Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்ச்சையில் விஜய் சூப்பர் சிங்கர் விருது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் நடந்த இந்த, தமிழகத்தின் புதிய தங்கக் குரலுக்கான தேடல் போட்டி முடிவுகளில் வென்றார் ஆனந்த் அரவிந்தாக்சன்.

இவரது வெற்றி ஒரு மோசடி என இப்போது சர்ச்சை உண்டாக்கி உள்ளது.

இவர் ஒரு திரைப் பட பின்னணிப் பாடகர். குறைந்தது 6 தமிழ் படங்களுக்கும், பல மலையாளப் படங்களுக்கும் பின்னணி பாடல்கள் பாடி உள்ளார்.

ஆகவே எவ்வாறு இவர், மோசடித்தனமாக ஒரு புதிய தங்கக்குரல் என்று, சாதாரண போட்டியாளர்களுடன் போட்டி இட முடியும் என்ற கேள்வி எழுந்து உள்ளது.

இவரை போட்டியில் சேர்த்தே தவறு, மோசடி. இந்த வகையில் அடுத்த வருடங்களில், SBB, மனோ, ஜேசுதாஸ்,  சித்ரா, சின்மயி கூட பாடி வெல்லலாமே என்று கருத்து சொல்லப் பட்டு உள்ளது.

நேர்மை இன்றி, பிரபல திரைப் பட பின்னணிப் பாடகர் இந்த போட்டியில், சாதாரண ஆட்களுடன் பங்கு கொண்டு, நடுவர் ஆதரவில், 70 லட்சம் பெறுமதியான வீட்டினை அடித்துக் கொண்டு போய் விட்டார் என்ற குற்றச் சாட்டுக்கு இவரும், விஜய் நிர்வாகமும் என்ன பதில் சொல்லப் போகின்றனர்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 18ஆம் தேதி விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்-5 நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இந்த இறுதிச்சுற்றில் பரீதா, ராஜ கணபதி, சியாத், ஆனந்த் அரவிந்தாக்ஷன், லட்சுமி ஆகிய ஐந்து பேர் போட்டியிட்டார்கள். இவர்களில் பரீதா, ராஜகணபதி ஆகிய இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனந்த் அரவிந்தாக்ஷன், சியாத், லட்சுமி ஆகிய மூவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

தமிழ்த் திரையிசை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி இரவு 1 மணி வரை நீண்டது. “ஆலுமா டோலுமா” பாடலைப் பாடிய, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜகணபதி தான் இந்தப் போட்டியை வெல்வார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஏனெனில் அவருடைய இந்தப் பாடலுக்குத்தான் ரசிகர்களும் நடுவர்களும் அதிக வரவேற்பு அளித்தார்கள். ஆனால், கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் அரவிந்தாக்ஷன் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு ரூ.75 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.

இந்த ஆனந்த் அரவிந்தாக்ஷன் ஏற்கெனவே திரைப்பட பின்னணி பாடகராக இருப்பவர் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவர் பல படங்களுக்கு பாடல்கள் பாடியிருக்கிறார். ஒரு சினிமா பாடகரை சூப்பர் சிங்கர் போட்டியில் சேர்த்து அவருக்கு முதலிடமும், பரிசும் வழங்கி மோசடி செய்திருக்கிறது விஜய் டிவி. இந்த மோசடியை அம்பலப்படுத்தியுள்ள விஜயசக்கரவர்த்தியின் பதிவு:

 

0a1d-3

http://vijaytamil.net/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் ரீவி சூப்பர் சிங்கர் போட்டிகள் ஒவ்வொரு வருசமும் சர்ச்சையில தான் முடியுது. விஜயை தமிழகத்தை விட்டு துரத்தி அடிக்க ஆயிரம் காரணங்கள் இருந்தும்.. மறதித் தமிழன்.. சினிமா பைத்தியத் தமிழன்.. அதில் லயித்துக் கிடப்பதை விஜய் ரீவி வியாபாரமாக்கி இலாபமீட்டிக் கொள்கிறது. அண்டிப் பிழைக்க வந்தவர்கள் தமிழனிடம் சுரண்டிச் சுகித்துக் கொள்ள தமிழன் உள்ளதையும் கொடுத்திட்டு திருவோடு சுமக்கிறான். ஏமாந்த தமிழன் உள்ளவரை அவனை ஏமாற்ற ஆயிரம் பேர் வருவார்கள் போவார்கள். அதில் விஜய் ரீவும் ஒன்று. அவ்வளவும் தான். தமிழனாப் பார்த்துத் திருந்தா விட்டால் தமிழன் ஏமாறுவதை யாராலும் தடுக்க முடியாது.  :rolleyes:tw_blush:

Edited by nedukkalapoovan

சூப்பர் சிங்கர் தேர்வில் மோசடியா? விஜய் டிவி விளக்கம்!

