Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாருக்காவது ஆசை இருக்கா ????

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் தேசம், தேசியம், மண், உரிமை  இன்னும் ஏதேதோ எல்லாம் கதைத்து வாய்ச்சவடால் விட்டபடி எம்மையும் ஏமாற்றி மற்றவரையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் எமது  மண்ணின் மேல் ஆசையும் அக்கறையும் இருந்தால் இப்ப உள்ள நிலைமையில் நாம் எமது மண்ணுக்குப் போய் வாழ எம்மைத் தயார் படுத்தவேண்டும். ஆனால் எம்மால் அங்கு போய் வாழ முடியுமா என்றால் யாரும் தயார் இல்லை. சிலர் போய் வாழ்கிறார்கள் தான். ஆனால் அவர்கள் எம்மைப்போல் வாய்ப்பந்தல் போடாதவர் தான்.

எமக்குத் தேவை பணம், வசதியான வாழ்வு அவ்வளவே.

ஏன் எம் நாட்டில் நாம் வசதியாக வாழ முடியாதா என்ன ?????

  • Replies 168
  • Views 22k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்க போகத் தயார். ஆனால்.. ஒரு சிங்களவனும் அங்க ஆக்கிரமித்து.. நிற்கக் கூடாது. சிங்களவனின் ஆக்கிரமிப்பு.. முஸ்லீம்களின் அடாத்துக்கு மத்தியில் அங்கு வாழப் போவது என்பது மொத்த இனத்தையும் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுவதற்குச் சமன். :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இருப்பதற்காக நாம் சொல்லும் சாட்டு அது. ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் பிள்ளை நாட்டில் போய்ய் வாழ எல்லா முயர்ச்சியும் செய்துகொண்டிருக்க, கேட்ட எனக்கு வெட்கித் தலை குனிய வேண்டும் போல் இருந்தது.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

17 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எல்லாரும் தேசம், தேசியம், மண், உரிமை  இன்னும் ஏதேதோ எல்லாம் கதைத்து வாய்ச்சவடால் விட்டபடி எம்மையும் ஏமாற்றி மற்றவரையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் எமது  மண்ணின் மேல் ஆசையும் அக்கறையும் இருந்தால் இப்ப உள்ள நிலைமையில் நாம் எமது மண்ணுக்குப் போய் வாழ எம்மைத் தயார் படுத்தவேண்டும். ஆனால் எம்மால் அங்கு போய் வாழ முடியுமா என்றால் யாரும் தயார் இல்லை. சிலர் போய் வாழ்கிறார்கள் தான். ஆனால் அவர்கள் எம்மைப்போல் வாய்ப்பந்தல் போடாதவர் தான்.

எமக்குத் தேவை பணம், வசதியான வாழ்வு அவ்வளவே.

ஏன் எம் நாட்டில் நாம் வசதியாக வாழ முடியாதா என்ன ?????

மனம் இருந்தால் இடம் உண்டு தாயே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ நீங்கள் அங்குதான் இருக்கிறீர்கள்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்கு அப்படீதும் யோசனை இருக்கா ஜீவன் எதிர்காலத்தில் ???

எதிர்காலத்தில் இல்லை. நிகழ்காலத்தில்  உண்டு - அதைதானே இப்ப பண்ணீட்டு இருக்கேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதெப்பிடி கண் மூடி முழிக்கிறதுக்கிடையில் Quote செய்தாச்சு. எல்லாரும் நல்ல உசாராத்தான் இருக்கிறியள்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இங்கே இருப்பதற்காக நாம் சொல்லும் சாட்டு அது. ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் பிள்ளை நாட்டில் போய்ய் வாழ எல்லா முயர்ச்சியும் செய்துகொண்டிருக்க, கேட்ட எனக்கு வெட்கித் தலை குனிய வேண்டும் போல் இருந்தது.

