Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்குச் சிங்கள மக்களுடன் எந்தவித எதிர்ப்போ கோபமோ இல்லை! முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இன்றைய உலகில் பயங்கரவாதிகள் தான் ஏனையவர்களை பயங்கரவாதிகள் என்பது உலகம் அறிந்தது. உலகின் பெரிய நாட்டில் இருந்தும் சிறிய மூளையாக சிலருக்கு  உல்ளது. புலிகள் பிழை விடவில்லை என இங்கு ஒருவரும் சொல்லவில்லை. அடிக்கடி பழைய ரெக்கோட்டை போட்டு சிலர் களத்தை நாறடிக்கிறார்கள்.

மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கைகள் செய்த பலர் கூட்டமைப்பில் இருந்தார்கள். இருக்கிறார்கள். அதில் நீங்கள் இருந்த புளட் கூட்டத்தையும் சேர்த்து தான் சொல்கிறேன்.

முதலாவது யார் மனிதகுலத்துக்கு எதிரான பயங்கரச் செயல்கள் புரிந்தாலும் அவர்கள் பயங்கரவாதிகள் தான்.

இரண்டாவது நாடுகள் பெரிதாகப் பெரிதாக மூளை பெரிதாகும் என்று எவர் சொன்னார்? 

மூன்றாவது பழைய ரெக்கோர்ட் தேவையில்லை என்றால் ஒன்றுக்குமே அதைப் பயன்படுத்தக்கூடாது. இங்கு சிலர் வசதியாக தங்களுக்குக் தேவையான ரெக்கோர்ட்டைப் போடுவார்களாம், மற்றவர்கள் போட்டால் அது நாறடிப்பாம். தொடர்பே இல்லாமல் அர்ஜுன் அண்ணாவை மடக்குவதற்காக மாலைதீவையும், சோத்துப்பார்சலையும் எழுதியவர்களே பழைய ரெக்கோர்ட் பற்றி எழுதுவது கேலிக்குரியது

நாலாவது மனித குலத்துக்கு எதிரான நபர்கள் முன்னரும் இருந்தார்கள் இப்பவும் இருக்கிறார்கள். அதில் மாற்றுக் கருத்தேதும் இல்லை. மண்டையன் குழுத் தலைவரைப் <_<போல சித்தரையும் தேசியத்தலைவர் மன்னித்தால் ஒக்கேயாக்கும் சிலருக்கு!

  • Replies 60
  • Views 3.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மனித குலத்தில் இல்லை என்று 2009 இல் உலகமும் சிங்களவர்களுக்குப் பின்னால் நின்று காட்டியது. எனவே சிங்களவர்கள் தமிழர்களை கொன்றொழித்தது எல்லாம் மனித குலத்திற்கு எதிரான பயங்கரவாதச் செயல், இனவழிப்பு என்று சொல்லமுடியாது என்றும் வாதிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

208560_10150147275667944_4762610_n.jpg?o

மகாவம்சம் சிங்களவனின் புளுக்குப் புராணம்..! அதை நம்பி சிங்களவன் ஒரு பொய்யான வரலாற்றை பல இடைக்கால வரலாற்று உண்மைகளைச் செருகி எழுதி வைச்சிருக்கிறான். அதனை எல்லாம் நம்பி இங்கு யாரும் பதிவிடவதில்லை. சில சிங்கள தீவிர விசுவாசிகளைத் தவிர. இலங்கையை ஆண்ட மன்னர்கள் தொடர்பில் தமிழக ஆய்வாளர்களின் ஆய்வுகளிலும் எல்லாள மன்னன் உள்ளிட்ட சோழ மன்னர்கள் மற்றும் தமிழ் மன்னர்கள் இலங்கையை ஆண்டது அங்கு தமிழ் மற்றும் சைவத்தின் பரம்பல்.. மணிமேகலை காலத்தில் பெளத்தம் தமிழகம் உள்ளிட்ட இடங்களில் பரவல் என்று வரலாறுகள் உண்டு.

