Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினியின் ஒரு போர்வாளின் நிழலில் புத்தகத்தில் இருந்து சில குறிப்புகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கு மாகாணப் போராளிகளுடன் மேற்கொள்ளப்பட்ட சகோதர யுத்தம் எத்தனை வலிகளை அந்த மக்களுக்கு ஏற்படுத்தியிருந்தது என்பதை நேரடியாக அவர்களிடம் கேட்டறிந்தபோது ஏற்பட்ட மனத் துயரம் நினைத்துப் பார்க்கவும் முடியாத அளவுக்குச் சோகமானது. பல வருடங்களாக எம்முடன் ஒன்றாயிருந்து போரிட்டவர்களின் வாழ்க்கை, பின்பு எமது கரங்களாலேயே முடிவு கட்டப்பட்டபோது, வஞ்சகப் பொறியினுள் அகப்பட்ட பொறுப்பாளர்களின் பலவீனம் காரணமாகவும், முதுகில் குத்திய துரோகத்தை என்றும் மன்னிக்க முடியாது எனச் சூளுரைத்து, சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் தடம் மாறிய சாதாரண கீழ்நிலைப் போராளிகளுக்குச் சிறு மன்னிப்பேனும் வழங்குவது தமது மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட செயல் என்பதால் அப்போராளிகள் ஈவிரக்கமின்றி இயக்கத்தால் கொன்றழிக்கப்பட்ட போதும் நாம் மீண்டும் ஒரு கண்ணுக்குப் புலப்படாத வஞ்சகப் பொறியினுள் விழவே செய்தோம். இக்கொடும் பழிவாங்கலில் உயிரிழந்த தமது பிள்ளைகளின் உடல்கள்கூட தமக்குத் தரப்படவில்லையென அழுது அரற்றிய எத்தனையோ பெற்றோரை ஆற்றுப்படுத்தும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்.

"எங்கட புள்ளைகள் நாட்டுக்காக எண்டுதானே போராடப் போனதுகள்; இயக்கத்தை நம்பிப்போன பிள்ளைகளை இயக்கமே சுட்டுக் கொன்னு போட்டுதே" என்று அவர்கள் கதறினார்கள். இயக்கம் எமக்குத் தந்திருந்த அரசியல் விளக்கங்களை அந்த அப்பாவிப் பெற்றோருக்கு எப்படிப் புரியவைக்க முடியும்? அந்தச் சூழ்நிலைகள் மிகவும் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள் நிறைந்தவை. மனதுக்கு மிகவும் கடினமானவை. ஒரு விடுதலைப் போராட்டம் இத்தகைய கட்டங்களையும் கடந்துதான் முன்னேறிச் செல்ல வேண்டியிருக்கும் என்பதை ஜீரணித்துக்கொள்வது என்பது எனக்கு மட்டுமல்ல, பல போராளிகளுக்கும் நெருப்பை விழுங்குவதாகவே இருந்தது. 

வெருகலாற்றுக் கரையில் பெண் போராளிகளும் நிறுத்தப்பட்டிருந்தனர். வன்னியிலிருந்து மாலதி படையணி பெண் போராளிகளும் தாக்குதலுக்காக அனுப்பப்பட்டிருந்தனர். ஆயுதமேந்திய பெண்களின் வாழ்க்கையில் இது மோசமான கறை படிந்த நாட்களாயிருந்தன. கிழக்கு மாகாணப் பெண் போராளிகள் பாதுகாப்புத் தேடித் திக்குத்திசையற்று அலறியடித்தபடி வீதிகளில் ஓடியதும், அவர்களுடைய காயங்களுக்கு இலங்கை இராணுவத்தினர், முதலுதவியளித்து வீடுகளுக்கு அனுப்பிவைத்த கதைகளையும் நேரிலே கண்ட பொதுமக்கள் எம்மிடம் சொன்னபோது எதுவுமே பேசமுடியாமல் வாயடைத்து நின்றோம். 2009இல் முள்ளிவாய்க்காலில் அதே நிலைமை எமக்கும் வந்தபோதுதான் அந்த வலியின் கொடூரத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. இனத்தின் விடுதலைக்காக என்ற நியாயத்திற்குள் புதையுண்டுபோன உண்மைகளுக்கு எந்த ஆராய்ச்சி மணியை அடித்து யாரிடம் நீதி கேட்க முடியும்?

