Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பனாமா பேப்பர்ஸ்' கசிவு : உலகமே வியப்பில்

Featured Replies

உலகம் முழுவதும் வாழும் அரசியல் தலைவர்கள் , திரைப்பட  நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பல பிரபலங்கள்  தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் இன்று கசித்துள்ளதால் உலகமே பெரும் பரபரப்பில் உள்ளது.

'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரால் அறியப்படும் இத்தாள்,விக்கிலீக்ஸ் போன்ற ஒரு தகவல் கசிவு விவகாரமாகும் .

மொஸாக் ஃபொன்செகா என்ற சட்ட நிறுவனமானது பனாமா நாட்டில் இயங்கி வந்துள்ள நிலையில் அந்நிறுவனத்திலிருந்தே இத்தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல தசாப்தங்களாக இந்நிறுவனமே இம் மோசடி நடவடிக்கைகளை மிகவும் துல்லியமாகவும் ராஜ தந்திரத்துடனும்  ரகசியமாக தமது வாடிக்கையாளர்களுக்காக முன்னெடுத்துள்ளது. இந்நிறுவனம் தமது வாடிக்கையாளர்கள்  வரி ஏய்ப்பு செய்யவும்  சொத்துக்களை பதுக்கவும் உதவியுள்ளது.

இந்த தகவல் கசிவின் பின்னணியில் பல சர்வதேச ஊடகங்களின்  புலனாய்வு ஊடகவியலாளர்கள் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கூட்டியக்கம் (International Consortium of Investigative Journalism) என்ற வொஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்கள் நேற்று  'பனாமா பேப்பர்ஸ்' என்ற தலைப்பில் பல தகவல்களை உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது.

04F59D5D00000514-3522429-Families_and_as 32B98D7300000578-3522429-Argentina_s_pre 32CFA9EE00000578-3522429-Families_and_as

இதில் , 11.5 மில்லியன் தகவல் தரவுகளைத் திரட்டியுள்ளதும் அது  சுமார் 2.6 டெரா பயிட்களாகும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் புலனாய்வில் 140 அரசியல் புள்ளிகளின் வரி ஏய்ப்பு, பண பதுக்கல் அம்பலமாக்கியிருக்கிறதுடன் ,இந்த பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முதல் பார்சிலோனா கால்பந்து வீரர் லியோனல் மெஸி வரை பலர் இதில் இடம்பெற்றிருக்கின்றனர். 

புடினுக்கு நெருக்கமானவர்களால் ஒரு ரஷ்ய வங்கி, பில்லியன் டாலர்கள் அளவுக்கு பணத்தை முறைகேடு செய்ததில் ஈடுபட்டிருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும்,  இந்த ஆவணங்கள்  மூலம் சுட்டிக்காட்டுகின்றன.

வெளியாகிய இந்த தகவலில் எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக், லிபியாவின் முன்னாள் தலைவர் கடாஃபி, சிரிய அதிபர் பஷர் அல் அஸாத் ஆகியோரது குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்களோடு தொடர்புடைய ரகசிய வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்த ஆவணங்களில் இருக்கின்றமையும் குறிப்படத்தக்கது.

இதில் அடங்கியுள்ள  140 அரசியல் பிரபலங்களில் 12 பேர் தற்போதும், முன்னாள் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில்  இந்தியர்கள் பெயரும் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

32CFA9F700000578-3522429-Revelation_The_ 32D60B6300000578-3522429-Iceland_Prime_M 32D136A400000578-3522429-King_of_Saudi_A 32D138DD00000578-3522429-Convicted_forme

பிரிட்டனில் நான்கு நிறுவனங்களை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் குடும்பத்தினர் நடத்தி வருவதாகவும், இந்த நிறுவனங்களின் மூலம் ஏராளமான சொத்துக்கள் வாங்கி வைத்துள்ளதாகவும் இவ் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளன. 

ஆனால்,மொசாக் ஃபொன்செக நிறுவனம் , தாங்கள் 40 ஆண்டுகளாக இயங்கிவருவதாகவும் ஒருபோதும் இத்தகைய மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதில்லை என்றும் கூறியிருக்கிறது.

