Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் இடம்பெற்ற “உலகத் தமிழர் வரலாற்று மைய வளாக புகுவிழா”

Featured Replies

3841_1462451924_PhototasticCollage-2016-

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வளாக புகுவிழா நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (01) பிரித்தானியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

திரு.இன்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மூன்று மாவீரர்களின் தாயாரான திருமதி இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம், தமிழகத்தின் பிரபல பாடகர் திரு.டி.எல்.மகாராஜன், நாடுகடந்த தமிமீழ அரசாங்கத்தின் பிரித்தானிய அவை உறுப்பினரும் இரண்டு மாவீரர்களின் சகோதரனுமாகிய திரு.திருக்குமரன், கடற்கரும்புலி மாவீரர் காந்தரூபனின் தந்தை மற்றும் மாவீரர் சிரித்திரனின் சகோதரர் திரு.ஒப்பிலான் ஆகியோர் பொதுச்சுடர்களினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சிய கொடியினை பிரித்தானிய காவல்துறையை சேர்ந்த திரு.சுரேசும், தமிழீழ தேசியக் கொடியினை திரு சாம்ராஜ் ஏற்றி வைத்துள்ளார்.

தொடர்ந்து பொதுத் தூபிக்கான மலர் மாலையினை திருமதி பிரிகேடியர் சசிக்குமார் டிலானி அணிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து முதல் மாவீரர் லெப்டினன்ட் சத்தியநாதன் சங்கரின் திருவுருவப் படத்திற்கு அவரது தந்தை ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்தார். முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்டினன்ட் மாலதியின் திருவுருவப் படத்திற்கு திருமதி பிரிக்கேடியர் கடாபி சுதா ஈகைச் சுடரேற்றி மலர் மாலை அணிவித்துள்ளார்.

ஈகைச்சுடர் தியாகி முத்துக்குமாரின் திருவுருவப்படத்திற்கு திரு.கபிலன் ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவிக்க, நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் திருவுருவப் படத்திற்கு திருமதி.சுகிந்திரா ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்துள்ளார்.

பின்னர் அகவணக்கம் செலுத்தப்பட்டு அனைத்து மக்களும் மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கும், நினைவுக்கற்களுக்கும், பொதுத் தூபிக்கும் ஈகைச்சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தியுள்ளனர்.

மலர் வணக்கத்தை தொடர்ந்து தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய அத்தியாயத்தை பதிவு செய்த உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் பெயர்ப்பலகைத் திரைநீக்கத்தினை எமது எதிர்கால சிற்பிகளான சிறார்கள் வைபவ ரீதியாக திரை நீக்கம் செய்து வைத்தனர்.

பெருந்திரளான பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்த இந்த நிகழ்வில், அரங்க நிகழ்வுகளாக வரவேற்பு நடனத்தினை செல்வி ஆர்த்தி, செல்வன் மிதுரன் வழங்க, வாழ்த்துரையினை இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வந்து கலந்து சிறப்பித்த பிரபல தமிழக பாடகர் மதிப்பிற்குரிய திரு.ரி.எல்.மகாராஜன் வழங்கியுள்ளார்.

கருத்துரைகளை தமிழீழ நாடுகடந்த அரசாங்கத்தின் தற்போதைய சபாநாயகர் திருபாலச்சந்திரன், ஒக்ஸ்போர்ட் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் திரு.மயில்வாகனம் மற்றும் சோபினா ஆகியோர் நிகழ்த்தியதை அடுத்து, சிறப்புரையினை தமிழீழ வைப்பக முன்னாள் மேலாளர் திரு.பாலகிருஷ்ணன் வழங்கியுள்ளார்.

தொடர்ந்து, மக்கள் மத்தியில் இருந்து உலகத் தமிழர் வரலாற்று மையத்திற்கு தமது வாழ்த்துக்கள், மற்றும் வேண்டுகோள்கள் அடங்கிய வாழ்த்துமடல் ஒன்றும் உலகத் தமிழர் வரலாற்று மைய நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் தமிழீழ எழுச்சிப் பாடல்களை திரு.சுரேசும், மாவீரர் புகழ்பாடும் கவிதையினை கவிஞர் திரு.சிவசுப்ரமணியமும் நிகழ்த்தியுள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் கணக்கறிக்கையினை அதன் இயக்குனர் சபை உறுப்பினர் திரு.சத்தியரூபன் வாசித்தார். இறுதியாக உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நன்றியுரையினை வழங்க தமிழீழ எழுச்சி பாடலுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

