Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழியில் திடீரென துலங்கும் மர்மம் அச்சத்தில் பிரதேச மக்கள்...

Featured Replies

விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழியில் திடீரென துலங்கும் மர்மம் அச்சத்தில் பிரதேச மக்கள்...

0
விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழியில் திடீரென துலங்கும்  மர்மம் அச்சத்தில் பிரதேச மக்கள்...

 

வட்டக்கச்சி  இராமநாதபுரம்  பொலிஸ்  நிலையத்திற்கு பின்புறமாக  உள்ள விடுதலைபுலிகளின்  நிலக்கீழ்  பதுங்கு  குழி அமைந்துள்ள இடத்தில்   வழமைக்கு மாறான  செயற்பாடுகள்  நடை  பெற்று  வருகின்றன  என பிரதேச பொது மக்களால் தகவல் தொிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ( 31) இரவு   இனந்தெரியாத  நபர்களால்   குறித்த  பதுங்கு  குழி அமைந்துள்ள காணியில்  இரண்டு  சிறிய   குழிகள் தோண்டப்பட்டு  தேடுதல் நடவடிக்கை  ஒன்று  நடத்தப்பட்டுள்ளது  குறித்த  காணியில்  இன்று  காலை  தொடக்கம்  571 படைப்பிரிவு  இராணுவத்தினர்  சிலர்  கண்காணிப்பு  நடவடிக்கைகளுக்காக  பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்  எனவும் பிரதேச  மக்கள்  தொிவித்துள்ளனா்
 
யுத்தம்   முடிவடைந்த  பின்னர்  பதுங்கு  குழி  அமைந்துள்ள  காணி  இராணுவத்தினரின்  சிறிய  காவலரண்  ஒன்று  அமைக்கப்பட்டு காவலில்  ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்  எனினும்  குறித்த  காவலரண்  ஒருவருடத்திற்கு  முன்னர்  அகற்றப்பட்டுள்ளது


இந்த நிலையில் குறித்த  பகுதிக்குள்  என்றுமே  வந்திராத  பயங்கரவாத  தடுப்பு  பிரிவினர்  மற்றும்  பொலீசார்  அடங்கிய  குழுவினர்  கடந்த   29.05.2016  அன்று பகல்  வேளை மூன்று  வாகனங்களில்  வந்து  இரண்டு  மணிநேர  தேடுதல் நடவடிக்கை  ஒன்றினை  மேற்கொண்டிருந்ததாகவும்  அதன் பின்பு  நேற்றயதினம்  இனந்தெரியாதவர்களால்  இரவு  வேளையில்  குழிகள்  தோண்டப்பட்டு  தேடுதல்  நடத்தப்பட்டுள்ளமை  மீண்டும்  ஒரு  அச்ச  உணர்வை  தோற்றுவித்திருப்பதாக  அக்  கிராம  மக்கள்  தெரிவிக்கின்றனர்  


இருப்பினும்  குறித்த  சம்பவங்கள் தொடர்பில் பொலீஸாரிடமிருந்து  முழுமையான   தகவல்  எதனையும்  பெற்றுக்கொள்ள  முடியவில்லை

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132742/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மீண்டும் பிறப்பு

அழிப்பு..

என ஒரு கதை வரப்போகுது போல....

இத்துடன் புலம் பெயர் மக்களது உதவிகளுக்கும் ஆப்பு...

சிங்களவன்

ஆட்சி மாறினாலும்

ஆள் மாறினாலும்

கட்சி மாறினாலும்

தெளிவாக இருக்கின்றான்

வேலை செய்கின்றான்..

எதிரியானாலும் சொல்லாமல் இருக்கமுடியல..

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த அமுக்கின மாதிரி ஏதாவது அமுக்கலாமா என்று அலைந்து திரிகிறார்கள் போல.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த மேல்த் தட்டுவரைக்கும் தான் சென்றவர்.
மைத்திரி இரண்டாம் தட்டை  இப்போது தான் திறந்து பார்க்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

நகை நட்டு புதைஞ்சிருக்கோ எண்டு பாக்கினம் போல?

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

நகை நட்டு புதைஞ்சிருக்கோ எண்டு பாக்கினம் போல?

எனக்கு இதெல்லாம் தொடரான திருவிளையாடல்கள் போலத்தான் தெரியுது

வெள்ளிக்கிழமைக்குள் ஒரு செய்தி வரலாம்.....

