Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த கையொப்பமிட்டார்

Featured Replies

மஹிந்த கையொப்பமிட்டார்
 

article_1454913184-P1120643.JPG

சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம்- படையினருக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்து என்ற தொனிப்பொருளில் படைவீரர்கள் பாதுகாக்கும் தேசிய அமைப்பினால், முன்னெடுக்கப்படும் கையொப்பம் திரட்டும் செயற்பாட்டில் இணைந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, மகஜரில் கையொப்பமிட்டார்.
இந்த நடவடிக்கை கோட்டை சம்புத்தாலோக விஹாரையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

article_1454913197-P1120628.JPG

- See more at: http://www.tamilmirror.lk/165545/%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B0-#sthash.4CL9ilda.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணனுக்கு பக்கத்தில் தம்பி பதட்டத்தோட நிற்கிறாரு. செய்த பாவம் பழிதீர்த்திடுமோன்னு. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சனம் இல்லையே...

முதலில் சர்வதேச விசாரணை வேண்டாம். இப்ப லோக்கல் விசாரணையும் வேண்டாம்.

இரண்டு வீல் சேயர் காரை வைத்துக் கொண்டு காரணம் சொல்லுகினம்: நாட்டுக்காக போராடினவயள் பாதிக்கப்படக் கூடாதாம்.

பாதிக்கப்படப் போவது வெடி வைச்சவர்கள் அல்ல, வெடி வைக்க சொல்லி ஓடர் போட்டவயள் தான்.

அதுதான் இந்த பதறல். ஜோசித்தவே போட்டார் உள்ள, இனி நாம தான் என்று கோத்தா கவலைப் படுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு ஒன்றுமே கிடைக்கக் கூடாது.. அழிவு மட்டும் தான் கிடைக்கனும் என்பதில் சிங்களவன் எவ்வளவு தெளிவா இருக்கிறான் 1948 இல் இருந்து. ஆனால் எங்கடையள் தான்.. இன்னும் எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்பமுன்னு.. மகிந்தவை தேசிய தலைவராக்கிறம்.. சொறீலங்கா சிங்கக் கொடியை தூக்கிப் பிடிக்கிறம்.. சொறீலங்கா சிங்கள சுதந்திர தினத்தில் ஒன்றில் கொட்டாவி.. இல்லாட்டி கண்ணீர் மல்கிறம்.. தேர்தல் தவிர.. சொந்த மக்களை கணக்கில எடுக்கமாட்டம் எங்கிறம்..!!

இந்தக் கேடு கெட்ட தமிழரால் தான் இன்று தமிழினம் இவ்வளவு அழிவையும் அடிமை வாழ்வையும் சந்திச்சு நிற்குது. :rolleyes:tw_angry:

அடடடடாட ,

மகிந்தாவை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்கள்  யார் என்பது  அதற்குள்  மறந்து போச்சு ?

அதைவிட  மகிந்தாவிற்கு  யாதார்த்தவாதி என்ற பட்டம் வேறு .

பொல்லு கொடுத்து அடிவாங்கியவர்கள் கருத்து சொல்லினம் .

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ஒன்றும் புடுங்கல்ல... சந்திரிக்கா தான் புலிகளின் விநியோகக் கப்பல்களை முக்கியமாக.. அமெரிக்க - ஹிந்திய உளவுகளோடு உதவியோடு தகர்த்தவர். சம்பூர் மீது குண்டு வீசி போரையும் ஆரம்பிச்சவர். மகிந்த ஹிந்தியா விரும்பிய போரை சில சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் தேவைகளோடு இணைத்து முன்னெடுத்தார். அன்றைய நிலையில் எவர் சிங்கள ஆட்சிப் பீடம் ஏறினும் அதையே செய்யத் தூண்டப்பட்டிருப்பர். விடுதலைப்புலிகள் பலம் சொறீலங்காவுக்கு ஏற்படுத்திய இடைஞ்சலை விட வல்லாதிக்க.. பிராந்திய சக்திகளின் எடுபிடி கொள்கைகள் கோட்பாடுகளை திணிப்பதில் ஏற்படுத்தி இருந்த இடைஞ்சல் தான்.. புலிகள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டதுக்கு முக்கிய காரணம்.

