Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ராஜீவ் வழக்கின் சாந்தனை நான்தான் சுட்டுக் கொன்றேன்!' - சிபிஐ அதிகாரியின் பதற வைக்கும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்!

Featured Replies

'ராஜீவ் வழக்கின் சாந்தனை நான்தான் சுட்டுக் கொன்றேன்!' - சிபிஐ அதிகாரியின் பதற வைக்கும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்!

rajiv.jpg

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் அவ்வப்போது வெளியாகும் மர்மங்கள் அரசியல் களத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறன. அதில் லேட்டஸ்ட் வரவு, ' ராஜீவ் படுகொலைக்குக் காரணமான சாந்தனை நான்தான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன்' என  விசாரணை அதிகாரியாக இருந்தவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கும் ஸ்டேட்டஸ். அப்படியானால், 25 ஆண்டுகளாக சின்ன சாந்தன் என்பவர் எதற்காக சிறையில் இருக்கிறார்? என கொந்தளிக்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991ம் ஆண்டு,  மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை வழக்கில் போலீஸாரால் குற்றம் சுமத்தப்பட்ட நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் 25 ஆண்டுகளாக சிறை வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். இந்தப் படுகொலை வழக்கில், சி.பி.ஐ. அடையாளம் காட்டும் நபர்களைப் பிடித்து வரும் ட்ராக்கிங் குழுவில் இருந்த சி.பி.ஐ. ஆய்வாளர் ஜெபமணி மோகன்ராஜ், ' குண்டு சாந்தனை நான்தான் சுட்டேன்' என்று தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார்.

mohanraj.jpgஅவருடைய பதிவில், " விடுதலைப்புலி குண்டு சாந்தனை திருச்சியில் வைத்து விடியக் காலை 04.10 மணிக்கு மூன்று ஆய்வாளர்கள், 7 ரவுண்ட் சுட்டோம். நான் பயன்படுத்தியது .38 ரிவால்வர். மற்றவர்கள் பயன்படுத்தியது 9 எம்.எம். பிஸ்டல். நான் சுட்டது ஒரு ரவுண்ட் மட்டுமே. குண்டு சாந்தன் இருதயத்தைத் துளைத்துச் சென்றது என் துப்பாக்கியில் இருந்து சென்ற குண்டுதான். இது தெரிந்தவுடன் என் நண்பர்கள் என்னைத் தூக்கி வைத்துக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. இந்தக் காட்சிகள் இன்னும் எனக்கு பசுமையாக நினைவில் இருக்கிறது. இது கதை வசனம் இல்லை. ஒரு தேசபக்தன், தன்னுடைய தேசத்தின் மானம் காக்க துணிச்சலாகக் கடமை ஆற்றிய சரித்திர நிகழ்வு"  என பெருமைப்பட்டுக் கொள்கிறார் ஜெபமணி மோகன்ராஜ்.

படுகொலை நிகழ்த்தப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பலமாகியுள்ள இந்த உண்மையால் அதிர்ந்து போயிருக்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

இதுபற்றி நம்மிடம் அவர்கள் விரிவாகப் பேசினர். " ஆஸ்திரேலியாவிற்கு வேலைக்குச் செல்வதற்காகத்தான் சிறையில் உள்ள சாந்தன் தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது இந்தப் படுகொலை வழக்கில் இரும்பொறை என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவர், ' சாந்தன் எனக்குக் கடிதம் எழுதுவார். ஆனால், நேரில் சந்தித்தில்லை' என வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து, சுங்கத்துறை லிஸ்ட்டில் இருந்த வேலை தேடி வந்த சாந்தனை பலிகடாவாக்கிவிட்டார்கள்.

