காமடி போல ஆகிடிச்சு.. எவ்வளவு தான் அடிச்சாலும் தமிழன் நல்லா அடிவாங்கிறன்டா.. நல்லவன்டா என்று சிங்களவன் சொல்லிட்டானாம். அப்ப சிங்களவன் திறம் தானே. tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி: குஞ்சைய்யா கேட்டியளே சங்கதி வெள்ள நிவாரணம் கொண்டு ராகுல் வருவார் என்று பார்த்தால்.. ஏதோ வில்லங்கம் கொண்டு வந்திருக்கிறாராம்... உண்மையே...?!

குஞ்சைய்யா: அம்பி வடக்க இருந்து.. வந்ததும் தான் வந்தார்.. உள்வீட்டில பிரச்சனை பூதாகரமாகிட்டாம். கொங்கிரஸின் வெள்ள நிவாரணமே இதால தடைப்பட்டிட்டுதாம். தமிழன் சாவிலும் துன்பத்திலும் அரசியல் செய்யக் கூடிய கண்றாவி தான் இந்தக் காங்கிரஸ் என்று திரும்பவும் நிரூபிச்சிட்டாங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி: குஞ்சைய்யா.. ஒரு டவுட்டு.. இறையாண்மை இறையாண்மை என்றவங்க... சிரியால குண்டு போட மட்டும்.. ஏன் ஐநாவை நாடிறதில்ல. அவனவன் தன்ர பார்லிமன்ரில ஒரு தீர்மானத்தை போட்டிட்டு.. பிளேனில குண்டை கட்டிக்கொண்டு போய்.. கொட்டிறாங்கள். அந்த வகையில் பார்த்தால்.. சிரியாவுக்கு.. ஈராக்கு.. லிபியாவுக்கு.. இறையாண்மை இல்லையோ.. ஐநான்னு ஒரு அமைப்பு அங்க என்ன பண்ணுது..??! ஒயில் எங்க திருட முடிந்தாலும் ஐநாவை கேட்காமல் குண்டு போட்டு திருடலாமோ.. அது தான் இறையாண்மையா.. ?!

குஞ்சைய்யா: தம்பி உப்படி விபரமா சிந்திக்க வெளிக்கிட்டா.. பைத்தியம் பிடிக்கும். ஐநா சபையும் ஆட்டுக்குட்டி சபையும்.. சோவியத் சிதைவோட ஐநா வின் இருப்பு.. வெறும் வெத்துப் பருப்படாம்பி. சோவியத்தை வெருட்ட அமெரிக்காவுக்கு ஒரு அமைப்பு தேவைப்பட்டுத்து. அது தன் ஐ நா. மற்றும்படி.. இறையாண்மை எல்லாம்.. அடிமைகளை தொடர்ந்து அடிமைப்படுத்த ஆதிக்க சக்திகள் உபயோகிக்கும்.. போர்வை. மற்றும்படி அங்க உள்ள ஆதிக்க பூதம் தான் பதுங்கி இருக்குது.. வேற ஒன்றும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஐ நோ... ஐ நா ..... ஐ நோ... !  :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி: குஞ்சைய்யா.. நாட்டில.. ஜே ஆர் காலத்தில் இருந்து இன்று வரைக்கும் பல ஆணைக்குழுக்களை அமைச்சு பொழுதுபோக்கிட்டான் சிங்களன். உந்த ஆணைக்குழுக்கள் நடத்தின விசாரணைகளுக்கும் அறிக்கைகளுக்கும் அப்புறம் என்ன நடந்தது.. உதை ஏன் உலகம் கேள்வி கேட்கிறதில்ல. சிங்களவன் என்ன அநியாயம் செய்தாலும் ஏன் உலகம் கண்டுகொள்ளுறதில்ல.

குஞ்சைய்யா: நெசமாத்தான் சொல்லுறன்.. உந்த ஆணைக்குழுக்களை விசாரிக்க தனியான ஒரு சர்வதேச விசாரணை வேணுமடாம்பி. எல்லாம் எங்கட சனம் மெளனமாக்கிடந்து வெறுவாய் மெல்லுறதன் பலாபலன்டாம்பி. எங்கட சனத்தின்ர பலவீனம் சிங்களவனுக்கு மட்டுமல்ல.. மொத்த உலகிற்கும் தெரியும்.  உலகம்.. ஒயில் இருந்தா குண்டு போடும் ஒயில் இல்லைன்னா.. அநியாயம் செய்தவோனட கூட்டுச் சேர்ந்து..குத்துப்போடும். இதுதாண்டாம்பி இன்டைய சர்வதேசம். tw_angry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி: எங்கட உதவியை எங்கட தொப்புள் கொடி உறவுகளுக்கு கொடுக்க முடியாதுன்னு சொல்லுற ஹிந்திய சர்க்கார் என்ன மண்ணாங்கட்டிக்கு எங்கட மண்ணில துணைத்தூதரகம் வைக்கனும்.. உளவு பார்க்கவா... உபத்திரபம் கொடுக்கவா.. அதை ஏன் குஞ்சைய்யா நாங்க அகற்றனுன்னு கோரக்கூடாது...?!