சிங்களவன் அவற்றை பாடத்திட்டங்களில் கண்ணிலும் காட்டுவதில்லை. சிங்கத்தில் இருந்து தாம் தோன்றினோம் என்று இயற்கையில் நடக்கவே சாத்தியமற்ற அடிப்படையில் இருந்து மகாவம்சத்தை உருவாக்கி இருக்கிறான். ஆனாலும் அதன் பால் நம்பிக்கையை வளர்க்க உண்மை வரலாற்றுச் சம்பவங்களையும் இடைச்செருகி உள்ளான்.

அந்த அளவில் தான் மகாவம்சம் படிக்கப்பட வேண்டும். ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அப்படியே நம்ப அது உண்மை வரலாற்றின் தொகுப்பு அல்ல.

மேலும்....

அனுராதபுரத்தை மையமாகக் கொண்ட சிங்களக் காடைகள் தான் சிங்கள அரச பயங்கரவாதத்தின் சார்பாக.. மனித குலத்திற்கு எதிரான தாக்குதலை 1980 களில் அப்பாவி தமிழ் பொதுமக்கள் பயணித்த பேரூந்துகளை தாக்குவதில்.. மக்களை படுகொலை செய்வதில் தீவிரமாக நிகழ்த்தி வந்தார்கள். அவர்களின் பின்னால் சிங்களப் படை.. பிக்குகள்.. அரசியல்வாதிகள் இருந்தனர்.

அவர்களின் இந்த திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ... மனித குலத்திற்கு எதிரான தாக்குதலை கட்டுப்படுத்த அல்லது அதற்குப் பழிவாங்கலாக.. அனுராதபுரம் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதற்கு முன்னர் ரெலோவும் தாக்கி இருந்தது.

உலகில் மிக மோசமான மனித குலத்திற்கு எதிரான குற்றம் இழைப்பு என்றால்.. அணுகுண்டு தாக்குதல்கள் தான். அதைச் செய்த அமெரிக்காவையே எவரும் அதற்காக தண்டிக்க இன்னும் முடியவில்லை.

அந்த வகையில் கொடிய மனித குலத்திற்கு எதிரானவர்கள் எல்லாம் தப்ப... புலிகள் போன்ற... பெரிய அரச பயங்கரவாதிகளுக்கு.. பாடம்படிப்பிக்கவும் அவர்களிடம் இருந்து அப்பாவி மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கிய....  குட்டி அமைப்புக்கள் மீது.. மட்டும் மனித குலத்திற்கு எதிரான பயங்கரவாதத்தை திணிப்பது என்பது முற்றிலும் முட்டாள் தனமான செயல் என்பதிலும் அறிவிலித்தனமானது.

தமிழர்களைக் கொன்றொழித்த எல்லா சிங்கள மனித குலத்திற்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களை செய்த..குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டிருந்தால்.... புலிகள் தோன்றியும் இருக்கமாட்டார்கள்.. அனுராதபுரத்தில் பழிக்குப்பழி தாக்குதலும் நடந்திருக்காதே. ஏன் அப்படி சிந்திக்க மறுக்கின்றனர் சில சிங்கள சிங்க குலத்தை தீவிரமாக விசுவாசிப்போர். tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

முதலாவது யார் மனிதகுலத்துக்கு எதிரான பயங்கரச் செயல்கள் புரிந்தாலும் அவர்கள் பயங்கரவாதிகள் தான்.

இரண்டாவது நாடுகள் பெரிதாகப் பெரிதாக மூளை பெரிதாகும் என்று எவர் சொன்னார்? 