சூப்பர் சிங்கர் போட்டித் தேர்வில் சினிமாவில் பிரபலமாக இருப்பவர்கள் கலந்து கொள்ளத் தடை ஏதுமில்லை. எனவே விதி மீறல் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது விஜய் டிவி. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 5 நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்து ரூ 75 லட்சம் பரிசு வென்ற ஆனந்த் அரவிந்தாக்ஷன் குறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

 சென்ற வாரம் நடைபெற்ற சூப்பர் சிங்கர் 5-ன் இறுதிச்சுற்றில் பரீதா, ராஜ கணபதி, சியாத், ஆனந்த் அரவிந்தாக்‌ஷன், லட்சுமி ஆகிய ஐந்து பேர் போட்டியிட்டார்கள். தமிழ்த் திரையிசை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் ஆலுமா டோலுமா பாடலைப் பாடிய ராஜகணபதி தான் இந்தப் போட்டியை வெல்வார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஏனெனில் அவருடைய இந்தப் பாடலுக்குத்தான் ரசிகர்களும் நடுவர்களும் அதிக வரவேற்பு அளித்தார்கள். ஆனால், ராஜ கணபதிக்கு நடுவர்களின் விருது மட்டுமே கிடைத்தது. வாக்குகளின் அடிப்படையில் ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடம் பரீதாவுக்குக் கிடைத்தது. லட்சுமி, சியாத் ஆகியோர் கடைசி இரு இடங்களைப் பிடித்தார்கள். முதலிடம் பிடித்த ஆனந்துக்கு ரூ. 75 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. முதல் இரு இடங்களைப் பிடித்த ஆனந்த், பரீதாவுக்கு சினிமாவில் பாட வாய்ப்பளிப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் ஆனந்தின் தேர்வு குறித்து இணையத்தில் சர்ச்சை உருவாகியது.

ஆனந்த் ஏற்கெனவே சுந்தரபாண்டியன், நீர்ப்பறவை, போன்ற 10 தமிழ்ப் படங்களில் பாடியுள்ளவர் என்கிற தகவல் அதில் வெளியானது. இதனையடுத்து, ஏற்கெனவே பின்னணிப் பாடகராக உள்ளவர் சூப்பர் சிங்கர் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது ஏன் என்கிற கேள்வியைப் பலரும் சமூக வலைத்தளங்களில் எழுப்பினார்கள். இந்த சர்ச்சை குறித்து விஜய் டிவியின் தலைமை நிர்வாகி பிரதீப் மில்ராய் பீட்டர், அளித்துள்ள விளக்கத்தில், "எங்களுடைய விதிமுறையில் எங்கேயும் திரைத்துறையிலிருந்தோ பாடகராக உள்ளவரோ சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்று கூறப்படவில்லை. ஆனந்த், ஆரம்பத்தில் அளித்த பேட்டியிலேயே தான் படங்களில் பாடியுள்ளதாகவும் ஆனால் தகுந்த வாய்ப்பு கிடைக்காததால் ஒரு மாற்றத்துக்காக சூப்பர் சிங்கரில் கலந்து கொள்வதாகவும் கூறியுள்ளார். திரைத்துறையில் உள்ளவர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என்கிற விதிமுறை முதலில் இருந்தது உண்மைதான். ஆனால் அது சரியாக வராததால் அந்த விதிமுறையை நீக்கிவிட்டோம்," என்று கூறியுள்ளார்.

இந்த விதிமுறை நீக்கப்பட்டதை வெளிப்படையாக அறிவித்திருந்தால், ஓரிரு பாடல்களோடு வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிறைய 'சிங்கர்கள்' பங்கேற்றிருப்பார்களே!

Read more at: http://tamil.filmibeat.com/television/vijay-tv-s-explanation-on-super-singer-5-results-039400.html

Edited by பகலவன்

விதிமுறையை மாற்றி அவரை அனுமதித்ததே அவரை முதலாவது  ஆக்கத்தான்  என்பது போலிருக்கு  நிர்வாகியின் விளக்கம் .

