Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்படை அதிகாரி என்றும் எனது சகோதரர் ; இதற்கு கிழக்கு மாகாண ஆளுனரின் அதிகார துஷ்பிரயோகமே காரணம் : கிழக்கு முதலமைச்சர்

Featured Replies

கடற்­படை அதி­காரி என்றும் எனது சகோ­தரர் ; இதற்கு கிழக்கு மாகாண ஆளு­னரின் அதி­கார துஷ்­பி­ர­யோ­கமே காரணம் : கிழக்கு முதலமைச்சர்

 

கடற்­படை அதி­கா­ரிக்கும் எனக்கு எந்­த­வித முரண்­பா­டு­மில்லை. அந்த அதி­காரி என்றும் எனது சகோ­தரர். அவரை நான் பிழை­யாக பார்க்­க­வில்லை. இந்­நி­லை­மைக்கு கிழக்கு மாகாண ஆளு­னரின் அதி­கார துஷ்­பி­ர­யோ­கமே காரணம் என்று கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் செயி­னு­லாப்தீன் நசீர் அகமட் தெரிவித்தார்.

7f381d66-13f2-4d9b-82cd-ecc9b1b47fa4.jpg

 

சம்­பூ­ரி­லுள்ள பாட­சா­லை­யொன்றில் இடம்­பெற்ற வைப­வத்தின் போது கடற்­படை அதி­கா­ரி­யொ­ரு­வரை திட்­டிப்­பே­சிய சம்­பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இது தொடர்­பாக அவர் கருத்து தெரிவிக்­கையில்,

சம்பூர் நிகழ்­வுக்கு முன்­பாக கிண்­ணி­யாவில் நடை­பெற்ற நிகழ்வில் கலந்­து­கொண்ட நானும் முன்னாள் முத­ல­மைச்சர் நஜீப் புறக்­க­ணிக்­கப்­பட்டோம். அதே­போன்­றுதான் சம்பூ­ரிலும் இடம்­பெற்­றது. ஒரு மாகாண முத­ல­மைச்­சரை தடுப்­பது என்­பது அதுவும் எங்­க­ளது மக்கள் மத்­தியில் எங்கள் மாகா­ணத்தில் எங்­களை இழிவு படுத்­து­வ­தென்­பது ஜன­நா­ய­கத்தை கொச்­சைப்­ப­டுத்­து­வது போன்­றதாகும்.

கிழக்கு மாகா­ணத்தின் ஒட்­டு­மொத்த கௌர­வத்­தையும் மக்­களின் மன நிலை­யையும் கொச்­சைப்­ப­டுத்­து­வது போன்று எனக்கு நடத்­தப்­பட்ட அந்த செயல் வேத­னை­யைத்­த­ரு­கின்­றது.

 

 

சம்­பூரில் நடை­பெற்ற குறித்த வைப­வத்­திற்கு கிழக்கு மாகாண கல்­வி­ய­மைச்சர் எஸ்.தண்­டா­யு­த­பாணி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர், அமெரிக்க உயர்ஸ்த்­தா­னிகர், படை அதி­கா­ரிகள் என பலரும் வருகை தந்­தி­ருந்­தனர். ஆனால் அந்த வைப­வத்­திற்கு முதல் ஒரு வைபவம் கிண்­ணி­யாவில் நடை­பெற்­றது. நான் அங்கும் சென்­றி­ருந்தேன். அந்த வைப­வத்தில் மேற்­படி பிர­மு­கர்­க­ளுடன் கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் நஜீப் ஏ அப்துல் மஜீத்தும் கலந்து கொண்­டி­ருந்தார். அந்த வைப­வத்­திலும் நான் உட்­பட முன்னாள் முத­ல­மைச்சர் என இரு­வரும் புறக்­க­ணிக்­கப்­பட்டோம்.

கிண்­ணி­யாவில் நடை­பெற்ற அந்த வைப­வத்­திற்கு பின்னர் சம்­பூரில் பாட­சா­லை­யொன்றில் இந்த வைபவம் நடை­பெற்­றது.

அப்­போது அந்த வைப­வத்தில் கலந்து கொண்­டி­ருந்த நிலையில் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு பாட­சாலை பைகளை வழங்­கு­வ­தற்­காக முத­லா­வது கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் அமெரிக்க தூதுவர் ஆகியோர் அழைக்­கப்­பட்­டனர். மேடைக்கு சென்ற கிழக்கு மாகாண ஆளுனர் என்­னையும் அழைத்தார். இவர்­க­ளி­ரு­வரின் பெயர்­களும் கௌர­வ­மாக அழைக்­கப்­பட்டு மேடைக்கு இவர்கள் போய் விட்­டனர்.

