Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நளினியின் தந்தை மரணம்: இறுதிச் சடங்கில் பங்கேற்க பரோலில் வருகிறார்

Featured Replies

நளினியின் தந்தை மரணம்: இறுதிச் சடங்கில் பங்கேற்க பரோலில் வருகிறார்

 

 சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் நளினியின் தந்தை சங்கரநாரயணன் இன்று உடல் நலக் குறைவால் காலமானார். அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பரோலில் செல்ல நளினிக்கு வேலூர் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தடா நீதி மன்றத்தால் தூக்கு தண்டனை பெற்றவர் நளினி. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பரிந்துரையால் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

 

தற்போது வேலூர் பெண்கள் தனிச்சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் ஸ்ரீகரன் என்ற முருகன் ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ளார். ஆயுள் கைதியான நளினியை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடை பெற்றுவருகிறது. இந்நிலையில், நளினியின் தந்தையும் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டருமான சங்கரநாராயணன் இன்று நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

 

அவருக்கு வயது 91. அவரது உடல் நெல்லையில் இருந்து சென்னை கோட்டூரில் உள்ள நளினியின் சகோதரர் இல்லத்துக்கு கொண்டுவரப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து சிறை அதிகாரிகளுக்கு நளினி. முறைப்படி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் நளினியை பரோலில் விடுவிக்குமாறு அவரது தாய் பத்மாவதி வேலூர் சிறை அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க நளினிக்கு சிறை நிர்வாகம் பரோலில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பரோலில் செல்ல சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பரோல் (parole) என்பதற்கு சரியான தமிழ் பதம் என்ன?  பிணை எனக்கொள்ளலாமா? அப்படியானால் bail என்பதன் சரியான தமிழ் பதம் என்ன? இவை இரண்டிட்கும் வேறுபாடு உண்டா?  

யாராவது தெரிந்தவர்கள் விளக்குவீர்களா?

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

பரோல் - என்பது குற்றம் புரிந்தவர் அல்லது அவர் புரிந்த குற்றம் சார்ந்து அல்லாது புற காரணிகளால் தற்காலிகமாக விடுதலை செய்வது 

பெயில் - குற்றம் சார்ந்து  குற்றவாளி அதன் ஆதராம் சார்ந்து கிடைக்கும் விடுதலை 

தமிழ் தெரியவில்லை 

நாங்கள் கோட்டு போலிஸ் எல்லாம் கறுப்பு வெள்ளை படம்போல 
பழைய காலத்து நினைவாக மட்டுமே பார்த்தவர்கள்.

எங்கள் காலத்தில் .......
9ம்ம் பிஸ்டல் 
தந்தி போஸ்ட் 
இதுகள்தான் பார்த்து வளர்ந்தோம் 

அதுபற்றி ஏதும் கேள்வி வந்தால் கேளுங்கள்! 

பெயில் தான் பிணை 

புற காரணிகளுக்குள் 
குற்றவாளியின் நன்னடத்தையும் அடங்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை குற்றவாளி என்று கோர்ட் அறிவிப்பதை conviction என்போம்.

ஒருவர் conviction ற்கு முன்போ பின்போ சிறையில் இருக்கலாம். 

Conviction ற்கு முன்பு அல்லது conviction ஐ மேன்முறையீடு நெய்யின் நிலையில், சிறையில் இருந்து தற்காலிகமாக நிபந்தனை அடிப்படையில் வெளிவருவது bailஅல்லது பிணை.

உதாரணம் - ஜெயலலிதா.

Conviction ற்குப் பின் வெளியே விட்டால் பரோல்.

பரோல் இரு வகைப்படும். நளினி வருவது போல் சாவுவீடு போன்றவற்றை செய்ய சில நாட்கள் வருவது ஒரு வகை. வந்த விடயம் முடிய மீண்டும் உள்ளே போகவேண்டும்.

உதாரணம் - நளினி

இரண்டாம் வகை, நன்னடத்தை அடிப்படையில், மீதம் இருக்கும் தண்டனைக் காலத்தை குறைத்து early release ஆக வெளியே விடுவது. லைசன்சில் வருவது என்பார்கள். தண்டனை காலம் முடியமுதல் நன்னடத்தை தவறினால் பரோல் கான்சல், ஓட்டோமடிக்கா உள்ளே.

பரோல் - நன்னடத்தை விடுப்பு எனலாம். வேறு நல்ல தமிழ் சொல் இருக்கலாம். 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஒருவரை குற்றவாளி என்று கோர்ட் அறிவிப்பதை conviction என்போம்.

ஒருவர் conviction ற்கு முன்போ பின்போ சிறையில் இருக்கலாம். 

Conviction ற்கு முன்பு அல்லது conviction ஐ மேன்முறையீடு நெய்யின் நிலையில், சிறையில் இருந்து தற்காலிகமாக நிபந்தனை அடிப்படையில் வெளிவருவது bailஅல்லது பிணை.

உதாரணம் - ஜெயலலிதா.

Conviction ற்குப் பின் வெளியே விட்டால் பரோல்.

பரோல் இரு வகைப்படும். நளினி வருவது போல் சாவுவீடு போன்றவற்றை செய்ய சில நாட்கள் வருவது ஒரு வகை. வந்த விடயம் முடிய மீண்டும் உள்ளே போகவேண்டும்.