ஒரு வருடத்திற்கு மேல் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்சியில் இந்த விடயத்தை பற்றி யாருமே வாய் திறக்கவில்லை .நடுவர்களோ அல்லது அவ்வபோது நிகழ்சியில் விருந்தினர்களாக வந்தவர்களோ அதை சொல்லியிருக்கவேண்டும் .

ஒரு வாரம் இந்த நிகழ்சிக்கு இமான் வந்தார் அவர் படங்களில் ஏற்கனவே இவர் பாடியுள்ளார் ஆனால் அது பற்றி மூச்சே விடவில்லை .

அடுத்தமுறை எஸ் பி .ஜேசுதாஸ் எல்லோரும் கலந்து கொண்டாலும் ஆச்சரியபடுவதற்கில்லை .

போன முறை கனேடிய பாடகி ஜெசிக்கா இரண்டாவதாக வரும்போதே விஜே டிவியின் அரசியல் விளங்கிவிட்டது .அவர் முதல் ஐந்துக்குள்ளேயே வந்திருக்க முடியாது .

3 minutes ago, arjun said:

விதிமுறையை மாற்றி அவரை அனுமதித்ததே அவரை முதலாவது  ஆக்கத்தான்  என்பது போலிருக்கு  நிர்வாகியின் விளக்கம் .

ஒரு வருடத்திற்கு மேல் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்சியில் இந்த விடயத்தை பற்றி யாருமே வாய் திறக்கவில்லை .நடுவர்களோ அல்லது அவ்வபோது நிகழ்சியில் விருந்தினர்களாக வந்தவர்களோ அதை சொல்லியிருக்கவேண்டும் .

ஒரு வாரம் இந்த நிகழ்சிக்கு இமான் வந்தார் அவர் படங்களில் ஏற்கனவே இவர் பாடியுள்ளார் ஆனால் அது பற்றி மூச்சே விடவில்லை .

அடுத்தமுறை எஸ் பி .ஜேசுதாஸ் எல்லோரும் கலந்து கொண்டாலும் ஆச்சரியபடுவதற்கில்லை .

போன முறை கனேடிய பாடகி ஜெசிக்கா இரண்டாவதாக வரும்போதே விஜே டிவியின் அரசியல் விளங்கிவிட்டது .அவர் முதல் ஐந்துக்குள்ளேயே வந்திருக்க முடியாது .

கலக்குறீங்க ஜி, கனபேர் ஜெசிக்கவுக்கு 1வது இடம் கேட்டவை தான் (நானும்) , காரணம் போட்டி விதிமுறைகளின் படி அவர் தான் 1வது. ஆனால் உண்மையில் அவர் 5வதுக்கை வந்ததே விஜய் டிவியின் அரசியல் தான். 

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஆனந்த் அரவிந்தாக் ஷனுக்கு முதல் பரிசு கொடுத்தது சர்ச்சைக்குரிய விஷயம் இல்லை. தொடர்ந்து இதே மாதிரி நல்ல குரலை தேர்ந்தெடுப்போம் என்று விஜய் டிவி நிகழ்ச்சி தலைமை பொறுப்பாளர் பிரதீப் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன் 5 – ன் இறுதிப் போட்டி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விஜய் டிவியில் வெளிவந்த சிறந்த குரல் தேடலுக்கான போட்டியின் இறுதிச் சுற்றில் ஆனந்த் அரவிந்தாக் ஷன் முதலிடம் பெற்றார். இவர் இந்தப்போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பே ‘ஆரோகணம்’, ‘நீர்ப்பறவை’, ‘பத்து எண்றதுக்குள்ள’ உள்ளிட்ட திரைப்படங்களில் பாடியவர். அதை மறைத்துவிட்டு தமிழகமெங்கும் உள்ள இசை ஆர்வலர்கள் வாக்களித்து, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் முதலிடம் பெற்று வெற்றிபெற்றதாகவும் அறிவித்துள்ளதாக கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவியது.

anand-aravindakshan-super-singer-375x500

இதுகுறித்து விஜய் டிவி நிகழ்ச்சி தலைமை பொறுப்பாளர் பிரதீப்பிடம் கேட்டபோது, “சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருபவர்கள் பலரும், ‘நான் கோரஸ் பாடியிருக்கேன். ஆல்பம் வெளியிட்டிருக்கேன். ஒரு பாட்டு பாடியிருக்கேன். அது வெளிவருமா? வராதா? எனத் தெரியல’ என்றும் வருகிறார்கள்.