அப்­போது அவ்­வி­டத்­திற்கு போய் ஆளுனர் ஒரு சாத­ரண ஒரு­வரை கூப்­ப­டு­வது போன்று என்­னையும் அவ்­வி­டத்­திற்கு அழைத்தார். இதனை வெட்­கத்தை விட்டும் கூற­வேண்­டி­யுள்­ளது. ஒரு மாகா­ணத்தின் முத­ல­மைச்­சரை தரக் குறை­வாக அழைத்தார். பர­வா­யில்லை. அதனை நான் பொருட்­ப­டுத்­தாமல் சம்பூர் பிர­தேசம் கிழக்கு மாகாண கல்­வி­ய­மைச்சர் தண்­டா­யு­த­பா­ணியின் தொகுதி என்­பதால் அவ­ரையும் அழைத்துக் கொண்டு நான் முன்னே சென்று கொண்­டி­ருந்தேன். கல்­வி­ய­மைச்சர் பின்னால் வந்து கொண்­டி­ருந்தார். மேடைக்கு சென்­ற­போது அங்கு நின்ற கடற்­படை அதி­காரி எனது வயிற்றில் கையை வைத்து என்னை வர­வேண்டாம் என தடுத்தார். அது அவ­ரு­டைய பிழை­யில்லை. ஏனெனில் எனது பெயரை அங்கு அழைக்கவில்லை. அதனால் அவர் என்னை தடுத்­தி­ருக்­கலாம். அவரில் பிழை என கூற­மு­டி­யாது.

எனினும் என்னை அங்கு தடுத்த அந்த கடற்­படை அதி­கா­ரிக்கு இந்த கிழக்கு மாகா­ணத்தின் முத­ல­மைச்சர் என்ற ரீதியில் மாகா­ணத்தின் மக்­களால் ஜன­நா­யக ரீதியில் தெரிவு செய்­யப்­பட்ட அதி­கா­ரத்­துக்­கு­ரிய அர­சியல் தலைவர் என்ற ரீதியில் அவ­ருக்கு ஒரு அறி­வுரை சொல்ல வேண்­டிய தேவை ஏற்­பட்­டது. அந்த அறி­வு­ரையே நான் அவ்­வி­டத்தில் செய்தேன்.

ஒரு மாகாண முத­ல­மைச்­சரை தடுப்­பது என்­பது அதுவும் எங்­க­ளது மக்கள் மத்­தியில் எங்கள் மாகா­ணத்தில் எங்­களை இழிவு படுத்­து­வ­தென்­பது ஜன­நா­ய­கத்தை கொச்­சைப்­ப­டுத்­து­வது போன்­றாகும். கிழக்கு மாகா­ணத்தின் ஒட்­டு­மொத்த கௌர­வத்­தையும் மக்­களின் மன நிலை­யையும் கொச்­சைப்­ப­டுத்­து­வது போன்று எனக்கு நடத்­தப்­பட்ட அந்த செயல் வேத­னை­யைத்­த­ரு­கின்­றது. இந்­தப்­பி­ழைக்கு காரணம் கிழக்கு மாகாண ஆளு­ன­ராகும். அவர் அதி­கார துஷ்­பி­ர­யோகம் செய்­வ­தால்தான் இவ்­வா­றான சம்­பவம் இங்கு இடம்­பெற்­றது.

அதி­கா­ரத்தை ஆளுனர் வைத்­துக்­கொண்டு துஷ்­பி­ர­யோகம் செய்­வதால் வந்த விட­யமே இந்த சம்­ப­வ­மாகும். மாறாக கடற்­படை அதி­கா­ரிக்கும் எனக்கு எந்­த­வித முரண்­பா­டு­மில்லை. அந்த அதி­காரி என்றும் எனது சகோதரர். அவரை நான் இங்கு பிழையாக பார்க்கவில்லை. ஆனால் இவ்வளவுக்கும் காரணம் கிழக்கு மாகாண ஆளுனரின் அதிகார துஷ்பிரயோகமேயாகும்.

அவ்விடத்தில் யாராக இருந்தாலும் என்னுடைய சகோதரராக இருந்தாலும் நான் அந்த அறிவுரையை செய்தே இருப்பேன்.

