Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் எதற்க்கடா மாவீரர் துயிலுமில்லம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் எதற்க்கடா மாவீரர் துயிலுமில்லம்?

February 25, 2016
0
3101
np-25216-04-696x489.png
தமிழினத்தின் விடுதலைக்காய் கழுத்தில் நஞ்சைக் கட்டிய புலி வீரர்கள் இன்று தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தமுடியாது தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின்றது. இதை விடப் பெரிய அவலம் தமிழ் சமூகத்திற்கு இனி வேறேதுமில்லை.

எத்தனையோ தடவைகள் ஊடகங்கள் ஊடாகவும் முகநூல்கள் ஊடாகவும் முன்னால் போராளிகளின் அவலங்களை காட்சிப்படுத்தியும் அதுகுறித்து தமிழ் சமூகம் கண்டுகொண்டதாக இல்லை குறிப்பாக புலம்பெயர் சமூகம் கண்டுகொண்டதாக இல்லை.

யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரணமாக தற்கொலை செய்துள்ளார்.
யோதிலிங்கம் துசன் என்ற 34 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே நேற்றைய தினம் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது மனைவியும் முன்னாள் போராளியே!

இவர்களின் தற்கொலைகளுக்கு யார் பொறுப்பு???????????

இவர்களின் தற்கொலைகளுக்கு யார் பொறுப்பு? என்றால் இவர்களின் தற்கொடைகளுக்கு பொறுப்பாக இருந்தவர்களே இவர்களின் தற்கொலைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

புலம்பெயர் தேசத்தில் இருந்துகொண்டு வீரவணக்கம் செலுத்துபவர்களே !புலம்பெயர் தேசத்தில் இருந்துகொண்டு கோடி கோடியாய் செலவு செய்து மாவீரர்தினம் செய்பவபர்களே! புலம்பெயர் தேசத்தில் இருந்து போராட்டத்தை நடத்துவதற்கு பணம் வழங்கியவர்களே!புலம்பெயர் தேசத்தில் புலிகளின் பணத்தை வைத்துக்கொண்டு வயிறு வளர்க்கும் பினாமிகளே நீங்கள் அனைவருமே இவர்களின் தற்கொலைகளுக்கு பொறுப்பானவர்கள்.
போராளிகளின் தியாகத்தில் வயிறு வளர்த்தவர்களே, போராளிகளின் தியாகத்தால் பதவிவகித்தவர்களே போராளிகளின் தியாகத்தால் வாழ்ந்துகொண்டிருப்பவர்களே, ஒரு கணம் சிந்தியுங்கள்.

லண்டனில் மாவீரர் துயிலுமில்லம் அமைக்க பல லச்சம் பணம் பல வழிகளால் சேர்க்கப்பட்டது.இந்தப்பணங்களை சேர்ப்பவர்களே விடுதலைப்புலிகள் அமைப்பின் பெரும் தொகை பணத்தை சூறையாடிய கள்ளர்கள். புலிகளின் பணத்தில்,ஒன்றுக்கு,ஐந்து,வர்த்தக நிலையங்களை திறந்து புலிகள் அமைப்பின் பணத்தில் சுபபோக வாழ்க்கை அனுபவித்து வருவதை நிறுத்தி தமிழ் உறவுகளை காப்பாற்றுங்கள்.

தமிழ் இனத்தின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த இந்த வீரர்களின் குடும்பங்களுக்காக நீங்கள் செய்தது என்ன??????
புலம்பெயர் தேசத்தில் நீங்கள் எதற்காகவோ எல்லாம் ஒன்று கூடி பேசிய நீங்கள், இந்த முன்னாள் போராளிகளின் வாழ்வாதார திட்டங்களுக்காக ஒருதடவையாவது ஒன்று கூடி பேசியுள்ளீர்களா???????????

ஆறு வருடங்களாக தங்களின் துன்பங்களையெல்லாம் அடக்கி வைத்துக்கொண்டிருக்கும் இந்த தியாகிகளின் வாழ்வாதாரத்திற்காக ஏதாவது செயற்திட்டங்களை உருவாக்கியுள்ளீர்களா??????????

நாங்கள் அறிந்தவகையில் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்காக தாயகதேசத்திலோ அல்லது புலம்பெயர் தேசத்திலோ எவரும் ஒன்று கூடி ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை.

