Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுவையான உருளைக்கிழங்கு ரோல் :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13331099_579827812195632_592177743023643

தேவையான பொருட்கள்

கோதுமை – 1 கப்
மெல்லிய ரவை – 1/2 கப்
எண்ணெய் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி

மசாலா செய்வதற்கு

உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 3 மேசைக்கரண்டி
மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) – 2 தேக்கரண்டி
இஞ்சி, பச்சைமிளகாய் விழுது – 2 தேக்கரண்டி
உலர்ந்த மாங்காய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி – 1/2 தேக்கரண்டி
கறிமசாலாத்தூள் – 3/4 தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு
உப்பு – தேவையான அளவு

மைதா பசை செய்வதற்கு

தண்ணீர் – 2 பங்கு
மைதா – 3 பங்கு

செய்முறை

கோதுமை, ரவை, எண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொண்டு ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
இதனுடன் வெங்காயம், மல்லித்தழை, இஞ்சி,பச்சை மிளகாய் விழுது, மாங்காய்த்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கறிமசாலாதூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும்.
இக்கலவையை எலுமிச்சை அளவு உருண்டைகளாக செய்து பிறகு நீளவாக்கில் உருட்டிக் கொள்ளவும்.
பிசைந்த சப்பாத்தி மாவிலிருந்து சிறிய உருண்டைகள் செய்து சப்பாத்தி போல இடவும்.
தேய்த்த சப்பாத்தியின் ஒரு மூலையில் மசாலா உருட்டியதை வைத்துப் பாய் போல் சுருட்டவும்.
குழல் போல் சுருட்டியதும் ஓரங்களை உள்ளே மடித்து மைதா பசை கொண்டு ஒட்டவும். பிரிந்து வராமல் எல்லா பக்கங்களையும் சரியாக ஒட்டவும்.
இதே போல மாவு முழுவதையும் செய்து கொண்டு ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.
ஒரு தடவைக்கு 4 அல்லது 5 சுருள்களை மிதமான சூட்டில் எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
மூன்று அல்லது நான்கு துண்டுகளாக வெட்டி தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.

FB

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம்  இறைச்சி , அல்லது மீன் துண்டு கள் சேர்த்தால்  இன்னும் செமமையாக இருக்கும் ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

கொஞ்சம்  இறைச்சி , அல்லது மீன் துண்டு கள் சேர்த்தால்  இன்னும் செமமையாக இருக்கும் ?

முனிவர்... இன்டைக்கு வெள்ளிக் கிழமை அதுதான் கிழங்கு றோல்...! நாளைக்கு மட்டன் றோல் போடச் சொல்லவும்....!!!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

முனிவர்... இன்டைக்கு வெள்ளிக் கிழமை அதுதான் கிழங்கு றோல்...! நாளைக்கு மட்டன் றோல் போடச் சொல்லவும்....!!!

மக்காவுல இருக்கிறதாலா வெள்ளி என்றாலே எனக்கு இறைச்சிதான் வேண்டும் கிழமை ஒரு பொருட்டே அல்ல  மனது தூய்மையாக இருந்தால் போதும் மனம் கொண்டதே மார்க்கம் 

வெள்ளி என்றால் என்ன கிழமைகளில் ஒரு நாள் தானே இதற்கு வேறு ஏதாவதை தொடர்பு படுத்த விரும்புகிறீர்களா??

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதும் சரிதான் முனிவர். நானும் சவுதியில் இருந்த பொழுது வெள்ளிதான் விஷேசமாக ஆட்டுக்கால் சூப் எல்லாம் செய்து குடிக்கிறது. ஆனால் பங் காளி  வந்தால்தான் தெரியும் வெள்ளி செவ்வாயுடன் ஏகாதசியும் கூட வரும்...! அப்ப சொல்லேலாது அதுவும் ஒரு திதிதானே என்று. கதியின்றி கட்டில் ஓரத்தில் உருளவேண்டி வரும்...!