படை அதிகாரிகளுடன் நாங்கள் ஒற்றுமையை பேணி நடந்து கொள்கின்றோம். அவர்களுக்கும் எங்களுக்கும் ஒற்றுமை இருக்கின்றது. படை அதிகாரிகளுடன் ஒற்றுமைப்பட்டு வேலை செய்கிறோம் என்றார்.

http://www.virakesari.lk/article/6867

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே பார்த்தேன் ....உறுமியவர் பதுங்கிறார்.
வறுத்த வறுவல் அப்படி .....இப்படித்தான் பம்மிக்கொண்டிருக்க வேண்டும் ..முதலமைச்சர் என்பதால் தலைகால் தெரியாமல் ஆடக்கூடாது
உம்மட கொழுப்பை தமிழரிட்ட காட்டுவது போல சிங்களவனிட்ட காட்டபோனால் இதுதான் நடக்கும் ... படையில் கைவைப்பது உம்மட பாடையில் கைவைப்பது போல 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

நானா.. நாணிக் கூனி கோணி ஆகிட்டார். இவர் தான் கிழக்கில் இருந்து யுத்தத்தை ஆரம்பிக்கப் போற தளபதி. போங்க.. போய் உங்க புழைப்ப பாருங்க. உங்களால் சிங்களவனின் கால் தூசை கூட தொட முடியாது. தெரிஞ்ச தெல்லாம்.. தமிழரின் காலை வாருவது மட்டுமே. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து இப்படியே பிரட்டி பிரட்டி போடவேண்டியது தான்.

3 hours ago, அக்னியஷ்த்ரா said:

 படையில் கைவைப்பது உம்மட பாடையில் கைவைப்பது போல 

படையில் கைவைத்தால், தமிழ், முஸ்லிம் எல்லாருக்கும்  இதுதான் கதி.

2 hours ago, nedukkalapoovan said:

நானா.. நாணிக் கூனி கோணி ஆகிட்டார். இவர் தான் கிழக்கில் இருந்து யுத்தத்தை ஆரம்பிக்கப் போற தளபதி. போங்க.. போய் உங்க புழைப்ப பாருங்க. 

வேலையில்லாதவருக்கான புரட்சி. 

ஆயதப் புரட்சி அல்ல.  

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெரியார் said:

படையில் கைவைத்தால், தமிழ், முஸ்லிம் எல்லாருக்கும்  இதுதான் கதி.

அதுதானே ...அனுபவப்பட்டவர்கள் சொன்னாலும் இந்த நானாமார்களுக்கு  மண்டையில் ஏறுதில்லை 
வேறொன்றுமில்லை ..மண்டையில் மதப்பு கூடினால் இப்படி குனிச்சு எழுப்பத்தான் வேண்டும் ..அப்பத்தான் எல்லாம் கணக்கா வரும். ஒரு பைசாவிற்கு பிரயோசனமில்லாத பதவியை வைத்து ஒபாமா ரேஞ்சிற்கு பிலிம் காட்டினால் ...தண்ணி குடிக்க வேண்டித்தான் வரும் ...வரட்டா காக்கா  

Edited by அக்னியஷ்த்ரா

9 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அதுதானே ...அனுபவப்பட்டவர்கள் சொன்னாலும் இந்த நானாமார்களுக்கு  மண்டையில் ஏறுதில்லை 
 ஒரு பைசாவிற்கு பிரயோசனமில்லாத பதவியை வைத்து ஒபாமா ரேஞ்சிற்கு பிலிம் காட்டினால் ...  

வடக்கில் இராணுவத்தை சிறிதும் அசைக்க முடியவில்லை வடக்கு முதல்வரால்.

அதுபோலத்தான் கிழக்கிலும்.

ஒரு மயிரும் புடுங்க முடியாது.

விக்கியார் அடிக்கடி ஆளுநரின் செயற்பாடுகளைப் பற்றிப் பம்முகிறார்.  ஒன்றும் செய்ய முடியவில்லை.

பேச்சுக்களின் இடையில், ஆளுநர் ஒரு சிறந்த மனிதர். புரிந்துணர்வில் தவறுதான் என்று அலம்புகிறார்.

இப்படித்தான் அரச நிகழ்ச்சி நிரலிற்கு ஏற்ப, செயற்படாதவர்களை இலங்கையில் யாரும் மதிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் ஒன்றே மாறாதது. அரசு பங்கர் வெட்டிப் பதுங்கிய காலத்தையும் மறப்பதற்கில்லை. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெரியார் said:

வடக்கில் இராணுவத்தை சிறிதும் அசைக்க முடியவில்லை வடக்கு முதல்வரால்.

அதுபோலத்தான் கிழக்கிலும்.

ஒரு மயிரும் புடுங்க முடியாது.