சிங்களவனிட்ட அடி வாங்கல்ல இல்ல. அது தான். நாங்க அடி வாங்கின ஆக்கள்.. அதனால்.. ஆக்கிரமிப்பின்.. வலி தெரியும். போய் அனுபவப்பட்டு வர விடுங்கள். அதன் பின் அபிப்பிராயம் கேட்கலாம். அதுதான் நல்லது. tw_blush::rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடிச் சொல்லி போறவரையும் போகவிடாமல் செய்யிறது நல்லாவா இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

போய் இருந்து.. பார்த்திட்டு வரட்டும். அப்ப தான் தெரியும் சிங்களவன் யார் என்று. ஐரோப்பாவில் மேற்குலகில்..பிறந்து வளர்ந்தவைக்கு அங்கத்த வலி அவ்வளவு இலகுவாகத் தெரியாது. தெரிய வரும் போது விட்டால் காணும் என்று ஓடியாந்து குந்துவினம்.. மீண்டும். 

நாங்க எல்லாம் சிங்களவனோட வாழ்ந்து அனுபவச்ச நாங்கள் அவனின் எகத்தாளங்களை..! அவற்றை அனுபவிக்காமல் வெளியில் இருந்து பார்த்தால் எல்லாம்  திறமாகவே தெரியும். tw_blush:

5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உப்பிடிச் சொல்லி போறவரையும் போகவிடாமல் செய்யிறது நல்லாவா இருக்கு

காலமை எழும்பி சாரத்தோடு போய் உதயன் பத்திரிகையும் பாணும் வாங்கிற சந்தோசம் இருக்கே. அட போங்கடா நீங்களும்  உங்கட புலம்பெயர் வாழ்கையும். 30வருடத்தை நோர்வேயில் வீணடித்து விட்டேனா என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆனால் தாயகம் பிடிச்சிருக்கு. இனி இதுதான் நிரந்தரம் - பிறந்த வீட்டுக்கு வந்தாச்சு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னது உங்களுக்கு இல்லை ஜீவன்.நெடுக்குக்கு. முப்பது ஆண்டுகள் நோர்வேயில் இருந்துவிட்டுப் பொய் அங்கே இருக்கிறீர்கள் எனில் உங்களைப் பாராடத்தான் வேண்டும்.

7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் சொன்னது உங்களுக்கு இல்லை ஜீவன்.நெடுக்குக்கு. முப்பது ஆண்டுகள் நோர்வேயில் இருந்துவிட்டுப் பொய் அங்கே இருக்கிறீர்கள் எனில் உங்களைப் பாராடத்தான் வேண்டும்.

நன்றி

இது மற்றவர்களின் பாராட்டிற்காக இல்லை. நான் எப்பவும் எனது மனதிற்கு பிடித்ததை செய்பவன். இது எனது சுய விருப்பம். மற்றவர்களிற்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கலாம். எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது பயன்படுத்துகிறேன் அவ்வளவுதான். 

52 minutes ago, ஜீவன் சிவா said:

காலமை எழும்பி சாரத்தோடு போய் உதயன் பத்திரிகையும் பாணும் வாங்கிற சந்தோசம் இருக்கே. அட போங்கடா நீங்களும்  உங்கட புலம்பெயர் வாழ்கையும். 30வருடத்தை நோர்வேயில் வீணடித்து விட்டேனா என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆனால் தாயகம் பிடிச்சிருக்கு. இனி இதுதான் நிரந்தரம் - பிறந்த வீட்டுக்கு வந்தாச்சு.

பாண் என்கின்ற வார்த்தையை மட்டும் நீக்கி இருந்தால் தப்பி இருப்பீர்கள். உங்களுக்கு இங்கு அட்டமத்து சனி "பாண்" எனும் சொல்லில் இன்று தொடக்கம் ஆரம்பிக்காமல் இருக்க பிரார்த்தனைகள். tw_confused: பாண் எனும் சொல்லை கருத்துக்களத்தில் தவறான இடத்தில் பயன்படுத்திவீட்டீர்கள். :D::D::D:

Edited by கலைஞன்

மெசோ ,

தனி ஒருவனாக இருந்தால் எந்த முடிவையும் விரும்பியபடி எடுக்கலாம் குடும்பம் என்று வந்தபின் எழுந்தமானமாக முடிவுகளை எடுக்கமுடியாது ,

தன்னை மிஞ்சித்தான் தானமும் தருமமும் .