34 minutes ago, suvy said:

இதைதான் சுத்தி சுத்தி சுப்பற்ற கொல்லைக்குள்ள எண்டு சொல்லுவதோ.:grin:

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நீங்கள் சொல்வதும் சரிதான் முனிவர். நானும் சவுதியில் இருந்த பொழுது வெள்ளிதான் விஷேசமாக ஆட்டுக்கால் சூப் எல்லாம் செய்து குடிக்கிறது. ஆனால் பங் காளி  வந்தால்தான் தெரியும் வெள்ளி செவ்வாயுடன் ஏகாதசியும் கூட வரும்...! அப்ப சொல்லேலாது அதுவும் ஒரு திதிதானே என்று. கதியின்றி கட்டில் ஓரத்தில் உருளவேண்டி வரும்...!

"ஏகாதசி" என்பதன்...உண்மையான தமிழ் அர்த்தம், என்ன சுவி.
பாட்டி, அம்மா, மனைவி... என்று, எல்லாரும் இந்த விரதத்தை பிடிப்பார்கள்.
அதன் அர்த்தத்தை... இன்றுவரை, வேறு யாரிடமும், கேட்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை...
என்பதால்... உங்களிடம் கேட்டேன். (யாழ் உரையாடு களத்தின், சிறப்பு இது)

  • கருத்துக்கள உறவுகள்

ஏகாதசி தோன்றிய புராண வரலாறு[தொகு]

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, 'முரன்' பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

இந்து சமயச் சிறப்பு நாட்கள்[தொகு]

வைகுண்ட ஏகாதசி[தொகு]

முதன்மைக் கட்டுரை: வைகுண்ட ஏகாதசி

மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படுகின்றது. இந்து சமயத்தவர்கள், சிறப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்' என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் என்னும் பதினொரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கம், இருவேளை சாப்பிடுதல், உடலுறவு என்பவற்றைத் தவிர்த்து விரதம் மேற்கொள்கின்றனர். ஏகாதசியன்று இந்து சமயத்தவர் திருமண நிகழ்வுகளையும் தவிர்க்கின்றனர்.

இராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கித் தங்கள் துன்பங்களை கூறினாராம். பகவானும் பிரம்ம தேவர்களுக்குத் தரிசனமளித்து அவர்களைக் காத்தருளினாராம் இவ்வாறு தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.

தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்த போது அமுதம் வெளிப்பட்டது என்றும் துவாதசியன்று மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்குத் திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாட்சி புரிந்தார் என்றும், அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்தப் பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

ஒரு வருடத்தில் வரும் 24 ஏகாதசிகள்:

1. உற்பத்தி (ஏகாதசி) - மார்கழி - க்ருஷ்ண (பக்‌ஷம்) - சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

2. மோட்ச - மார்கழி - சுக்ல - வைகுண்டம் கிடைக்கும்

3. ஸபலா - தை - க்ருஷ்ண - பாப நிவர்த்தி (உலும்பகன் மோட்சம்)

4. புத்ரதா - தை - சுக்ல - புத்ர பாக்கியம் கிடைக்கும் (சுகேதுமான் விரதம் இருந்து பிள்ளைகள் பெற்றான்)

5. ஷட்திலா - மாசி - க்ருஷ்ண - அன்ன தானத்திற்கு ஏற்றது

6. ஜயா - மாசி - சுக்ல - பேய்க்கும் மோட்சம் உண்டு (மால்யவான் பேயான சாபத்தில் இருந்து விடுதலை பெற்றான்)

7. விஜயா - பங்குனி - க்ருஷ்ண - ராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனிவரின் உபதேசப்படி, விரடம் இருந்த நாள்

