Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய வெளியுறவு கொள்கைக்கு இன்னொரு தோல்வி- பலாலி, திருகோணமலையை கைப்பற்றுகிறது அமெரிக்கா!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


டெல்லி: மத்திய அரசின் செயலற்ற வெளியுறவுக் கொள்கையால் இலங்கையின் யாழ். பலாலி விமான நிலையம் மற்றும் திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்றி விமானப் படை மற்றும் கடற்படை தளங்களை அமெரிக்கா அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 

நேபாள விவகாரத்தில் ஏற்கனவே இந்திய வெளியுறவுக் கொள்கை தோல்வியைத் தழுவியது. பல ஆண்டுகளாக இந்தியாவுடன் மிக நெருங்கிய நட்பு கொண்டிருந்த நேபாளத்தில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தது முதலே அங்கே சீனா ஆதிக்கம் ஆரம்பித்துவிட்டது.

India, Srilanka and US

 

இந் நிலையில் சர்வதேச அரசியலில் இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்கிற பெரும் போட்டி நடைபெற்று வருகிறது. அதிலும் இலங்கை திருகோணமலை துறைமுகம் யார் ஆதிக்கத்தில் இருக்கிறதோ அவர்களே தென்னாசியாவை ஆட்டிப் படைத்து ஆள முடியும் என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நீடித்து வருகிற வரலாற்று உண்மை. அந்த அளவுக்கு திருகோணமலை துறைமுகம் புவியியல் ரீதியாக முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது.

அன்று சோழர்கள் காலத்திலும் இதுதான் நடந்தது... பின்னர் ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள் காலத்திலும் திருகோணமலையே தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. கடைசியாக நடந்த 2-வது உலகப் போரில் இந்தியாவை ஆண்ட மவுன்பேட்டன் பிரபு இலங்கையில்தான் தளத்தை அமைத்திருந்தார். குறிப்பாக திருகோணமலை துறைமுகம் மிக முக்கிய பங்கு வகித்தது.

ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்ற நாள் முதல் 1980களின் இறுதி வரை அமெரிக்கா உட்பட எந்த ஒரு நாடும் இலங்கையில் கால் வைப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.. அந்த அளவுக்கு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சக்தி வாய்ந்ததாக இருந்தது; இலங்கையை அச்சுறுத்தக் கூடியதாக இருந்தது.

1980களின் தொடக்கத்தில் வாய்ஸ் ஆப் அமெரிக்கா வானொலிக்கான கோபுரங்கள் அமைக்கப் போகிறோம் என கூறிக் கொண்டு அமெரிக்கா நுழைய முயற்சித்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நாடாளுமன்றத்திலேயே இலங்கைக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்... இந்தியாவின் அனுமதியின்றி எந்த ஒரு நாடும் கால்பதிக்க இலங்கை இடம் கொடுக்கக் கூடாது என எச்சரித்தார். அத்துடன் இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் நிலைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக இலங்கை அரசுக்கு எதிரான தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை வெளிப்படையாக பகிரங்கமாக இந்தியா ஆதரித்து; இந்தியாவிலேயே ஆயுத பயிற்சி முகாம்களை நடத்தியது. இதனால் இலங்கை அலறி ஒடுங்கிக் கிடந்தது.

இந்திராவின் மறைவுக்குப் பின்னர் இலங்கைக்கு குளிர்விட்டுப் போனது... சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா என இதர நாடுகளுடன் கை கோர்க்க எத்தனித்தது. அப்போதுதான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கிற சக்திகளாக இந்தியாவின் பிரதமர்கள் இல்லாமல் அதிகாரிகள் தலையெடுக்கத் தொடங்கிய காலம். இலங்கையில் தமிழர்களுக்கான ஒரு தனியரசு அமைந்தால் அது இந்தியாவுக்கு பக்க பலமான துணையான ஒரு நாடாக இருக்கும் என்ற இந்திராவின் நிலைப்பாட்டில் தலைகீழ் மாற்றத்தை கொண்டு வந்தனர் இந்த அதிகாரிகள்... தமிழர்களுக்கு தனி நாடு அமைந்தால் இது இந்தியாவிலும் சிக்கலை உருவாக்கும் என்ற கருத்தை முன் வைத்தனர் இந்த அதிகாரிகள். இதன் விளைவாக ஈழத் தமிழர்களின் அதிருப்தியுடன் இந்தியா இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுடன் ஒப்பந்தம் செய்தது. அந்த ஒப்பந்தத்தின் பின் இணைப்புகளிலும் கூட இந்தியாவின் அனுமதி இல்லாமல் எந்த ஒருநாட்டும் அங்கே நுழைய இலங்கை அனுமதிக்கக் கூடாது என்கிற சரத்தும் இருந்தது. இருந்தபோதும் தமிழ் மக்களைப் பாதுகாக்க சென்ற இந்திய அமைதிப் படை தமிழ் மக்கள் மீதே நடத்திய நரவேட்டையால் இந்திராவின் அத்தனை முயற்சிகளும் சவக்குழிக்குப் போனது... அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தியை தவறாக வழிநடத்திய அதிகாரிகளால் புலிகள்- தமிழர்கள் ஒரு பக்கம் இந்திய ராணுவம் ஒரு பக்கம் என போர் போர் மூண்டது.... இதை சிங்கள தீவிர இனவாதிகள் பார்த்து மகிழ்ந்தனர்.