இந்த உண்மை, டி.வி விவாதம் ஒன்றில்தான் அம்பலமானது. காங்கிரஸ் கட்சியின்  திருச்சி வேலுசாமி, சி.பி.ஐ. தலைமை புலனாய்வு விசாரணை அதிகாரி ரகோத்தமன், சி.பி.ஐ. இன்ஸ்பெக்டராக இருந்த ஜெபமணி மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விவாதத்தில், 'ஒவ்வொருவரையும் மிக மோசமாக உடல், மன ரீதியாக சித்ரவதை செய்துதான் பொய் வாக்குமூலம் வாங்கினீர்கள். கொடூரமாக வதை செய்து வாங்கிய வாக்கு மூலத்தால்தான் அவர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள்' என காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுசாமி வாதிட்டபடி இருந்தார்.

mohanfb.jpgஅப்போது குறுக்கிட்ட ரகோத்தமன், 'அப்படியெல்லாம் நாங்கள் யாரையும் சித்ரவதை செய்யவேயில்லை. அப்படி செய்திருந்தால் கர்ப்பிணியான நளினி எப்படி நல்லபடியாக குழந்தை பெற்றெடுத்திருக்க முடியும். சித்ரவதை செய்தோம் என்பது அபாண்டாம்’ என்று மறுத்தார். ரகோத்தமனின் பேச்சை இடைமறித்த முன்னாள் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், ' ரகோத்தமன் சொல்வதெல்லாம் சும்மா. அப்படியெல்லாம் தானாக யாரும் வாக்குமூலம் கொடுத்துவிடவில்லை. எங்கள் வேலையே பிடித்து வருபவரை அடித்து நொறுக்குவதுதான். சித்ரவதை செய்வதுதான். அடிஉதை வாங்காதவர்கள் யாருமில்லை' எனப் பேச,

கொந்தளித்துப் போன ரகோத்தமன், ' ஆமாம், உங்களைப் பற்றி தெரியாதா... நீங்கதானே திருச்சியில குண்டு சாந்தனை போட்டுத் தள்ளினீங்க. சுட்டுக் கொன்றீர்கள். அது யோக்கியமா?' எனக் கத்தினார். ‘அட என்ன சார் என்னை இப்படி போட்டுக் கொடுத்துட்டீங்க’ என்று அலறினார் மோகன்ராஜ். நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தவருக்கும் எதுவும் புரியவில்லை. இப்போது ஃபேஸ்புக்கில் உண்மையை வெளிக் கொண்டு வந்திருக்கிறார் மோகன்ராஜ்" என விவரித்தவர்கள்,

“ ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி, குண்டு சாந்தன்தான். (சின்ன) சாந்தன் வெளிநாட்டுக்கு போய் வேலை தேட முறைப்படி விசா வாங்கி விமானத்தில் வந்திருந்தவர். கஸ்டம்ஸ்ல இருந்துதான் அந்த சாந்தன் என்கிற பெயரை சி.பி.ஐ கண்டுகொண்டது.  உடனே அவரைப் பிடித்து குற்றவாளியாக சேர்த்துவிட்டார்கள். பிறகு, உண்மையான குற்றவாளி குண்டு santhan.jpgசாந்தன் சிக்கிய தகவலை ரகோத்தமனுக்கு சொல்கிறார் மோகன்ராஜ். அவரோ, ' இது வெளிய தெரிஞ்சா சி.பி.ஐ.க்கு பெரிய அவமானமாகப் போய்விடும். உலகமே சிரிக்கும். சுட்டுக் கொன்றுவிடுங்கள்' என உத்தரவிட்டதாக திருச்சி வேலுச்சாமியிடம் பேசியிருக்கிறார் மோகன்ராஜ். இதுபற்றி பற்றி பத்திரிகையாளர் ஏகலைவனிடம், திருச்சி வேலுச்சாமி சொல்லவும், விவகாரம் அம்பலமாகியிருக்கிறது. ஒரு தவறும் செய்யாத சின்ன சாந்தன் 25 ஆண்டுகளாக சிறையில் இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை? முறையான நீதி விசாரணையை எம்.டி.எம்.ஏ நடத்த வேண்டும்" என வேதனைப்பட்டார்.

இதுதொடர்பாக, சி.பி.ஐ முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெபமணி மோகன்ராஜிடம் பேசினோம்.