இப்போது விளங்குதா ...கிடைத்ததை வைத்துகொண்டு திருப்தி அடையமுடியாது என்று...? tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இப்போது விளங்குதா ...கிடைத்ததை வைத்துகொண்டு திருப்தி அடையமுடியாது என்று...? tw_blush:

எங்களால் முடியும்.....கண்ணை மூடிக்கொண்டு ஆமா போட்டுக்கொண்டிருப்போம்....

14 minutes ago, nedukkalapoovan said:

வேலையில்லாத நிலையை தோற்று வித்ததும் இவர்களே... 

மற்றைய மாகாணங்களில் வாழும் மக்களிலும் வேலையில்லாதோர்  இருக்கின்றனர்.  கிழக்கில் மட்டுமல்ல.

வேலையில்லாதவர்களுக்கான யுத்தம் என்றால் என்ன?  

மத்திய அரசிடம் கோரிக்கை, ஆர்ப்பாட்டம் என்று நீளும்.  இதற்கு ஆயுதம்  தேவையில்லை.

சரணடைந்த புலிக்கூட்டத்திற்கே வேலையில்லை.

என்ன செய்ய முடியும்  அவர்களால்?

பேசாமல், இராணுவத்தில் சேர்ந்து விட்டார்கள், நல்ல சம்பளத்துடன்.

Edited by பெரியார்
ADDING

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அஷ்ரப் கூட்டாளிகளிடமும்.... ஹக்கீமிடமும் காசைக் கொடுத்தால்.. பல்வேறு இலாக்காக்கங்களில்.. ஓ எல் படிக்காமலே வேலை எடுக்கலாம். என்ன வேலைக்கு சில இலச்சங்கள் ரகசியமாக கையூட்டு அளிக்கப்படனும். இதுக்காக எல்லாம்.. ஆர்ப்பாட்டம்.. புரட்சி செய்து களைக்கத் தேவையில்லை. 

புலிகளாவது சர்வதேசம் சொல்லிச் சரணடைந்தார்கள். நானாக்கள் எதுவுமே செய்யாமல்.. சொல்லாமல்.. தேர்தலுக்கு தேர்தல் சரணாகதி அடைகிறார்கள்... இலவசமாக தமிழர்களையும் அவர்களின் தியாகங்களையும் காட்டிக்கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.. நல்ல பெயர் எடுக்கினமாம்.. சிங்களவனிடம்.

இப்ப புரட்சி செய்யப் போகினமாம்.. இல்லை இல்லை.. யுத்தம் செய்யப் போகினமாம்.

மீண்டும் ஜஸ்ட்.. கிறீஸ் பூதம் கிளம்பினா தெரியும்...  இன்னொரு சரணாகதிக்கு நானா ரெடியாகிடுவார். இவர்களை நம்பி.. காகம் கூட.. புரட்சி செய்ய கூட.. வராது. இதில இன்னொரு யுத்தம் செய்யப் போகினாம். தமிழர்கள் செய்த யுத்தத்தில் காட்டிக்கொடுத்த அனுபவ அடிப்படையிலாக இருக்கலாம்.  tw_blush:

Edited by nedukkalapoovan

2 minutes ago, nedukkalapoovan said:

 

புலிகளாவது சர்வதேசம் சொல்லிச் சரணடைந்தார்கள். நானாக்கள் எதுவுமே செய்யாமல்.. சொல்லாமல்.. தேர்தலுக்கு தேர்தல் சரணாகதி அடைகிறார்கள்... இலவசமாக தமிழர்களையும் அவர்களின் தியாகங்களையும் காட்டிக்கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.. நல்ல பெயர் எடுக்கினமாம்.. சிங்களவனிடம்.

 

இராணுவம் அடித்த அடியில், வேறு வழியில்லாமல் புலிக்கூட்டம் சரணடைந்தது.

தேர்தலில் சரணாகதி அடைவது, தமிழ், முஸ்லிம், சிங்களவன் என்ற பாகுபாடு கிடையாது.  

15 minutes ago, nedukkalapoovan said:

ஏன் அஷ்ரப் கூட்டாளிகளிடமும்.... ஹக்கீமிடமும் காசைக் கொடுத்தால்.. பல்வேறு இலாக்காக்கங்களில்.. ஓ எல் படிக்காமலே வேலை எடுக்கலாம். என்ன வேலைக்கு சில இலச்சங்கள் ரகசியமாக கையூட்டு அளிக்கப்படனும். இதுக்காக எல்லாம்.. ஆர்ப்பாட்டம்.. புரட்சி செய்து களைக்கத் தேவையில்லை. 

 

சிறி லங்காவில் ஆகக் குறைந்தது O/L ஆவது வேண்டும் அரச தொழிலுக்கு.