8. ஆமலதீ - பங்குனி - சுக்ல - கோதானம் செய்ய ஏற்றது

9. பாப மோசனிகா - சித்திரை - க்ருஷ்ண - பாபங்கள் அகலும்

10. காமதா - சித்திரை - சுக்ல - நினைத்த காரியம் நடக்கும்

11. வருதிந் - வைகாசி - க்ருஷ்ண - ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் (சிவன், ப்ரம்மன் தலையை அறுத்த தோஷம் நீங்கிய நாள்)

12 மோஹினி - வைகாசி - சுக்ல - பாவம் நீங்கும்

13. அபார - ஆனி - க்ருஷ்ண - குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்

14. நிர்ஜலா (பீம) - ஆனி - சுக்ல - எல்லா ஏகாதசி பலனும் உண்டு (நீர் அருந்தக் கூடாது - பூமியில் நீர் குறைந்து இருக்கும் நாள்)

15. யோகினீ - ஆடி - க்ருஷ்ண - நோய் நீங்கும் (குபேரன் பணியாளன் ஹேமநாதன் விரதம் இருந்து குஷ்ட நோய் நீங்கிய நாள்)

16. சயிநீ - ஆடி - சுக்ல - தெய்வ சிந்தனை அதிகமாகும் - திரிவிக்கிரமனாய்த் தோன்றி, பின் பாற்கடலில் சயனித்த நாள் (பெயர்க் காரணம்)

17. சாமிகா - ஆவணி - க்ருஷ்ண - விருப்பங்கள் நிறைவேறும்

18. புத்ரஜா - ஆவணி - சுக்ல - புத்ர பாக்கியம் கிடைக்கும்

19. அஜா - புரட்டாசி - க்ருஷ்ண - இழந்ததைப் பெறலாம் - அரிச்சந்திரன் விரதம் இருந்த நாள்

20. பத்மநாபா - புரட்டாசி - சுக்ல - பஞ்சம் நீங்கும்

21. இந்திரா - ப்பசி - க்ருஷ்ண - பித்ருக்கள் நற்கதி பெறுவர்

22. பாபாங்குசா - ப்பசி - சுக்ல - கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாபங்கள் அகலும்

23. ரமா - கார்த்திகை - க்ருஷ்ண - உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்

24. ப்ரபோதின் - கார்த்திகை - சுக்ல - பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்

25 - கமலா - (சில வருடங்களில் மட்டும்) - மகாலட்சுமி அருள் கிடைக்கும்

கலண்டரிலோ பஞ்சாங்கத்திலோ நீங்கள் திதி பார்த்தால் பிரதிமை தொடக்கம் பௌர்ணமிவரை சுக்கில பட்சம் வளர்பிறை திதி  15 வரும். பின் பிரதிமை தொடக்கம் அமாவாசைவரை கிருஷ்ணபட்சம் தேய்பிறைத் திதி வரும். இவ்விதம் ஒரு மாதத்தில் 11 வது திதியாக இரண்டு ஏகாதசி திதிகள் வரும். இதைக் கணக்கில் கொண்டுதான் ஒருத்தர் இறந்தால் அவர் என்ன திதியில் இறந்தவர் என்பதைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஆண்டுத் துவசம் செய்யும் பொழுது அந்த மாதம் அந்தத் திதி வரும் நாளில் திவசம் செய்வார்கள்...!

திதிகளாவன: பிரதிமை, துதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அட்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, பூரணை  அல்லது அமவாசை...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரிலை உருளைக்கிழங்கிலை செய்த கட்லட்,பற்றீஸ்,ரோல்ஸ்  எல்லாத்துக்கும் இறைச்சி மீனிலை செய்த அயிட்டங்கள் எல்லாம் பிச்சை வாங்கோணும் கண்டியளோ.......கிழங்கிலை செய்த ரோல்சை ஒவ்வொரு கடிக்கும் நாக்கு அப்பிடியே சுண்டியிளுக்கும்... தமிழரசு ரொம்ப தாங்ஸ்பா tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

ஏகாதசி தோன்றிய புராண வரலாறு[தொகு]

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, 'முரன்' பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

