Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காலமாகி விட்டார்

Featured Replies

2994302129653021oo0.jpg

*எனது கண்ணீர் அஞ்சலிகள்*

  • Replies 93
  • Views 13.4k
  • Created
  • Last Reply

தமிழீழ தேசத்தை சர்வதேசத்திற்கு எடுத்து சென்றவரே 30 வருடங்கள் ஆயுதம் தாங்காத போராளியாய் பயணித்தாய் . உங்கள் கனவு நனவாகி வரும் தூரம் தொலைவில் இல்லை அதற்குள் மாவீரர் அகிவிட்டீர்.

ஆத்மா சாந்தி அடைய தமிழனமே பிரார்த்திக்கின்றது

post-1229-1166126110_thumb.jpg

பாலா அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.

balasingham-anton-cp-9561839.jpg

ஐயா..

உம் உடல் மரித்திருக்கலாம். உம் உள்ளம் மரித்திருக்கலாம். உண்மையான "நீங்கள்" மரிக்கவில்லை. மனிதரால் புரிந்து கொள்ளமுடியாத ஆன்மா மரிப்பதில்லை. மனித வார்த்தைகளாலோ, எண்ணங்களாலோ பிரதிபலிக்க முடியாத ஆன்மாக்கள் மரிப்பதில்லை.

அந்தவகையில் நாம் கவலை கொள்வதில்லை. நீங்கள் "மனிதத்தை" நன்றாக அறிந்து தெளிந்தவர். அதனாலேயே சாதாரண மனிதரின் எச்சரிக்கைகளோ, தீண்டல்லகளோ உங்களை நெருங்கக்கூட முடியவில்லை. வெள்ளையரின் குகைக்குள் இருந்தே வெள்ளையனுக்கு விளையாட்டு காட்டியவர். எம் போராட்டத்தின் நியாயத்தை உலகறியச் செய்ததில் உங்களுக்கு நீங்களே நிகர். தமிழர் வரலாற்றில் ராஜதந்திரத்தில் புதுயுகம் படைத்த வரலாற்று புருசர் நீங்கள். ஈழத்தமிழர் மட்டுமல்ல, தமிழக தமிழரும் உங்கள் மகிமையை எதிர்கலங்களில் நினைவு கூர்ந்த வண்ணம் இருப்பர்.

எம்மை ஒடுக்க நினைப்பவர் மகிழ்வர். தமிழரின் பேரிழப்பென துள்ளி குதிப்பர். ஆனால் அவரறியர் நீங்கள் ஆலமரம், உங்கள் விழுதுகளை ஆழமாக பரப்பித்தான் அமைதிகண்டீர்கள், ஆலமரம் இறப்பதில்லை என்று.

உங்கள் கடைசி காலங்களில் கவலை கொண்டீர்களய்யா தமிழினம் அழிவது கண்டு. உணர்வுகள் மடைதிறந்து கண்ணீராய் பொழியுதய்யா. தமிழர் மீது உங்களுக்குள்ள ஆழமான பரிவே தமிழருக்கும் விடிவு தேடித்தருமய்யா. பொருளுக்காய், பதவிக்காய், பேராசையால் தம்மை மறந்து சக மனிதத்தை சீரழிக்கும் அறியாமையில் மூழ்கியுள்ள மீட்கும் சக்தி வாழும் போதே முக்திபெற்ற உங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் ஆன்மாவாலேயே முடியும்.

அடேல் அம்மாவுக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவிக்க நாம் யார்?...

வரலாற்று புருசர் தேர்ந்தெடுத்த பொக்கிஷ பெண் தெய்வம் தான் அன்ரன் ஐயா நமக்கு தந்து சென்ற அழபரிய செல்லம். அவர் கவலையில் ஒடிந்துவிடமாட்டார்-ஏனென்றால் அவர் சாதாரண பெண்ணல்ல. அன்ரன் ஐயாவிடமிருந்து நிறையவே வாழிவியல் உண்மைகளை அறிந்து தெழிந்திருப்பார். மனித வரயறைக்குட்பட்ட உணர்வுகள் அவரை ஆட்கொள்ள முயன்றாலும் அவர் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். அடேல் அம்மா அன்ரன் ஐயாவுடன் உங்கள் வாழ்வியல் பயணத்தில் சேர்ந்து சாதித்தவைக்காக நன்றியுணர்வுடன் தலை தாழ்த்துகுறோம்.

fff.jpg

எமது கண்ணீர் அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடியலுக்காய் அயராது உழைத்த

பாலா அண்ணாவை

கொடியவன் அழைத்துவிட்டான்.