மூச்சுக்கு முன்நூறு தடவை விடுதலைப்புலிகள் விடுதலைப்புலிகள் என்று கோசம்போடும் தலைவர்களே! இந்த விடுதலைப்புலிகள் எங்கிருந்துவந்தவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று ஒருமுறையாவது சிந்தித்துள்ளீர்களா????????????

தமிழினம் மரணிக்க கூடாது என்பதற்காக இரவு பகலாக பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் எல்லையில் காவல்காத்த இந்த காவல் தெய்வங்கள், இன்று ஒரு பிடி உணவுக்கு வழியின்றி தற்கொலை செய்கின்ற அவலம் நடைபெற்று கொண்டிருக்கின்றது என்றால்,

இனி இந்த தமிழ் சாதியை யார் காப்பாற்ற முடியும். பாவித்து விட்டு தூக்கியெறியும் குணம் கொண்ட தமிழினமே நீ விடுதலைபெற தகுதியான இனமா? என்பதை ஒருதடவை ஆய்வு செய்துபார்.

விடுதலைக்கா உழைத்தவர்கள் பிச்சை எடுக்கையில், அவர்களைப்பற்றி சிந்திக்க தவறிய உனது விடுதலைக் கோசம் எந்தவகையில் நியாயமானது?
இன்று தமிழின விடுதலை, விபச்சாரமாக மாற்றப்பட்டுள்ளது. இது தமிழினத்தின் சாபக்கேடு.

பிணங்களுக்கு பின்னர் உங்கள் பணங்களை கொண்டுவந்து என்ன செய்யப்போகின்றீர்கள். இறந்தவனுக்கு பணம் வழங்கும் பண்பாட்டில் வளர்ந்த இனம் எம் தமிழினம் அல்லவா?

ஒருவன் இறந்தால் ஒன்பதுபேர் வருவார்கள் உதவுவதற்கு அவன் உயிருடன் இருக்கும்போது ஒருவர் கூட திரும்பிப்பார்ப்பதில்லை.

மீண்டும் ஒரு முறை சிந்தியுங்கள். இனியொரு முன்னாள் போராளியின் தற்கொலை எம்தேசத்தில் இடம்பெறக் கூடாது. மரணங்களுக்கு மாலையிடுவதை நிறுத்திவிட்டு மரணங்களை தடுப்பதற்கு முயற்சிசெய்யுங்கள.

வரலாறு எல்லாவற்றையும் பதிவு செய்துகொண்டிருக்கின்றது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு,தியாகத்திற்கு பின்னால் இருக்கின்ற சொத்துக்களை சுருட்ட நினைப்பவர்களே! நாளை உங்கள் பிள்ளைகளையும் வரலாறு தண்டிக்கும். என்பதை நினைவில் வைத்துக்கொண்டு,

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்காக உதவ முன்வாருங்கள்.

இருப்பவர்களையாவது காப்பாற்ற முயற்சிசெய்யுங்கள். (பதிவு யாரோ )

http://www.velichaveedu.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D-2/

 

  • Replies 78
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் துயிலும் இல்லங்கள் தாயகத்தில் உடைக்கப்பட்டுள்ள நிலையில் பிள்ளைகளை நாட்டுக்காகப் பறிகொடுத்துவிட்டு உலகெங்கும் ஓடி ஒளிந்து வாழும் மாவீரர்களின் சொந்தங்கள் அவர்களை நினைவு கூற ஓர் இடமாவது நிரந்தரமாக அமைவது அவசியம் அதில் தவறு சொல்ல முடியாது.

தாயகத்தில் புகலிடத்தில்..எத்தனை களியாட்டம் நிகழ்கிறது..

1. கோவில்களும் கும்பாபிசேகங்களும்.

2. நல்லூரானுக்கு நாலு பக்கமும் கோபுரம்.

3. பேர்த்டே பார்ட்டிகளும் சாமத்திய வீடுகளும்.

4. பார்களிலும் கிளப்புகளிலும் குடித்துவிட்டு கும்மாளம்.

5. பள்ளிக்கூடங்களின் பெயரால் குத்தாட்டம்.

6. ஆடம்பரக் கல்யாணங்கள் (அண்மைய பிபிசி ஆய்வின் படி சாரசரியாக தென்னாசியர்கள் ஒரு கல்யாணத்துக்கு 50,000 பவுன்களை செலவிடுகிறார்களாம்.)