உதாரணம் - நளினி

இரண்டாம் வகை, நன்னடத்தை அடிப்படையில், மீதம் இருக்கும் தண்டனைக் காலத்தை குறைத்து early release ஆக வெளியே விடுவது. லைசன்சில் வருவது என்பார்கள். தண்டனை காலம் முடியமுதல் நன்னடத்தை தவறினால் பரோல் கான்சல், ஓட்டோமடிக்கா உள்ளே.

பரோல் - நன்னடத்தை விடுப்பு எனலாம். வேறு நல்ல தமிழ் சொல் இருக்கலாம். 

ஊரில் நன்னடத்தைப் பிணை என்ற சொல்லைப் பாவிப்பார்கள், கோஷான்!

அந்தக்கால மித்திரன் வாசகன் என்ற படியால் இந்த வார்த்தைகள் அத்துபடி!

 

அவுசில் பரோல் என்றால்... ஒரு வித கண்காணிப்புடன் விடுதலை என்று நினைக்கிறேன்!

அந்தக் காலத்தில் 'நன்னடத்தை ' தவறினால் மீண்டும் உள்ளே போய்... இன்னொரு 'பரோல் மீளாய்வு' வரையும் காத்திருக்க வேண்டும்! அது பல வருடங்களும் எடுக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையைப் பிரிந்து வாடும் நளினி அக்கா குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 

  • தொடங்கியவர்

தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டார் நளினி

தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டார் நளினி

February 24, 2016  11:29 am

Bookmark and Share
 
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருந்து வரும் நளினி, மறைந்த தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள பரோலில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள சகோதரர் வீட்டுக்கு வந்தார்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் வசித்து வந்த நளினியின் தந்தை சங்கரநாராயணன் நேற்று காலமானார்.

அவரது உடல் நெல்லையில் இருந்து சென்னை கோட்டூரில் உள்ள நளினியின் சகோதரர் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது.

சென்னையில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக நளினிக்கு பரோல் வழங்கப்பட்டதை அடுத்து இன்று காலை வேலூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அவர் சென்னை வந்தார்.

இறுதி சடங்கு முடிந்த பின்னர் மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
 
 
  • தொடங்கியவர்

25 ஆண்டுகளுக்கு பின் பரோலில் வெளியே வந்த நளினி! ( படங்கள்)

 

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நளினி, 25 ஆண்டுக்கு பின் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பரோலில் வெளியே வந்துள்ளார்.

nalini%20600%20%20a.jpg

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர் நளினி. இவரது தந்தை சங்கர நாராயணன். ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான இவர், நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று (23-ம் தேதி) மாலை உடல் நலக்குறைவு காரணமாக 91 வயதான சங்கர நாராயணன் காலமானார். அவரின் உடல், சென்னை கோட்டூர்புரம் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள அவரது மகன் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, இன்று (24-ம் தேதி) அடக்கம் செய்யப்பட உள்ளது.

n2.jpg

தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவதற்காக, தன்னை பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று நளினி சிறைத்துறையிடம் மனு அளித்தார். இதையடுத்து, இன்று காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை 12 மணி நேரம் நளினிக்கு பரோல் வழங்கியுள்ளது சிறைத்துறை.

nalini%20600.jpg

இதை தொடர்ந்து இன்று காலை, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்து, வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ரத்னவேல் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பவானிமேரி சப்–இன்ஸ்பெக்டர் லதா மற்றும் துப்பாக்கி ஏந்திய 7 போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கோட்டூர்புரத்திற்கு நளினியை அழைத்து சென்றனர்.

25 ஆண்டுகளுக்கு பின்னர் பரோலில் தனது சகோதரர் இல்லத்திகற்கு வந்த நளினி, தனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, உறவினர்களுடன் துயரத்தை பகிர்ந்து கொண்டார். நளினிக்கு ஆறுதல் கூறவும், அவரது தந்தைக்கு அஞ்சலி செலுத்தவும் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் உள்ளிட்ட பல தலைவர்களும் வந்திருந்தனர்.

தந்தை சங்கர நாராயணன் இறுதிச் சடங்கு முடிந்ததும், இரவு வேலூர் சிறைக்கு புறப்பட்டு செல்வார்.

இதற்கு முன் பலமுறை பரோலுக்கு நளினி விண்ணபித்தும் பரோல் வழங்கப்படவில்லை. தற்போது, நளினி முதல் முறையாக பரோலில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/tamilnadu/59548-nalini-came-out-on-parole-after-25-years.art

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோஷான்/புங்கை/மருதங்கேணி விளக்கத்திற்கு.

இவர் உண்மையில் குற்றம் செய்திருப்பார் என நான் நம்பவில்லை. சந்தர்ப்பவசத்தால் அறியாமல் ஏதும் நடந்திருக்கலாம்.

25 வருடங்களா ஒர் பெண் தன்வாழ்வை சிறையில் கழித்துள்ளார் என்னவொரு கொடுமை.

எத்தனையோ உண்மைகுற்றவாளிகள் வெளியே உல்லாசம் அனுபவிக்கிறார்கள். 

என்ன உலகமடா இது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.