வித்துக்கள் என்றும்

அழிவதில்லை அறியாதவர்கள்

கொக்கரிக்கட்டும்.

இந்த வித்துக்களின் கனவை

நனவாக்க மனதில்

ஒரு சபதமெடுப்போம்.

விடியும் விடியும் ...............

நம் தலைவர் முடிவு.............

விடியல் விடியல்................

விடியலுக்காய் நாம்..............

கைசேர்ப்போம்

அண்ணாவின் ஆத்மா சாந்தியடைவதாக

எம் சிரங்கள் அண்ணாவுக்காக ஒரு கணம் மட்டும்

குனியட்டும். நிமிரும்போது........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறர் சிரிப்பில் அவர் மகிழ்வார். அவரது பேச்சுக்களில் ஆழமான கருத்துக்களை வழங்கும்போது நகைச்சுவை அதில் பிணைந்து நிற்கும். இது மேடைகளில் மட்டுமல்ல பேச்சு மேசைகளிலும் பல வேளைகளில் காணமுடிந்தது. தமிழீழம் தனது தேசிய மைந்தனை இழந்துள்ளது. தலைவணங்குகிறோம். சென்று வாருங்கள் பாலா அண்ணன். உங்கள் கனவு விரைவில் நனவாகும்.

தமிழீழத்தின் மதியுரைஞர் பாலா அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம்

பாலாண்ணைக்கு "தேசத்தின் குரல்" கௌரவம்: தமிழீழத் தேசியத் தலைவர் அறிவிப்பு [வெள்ளிக்கிழமை, 15 டிசெம்பர் 2006, 00:29 ஈழம்] [காவலூர் கவிதன்]

உலகத் தமிழ் மக்களை உலுக்கி காலமாகிவிட்ட தமிழீழத்தின் மதியுரைஞர் பாலா அண்ணைக்கு "தேசத்தின் குரல்" எனும் மாபெரும் கௌரவத்தை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்ட அறிக்கை:

தலைமைச்செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்

14.12.2006

எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டு நிரப்பமுடியாத பேரிழப்பு.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனித வாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது. துரதிர்ஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்றுபோய்விட்டது. தீவிரம் பெற்றுள்ள எமது விடுதலைப் போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்ற வேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்டமுடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை.

பழக ஆரம்பித்த நாள் முதலே எமக்கிடையே ஒரு இனம்புரியாத புரிந்துணர்வு ஏற்பட்டது. அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்துகொண்டு, எமது உறவு நல்லுறவாக வளர்ந்து நட்புறவாகப் பரிணமித்தது. சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது. தினம்தினம் நாம் பகிர்ந்துகொண்ட வாழ்பனுபவத்தில் வலிமைபெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. காலத்தால் கனிந்து, வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு அது.

பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல் உபாதைகளால் வருந்திய போதும், தளர்ந்து போகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.

எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.

ஈழத்தமிழினம் பெருமை கொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து "தேசத்தின் குரல்" என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

வே. பிரபாகரன்

தலைவர்

தமிழீழ விடுதலைப் புலிகள்

http://www.eelampage.com/?cn=30134

எம் தேசத்தின் குரலாக ஒலித்த பாலா அண்ணர் என்றும் எம்மோடு இருப்பார்.

அவரிற்கு நாம் செய்யும் அஞ்சலி, அவர் கண்ட கனவை நனவாக்குவதே.

அதற்கு அவரைப் போல எமது அரசியல் இலக்கில் உறுதி குலையாது,

தேசியத்தலைவரின் கரங்களை நாம் எல்லோரும் எமது உழைப்பால் பலப்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

தேசியத்தின் குரல் கலாநிதி பாலா அண்ணாவின் மறைவு பற்றி இரங்கல் தெரிவித்து கருத்து எழுதுவது தொலை பேசிமூலம் வானொலி தொலைக்காட்சியில் தெரிவிப்பது கவிதை வாசிப்பதோடு முடித்துவிடாதீர்கள் உங்கள் தமிழ் உணர்வை.