7. அநாவசிய கொலிடேக்கள்.

8. அநாவசிய பார்ட்டிகள்.

9. தென்னிந்திய நடிகை நடிகைகளை ரிவிக் காரரை வரவழைத்து நிகழ்த்தும் குத்தாட்டங்கள் கொண்டாடங்களுக்கு கொட்டும் பணம்.

10. ஒன்றுக்கு நாலு வீடு வாங்குதல்.

11. ஒன்றுக்கு நாலு வாகனம் வாங்குதல்.

12. ஆடம்பர உடைகள்.

13. ஆடம்பர.. அளவுக்கு மிஞ்சிய நகைகள்.

14. அளவுக்கு மிஞ்சிய இலத்திரனியல் கொள்வனவுகள்.

15.  ஆளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தொலைபேசிகள். (கையடக்கம் உட்பட)

16. ஹிந்திய சினிமாவுக்கு பொழுதுபோக்கக் கொட்டும் பணம்.

 

இப்படி எத்தனையோ செலவுகள் நடக்குதே.. அதையேண்டா தட்டிக்கேட்கிறீங்க இல்ல.

மாவீரர் துயிலும் இல்லம் கட்டிறது தான் இங்க பிரச்சனை. அதனை முன்னாள் போராளிகளின் அவலத்தோடு முடிச்சுப் போடுவது கபடத்தனம்.

இந்தப் போராளிகளுக்கு உதவச் சொல்லி எத்தனையோ குரல்கள் நிகழ்ச்சித்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. அவை எவையும் உருப்படியாக அமுலாக தாயகத்தில் உள்ள சிங்கள ஆக்கிரமிப்பு நிர்வாகமும் இடம் கொடுக்குதில்லை.

வடக்கு முதலமைச்சர் நிதியத்தை உருவாக்கி.. ஒரு ஓய்வூதியத் திட்டம் போல் ஒரு நிரந்தரக் கொடுப்பனவை இப்போராளிகளுக்குச் செய்ய முன்வைக்கப்பட்ட திட்டங்களையும் சிங்கள அரசுகளும் அதிகாரிகளும் கிடப்பில் போடச் செய்துவிட்டனர்.

இந்த நிலையில்.................................. மாவீரர் துயிலும் இல்லம் கட்டப்படுவது ஏன் சிலருக்கு கண்ணை உறுத்துது.

முன்னாள் போராளிகளின் அநியாயச் சாவுகளுக்கு

பணம் மட்டும் காரணமல்ல.

  1. சிங்கள அரச படைகளின் அழுத்தம்..
  2. உள்ளூர் தமிழ் சமூகம் பயம் காரணமாக..அவர்களைப் புறக்கணிக்கும் அழுத்தம்..
  3. சிங்கள அரசின் அழுத்தம்..
  4. மீண்டும் ஒரு போராட்டம் வரக்கூடாது என்பதற்காக சர்வதேச நாடுகள் காட்டும் மனிதாபிமானமற்ற பாராமுகக் கொள்கை.
  5. ஹிந்தியா போன்ற அசுர சக்திகளின் திட்டமிட்ட சதித்திட்டங்கள்.
  6.  போராட்டத் தோல்வி தந்த உளவியல் தாக்கங்கள்.
  7. புனர்வாழ்வு முகாம்களில் அளிக்கப்பட்ட சித்திரவதைகளும் உளவியல் நெருக்கடிகளும்.
  8. புனர்வாழ்வு என்று அளிக்கப்பட்ட பின்னும் முன்னாள் போராளிகள் என்ற அடையாளம் இடல். அவர்களை சாதாரண குடிமக்களாகக் கருத முடியாத சூழலை தோற்றுவித்துள்ள தமிழர் ஊடகங்களும்.. சிங்கள அரச இயந்திரமும்.. சர்வதேசமும். 
  9. தொடரும் சிங்கள அரச புலனாய்வுப் படைகளின் ஒட்டுக்குழுக்களின் பாலியல் தொல்லைகள் மற்றும் இதர நெருக்குவாரங்கள்.

இதுக்கு மேல இன்னும் இருக்க..

ஒற்றைக்காரணியை வைச்சு.. எதுக்கடா.. மாவீரர்களுக்காக அமைவதின் மேல் பாயுறீங்க..??!