இத் தகவல் கசிவு குறித்து முனிச் நகரில் இருந்து செயல்படும் சுடட்சே ஜெய்துங் (Sueddeutsche Zeitung) என்ற நாளிதழின் நிருபர் பாஸ்டியன் ஓபர்மேயர் கூறும்போது, "அடையாளத்தை வெளியிடாத விரும்பாத  உள்வட்டாரம் ஒன்று எங்களுக்கு இத்தகவலை வழங்கியது. அவர்கள் இதற்காக பண  ஏதும் எதிர்பார்க்கவில்லை. ஆயினும் , எவ்விதத்திலும் தங்கள் அடையாளம்  வெளியாகிவிடக்கூடாது என்பதை மட்டும் தம்மிடம் வலியுறுத்தினர்" என்றார்.

32D139C400000578-3522429-Former_prime_mi32D1392C00000578-3522429-Ukraine_s_presi32D1382800000578-3522429-Convicted_forme32D1386500000578-3522429-Former_presiden32D1397400000578-3522429-The_ex_prime_mi1235EEBD000005DC-3522429-Libya_s_former_

பனாமா பேப்பர்ஸ் தகவல் கசிவு உலக மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில், பனாமா நாட்டு அதிபர் ஜூவான் கார்லஸ் வெரெலா , "பனாமா நிதித் துறையில் எவ்வித முறைகேடுக்கும் இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். தற்போது கசிந்துள்ள ஆவணங்கள் தொடர்பாக முழுமையான நீதி விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் மே மாத ஆரம்பத்தில் நிதி மோசடிக்காரர்கள் அனைவரின் விபரங்கள் வெளியிடப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

 

http://www.virakesari.lk/article/4830

உலகளவில் செல்வந்தர்களின் வரி ஏய்ப்பை அம்பலப்படுத்திய "பனாமா ஆவணங்கள்" குறித்த ஒரு புரிதல்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த பனாமா லெட்டர் பொக்ஸ் நிறுவனத்தின்ரை விசயம் கனபேருக்கு கனகாலமாய் தெரிஞ்சிருக்க வேணுமே !!!!!!!! 
இப்ப  ஆருக்கோ ஏதோ தேவைப்படுது போலை கிடக்கு.....அதுதான் கிண்டிக்கிளறி புடுங்கப்போயினம் எண்டு நினைக்கிறன்.

சில வேளை பயங்கரவாதியள் சேர்த்த காசுமூட்டையளும் உதுக்கைதானோ ஆருக்குத்தெரியும்???? :cool:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தேடித் பார்க்கிறேன்.... மகிந்தரிண்ட பேரைக் காணேல்ல..

பக்கத்து வீட்டில, பச்சனும், மருமோளும் அவிஞ்சு போய் நிக்கேக்க... சா.. நம்ம நாட்டுக்கு மரியாதை இல்லாமல் போட்டுது....

அவர் உகண்டா பக்கமா திரிஞ்சவர்... ஏதும் ஆபிரிக்கன் பேர்ல போட்டு இருப்பாரோ தெரியவில்லை...

கேள்விப் பட்டால் சொல்லுங்கோ... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

நானும் தேடித் பார்க்கிறேன்.... மகிந்தரிண்ட பேரைக் காணேல்ல..

பக்கத்து வீட்டில, பச்சனும், மருமோளும் அவிஞ்சு போய் நிக்கேக்க... சா.. நம்ம நாட்டுக்கு மரியாதை இல்லாமல் போட்டுது....

அவர் உகண்டா பக்கமா திரிஞ்சவர்... ஏதும் ஆபிரிக்கன் பேர்ல போட்டு இருப்பாரோ தெரியவில்லை...

கேள்விப் பட்டால் சொல்லுங்கோ... :grin:

ஆராவது தலைக்குள்ள சரக்குள்ளவன் ஆபிரிக்காவில ஒளிச்சு வைப்பானோ?

அத்தானின்ர காசு முழுவதும் செய்சில்ஸ் இல அசையாத ஆதனங்களாக மாற்றப்பட்டுள்ளதாகக் கேள்வி! 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புங்கையூரன் said:

ஆராவது தலைக்குள்ள சரக்குள்ளவன் ஆபிரிக்காவில ஒளிச்சு வைப்பானோ?

அத்தானின்ர காசு முழுவதும் செய்சில்ஸ் இல அசையாத ஆதனங்களாக மாற்றப்பட்டுள்ளதாகக் கேள்வி! 

நோ, நோ..... புங்கையர்...

கொழும்பில, சோத்து, போயிலை வெயாபாரத்தில உழைத்து, அப்படியே, புங்கையூரிலை நாலாம், ஐந்தாம், எட்டாம் வட்டாரதுக்குளை வட்டிக்கு விடுற மாதிரி, அயித்தாரும் ஆபிரிகாவில விட்டிருப்பார்.