3841_1462451924_625056035016030005380012   

3841_1462451924_625056035016030005380012   

3841_1462451924_625056035016030005380012   

3841_1462451924_625056035016030005380012   

3841_1462451924_625056035016030005380012  

http://battinaatham.com/description.php?art=3841

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி பிரிகேடியர் சசிக்குமார் டிலானி
திருமதி பிரிகேடியர் கடாபி சுதா

இவர்களுக்கு யார் பிரிகேடியர் பட்டம் வழங்கியது

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில்.. ஒட்டுக்குழு ஒணான் குழு எல்லாம்.. நினைவஞ்சலி செய்யுது.. காக்கவன்னியன் எல்லாம்.. பண்டாரவன்னியனாக.. பண்டாரவன்னியன் எல்லாம் மறக்கச் செய்யப்படும் இன்றைய காலத்தில்... மக்கள் மனங்களில் சிலதை உறுதியாக இருத்தத் தக்க இத்தகைய நகர்வுகள் அமைவது வரவேற்கத்தக்கது. இதை கட்டினால் மட்டும் போதாது.. பாதுக்காக்கவும்.. பரப்பவும் வேண்டும். tw_warning:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

திருமதி பிரிகேடியர் சசிக்குமார் டிலானி
திருமதி பிரிகேடியர் கடாபி சுதா

இவர்களுக்கு யார் பிரிகேடியர் பட்டம் வழங்கியது

ஏன் உங்களிடம் அனுமதி பெறவில்லையா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nedukkalapoovan said:

தாயகத்தில்.. ஒட்டுக்குழு ஒணான் குழு எல்லாம்.. நினைவஞ்சலி செய்யுது.. காக்கவன்னியன் எல்லாம்.. பண்டாரவன்னியனாக.. பண்டாரவன்னியன் எல்லாம் மறக்கச் செய்யப்படும் இன்றைய காலத்தில்... மக்கள் மனங்களில் சிலதை உறுதியாக இருத்தத் தக்க இத்தகைய நகர்வுகள் அமைவது வரவேற்கத்தக்கது. இதை கட்டினால் மட்டும் போதாது.. பாதுக்காக்கவும்.. பரப்பவும் வேண்டும். tw_warning:

tw_thumbsup:

உங்கள் கருத்தே எனது கருத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

tw_thumbsup:

உங்கள் கருத்தே எனது கருத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

திருமதி பிரிகேடியர் சசிக்குமார் டிலானி
திருமதி பிரிகேடியர் கடாபி சுதா

இவர்களுக்கு யார் பிரிகேடியர் பட்டம் வழங்கியது

இவர்களைப்பற்றி அழுக்காறு இன்றி நீங்கள் அறிந்தவற்றை எழுதினால், இவர்கள் இந்தப்பட்டத்திற்குப் பொருத்தமானவர்களா இல்லையா என்பதுபற்றி ஏனையவர்களும் தீர்மானிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியர் பதவி என்பது எவ்வளவு சிறப்பானது என்பது தெரியுமா?...புலிகளில்,சிறப்பான போர் ஆற்றலையும்,திறமையும் கொண்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உன்னத பட்டம்...பால்ராஜ் அண்ணா,சு.பானாவுக்கு கூட அவர்கள் இறந்த பின்பு தான் இந்தப் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

நான் நினைக்கிறேன் நான் மேலே குறிப்பிட்ட பெண்கள் திரு கடாபி,திரு ஆதவன் ஆகியோரின் மனைவிமார்களாக இருக்கலாம்.கடாபிக்கோ,ஆதவனுக்கோ பிரிகேடியர் பட்டம் குடுத்தாலாவது ஏற்கலாம்.அவர்களது மனைவிமாருக்கு ஏன் கொடுக்க வேண்டும்.இவர்கள் எந்தப் போர் முனையில் யாரை வழி நடத்தினார்கள் சொல்லுங்கள் பார்ப்போம்...விதுசாவுக்கோ அல்லது துர்காவுக்கோ இன்னும் பிரிகேடியர் பட்டம் குடுத்ததாக நான் அறியவில்லை.

புலிகள் இல்லை என்டவுடன் எலிகளுக்கு தான் கொண்டாட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

ரதி இது அவர்களது மனைவிகளது பதவி நிலை அல்ல.

6 minutes ago, ரதி said:

மீரா,நீங்கள் சொல்கின்ற மாதிரி இருந்தால் சந்தோசம்.நான் மேலே இணைக்கப்பட்ட திரியை அடிப்படையாக வைத்தே என் கருத்தைப் பதிந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ரதி said:

மீரா,நீங்கள் சொல்கின்ற மாதிரி இருந்தால் சந்தோசம்.நான் மேலே இணைக்கப்பட்ட திரியை அடிப்படையாக வைத்தே என் கருத்தைப் பதிந்தேன்.