-------

சில விடயங்களை... சிலர் எழுத்தில் இருந்து, அல்லது குரல் மூலமாக கேட்டும் போது...
அதன் மதிப்பே.... தனியானது.  
பகிர்விற்கு... நன்றி சுவி. :)

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஊரிலை உருளைக்கிழங்கிலை செய்த கட்லட்,பற்றீஸ்,ரோல்ஸ்  எல்லாத்துக்கும் இறைச்சி மீனிலை செய்த அயிட்டங்கள் எல்லாம் பிச்சை வாங்கோணும் கண்டியளோ.......கிழங்கிலை செய்த ரோல்சை ஒவ்வொரு கடிக்கும் நாக்கு அப்பிடியே சுண்டியிளுக்கும்... தமிழரசு ரொம்ப தாங்ஸ்பா tw_thumbsup:

ஊரிலை... அம்மாவின்  கையால் செய்த சமையலையும், essen37-001.gif
இங்கை... மனுசியின் கையால் செய்த சமையலையும்.... ஒப்பிடுவது சரியல்ல. nahrung008-001.gifnahrung002-001.gif

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, suvy said:
10 hours ago, suvy said:

நீங்கள் சொல்வதும் சரிதான் முனிவர். நானும் சவுதியில் இருந்த பொழுது வெள்ளிதான் விஷேசமாக ஆட்டுக்கால் சூப் எல்லாம் செய்து குடிக்கிறது. ஆனால் பங் காளி  வந்தால்தான் தெரியும் வெள்ளி செவ்வாயுடன் ஏகாதசியும் கூட வரும்...! அப்ப சொல்லேலாது அதுவும் ஒரு திதிதானே என்று. கதியின்றி கட்டில் ஓரத்தில் உருளவேண்டி வரும்...!

அட சுவி நான்  ஊரில் தான் இருக்கிறன்  சும்மா பம்பலுக்காக எழுதியது தான்  

நீங்கள் சொன்ன பங்காளிகளை வைத்து பிழைப்பு நடத்தி கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம்  ஆனால் என்ன சமூகத்தின் நம்பிக்கை என்ற பதத்தின் மீது நடக்கிறோம் நாமும் அவ்வழி??

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் நீங்கள் எழுதியதால்தான் பல ஞாபகங்களை மீட்டெடுக்கவும், பல கருத்துக்களை வெளிக் கொண்டுவரவும் முடிகிறது. அதற்காக உங்களுக்கு நன்றி...!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

முனிவர் நீங்கள் எழுதியதால்தான் பல ஞாபகங்களை மீட்டெடுக்கவும், பல கருத்துக்களை வெளிக் கொண்டுவரவும் முடிகிறது. அதற்காக உங்களுக்கு நன்றி...!  tw_blush:

??நன்றி ?

  • கருத்துக்கள உறவுகள்

மரவள்ளிக் கிழங்கிலும் இது செய்யலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

மரவள்ளிக் கிழங்கிலும் இது செய்யலாம்

உன்மைதான் ஊரில் இருக்கும் காலத்தில் தரமான மரவள்ளி கிழங்கு கிடைப்பதினால் மரவள்ளி கிழங்கு பற்றீஸ் செய்து சாப்பிட்டு இருக்கின்றோம் அற்புதமாக இருக்கும் அதே போன்ற கறியை ரோலுக்கும் பயன்பத்தினால் சுவையாகத்தான் இருக்கும் கொழும்பான். 

அட பாவிகளா சும்மா ஏன் மரவள்ளிக்கிழங்கை இந்த பாடு படுத்துறீங்க. வெள்ளைத்தோல் மரவள்ளி கிழங்கை அவித்து நல்ல பச்சைமிளகாய் சம்பல் + டீயுடன் பின்னேரம் 4 மணிக்கு திண்டால் அதுதான் தேவாமிர்தம்.

mk-5.jpg

1.jpg

tirupur-tea.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழரசு said:

உன்மைதான் ஊரில் இருக்கும் காலத்தில் தரமான மரவள்ளி கிழங்கு கிடைப்பதினால் மரவள்ளி கிழங்கு பற்றீஸ் செய்து சாப்பிட்டு இருக்கின்றோம் அற்புதமாக இருக்கும் அதே போன்ற கறியை ரோலுக்கும் பயன்பத்தினால் சுவையாகத்தான் இருக்கும் கொழும்பான். 