(பக்கங்கள் 88 - 89)

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி வரியில் இருக்கும் கேள்வியைத் தான் பலர் இங்கே கேட்டுக் கொண்டிருக்கிறோம் மீள மீள. நாமே எம்மை மன்னித்து ஏற்றுக் கொள்வது தான் வழி! ஆனால் மன்னிப்பிற்கு முன்னர் "நாம் அநியாயம் செய்தோம்" என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்! அது தான் பலருக்கு இயலாத செயல், முட்டுப் பட்டு நிற்கிறோம்!

அந்த வலி வந்திராவிட்டால் விடுதலைக்காக என்ற நியாயத்திற்குள் தமிழினியும் உண்மையை நிட்சயம் புதைத்திருப்பார் .

இந்த வசனம் பழைய நினைவு ஒன்றை கிளறிவிட்டது ,

"உட்கொலைகள் பற்றி விவாதித்துகொண்டு இருக்கும் போது தலைமை சொன்னது ஆயுதம் வந்து தாக்குதல்கள் நடத்த இவை அனைத்தும் மறக்கப்பட்டுவிடும் " 

தாங்கள் செய்த அராஜகத்தை உணராமல் உங்களை நம்பி வந்தவர்களை கொலை செய்து புதைத்துவிட்டு, தாக்குதல் நடாத்த அவை மறந்துபோய்விடும் என்று சொல்ல எப்படிப்பட்ட குரூர மனம் வேண்டும் .

அந்த பிள்ளைகளின் பெற்றோர் பற்றி ஒரு கணம்  சிந்தித்தால் இப்படியான சிந்தனைகள் வராது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல நூறு மைல்களைக் கால்நடையாகவே நடந்து வந்து யுத்தத்தில் பங்கெடுத்திருந்தார்கள். முள்ளியவளை புதன்வயல் பகுதியில் அமைந்திருந்த அன்பரசி படையணி முகாமுக்கு அரசியல் வகுப்புகளை நடத்துவதற்காகப் பல தடவைகள் போயிருக்கிறேன். முள்ளியவளை ரங்கன் முகாமில் அடிக்கடி கலை நிகழ்வுகளும் இசைக்குழு நிகழ்வுகளும் நடாத்தப்படும். மீன்பாடும் தேன்நாட்டின் வாரிசுகளான கிழக்கு மாகாணப் போராளிகள் அற்புதமான கலையாற்றல் உள்ளவர்களாக இருந்தனர். அவர்களுக்கே உரிய பாணியில் லாவகமான நகைச்சுவை ததும்ப அவர்கள் தமிழ்ப்பேசும் அழகே அழகு. எனது மனங்கவர்ந்த பல தோழிகள் அம்முகாம்களில் இருந்தனர். வன்னிப் போர்க்களத்தில் கிழக்கு மாகாணப் போராளிகளின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இல்லாதிருந்திருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கம் பாரிய வெற்றிகளைப் பெற்றிருக்கவே முடியாது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

(பக்கங்கள் 20 - 21)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம் மல்லாவி பிரதேசத்தில் எனக்கு ஏற்பட்டது. ஆட்சேர்ப்புப் போராளிகளின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட உயர்தரம் படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவி பயிற்சிக்கும் அனுப்பப்பட்டுவிட்டார். ஒருநாள் எமது முகாமுக்கு அந்தப் பெண்ணின் தந்தை வந்திருந்தார். அவர் ஏனைய பெற்றோர்களைப் போல் போராளிகளை ஏசவோ அல்லது தமது மகளைத் தந்துவிடும்படி எம்மிடம் அழுது மன்றாடவோ இல்லை. அவரது இரு கால்களும் இயங்காத நிலையில் சக்கர நாற்காலியின் உதவியுடனே வந்திருந்தார். இயக்கத்தின் சார்பில் நான்தான் அவரை எதிர்கொள்ள வேண்டிய நிலை. அந்தத் தகப்பன் சொன்னார் "தங்கச்சி, நான் பிச்சைக்காரன். நாளாந்தம் கிடைக்கிற வேலைகளைச் செய்து பிச்சைக் காசு மாதிரி சேர்த்துத் தான் என்ர மகளைப் படிப்பிச்சனான், மகள் போராடப் போனது எனக்குக் கவலையில்லை; போகட்டும், ஊரோட ஒத்ததுதான் எனக்கும். ஆனால் நாளைக்கு வெளிநாடுகளில இருந்து டொக்டரா எஞ்சினியரா படித்த புத்திசாலிகளாக ஆட்கள் வந்து இறங்கும்போது, நாட்டுக்காகப் போராடின என்ர மகளும் என்ர குடும்பமும் அவையளுக்கு முன்னால படிக்காத பிச்சைக்காரர்களாய்த்தானே நிற்கப் போறம். அத நினைச்சாத்தான் எனக்குக் கவலையாயிருக்கு" என்றார். அந்தத் தகப்பனுக்கு நான் எத்தனையோ ஆறுதல் வார்த்தைகளைச் சொன்னபோதும் எனது மனதில் அவரது கேள்வி விடை பெற முடியாத வினாவாகப் பதிந்துபோனது. அதன்பிறகு நான் அந்தத் தகப்பனையோ மகளையோ எங்கும் சந்திக்க முடியவில்லை ஆனாலும் கண்ணீருடன் கலந்து வெளிப்பட்ட அந்த வார்த்தைகளில் நிறைந்திருந்த உண்மை என் இதயத்தை நெருடிக்கொண்டேயிருந்தது.