 

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி கைப்பற்றப்பட்டமை தொடர்பில் 2 பிள்ளைகளின் தந்தை கைது

 


 
 

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி கைப்பற்றப்பட்டமை தொடர்பில் 2 பிள்ளைகளின் தந்தை கைது

அண்மையில் சாவகச்சேரி பகுதியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் இந்த நபர் நேற்று (30) மாலை கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். சாவகச்சேரியில் அண்மையில் தற்கொலை அங்கி உட்பட பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சாவகச்சேரி ஆயுதங்கள் குறித்து விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சட்ட மாஅதிபர் ஆலோசனைக்கமைய சந்தேகநபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

http://newsfirst.lk/tamil/2016/05/சாவகச்சேரியில்-தற்கொலை-அ/

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்குவதற்குத் திட்டமிடுவதாகக் குற்றம் சாட்டி சமூகத் தொண்டு நிறுவனப் பணியாளர் ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சங்கரலிங்கம் சசிகரன் (வயது-30) என்னும் குடும்பஸ்தரே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் 2ம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு, சின்ன ஊறணியில் வசிக்கும் சங்கரலிங்கம் சசிகரன் என்னும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாராகிய குடும்பஸ்தர், கிளிநொச்சி பாரதிபுரத்தில் தனது தாயாரது வீட்டில் தங்கி நின்று சமூக பொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

நேற்றைய தினம் 30ம் திகதி அவரது வேலைத்தளத்திற்குச் சென்ற பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேற்படி நபரை தமது கிளிநொச்சி பயங்கரவாதப் பிரிவு அலுவலகத்திற்குவிசாரணைக்கு வருமாறு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்குவதற்கு முயற்சித்ததாகக் குற்றம்சாட்டி அவரை நேற்று மாலையே கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு 2ம் மாடிக்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்துள்ளனர்.

தனது கணவர், கிளிநொச்சியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகள், பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான கல்வி அபிவிருத்தித் திட்டங்களையும் அவர் பணிபுரியும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தினூடாக மேற்கொண்டு வந்ததாகவும்,

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் குறிப்பிடுவதுபோல் தனது கணவர் அப்படியான செயற்பாடுகள் எதிலும் ஈடுபடவில்லை எனவும் தனது கணவன் மீது பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவியால் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilwin.com/crime/01/106295

 

 

 

Edited by விசுகு

இது செப்டம்பர் மாத ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரில் தம்மை தப்புவிப்பதற்கு சிங்கள இனவெறி அரசால் திட்டமிட்டு நடாத்தப்படும் கைது நாடகங்களாக தெரிகிறது.

இதில் நடிப்பவர்கள் சிலர் சிங்கள இனவெறி அரசின் வழிநடத்தலுக்கு ஏற்ப நடித்து வருவதாக தெரிகிறது.

முற்று முழுதான நடுநிலை நாடுகளின் நீதிபதிகளைக் கொண்ட சர்வதேச  விசாரணை ஒன்றின் மூலமே இந்த உண்மையான சதித்திட்டங்களை கண்டுபிடிக்க / வெளிக் கொண்டுவர முடியும். அதன் மூலமே உண்மையான ஜனநாயகத்தையும் நிலைநாட்ட முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, போல் said:

இது செப்டம்பர் மாத ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரில் தம்மை தப்புவிப்பதற்கு சிங்கள இனவெறி அரசால் திட்டமிட்டு நடாத்தப்படும் கைது நாடகங்களாக தெரிகிறது.

இதில் நடிப்பவர்கள் சிலர் சிங்கள இனவெறி அரசின் வழிநடத்தலுக்கு ஏற்ப நடித்து வருவதாக தெரிகிறது.

முற்று முழுதான நடுநிலை நாடுகளின் நீதிபதிகளைக் கொண்ட சர்வதேச  விசாரணை ஒன்றின் மூலமே இந்த உண்மையான சதித்திட்டங்களை கண்டுபிடிக்க / வெளிக் கொண்டுவர முடியும். அதன் மூலமே உண்மையான ஜனநாயகத்தையும் நிலைநாட்ட முடியும்.

இதெல்லாம் நடக்கிற காரியமா ? இதெல்லாம் நடக்க பன்னாமல் சிரைக்க சம் சும் கூட்டம் இருக்கு கவலையேன் சிங்களவனுக்கு .

2 hours ago, பெருமாள் said:

இதெல்லாம் நடக்கிற காரியமா ? இதெல்லாம் நடக்க பன்னாமல் சிரைக்க சம் சும் கூட்டம் இருக்கு கவலையேன் சிங்களவனுக்கு .

நடக்குமா இல்லையா என்பதற்கு அப்பால், நாம் எமக்கு எது தேவை என்பதை தெளிவாக சொல்லப் பழக வேண்டும். இப்படி தெளிவாக சொல்வது பலருக்கு கசப்பாக இருக்கலாம்! 

Edited by போல்
எழுத்துப் பிழை திருத்தம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.