" ஆமாம். நான்தான் சாந்தனை சுட்டுக் கொன்றேன். அவர் திருச்சியில் ஒரு அறையில் இருந்தார். புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர்தான் அவருடைய அறையைக் காட்டிக் கொடுத்தார். சந்திராசாமியிடம் கூலி வாங்கிக் கொண்டுதான் ராஜீவ்காந்தியைப் படுகொலை செய்தார்கள். சாதாரணமாக நம்மூர் போலீஸார் கைது செய்தால், பொய்யான வாக்குமூலம் தயாரிப்பார்கள் என்று சொல்லலாம். இந்த வழக்கில் சி.பி.ஐ நேரடியாகத் தலையிட்டது. அவர்கள் ஆதாரமில்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள். சிறையில் உள்ள சாந்தனும் குற்றவாளிதான்" என்றார் நிதானமாக.

' படுகொலையின் நேரடி சாட்சி ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்', 'சிவப்புக் கம்பளத்தில் ராஜீவ்காந்தியை நிற்க வைத்ததே தமிழக காவல்துறைதான்', ' பேரறிவாளன் குற்றவாளி என நான்தான் பொய்யான வாக்குமூலம் எழுதினேன்' என தொடக்கம் முதலே நீதி வழுவிய போக்கில்தான் விசாரணை நடந்தது என்பதை ஆதாரபூர்வமான ஆதாரங்கள் அம்பலப்படுத்துகின்றன. நீதித்துறையும் அரசு நிர்வாகமும் என்ன செய்யப் போகின்றன?
 
http://www.vikatan.com/news/tamilnadu/65212-rajiv-case-ex-cbi-inspector-ignites-controversy.art

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ராஜீவ் படுகொலை என்ற படம் இன்னும் பல காலத்துக்கு ஓடும் போல. விடுதலைப்புலிகளின் பெயரும் அதோடு நிலைக்கும். ஹிந்திய அமைதிப்படை ஈழத்தில் செய்த அநியாயம் பலருக்கு இப்ப ஞாபகத்தில் இல்லை. ஆனால் ராஜீவ் படுகொலை  நல்லா ஞாபகம் இருக்குது. அதில இவர் தேச பக்தனாம். அப்ப ராஜீவ் ஈழத்தில் செய்த படுகொலைக்கு.. அவரை யார் தண்டிப்பது. அதற்காக ராஜீவ் தண்டிக்கப்பட்டிருந்தால்.. அவரை தண்டித்தவர்களும்.. தேச பக்தர்கள் தானாம். ஏன்டா உங்களுக்கு மட்டும் தான் தேச பக்தி இருக்குமோ..?!tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்

புலிகள் இல்லை என்ற முடிவுக்கு வந்திட்டார் போல..

இந்தக் கொலை தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்ட பெரும் பழி என்று பலர் சொன்ன பின்னரும், இன்னும் சிலர் அரைகுறை தகவல்களையே நம்பிக் கொண்டிருகின்றனர்.

யாழ் தளத்தில் கூட பல ஆதாரங்கள் முன்னர் வரிசைப் படுத்தப்பட்டிருந்தன. தற்போது ஒன்றைக் கூடக் காணவில்லை. யார் அவற்றை அகற்றினார்களோ தெரியவில்லை.

5 minutes ago, போல் said:

போல், இதை எந்த அடிப்படையில் இதை எழுதினீர்கள் என்பதை விளக்க வேண்டும்.

7 minutes ago, இணையவன் said:

போல், இதை எந்த அடிப்படையில் இதை எழுதினீர்கள் என்பதை விளக்க வேண்டும்.

சில வருடங்களின் (4, 5 வருடங்கள் இருக்கலாம்) முன்னர் நிகழ்வும் அகழ்வும் பகுதியில் உள்ள காணொளி பகுதியில் 10 க்கு மேற்பட்ட யூ டியூப் காணொளிகளை வரிசையாக பார்த்திர்ந்தேன். 3, 4 தடவைகள் அங்கு போய் லிங்க் எடுத்துளேன். திருச்சி வேலுசாமி, ராகவன் போன்ற பலரின் தொலைக்காட்சி செவ்விகள் அவை.

மிக அண்மையில் ஒரு தேவைக்காக அங்கு சென்று தேடிய போது அவை எவற்றையும் காண முடியவில்லை. தேடலிலும் பல சொற்களை கொடுத்து தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை.