இப்போது, A/L என்ன, பட்டதாரிக்கே கஷ்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெரியார் said:

இராணுவம் அடித்த அடியில், வேறு வழியில்லாமல் புலிக்கூட்டம் சரணடைந்தது.

தேர்தலில் சரணாகதி அடைவது, தமிழ், முஸ்லிம், சிங்களவன் என்ற பாகுபாடு கிடையாது.  

சொறீலங்கா.. இராணுவம் அடிக்கவில்லை..

ரஷ்சியாகாரன் மேலால அடிச்சான்.. பாகிஸ்தானி மல்ரி பரலால் அடிச்சான்.. இந்தியன் ரடார் இயக்கினான்.. அமெரிக்கன் கடலில் காவல் நின்றான்... இவர்கள் தான் அடிச்சது. சிங்களவன் கூடப் பின்னால வந்தது தான். 

20081217_EP03.jpg

 

Defence Advisors/Attaches of 7 countries visit Sri Lankan SF HQ in Vanni [Photo: Sri Lankan Defence Ministry]

USA, UK, Japan, India, Pakistan, Bangladesh and Maldives ( 7 இல் 3 நாடுகள் முஸ்லீம் நாடுகள்)   18 December 2008,

20081217_EP01.jpg

20081217_EP04.jpg

இது வன்னிக்களத்தில் சொறீலங்கா இராணுவம் அடிவாங்கி ஓடும் கட்டத்தில் நின்ற போது நிகழ்த்தப்பட்ட நிகழ்வு.

சிங்களவனே சொல்லுறான்.. வெளிநாட்டு இராணுவ உதவிகள்.. ஆலோசனைகள் இல்லையே வெற்றி வெறும் கனவுன்னு. ஆனால்.. நானாக்களோ.. சிங்களவனுக்கு வக்காளத்து. நல்ல பெயர் எடுக்கினமாம். அதுதான் களுத்துறையில் மாவனல்லையில்.. வாங்கினவை. tw_blush:

படங்கள்: தமிழ்நெட் ஊடக இணையம். 

30 minutes ago, nedukkalapoovan said:

 தமிழர்கள் செய்த யுத்தத்தில் காட்டிக்கொடுத்த அனுபவ அடிப்படையிலாக இருக்கலாம்.  

தமிழர்கள் யுத்தம் செய்யவில்லை.  தமிழினத்தின் ஒரு கூட்டம் தேவையில்லாத ஒரு யுத்தத்தைச் செய்தது.

பின்னர் அழிக்கப்பட்டது.

அவர்களும் தமிழினத்தின் நலன்களுக்காக யுத்தம்  செய்யவில்லை.  தங்களின் நலன்களுக்காவே யுத்தம் செய்தார்கள்.

அவர்களைக் காட்டிக் கொடுத்ததில் முக்கிய பங்கு ஆற்றியது - அதிலிருந்து பிரிந்த கோஷ்டி.

அந்தப் பிரிந்த கோஷ்டியின் உதவியின்றி, புலிகளை வெல்ல முடியாது, இலங்கை இராணுவத்தால்.

///////சொறீலங்கா.. இராணுவம் அடிக்கவில்லை..

ரஷ்சியாகாரன் மேலால அடிச்சான்.. பாகிஸ்தானி மல்ரி பரலால் அடிச்சான்.. இந்தியன் ரடார் இயக்கினான்.. அமெரிக்கன் கடலில் காவல் நின்றான்... இவர்கள் தான் அடிச்சது. சிங்களவன் கூடப் பின்னால வந்தது தான். /////////

 

சிங்களவன் பின்னால் வந்தான் என்றால், 63,000 இராணுவம் செத்திருக்க முடியாது - இறுதி யுத்தத்தில் 

Edited by பெரியார்
ADDING

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெரியார் said:

தமிழர்கள் யுத்தம் செய்யவில்லை.  தமிழினத்தின் ஒரு கூட்டம் தேவையில்லாத ஒரு யுத்தத்தைச் செய்தது.

பின்னர் அழிக்கப்பட்டது.

அவர்களும் தமிழினத்தின் நலன்களுக்காக யுத்தம்  செய்யவில்லை.  தங்களின் நலன்களுக்காவே யுத்தம் செய்தார்கள்.

அவர்களைக் காட்டிக் கொடுத்ததில் முக்கிய பங்கு ஆற்றியது - அதிலிருந்து பிரிந்த கோஷ்டி.

அந்தப் பிரிந்த கோஷ்டியின் உதவியின்றி, புலிகளை வெல்ல முடியாது, இலங்கை இராணுவத்தால்.

