Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை சரித்திரத்தில் இதுவே முதல் தடவை : யாழ். நிலாவரை கிணற்றுக்குள்ளிருந்து சடலத்தை மீட்ட கடற்படை

Featured Replies

இலங்கை சரித்திரத்தில் இதுவே முதல் தடவை : யாழ். நிலாவரை கிணற்றுக்குள்ளிருந்து சடலத்தை மீட்ட கடற்படை

அடித்தளமற்ற கிணறு என அறியப்படும் யாழ்ப்பாணம் நிலாவரை கிணற்றிலிருந்து சடலத்தை வெற்றிகரமாக இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

image_1461571631-846e3ff8dc.jpg

லெப்டினட் கொமாண்டர் ரசிக திசானாயக்கவின் வழிகாட்டலின் கீழ் குறித்த சடலத்தை இலங்கை கடற்படையினர் சுழியோடி  குழுவினர் மீட்டுள்ளனர்.

நிலாவரை கிணறு ஒன்றிலிருந்து ஒருவரின் உடலை மீட்க உதவி வழங்கினர்.

அடித்தளமற்ற கிணறு என அறியப்படும் இப்பகுதி யாழ் குடா நாட்டின் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.

image_1461571608-5225d61318.jpg

40மீற்றர் ஆழத்தில் உள்ள பாறையின் முகட்டில் சிக்குண்டு காணப்பட்ட இறந்தவரின்  சடலத்தை  கடற்படை சுழியோடிகளால் நீருக்கடியில் ரிமோட் கருவி மூலம் இயக்கப்படும் வாகனத்தைப்பயன்படுத்தி கண்டறிந்தனர்.

இவ்வாறு கண்டறியப்பட்ட சடலத்தை கடற்படை சுழியோடிகள் குழுவின் இரு சுழியோடிகளின் துணிகரச் செயலின் மூலம் ஆழத்திலிருந்து மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டது.

image_1461571619-262edb073f.jpg

இவ்வாறான ஆழமான கிணறு ஒன்றிலிருந்து இலங்கை கடற்படையினரால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட முதலாவது நடவடிக்கை இது என்பது குறிப்பிடுகின்றனர்.

135 அடியில் சடலம் இருந்தபோதும் அதுக்கு அப்பாலும் பல ஆயிரம் அடிக்கு ஒரு குகை இருப்பதாகவும் அது எங்கே போய் முடிகின்றது என்று தெரியாது எனவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/5667

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நவீனன் said:

135 அடியில் சடலம் இருந்தபோதும் அதுக்கு அப்பாலும் பல ஆயிரம் அடிக்கு ஒரு குகை இருப்பதாகவும் அது எங்கே போய் முடிகின்றது என்று தெரியாது எனவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

போனது 135 - 150 அடி ஆழத்துக்கு. ஆனால்.. எடுத்து விடுவது அதுக்கு அப்பாலும் பல ஆயிரம் அடி ஆழம் இருக்கென்று. இது சொறீலங்கா கடற்படை எடுத்து விடுவதா.. அல்லது வீரகேசரி எடுத்து விடுகுதா..?!:rolleyes:tw_yum:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

போனது 135 - 150 அடி ஆழத்துக்கு. ஆனால்.. எடுத்து விடுவது அதுக்கு அப்பாலும் பல ஆயிரம் அடி ஆழம் இருக்கென்று. இது சொறீலங்கா கடற்படை எடுத்து விடுவதா.. அல்லது வீரகேசரி எடுத்து விடுகுதா..?!:rolleyes:tw_yum:

ஆழம் இல்லை நெடுக்கர், பக்க வாட்டில்.

முன்னர் கீரிமலை கேணியுடன் தொடர்பு உள்ளதாக சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

ஆழம் இல்லை நெடுக்கர், பக்க வாட்டில்.

முன்னர் கீரிமலை கேணியுடன் தொடர்பு உள்ளதாக சொன்னார்கள்.

செய்தியில் பக்கவாட்டில் என்று இல்லையே. பக்கவாட்டில் என்றால் ஆழம் என்றா சொல்வார்கள்...?! அது நீளமெல்லோ...?!tw_blush:

இலங்கை சரித்திரத்தில் இதுவே முதல் தடவையாம். ஏனென்றால் இதற்கு முன்னர் யாரும் அதற்குள் விழவில்லையாம்.  :cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

செய்தியில் பக்கவாட்டில் என்று இல்லையே. பக்கவாட்டில் என்றால் ஆழம் என்றா சொல்வார்கள்...?! அது நீளமெல்லோ...?!tw_blush:

இவர்கள் செய்தியை நான் சொல்லவில்லை. நிலாவறை பற்றிய வாய்வழிக் கதையினை சொன்னேன்.

48 minutes ago, Nathamuni said:

இவர்கள் செய்தியை நான் சொல்லவில்லை. நிலாவறை பற்றிய வாய்வழிக் கதையினை சொன்னேன்.

நீங்கள் உந்த தேசிக்காயையும் கீரிமலயையும் இன்னும் மறக்கேல்ல போலகிடக்கு.

இந்தபக்கம் வரேக்க சொல்லுங்கோ ரெண்டு பேருமா போய் நிலாவரையில  தேசிக்காய் போட்டுப் பாப்பம். கீரிமலையில வருதா எண்டு நீங்க பாருங்கோ - எனக்கு அவ்வளவு பொறுமை கிடையாது. :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
56 minutes ago, Nathamuni said:

ஆழம் இல்லை நெடுக்கர், பக்க வாட்டில்.

முன்னர் கீரிமலை கேணியுடன் தொடர்பு உள்ளதாக சொன்னார்கள்.

ஓம் ஊரிலையும் உப்பிடித்தான் கதைக்கிறவை :rolleyes:

நிலாவரை வற்றாத நீருற்று .

தொடர்ந்து தண்ணீர் மொட்டர்களால் இறைத்துகொண்டே இருக்கும் .அப்பவே நான் பார்க்க சென்ற போது காவலர்கள் போட்டுத்தான் இருந்தது .

உந்த தேசிக்காய் போடுற கதை ஊரெழுவில் உள்ள "பொக்கணை " என்ற இடைத்தையும் சொல்லுவார்கள் .

பொக்கணை இராமன் இலங்கைக்கு படையெடுக்கும் போது வானரப்படைக்கு தனது வில்லால் குற்றி தண்ணீர் எடுத்த இடம் என்றும் ஒரு கதை .அதில் இருக்கும் கல் ஒன்றில் பெரிய காலடி ஒன்றும் இருக்கு .அது ராமனின் காலடியாம் . 

பொக்கணை நிலாவரை மாதிரி பெரிய அளவானது  அல்ல கற்களுகிடையில் இருக்கும் ஒரு சிறிய தண்ணீர் தேக்கம் ஆனால் அதுவும் வற்றாத நீருற்று தான் ஏனெனில் பெரிய இரும்பு குளாய்களும் மிக உயரமான காற்றாடியும் அங்கு இருக்கு .வெள்ளைக்காரன் போட்டாத யாரோ சொன்னதாக நினைவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.