Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பனீர் இனிப்பு போளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

12936480_994468883933501_117308452830311

தேவையான பொருட்கள் :

மைதா-ஒரு கோப்பை
கோதுமை மாவு-ஒரு கோப்பை
எண்ணெய்-இரண்டு தேக்கரண்டி
உப்புத்துள்- ஒரு சிட்டிகை
துருவிய பனீர்- முக்கால் கோப்பை
துருவிய தேங்காய்- அரைகோப்பை
வெல்லம்-1/2 கோப்பை
ஏலக்காய்-நான்கு
பொடித்த முந்திரி -காலக் கோப்பை
நெய்/எண்ணெய்- தேவைக்கேற்ப

செய்முறை :

1.மாவை ஒன்றாக கலந்து அதில் உப்பு மற்றும் எண்ணெயை ஊற்றி நீரைத் தெளித்து சப்பாத்திக்கு பிசைவதுப் போல் பிசைந்து குறைந்தது அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

2.மிக்ஸியில் வெல்லதுடம் ஏலக்காயைச் சேர்த்து நன்கு பொடித்து வைக்கவும்

3.வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்யை ஊற்றி அதில் துருவிய பன்னிரைப் போட்டு ஈரம் போக வறுத்து தனியே ஆற வைக்கவும் .

4.பின்பு அதே வாணலியில் தேங்காயை கொட்டி இளஞ் சிவப்பாக வறுத்து ஆறவைத்து அதையும் பன்னீரில் கொட்டி கலக்கவும்.

5.பின்பு அதில் பொடித்த சர்க்கரை மற்றும் முந்திரி பொடியையும் சேர்த்து நன்கு கலந்து பூரணம் தயாரிக்கவும்.

6.பிறகு பிசைந்து வைத்த மாவிலிருந்து ஒரு எலுமிச்சையளவு உருண்டையை எடுத்து சப்பாத்தி கட்டையில் வட்டமாக இட்டு அதன் நடுவில் சிறிது பூரணத்தை வைத்து மூடி இலேசாக அழுத்தி மீண்டும் தேய்த்து வைக்கவும்.

7.இவ்வாறு அனைத்து மாவையும் போளியாக இட்டு வைக்கவும்.

8. தோசை தவாவை அடுப்பில் வைத்து தயாரித்து வைத்துள்ள போளியைப் போட்டு இரண்டு புறமும் நெய்யை தடவி வேக வைத்து தீயாமல் சுட்டெடுக்கவும்.

FB

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு மலாயாகபேயின் விஷேசமான அயிட்டமே போளிதான். சுசீயம் போன்ற உள்ளுடனுடன் கடலைப் பருப்பும் கடிபட அமிர்தமாய் இருக்கும்....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

மலாயாகபேயின் வடையும் சம்பலும்  அதுவும் ,சுப்பர் .......

  • கருத்துக்கள உறவுகள்

'மலாயன் கபே'யிலதான் கல்வியில் தரப்படுத்துதல் விடயமாக கூட்டம் நடைபெற்றதாக எங்கோ படித்த ஞாபகம் உள்ளது. அது பாரம்பரிய உணவிற்கும் பிரசித்தி பெற்றதா?

போளி, சுசியமெல்லாம் கிடைக்குது என்றால், அது சைவ உணவகமாக இருக்குமென நினைக்கிறேன்.

அருகேதான் அவ்வைப் பாட்டியின் சிலை இருக்கிறதா?

மலாயன்கபே போய் சாப்பிடுவதே ஒரு சுவையான அனுபவம் தான் .ஈரத்துணியால் மேசையை துடைத்துவிட்டு உயர்த்தி கட்டிய சாரத்துடன் அண்ணைக்கு என்னவேண்டும் என்று ஓர்டர் எடுத்துவிட்டு நாலாம் நம்பர் டேபிளுக்கு இரண்டு மசாலா தோசை என்று அவர் கொடுக்கும் சத்தமே தனி .சாம்பாரு இருவகை நினைக்கவே சம்பல் வாயூறுது 

போளி ,சூசியம் ,வடை தொடங்கி தோசை இடியப்பம்,ஏன் மதியம் மரக்கறி சாப்பாடு கூட அந்த மாதிரி இருக்கும் .