எந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்பவும் சர்வதேச மட்டத்தில் தக்க வைத்துக் கொள்ளவும் பல தத்துவாசிரியர்கள் இராஜதந்திரிகள் தொடர்ச்சியாகத் தேவை. தமிழீழமும் அதற்கு விதிவிலக்கல்ல. வெறு உணர்ச்சி மயமான வார்த்தைஜாலங்களோடு நின்றுவிடாது எமது தமிழ்த் தேசியத்திற்கு தேவையான தத்துவாசிரியர்களையும் இராஜதந்திரிகளையும் தயார்படுத்த உருவாக்குவதற்கான திட்டங்களை ஆரம்பிக்க உறுதி கொள்வோம்.

அதாவது திறமையான அர்பணிப்புள்ள மாணவர்களை புலம்பெயர்ந்த சமூகங்களில் தெரிவு செய்து வருடா வருடம் பல்கலைக்கழத்தில் அரசியல் சர்வதேச சட்டம் இராஜதந்திரம் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்புகளிற்கான புலமைப்பரிசில் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும்.

இதேபோல் மாமனிதர் சிவராம் நினைவாக ஊடகவியல் துறையில் ஊக்குவிக்க புலமைப்பரிசில் திட்டம் ஒன்று ஆரம்பிக்க வேண்டும்.

இரண்டிலும் இளமானி முதுமானிப் பட்டப் படிப்புகளிற்கு என்று வேறு வேறாக நடத்தலாம்.

இவற்றை அந்தந்த நாட்டு இளையோர் அமைப்பு மூலம் அமுல்படுத்தலாம்.

We need to start grooming our next generation diplomatic core before its too late!

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

imagesew9.jpg

'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. ஈழத்தமிழர்களுக்கு மீண்டும் ஒரு சோகச் செய்தி. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் ஒரு மலை சரிந்தது: தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் ஒரு மலை சரிந்து விட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசர் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு குறித்து தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்டகால அரசியல் மதியுரைஞரும் கொள்கை வகுப்பாளரும் அரச தந்திரியும் ஆன திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு கேட்டு மீளாத் துயர் அடைகிறோம். அவர் கொடிய நோயினால் படுக்கையில் வீழ்ந்திருந்தாலும் அவர் இன்னும் சிறிது காலம் உயிர் வாழ்வார் என்று நம்பி இருந்தோம். அந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது.

திரு. பாலசிங்கம் 30 ஆண்டுகாலத்துக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் கொள்கைப் பற்றோடும் நெஞ்சுறுதியோடும் மலைபோல உயர்ந்து நின்ற ஆயுதம் ஏந்தாத போராளி ஆவார். யாழ்ப்பாணத்திலும் வன்னிக் காடுகளிலும் இணையரோடு கரந்து வாழ்ந்த காலங்களில் எதிரி படையிடம் இருந்து மயிரிழையில் உயிர் தப்பியவர். சொத்தும் சுகமுமே வாழ்க்கை என்று வாழ்பவர்கள் மத்தியில் அவர் ஒரு அப்பழுக்கற்ற கொள்கைவாதியாகவும் இலட்சியவாதியாகவும் வாழ்ந்தார். தனக்காக வாழாமல் தான் பிறந்த மண்ணும் மக்களும் இனமும் விடுதலை பெற வேண்டும் என்ற அசைக்க முடியாத வேட்கையோடு வாழ்ந்தார்.

திம்பு முதல் ஜெனிவா வரை நடந்த அமைதிப் பேச்சு வார்த்தைகள் அனைத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாகக் கலந்து கொண்டு தமிழ்மக்களது பக்களம் உள்ள நியாயத்தை எடுத்துக்காட்டி வழக்குரைத்தவர். .

அண்மையில் பேராசிரியர் எச்.எல்.பீரீஸ் பேசும் போது பாலசிங்கத்தின் இழப்பு தமிழர்களைவிட சிங்களவர்களுக்குப் பெரிய இழப்பாக இருக்கும் எனக் கூறினார். விடுதலை பெற்ற தமிழீழ நாட்டின் வரலாறு எழுதப்படும் போது அவருக்கு ஒரு அத்தியாயம் ஒதுக்கப்படும் என்பது திண்ணம்.