நாட்டிற்கு போக வேண்டிய தேவை எவருக்கும் இல்லை அங்கு இருப்பவர்களுக்கு கொஞ்ச உதவி செய்தாலே பெரும்புண்ணியம் 

4 minutes ago, arjun said:

தனி ஒருவனாக இருந்தால் எந்த முடிவையும் விரும்பியபடி எடுக்கலாம் குடும்பம் என்று வந்தபின் எழுந்தமானமாக முடிவுகளை எடுக்கமுடியாது ,

உண்மைதான் அர்ஜுன் எனது மனைவியும் இப்ப  சம்மதித்திருக்கிறாள், அப்புறம் பிள்ளைக்கு பிள்ளை வர - ஐயோ பேரப்பிள்ளை  எண்டு என்னை நடுரோட்டிலேயே விடுவாள் 

12 minutes ago, கலைஞன் said:

பாண் என்கின்ற வார்த்தையை மட்டும் நீக்கி இருந்தால் தப்பி இருப்பீர்கள். உங்களுக்கு இங்கு அட்டமத்து சனி "பாண்" எனும் சொல்லில் இன்று தொடக்கம் ஆரம்பிக்காமல் இருக்க பிரார்த்தனைகள். tw_confused: பாண் எனும் சொல்லை (கருத்துக்களத்தில் தவறான இடத்தில் பயன்படுத்திவீட்டீர்கள். :D::D::D:

அட வெதுப்பியா - இஞ்ச வந்து வெதுப்பி வேணும் எண்டு கேட்டுப்பாருங்கோ , வெதும்பி போய் விடுவீங்கள் 

8 minutes ago, ஜீவன் சிவா said:

உண்மைதான் அர்ஜுன் எனது மனைவியும் இப்ப  சம்மதித்திருக்கிறாள், அப்புறம் பிள்ளைக்கு பிள்ளை வர - ஐயோ பேரப்பிள்ளை  எண்டு என்னை நடுரோட்டிலேயே விடுவாள் 

அட வெதுப்பியா - இஞ்ச வந்து வெதுப்பி வேணும் எண்டு கேட்டுப்பாருங்கோ , வெதும்பி போய் விடுவீங்கள் 

வெதுப்பி என்று எழுதாதமையால் அல்ல அப்படி நான் கூறியது. முன்பு இப்படித்தான் ஒருவர் யாழ்ப்பாணத்தில் பாண் உண்ணும் விசயத்தை கதைக்கவெளிக்கிட்டு கருத்துக்களத்தில் படாதபாடுபட்டுவிட்டார். எனவேதான் அப்படி குறிப்பிட்டேன்.

6 minutes ago, கலைஞன் said:

வெதுப்பி என்று எழுதாதமையால் அல்ல அப்படி நான் கூறியது. முன்பு இப்படித்தான் ஒருவர் யாழ்ப்பாணத்தில் பாண் உண்ணும் விசயத்தை கதைக்கவெளிக்கிட்டு கருத்துக்களத்தில் படாதபாடுபட்டுவிட்டார். எனவேதான் அப்படி குறிப்பிட்டேன்.

1 hour ago, ஜீவன் சிவா said:

காலமை எழும்பி சாரத்தோடு போய் உதயன் பத்திரிகையும் பாணும் வாங்கிற சந்தோசம் இருக்கே. அட போங்கடா நீங்களும்  உங்கட புலம்பெயர் வாழ்கையும். 30வருடத்தை நோர்வேயில் வீணடித்து விட்டேனா என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆனால் தாயகம் பிடிச்சிருக்கு. இனி இதுதான் நிரந்தரம் - பிறந்த வீட்டுக்கு வந்தாச்சு.

அப்ப சாரத்தில சம்சாரம் கிம்சாரம் எண்டு ஒரு பிரச்சனையும் வராதுதானே.

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுதல், பாடுதல், சித்திரம், கவி ..ஆய கலைகளில்...ஆடித் திளைப்பவர் ...பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவார்!

அர்ஜுன் முதல் கொண்டு...கோஷான் வரை நிலைமை இது தான்!

எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து ..மூன்றாவது தலைமுறையாக வாழும் எனது அயர்லாந்து நண்பனொருவன்... அயர்லாந்துகுப் போய்த் திரும்பியபோது...'I didn't want to come back..' என்று கூறினான். அவன் ஏன் அவ்வாறு கூறினான்?

தென்னாபிரிக்காவில் ..பிரித்தானியாவின் Queen Council அங்கத்தினாராக இருந்த ஹரம் சந் ..எல்லா வசதிகளையும் தூக்கி எறிந்து விட்டு..எதற்காக பஞ்சம் தவழும் இந்தியாவுக்குத் திரும்பி வந்தார்?

மேல்நாடுகளில் சில தலைமுறைகளாக வசதியுடன் வாழும் முஸ்லிம்களின் இளைய தலைமுறை..எதற்காக...சிரியாவை நோக்கிப் படை எடுக்கின்றது? சிரியாவில் வாழும் முஸ்லிம்களுக்காக.. சகல வசதிகளும் கொண்ட பாரிஸ் நகரில் வாழும் முஸ்லிம் எதற்காகத் தற்கொடைத் தாக்குதலில் ஈடு படுகின்றான்?

உலகத்தின் பணச் சந்தையின் வலுவைத் தீர்மானிக்கும் யூதர்கள்..காய்ந்து போன ஜெருசேலத்தில் ஒரு துண்டுக் காணியாவது இருக்க வேண்டும் என்று ஏன் கருதுகின்றார்கள்?

அவுஸ்திரேலிய மிருகக் காட்சிச் சாலையில் வசிக்கும் துருவக் கரடிக்கு எல்லா வசதிகளும் உண்டு! இருந்தும் ஆபத்துக்கள் மிக்க துருவ வாழ்க்கைக்காக, அது ஏன் ஏங்குகின்றது?

லண்டனில் வாழும் நீங்கள்..ஏன் தமிழர்களையே தேடி தேடி வணக்கம் சொல்லும்போது..அவர்கள் உங்களுக்குத் திரும்ப வணக்கம் சொல்லாத போது..ஏன் உங்களுக்குக் கோபம் வர வேண்டும்?

வெறும் பிட்டும், இடியப்பமும், கருவேப்பிலையும்,கருவாடும், சேலையும், கோவில்களும், தேர்த் திருவிழாவும் தாலிக்கொடியும் தான் எமது கலாச்சாரம் என்று நீங்கள் கருதினால்...லண்டனில் எல்லாமே இருக்கின்றன! நீங்கள் போக வேண்டிய தேவையே இல்லை சொல்வேன்!

முழுக் குடும்பமும் இடம் பெயராது..மிச்ச சொச்சங்கள் ஊரில் உள்ளவர்கள்..திரும்பப் போவதைப் பற்றிச் சிந்திக்கட்டுமே! 

புலம் பெயரும் வலசைப் பறவைகள் ..எதற்காக..மினக்கெட்டு இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கிலோ மீட்டர்கள் பயணம் செய்து ..திரும்பவும் பிறந்த ஊருக்குத் திரும்புகின்றன?

இணுவில் கந்தசாமி கோவிலில் கொடி தன்ர பாட்டில ஏறட்டும் என்று விட்டு விடாது..நீங்களும் ஏன் புலத்திலிருந்து கொடி எற்றுகின்றீர்கள்? உங்களை அவ்வாறு செய்யத் தூண்டுவது என்ன?

உங்கள் வலைத்தளத்துக்கு.. பனங்காடு என்று ஏன் பெயர் வைத்திருக்கின்றீர்கள்? வேறு நல்ல பெயர்கள் கிடைக்கவில்லையா?

ஒரு காலத்தில் நாட்டுக்காகக் கொடி பிடித்துப் போராடியவர்கள்..இன்று தடியை மட்டும் பிடிப்பது ஏன்?

சுமே,,,அடையாமிழந்தவன்...தன்னையே இழந்தவனாவான்!

போய் வாழ்வது.. வாழாதது ஒவ்வொருவரது தனிப்பட்ட முடிவு! ஆனால் எமக்கும் ..எமது தலைமுறைக்கும் ஒரு நாடு வேண்டும்...ஒரு அடையாளம் வேண்டும்! இல்லாவிட்டால்.. தொலைந்து விடுவோம்!

where are you from?

i think my parents come from Shri Lanka!