மாவீரர் நிகழ்வுகள்... போராளிகள் களத்தில் சாப்பாடு தண்ணி இல்லாது கிடந்த காலத்திலும் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டன தான். காரணம் அந்த மாவீரர்கள் எதனையும் எதிர்பார்க்காமல் மண்ணுக்காக மக்களுக்காக செய்த தியாகம் போற்றப்படனும் மறக்கப்படக் கூடாது என்பதற்காக. அவர்களின் சொந்தங்களின் ஆறுதலுக்காக.

இதை ஏண்டா வெண்ணைகளா புரிய முடியாமல் இருக்கீங்க.

 

(ஆக்கம் நெடுக்காலபோவன்.)

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் இருந்து கஷ்டப்பட்டு உழைத்து போராட்டத்துக்கு என காசு கொடுத்தவனும் இந்த பினாமிகளை நம்பி  இன்று மோசம் போனவர் தான். உங்களை போலவே உங்களுக்காக உதவிக்கரம் நீட்டிய புலப் பெயர் மக்களும் எமாற்றப்படிருக்கிறார்கள்.
தவிர மாவீரர் நாள் வணக்கம் செலுத்துவது அவனவன் ஆத்ம திருப்தி, நீங்கள் செய்த தியாகத்துக்கு செய்யப்படும் குறைந்த பட்ச மரியாதை. அதை மானசீகமாய் செய்வொருக்கிடையே சில வியாபாரிகள்...
இந்த விழிப்புணர்வு அதி வேகமாக மாறுதல்களை கொண்டு வருதல் வேண்டும்.

 நெடுக்கலபோவான்  குறிப்பிட்ட போராளிகளின் விரக்தியான வாழ்க்கைக்கும், அவர்களின் துயரமான முடிவுக்குமான பல காரணிகளில் நிறையவே ஞாயம் உள்ளது.

என்னத்தை படிச்சு ,

என்னத்தை கிழிச்சு 

ஒரு சின்ன விடயம் கூட விளங்காமல் .

எல்லாவற்றுக்கும் காரணம்  அங்கு இருக்கும் சிங்களத்தின் நிர்வாக அமைப்பு முறை. இல்லையேல் மாகாணசபை ஆட்சியாளர்களால் அவர்களை இனம் கண்டு வாழ்வாதார கொடுப்பணவுகள் செய்ய முடியும்.  புலம் பெயர் தமிழர்களும் உதவுவார்கள்.  எங்களுக்ககான சுதந்திர ஆட்சி முறை ஏற்படும் வரை இந்த அவலம் தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, arjun said:

என்னத்தை படிச்சு ,

என்னத்தை கிழிச்சு 

ஒரு சின்ன விடயம் கூட விளங்காமல் .

உங்களுக்குத் தான் விளங்கேல்ல!

மக்களிடம் ஆட்டையப் போட்ட காசு மாவீரர் நினைவகத்துக்குப் போகுது. ஊரிலயும் புலத்திலயும் தான் தான் உழைச்ச காசில தனக்கு விரும்பினதைச் செய்யுது சனம். அதை  ஒறுத்து போராளிகளுக்குக் கொடுக்கட்டாம்! ஆட்டையப் போட்ட காசு பற்றி இப்ப கதைச்சால் "தேசியம்" பாதிக்கப் பட்டுடுமாம்! 

  • கருத்துக்கள உறவுகள்

இங்க நின்று எழுதிக் கிழிக்கிறதுக்கு.. இந்தப் போராளிகளை வைச்சு கப்பம் வாங்கி பிழைப்பை ஓட்டும் புளொட் ஒட்டுக்குழு உட்பட ஒட்டுக்குழுக்களின் வயிற்றை வேறு வழியில்.. நிரப்பிற வழியைப் பார்த்தால்.. முன்னாள் போராளிகளின் வாழ்வில் அரைவாசி நிம்மதி பிறந்திடும். 

இந்தப் போராளிகளின் அவலவாழ்விற்கு காரணம்.. ஒட்டுக்குழுக்களில் உள்ளவர்களும் இவர்களை வைச்சு தான் அரச புலனாய்வு.. காட்டிக்கொடுப்பு.. சித்திரவதை செய்து பிழைப்பை ஓட்டுக்கிறார்கள். அவர்களின் தலைவர்கள் எல்லாம் நாட்டை விட்டு 1982 இலே வசதி வாய்ப்புத் தேடி ஓடிவிட்டார்கள். அடிமட்ட உறுப்பினர்கள் இனத்தையே அழித்து வயிறு வளர்க்கிறார்கள். 