மேடைகளில் சாதாரண பேச்சுத் தமிழில் மணிக்கணக்கில் நகைச்சுவையோடு பேசிக் கைதட்டல் வாங்கிய ஒரே பேச்சாளர் அவர்தான். ஆண்டு தோறும் தமிழீழத் தேசியத் தலைவர் ஆற்றும் மாவீரர் உரைக்கு பொழிப்புரை வழங்கி உலகம் வாழ் தமிழ்மக்கள் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர்.

ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழிகளிலும் புலமை படைத்த அவர் (1) போரும் அமைதியும் (2) The Duplicity of Politics என்ற இரண்டு நூல்களை எழுதிச் சமகாலத் தமிழர் அரசியல் வரலாற்றைப் பதிவு செய்துள்ளார்.

அன்ரன் பாலசிங்கம் அவர்களுடைய கல்லும் முள்ளும் நிறைந்த அரசியல் வாழ்க்கையில் அவருக்கு ஒல்லும் வகை அனைத்திலும் கைகோர்த்துத் தானும் ஒரு போராளியாக வாழும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களுக்கு எங்களது இரங்கலையும் துயர் பகிர்வினையையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

-புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்ரன் பாலசிங்கம் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களுக்கு எங்களது இரங்கலையும் துயர் பகிர்வினையையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Edited by Selvamuthu

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் அண்டன் பாலசிங்கம் மறைவு

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள இரங்கல் செய்தி :

14-12-2006

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்குரிய தோழருமான பேராசிரியர் அண்டன் பாலசிங்கம் அவர்கள் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தொடக்கம் முதல் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு தன்னலமற்ற தொண்டு புரிந்தவர் அவர். விடுதலைப் புலிகளின் சார்பில் அனைத்து சமரசப் பேச்சுக்களிலும் கலந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்காக உறுதியாக வாதாடியவர். அவரின் மறைவின் மூலம் உருவான வெற்றிடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது.

கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட காலத்திலும் கொஞ்சமும் கலங்காது இறுதி மூச்சு வரை கடமையாற்றியவர் அவர். அவருடைய மறைவினால் வருந்தும் அவருடைய துணைவியார் திருமதி. ஏடேல் அம்மையார் அவர்களுக்கும், தமிழீழ மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

http://www.thenseide.com/cgi-bin/Balasingam.asp

  • கருத்துக்கள உறவுகள்

மரணங்கள் மலிந்த தாய் மண்ணின் துயர் துடைக்க தன் வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்த மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் இழப்பு ஈடு செய்யமுடியாதது. சுதந்திர தமிழீழத் தனியரசுக்காகக் பங்களிப்பதே அன்னாருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.

மரணங்கள் மலிந்த தாய் மண்ணின் துயர் துடைக்க தன் வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்த மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் இழப்பு ஈடு செய்யமுடியாதது. சுதந்திர தமிழீழத் தனியரசுக்காகக் பங்களிப்பதே அன்னாருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.

காணாதே உன்மீது

உயர்ந்த

எண்ணம்

உன் இழப்பு

தமிழ்தாயின்

தலைமகனை

தொலைத்த

இழப்பு

எமது

சொந்தத்தில்

விழுந்த

சோகம்

போல

என்

மனதை

அழுத்துகிறது

கண்கள்

குளமாகின்றன....

  • கருத்துக்கள உறவுகள்

காணாதே உன்மீது

உயர்ந்த

எண்ணம்

உன் இழப்பு

தமிழ்தாயின்

தலைமகனை

தொலைத்த

இழப்பு

எமது

சொந்தத்தில்

விழுந்த

சோகம்

போல

என்

மனதை

அழுத்துகிறது

கண்கள்

குளமாகின்றன....

bala anna,your soul rest in peace.WE tamils follow your path.