மூன்றாவது பழைய ரெக்கோர்ட் தேவையில்லை என்றால் ஒன்றுக்குமே அதைப் பயன்படுத்தக்கூடாது. இங்கு சிலர் வசதியாக தங்களுக்குக் தேவையான ரெக்கோர்ட்டைப் போடுவார்களாம், மற்றவர்கள் போட்டால் அது நாறடிப்பாம். தொடர்பே இல்லாமல் அர்ஜுன் அண்ணாவை மடக்குவதற்காக மாலைதீவையும், சோத்துப்பார்சலையும் எழுதியவர்களே பழைய ரெக்கோர்ட் பற்றி எழுதுவது கேலிக்குரியது

நாலாவது மனித குலத்துக்கு எதிரான நபர்கள் முன்னரும் இருந்தார்கள் இப்பவும் இருக்கிறார்கள். அதில் மாற்றுக் கருத்தேதும் இல்லை. மண்டையன் குழுத் தலைவரைப் <_<போல சித்தரையும் தேசியத்தலைவர் மன்னித்தால் ஒக்கேயாக்கும் சிலருக்கு!

அப்போ புலிவால் என வாலி கூவி அழைப்பது சரியாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

அப்போ புலிவால் என வாலி கூவி அழைப்பது சரியாக்கும்.

புலிவால் என்பது பழைய ரெக்கோர்டா? tw_blush:

அதைக்கூட விருப்பமில்லாமல் தான் அழைக்கின்றேன்.  

1 hour ago, கிருபன் said:

தமிழர்கள் மனித குலத்தில் இல்லை என்று 2009 இல் உலகமும் சிங்களவர்களுக்குப் பின்னால் நின்று காட்டியது. எனவே சிங்களவர்கள் தமிழர்களை கொன்றொழித்தது எல்லாம் மனித குலத்திற்கு எதிரான பயங்கரவாதச் செயல், இனவழிப்பு என்று சொல்லமுடியாது என்றும் வாதிடலாம்.

தமிழர்கள் மனித குலத்தில் இல்லை என்று 2009 இல் உலகமும் சிங்களவர்களுக்குப் பின்னால் நின்று காட்டியது என்கிறீர்கள். சரி. அவ்வாறு முழு உலகமும் நின்றதற்குக் காரணம் என்ன என்பதை சிம்பிளாக மறந்து விடுகிறீர்களே. சிங்களத்தினால் நியாயமான தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களை இலகுவாக உலகின் முன் எவ்வாறு பயங்கரவாதமாகக் காட்ட முனைந்தது என சிந்திப்பீர்களாயின் உண்மை பூனைக்குட்டியைப் போல ஜம் எண்டு வந்து குதிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்பில்லாமல் எழுதுவது என்பது இதை தான். சோத்துபாசல், மாலைதீவு என இங்கு சிலர் எழுதுவதாக சொன்னீர்கள். அப்போ புலி வால் என எழுதலாமா என கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

தொடர்பில்லாமல் எழுதுவது என்பது இதை தான். சோத்துபாசல், மாலைதீவு என இங்கு சிலர் எழுதுவதாக சொன்னீர்கள். அப்போ புலி வால் என எழுதலாமா என கேட்டேன்.

என்ன நுணா ஸார், மாலைதீவு விடயமோ, புளட் சாப்பாட்டு பார்சல் வாங்கினதோ 1986-87 காலப் பகுதியில் அப்போது நடந்த சம்பவங்களை சொன்னால் அது பழைய ரெகோர்ட் கதைகள் தான். அந்த வகையிலேயே புலிகளின் 1985 அனுராதபுரம் பகுகொலைகள் பழைய ரெக்கோர்டாக இருக்குமாயின், மாலைதீவு சோத்துபார்சல் கதைகளும் பழைய ரெகோர்ட் கதைகளே.

நீங்கள் தான் தொடர்பில்லாமல் புலிவால் கதையை இதுக்குள்ளை இழுத்து.......:cool:

இதெல்லாம் பிரான்ட் நியூ புளூரே டிஸ்க்குகள்:cool:

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வாலி said:

சிங்களவன் பரதெமலக் என்று மட்டும் சொல்வதில்லை கள்ளத்தோணி எண்டும் அரைகுறைத் தமிழில் சொல்லுவான்.  <_<