இதுவும் முன்னாள் போராளிகளின் அவலம் தொடர்வதில் உள்ள காரணிகளில் ஒன்று. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நேசன் said:

எல்லாவற்றுக்கும் காரணம்  அங்கு இருக்கும் சிங்களத்தின் நிர்வாக அமைப்பு முறை. இல்லையேல் மாகாணசபை ஆட்சியாளர்களால் அவர்களை இனம் கண்டு வாழ்வாதார கொடுப்பணவுகள் செய்ய முடியும்.  புலம் பெயர் தமிழர்களும் உதவுவார்கள்.  எங்களுக்ககான சுதந்திர ஆட்சி முறை ஏற்படும் வரை இந்த அவலம் தொடரும்.

அப்ப கடல் அலைகள் ஓயும் வரை குளித்தல் இல்லை என்கிறீர்கள்? மேலும், எப்படி சிங்கள நிர்வாகம் தடை என்ற முடிவுக்கு வந்தீர்கள் நேசன்? ஏதாவது குறிப்பிட்ட சம்பவம் நடந்ததா?

மேலும், மாகாண சுகாதார அமைச்சின் கீழ் சமூக சேவைத் திணைக்களம் என்ற ஒன்று ஏற்கனவே இருக்குது! அமைச்சர் சத்தியலிங்கம், திருமதி இன்பராஜ் இயக்குனர். இதன் மூலம் போராளிகளுக்கு எவ்வளவோ செய்யலாம், மத்திய அரசின் தலையீடு வராது! சும்மா நொண்டிச்சாட்டுகள் சொல்லிக் கொண்டு இருக்கப் படாது!

http://www.np.gov.lk/index.php?option=com_content&view=article&id=198&Itemid=183

Edited by Justin
மாகாண அமைச்சு பற்றிய தகவல் சேர்க்கப் பட்டது

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடி வந்து பொய் தேசியம் பேசி உண்டியல் புலி ஆகி இப்ப லண்டனில மாவீரர் இல்லம் கட்டுகின்றார்கள் .

உண்மையானவன் யார் வேஷம் போடுபவன் யார் என்று அறியும் திறமை இல்லாத தலைமையால் வந்தது அத்தனை கேடுகளும் 

துரோகிகள் ஒட்டுகுழுக்கள் என்று யாரை ஒதுக்கினார்களே இன்று அவர்களிடமே கையேந்தும் நிலை

பாவங்கள் முன்னாள் போராளிகள் இந்த நாசகார கோஸ்டிகளால் அவர்களிலும் கோவம் வருகின்றது இருந்தாலும் நடந்ததை மறந்து இன்றும் ஒட்டுக்குழுக்கள் ? தான் அவர்களுக்கு உதவி செய்கின்றார்கள் .

உதவி செய்யவும் விருப்பமில்லை மற்றவன் செய்தாலும் பிடிக்காது இதற்குள் கோயில் திருவிழா சாமத்திய சடங்கு என்று திரியை திருப்பிவிட மட்டும் தான் தெரியும் ,

இவர்கள் திருந்த இடமேயில்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடுத்தவங்களே பேசாமல் இருக்கிறாங்கள்...வேடிக்கை பார்த்த பக்கத்து வீட்டு காத்தான் பூத்தான் எல்லாம் கேள்வி / கணக்கெல்லாம் கேக்குதுகள்!!!!!! இவையளுக்கு எங்கை முட்டுதெண்டுதான் விளங்கேல்லை?

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் என்றதும் 1982 இலேயே தூக்கின ஆயுதத்தை குப்பை மேட்டில போட்டிட்டு.. ஓடியாந்ததுகள் தங்க சொந்த மூஞ்சியை பார்த்ததே இல்லைப் போல. 

துரோகிகளிடம்.. ஒட்டுக்குழுக்களிடம் கையேந்தி நின்று.. அவை எல்லாம் செய்யினம் என்றால்.. பிறகேன்.. கணக்கு... வழக்கு... கப்பம்.. காட்டிக்கொடுப்பு.. சித்திரவதை.. கொலை..??! ஒட்டுக்குழுவுக்கே தின்ன வழி இல்லைன்னு.. வவுனியா அழுகுது.