Oh..do you have your own language..culture?

No Idea..!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை அண்ணா.. சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது. சூடு படாத பூனைங்க.. அடுப்பங்கரை நாடத்துடிப்பது அதிசயம் அல்ல.

மேலும் அயர்லாந்தை விட்டு அவுஸிக்கு வந்தவர்.. மீண்டும் அயர்லாந்துக்கு போய் வரமாட்டன் என்பதற்கும்.. சொறீலங்கா விட்டு சிங்கள.. ஹிந்திய .. ஒட்டுக்குழு ஆக்கிரமிப்பு அநியாயங்களுக்கு பயந்து (பலர் புலிக்கு பயந்து ஓடியாந்தது என்றும் தான் அகதிக் கதையில் குடிவரவு குடியகழ்வாளர்களுக்கு கதை சொல்லி இருக்கினம்) அகதியாக ஓடியாந்த தமிழன்.. இன்று அதே ஆக்கிரமிப்பும் அதே துன்புறுத்தல்களும் விலகாத நிலையில்.. அங்கு போகப் பிரியப்படுவது.. அதுவும்... பெண்களுக்கு ஒரு பாதுகாப்பே இல்லை என்ற நிலையில்.. அங்க போக போக்குக் காட்டுவது.. எந்த வகையிலும் நியாயமானதல்ல. 

இது.. இரைகவ்விகளுக்கு நாமே இரைதேடிக் கொடுப்பது போல் உள்ளது. :rolleyes::rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குச் சொல்வதில் பெருமை தான் புங்கை . என்மகள் கடந்த மூன்று மாதங்கள் வன்னியில் சென்று நின்றுவிட்டு வந்தாள். வந்துடனேயே ஏன் நீங்கள் எல்லாம் இங்கே இருக்கிறீர்கள் என்று ஏச்சு வேறு. மீண்டும் அவள் இம்மாதம் கிளம்புகிறாள். இத்தனைக்கும் நான் அடுத்தஆண்டே அங்கு வந்து பார்க்கிறேன் என்று கூறியுள்ளேன். ஏனெனில் என் கடைக் குட்டிக்கு Aleval அடுத்த ஆண்டே முடிகிறது. என் மனதில் துணிவு வந்தால் நானும் எதிர்காலத்தில் அங்கு போய் இருப்பதையே விரும்புகிறேன்.

17 minutes ago, nedukkalapoovan said:

புங்கை அண்ணா.. சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது. சூடு படாத பூனைங்க.. அடுப்பங்கரை நாடத்துடிப்பது அதிசயம் அல்ல.

மேலும் அயர்லாந்தை விட்டு அவுஸிக்கு வந்தவர்.. மீண்டும் அயர்லாந்துக்கு போய் வரமாட்டன் என்பதற்கும்.. சொறீலங்கா விட்டு சிங்கள.. ஹிந்திய .. ஒட்டுக்குழு ஆக்கிரமிப்பு அநியாயங்களுக்கு பயந்து (பலர் புலிக்கு பயந்து ஓடியாந்தது என்றும் தான் அகதிக் கதையில் குடிவரவு குடியகழ்வாளர்களுக்கு கதை சொல்லி இருக்கினம்) அகதியாக ஓடியாந்த தமிழன்.. இன்று அதே ஆக்கிரமிப்பும் அதே துன்புறுத்தல்களும் விலகாத நிலையில்.. அங்கு போகப் பிரியப்படுவது.. அதுவும்... பெண்களுக்கு ஒரு பாதுகாப்பே இல்லை என்ற நிலையில்.. அங்க போக போக்குக் காட்டுவது.. எந்த வகையிலும் நியாயமானதல்ல. 