இன்று சிரியாவில்.. மொடரேட் குரூப் என்று சொல்லி ஆசாத் அரசுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி.. தற்கொலை குண்டுத்தாக்குதல்கள்.. குண்டுத்தாக்குதல்கள் நடத்துபவர்கள் யார். பல மில்லியன் சிரிய மக்களை ஊர்களை விட்டு துரத்தி அடிப்பவர்கள் யார்..????! அமெரிக்காவால்.. மேற்குலகால்.. ஆயுதமும்.. நிதியும்.. இராணுவப் பயிற்சியும் அளிக்கப்பட்டவர்கள். மனித உரிமை அமைப்புக்களே இவர்களின் படுகொலைகளை வன்மையாகக் கண்டித்துள்ள நிலையிலும்.. மேற்குலகு இவர்களை ஆசாத் அரசுக்கு எதிராக இன்னும் பயன்படுத்தி வருகிறது. அவர்கள் ஐ எஸ்ஸுடன் கூட்டணி வைச்சு இயங்கிறார்கள். அதை வேற மேற்குலகு சகித்துக்கிட்டு போகுதாம்.

இவைக்கு புலிகள் பயங்கரவாதிகளாக்கப்பட வேண்டிய தேவை ஏன் வந்தது.. புலிகள் இவர்களின் எடுபிடிகள் ஆகமாட்டார்கள்.. விலை போகமாட்டார்கள் என்ற அந்த புலிகளின் உறுதி தான். புலிகளை அழித்தது.. புலிகளின் கொள்கை உறுதி தானே தவிர வேறு எதுவும் இல்லை. புலிகள் கொள்கையை தளர்த்தி.. எடுபிடிகள் ஆகி இருந்தால்.. இப்பவும் எம் மண்ணும் மக்களும்.. வல்லாதிக்க நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.. வேறு வகையில்.

இதெல்லாம்... ஆயுதத்தை எடுத்திட்டு தூக்கி குப்பையில போட்டிட்டு.. அசைலம் அடிக்க ஓடியாந்த கூட்டத்துக்கு விளங்கினால்... எப்பவோ ஈழம் கிடைச்சிருக்குமே. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ்காந்தி ஒரு சிறப்பான தலைவர் என்று புலிகள் அறிக்கை விட்டது 
அன்னாருக்கு ஞாபகம் இலைபோல .....??

  • கருத்துக்கள உறவுகள்

Both government and rebel sides are accused of violence against people they detain, the investigators say, but the vast majority are being held by government agencies.

They accuse President Bashar al-Assad's regime of crimes against humanity, in a report for the UN Human Rights Council.

The study says both loyalist and anti-government forces have committed possible war crimes.

http://www.bbc.co.uk/news/world-middle-east-35521801

இதே நிலை  இலங்கையில் இருந்த போது... இருக்கின்ற போது.. போராளிகள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டு அழிக்கப்படுகிறார்கள். அரசு காக்கப்படுகிறது.

சிரியாவில் அரசு அழிக்கப்பட முயற்சி நடக்குது.. போராளிகளுக்கு ஆயுதமும் பயிற்சியும்.. நிதியும் வழங்கினம். காரணம் அரசு அமெரிக்க எடுபிடி ஆக மறுக்குது. போராளிகள் அமெரிக்க எடுபிடி ஆகிட்டினம்.

 

இதுதான் மேற்குலகின் பயங்கரவாதக் கோட்பாடு.

அவனவன் தன்ர தேவைக்கு தன்ர அதிகாரம் பலத்தைப் பாவிக்கிறான். நாங்கள் பலவீனமான மக்கள் கூட்டம் பிரிஞ்சு நின்று அடுத்தவனுக்கு காவடி எடுப்பதில் யார் சிறந்தவருன்னு அடிபடுறம். அதுதான் ஒரு முன்னேற்றமும் இன்றி இந்த இனம் அழியுது.. அடிமைப்படுகுது. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தானும் கையெழுத்துப் போட்டால் தன்னுடைய படமும் பப்பிளிக்கில் வருமென்று ஒருவர் ஏதேதோ சொல்லித் தன்னைத் தயார்படுத்துகிறார். அவரை விடுங்கப்பா. :grin: :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, நவீனன் said:

சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம்- படையினருக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்து என்ற தொனிப்பொருளில் படைவீரர்கள் பாதுகாக்கும் தேசிய அமைப்பினால், முன்னெடுக்கப்படும் கையொப்பம் திரட்டும் செயற்பாட்டில் இணைந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, மகஜரில் கையொப்பமிட்டார்.
இந்த நடவடிக்கை கோட்டை சம்புத்தாலோக விஹாரையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

என்னதான் இருந்தாலும் தான்...தன்ரை நாடு ....தன்ரை சனம் .....தன்ரை இனம் .....தன்ரை கொள்கை எண்டு இப்பவும் தலைகுத்தாமல் நிமிர்ந்து நிக்கிறான் மானச்சிங்களவன்.
எங்கடையளும் இருக்குதுகளே! இனவிடுதலை கேட்டவன் இல்லாமல் போனதே பெரிய புண்ணியம் எண்டு துள்ளிக்குதிக்குதுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.