போராளிகளை காட்டிக்கொடுத்து.. போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து..இத்தனை உயிர்த்தியாகங்களின் பெறுமதியை வீணடித்து.. விடுதலையையே நாசமாக்கினதுகள்.. இப்ப நீலிக்கண்ணீர் வடிக்கினமாம்.. முன்னாள் போராளிகளுக்காக..?!

தாங்கள் அடிச்சதை விட இன்னும் கொஞ்சம் கூட.. காசடிக்க முடியல்லையே என்ற வருத்தம் தான் இதுகளிடம். 

இவர்களே தமிழினிக்கு வைத்தியச் செலவுக்கு காசு கேட்ட போது குறை சொல்லி.. ஓடிஓளித்தவர்களும் கூட. 

இந்த நாசகார ஒட்டுக்குழு முகமூடிகள் அழிந்தால் தான் சிங்களவனை ஒப்புக்கு காப்பாற்றும் கூட்டமும் ஒழியும். அதன் பின் தான் எம் மக்களுக்கு முன்னாள் போராளிகளுக்கு நிம்மதி பிறக்கும். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை சுழல்கதிரையிலை இருந்து கேள்வி கேக்கிறவையள் நாட்டுக்கு போய் நாலு சனத்துக்கு நல்லதை செய்யலாமே?

பிணம் தின்னிகளுக்கு வல்லாளத்து வாங்கியவர்கள் அடுத்தவன் கொடுத்த காசிற்கு ரசீது கேட்கின்றார்கள்?

2 minutes ago, குமாரசாமி said:

குடுத்தவங்களே பேசாமல் இருக்கிறாங்கள்...வேடிக்கை பார்த்த பக்கத்து வீட்டு காத்தான் பூத்தான் எல்லாம் கேள்வி / கணக்கெல்லாம் கேக்குதுகள்!!!!!! இவையளுக்கு எங்கை முட்டுதெண்டுதான் விளங்கேல்லை?

போலிஸ் வந்து கேட்டாலும் உந்த பதிலை சொல்லுங்கோ 

பதிலை வைத்தே அவர்கள் உங்களை அடையாளம் காணுவார்கள் அவ்வளவு விளக்கம் 

கடைசியில் கூண்டோடு கைலாசம் போகலாம் 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை சுழல்கதிரையிலை இருந்து கேள்வி கேக்கிறவையள் நாட்டுக்கு போய் நாலு சனத்துக்கு நல்லதை செய்யலாமே?

அப்ப நீங்கள் சுத்தாத கதிரையில இருக்கிற படியால நாட்டுக்குப் போகவோ நன்மை செய்யவோ முடியாதோ? எதுக்கு கேள்வி கேக்கிறவன் போக வேணும்? ஆட்டையப் போட்டவனும் போட்டவனுக்கு வக்காலத்து வாங்குறவனும் அல்லவா போகக் கடமை இருக்கு? :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்திலே மாவீரர் இல்லங்களை சிங்கள இராணுவம் அழித்தபோது வாய்பொத்திக்கொண்டிருந்தவர்கள்.......இன்று இங்கும் சஞ்சலப்படுகின்றார்கள்.

5 minutes ago, nedukkalapoovan said:

போராட்டம் என்றதும் 1982 இலேயே ஓடியாந்ததுகள் தங்க சொந்த மூஞ்சியை பார்த்ததே இல்லைப் போல. 

துரோகிகளிடம்.. ஒட்டுக்குழுக்களிடம் கையேந்தி நின்று.. அவை எல்லாம் செய்யினம் என்றால்.. பிறகேன்.. கணக்கு... வழக்கு... கப்பம்.. காட்டிக்கொடுப்பு.. சித்திரவதை.. கொலை..??! ஒட்டுக்குழுவுக்கே தின்ன வழி இல்லைன்னு.. வவுனியா அழுகுது.

போராளிகளை காட்டிக்கொடுத்து.. போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து..இத்தனை உயிர்த்தியாயகங்களின் பெறுமதியை வீணடித்து.. விடுதலையையே நாசமாக்கினதுகள்.. இப்ப நீலிக்கண்ணீர் வடிக்கினமாம்.. முன்னாள் போராளிகளுக்காக..?!

