Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் ஆஞ்சனேயர் ஆலயத்தில் மலையாளச் சாமியார் அடாவடி : பூசகரையும் மிரட்டல்

Featured Replies

f0054b49c7e1abf16a0264cffbda14cd.png

இலண்டன் வெஸ்ற் ஹென்டன் (West Hendon) பகுதியில் உள்ள ஆஞ்சேனயர் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் புகுந்த மலையாளச் சாமியார் ஒருவர் தன்னைத் தானே ஆஞ்சனேய சாமி என்று பிரகடனம் செய்து பக்தர்களையும், பூசகரையும் மிரட்டி அடாவடித்தனம் புரிந்தமை பக்தர்களால் காணொளி வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரசேகரன் என்ற இயற்பெயரையுடைய இவர் கேரள வம்சாவழியைச் சேர்ந்தவராவர். ஆனாலும் ஆஞ்சனேயரின் அவதாரமாக தன்னைத் தானே சித்தரித்துக் கொள்ளும் இவர், ஹனுமந் சேவா துரந்தரர் சிறீமத் சந்திரசேகர ஆஞ்சனேய சுவாமிஜி என்று தனக்குத் தானே ஆன்மீகப் பெயர் சூட்டி கொழும்பு தெஹிவளையில் ஆஞ்சனேயர் கோயில் ஒன்றை நடத்தி வருகின்றார்.


கடந்த ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்ற காலப் பகுதியில் இவரது கோயிலில் சிறீலங்கா துணைப்படை ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுத் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் தேர்தல் வெற்றிக்காக ஒரு பவுசரில் பால் கொண்டு வரப்பட்டு அபிசேகம் நடாத்தப்பட்டது. ஆன்மீகப் பயணம் என்ற போர்வையில் பிரித்தானியாவிற்கும், கனடாவிற்கும் அடிக்கடி சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் இவர், நீண்ட காலமாக இலண்டன் வெஸ்ற் ஹென்டன் ஆஞ்சனேயர் ஆலயத்தைத் தனது பெயரில் எழுதித் தருமாறு அவ் ஆலயத்தின் அறங்காவலர்களை வற்புறுத்தி வந்துள்ளார். 

http://paasam.com/news/999.html#sthash.dNL3wbEA.dpuf

 

சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் போலவே இந்த மலையாளிகளும் தமிழர் சொத்துக்களைக் கொள்ளையடித்து வளர்ந்த சமூகம் தான்.

இந்த ஆள் தமிழின விரோத அயல்நாட்டு நாசகார கும்பலின் கையாலாகவும், இந்த சம்பவம் புலம் பெயர் தமிழர்களுக்கு எதிராக தமிழின விரோத அயல்நாட்டு நாசகார கும்பலின் சதி முயற்சிகளில் ஒன்றாகவும் இருக்கலாம்.

இந்தப் போலிச்சாமியார் மீது உடன் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதே நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

நாலு சாத்து சாத்திப் போட்டு.... ஆளைப் பிடிச்சு வெளியிலை விட்டிருக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நாலு சாத்து சாத்திப் போட்டு.... ஆளைப் பிடிச்சு வெளியிலை விட்டிருக்க வேணும்.

இவர் அருள் வாக்கு சொல்பவர். அதனால் ஏதாவது சாபம் போடுவாரா என்ற பயம் கன பேருக்கு இருக்குது என்று கேள்வி..

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Nathamuni said:

இவர் அருள் வாக்கு சொல்பவர். அதனால் ஏதாவது சாபம் போடுவாரா என்ற பயம் கன பேருக்கு இருக்குது என்று கேள்வி..

இந்தாளை கடவுளென கும்பிட ஒரு கூட்டம் கொழும்பிலிருக்கு, அடித்தாலும் வாங்குவினம் வலிக்கவில்லையென,

ஒரு சின்ன இடத்திலிருந்த தெகிவளை ஆஞ்நேயர் காணி இப்ப பல மடங்கு பெருகிவிட்டது சுற்றியுள்ளவர்களை எழுப்பி.

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கை கும்பிட வெளிக்கிட்டால்,இந்த நிலைதான் வரும்

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு இது காணாது.
நாட்டுக்கு நாடு சாமியார் என்று போய் இப்போது நகரம் நகரமாக இப்படியான சாமிகளை இந்தியாவிலிருந்து அழைத்து வந்து மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்க வைக்கும் ஒரு கூட்டம் இருக்கின்றது.
இப்படியானவர்கள் திருந்தாவிட்டால் ஒருகாலத்தில் இப்படியான இந்தியப் போலிச்சாமிகளின் அடாவடித்தனங்கள் அதிகரிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டன் எட்ஜ்வேர் என்ற இடத்தில், கொழும்பில் கடை விரித்து, சாயம் வெளிப்பட, இலங்கை அகதிகள் என இலண்டன் வந்த, தமிழக தம்பதிகள், காயத்திரி அம்மா என்ற பெயரில் கோவில் ஆரம்பித்து அருள் சொல்வதாக, அடாவடி பண்ணி... கடைசியில், மொட்டக் கடதாசி செய்த வேலையால், இந்தியாவிற்கு அனுப்பப் பட்டனர்.