குஞ்சைய்யா: என்னடாம்பி விளக்கம் கெட்டதனமா இருக்கிறா. தமிழன் ஒற்றுமையா இருக்கப்படாது.. அதுதான் ஹிந்திய சர்க்காரின் ஹிந்திய இறையாண்மைப் பொலிசி. அதில சிங்களவனுக்கும் சந்தோசம். துணைத்தூதரகம் எங்களை கேட்டா வந்திச்சு.. சீனாக்காரன் வந்தான்.. அது தானா நுழைஞ்சிச்சு. ஹிந்திய அக்காவும் சொறீலங்கா சிங்கள தம்பியும் என்ன முடிவெடிக்கினமோ.. அதுக்குள்ள தான் தமிழன்.. அடிமையா இருக்கனும் என்பது விதிப்பு. இதை சாத்தியமாக்க பிரபாகரன் தடை என்றததால தான் புலி பயங்கரவாதியானது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

குஞ்ஞையா எங்கட கனடா பெட்டயல் அனிருத்தை கட்டிப்பிடிக்க போட்டி போடுகினம். இவையளுக்கு உங்களின் அறிவுரை என்ன?

:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, colomban said:

குஞ்ஞையா எங்கட கனடா பெட்டயல் அனிருத்தை கட்டிப்பிடிக்க போட்டி போடுகினம். இவையளுக்கு உங்களின் அறிவுரை என்ன?

:grin:

குஞ்சையா: தம்பி உலகத்தில இரண்டு குரூப் அறிவுரை கேட்காது.. ஒன்று "அதிபுத்தி" அரசியல்வாதி.. இன்னொன்று புத்திமாறாட்ட பதின்ம வயதுப் பெடிபெட்டை. இரண்டும் கெட்டுத்தான் திருந்தனும் என்பது விதிப்பு. என்ன உந்தக் கட்டிப்பிடிகள்.. கட்டில் வரை நீளாட்டில் சரி.  நீண்டால்... தெரியும் தானே எல்லாம் சினிமாச் சங்கதி. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

:grin:  :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி: என்ன குஞ்சைய்யா.. இணைத்தலைமை என்ற பெயர் பழையபடி அடிபடுகுது... முன்னர் இணைத்தலைமை என்று சில நாடுகள் கூட்டா வந்து தமிழரின்ர தலையில மிளகாய் அரைச்ச கணக்கா.. அரையல் நடக்கப் போகுதோ..?!

குஞ்சைய்யா: இதுவும் அப்படி ஒரு அரையல் தான் கிடக்கு மோன. இணைத்தலைமை மாவட்ட தலைமை.. அதுக்கு மேல தேர்தல் மாவட்டத்தலைமை.. அதுக்கு மேல... இப்படி தலைமைக்குத் தலைமை என்று எல்லோரையும் ஆசுவாசப்படுத்த.. பதவிகள் வழங்கப்படுகுதே தவிர.. காரியம் இலகுவா நடக்க யாரும்.. காரியமாற்றிறதாத் தெரியல்லை. சிக்கலுக்கு சிக்கல். புடுங்குப்பாட்டுக்க புடுங்குப்பாடு. இதை வளர்க்கிறது தான் நோக்கம். இது நல்லதுக்கில்ல.. என்று மட்டும் தெரியுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி: என்ன குஞ்சைய்யா.. கம்பனின் வாரிசுக் கிழடு.. "கவி"த்தாவல் தாவி இருக்குது... கிழவர்கள் மீது...?!

குஞ்சைய்யா: இப்ப எல்லாம்.. குடும்பிக் கிழக் "கவி" தானே குத்துக்கரணமடித்து.. வேடிக்கை காட்டிப் பிழைப்பது வேலையாகிப் போச்சு மோன. கொஞ்சக் காலம் முதல் டக்கி மங்கியை சிறந்த தலைவன் என்றிச்சு..இப்ப சம் தன் கிழவர் என்று துதிபாடுது. அதுக்கு வடக்கு மாகாண சபை கிழவரோடு உள்ள பிரச்சனை தான் சம் கிழவரை தூக்கிப்பிடிக்கத் தூண்டுது. கிழவர்களிடையே கிடுங்குப் பிடியை உருவாக்கி அதில் குளிர்காய நினைக்கிறது இந்தக் கம்பன் கழகக் "கவி"க் கிழடு. இதுங்க எல்லாம் யாழ் இந்து அன்னைக்கு அவலமாக வந்திருக்குதுகள். :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெருத்தம்பி: "தமிழ் மக்கள் பேரவை" பற்றி குஞ்சைய்யா ஒரு பஞ்ச் சொல்லுங்களன்...

குஞ்சைய்யா: கூட்டமா வாறியளோ.. பேரவையா வாறியளோ.. கட்சியளா வாறியளோ.. தமிழன் கோவணத்தை மட்டும் உருவிடாதேள்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

விக்கல் வந்தா தண்ணி குடிக்கணும். விக்கி வந்தா தண்ணி காட்டனும். இது தமிழ் அரசியல்வாதிகளின் பஞ்சா..! குஞ்சையா..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.