இது.. இரைகவ்விகளுக்கு நாமே இரைதேடிக் கொடுப்பது போல் உள்ளது. :rolleyes::rolleyes:

சிங்களவர்களிலும் விட எமது ஆட்களின் செயல் தான் பயமாக இருக்கிறது என்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சிங்களவர்களிலும் விட எமது ஆட்களின் செயல் தான் பயமாக இருக்கிறது என்கிறார்கள்

நீங்கள் எவ்வளவு காலம் சிங்களவனோடு அவனுடைய இடத்தில் வாழ்ந்துவிட்டு இதை அவர்கள் சொல்கிறார்கள் என்று ஒருக்கா கேட்டுச் சொல்லுறீங்களா..??! வெள்ளவத்தையில் பம்பலப்பிட்டியில் கொட்டகேனவில் மோதரையில் குப்பை கொட்டிட்டு அள்ளிவிடக் கூடாது. சும்மா சும்மா எல்லாம் எடுத்துவிடக் கூடாது. tw_blush:

சிங்களவனின் உண்மை முகம் பல்கலைக்கழகத்தில் இருந்து அவனுடைய பட்டிதொட்டி வரை அனுபவித்தவர்கள் நாங்கள் (எல்லா சமூகத்திலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்கள்.. ஆனால் ஒரு பொதுமைப்பாடான சிந்தனை குறித்தே இங்கு பேசுகிறோம்). பெருமையாக அல்ல.. யதார்த்தமாகச் சொல்கிறோம். அதுதான். tw_angry:

Edited by nedukkalapoovan

புலம்பெயர்ந்தவர்கள் எத்தனையோ பேர்கள் மீண்டும் நாட்டிற்கு சென்று பலவிதமான செயற்பாடுகளில் இறங்கிவிட்டார்கள் .

நாங்கள் போகாவிட்டாலும் போகின்றவர்களை தடுக்கும் வேலைக்கு போகக்கூடாது அதைவிட எனக்கு போக விருப்பமில்லை என்பதற்காக பொய்யாக ஆயிரம் நொண்டி சாட்டுக்களை வைக்ககூடாது .

நாட்டில் தேனும் பாலும் ஓடவில்லை ஆனால் நிம்மதியாக வாழத்தடையில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தமிழர்கள் விமான நிலையத்தில் கைதாகும்போது எவ்வாறு தாயகம் திரும்புவர்: சுரேஷ்­ பிரே­மச்­சந்­திரன்

By Admin -
 
March 22, 2015
10

suresh mpவெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரு­கின்ற தமி­ழர்­களை அச்­சு­றுத்தி பணம் பறிக்கும் சம்­ப­வங்கள் பண்­டா­ர­நா­யக்க விமான நிலை­யத்தில் தொடர்ந்தும் இடம்­பெற்று வரு­கின்­றன. இவ்­வா­றான நிலையில் புலம்­பெ­யர்ந்­த­வர்கள் தாரா­ள­மாக நாடு திரும்­ப­லா­மென்று அழைப்­பது அர்த்­த­மற்ற செய­லாகும் என யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ்­ பி­ரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார்.

புலம்­பெயர் தமிழ் மக்கள் நாடு திரும்­பலாம் என ஜனா­தி­ப­தியும் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் விடுத்த அறி­விப்பு தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே சுரேஷ்­ பிரே­மச்­சந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில், புலம்­பெ­யர்ந்த தமிழ் மக்கள் தாரா­ள­மாக நாடு திரும்­பலாம். இங்கு முத­லீ­டு­களை சுதந்­தி­ர­மாக மேற்­கொள்­ளலாம் என ஜனா­தி­ப­தியும், புலம்­பெயர் அமைப்­புக்கள் மீதான தடை குறித்து மீளாய்வு செய்­யப்­ப­டு­மென வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் கூறி­யி­ருக்­கின்ற போதும் அவர்கள் அச்­ச­மின்­றியும் சுதந்­தி­ர­மா­கவும் வரு­வ­தற்­கு­ரிய உத்­த­ர­வா­தத்தை இலங்கை அர­சாங்கம் வழங்க வேண்டும்.