இந் நிலையில் ராஜிவ் காந்தி படுகொலை நடக்க, அதன் பின்னர் இந்தியாதான் தமிழீழத்தின் முதல் எதிரியாகிப் போனது. சிங்களத்துக்கு எதிராக தமிழீழ தேசத்தை நிர்மானிப்பதற்கான முன்முயற்சிகளை மேற்கொண்ட அந்த இந்திராவின் அந்த கட்சி தான் ஈழம் அமைந்துவிடக் கூடாது என்பதற்காக சிங்களத்தோடு கை கோர்த்தது.. அத்துடன் எந்த ஒருநாட்டையும் இலங்கைக்குள் நுழைய விடாமல் பாதுகாத்தார் இந்திரா. ஆனால், அதே இந்திரா கட்சி தலைமையில் நடந்த ஆட்சி தான் பாகிஸ்தான், சீனா என அத்தனை தேசங்களையும் இலங்கை அரசுக்கு ஆதரவாக யுத்த களத்துக்கு கொண்டு வந்து சேர்த்தது... இதனால் தமிழீழத்தை நிர்மாணித்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் இல்லாது ஒழிக்கப்பட்டது. அதே நேரத்தில் இலங்கை மீதான இந்தியாவின் பிடியும் நழுவிக் கொண்டே போகிறது. ஒட்டுமொத்த இலங்கையையும் தமது ஆதிக்கத்தில் வைத்திருந்த இந்தியாவிடம் இருந்து தென்னிலங்கையை முற்றாக பறித்தது சீனா. எஞ்சிய வடக்கு கிழக்கு இலங்கையில் புனரமைப்பு என்ற பெயரளவில் மட்டுமே இந்தியா நிலை கொண்டது. சீனா சார்புள்ள இலங்கை அரசை அகற்ற இந்தியா, அமெரிக்காவுடன் கை கோர்த்தது. சீனா சார்பு மகிந்த ராஜபக்சேவை ஆட்சிக் கட்டிலில் இருந்து தூக்கிப் போட்டது. இந்தியா, அமெரிக்கா சார்புள்ள அதிபராக சிறிசேனவும் பிரதமராக ரணிலும் பதவியில் அமர்ந்தனர்.

ஆனால் தற்போது இந்தியாவை ஒதுக்கி புறந்தள்ளிவிட்டு தன்னுடைய அடிமை தேசமாக இலங்கையை உருவாக்குவதில் அமெரிக்கா அத்தனை மும்முரமாக செயல்பட்டு வருகிறது. சிறிசேன, ரணில் ஆட்சிக்கு வந்தது முதல் மாதந்தோறும் அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் இலங்கைக்கு வந்து 'உத்தரவிட்டுச் செல்கின்றனர்'.... இதற்கு பிரதிபலனாக சர்வதேச சமூகத்தில் இலங்கை மீதிருந்த கோபத்தை தணிக்கச் செய்யும் அத்தனை நடவடிக்கைகளையும் அமெரிக்காவும் மேற்கொண்டு வருகிறது. இதற்காகத்தான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்து உலக நாடுகளை ஆதரிக்க செய்யவும் வைத்தது. அத்துடன் நிற்கவில்லை அமெரிக்கா.. இலங்கை கிழக்கின் திருகோணமலையில் எப்படியும் ஒரு நிரந்தர வலிமையான கடற்படை தளத்தை அமைத்துவிட வேண்டும் என்ற இந்தியாவின் பல்லாண்டுகால கனவுக்கு மரண அடி கொடுக்க தொடங்கிவிட்டது... திருகோணமலையில் கடற்படை தளம் அமைப்பதற்கான வேலைகளை முன்னெடுத்து வருகிறது.. மேலும் ஒரு பேரிடியாக வடக்கே யாழ்ப்பாணத்தின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பலாலி விமான தளத்தையும் இப்போது அமெரிக்கா கைப்பற்றப் போவதாக செய்திகள் வந்துள்ளன.

