Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஸ்டி மறுக்கப்பட்டால் தனிநாட்டு கோரிக்கை வலுப்பெறும் ; பொது அமைப்புக்கள் எச்சரிக்கை!

Featured Replies

சமஸ்டி மறுக்கப்பட்டால் தனிநாட்டு கோரிக்கை வலுப்பெறும் ; பொது அமைப்புக்கள் எச்சரிக்கை!
 
 
சமஸ்டி மறுக்கப்பட்டால் தனிநாட்டு கோரிக்கை வலுப்பெறும் ; பொது அமைப்புக்கள் எச்சரிக்கை!
புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு சமஸ்டி உரிமை மறுக்கப்பட்டால் தனிநாட்டையே தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பில் பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை நேற்று யாழ். மாவட்டச் செயலகத்தில் இரண்டாவது நாளாகவும் நடைபெற்றது.
 
இதன்போது கருத்துக்களை முன்வைத்த பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களே இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.
 
இவ்வாறு வழக்கப்படும் தனிநாடு தமிழீழமாக அமைய வேண்டும் இதற்கு சர்வதேச நாடுகள் உதவிகளை வழங்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். புதிய அரசாங்கமும் தமிழர்களுடைய உரிமைகளை தர மறுத்தால், சர்வதேசம் அதனை புரிந்து கொள்ள வேண்டும்.
 
சிங்களவர்கள் தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க மாட்டார்கள். அத்துடன் இந்த முறையும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டால் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்திற்கு அடிகோலும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனை மிக நீண்ட காலமாக நாட்டில் இடம்பெற்று வருகின்றது. ஆங்கிலேயர் ஆட்சியின் பின்னர் சிங்களவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட தேசம் இன்றும் சிங்களவர்களுக்கு அடிமையானதாகவே இருந்து வருகின்றது. எமக்கான உரிமைகள் தருவதாக ஆட்சியாளர்களால் கூறப்பட்டு ஏமாற்றப்பட்டு தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டே வந்துள்ளோம்.
 
இன்றும் எதிர்கட்சியில் உள்ள எமது அரசியல் தலைவர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள்.எமது கருத்துக்கள் பெறப்பட்டு புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் போது எமக்கான தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும் வகையில் அரசியல் அமைப்பு அமைய வேண்டும்.
 
மேலும் இந்த அரசாங்கமும் எம்மிடம் கருத்துக்களை பெற்று ஏமாற்றும் செயலில் இறங்குமாயின், எமது விடுதலை போராட்டத்தை அழிப்பதற்கு உதவிய சர்வதேச நாடுகள் எமக்கான தனி நாடான தமிழீழத்தை பெற்று தர வேண்டும் என பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்
சமஸ்டி மறுக்கப்பட்டால் தனிநாட்டு கோரிக்கை வலுப்பெறும் ; பொது அமைப்புக்கள் எச்சரிக்கை!
 
 
சமஸ்டி மறுக்கப்பட்டால் தனிநாட்டு கோரிக்கை வலுப்பெறும் ; பொது அமைப்புக்கள் எச்சரிக்கை!
புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு சமஸ்டி உரிமை மறுக்கப்பட்டால் தனிநாட்டையே தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

இதன்போது கருத்துக்களை முன்வைத்த பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களே இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.

 

 

 

இது புலி ஆதரவு ஊடகங்களின் செய்தியாக இருக்கும்   tw_tounge_wink:

 

 
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும்.. 1950..60 களில் நிற்கினம்.. இவை.

சமஷ்டி கேட்டு.. அது நிராகரிக்கப்பட்டு.. தனித் தமிழீழம் பிரகடனம் போட்டு.. தேர்தலில் வென்று.. பிறகு அதை பதவி சுகங்களுக்காக கைவிட்டு..ஹிந்தியா பின்னாடி அலைஞ்சு.. இப்ப மீண்டும்.. சமஷ்டி கேட்டு................................................  முடியல்ல. தமிழன் தலை சிங்களவனுக்கு அவன் கூலிகளுக்கு... இன்னும் நல்லா மிளகாய் அரைக்குது. tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சமஷ்டி தராவிடில் தமிழீழமே ஒரே வழி! யாழில் கருத்து வெளியிட்ட மக்கள்