***********

**********

காட்டிக்கொடுக்கிற பிழைப்புக்கு எத்தனை வகையில் சிங்களவனுக்கு வக்காளத்து வாங்க வேண்டி இருக்கு. கருணா பிளவை வளர்த்தது.. கிழக்கில் சில முஸ்லீம் மதவெறி.. காட்டிக்கொடுப்பு அரசியல்வாதிகள். 

நாட்டு நடப்பு தெரியல்லை என்றால் அடக்கி வாசிக்கனும். ஓவர் சிங்கள விசுவாசம் உடம்புக்கு ஆகாது என்பதை மாவனல்லை.. களுத்துறை சம்பவங்களும்.. சொல்லாமல் கொள்ளாமல்.. அல்காவிடம் அனுப்பப்பட்ட அஷ்ரப்பின் நிகழ்வுகளும் சொல்லும். tw_blush:

Edited by நியானி
தணிக்கை

Just now, nedukkalapoovan said:

 

காட்டிக்கொடுக்கிற பிழைப்புக்கு எத்தனை வகை. கருணா பிளவை வளர்த்தது.. கிழக்கில் சில முஸ்லீம் மதவெறி.. காட்டிக்கொடுப்பு அரசியல்வாதிகள். /////

சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடின்றி, அட்டூழியம் செய்யும் ஒரு கும்பலுக்கு எதிராக மக்கள் திரண்டு, இலங்கை இராணுவத்திற்கு உதவி செய்வது, முறையிடுவது, காட்டிக் கொடுப்பது தப்பல்ல..

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெரியார் said:

சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடின்றி, அட்டூழியம் செய்யும் ஒரு கும்பலுக்கு எதிராக மக்கள் திரண்டு, இலங்கை இராணுவத்திற்கு உதவி செய்வது, முறையிடுவது, காட்டிக் கொடுப்பது தப்பல்ல..

ஓ.. அப்படிங்களா... தமிழ் மக்களை 1948 இல் இருந்து கொன்று கொண்டிருக்கும்.. சிங்களவனையும்.. கூட இருந்து தமிழ் மக்களை காட்டிக்கொடுத்து அழித்துக் கொண்டிருக்கும் முஸ்லீம் கும்பல்களையும் தமிழ் ஒட்டுக்குழுக்களையும்.. அழித்து அவர்களின் அட்டூழியங்கள் எல்லை மீறாமல் 35 ஆண்டுகள் தமிழ் மக்களையும் மண்ணையும்.. காத்ததும் தப்பல்ல. எனியும் இவர்களின் அட்டூழியங்கள் தொடர்ந்தால்.. மீண்டும்.. காவல் தெய்வங்கள் தமிழர்களைக் காக்க உருவாகலாம். tw_blush:

 

அடிப்படை மனித நாகரிகமற்ற சிந்தனை உள்ளவர்களோடு.. அநாவசிய கருத்துப் பதிவை மேற்கொள்வதில் பயனில்லை. மனித சுதந்திரம்.. என்பதன் பொருள் அறியாத மத வெறியர்களோடு.. கருத்தாடுவது நேர விரயம்.  tw_blush:

32 minutes ago, nedukkalapoovan said:

ஓ.. அப்படிங்களா... தமிழ் மக்களை 1948 இல் இருந்து கொன்று கொண்டிருக்கும்.. சிங்களவனையும்.. கூட இருந்து தமிழ் மக்களை காட்டிக்கொடுத்து அழித்துக் கொண்டிருக்கும் முஸ்லீம் கும்பல்களையும் தமிழ் ஒட்டுக்குழுக்களையும்.. ...../////

 

1948 இலோ அல்லது அதன் பிற்பாடிலோ,  யாரும் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை.

30 வருட காலத்தில் ஒரு கும்பல், போராட்டம் என்ற நாமம் தரித்து, கொலை, கொள்ளை, கப்பம் போன்ற இன்னோரன்ன  மாபாதகச் செய்தவைகளை இலங்கை இராணுவத்திடம் முறையிடுவது தப்பல்ல.

இந்த முறையீடு, காட்டிக் கொடுப்பு எல்லாம் இன, மத பேதமின்றி எல்லாரும் செய்தார்கள்.  அது காலத்தின் கட்டாயம்.

39 minutes ago, nedukkalapoovan said:

 

 

அடிப்படை மனித நாகரிகமற்ற சிந்தனை உள்ளவர்களோடு.. அநாவசிய கருத்துப் பதிவை மேற்கொள்வதில் பயனில்லை. மனித சுதந்திரம்.. என்பதன் பொருள் அறியாத மத வெறியர்களோடு.. கருத்தாடுவது நேர விரயம்.  tw_blush:

எழுத்தே அழுகல் நடை.  