மலாயன் கபே முதலாளியின் மகனும் எனது மிக நெருங்கிய நண்பர் பின்பு அதை நடத்தியவரின் மகனும் நண்பர்தான் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

'மலாயன் கபே'யிலதான் கல்வியில் தரப்படுத்துதல் விடயமாக கூட்டம் நடைபெற்றதாக எங்கோ படித்த ஞாபகம் உள்ளது. அது பாரம்பரிய உணவிற்கும் பிரசித்தி பெற்றதா?

போளி, சுசியமெல்லாம் கிடைக்குது என்றால், அது சைவ உணவகமாக இருக்குமென நினைக்கிறேன்.

அருகேதான் அவ்வைப் பாட்டியின் சிலை இருக்கிறதா?

மலாயன்   கபே, தாமோதரவிலாஸ் போன்றவை பிரசித்தி பெற்ற சைவ உணவகங்கள், ராஜவன்னியன், 
மலாயன்   கபே இருப்பது, ஸ்ரான்லி வீதி, ஔவையார் சிலை இருப்பது ஆஸ்பத்திரி வீதி. 10 நிமிட நடை தூரம் தான்.
அப்போது.... அந்தக் கடை நடத்தியவர்கள், எமக்கு பக்கத்து ஊரில் தான் வசித்தவர்கள்.
இப்போது... அது கைமாறி இருக்கலாம் என நினைக்கின்றேன்.

Edited by தமிழ் சிறி

6 minutes ago, தமிழ் சிறி said:

மலாயன்   கபே, தாமோதரவிலாஸ் போன்றவை பிரசித்தி பெற்ற சைவ உணவகங்கள், ராஜவன்னியன், 
மலாயன்   கபே இருப்பது, ஸ்ரான்லி வீதி, ஔவையார் சிலை இருப்பது ஆஸ்பத்திரி வீதி. 10 நிமிட நடை தூரம் தான்.
அப்போது.... அந்தக் கடை நடத்தியவர்கள், எமக்கு பக்கத்து ஊரில் தான் வசித்தவர்கள்.
இப்போது... அது கைமாறி இருக்கலாம் என நினைக்கின்றேன்.

இல்லை அண்ணை, மின்சாரநிலைய வீதியில்...... ஆஸ்பத்திரிக்கு பின்வீதி...... 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Surveyor said:

 மின்சாரநிலைய வீதியில்...... ஆஸ்பத்திரிக்கு பின்வீதி...... 

சரிதான்.. பழைய பெரியகடை வீதி, மின்சார வீதியா மாறிடிச்சி போல தெரியுது..

ஆனால் அங்கே போளி இப்போ விற்பனைக்கு இல்லையாம்..!

ஒன்லி சுசீயம்..!! அதுவும் ப்ளேட் முப்பது ரூபாய்.

su+good.jpg

நம்ம திண்டுக்கல் லியோனி, விக்கி ஐயா, மாவை போன்றோரும் கடைக்கு 'விசிட்' செய்திருக்கிறார்களாம்.

இணைய முகவரி:

http://www.malayancafe.com/

malayan.jpg

34 minutes ago, ராசவன்னியன் said:

சரிதான்.. பழைய பெரியகடை வீதி, மின்சார வீதியா மாறிடிச்சி போல தெரியுது..

ஆனால் அங்கே போளி இப்போ விற்பனைக்கு இல்லையாம்..!

ஒன்லி சுசீயம்..!! அதுவும் ப்ளேட் முப்பது ரூபாய்.

su+good.jpg

நம்ம திண்டுக்கல் லியோனி, விக்கி ஐயா, மாவை போன்றோரும் கடைக்கு 'விசிட்' செய்திருக்கிறார்களாம்.

இணைய முகவரி:

http://www.malayancafe.com/

malayan.jpg

நான் அறிந்த காலத்தில் இருந்து மின்சாரநிலைய வீதிதான் பெயர்....பெரியகடைக்கு பின்னுக்கு தான் உள்ளது.  

மக்கள் எல்லாம் நாட்டை விட்டு ஆக்கிரமிப்பாலரால் அகற்றப்பட்டால்..................பின்னர் யார் தான் வடை சாப்பிடுவது

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Surveyor said:

நான் அறிந்த காலத்தில் இருந்து மின்சாரநிலைய வீதிதான் பெயர்....பெரியகடைக்கு பின்னுக்கு தான் உள்ளது.  