தாங்கள் காசடிக்க முடியல்லை என்ற வருத்தம் தான் இதுகளிடம். 

இவர்களே தமிழினிக்கு வைத்தியச் செலவுக்கு காசு கேட்ட போது ஓடிஓளித்தவர்களும் கூட. 

இந்த நாசகார ஒட்டுக்குழு முகமூடிகள் அழிந்தால் தான் சிங்களவனை ஒப்புக்கு காப்பாற்றும் கூட்டமும் ஒழியும். அதன் பின் தான் எம் மக்களுக்கு முன்னாள் போராளிகளுக்கு நிம்மதி. tw_blush:

நாட்டில உந்த பிரச்சனை இனி இல்லை கொடியும் இல்லை பிடிக்க ஆட்களும் இல்லை 

ஓடிவந்தவர்கள் கணக்கு முடிக்கமுதல் முடிந்து போவார்கள் போலிருக்கு 

எவன் காதிற்குள் வைப்பான் என்று நடுங்கி திரியும் நிலை தேவையா ?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

ஈழத்திலே மாவீரர் இல்லங்களை சிங்கள இராணுவம் அழித்தபோது வாய்பொத்திக்கொண்டிருந்தவர்கள்.......இன்று இங்கும் சஞ்சலப்படுகின்றார்கள்.

பொயின்ற் அது இல்லை கு.சா, லண்டனில் மாவீரர் நிலையம் அமைப்பதை விட உயிரோடிருக்கும் போராளிகளுக்கு உதவுதல் முக்கியம்! அதுவே செய்தி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, arjun said:

போலிஸ் வந்து கேட்டாலும் உந்த பதிலை சொல்லுங்கோ 

பதிலை வைத்தே அவர்கள் உங்களை அடையாளம் காணுவார்கள் அவ்வளவு விளக்கம் 

கடைசியில் கூண்டோடு கைலாசம் போகலாம் 

 

சகலதும் எமக்கு தெரியும்.கவலைப்படாதேங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை சுழல்கதிரையிலை இருந்து கேள்வி கேக்கிறவையள் நாட்டுக்கு போய் நாலு சனத்துக்கு நல்லதை செய்யலாமே?

இங்கின கருத்தெழுதும் சிலரின் கருத்துக்களை வாசித்தால் ....
எதோ தாம் கடவுளின் நேரடி தொடர்பில் பூமிக்கு வந்த கணக்கில்தான் போகிறது 
அவர்கள் எது சரி எது பிழை என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள் 

மனிதர்கள் நாம்தான் கட்டெறும்பு மாதிரி ஊர்ந்து ஊர்ந்து உழைக்கனும்.

இவயிண்ட கவலையெல்லாம் ...
இப்டியே புலியே இனி அழிச்சு விட்டலாம் என்று இருந்தோம் 
அங்கு அங்கு இப்படி கட்டினால் 
அவர்கள் கதைகள் ஊன்றிவிடுமே ? என்பதுதான்.

வாசிச்சு சிரித்து விட்டு ஆயுளை கூட்டிக்கொண்டு இருக்க வேண்டும் !

போராட போன பத்தாயிரம் போராளிகளையும் போராடவிடாமல் பண்ணிவிட்டு அவர்களில் பலரை போட்டு தள்ளும்போது விசில் அடித்துவிட்டு ,

இன்று அனைத்தயும் கோட்டை விட்ட பின் போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்த கோஸ்டி அவர்களை திரும்ப நாட்டிற்கு போகட்டாம் 

நல்லா இருக்கு நியாயம் 

கடைசியில் உந்த முழு கோஷ்டியும் கம்பி எண்ணுவதில் தான் முடியும் 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

பொயின்ற் அது இல்லை கு.சா, லண்டனில் மாவீரர் நிலையம் அமைப்பதை விட உயிரோடிருக்கும் போராளிகளுக்கு உதவுதல் முக்கியம்! அதுவே செய்தி!

அதுதான் அதை 2009 2010 இல் கட்டவில்லை 
2016இல் கட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, arjun said:

நாட்டில உந்த பிரச்சனை இனி இல்லை கொடியும் இல்லை பிடிக்க ஆட்களும் இல்லை 

ஓடிவந்தவர்கள் கணக்கு முடிக்கமுதல் முடிந்து போவார்கள் போலிருக்கு 

எவன் காதிற்குள் வைப்பான் என்று நடுங்கி திரியும் நிலை தேவையா ?

