Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய நாடுகளுக்கான பால்கன் வழி மூடல்: ஆற்றில் மூழ்கும் அகதிகள்

Featured Replies

ஐரோப்பிய நாடுகளுக்கான பால்கன் வழி மூடல்: ஆற்றில் மூழ்கும் அகதிகள்
 

ஐரோப்பாவுக்குள் நுழைய முயலும் குடியேறிகள் கிரேக்கத்தில் இருந்து ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்வதற்காக மசிடோனியாவின் வழியாகச் செல்ல வேண்டாம் என்று கிரேக்க அதிபர் அலெக்சிஸ் திப்ரஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

''பால்கன் வழி'' என்று அழைக்கப்படும் அது, மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு எதுவும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மசிடோனிய எல்லைக்கடவை மூடப்பட்டதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வடக்கு கிரேக்கத்தில் உள்ள இடைத்தரிப்பு முகாம்களில் அகப்பட்டுள்ளனர்.

பெருக்கெடுத்து ஓடும் ஆற்றைக் கடந்து மசிடோனியாவுக்குச் சென்ற அவர்களில் பலர் கிரேக்கத்துக்கு திரும்பி வந்ததை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

BBC

  • கருத்துக்கள உறவுகள்

சுயநலவாத காமுகர்கள், மதவாத தீவிரவாதிகள் இவர்களின் மீதான கழிவிரக்கத்துக்கு வேட்டு வைத்து விட்டார்கள்.

உதவ முன்வந்த மேக்கரல் அம்மையாருக்கும் மக்கள் பலத்த ஜனநாயக அடி!!

யாரை நோவது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகதிகள் படையெடுப்பு ஒரு சில நாடுகளின் திட்டமிட்ட செயல் என இங்குள்ள பலர் பேசிக்கொள்கின்றார்கள். இருந்தாலும் அன்னை மேர்க்கலின் தினாவெட்டு பேச்சுக்கள்தான் இவ்வளவு அவலநிலைகளை உருவாக்கியிருக்கின்றது என நான் நினைக்கின்றேன்.

Merkel Mutter Theresa

அம்மா மேர்க்கல்

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கியின் திருவிளையாடல்கள் சொல்லி வேலை இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, nunavilan said:

துருக்கியின் திருவிளையாடல்கள் சொல்லி வேலை இல்லை.

ஐரோப்பிய யூனியனில் சேர அடம்பிடித்த துருக்கியும்...
எடுத்ததிற்கெல்லாம் மிரட்டி மிரட்டி ஐரோப்பிய யூனியனிடம் பணம் கேட்ட கிரேக்கமும்....
 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இவர்களுக்கு உள்ள ஒரே வழி, ரசியாவிடன் டீல் போட்டு, சிரியாவின் விடாக் கண்ட ஜனாதிபதியுடன் சேர்ந்து, ஐ எஸ் இணை அழித்து, முழு அகதிகளையும் மீள் குடி அமர்த்துவதே.

இது விசயத்தில் ஒபாமாவை நம்பி பிரயோசனம் இல்லை. சாட்சிக் கார துருக்கியிடமும், கிரேகத்திடமும் பணிவதிலும் பார்க்க சண்டைக்கார சிரிய அரசே மேல் என்ற நிலை வந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

இப்போது இவர்களுக்கு உள்ள ஒரே வழி, ரசியாவிடன் டீல் போட்டு, சிரியாவின் விடாக் கண்ட ஜனாதிபதியுடன் சேர்ந்து, ஐ எஸ் இணை அழித்து, முழு அகதிகளையும் மீள் குடி அமர்த்துவதே.

இது விசயத்தில் ஒபாமாவை நம்பி பிரயோசனம் இல்லை. சாட்சிக் கார துருக்கியிடமும், கிரேகத்திடமும் பணிவதிலும் பார்க்க சண்டைக்கார சிரிய அரசே மேல் என்ற நிலை வந்து விட்டது.