அளவையர் சார், நான் இணைத்த படத்தை வடிவாய் உற்று நோக்குங்கள், அதில் பெரிய கடை வீதி(Grand Bazaar) என்றே இருக்கிறது..

ஒருவேளை கடைக்கு இரு வீதியின்புறமும் வாசலோ?

7 minutes ago, ராசவன்னியன் said:

அளவையர் சார், நான் இணைத்த படத்தை வடிவாய் உற்று நோக்குங்கள், அதில் பெரிய கடை வீதி(Grand Bazaar) என்றே இருக்கிறது..

ஒருவேளை கடைக்கு இரு வீதியின்புறமும் வாசலோ?

இல்லை அண்ணை அதை வாசித்தேன். ஒருபுறம் தான் வாசல்....... கூகிள் மைப்பில் போய் power station road எண்டு அடிச்சு பாருங்க......malabar cafe  மார்க் பண்ணியிருக்கு.  பழைய காலப்பெயராய் இருக்கலாம். சரி அதை விடுங்க.....நீங்கள் கேட்டது போல் ஒளவையார் சிலை அருகில் தான் இருக்கின்றது. 

பனீர் இனிப்பு போளி எனக்கு மிகவும் பிடித்த உணவு.......மிகவும் சுவையாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

1970 களில் வெலிங்டன் ஞானம் ஸ்ரூடியோவுக்கு அருகால் வரும் மின்சாரநிலையவீதி அப்படியே வளைந்து ஆஸ்பத்திரி மதில் அருகோடு சென்று மீன்டும் வளைந்து மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு போகும். ஆஸ்பத்திரி வெளிநோயாளர் பிரிவு பிறகுதான் கட்டப் பட்டது. அந்தக்கால பஸ்ஸ்ரான்டுக்கும் ஆஸ்பத்திரிக்கும் நடுவில் அந்த வீதி இருந்தது. அப்புறம் ராணித் தியேட்டருக்கு முன்னாலும் ஒரு வீதி இருந்தது. 

பூபால சிங்கம் புத்தகசாலை  கஸ்தூரியார் வீதியின் தொடக்கத்தில் (இப்ப அண்ணா கோப்பி , ஔவையார் சிலை) இருந்தது. மலாயன் கபே, ராஜ்கோபால் புடைவைக் கடை எல்லாம் பெரியகடை வீதியில் இருந்தது. 

மேயர் அல்பிரட் துரையப்பா காலத்தில் யாழ்ப்பாணத்தை அழகு படுத்தும் பொருட்டு பஸ் ஸ்ரான்டையும் பெரிதாக்கி நவீன சந்தைக் கட்டிடத் தொகுதிகளும், அறிஞர்களின் சிலைகளும்  வைக்கப் பட்டன.  tw_blush:

11 minutes ago, suvy said:

ஆஸ்பத்திரிக்கு முன்பக்கதில் இருந்து மணிக்கூட்டு நிலையம் வரையும் இப்போ மகாத்மா காந்தி வீதிஎன்று பெயர் வைத்து விட்டார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

தகவலுக்கு, நன்றி சுவி. சில முக்கிய  விடயங்கள்... சுலபத்தில் மறந்து விடும்  அதில்... இதுவும் ஒன்று.
1970´களில்.... இதனை என்  "அப்பச்சி" சொல்லக் கேள்விப் பட்டிருக்கின்றேன். 
அந்த.... நேரம்., நான் தவழும் குழந்தை. babeSmiley

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

..1970´களில்.... இதனை என்  "அப்பச்சி" சொல்லக் கேள்விப் பட்டிருக்கின்றேன். 
அந்த.... நேரம்., நான் தவழும் குழந்தை. babeSmiley

அப்போ தங்கள் சுயவிவரணையில்(Profile) பொறிக்கப்பட்டிருக்கும் இந்த திகதி 02/21/2008 யாரோட பிறந்த திகதி சிறி? what.gif

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Surveyor said:

ஆஸ்பத்திரிக்கு முன்பக்கதில் இருந்து மணிக்கூட்டு நிலையம் வரையும் இப்போ மகாத்மா காந்தி வீதிஎன்று பெயர் வைத்து விட்டார்கள்.  

அருகே கார்கில்ஸ் மாலும், புல்லுக்குளமும் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

அருகே கார்கில்ஸ் மாலும், புல்லுக்குளமும் தெரியுது.

