Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றையாட்சி கோட்பாட்டை ஒருபோதும் ஏற்கப் போவதில்லை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஒற்றையாட்சி கோட்பாட்டை ஒருபோதும் ஏற்கப் போவதில்லை!
ஒற்றையாட்சி கோட்பாட்டை ஒருபோதும் ஏற்கப் போவதில்லை!
ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கிளிநொச்சியில் இன்று கூடியுள்ளது.கிளிநொச்சியில் அமைந்துள்ள கூட்டுறவாளர் மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
 
இக்கூட்டத்தில் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
 
இக்கூட்டத்தில் சமகால நிலைமை தொடர்பாகவும், எதிர்வரும் அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்படுகிறது.
 
இவ்விடத்தில் ஆரம்ப உரையாற்றிய இரா.சம்பந்தன்,
ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும், தாங்கள் தமிழ் அரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே சமஸ்டிக் கோட்பாட்டை தந்தை செல்வா தலைமையில் முன்வைத்ததாகவும் அந்த சமஸ்டி என்கிற அதிகார பரவலாக்கம் கொண்ட விடயத்தைத்தான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகவும், ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டதாக வெளியில் தெரிவிக்கப்படுகின்ற விடயங்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை இபொய்யானவை எனக் கூறியதுடன் மேலும் பல விடயங்கள் ஆராயப்படுகின்றன.
 
இதனிடையே இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவினரால் ஒழுங்கமைக்கப்பட்ட காணாமல் போனோர் உறவுகள் என்று நெடுங்கேணி, திருகோணமலை ஆகிய இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு சிலரும், அதற்கு நடுவே புலனாய்வாளர்களும் இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு எதிராக கோசங்களை எழுப்பினார்கள்.
 
இதன் பின்னணியில் புலனாய்வாளர்கள் அவர்களோடு இணைந்திருந்ததை பலராலும் அவதானிக்க முடிந்ததோடு மகிந்த ஆட்சியில் புரையோடிய அதே புலனாய்வு அச்சுறுத்தல் செயற்பாடுகள் மைத்திரி ஆட்சியிலும் வேரூன்றி இருப்பதனை காண முடிகின்றது என்றார்.
 
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:
ஒற்றையாட்சி கோட்பாட்டை ஒருபோதும் ஏற்கப் போவதில்லை!
ஒற்றையாட்சி கோட்பாட்டை ஒருபோதும் ஏற்கப் போவதில்லை!
ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கிளிநொச்சியில் இன்று கூடியுள்ளது.கிளிநொச்சியில் அமைந்துள்ள கூட்டுறவாளர் மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
 
இக்கூட்டத்தில் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
 
இக்கூட்டத்தில் சமகால நிலைமை தொடர்பாகவும், எதிர்வரும் அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்படுகிறது.
 
இவ்விடத்தில் ஆரம்ப உரையாற்றிய இரா.சம்பந்தன்,
ற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும், தாங்கள் தமிழ் அரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே சமஸ்டிக் கோட்பாட்டை தந்தை செல்வா தலைமையில் முன்வைத்ததாகவும் அந்த சமஸ்டி என்கிற அதிகார பரவலாக்கம் கொண்ட விடயத்தைத்தான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகவும், ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டதாக வெளியில் தெரிவிக்கப்படுகின்ற விடயங்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை இபொய்யானவை எனக் கூறியதுடன் மேலும் பல விடயங்கள் ஆராயப்படுகின்றன.
 
இதனிடையே இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவினரால் ஒழுங்கமைக்கப்பட்ட காணாமல் போனோர் உறவுகள் என்று நெடுங்கேணி, திருகோணமலை ஆகிய இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு சிலரும், அதற்கு நடுவே புலனாய்வாளர்களும் இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு எதிராக கோசங்களை எழுப்பினார்கள்.
 
இதன் பின்னணியில் புலனாய்வாளர்கள் அவர்களோடு இணைந்திருந்ததை பலராலும் அவதானிக்க முடிந்ததோடு மகிந்த ஆட்சியில் புரையோடிய அதே புலனாய்வு அச்சுறுத்தல் செயற்பாடுகள் மைத்திரி ஆட்சியிலும் வேரூன்றி இருப்பதனை காண முடிகின்றது என்றார்.
 
ஐயா இப்படி பேசினால் அது தமிழர்களது பூமியில் என்ற தெரியும்

கொழும்பில் என்றால் மகிந்த தேசியத்தலைவர் என்பது தானே வழமை.

நல்ல அரசியல் தான் நடக்குது...

கேள்வி கேட்டா

புலநாய்வாளர்கள்

முன்பென்றால் .....???

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை விக்கியின் தூண்டுதலின் பேரில் தமிழ்மக்கள் பேரவைதான் இந்த ஆர்ப்பாட்டம் செய்தது என்று சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, வாத்தியார் said:

ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சிங்கம் கொதிக்க வெளிக்கிட்டுது......எங்கை போய் முடியப்போகுதோ ஈஸ்வரா சிங்களவர்களை காப்பாத்து ஈஸ்வரா....tw_tounge_wink:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

சிங்கம் கொதிக்க வெளிக்கிட்டுது......எங்கை போய் முடியப்போகுதோ ஈஸ்வரா சிங்களவர்களை காப்பாத்து ஈஸ்வரா....tw_tounge_wink:

சிங்கம் இந்தியா கோட்டைக்குள் ஒடி பதுங்கியிடும்.....சனம் தான் கஸ்டப்படபோகுது

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு திரும்பியதும் மீண்டும் ஒற்றையாட்சிக்குள் தீர்வு காண நாங்க ரெடி. நீங்க ரெடியா...?! என்றாகிடும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் இந்தப் பிரச்சனையைக் கிளப்பாமல் இனித்தான் பாராளுமன்றத்தில் கிளப்பப் போகிறார்.வாழும்வீரருக்கு ஆவேசம் வந்தால் இதுக்கு ஒரு முடிவு கண்டுட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார்.வடக்குக்கிழக்கு வந்தால் சுயாட்சி என்பதும் கொழும்புக்குக்குப் போனால் பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்று சொல்வதும் தான் வாழும்வீரர் சம்பந்தரின் செயற்பாடுகள்.தங்கச்சி நீங்க என்னை ஒருக்காய் சந்திக்க வேணும் என்று கூட்டத்திற்குள் சொல்கிறார். சந்திக்கப் போனால் பின்வாசல்வழியாக காரில் பறந்து விடுவார். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.