பார்க்கிற மாதிரிக்கு அதுதான், ஆபிரிக்கா தான்,  பாதுகாப்பு போல கிடக்குது. :grin:

(உண்மையில நான் சொல்ல வந்தது, மகிந்தர், அபிரிகன் பேர்ல, உகண்டா பாஸ்போர்ட் எடுத்து, பனாமாவில போட்டு இருக்கிறாரோ எண்டு தெரியேல்லை எண்டு...)

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

நோ, நோ..... புங்கையர்...

கொழும்பில, சோத்து, போயிலை வெயாபாரத்தில உழைத்து, அப்படியே, புங்கையூரிலை நாலாம், ஐந்தாம், எட்டாம் வட்டாரதுக்குளை வட்டிக்கு விடுற மாதிரி, அயித்தாரும் ஆபிரிகாவில விட்டிருப்பார்.

பார்க்கிற மாதிரிக்கு அதுதான், ஆபிரிக்கா தான்,  பாதுகாப்பு போல கிடக்குது. :grin:

அப்பாடா...நான் தப்பிச்சன்!

நான் பத்தாம் வட்டாரம்!

விசுகர் வாறதுக்கு முதல் எண்ணெய் கிண்ணை எல்லாம் தடவி..இரண்டு அரைக் காச்சட்டையளும் அடிசனலாய்ப் போட்டுக்கொள்ளுங்கோ!

சும்மா ஒரு பாதுகாப்புக்குத் தான்! tw_cry:

  • கருத்துக்கள உறவுகள்

சில ஆயிரம் பவுன் உழைக்கிறவனிட்ட வரி புடுங்குவினம்.. பல மில்லியன் பதுங்கிறவனிட்ட ஒன்றும் புடுங்கமாட்டினம்.

பிரித்தானியப் பிரதமரின் தந்தையும் இந்த வரி ஏய்ப்பு விசயத்தில் பெயரடிபடுகிறார்.

லிஸ்ட் ரெம்பப் பெரிசாம். மில்லியன் கணக்கில இருக்காம். மகிந்தர் அங்கின இருப்பார்.. வெயிட் அன்ட் சீ. tw_blush:

  • தொடங்கியவர்

பனாமா ஒரு மத்திய அமெரிக்க நாடு , பசுபிக் சமுத்திரத்தையும் அத்திலாந்திக் சமுத்திரத்தையும் இணைக்கும் புகழ் பெற்ற பனாமாக் கால்வாய் உள்ள நாடு.

mirafloresnewlocks.jpg

im5738179ff10c44718.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ்லண்ட் பிரதமர் பதவி விலகல்.

Reykjavik, Iceland (CNN)After widespread calls for his resignation, Icelandic Prime Minister Sigmundur David Gunnlaugsson stepped down Tuesday -- an apparent casualty of the Panama Papers leaks. 

Sigurdur Ingi Johannsson, the deputy chair of Gunnlaugsson's Progressive Party, announced the Prime Minister's resignation Tuesday on national public broadcaster RUV.
  • தொடங்கியவர்

உலகை உலுக்கிய பனாமா பேப்பர்ஸ் – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழில் ரஜீபன்:

உலகை உலுக்கிய பனாமா பேப்பர்ஸ் – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழில் ரஜீபன்:-


உலகநாடுகளின் செல்வந்தர்களும், செல்வாக்கு மிக்கவர்களும் தங்களிற்கு வழங்கப்பட்டுள்ள  வரிச்சலுகையை தங்கள் உண்மையான வருமானத்தை மறைப்பதற்கு எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பது பாரிய ஆவணங்கள் கசிந்ததின் மூலம் தெரியவந்துள்ளது. 

உலகின் மிகவும் இரகசியமான நிறுவனங்களில் ஒன்றான  மொசாக்பொன்செகா என்ற பனாமா சட்ட நிறுவனத்தின் ஆவணங்களே இவ்வாறு வெளியுலகிற்கு தெரியவந்துள்ளன. இவர்கள் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை மறைத்து வெளிநாடுகளில் இயங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர், இவ்வாறான நிறுவனங்கள் பெருமளவிற்கு போலியானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எவ்வாறு சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டனர், தடைகளையும், வரிகளையும் மீறினர் என்பது கசிந்துள்ள ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது. உதாரணத்திற்கு அதிகாரிகளிடமிருந்து தப்புவதற்காக அமெரிக்கா கோடீஸ்வரர் ஒருவரிற்கு நிறுவனமொன்று போலி உரிமையாளர் என தெரிவிக்கும் ஆவணங்களை வழங்கியுள்ளது. இது சர்வதேச சட்டங்களிற்கு முற்றிலும் முரணான செயலாகும்.