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்
On 6/15/2016 at 7:25 AM, போல் said:

இந்தக் கொலை தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்ட பெரும் பழி என்று பலர் சொன்ன பின்னரும், இன்னும் சிலர் அரைகுறை தகவல்களையே நம்பிக் கொண்டிருகின்றனர்.

யாழ் தளத்தில் கூட பல ஆதாரங்கள் முன்னர் வரிசைப் படுத்தப்பட்டிருந்தன. தற்போது ஒன்றைக் கூடக் காணவில்லை. யார் அவற்றை அகற்றினார்களோ தெரியவில்லை.

விடுதலைப் புலிகள் இவ்வாறு சொல்லியிருந்தார்கள்.

http://www.outlookindia.com/magazine/story/we-did-not-kill-rajiv-gandhi/200167

இயக்கத்தில் இருந்த ஒரு பகுதியை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு செய்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

6 minutes ago, இசைக்கலைஞன் said:

விடுதலைப் புலிகள் இவ்வாறு சொல்லியிருந்தார்கள்.

http://www.outlookindia.com/magazine/story/we-did-not-kill-rajiv-gandhi/200167

இயக்கத்தில் இருந்த ஒரு பகுதியை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு செய்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

உங்கள் இணைப்புக்கு நன்றி.

ராஜிவ் கொலைக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது மிகவும் தெளிவாக விடுதலைப் புலிகளால் சொல்லப்பட்ட செய்தி. கனவில் கூட அப்படி ஒரு கொலையை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எமக்கு தோன்றியிருக்க முடியாது என்பது விடுதலைப் புலிகளால் சொல்லப்பட்ட உறுதியான செய்தி.

இதில் "ஒரு பகுதியை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு செய்துவிட்டார்கள்" என்பதுவும் முழுத் தவறு.  அந்தக் காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்த எவரும் இதில் சம்பந்தப்படவில்லை என்பதையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை தெளிவாக கூறியிருந்தது. தேவை என்றால் விசாரணைகளுக்கு எங்கள் முழு ஒத்துழைப்பும் இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.

இங்கு பலரது "ஈகோ" தான் உண்மையான பிரச்சினை. நான் விடுதலைப் புலிகள் இயக்கம் தான் செய்திருக்கும் என்று நினைச்சனான். அதனால் அது தான் உண்மை என்று இன்றுவரை அடம் பிடிக்கும் சில தமிழரால் தான் பிரச்சினை அதிகம் ஆகியது.

தமிழ் நாட்டில் உள்ள விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் சிலரை கைது செய்து, வேறு சிலரையும் பலவந்தமாக உள் நுழைத்து வழக்கை இருட்டு அறைக்குள் முடித்துள்ளார் என்று தான் தோன்றுகிறது.

இது மட்டுமல்ல பிரேமதாசா முதல் லக்ஷ்மன் கதிர்காமர் வரை நடந்த பல கொலைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பது தான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, போல் said:

நன்றி உங்கள் கருத்துக்களுக்கு போல்..

பலரையும் போல எனக்கும் இதில் பெரிய தெளிவு இல்லை. சிவராசன் மற்றும் தனு போன்றவர்கள் இயக்க உறுப்பினர்கள் என்றுதான் படித்த ஞாபகம். அதை வைத்துத் தான் எனது கருத்தைப் பதிந்து இருந்தேன். தவறு என்றால் வருந்துகிறேன். 

Just now, இசைக்கலைஞன் said:

நன்றி இசை!

உங்கள் கருத்தில் தவறில்லை. சாமான்யர்கள் பல இடங்களில் வாசிப்பதை வைத்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அதில் நாம் தவறு காண முடியாது.

ஆனால் சர்வதேச மடடத்தில் சில பொறுப்பில் உள்ளவர்கள் (தமிழர்கள்) தான் தமது "ஈகோ" பிரச்சினைகளால் இதை பெரும் பிரச்சினை ஆக்கினார்கள்.  இதை தெளிவாக எழுதாதது என் தவறு தான்.

இது மட்டுமல்ல பிரேமதாசா முதல் லக்ஷ்மன் கதிர்காமர் வரை நடந்த பல கொலைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பது தான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, போல் said:

நன்றி இசை!