ஐயா வாலி அவர்களே ...... எங்கடை ஆக்கள் அவனுக்கு பல்லக்கு தூக்கினதாலும் ,இப்பிடி  ஜிங் ஜாக் அடிக்கிறதாலும்  வந்த வினை இது
உண்மையான கள்ளத்தோணி அவன்தான் .....விஜயனின் வருகை என்று முத்திரை வெளியிட்டு ...வெளியிட்ட சூட்டோட தடை செய்தவை ஏன்....?
தாங்கள் authentic கள்ளத்தோணி என்று உலகிற்கே அச்சடித்து காட்டிய  மாதிரி இருக்கென்பதால் தான் .......வரலாறு முக்கியம் அமைச்சரே ...
அவன் தான் இல்லாத வீட்டிக்கு முகவரி தருகிறான் என்றால் . ...நீங்கள் ஒரு படி மேல் போய் வீட்டிற்கு வெள்ளையும் அடிக்கிறீர்கள் 
சந்தேகம் இருந்தால் இந்த இணைப்பில் நான்காவதாக இருக்கும் முத்திரை தான் அது 
http://pedia.desibantu.com/sri-lanka-post-year-1956/

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, வாலி said:

தமிழர்கள் மனித குலத்தில் இல்லை என்று 2009 இல் உலகமும் சிங்களவர்களுக்குப் பின்னால் நின்று காட்டியது என்கிறீர்கள். சரி. அவ்வாறு முழு உலகமும் நின்றதற்குக் காரணம் என்ன என்பதை சிம்பிளாக மறந்து விடுகிறீர்களே. சிங்களத்தினால் நியாயமான தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களை இலகுவாக உலகின் முன் எவ்வாறு பயங்கரவாதமாகக் காட்ட முனைந்தது என சிந்திப்பீர்களாயின் உண்மை பூனைக்குட்டியைப் போல ஜம் எண்டு வந்து குதிக்கும். 

இதற்கான காரணங்கள் மிகவும் தெளிவாக பல இடங்களிலும் சொல்லப்பட்டுள்ளன. புலிகள்தான் காரணமென்று இலகுவாக சொல்லி, சிங்களம் நியாயமாகத்தான் நடந்தது, இனியும் நியாயமாக நடந்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை தந்துவிடுவார்கள் என்று சொல்லுமளவிற்கு அரசியலில் அரிவரி தெரியாமல் இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் அரசியல் அரிவரி தெரியும் தெரியாததென்பதும், சிங்களம் நியாயமக நடந்ததும் நடக்காததும் பிரச்சினையல்ல, புலிகள் (நியாயமாக) நடந்துகொண்டதை சிங்களம் இலகுவாக பரப்புரை செய்தது. அதுவும் பன்னாட்டுத் தூதரகங்கள் இருந்த கொழும்பில் நடத்திய அருமையான தாக்குதல்கள் சிங்களத்தின் பரப்புரையை இலகுபடுத்தியது.

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் தம்பி,
புலிகள் (அநியாயமாக) நடந்துகொண்டதை சிங்களம் இலகுவாக பரப்புரை செய்தது... முற்றிலும் உண்மை.
புலிகள் எடுத்த சில அரசியல் செயல்பாடுகள் கூட அதற்கு இலகுவாக இருந்தது. மறுப்பதற்கு இல்லை. 
சரி வாருங்களேன்,  நாங்கள் எல்லோரும் சேர்ந்து இலங்கை அரசாங்கம் எம்மக்களுக்கு செய்த பல் மடங்கு அநியாயங்களை பரப்புரை செய்வோம். அவர்கள் எமக்கு இழைத்த கொடூரங்கள் தான் யூத்த முனையில் இருந்து அவ்வளவு அவலங்களுக்கும் மத்தியில் காட்சிப் படுத்தப்பட்டு தமிழர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதே.
அவர்களுக்கு நடந்த அவலங்களை கதைக்கும் எங்களால் எம் இனத்துக்கு நடந்த மாபெரும் அவலங்களை சீர்தூக்கி பார்க்கமுடியவில்லையே என்று வேதனைப்படவேண்டும். 
தவிர அதனை நினைவுகூருவோரை புலவாலுகள், புலிவாலுகள் என்று சீண்டுதல் எந்த வகையில் ஞாயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.