பனாமாபேப்பரில் யார் உள்ளனர்?

இந்த ஆவணங்களில் தற்போதைய, முன்னாள் ஜனாதிபதிகள் 12பேரின் பெயர் விபரங்கள் காணப்படுகின்றன, இவர்களில் தங்கள் நாட்டையே சூறையாடிய சர்வாதிகாரிகளும் உள்ளனர். இது தவிர உலகத் தலைவர்களினதும் அரசியல் வாதிகளினதும் உறவினர்கள் குடும்பத்தவர்கள் 60 பேர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர்புட்டினின் நெருங்கிய சகாக்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளது குறித்து குறிப்பிட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதுதவிர சீனா ஜனாதிபதியின் நெருங்கிய உறவினர், உக்ரைன் ஜனாதிபதி, அர்ஜென்டீனா ஜனாதிபதி, பிரிட்டிஸ் பிரதமர் டேவிட் கமரூனின் தந்தை, பாக்கிஸ்தான் பிரதமரின் 3 புதல்வர்கள் போன்றவர்களின் பெயர்களும் காணப்படுகின்றன.

ஐஸ்லாந்து பிரதமரின் பெயர் இந்த ஆவணங்களில் காணப்பட்டதை தொடர்ந்து  அவர் பதவிவிலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உலக கால்பந்து அமைப்பான பீபாவின் பெயரும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பின் மூன்று புதல்வர்கள் லண்டனில் சொத்துக்களை வைத்திருக்கும் வெளிநாடுகளிலுள்ள நிறுவனங்களுடன் தொடர்புகளை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. பாக்கிஸ்தான் பிரதமரின் புதல்வர்கள் ஹூசைன் மற்றும் ஹசனும் மகள் மரியமும் வெளிநாடுகளிலுள்ள பல நிறுவனங்களுடன் தொடர்புகளை கொண்டுள்ளதை கசிந்துள்ள ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன

வரிச்சலுகைகள் எவ்வாறு பயன்படுத்தப் பட்டுள்ளன:

வரிச்சலுகைகளை சட்டபூர்வமான விதத்தில் பயன்படுத்தலாம் என்றாலும் ஆவணங்களில் காணப்படும் பலர் உண்மையில் தங்கள் உண்மையான வருமானத்தை மறைப்பதற்கே இவற்றை பயன்படுத்தியுள்ளனர். பணம் எங்கிருந்து கிடைக்கின்றது, என்பதை மறைப்பதற்கும்  வரிகள் செலுத்துவதை தவிர்ப்பதற்கும் அவர்கள் இந்த சலுகையை பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் வெளித் தோற்றத்திற்கு சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக காண்பித்துக் கொண்டு வேறு நபர்களின் பணத்தை அதன் உரிமையாளர்கள் யார் என்பதை மறைத்து, நிர்வகிக்கும் நிறுவனங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனாமா பேப்பர்களை பகிரங்கப்படுத்தியது யார்?

ஜேர்மனியை சேர்ந்த Sueddeutsche Zeitung   என்ற செய்தித்தாள் 1.5 மில்லியன் ஆவணங்களை பெற்றுக்கொண்டு புலனாய்வு செய்தியாளர்களின் சர்வதேச அமைப்பிடம் வழங்கியுள்ளது. இதன் பின்னர் புலனாய்வு செய்தியாளர்களின் சர்வதேச அமைப்பு 76 நாடுகளைச் சேர்ந்த 107 ஊடக அமைப்புகளுடன் இணைந்து ஒரு வருடத்திற்கு மேலாக குறிப்பிட்ட ஆவணங்களை ஆராய்ந்துள்ளது. 214,000 நிறுவனங்கள், அறக்கட்டளைகள், மன்றங்கள் ஆகியவற்றின் பெயர்களை இந்த ஆவணம் வெளிப்படுத்தியுள்ளது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130808/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் பெரும் முதலைகள் ஒருத்தரும் இதில் மாட்டுப்படேல்லையோ ஆச்சரியமாய் இருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.