உங்கள் கருத்தில் தவறில்லை. சாமான்யர்கள் பல இடங்களில் வாசிப்பதை வைத்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அதில் நாம் தவறு காண முடியாது.

ஆனால் சர்வதேச மடடத்தில் சில பொறுப்பில் உள்ளவர்கள் (தமிழர்கள்) தான் தமது "ஈகோ" பிரச்சினைகளால் இதை பெரும் பிரச்சினை ஆக்கினார்கள்.  இதை தெளிவாக எழுதாதது என் தவறு தான்.

மேலும், நீங்கள் சொன்ன பிரேமதாச, கதிர்காமர் கொலைப்பழிகளும் விடுதலைப் புலிகள் மீதே சுமத்தப்பட்டன. அத்துடன், பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கட் விளையாட்டுக்காரர் மீது துப்பாக்கிச் சூடு, தமிழக மீனவர் கடத்தல், கொழும்பில் பாகிஸ்தான் தூதுவர் மீதான தாக்குதல் இவையெல்லாம் புலிகள் மீது சுமத்தப்பட்டன. இன்னும் பல.

  • கருத்துக்கள உறவுகள்

போல்  இன் அடுத்த பதிவு : தமிழர் போராட்டத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது தான் பெரிய உண்மை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

உங்கள் இணைப்புக்கு நன்றி.

ராஜிவ் கொலைக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது மிகவும் தெளிவாக விடுதலைப் புலிகளால் சொல்லப்பட்ட செய்தி. கனவில் கூட அப்படி ஒரு கொலையை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எமக்கு தோன்றியிருக்க முடியாது என்பது விடுதலைப் புலிகளால் சொல்லப்பட்ட உறுதியான செய்தி.

இதில் "ஒரு பகுதியை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு செய்துவிட்டார்கள்" என்பதுவும் முழுத் தவறு.  அந்தக் காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்த எவரும் இதில் சம்பந்தப்படவில்லை என்பதையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை தெளிவாக கூறியிருந்தது. தேவை என்றால் விசாரணைகளுக்கு எங்கள் முழு ஒத்துழைப்பும் இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.

இங்கு பலரது "ஈகோ" தான் உண்மையான பிரச்சினை. நான் விடுதலைப் புலிகள் இயக்கம் தான் செய்திருக்கும் என்று நினைச்சனான். அதனால் அது தான் உண்மை என்று இன்றுவரை அடம் பிடிக்கும் சில தமிழரால் தான் பிரச்சினை அதிகம் ஆகியது.

தமிழ் நாட்டில் உள்ள விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் சிலரை கைது செய்து, வேறு சிலரையும் பலவந்தமாக உள் நுழைத்து வழக்கை இருட்டு அறைக்குள் முடித்துள்ளார் என்று தான் தோன்றுகிறது.

இது மட்டுமல்ல பிரேமதாசா முதல் லக்ஷ்மன் கதிர்காமர் வரை நடந்த பல கொலைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பது தான் உண்மை.

அப்படியானால்

பத்திரிகையாளர்களின் கேள்விக்கு எதற்காக தலைவரால் 

அது ஒரு துன்பவியல் நிகழ்வு என சொல்லப்பட்டது???

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

அப்படியானால்

பத்திரிகையாளர்களின் கேள்விக்கு எதற்காக தலைவரால் 

அது ஒரு துன்பவியல் நிகழ்வு என சொல்லப்பட்டது???

எதிர்காலத்தில் போலும்,இசையும் வந்து இப்படியும் ஒரு விளக்கம் சொல்வார்கள் என்பதை தான். தலைவர் துன்பியல் சம்பவம் என்று சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நந்தன் said:

எதிர்காலத்தில் போலும்,இசையும் வந்து இப்படியும் ஒரு விளக்கம் சொல்வார்கள் என்பதை தான். தலைவர் துன்பியல் சம்பவம் என்று சொன்னார்.

சரி நந்தன்

அப்போ உண்மை என்ன?

நீங்களும் சொல்லமாட்டியளே.....??