நிகழ்ச்சிக்கு வருபவர்கள் இதுவரைக்கும் ஒரு பாட்டுக்கூட பாடியிருக்கக்கூடாது என்று எங்களது விதிமுறைகளில் இல்லை. பங்கேற்பாளர்கள் ஏற்கனவே பாடியிருந்தால் அது நடுவர்கள், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சக திறமைசாலிகள் வரைக்கும் தெரியும். எப்படியும் மூடி மறைக்க முடியாது. நிகழ்ச்சி முன்னோட்டத்தில்கூட செல்லக் குரலுக்கான தேடல் என்றுதான் அறிவிக்கிறோம்.

புதிய குரலுக்கான தேடல் என்று அறிவிப்பு வெளியிடவில்லை. இதை இங்கே மறைக்க ஒன்றுமே இல்லை. பங்கேற்பாளர்கள் ஒரு சீசனுக்குள் வந்தபிறகு அந்த சீசன் முடியும் வரைக்கும் வெளியே சென்று பாடக்கூடாது என்றுதான் விதிகள் வைத்திருக்கிறோம். அதைத் தவிறமற்ற எதுவும் இல்லை. நல்ல குரலை தேர்வு செய்கிறோம் என்பதுதான் எங்கள் எண்ணம்.

ஆனந்த் அரவிந்தாக் ஷன் கூறும்போதுகூட, ‘நான் இந்த மேடைக்கு சீனியர்தான். வெளியே எனக்கு இதுவரைக்கும் கிடைக்காத அடையாளத்தை இந்த மேடை ஏற்படுத்திக்கொடுக்கும் என்றே உள்ள வருகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். ஆகவே, இது எங்களைப் பொறுத்தவரைக்கும் சர்ச்சைக்குரிய விஷயம் இல்லை. தொடர்ந்து இதே மாதிரி நல்ல குரலை அடையாளப்படுத்துவோம்’’ என்றார்.

http://vijaytamil.net/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/

விஜய் டிவி போனமுறை பாடிப்பாடி விளக்கம் குடுத்தது. இந்தமுறை உடனையே குடுத்திட்டு.

விஜய் டிவி ஒரு வீணாய் போன டிவியாக மாறிட்டு.

சிவகார்த்திகேயனே தேவையில்லாமல் தனதுபெயரை பாவிக்கவேண்டாம் எண்டு சொல்லிட்டாராம் எண்டு கேள்வி 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, arjun said:

போன முறை கனேடிய பாடகி ஜெசிக்கா இரண்டாவதாக வரும்போதே விஜே டிவியின் அரசியல் விளங்கிவிட்டது .அவர் முதல் ஐந்துக்குள்ளேயே வந்திருக்க முடியாது .

மக்களே இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் அண்ணன் மாற்றிப் பேசுவார். tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் செல்லக் குரல்களுக்கான தேடல் ! – கிட்டத்தட்ட பொதுத்தேர்தலைப் போல ஒரு பிரமாண்டத்தை ஏற்படுத்தி நடத்தப்பட்டது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. யார் சூப்பர் சிங்கர் என்ற கேள்விகளுக்கு விடையாக சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்றிருக்கிறார் ஆனந்த் அரவிந்தாக்‌ஷன்.

ஆனால் இவர் புதிய போட்டியாளர் அல்ல.ஏற்கனவே ஆரோகணம் திரைப்படத்தில் இந்த வான்வெளி விடியாதோ நீர்ப்பறவையில் யார் வீட்டு மகனோ,பத்து எண்றதுக்குள்ள படத்தில் கானா கானா உள்ளிட்ட பல பாடல்களை ஏற்கனவே திரைப்படங்களில் பாடியிருக்கிறார்.

12072783_1096406777084778_5701688808904240681_n

இதையெல்லாம் ஒரு நிகழ்ச்சியில் கூட சொல்லாமல் மறைத்து நள்ளிரவு வரை காத்திருந்து ஓட்டு போட்ட ரசிகர்கள் அனைவரையும் ஏமாற்றி இருக்கிறது விஜய் டிவி. பொது மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.ஆனால் போட்டியில் பங்கேற்ற நடுவர்களுக்கு கூடவா இது தெரியாது. இல்லை விஜய் டிவி மறைத்திருக்குமா?

