Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதித்துறையில் கசையடி அறிமுகப்படுத்தப்பட வேண்டும்!

Featured Replies

நீதித்துறையில் கசையடி அறிமுகப்படுத்தப்பட வேண்டும்!
 
 
நீதித்துறையில் கசையடி அறிமுகப்படுத்தப்பட வேண்டும்!
இலங்கையின் நீதித்துறையில் கசையடி அறிமுகப்படுத்தப்பட்டு,சிறு குற்றங்களை செய்தவர்களுக்கு 5 கசையடிகளும் பெருங்குற்றங்களை செய்தவர்களுக்கு 25 கசையடிகளும் வழங்கும் வகையில் புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என பொதுமகன் ஒருவர் குறிப்பிட்டார். 
 
இலங்கை அரசியலமைப்பில் மறுசீரமைப்பு தொடர்பில் பொதுமக்களுடைய கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் குழுவின் அமர்வு, இரண்டாவது நாளாக இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பொதுமகன் ஒருவரே இவ்வாறு கூறினார். 
 
அவர் தொடர்ந்து கூறுகையில், 
தற்போது, நாட்டில் நீதித்துறை வலுவற்றதாக சாதாரண நிலையில், பெருமளவான அரசியல் தலையீட்டுடன் காணப்படுகின்றது. அரசியல் தலையீடுகள் நீதியைப் பெற்றுக்கொடுக்கப்படாமல் முடிவடைகின்றன. குற்றவியல் வழக்குகளில் அதிகளவு இலஞ்சம், ஊழல் இடம்பெறுகின்றன. இலஞ்ச ஊழல் செய்பவர்களுக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்குவதே அது அதிகரிப்பதற்கு காரணம் ஆகும். நீதியை பாதிப்பது இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகும். கொலை வழக்குகள் 6 மாத காலத்துக்குள்ளும் சாதாரண வழக்குகள் 3 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கக்கூடியதாக மாற்றம் செய்யப்பட வேண்டும். 
 
மேலும், சமூகவிரோத குற்றங்களுக்கு கசையடிகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறான கசையடிகள் வழங்கப்படுவதன் மூலம் குற்றம் செய்பவர் தண்டிக்கப்படுவதுடன், அதனைப் பார்ப்பவர்கள் குற்றங்கள் செய்யாமல் இருப்பர். சாதாரண குற்றங்களுக்கு 5 கசையடிகளும் பெரும் குற்றங்களுக்கு 25 கசையடிகள் வழங்கப்பட வேண்டும். இதன்மூலம் தான் குற்றங்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். தற்போது வடமாகாணத்தில் குற்றங்கள் அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றது என்றார். 
 
  • கருத்துக்கள உறவுகள்

தவறுசெய்யும் காவல்துறையினர் எத்தரத்தில் இருந்தாலும் தண்டிக்கப்பட்டால் சமூகவிரோத குற்றங்களும் தானே இல்லாது போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

மனிதகுலத்துக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களில் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் எவராவது ஈடுபட்டால் ஈவிரக்கமில்லாமல் இன மத பேதமின்றி மரண தண்டனை கொடுக்கப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாகும் வரைக்கும் கல்லாலை எறிஞ்சு சாக்காட்டுற தண்டனையும் அமுலுக்கு கொண்டுவரவேணும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்

சொன்ன  பொதுமகன் சவுதியில் வாழ்ந்தவரோ?எந்த தணடனையாலும் யாரையும் திருத்த முடியாது என்பதை நாம் இவ்வள‌வு காலமும் கண்ட அனுபவம்

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

எத்தினை பேருக்கு பொட்டு வைச்சி அழகு பார்த்தோம்! விசாரித்து விடுறம் எண்டு சொல்லி சந்தனப் பொட்டு வைத்தோம். அப்ப எல்லாம் ஒரு குற்றமும் நடக்கேல்ல்லை எண்டு இப்பவும் பெருமையுற்றோம். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வாலி said:

எத்தினை பேருக்கு பொட்டு வைச்சி அழகு பார்த்தோம்! விசாரித்து விடுறம் எண்டு சொல்லி சந்தனப் பொட்டு வைத்தோம். அப்ப எல்லாம் ஒரு குற்றமும் நடக்கேல்ல்லை எண்டு இப்பவும் பெருமையுற்றோம். 

குற்றமற்ற சமுகம் உருவாகியதா? இல்லை கசையடி கொடுத்த அரசுகளிலாவது சமுகம் திருந்திச்சா?குற்றவாளிகளாக பார்த்து திருந்தாவிடின் ......குற்றங்களை குறைக்க முடியாது......அரசுகள் குற்றவாளிகள் உருவாகுவத‌ற்கான காரணங்களை அறிந்து  அதை தடுப்பதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும்....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

எத்தினை பேருக்கு பொட்டு வைச்சி அழகு பார்த்தோம்! விசாரித்து விடுறம் எண்டு சொல்லி சந்தனப் பொட்டு வைத்தோம். அப்ப எல்லாம் ஒரு குற்றமும் நடக்கேல்ல்லை எண்டு இப்பவும் பெருமையுற்றோம். 

கேள்வியும் நானே ....பதிலும் நானே என்று இருக்கு உங்கள் கருத்து ......உண்மை தானே பொ (போ)ட்டு வைக்காத  காலத்தில் 
வித்தியாவிட்கு செய்த அநியாயம் போல எந்த அநியாயத்தை தமிழன் பொ (போ)ட்டு வைத்த காலத்தில் தன்னின பெண்களுக்கு செய்தான் ...பொட்டு  காலத்தில் சிங்களவன் செய்ததை
பொட்டு வைக்க ஆளில்லாத காலத்தில் தமிழன் செய்கிறான் ......உது மட்டுமா புலம்பெயர் சம் சும் வால்கள் சுவிஸ், ஜெர்மன் போன்ற நாடுகளிலிருந்து விடுமுறைக்கு வந்து எங்கட பெண்பிள்ளைகளை சீரழித்திருப்பினமா  ...முதலில் பொட்டு பார்ட்டி இருந்தால் இவைகளெல்லாம் ஊருக்குள்ளேயே வந்திருப்பினமா......நாங்கள்  மறந்தாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போல கிடக்கே 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டுவைத்துப் புகுந்து அடுத்தவீட்டைப் போட்டுக் கொடுத்துவிட்டு மிகுதியையும் கூட்டிக் கொடுத்ததால் தப்பிப் பிழைத்திருக்கும் கூட்டம் ஒன்று தண்டனைக்கும் தப்பிக் கூட்டணியிலும் இணைந்து கும்மாளம் போடுது. :shocked:   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.