(பக்கம் 26)

  • கருத்துக்கள உறவுகள்

“ஒருநாள் நானும் தளபதிகள் விதுஷாவும், துர்க்காவும் தலைவரை சந்திப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தோம். அது சமாதானம் தொடங்கிய ஆரம்ப கால கட்டம். அந்த சந்திப்பில் தலைவர் பல விடயங்கள் பற்றியும் எம்மோடு பேசிக்கொண்டிருந்தார். அதில் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்;
“மட்டக்களப்பு, அம்பாறைப் போராளிகள் போராட்டத்தில எவ்வளவோ கஷ்டங்களைப் பட்டிருக்கிறாங்கள் அவங்கட குடும்பங்களுக்கும் அந்த மக்களுக்கும் நிறைய வேலைகள் செய்யவேணும். நிதித்துறை மூலமா ஒரளவு பண உதவியையும் செய்து கருணாவுக்கும் சொல்லியிருக்கிறன், அந்தச் சனத்திற்கு நிறைய உதவிகள் செய்யச் சொல்லி. அவன் செய்யிறான், இவங்கள் பொட்டு ஆக்கள் என்னட்ட வந்து அங்க அது பிழை இது பிழை எண்டு சொல்லிக் கொண்டு நிக்கிறாங்கள், தளபதிமாருக்குள்ள முதலில ஒற்றுமை இருக்கவேணும்” என்று குறிப்பிட்டார்.”

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல்லாயிரக்கணக்கான உயிர்களின் குருதியில் நனைந்த ஏ9 வீதி 2002 திறக்கப்பட்டபோது புலிகள் இயக்கம் இராணுவ பலத்தின் உச்சத்தில் இருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது. அப்பலத்தை அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியான பலமாக மாற்றியமைக்கும் தந்திரோபாயத்தில் புலிகளின் தலைமைக்கு ஏற்பட்ட படுதோல்வி, பின்னொரு நாளில் முள்ளிவாய்க்கால் வீதியை மக்கள் தாமாகவே தள்ளித் திறந்துகொண்டு வெளியேறிச் செல்லக் காரணமாய் அமைந்தது.

(பக்கம் 36)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினசரி பாடசாலைக்கும், மாலை வகுப்புகளுக்கும் சென்றுவருவது நெருப்பின் மீது நடப்பதுபோல இருந்தது. இந்திய இராணுவத்தினருக்கு உதவியாக இருந்த சில தமிழ் இளைஞர்கள் ஊரிலே பல இளைஞர்களைப் பலவந்தமாகப் பிடித்துச் சென்று பயிற்சிகள் கொடுப்பதையும் அறிய முடிந்தது. அதனால் எமது வகுப்புகளில் படித்த பல ஆண் மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்திவிட்டுக் காணாமல் போகத் தொடங்கியிருந்தார்கள். நெற்றியில் சிவப்புத் துணிகளைக் கட்டியிருந்த தமிழ் இளைஞர்களும் இந்தியப் படையினரும் வீதி நீளத்திற்கும் நிற்பார்கள். அவர்களுடைய பார்வைகளையும் கேலிகளையும் காணும்போது மனதிற்குள்ளே ஆத்திரமும் கோபமும் கொப்பளித்துக் கொண்டிருக்கும். ஆனாலும் அதைச் சகித்துக்கொள்வதைத் தவிர மாணவர்களாகிய எமக்கு வேறு வழியிருக்கவில்லை. காடுகளுக்குள்ளே மறைந்திருந்து தாக்குதல் நடத்தும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீது அளவற்ற மதிப்பும் நம்பிக்கையும் உருவானது. அவர்களால் மட்டும்தான் இத்தகைய துன்பங்களுக்கெல்லாம் ஒரு விடிவைக் கொண்டுவர முடியும் எனக் கனவு காணத் தொடங்கினோம்.