அதாவது இனிமேல் இலங்கையில் இந்தியாவுக்கு பெரிய அளவில் வேலை இல்லை... தென்னிலங்கையில் சீனாவும் வடக்கு கிழக்கு பகுதியில் அமெரிக்காவும் இருக்கப் போகிறது... இலங்கையின் குடுமிப் பிடி இனி அமெரிக்காவிடமும் சீனாவிடமும்தான் இருக்கப் போகிறது.. இந்தியாவின் தென்கோடியின் ஒட்டுமொத்த பாதுகாப்புமே இனி அமெரிக்காவை சார்ந்தே இருக்கப் போகிறது. ராஜபக்சேவை அகற்றிய மத்திய அரசால் சிறிசேனவையும் ரணிலையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனது... இந்திய பெருங்கடல், தென்னாசியாவை இலக்கு வைத்து முன்னேறுவது அமெரிக்காவின் திட்டம்.... இப்போது இலங்கையில் விமானப் படை தளத்தையும் கடற்படை தளத்தையும் அமெரிக்கா அமைத்துவிட்டால் இந்தியப் பெருங்கடலிலும் தென்னாசிய நாடுகளிலும் நாட்டாமை வேலையை அமெரிக்கா காட்டும்.

 

http://tamil.oneindia.com/news/india/india-srilanka-us-242589.html

 

American has Agenda not Reaction.

ஆனால் அயல் நாடு புலிகள் தான் எதிரி என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறது. வீட்டை மட்டும் கட்டிக் கொடுத்தால் போதாது.  ஈழத் தமிழன் தகரக் கொட்டில் வீடுகளுக்காக போராட வில்லை. 20 வருடங் களுக்கு மேலாக ஈழத் தமிழனை எதிரியாகவே பார்த்த இந்தியா, அரசியலின் மறு பக்கத்தை பார்க்க மறுக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவும் சீனாவும் தெளிவாத்தான் இருக்கினம்.. அதிலும் அமெரிக்கா தமிழர்களின் போராட்டம் தொடர்பில் மாறாத கொள்கை உடையது. அப்போராட்டம் அடக்கப்படனும் அதன் மூலம் ஹிந்திய ஆதிக்கம் இல்லாமல் செய்யப்படனும் என்பது அதன் நிலைப்பாடு. ஆக.. இந்த இரண்டு நாடுகளும்.. சிறீலங்கா தொடர்பில் தெளிவு தான். ஹிந்தியா கேரளக்காரர்களின் பிராமணர்களின் விருப்பு வெறுப்புக் கேட்கப்போய் இல்லாது ஒழியப் போகிறது. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு செய்தி வாசித்தேன் உண்மை, பொய் தெரியாது. இந்தியா அணு நகரம் ஒன்றை கர்நாடகாவில் நிர்மாணித்து வருவதாக. இந்த திட்டம் 2017 இல் நிறைவு பெறும். சீனா, பாகிஸ்தானில் இருந்து பாதுகாக்க கர்நாடகாவை தேர்ந்தெடுத்து உள்ளார்கள். இதிலும் ஒரு பக்கப் பார்வையே. மூன்று பக்கம் வேலியடைத்தும் பிரயோசனமில்லை. நாலாவது பக்கம் நேசமான உறவும், பாதுகாப்பான அணியும் தேவை. அது ஈழ தமிழரே - ஈழம் என்றொரு நாடு. இதை அமெரிக்கன் நன்றாக உணர்ந்து வைத்துள்ளான். 

பாக்., சீனாவை எதிர்க்க இந்தியாவில் ரகசியமாக உருவாகிறது அணு ஆயுத நகரம்
http://tamil.oneindia.com/news/international/india-building-top-secret-nuclear-city-karnataka-242592.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DSC04504_web.jpg   hilfe_gross.jpg

 

உண்மையில் இந்தியா தன்னை வல்லரசாக காட்டிக்கொள்ள முற்பட்டாலும்........வெளியுறவு  கொள்கையிலும் பொருளாதார கொள்கையிலும் வறிய நிலைமையிலேயே இருக்கின்றது. 
மாதமொருமுறை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதிக்கின்றார்கள்.
ஆனால்...
ஐரோப்பிய நாட்டுமக்கள் நத்தார் தினத்தை முன்னிட்டும் இந்திய ஏழை சிறார்களுக்கென உண்டியல் குலுக்கி மில்லியன் கணக்கான பணத்தை அனுப்புகின்றனர்.

 

கொஞ்சம் ஓவரா எழுதிட்டாங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
On 19 December 2015 at 8:28 PM, Iraivan said:

கொஞ்சம் ஓவரா எழுதிட்டாங்களோ?

கொங்காங்கை சீனாவிடம் இழந்த மேற்குலகு இலங்கையில் பொருளாதார தளம் தேடுகிறது. ராணுவ தளம் அல்ல என்று முன்பு எழுதி இருக்கிறேன்.

அது தான் நடக்கும். அதனூடே தமிழர் தீர்வும், தமிழர் முக்கியத்துவமும் வரும்.

இது புரியாமல் 'ஏதோ' நினைத்ததை எழுதியது தான் உந்த கட்டுரை.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.