ச்..சா.....இப்ப நினைச்சாலும் வாயூறுது :)

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜீவன் சிவா said:

அட பாவிகளா சும்மா ஏன் மரவள்ளிக்கிழங்கை இந்த பாடு படுத்துறீங்க. வெள்ளைத்தோல் மரவள்ளி கிழங்கை அவித்து நல்ல பச்சைமிளகாய் சம்பல் + டீயுடன் பின்னேரம் 4 மணிக்கு திண்டால் அதுதான் தேவாமிர்தம்.

mk-5.jpg

1.jpg

tirupur-tea.jpg

மிகவும் சுவையானது. ஆனால் இஞ்சி போட்டு டீ குடிக்க கூடாது என சொல்வார்கள். காரணம் மரவள்ளியும் இஞ்சியும் சேர்ந்தால் விஷமாகி விடுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜீவன் சிவா said:

அட பாவிகளா சும்மா ஏன் மரவள்ளிக்கிழங்கை இந்த பாடு படுத்துறீங்க. வெள்ளைத்தோல் மரவள்ளி கிழங்கை அவித்து நல்ல பச்சைமிளகாய் சம்பல் + டீயுடன் பின்னேரம் 4 மணிக்கு திண்டால் அதுதான் தேவாமிர்தம்.

அவித்த மரவள்ளிக்கிழங்கு சம்பலுடன், அந்த மாதிரி இருக்கும்.
சும்மா கிடந்த வாயை.... பொச்சுக் கொட்ட வைத்து விட்டீர்கள்,  ஜீவன் சிவா.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பராய் இருக்கும் ஜீவன்...! செத்தல் மிளகாய் கட்டிச் சம்பலாய் இருந்தால் எக்ஸலன்ட்....!

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் கள்ளுத்தவரனைகளில் மரவள்ளி கிழ‌ங்கை துண்டு துண்டாக வெட்டி, தேங்காய் எண்ணயில் பொரித்து சுட சுட உப்பும், மிளகாய்த்தூளும் கலந்து விற்பார்கள் யாராவாது சாப்பிட்டுள்ளீர்களா?  உறைப்பும் சூடும் நாவில் படும்போது எப்படி இருக்கும்? 

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி நாலு விதமான உணவு வகைகளை இங்கை வந்து பாக்கலாம் என்டு வந்தால் சுவியர் சன்னியாசி ஆக்கிப்போடுவார் போல:)

28 minutes ago, colomban said:

ஊரில் கள்ளுத்தவரனைகளில் மரவள்ளி கிழ‌ங்கை துண்டு துண்டாக வெட்டி, தேங்காய் எண்ணயில் பொரித்து சுட சுட உப்பும், மிளகாய்த்தூளும் கலந்து விற்பார்கள் யாராவாது சாப்பிட்டுள்ளீர்களா?  உறைப்பும் சூடும் நாவில் படும்போது எப்படி இருக்கும்? 

கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் ஒரு கடை இருக்கு. வெட்டி, மிளகாய் தூள், உப்பு எல்லாம் கலந்து வைத்திருப்பினம். போய் கேட்டால் உங்களுக்கு முன்னாலேயே பொரித்து தருவினம் - சுவைக்கு நான் உத்தரவாதம். 

இதுக்கெல்லாம் கள்ளு தவறணைக்கு போகக் கூடாது தம்பி. ஊர்சனம் பார்த்தால் கள்ளு குடிக்க வந்ததெண்டு  கதையை கட்டி விட்டுடுவானுங்க. :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.