(பக்கம் 43)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1991.07.29ஆம் திகதி நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒரு போராளியாக என்னை இணைத்துக்கொண்டேன். அன்றிருந்த சூழ்நிலையில் அதைத் தவிர எனக்கு வேறு எந்தத் தேர்வுகளும் இருந்ததாகத் தெரியவில்லை. எனது வாழ்க்கையில் சரியானதொரு தீர்மானத்தை நான் எடுத்துவிட்டதாகவே நம்பினேன். எமது மூத்த அரசியல் தலைவர்கள் மேடைகளில் செய்த போர்ப் பிரகடனங்களுக்காக இளைய தலைமுறையின் வாழ்வு, யுத்த வேள்வித் தீயில் ஆகுதியாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்காக இளைய தலைமுறையினர் அந்த நெருப்புக்குள் ஆவேசத்துடன் பயணித்துக்கொண்டிருந்தார்கள்.

(பக்கம் 46)

  • கருத்துக்கள உறவுகள்

வாசன்,ஒரு நூல் புதுசாய் வெளியிட்டால் அதை வாங்கி வாசித்து விட்டு உங்கள் விமர்சனத்தை மட்டும் வையுங்கள்...இப்படி பக்கம்,பக்கமாய் எழுதி ஒட்டினால் மற்றவர்கள் வாங்கி வாசிக்கிறதில்லையா அல்லது இந்த நூலைத் தான் விற்பதில்லையா?...ஆவலினால் விரும்பிய ஒர்,இரு பக்கங்களை பிரதி எடுத்துப் போடுவது வேறு ஆனால் நீங்கள் முழு நூலையும் அல்லவா பிரதி எடுத்துப் போடுகிறீர்கள்.புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.நன்றி

என்னுங்க  இன்னும்  துரோகி  பட்டம்  கொடுக்காமல் தேசியவாதிகள் அமைதி காப்பதன் காரணம் என்ன ......இதை  மற்றவர்கள்  எழுதினால் அவர்  ஆள்  இவர் ஆள்  என  பட்டம்  கொடுத்தார்கள் மட்டு அம்பாறை  போராளிகள்  பற்றி தமிழினி   அக்கா  அழகாக  சொல்லியுள்ளார் உண்மைகளை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

வாசன்,ஒரு நூல் புதுசாய் வெளியிட்டால் அதை வாங்கி வாசித்து விட்டு உங்கள் விமர்சனத்தை மட்டும் வையுங்கள்...இப்படி பக்கம்,பக்கமாய் எழுதி ஒட்டினால் மற்றவர்கள் வாங்கி வாசிக்கிறதில்லையா அல்லது இந்த நூலைத் தான் விற்பதில்லையா?...ஆவலினால் விரும்பிய ஒர்,இரு பக்கங்களை பிரதி எடுத்துப் போடுவது வேறு ஆனால் நீங்கள் முழு நூலையும் அல்லவா பிரதி எடுத்துப் போடுகிறீர்கள்.புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.நன்றி

ரதி, இங்கு இந்தப் புத்தகத்துக்கு விமர்சனம் எதுவும் இப்போது தேவையில்லை.  அத்துடன் முழுநூலினையும் பக்கம் பக்கமாக நான் எழுதியும் ஒட்டவில்லை. எமது சமுகத்துக்கும் முக்கியமாக யாழ் இணையத்துக்கும் தற்போது தேவை என கருதும் விடயங்களை மட்டுமே இணைக்கின்றேன். இந்த நூலுக்காக அதன் விற்பனை விலையைவிட பலமடங்கு அன்பளிப்பும் செய்திருக்கின்றேன். தமிழினியின் கணவர் திரு. ஜெயக்குமரன் இந்தநூல் வருமானத்தை தமிழினியின் விருப்பப்படி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்யவே விரும்புகின்றார். யாழ் இணையத்தில் ஓரு சிலரே இப்புத்தகத்தை வாங்கிப் படிப்பர். மற்றவர்கள் எல்லோரும் புத்தகத்தில் என்ன இருக்கிறது என அறியாமலேயே தமிழினியை வைத்துக் கும்மி விட்டுப்போவார்கள்.  அங்கொண்டும் இங்கொன்றுமாகவே இணைக்கின்றேன். இது இன்னும் அநேகமானோரை புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தூண்டும்.  முழுமையான புத்தகத்தை நான் ஒருபோதும் இணைக்கப்போவதில்லை. உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் இந்த திரிக்குள் வராமல் இருங்கள். மற்றும்படி நிர்வாகம் தேவையற்றது எனக் கருதினால் பூட்டிவிடட்டும். தேவைப்படும் இடத்து யாழ் களத்தினூடகவே திரு ஜெயக்குமரன் அவர்களுக்கு நிதி வழங்கவும் தயாராகவே இருக்கின்றேன். இந்தப் புத்தகத்தில் தமிழினி எழுதியிருப்பதனை எல்லா தமிழ் பேசும் மக்களும் அறிந்துகொள்ளவேண்டும். புரிந்துகொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

Edited by வாசன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பணக்காரத்தனத்தை உங்களோடு வைத்திருங்கள்.நீங்கள் யார் என்று எனக்குத் தெரியும் அக்கா ஆஆஆஆஆஆஅ!