அவர்கள் பக்கம் நீதி நியாம் இருக்கிறது 

கண்ட நாய்களை சிரியாவிட்குள் விட்டு நாட்டை அழித்தவர்கள் இவர்கள் 

எதிர்பாரா விதமாக ரசியா இறங்கி போட்டு தள்ளும் என்று யாரும் நினைக்கவில்லை 
ரசியா துருக்கி எல்லைக்கு வந்த பின்தான் 

போர் நிறுத்தம் அது இது என்று ஓடி திரிகிறார்கள் 
பேச்சுவார்த்தைக்கு போனால் பேச வேண்டும் ?

பயங்கரவாதிகளுக்கு உதவு முகமாக ரசியா வெளியேற வேண்டும் என்று பேச முடியாது.
என்ன செய்வது என்று இப்பதான் ஓடி திரிகிறார்கள்.
பாரிஸ் தாக்குதல் கூட உள் வீட்டு வேலைபோலவே தெரிகிறது 
அப்போதைக்கு போரை தொடர ஒரு கொதி நிலையை உருவாக்க செய்திருக்கலாம் 

இப்போ அது எல்லாம் சொந்த செலவில் செய்த செய்வினையாக முடிந்திருக்கிறது. 

இவர்கள் தங்கள் வேலையை பார்த்தாலே போதும் சிரிய அரசு ரசியாவுடன் சேர்ந்து மீதியை 
பார்த்துகொள்ளும். 

19 hours ago, குமாரசாமி said:

அகதிகள் படையெடுப்பு ஒரு சில நாடுகளின் திட்டமிட்ட செயல் என இங்குள்ள பலர் பேசிக்கொள்கின்றார்கள். இருந்தாலும் அன்னை மேர்க்கலின் தினாவெட்டு பேச்சுக்கள்தான் இவ்வளவு அவலநிலைகளை உருவாக்கியிருக்கின்றது என நான் நினைக்கின்றேன்.

Merkel Mutter Theresa

அம்மா மேர்க்கல்

உள்நாட்டில் உள்ள அகதி நெரிசல் விடயத்தால் அங்கே ஒரு அத்ருப்தி நிலை காணபடுகிறது 
சென்ற வாரம் நடந்த தேர்தலில் அம்மையாரின் கட்சி இரு இடத்திலும் படு தோல்வி கண்டிருக்கிறது 
மக்கள் தற்போதைய நிலையைத்தான் கணப்பில் எடுப்பார்கள்.

அம்மையார் தூர நோக்கு அடிப்படை மனிதாபிமானம் உள்ளிட்டே அகதிகளை 
உள் வாங்கினார் 
சிரியாவில் இருந்து ஜெர்மனை வந்தடைய குறைந்த பட்சம் $10,000 முடிகிறது 
ஆக இப்போது வந்தவர்கள் எல்லாம் 
அங்கு மேல் தட்டு வர்கத்தில் இருந்தவர்கள் 

ஜெர்மனை பொறுத்தவரையில் 2020-2025 இல் பாரிய தொழில்நுட்ப கல்வியில் 
நிறைய பேர் தேவைபடுவார்கள் 
நிறைய கொம்புட்டர் வேலைகள் இப்போதே வெளியில் போய்கொண்டு இருக்கிறது 

அரசு சார்ந்த  
பாதுகாப்பு வலைக்கு இவர்களை அனுமதிக்க முடியாது 
அதுக்கு ஜெர்மன் நாட்டு பூர்வீக குடிகள் பாரிய அளவில் தேவைபடுவர்கள் 
அப்போ சாதாரன இடத்தில் பாரிய இடைவெளி தோன்றலாம். 

ஏற்றுமதி என்பதில் சீனாவோடு போட்டிபோட வேண்டும் 
கார் உற்பத்தி இனி கூடுதலாக சாத்தியம் இருக்கிறது 
சீன இந்தியாவில் நடுத்தர வர்க்கம் கார் வாங்க தொடங்கி விட்டார்கள். 

வந்த எல்லோரையும் அவர்கள் வைத்த்ருக்க போவதில்லை 
வடிகட்டி எடுத்துகொள்ள இது ஒரு அரிய சந்தர்ப்பம் என்றுதான் 
அவர்கள் திட்டம். 

சுறா பிடிக்க முதலில் றாலை போட வேண்டாமா ?
மீனை தின்ன ஆசைபட்டால் முள்ளிருக்கும்  ...... அந்த சிக்கலை தாண்டினால்தான் சுவை உண்டு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.