கூடவே பொய்யும் புரட்டும்.

மனித நாகரிகம்,  மனித சுதந்திரம் பற்றி பாடம் எடுக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

1948 இல் இருந்து இலங்கைத் தீவில்.. தமிழினத்தை அழித்துக் கொண்டிருக்கும் அனைத்து பேரினவாத.. மதவாதப்...பயங்கரவாத சக்திகளும் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.

சிங்கள மனித இனப்படுகொலை இராணுவத்துக்கு முண்டு கொடுத்த முஸ்லீம் மத வெறி காட்டிக்கொடுப்புப் பயங்கரவாதமும்.. சிங்கள அரச பயங்கரவாதமும்.. ஒட்டுக்குழு பயங்கரவாதங்களும் சரியாகக் கையாளப்பட்டு.. அழிக்கப்பட்டிருந்தால்.. இன்று தமிழ் மக்கள் ஒரு இனப்படுகொலையை சந்தித்திருக்க வேண்டி வந்திராது. தமிழ் மக்களின் காவல் தெய்வங்கள் தவறுவிட்டது இந்த இடத்தில் தான். 

இந்த 3 பயங்கரவாதங்களும் இன்றும் தப்பிப் பிழைத்திருப்பது தான் இலங்கைத் தீவிற்கும் மனித குலத்திற்கும் ஆபத்தானதாகும்.

இவை அழிக்கப்படனும்.. மாறாக இவற்றைக் காப்பாற்றி உலகம் அதில் தனது சுயநலத்தைக் காக்க எண்ணினால்.. அதனால் பாதிக்கப்படப் போவது தமிழர்கள் மட்டுமல்ல.. மொத்த மனித குலமுமாகும். 

இதனை மனித நாகரிகத்தையும் சுதந்திரத்தையும் விரும்பும் மக்கள் உணர்வது அவசியமாகும்.

சிங்கள.. முஸ்லீம்.. தமிழ் ஒட்டுக்குழுப் பயங்கரவாதிகளிடம் மனிதமும்.. மானுட சுதந்திரமும் மண்டியிடுவது.. நீதி மாண்டு போவதற்கு உலகம் இடமளிக்கக் கூடாது. தமிழ் மக்கள் அதற்கு தயாராக இல்லை என்பதையும் உலகிற்கு சொல்ல வேண்டும். 

இதுவே இன்றைய தேவை. இவர்கள் சிங்களக் கடற்படையை பேசுவார்கள்.. பின் அவர்களுக்கு கழுவுவார்கள்.. தமக்கு எது வசதியோ.. பாதுகாப்போ அதைச் செய்வார்கள். ஆனால்.. அதுவல்ல.. இந்தப் பூமிப் பந்தில் மனிதர்கள் சுதந்திரமாகவும்.. தமது அரசியல் தலைவிதியை தாமே தம் நிலத்தில் நிர்ணயித்து வாழ்வதற்கு அவசியம்.

இது இத்தலைப்பிற்கான பொதுக் கருத்து.

உலகமே போர்க்குற்ற விசாரணையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ள.. சிங்கள அரச இராணுவப் பயங்கரவாதக் காட்டுமிராண்டிகளுக்கு முண்டு கொடுப்பவர்கள்... இதனைக் குவாட் செய்வதை தவிர்க்கவும். இது அவர்களுக்கு ஒரு போதும் புரியாத மொழி என்பது எமக்குத் தெரியும். tw_blush:

Edited by nedukkalapoovan

36 minutes ago, nedukkalapoovan said:

 

உலகமே போர்க்குற்ற விசாரணையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ள.. சிங்கள அரச இராணுவப் பயங்கரவாதக் காட்டுமிராண்டிகளுக்கு முண்டு கொடுப்பவர்கள்... இதனைக் குவாட் செய்வதை தவிர்க்கவும். இது அவர்களுக்கு ஒரு போதும் புரியாத மொழி என்பது எமக்குத் தெரியும். tw_blush:


 

போர்க்குற்ற விசாரணைக்கு உறுதுணையாக, இன்றைய தமிழ்த் தலைமை இல்லை.  

புலிக் கூட்டத்திற்கு தெரிந்த மொழியில், அரசு பதில் அளித்திருக்கிறது என்று அவர்கள் கருதுகிறார்கள் போலும்.

 

 

///1948 இல் இருந்து இலங்கைத் தீவில்.. தமிழினத்தை அழித்துக் கொண்டிருக்கும் அனைத்து பேரினவாத.. மதவாதப்...பயங்கரவாத சக்திகளும் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். /////

 

அதென்ன இலங்கைத் தீவு?