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2016 at 2:56 PM, அஞ்சரன் said:

என்னுங்க  இன்னும்  துரோகி  பட்டம்  கொடுக்காமல் தேசியவாதிகள் அமைதி காப்பதன் காரணம் என்ன ......இதை  மற்றவர்கள்  எழுதினால் அவர்  ஆள்  இவர் ஆள்  என  பட்டம்  கொடுத்தார்கள் மட்டு அம்பாறை  போராளிகள்  பற்றி தமிழினி   அக்கா  அழகாக  சொல்லியுள்ளார் உண்மைகளை .

தனது சொந்த இனத்தை காட்டி கொடுப்பவன் 
 தனது  சொந்த வாழ்விற்காக சொந்த நாட்டை காட்டி கொடுப்பவன் =துரோகி 

என்று தமிழ் பிறந்த காலத்திலேயே இருந்து இந்த சொல் நடைமுறையில் இருக்கிறது.

இனி யானையும் மாற்றுகருத்தாக பூனை என்றுதான் கூப்பிட வேண்டுமா ?
மேல் வீட்டில் பிரச்சனை இல்லாதவர்கள் ஏன் அந்த வில்லங்கத்திட்கு போக வேண்டும்.

யார் எதை செய்கிறார்களோ 
அவர்கள் அதுவாகி போகிறார்கள்.

காட்டு கத்து கத்தி 
யானையை பூனையாக்காலமா ? 

  • கருத்துக்கள உறவுகள்

2009 க்கு முன்

2009 க்குப்பின்.....

புலிகளுக்கும்  இதுதான் வரையறை....

இனி காலமும் செயல்களுமே  பதில் சொல்லும்.....

தமிழினியின் நூலை அனைவரும் வாங்கி வாசிப்பதே சரியாக இருக்கும். அவரது கருத்துகளை எல்லாரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் அவர் சுயசரிதையின் பக்கங்களை உறவுகள் யாழில் பிரதியிட முனைவதன் தாற்பரியங்களை புரியமுடினும், அவர் புத்தகத்தினை வாங்கி வாசித்து கிரகித்துக் கொள்வதே தார்மீக அடிப்படையில் சரியாக இருக்கும் என்பதால் அவ்வாறு பிரதியிடலை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நிழலி. தனிப்பட்ட காரணங்களுக்காக இல்லாமல் தமிழினி தன்னுடைய சுயசரிதத்தில் என்ன சொல்லியிருக்கின்றார் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதால் இணைத்தேன். திரியைப் பூட்டிவிடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2016 at 3:07 PM, arjun said:

அந்த வலி வந்திராவிட்டால் விடுதலைக்காக என்ற நியாயத்திற்குள் தமிழினியும் உண்மையை நிட்சயம் புதைத்திருப்பார் .

இந்த வசனம் பழைய நினைவு ஒன்றை கிளறிவிட்டது ,

"உட்கொலைகள் பற்றி விவாதித்துகொண்டு இருக்கும் போது தலைமை சொன்னது ஆயுதம் வந்து தாக்குதல்கள் நடத்த இவை அனைத்தும் மறக்கப்பட்டுவிடும் " 

தாங்கள் செய்த அராஜகத்தை உணராமல் உங்களை நம்பி வந்தவர்களை கொலை செய்து புதைத்துவிட்டு, தாக்குதல் நடாத்த அவை மறந்துபோய்விடும் என்று சொல்ல எப்படிப்பட்ட குரூர மனம் வேண்டும் .

அந்த பிள்ளைகளின் பெற்றோர் பற்றி ஒரு கணம்  சிந்தித்தால் இப்படியான சிந்தனைகள் வராது .

புளட்டில் இருந்தும் வெட்டி தாட்ட ஆட்கள் (நீங்கள் இல்லா விட்டாலும்  புளட்டில் உள்ளவர்கள்) எப்படி இந்த கருத்தை கூறுவீர்கள்?
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.