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

அப்படியானால்

பத்திரிகையாளர்களின் கேள்விக்கு எதற்காக தலைவரால் 

அது ஒரு துன்பவியல் நிகழ்வு என சொல்லப்பட்டது???

புலிகள் அதிகாரபூர்வமாக மறுத்த விடயம் இது. நான் ஏற்கனவே சொன்னதுபோல உள்வீட்டு வேலையாக இருந்தாலும் அதற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்தானே தலைவர்?!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, இசைக்கலைஞன் said:

புலிகள் அதிகாரபூர்வமாக மறுத்த விடயம் இது. நான் ஏற்கனவே சொன்னதுபோல உள்வீட்டு வேலையாக இருந்தாலும் அதற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்தானே தலைவர்?!

துன்பவியல் நிகழ்வு என்று தலைவர் சொன்னது

அதைஏற்றுக்கொண்டு மனம் வருந்துவதாகத்தானே எடுக்கப்பட்டது இசை.

புலிகள் பொறுப்பல்ல

அது வேறு மாதிரியான நிகழ்வு என்றால் தலைவர் நிச்சயம் அதை சொல்லியிருப்பார் என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

துன்பவியல் நிகழ்வு என்று தலைவர் சொன்னது

அதைஏற்றுக்கொண்டு மனம் வருந்துவதாகத்தானே எடுக்கப்பட்டது இசை.

புலிகள் பொறுப்பல்ல

அது வேறு மாதிரியான நிகழ்வு என்றால் தலைவர் நிச்சயம் அதை சொல்லியிருப்பார் என்பது எனது கருத்து.

நான் நினைப்பது உண்மையானால், தலைவர் அதற்கு காரணமல்ல. ஆனால் பொறுப்புக் கூற வேண்டியவராகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, இசைக்கலைஞன் said:

நான் நினைப்பது உண்மையானால், தலைவர் அதற்கு காரணமல்ல. ஆனால் பொறுப்புக் கூற வேண்டியவராகிறார்.

இது சாதாரண சிக்கல் அல்ல இசை

உண்மையில்  புலிகள்  இதில் சம்பந்தப்படவில்லை என்றால் தலைவர் கிடைத்த அந்த நேரத்தில்

புலிகளை இதிலிருந்து விடுபடவைத்திருப்பார் என்று தான் தோன்றுகிறது

அது தான் நியாயமும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

போல் எழுதினதில் எனக்கு வியப்பேதும் இல்லை. ஆனால் அதுக்கு இசை ஒத்து ஊதுவதைப் பார்க்க சிரிப்பு,சிரிப்பாய் வருது...பிரேமதாசா/கதிர்காமரை எதற்காக கொண்டார்கள்,தாக்குதல் திட்டத்திற்கு உடந்தையாக இருந்த புலிகள் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்கள்...அவர்கள் இதைப் பார்த்தால் விழுந்து,விழுந்து சிரிப்பார்கள்.

சிவராசன்,தனுவைப் பயன்படுத்தி ராஜீவை கொன்று விட்டு வேலை முடிந்த பிறகு அவர்கள் புலிகளே இல்லை என்று சொல்வது நல்ல கதை.

தலைவருக்குத் தெரியாமல் செய்து விட்டார்கள்...பாவம் தலைவர் இதை விட அவரை புலி வாலுகள் அவமான்ப்படுத்த முடியாது

1 hour ago, விசுகு said:

அப்படியானால்

பத்திரிகையாளர்களின் கேள்விக்கு எதற்காக தலைவரால் 

அது ஒரு துன்பவியல் நிகழ்வு என சொல்லப்பட்டது???

துன்பவியல் நிகழ்வு - என்றால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, போல் said:

துன்பவியல் நிகழ்வு - என்றால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எனது அறிவுக்குட்பட்டு

ஏதோ நடக்கக்கூடாதது நடந்து விட்டது

அதை மன்னித்து மறந்துவிடுவோம் என்பதாகும்.

55 minutes ago, இசைக்கலைஞன் said:

நான் நினைப்பது உண்மையானால், தலைவர் அதற்கு காரணமல்ல. ஆனால் பொறுப்புக் கூற வேண்டியவராகிறார்.