சமஷ்டி தராவிடில் தமிழீழமே ஒரே வழி! யாழில் கருத்து வெளியிட்ட மக்கள்
 

 

இலங்கை தமிழ்- சிங்கள இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு திட்டமே தீர்வாக அமையும், அவ்வாறான தீர்வு முன்வைக்காவிட்டால் தமிழர்கள் தனிநாட்டை கோருவதை தவிர வேறு வழி இருக்காது என அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான பொதுமக்கள் கருத்துக்களை அறியும் குழு முன்னிலையில் மக்கள் கூறியுள்ளனர்.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும். குழு நேற்றும், இன்றும் யாழ்.மாவட்டச் செயலகத்தில் யாழ். மாவட்டத்திற்கான இருநாள் அமர்வுகளை நடத்தியிருந்தது.

மேற்படி இரு நாள் அமர்வுகளில் பொதுமக்களால் மேற்படி கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையினை காண முடிந்தது. மேற்படி அமர்வில் விடயம் தொடர்பாக
மக்கள் முன்வைத்த கருத்துக்களாவன,

இலங்கைக்கு அந்நியர்கள் சுதந்திரம் கொடுத்தபோது ஆட்சி அதிகாரம் சிங்கள மக்களுக்கு தாரை வார்க்கப்பட்டது. அன்று தொடக்கம் தமிழ் மக்கள் இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

தமிழர்களுடைய உரிமைகளை மீட்டுக் கொடுப்பதற்கும், தமிழர்களுக்கும் சிங்கள மக்களுக்கு சமமான அதிகாரங்கள் மற்றும் உரிமைகளை வழங்குவதற்கும் நடந்த பேச்சுவார்த்தைகள், செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் முறிக்கப்பட்டமையும், கிழித்து வீசப்பட்டமையும் நடந்த உண்மையாகும்.

நல்லாட்சி அரசாங்கத்திலும் இலங்கையின் எதிர்கட்சிகள் ஆசனத்தில் இருந்து கொண்டிருக்கும் எம்மவர்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

மேலும் இதுவரை கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்களில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. என்பதுடன் அவர்களுடைய அங்கத்துவமும் இருந்திருக்கவில்லை.

இந்நிலையில் புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்புக்காக எங்களுடைய பங்களிப்பும் கோரப்படுகின்றது. இந்நிலையில் தமிழ் மக்கள் வடகிழக்கு இணைந்த தாயக பகுதியில் சமஷ்டி முறையிலான ஒரு தீர்வே தீர்வாக அமைய வேண்டும்.

அவ்வாறான ஒரு தீர்வு வழங்கப்படாதுபோனால் தமிழ் மக்கள் மீண்டும் தனிநாட்டுக் கோட்பாட்டை வலியுறுத்த நேரிடும். என்ற கருத்துக்கள் இரு நாள் அமர்வுகளில் வழங்கப்பட்டுள்ளது.

இரு நாள் அமர்வுகளிலும் 153 தனி நபர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் சார்ந்தவர் களின் கருத்துக்களும், 5 அரசியல் கட்சிகளின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

jaffna_meet_people_002  சமஷ்டி தராவிடில் தமிழீழமே ஒரே வழி! யாழில் கருத்து வெளியிட்ட மக்கள் jaffna meet people 002jaffna_meet_people_004  சமஷ்டி தராவிடில் தமிழீழமே ஒரே வழி! யாழில் கருத்து வெளியிட்ட மக்கள் jaffna meet people 004jaffna_meet_people_006  சமஷ்டி தராவிடில் தமிழீழமே ஒரே வழி! யாழில் கருத்து வெளியிட்ட மக்கள் jaffna meet people 006jaffna_meet_people_008  சமஷ்டி தராவிடில் தமிழீழமே ஒரே வழி! யாழில் கருத்து வெளியிட்ட மக்கள் jaffna meet people 008jaffna_meet_people_010  சமஷ்டி தராவிடில் தமிழீழமே ஒரே வழி! யாழில் கருத்து வெளியிட்ட மக்கள் jaffna meet people 010http://ilakkiyainfo.com/

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

 

 

 

 

இது புலி ஆதரவு ஊடகங்களின் செய்தியாக இருக்கும்   tw_tounge_wink:

 

 

நானும் அப்படித்தான் நினைக்கின்றேன்!நானும் அப்படித்தான் நினைக்கின்றேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.