அண்மைக் காலத்தில் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வந்த 10இற்கும் மேற்­பட்ட இலங்கைத் தமி­ழர்கள் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். கடந்த வாரம் கன­டா­வி­லி­ருந்து வந்த ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, பிள்ளை ஆகிய மூவரும் தடுத்து வைக்­கப்­பட்டு நான்கு மணி நேரம் விமான நிலை­யத்தில் வைத்து விசா­ரணை செய்­யப்­பட்­டுள்­ளனர். விசா­ர­ணையின் பின்பு அவர்கள் விடு­விக்­கப்­பட்­டாலும் தமது சொந்த ஊரான யாழ்ப்­பாணம் சென்ற சமயம் அவர்­களின் பின்னால்

புல­னாய்வு பிரி­வினர் சென்று பல இடைஞ்­சல்­களைக் கொடுத்­துள்­ளனர். இதனால் உட­ன­டி­யா­கவே அவர்கள் நாட்டை விட்டுச் சென்று விட்­டார்கள்.

வெளி­நா­டு­களில் வாழும் இலங்கைத் தமி­ழர்கள் இலட்­சக்­க­ணக்­கான பணத்தை செலவு செய்து தம் தாய் நாட்­டுக்கு ஆவ­லுடன் வந்தால் அவர்கள் நிந்­திக்­கப்­ப­டு­கி­றார்கள். புல­னாய்வுப் பிரி­வி­னரால் தொந்­த­ர­வுக்கு ஆளாக்­கப்­ப­டு­கி­றார்கள். விமானம் நிலையம் வரு­கின்ற

ஒவ்­வொ­ரு­வ­ரையும் சந்­தேகக் கண்­கொண்டு பார்ப்­பதும் விசா­ரிப்­பதும் கைது செய்­வதும் பணம் பறிப்­பதும் சர்­வ­சா­தா­ர­ண­மா­கவே நடை­பெ­று­கி­றது. மத்­திய கிழக்கு நாடு­க­ளி­லி­ருந்து வரு­கின்ற தமி­ழர்கள் கூட விமான நிலை­யத்தில் வைத்து விசா­ரிக்­கப்­ப­டு­கி­றார்கள்.

எனவே இலங்­கை­ய­ர­சாங்­க­மா­னது தனது நடை­மு­றை­களை மாற்­றாமல் புலம் பெயர்ந்­த­வர்­களை வாருங்கள் அவர்கள் தாரா­ள­மாக நாடு திரும்­பலாம். புலம்­பெயர் அமைப்­புக்கள் மீதான தடை குறித்து மீளாய்வு செய்­யப்­படும் என்று கூறு­வ­தெல்லாம் அர்த்தம் அற்­ற­தாகும்.

இன்று வெளி­நா­டு­களில் 10 லட்­சத்­துக்கு மேற்­பட்ட தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழுகிறார்கள். இவர்கள் இலங்கை வரும்போது கைது செய்வதானால் எத்தனை ஆயிரம் மக்களை கைது செய்ய முடியும். எனவே தான் இலங்கை அரசாங்கமானது இவ்வகை நிலைமைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்து, எவரும் வரலாம் கைது செய்யப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை வழங்க வேண்டும்.

http://www.errimalai.com/?p=3070

யாழில் மீண்டும் நில ஆக்கிரமிப்பு – எதிர்ப்பில் வடக்கு மக்கள்

Jaffna Protestயாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் தேவைகளுக்காக பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலியிலுள்ள நில அளவைத் திணைக்களத்தை முற்றுகையிட்டு இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

யாழ்ப்பாணம் மண்கும்பான் உள்ளிட்ட சில பகுதிகளில் சுமார் 60 ஏக்கர் காணியும், ஆணைக்கோட்டை பகுதியில் 16 பரப்பு காணியும் படையினரின் தேவைகளுக்காக கையகப்படுத்தும் வகையில் இன்று அளவீடு செய்யப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தநிலையிலேயே காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்ட நிலையில், காணி அளவீட்டை தற்காலிகமான இடைநிறுத்தியுள்ளதாக நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் காணிகளை அளவிடுமாறு தமக்கு அறிவித்தல் கிடைக்கும் பட்சத்தில் அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து காணி அளவீட்டுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

சுரேஸ் ,சிவாஜியை சாட்சிக்கு இழுக்க வேண்டிய அவலம் .அரசியல்வாதிகள் சொல்வதை கேட்டு வாழ்கையை தொலைத்துவிடாதீர்கள் 

யாழ் உறவு ஜீவன் நாட்டில் தான் நிற்கின்றார் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.