<_<

எங்கள் "தேசத்தின் குரல்" பாலாமாமாவிற்கு, எங்கள் கண்ணீரஞ்சலி - முத்துக்கிருஷ்ணா குடும்பத்தினர் மற்றும் தோழர்கள்

Thamil.NET

mmk.gif

post-2514-1166146408_thumb.jpg

கலாநிதி அன்ரன் பாலசிங்கத்திற்கு வீரவணக்கங்கள் தொடருகின்ற சோகங்களின் உச்சச் செய்தி. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் ஒரு மலை சரிந்தது: தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

[வெள்ளிக்கிழமை, 15 டிசெம்பர் 2006, 04:28 ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் ஒரு மலை சரிந்து விட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசர் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு குறித்து தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்டகால அரசியல் மதியுரைஞரும் கொள்கை வகுப்பாளரும் அரச தந்திரியும் ஆன திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு கேட்டு மீளாத் துயர் அடைகிறோம். அவர் கொடிய நோயினால் படுக்கையில் வீழ்ந்திருந்தாலும் அவர் இன்னும் சிறிது காலம் உயிர் வாழ்வார் என்று நம்பி இருந்தோம். அந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது.

திரு. பாலசிங்கம் 30 ஆண்டுகாலத்துக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் கொள்கைப் பற்றோடும் நெஞ்சுறுதியோடும் மலைபோல உயர்ந்து நின்ற ஆயுதம் ஏந்தாத போராளி ஆவார். யாழ்ப்பாணத்திலும் வன்னிக் காடுகளிலும் இணையரோடு கரந்து வாழ்ந்த காலங்களில் எதிரி படையிடம் இருந்து மயிரிழையில் உயிர் தப்பியவர். சொத்தும் சுகமுமே வாழ்க்கை என்று வாழ்பவர்கள் மத்தியில் அவர் ஒரு அப்பழுக்கற்ற கொள்கைவாதியாகவும் இலட்சியவாதியாகவும் வாழ்ந்தார். தனக்காக வாழாமல் தான் பிறந்த மண்ணும் மக்களும் இனமும் விடுதலை பெற வேண்டும் என்ற அசைக்க முடியாத வேட்கையோடு வாழ்ந்தார்.

திம்பு முதல் ஜெனிவா வரை நடந்த அமைதிப் பேச்சு வார்த்தைகள் அனைத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாகக் கலந்து கொண்டு தமிழ்மக்களது பக்களம் உள்ள நியாயத்தை எடுத்துக்காட்டி வழக்குரைத்தவர். .

அண்மையில் பேராசிரியர் எச்.எல்.பீரீஸ் பேசும் போது பாலசிங்கத்தின் இழப்பு தமிழர்களைவிட சிங்களவர்களுக்குப் பெரிய இழப்பாக இருக்கும் எனக் கூறினார். விடுதலை பெற்ற தமிழீழ நாட்டின் வரலாறு எழுதப்படும் போது அவருக்கு ஒரு அத்தியாயம் ஒதுக்கப்படும் என்பது திண்ணம்.

மேடைகளில் சாதாரண பேச்சுத் தமிழில் மணிக்கணக்கில் நகைச்சுவையோடு பேசிக் கைதட்டல் வாங்கிய ஒரே பேச்சாளர் அவர்தான். ஆண்டு தோறும் தமிழீழத் தேசியத் தலைவர் ஆற்றும் மாவீரர் உரைக்கு பொழிப்புரை வழங்கி உலகம் வாழ் தமிழ்மக்கள் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர்.

ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழிகளிலும் புலமை படைத்த அவர் (1) போரும் அமைதியும் (2) Tகெ Dஉப்லிcஇட்ய் ஒf Pஒலிடிcச் என்ற இரண்டு நூல்களை எழுதிச் சமகாலத் தமிழர் அரசியல் வரலாற்றைப் பதிவு செய்துள்ளார்.

அன்ரன் பாலசிங்கம் அவர்களுடைய கல்லும் முள்ளும் நிறைந்த அரசியல் வாழ்க்கையில் அவருக்கு ஒல்லும் வகை அனைத்திலும் கைகோர்த்துத் தானும் ஒரு போராளியாக வாழும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களுக்கு எங்களது இரங்கலையும் துயர் பகிர்வினையையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இன்று வெரது இல்லத்தில் காலமாகி விட்டார். தமிழீழ விடுதலைப் பயணத்தில் ஒரு தூணாக, தேசியத் தலைவருக்கு பக்க பலமாக இருந்த பாலா அண்ணா அவர்களின் இறப்பு தமிழீழ மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.