காண்டம் வாசிக்க எண்டு ஒரு கூட்டம் வந்து காசு பார்த்து, காண்டத்தை கடாசி விட்டு, தமிழகத்தில் செற்றிலாகி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தர் சிட்னிக்கு வந்தால் ஆஞ்சநேயர் பக்தர்களின் வீட்டுக் கூரைகளில் தாவுவதாக கேள்விப்பட்டேன் .. அவர் இவர்தனோ?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

இவர் அருள் வாக்கு சொல்பவர். அதனால் ஏதாவது சாபம் போடுவாரா என்ற பயம் கன பேருக்கு இருக்குது என்று கேள்வி..

அருள் வாக்கு சொல்பவர், சாமியார் என்பதற்கு அப்பால்....
அந்தக் கோவில் பூசை வழிபாட்டில் ஈடுபட எத்தனையோ ஆட்கள் குளித்து, விரதம் இருந்து, தூர இடங்களில் இருந்து வந்திருப்பார்கள், அவர்களுக்கும் இடைஞ்சல் விளைவித்து.... பூசை ஆரம்பிக்கும் நேரமாக பார்த்து குருக்களிடம் வாக்குவாதப் பட்டதை,  எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத அநாகரிகச் செயலைச் செய்த,  இந்த மலையாளாத்தானை மன்னிக்கவே முடியாது.

அவர் தனது பிரச்சினைகளை.... சம்பந்தப் பட்ட ஆலய நிர்வாகிகளிடமோ, அல்லது தனியே.... ஐயரிடமோ, நீதிமன்றத்தின் மூலமோ அணுகுவதை விட்டு... கோவிலில்  சண்டித்தனம் காட்டியது எல்லோரையும் முட்டாளாக்கிய செயல்.

***********

Edited by நியானி
தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டணில் எம்மவர்கள் பக்திப்பரவசம் கொண்டாடுகிறார்கள் என்றதும், பலருக்கு கோவில் வியாபார ஆசை வந்துவிட்டது.

இவரது முயற்சி உந்தக் கோவிலை கையகப் படுத்துதல் ஆக இருக்கும். பின்னால் நிச்சயமாக நம்மட ஆக்கள் இரண்டொருவராவது இருப்பினம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இலண்டணில் எம்மவர்கள் பக்திப்பரவசம் கொண்டாடுகிறார்கள் என்றதும், பலருக்கு கோவில் வியாபார ஆசை வந்துவிட்டது.

இவரது முயற்சி உந்தக் கோவிலை கையகப் படுத்துதல் ஆக இருக்கும். பின்னால் நிச்சயமாக நம்மட ஆக்கள் இரண்டொருவராவது இருப்பினம். :rolleyes:

ஒரு மலையாளத்தவன்...  இத்தனை தமிழ் ஆட்கள், நிற்கும் இடத்தில் வந்து... 
சண்டித்தனம் காட்டி விட்டுப் போவது மட்டுமல்ல, 
அந்தக் கோவிலையும் தனக்கு எழுதித் தரச் சொல்லும் கொழுப்புக்குப் பின் எம்மவர்கள் ஒரு சிலர் மட்டுமல்ல... 
அவர்களை ஊக்குவிப்பதும், இந்திய ரோகரா தூதுவரலாயமும் சம்பந்தப் பட்டு இருக்கலாம். 

பக்தியுடன் கோவிலுக்கு வந்தவர்கள், அவருக்கு... அன்று  அடி போடாமல் இருந்திருக்கலாம்.
இனி.... இவரை, கோவிலுக்குள் நுழைய விடாமல் இருக்க.. சம்பந்தப் பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.tw_cold_sweat:

  • தொடங்கியவர்

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

டக்கியருக்கு கொடுக்க வேண்டிய கப்பப் பங்கை கொடுக்கல்லப் போல. அதுதான் பிரச்சனைப் பட ஆளை அனுப்பி வைச்சிருக்கிறார். tw_blush::rolleyes:

  • 2 weeks later...

இவர் ஜெர்மனிஜீலை வேண்தினதை மறந்துபோனார் போலக்கிடக்கு

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, neervai baruki said:

இவர் ஜெர்மனிஜீலை வேண்தினதை மறந்துபோனார் போலக்கிடக்கு

இவர் ஜேர்மனியில அடி வாங்கின ஆளா....?
எங்கை.. ஏன்... என்றதை, விபரமாக  சொல்லுங்களேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.