பொறுப்புக் கூற வேண்டியவர் என்பது பொருத்தமில்லை என்பது என் கருத்து. மிகத் தெளிவாக மறுப்பை அவர்கள் வெளியிட்டுவிட்டார்கள்.

மேலும் அவர்கள் சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லியும் விட்டார்கள். தேவை என்றால் விசாரணைக்கு ஒத்துழைப்பு, உதவிகளை வழங்க தயார் என்றும் தெளிவாக சொல்லிவிட்டார்கள். இவை புது விடயங்கள் இல்லை. நீங்கள் அறிந்தவையே.

குறிப்பாக விசுகு குறிப்பிட்ட பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, கடினமான தமிழ் சொற்களை பயன்படுத்தாமல், பேச்சுவழக்கில் உள்ள தமிழில் தெளிவான மறுப்பை மீண்டும் மீண்டும் சொல்லி இருக்கலாம்.

ஆனால் விடுதலைப் புலிகள் தேவையற்ற விடயங்களில், தேவையற்ற சலசலப்பில் அதிகம் மூக்கை நுழைப்பதில்லை என்பதுவும் அதனால் அவர்கள் இதைப் பற்றி பகிரங்கமாக அடிக்கடி கதைத்திருக்கும் வாய்ப்பு இல்லை என்பதுவும் - நீங்கள் அனைவரும் அறிந்ததே.

13 minutes ago, ரதி said:

போல் எழுதினதில் எனக்கு வியப்பேதும் இல்லை. ஆனால் அதுக்கு இசை ஒத்து ஊதுவதைப் பார்க்க சிரிப்பு,சிரிப்பாய் வருது...பிரேமதாசா/கதிர்காமரை எதற்காக கொண்டார்கள்,தாக்குதல் திட்டத்திற்கு உடந்தையாக இருந்த புலிகள் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்கள்...அவர்கள் இதைப் பார்த்தால் விழுந்து,விழுந்து சிரிப்பார்கள்.

சிவராசன்,தனுவைப் பயன்படுத்தி ராஜீவை கொன்று விட்டு வேலை முடிந்த பிறகு அவர்கள் புலிகளே இல்லை என்று சொல்வது நல்ல கதை.

தலைவருக்குத் தெரியாமல் செய்து விட்டார்கள்...பாவம் தலைவர் இதை விட அவரை புலி வாலுகள் அவமான்ப்படுத்த முடியாது

ரதி எழுதுவதில் எனக்கு வியப்பு ஏதும் இல்லை.
இசை சில ஆதாரங்களை இணைத்த பின்னரும், இந்தியாவில் விசாரணை செய்த பலர் எப்படி ஜோடிக்கப்பட்டு முடிக்கப்பட்ட வழக்கு என்பதை தெரிவித்த பின்னரும், ரதி புலிகள் தான் கொன்றார்கள் என்று தான் சொல்லுவார்.

தலைவர் பிரபாகரனுடன் ஆரம்ப காலம் முதல் மிகமிக நெருக்கமாக இருந்த இளங்குமரன் அண்ணன் சொன்னவையும் பொய் என்று சொல்பவர்கள் - பிடித்த முயலுக்கு 3 கால்கள் தான்.

http://www.outlookindia.com/magazine/story/we-did-not-kill-rajiv-gandhi/200167

27 minutes ago, விசுகு said:

எனது அறிவுக்குட்பட்டு

ஏதோ நடக்கக்கூடாதது நடந்து விட்டது

அதை மன்னித்து மறந்துவிடுவோம் என்பதாகும்.

நன்றி விசுகு!

குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு கொடுத்த பதில் உங்களைப் போலவே எனக்கும் குழப்பத்தை ஏற்படுத்த, சுமார் 14 வருடங்களின் முன்பே மிகமிக முக்கியமான இருவரிடம் (தனித்தனியே) அதன் கருத்தைக் கேட்டேன். அவர்கள் இருவரும் (தனித்தனியே) சொன்ன ஒரே பதில் - "எங்கள் அனைவருக்கும் பெரும் துன்பத்தை தந்த நிகழ்வு அது" - என்பதே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.