நாட்டில் பிடிக்கிற சனம் எல்லாம் பிடிக்குது.  காட்டிக்கொடுக்கிறது இப்பவும் அதையே தான் செய்யுது. அந்த நாடு திருந்தாது.. உருப்படாது... அது அல்ல முக்கியம் இங்கு..

நாட்டுக்காக ஊதியம் இன்றி உழைத்த இந்த உறவுகளை ஒட்டுக்குழுக்கள் எனியாவது நிம்மதியாக விடட்டும். சிங்களவனோடு சேர்ந்து அவர்களை வதைப்பதை நிறுத்தட்டும்.

மக்கள் தாமாக உதவி செய்து இந்தப் போராளிகளை காப்பார்கள். யாரும் அவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கத் தேவையில்லை.

எவரும் அடிச்ச காசைக் கொடுக்கத் தேவையில்லை. மக்களே பார்த்துக் கொள்வார்கள். அவர்களிடம் பயத்தை விதைக்காமல் விட்டால்.. சிங்களவனும்.. அவனிடம் எலும்பு பொறுக்கும் ஒட்டுக்குழுக்களும்.. துரோகிகளும். 

காதுகளை பொத்திக்கிட்டு ஓடியந்தவை தான்..  காதுகளை பாதுகாத்துக் கொள்ளனும். எந்த மாபியா காரன் என்ன கூலிக்கு வெடி வைக்கிறானோ.. எந்தச் சிங்களக் குண்டன் எப்படி வெடி வைக்கிறானோ... ?! கனடாவில் கொள்ளையடிச்ச காசில.. கடை வைக்கிறது என்றால் சும்மாவா..?! யாழ் இந்து பழைய மாணவர் சங்கத்துக்கு கணக்கு கூட இல்லை. பழைய கணக்கையே இப்ப 5 வருசமா காட்டிக் கொண்டும் சில பேர் சங்கம் நடத்தினம் மனிசிமாருக்கு ஊத்திக் கொடு பார்டிகள் நடத்திக் கொண்டு.. கனடாவில. இப்படியான பகற்கொள்ளைக்காரர்களுக்கும் ஓர் நாள் பதில் சொல்லும் வேளை வரும். tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

7 minutes ago, Justin said:

அப்ப நீங்கள் சுத்தாத கதிரையில இருக்கிற படியால நாட்டுக்குப் போகவோ நன்மை செய்யவோ முடியாதோ? எதுக்கு கேள்வி கேக்கிறவன் போக வேணும்? ஆட்டையப் போட்டவனும் போட்டவனுக்கு வக்காலத்து வாங்குறவனும் அல்லவா போகக் கடமை இருக்கு? :cool:

ஈழ போராட்டம் என்று யாராவது வந்து நிதியுதவி கேட்ட போது நீங்கள் பணம் கொடுத்தீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்த கோஸ்டி
போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்த கோஸ்டி
போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்த கோஸ்டி
போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்த கோஸ்டி
போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்த கோஸ்டி
போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்த கோஸ்டி
போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்த கோஸ்டி
போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்த கோஸ்டி

கேட்டு கேட்டு அலுத்துப்போன வரிகள் ...
புதுஸா ஏதாவது சொல்ல முடியுதான்னு பாருங்க.

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, arjun said:

போராட போன பத்தாயிரம் போராளிகளையும் போராடவிடாமல் பண்ணிவிட்டு அவர்களில் பலரை போட்டு தள்ளும்போது விசில் அடித்துவிட்டு ,

இன்று அனைத்தயும் கோட்டை விட்ட பின் போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்த கோஸ்டி அவர்களை திரும்ப நாட்டிற்கு போகட்டாம் 

நல்லா இருக்கு நியாயம் 

கடைசியில் உந்த முழு கோஷ்டியும் கம்பி எண்ணுவதில் தான் முடியும் 

 எதற்கெடுத்தாலும் மற்றவனை நோக்கி சுட்டுவிரலை நீட்டாமல்.....நீங்கள் எதற்க்காக ஓடிவந்தீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.