சொறி லங்கா என்று சொல்ல மனம் வரவில்லையா?

Edited by பெரியார்
add

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தலைமை.... என்பது சம் சும் கும்பல்...என்பதாக.. சில சிங்கள அரச இராணுவப் பயங்கரவாதிகளுக்கு முண்டு கொடுப்பவர்கள் என்று  சிங்கள அரச..  முஸ்லீம் மதவெறி.. தமிழ் ஒட்டுக்குழுப் பயங்கரவாதிகளுக்கு முண்டு கொடுப்பவர்கள்.. நினைக்கிறார்கள் போல.

சம் சும் கும்பல் சிங்களவனிடம் சோர அரசியல் செய்து.. பதவி வாங்க பேசுவது ஒன்று.. அதையே நாட்டுக்கு வெளியில் வந்து பேசுவது இன்னொன்று என்று காலம் கழிச்சிட்டுக் கிடக்குது.

ஆனாலும் போர்க்குற்ற விசாரணை பற்றி.. ஈழத்தில்.. வடக்கு மாகாண சபையும்.. தமிழகத்தில் தமிழ்நாட்டு அரசும் தீர்மானங்களைப் போட்டு.. ஐநா போர்க்குற்றப் பரிந்துரைகளை பலப்படுத்தி.. சிங்கள அரச இராணுவப் பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்தித் தண்டிக்க.. முயன்று கொண்டு இருப்பது சில காலக் குருட்டுத்தனங்களுக்கு தெரிய வராது. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு கண்கொள்ளா காட்சி ....மருதமுனை நானாமார்கள் வெள்ளிகிழமைகளில் கெல்மட் போடுவதில்லை 
ஏனென்றால் வெள்ளிக்கிழமை அடிபட்டால் அல்லாட காவல் இருக்குமோ என்னவோ ....
ஒரு இருபது பொலிஸ் இருக்கும் ஊரின் உள்பாகம் போய் கெல்மட் இல்லாமல் வந்த போன அனைவரையும் அள்ளிக்கொண்டு வந்து 
(ஒரு 100 பேர் இருக்கும்) பிரதான வீதியில் வைத்து "தடு கொல" என்று சொல்லப்படும் தண்டப்பத்திரம் விநியோகிக்கினம் ...
வீதியே திருவிழா போல இருக்கு ...கிழக்கு மாகாண முதலமைச்சரின் மண்டை மதப்பிட்க்கு நன்றி சொல்லுங்கோ ... 

16 minutes ago, nedukkalapoovan said:

 

போர்க்குற்ற விசாரணை பற்றி.. ஈழத்தில்.. வடக்கு மாகாண சபையும்.. தமிழகத்தில் தமிழ்நாட்டு அரசும் தீர்மானங்களைப் போட்டு.. ஐநா போர்க்குற்றப் பரிந்துரைகளை பலப்படுத்தி.. சிங்கள அரச இராணுவப் பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்தித் தண்டிக்க.. முயன்று கொண்டு இருப்பது சில காலக் குருட்டுத்தனங்களுக்கு தெரிய வராது. tw_blush:

 

வட மாகாணத்தில் எடுக்கப்படும் ஒரு தலைப் பட்ச  தீர்மானங்கள், கிழக்கைத் தவிர, மற்றைய மாகாணங்களில் எந்தவிதமான செல்வாக்கும் செலுத்தாது.  யாரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை.

தமிழ் நாட்டில் யார் தீர்மானம் கொண்டு வந்தாலும், மத்திய அரசின் ஆதரவு இருக்க  வேண்டும்.  மத்திய அரசில், அவையும் செல்வாக்குச் செலுத்துவதில்லை.

இலங்கையின் தமிழ்த் தலைமையும், இலங்கை அரசோடுதான் இருக்கிறது.    

 

 

8 minutes ago, அக்னியஷ்த்ரா said:


ஒரு இருபது பொலிஸ் இருக்கும் ஊரின் உள்பாகம் போய் கெல்மட் இல்லாமல் வந்த போன அனைவரையும் அள்ளிக்கொண்டு வந்து 
(ஒரு 100 பேர் இருக்கும்) பிரதான வீதியில் வைத்து "தடு கொல" என்று சொல்லப்படும் தண்டப்பத்திரம் விநியோகிக்கினம் ...
 

 

கிழக்கின் வீதிப் போக்குவரத்து பொலிசார் தன் கடமையைத் திறம்பட செய்கிறார்கள் போல.  

Edited by பெரியார்
add

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.