Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருவருக்கும் வசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்: விக்னேஸ்வரனுக்கு ஜெயலலிதா பதில் கடிதம்

Featured Replies

இருவருக்கும் வசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்: விக்னேஸ்வரனுக்கு ஜெயலலிதா பதில் கடிதம்

இருவருக்கும் வசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம்: விக்னேஸ்வரனுக்கு  ஜெயலலிதா பதில் கடிதம்:-

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை வடக்கு - கிழக்கு மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகள் இலங்கைத் தமிழ் மக்களின் பாராட்டுதல்களைப் பெற்றிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து  கடிதம் ஒன்று  எழுதி இருந்தார். 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்து சி.வி. விக்னேஸ்வரன் எழுதிய கடிதத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்ததை சுட்டிக்காட்டியிருக்கும் விக்னேஸ்வரன், தமது நாட்டின் தமிழ் பேசும் மக்களின் வருங்காலம் பற்றியும், உரிமைகள் பற்றியும் ஜெயலலிதா வெகுவாக சிந்தித்து, செயலாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வாழும் தமது மக்களின் குறைகளைத் தீர்க்க எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டுவதாகவும், ஜெயலலிதாவைச் சந்தித்து தமது நாடுகளின் பரஸ்பர உரிமைகள், தேவைகள் குறித்து ஆராய ஆவலாக உள்ளதாகவும்,  போரினால் பாதிக்கப்பட்ட தங்களது பெண்களுக்கான நலத்திட்டங்கள் குறித்தும் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆராய விரும்புவதாகவும் விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், விக்னேஸ்வரனின் இந்தக் கடிதத்திற்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்து பதில் எழுதியுள்ளார்.

இலங்கைத் தமிழர் நலன் காக்க அவர்கள் உரிய நீதியைப் பெற தன்னால் இயன்ற நடவடிக்கைகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் தான் எடுத்துள்ளதாகவும் இந்திய அரசின் மூலம் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் ஜெயலலிதா தனது கடிதத்தில் தெரிவித்துள்ள ஜெயலலிதா, இருவருக்கும் வசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம் என்றும் ஜெயலலிதா தன் கடிதத்தில் கூறியிருக்கிறார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132598/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சந்தியுங்கோ, சந்தியுங்கோ... ஆனா இ .வி.கே.எஸ் இளங்கோவனுக்கு தெரியாம சந்தியுங்கோ. அந்தாள் நாக்கு கூசாம கதைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா மற்றும்  சீ வீ அவர்களுக்கிடையிலான சந்திப்பு நிச்சயம் ஈழத் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு எந்த முடிவையும் பெற்றுத்தராது.

2 hours ago, Nathamuni said:

சந்தியுங்கோ, சந்தியுங்கோ... ஆனா இ .வி.கே.எஸ் இளங்கோவனுக்கு தெரியாம சந்தியுங்கோ. அந்தாள் நாக்கு கூசாம கதைக்கும்.

அதுதான் நாக்கைப் பிடுகுகின்ற அளவிற்கு நாறிப் போயுள்ளார் tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:

இலங்கைத் தமிழர் நலன் காக்க அவர்கள் உரிய நீதியைப் பெற தன்னால் இயன்ற நடவடிக்கைகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் தான் எடுத்துள்ளதாகவும் இந்திய அரசின் மூலம் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் ஜெயலலிதா தனது கடிதத்தில் தெரிவித்துள்ள ஜெயலலிதா, இருவருக்கும் வசதியான ஒரு தினத்தில் சந்திக்கலாம் என்றும் ஜெயலலிதா தன் கடிதத்தில் கூறியிருக்கிறார்.

அம்மா மூலமாய் ஏதும் நல்லது நடந்தால் சந்தோசம்.....ஆனால்  சந்தர்ப்பங்கள் இருந்தாலும் மற்றவங்கள் நடக்க விடமாட்டாங்கள் எண்டது நிச்சயம்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

அம்மா மூலமாய் ஏதும் நல்லது நடந்தால் சந்தோசம்.....ஆனால்  சந்தர்ப்பங்கள் இருந்தாலும் மற்றவங்கள் நடக்க விடமாட்டாங்கள் எண்டது நிச்சயம்

சோ... சுயநினைவு இல்லாமல் இருப்பதால், 
சந்தர்ப்பங்கள் அதிகம் என்றே நினைப்போம்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

அம்மா மூலமாய் ஏதும் நல்லது நடந்தால் சந்தோசம்.....ஆனால்  சந்தர்ப்பங்கள் இருந்தாலும் மற்றவங்கள் நடக்க விடமாட்டாங்கள் எண்டது நிச்சயம்

இது தான் உன்மை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அம்மா மூலமாய் ஏதும் நல்லது நடந்தால் சந்தோசம்.....ஆனால்  சந்தர்ப்பங்கள் இருந்தாலும் மற்றவங்கள் நடக்க விடமாட்டாங்கள் எண்டது நிச்சயம்

முதலில 7 பேரையும் விடுதலை செய்யட்டும். பிறகு விக்கியர் போலாம். :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.