இன்னும்.... இந்த "கூகிள் ஏர்த்" என்னும்...மென்பொருளை பாவித்து... என் வீட்டை பார்க்கும் ஆவல் வரவில்லை.
பார்த்தால்.... மாரடைப்பு வரும் என்ற பயமும் உள்ளது.எனக்கு... பழைய , ஊர் ஞாபகத்துடன்.... இருப்பதையே... விரும்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ராசவன்னியன் said:

அப்போ தங்கள் சுயவிவரணையில்(Profile) பொறிக்கப்பட்டிருக்கும் இந்த திகதி 02/21/2008 யாரோட பிறந்த திகதி சிறி? what.gif

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியரே! ஈழத்தில் பிறந்த எங்களுக்கு ஈழத்தைவிடவும் தமிழ்நாட்டை அதிகம் தெரிகிறது. காரணம் புத்தகங்களும், சினிமாவும்.:unsure:

தமிழ் நாட்டில் பிறந்த உங்களுக்கு ஈழம்பற்றி அதிகமாகத் தெரிவதற்குக் காரணம், தலைவரா..?? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

ராசவன்னியரே! ஈழத்தில் பிறந்த எங்களுக்கு ஈழத்தைவிடவும் தமிழ்நாட்டை அதிகம் தெரிகிறது. காரணம் புத்தகங்களும், சினிமாவும்.:unsure:

தமிழ் நாட்டில் பிறந்த உங்களுக்கு ஈழம்பற்றி அதிகமாகத் தெரிவதற்குக் காரணம், தலைவரா..?? :rolleyes:

இல்லை!

இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவை ஒன்றும், இரண்டும்.. !!

அவையே சிறு வயதிலிருந்தே எங்களுக்கு ஈழத்தையும், அதன் தமிழையும் தினமும் ஊட்டின. அவற்றிலிருந்து ஈர்க்கப்பட்டு, ஈழம் பற்றிய விடயங்களில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது..தென் தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலும் இலங்கை வானொலியே கோலோச்சியது.

(எங்கள் வானொலி நிலையங்களும் இருக்கே..! த்தூ..சரியான கச்சரா..!) :unsure:

மாலை 05.58 க்கும் தமிழ் சேவை இரண்டின் நிகழ்ச்சிகள் முடியும் போது ஏன் சீக்கிரம் முடிக்கிறார்கள் என்றே தோன்றும்..'82-83களில் இரவுச் சேவை ஆரம்பித்தவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வட தமிழகம் வந்தவுடன் இலங்கை வானொலியை கேட்க சிற்றலையையே நம்பியிருக்க வேண்டியதாயிற்று.. அப்பொழுது தற்செயலாக வானொலி அலைவரிசையை திருப்புகையில், புலிகளின் குரலும் "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" என்ற பாடலோடு கேட்டது..

தமிழ் மீது ஆர்வம் இருந்ததால், ஈழத்தின் சுத்தத் தமிழ் உச்சரிப்பால் கவரப்பட்டு, அப்படியே எம்மோடு ஒட்டிக்கொண்டது இந்த ஈழப்பாசம்..!

இன்னும் நீங்கியபாடில்லை!!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், ஈழத் தமிழர்கள் மேலுள்ள தமிழ்நாட்டுத் தமிழர்களின் பாசம் ஒரு வட்டத்திற்குள் இல்லை, அது பரந்தது. என்பதை அழகாகத் தெரிவித்த தங்கள் பதில் நெஞ்சை நெகிழவைக்கிறது. நன்றிகள்!!. th?id=OIP.Mb1489de33a3a9d445917d608d99c3

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

..ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், ஈழத் தமிழர்கள் மேலுள்ள தமிழ்நாட்டுத் தமிழர்களின் பாசம் ஒரு வட்டத்திற்குள் இல்லை, அது பரந்தது...

எம் போன்று பலரும் தமிழகத்தில் உள்ளனர்..இன்னும் பலருக்கு கடந்த கால வரலாறு துரதிஷ்டவசமாக அதிகம் சென்றடையவில்லை..வளர்ந்து வரும் நவீன தொடர்பாடல் முறைகள் மூலம் இனிவரும் காலங்களில் இருபுறமும் அறிந்துகொள்ள, காலம் வாய்ப்பினை சமைத்துக்கொடுக்குமென நம்புகிறேன்.

நன்றி ஐயா..

போளியை சுவைப்போம்..! போலியை களைவோம்..!! sermain.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.