திறமையான போர் ஆற்றல் கொண்ட புலிகள், பதவிக்குக் கொடுத்த மதிப்பையும் சிறப்பாக வெளியிட்டமைக்கு ஒரு பச்சை தந்தேன். 

பிரிகேடியர் சசிக்குமாரின் மனைவி டிலானி, பிரிகேடியர் கடாபியின் மனைவி சுதா என எழுதவேண்டியதை ஆர்வமிகுதியால் திருமதி பிரிகேடியர் சசிக்குமார் டிலானி, திருமதி பிரிகேடியர் கடாபி சுதா என எழுதியுள்ளனர் என்று எண்ணுகிறேன்.
 
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Paanch said:

திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க..  என்பது போல.. பிரிகேடியர் கடாபியின் துணைவியார் என்பதனை..  திருமதி பிரிகேடியர் கடாபி சுதா என்று அந்தப் போராளியின் பதவி நிலையோடு பெயரையும் சேர்த்து.. பின் மனைவியின் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.

இது ஒரு பெரிய விசயமே அல்ல. 

புலிகளைப் பற்றி தாறுமாறாக எழுதித் தள்ளும் சிலரே இதற்காகவும் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

ஒருவேளை தலைப்பை திசை திருப்பும் நோக்கமாக இருக்கலாம். இவற்றைப் பெரிது படுத்தினால் தான் தப்பு. tw_blush:

(திருமதி கடாபி சுதா.. என்று எழுதாமல்.. கடாபிக்குரிய பதவிநிலையை அவருடைய பெயருக்கு முன் போட்டு எழுதி உள்ளனர் அவ்வளவே. அதுவே திருமதி பிரிகேடியர் கடாபி சுதா என்று ஆகிறது.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி டிலானி பிரிகேடியர் சசிக்குமார்
திருமதி சுதா பிரிகேடியர் கடாபி

இவ்வாறு எழுதியிருக்கலாம். 

அல்லது 

1 hour ago, Paanch said:

பிரிகேடியர் சசிக்குமாரின் மனைவி டிலானி, பிரிகேடியர் கடாபியின் மனைவி சுதா
 
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

புலிகளைப் பற்றி தாறுமாறாக எழுதித் தள்ளும் சிலரே இதற்காகவும் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

ஒருவேளை தலைப்பை திசை திருப்பும் நோக்கமாக இருக்கலாம். இவற்றைப் பெரிது படுத்தினால் தான் தப்பு. tw_blush:

எமது ஊடகங்கள்.... விடும்  எழுத்துப் பிழைகளால் பொருள் மயக்கம் ஏற்படுவது வழமைதானே,
அதற்கு... ரதி, உணர்ச்சி வசப்பட்டதுதான்.... ஆச்சரியமாக உள்ளது. Smiley
நெடுக்கு கூறிய கருத்து, சிந்திக்க வைத்தது.  Smiley

On 5/5/2016 at 3:38 AM, ரதி said:

திருமதி பிரிகேடியர் சசிக்குமார் டிலானி
திருமதி பிரிகேடியர் கடாபி சுதா

இவர்களுக்கு யார் பிரிகேடியர் பட்டம் வழங்கியது

பட்டம் அவர்களின் மனைவிகளுக்கல்ல ...அந்த மாவீர்களை தெரியப்படுத்துவதட்கு .... 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்,எனக்கு உங்கள மாதிரி புலி வேசம் போட்டாச்சு,குலைச்சுத் தான் ஆகனும் என்ட நிலை இல்லை.அதை எல்லாம் உங்கள மாதிரி கணணியில் இருந்து கொண்டு தட்டிக் கொண்டு மட்டும் இருப்பினமே அவர்களிடம் வைத்துக் கொள்ளுங்கள்.எது சரி/பிழை,பிழையாயின் அதை ஏற்கும் பக்குவம் எனக்கு இருக்குது சரியா?...உங்கள் மாதிரி வறட்டுக்காக எழுதுகின்ற ஆள் நானில்லை.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு இன்னும் சில திரிகளில் ஊடகங்கள் பிழையான செய்தியை வெளியிட்டார்கள் என அவர்களை நீங்கள் திட்டினதும் இதே யாழில் தான் இருக்குது.என்பதையும் மறந்து விட வேண்டாம்

...........................

தமிழ்சிறி,நெடுக்கர் எழுதியதில் எந்த கருத்து உங்களை சிந்திக்க வைத்தது என சொன்னீர்கள் என்டால் எனக்கும்,மற்றவர்களுக்கும் சிந்திக்க உதவியாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.