போட்டி என்பது புதியவர்களுக்கானது என்ற நம்பிக்கையில் தான் மக்கள் இருக்கை நுனியில் உட்கார்ந்து கொண்டு நிகழ்ச்சியை ரசிக்கிறார்கள்.ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிப் பெற்று மேற்படிப்பும் முடித்து நல்ல வேலையில் இருக்கும் ஒருவன் மீண்டும் அதே தேர்வில் கலந்து கொண்டு அத்தனை மாணவர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு மறுபடியும் அந்த தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கினார் என்கிற செய்தி வந்தால் அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியுமா? அப்படிதான் இருக்கிறது விஜய் டிவியின் இந்த ஏமாற்று வேலையும்.

ஆரோகணம் படத்தில் ஆனந்த் அரவிந்தக்‌ஷன் பாடியது குறித்து படத்தின் இயக்குநர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனிடம் பேசினோம்.

‘’ஆனந்த் அரவிந்தக்‌ஷன் ரொம்ப திறமையானவர்.ரொம்ப சின்சியரானவர்.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் பாடப் போறதா எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.எனக்கும் இந்த நிகழ்ச்சி புதியவர்களுக்கானதுனு அப்ப தெரியாது. அவருக்கு வாழ்த்து சொல்லியிருந்தேன். இப்ப அவரை பத்தின செய்திகள் வருவதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருக்கு. இதெல்லாம் விஜய் டிவிக்கு தெரியாம நடந்திருக்காதுனு நான் நினைக்குறேன்.

ஒரு நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு சூப்பர் சிங்கர்னு டைட்டில் வாங்குறதுக்கு அவரோட நேரத்தையும் உழைப்பையும் கொட்டியிருக்கார். ஆனா அதெல்லாம் இன்னைக்கு ஒரு நொடியில மறைஞ்சுப் போச்சு. மக்களை மட்டுமில்ல… போட்டியாளர்களும் இப்ப பாதிக்கப்பட்டிருக்குறது வருத்தமா இருக்கு.

வெளிநாட்டில் நடந்த சமையல் நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்திருக்கேன்.ஆனால் அங்கே என்னோடு போட்டியிட்டு ஒரு செஃப் வெற்றிப் பெற்றார். இதை நான் அப்பவே கண்டிச்சேன். இது போல நிறைய நிகழ்ச்சிகள் உதாரணம் சொல்லலாம்’’ என்றார் ஆதங்கத்துடன்.

ரியாலிட்டி ஷோக்கள் என்று நம்பி பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அங்கே செய்வதெல்லாம் உண்மை தானா?

http://vijaytamil.net/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF/

5 minutes ago, nedukkalapoovan said:

மக்களே இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் அண்ணன் மாற்றிப் பேசுவார். tw_blush::rolleyes:

இதே விடயத்தில் குமாரசாமி அண்ணை ஒரு குற்றசாட்டை வைத்தார் நான் ஆதாரம் கேட்க ஆள் ஒரு மூச்சும் இல்லை பின்னர் நான் எழுதியதை தேடி எடுத்து பதிந்தேன் அதற்கும் ஆள் மூச் ,

நெடுக்ஸ் இது எனக்கு இங்கு புதியவிடயம் இல்லை.

பிறகு நானும் எனக்கு நானே பச்சை குத்தும் ஆளாக மாறவேண்டிவரும்  

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, arjun said:

இதே விடயத்தில் குமாரசாமி அண்ணை ஒரு குற்றசாட்டை வைத்தார் நான் ஆதாரம் கேட்க ஆள் ஒரு மூச்சும் இல்லை பின்னர் நான் எழுதியதை தேடி எடுத்து பதிந்தேன் அதற்கும் ஆள் மூச் ,

நெடுக்ஸ் இது எனக்கு இங்கு புதியவிடயம் இல்லை.

பிறகு நானும் எனக்கு நானே பச்சை குத்தும் ஆளாக மாறவேண்டிவரும்  

ஆமாங்கண்ணே இது உங்களுக்கு புதிசல்ல. ரெம்பப் பழகினது. அதுதான் குறிச்சு வைச்சிருக்கிறம். தேவை வருமுன்னு.tw_blush:

கற்பனையில் கனவுலகில் வாழ்பவர்கள்.. தமக்கு தாமே முதுகு சொறிஞ்சு விட்டு.. பச்சை குத்திக்கிட்டு தான் இருக்கிறார்கள். நீங்கள் அதில் வல்லவர். இதுவும் தெரியுமண்ணே. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஜெசிக்கா உண்மையில் முதலாம் இடத்தில வந்திருக்கவேணும்.... அதில் தான் விஜய் டீவி தன் கைவரிசையை காட்டியது. 
அவருக்கு இருக்கும் திறமையை இங்கு சிலர் குறைத்து மதிப்பிடுவது கவலைக்குரியது.
போன வருடத்தின் பின்னர் இனிமேலும் இந்த நிகழ்சியய் பார்ப்பதில்லை என்று முடிவு செய்தேன்.
இந்த வருடம் பார்க்கவும் இல்லை. 
ஆக மொத்தத்தில்  ஒரு தமிழ் எதிர்ப்பு கூட்டம் எங்கேயும் எப்போதும் இருக்கின்றது என்பது கசப்பான உண்மை. tw_anguished:

அவருக்கு திறமை இல்லை என்று எவரும் சொல்லவில்லை ஆனால் போட்டிக்கு வந்தவர்களுடன் ஒப்பிடும்போது அவர் ஐந்திற்கு அப்பால் தான் ,

போட்டி என்று வந்துவிட்டால் தமிழர் தான் வெல்லவேண்டும் என்ற சிறிய வட்டதிற்குள் நான் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

ஜெசிக்காவின் உண்மையான திறமை பற்றி யார் எடுத்துக்கூறினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.
சினிமா இசை துறையில் இருக்கும் யாராவது சொன்னாலும் அதுவும் "ஆதாய அரசியல்" என்பீர்கள் நீங்கள்.
ஒரு மேட்கத்தைய நாட்டில் வளர்ந்து, "தமிழ் நாடு" சென்று  அவ்வளவு துரிதமாக, சரளமாக, இசை நுணுக்கங்களை கற்று, ஒரு பாட்டின் ஜீவன் புரிந்து சரியான உச்சரிப்போடு,  பாடும் பாடகி ஜெசிக்கா.
  
 

************

Edited by நியானி
*

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

மக்களே இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் அண்ணன் மாற்றிப் பேசுவார். tw_blush::rolleyes:

மக்கள் எல்லாம் தூங்கிறாங்க.மெதுவா பேசுங்க.
சூப்பர் சிங்கர் 6 வரும் போது எழும்புவாங்க.

பாரதிக்கு வராத கோபமா எனக்கு வருகின்றது ,

ஆக மொத்தம் அறியாமையில் இருப்பவர்களின் மீதும் அதை பயன்படுத்தும்  போலிகளின் மீது கோபம் .

அது எனக்கு நியாயமாகவே படுகின்றது .

நான் சிறிதுகாலம் பார்தேன். பரீதாவே அனைவரிலும் சிறப்பாய் பாடுவதுபோல் தெரிந்தது. அவர் ஏற்கனவே இசைக்குழுக்களில் பாடுவதாய் கூறினார்கள். இங்கே இந்த 70 இலட்சம், வீடு ஒரு கோடி பணமுடிப்பு, தங்கம் என்று பரிசு அறிவிக்கப்படுவதாலேயே போட்டி ஒவ்வொரு தடவையும் கடைசியில் விமர்சனத்துக்கு உள்ளாகின்றதோ என்று தோன்றுகின்றது. வீடு, பரிசை எடுத்துவிட்டு திறமையானவர்களை மேடையில் மட்டும் கொண்டுவந்தால் இப்படி இழுபறிகள் வராது என்று நினைக்கின்றேன். தவிர, முதலாம் இடத்திற்கு 70 இலட்சமும் ஐந்தாம் இடத்திற்கு 3/5 இலட்சமும் வழங்கப்படுவது சரியில்லை. ஏன் என்றால் பாடகர்களை திறமை அடிப்படையில் வகுத்தால் முதலாவதற்கும் ஐந்தாவதற்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை. வெற்றிக்கிண்ணம் கொடுப்பதற்கு இது என்ன கிரிக்கெற், உதைபந்தாட்ட ஆட்டமா? இந்த பரிசு காசு வீடு விசயம் போட்டியில் இருந்து நீக்கப்படும்போதே இது ஆரோக்கியத்தன்மை அடையும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆனந்தின் தந்தை அரவிந்தாக்சன் இலண்டனில் கரோ பகுதியில் கடந்த 10 வருடமாக சங்கீத வகுப்புகள் எடுக்கிறார். மகா கஞ்சர். இதே மகன் முன்னர் துபையில் மேர்சீடிஸ் வென்று, இந்தியா கொண்டு வந்த பின், தொடக் கூடாது என்று துணி மூடிக் கட்டி விட்டு வந்துவிட்டார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.