Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்தவர்களின் உரிமையை அபகரிக்க நாம் முயலவில்லை: மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம்

Featured Replies

மன்னார் ஆயரையும் கூட்டமைப்பின் கிறிஸ்தவ எம்பிக்களையும் கண்டிக்கின்றோம் என்ற தலைப்பில் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் அத்துமீறி வைத்துள்ள மாதா சிலையை அகற்றுங்கள் என சுவர் ஒட்டிகளை கொழும்பு, கண்டி, வவுனியா மற்றும் பிரதான பகுதிகளில் ஒட்டிவருகின்றார்கள்.

குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் சார்பில் இவ்வமைப்பின் செயலாளர் தே.பி.சிந்தாத்துரை இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

எமது கத்தோலிக்க திருமறையானது கி.பி. 1500 அளவில் எமது கீழைப் பிரதேச நாடுகளில் மக்கள் மத்தியில் அழமாக வேரூன்ற ஆரம்பித்தது.

எமது மன்னார் மறைமாவட்டத்தில் மிகுந்த உத்வேகத்துடன் மக்கள் மத்தியில் கத்தோலிக்க மறை ஆரம்ப கால முதலே விசுவாச வித்து ஊன்றப்பட்டதால் எம்மக்களே இப்பிரதேசத்தின் ஆதிக் கிறிஸ்தவர்களாகியதுடன் கத்தோலிக்கர்களின் முன்னோடிகளாகவும் விளங்கினர்.

இதன் காரணமாக கத்தோலிக்கத் திருச்சபையால் மன்னார் தீவிலும் தீவை அண்டிய பெரு நிலப்பரப்பிலும் 500 ஆண்டுகளுக்கு முன் கத்தோலிக்க தேவாலயங்கள் அமைக்கப்பட்டன.

இவற்றுள் மிகப் பழமை வாய்ந்த திருத்தலங்களில் ஒன்றாக மாந்தை மாதா கோவில் தோன்றியது.

இங்கு 1590ல் தேவதாயாரின் திருச்சொரூபம் ஸ்தாபிக்கப்பட்டு கத்தோலிக்கர்களின் வணக்க ஸ்தலமாக பிரபல்யம் அடைந்தது.

ஆயினும் பின்னர் இப்பிரதேசத்தை கைப்பற்றிய ஒல்லாந்தர் கத்தோலிக்க தேவாலயங்களை சேதமாக்கி கத்தோலிக்கர்களையும் துன்புறுத்தினர்.

இந்நடவடிக்கையால் மக்கள் ஒன்று சேர்ந்து மாந்தையில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த தேவதாயின் திருச்சொரூபத்தை எடுத்துச் சென்று பாதுகாப்பாக மடுத்தலத்தில் ஸ்தாபித்தனர். இதன் பின்னர் மீண்டும் அதே இடத்தில் 1949ல் சிறிய ஆலயம் கட்டியெழுப்பப்பட்டது.

இந்நிலையில் இவ்விடத்தில் ஆலயம் எழுப்பப்பட்டதை பொறுக்கமுடியாத இந்து சம்மேளனம் தமது உயர்மட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி எமது புனித மறையை அழித்துவிட முயல்கிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக 500 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று சிறப்புப் பெற்ற மாந்தைமாதா ஆலயத்திற்கு சுமார் 3 ஏக்கர் அளவிலான ஒரு சிறு காணித்துண்டை அண்மையில் மன்னார் ஆயருக்கு வழங்க காணி ஆனையாளர் உத்தரவு இட்டார்.

உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு அரச வர்த்தமானியில் பிரசுரித்தபின் பிறப்பிக்கப்பட்ட இவ்வுத்தரவை எதிர்த்து துரதிஸ்ரவசமாக இந்து சம்மேளனம் என்னும் அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக மன்னார் ஆயரையும் கூட்டமைப்பு கிறிஸ்தவ எம்பிக்களையும் கண்டிக்கின்றோம் என்ற தலைப்பில்,

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் அத்துமீறி வைத்துள்ள மாதா சிலையை அகற்றுங்கள்', 'சிவ பூமி மன்னாரை மறைபூமி ஆக்காதே' என்ற சுவர் ஒட்டிகளை கொழும்பு, கண்டி, வவுனியா மற்றும் பிரதான பகுதிகளில் ஒட்டிவருகின்றார்கள்.

இது அப்பட்டமான பொய் என்பதுடன் அப்பாவி இந்துமக்கள் மத்தியில் மத துவேசத்தை தூண்டும் முயற்சியாக காணப்படுவதால் இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

நாம் எந்த விதத்திலும் இவர்களுக்கு எதிராகவோ இந்து மதச் செயற்பாட்டுகளுக்கு எதிராகவோ நடந்து கொள்ளவில்லை.

எமது மதச்சடங்கு நிகழ்வுகள் யாவும் சிறிய வரையறுக்கப்பட்ட மாந்தைச்சந்தி காணியில் மட்டுமே நடை பெறுகின்றன.

இந்து சமயம் மிகவும் தொன்மைவாய்ந்தது என்பதனை யாரும் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது.

அவர்கள் பாவனைக்காக பல நூறு ஏக்கர் காணிகள் உள்ளன. பல்வேறு மடங்களும் இந்து மக்கள் குடியிருப்புக்களும் பல்வேறு தொழில்களும் உள்ளன.

இவற்றை நாங்கள் யாரும் எதிர்க்கவோ மறுக்கவோ இல்லை. ஆனால் ஒப்பீட்டளவில் இச்சிறுதுண்டுக்காணியில் எமது ஆலயம், அதுவும் 500 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பதை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும்?

எமது திருவிழா மட்டும் வாராந்த சில மணிநேர சமய நிகழ்வுகள் மாத்திரம் இவ்வாலயத்திற்கான காணித்துண்டில் அமைதியாகவே நடைபெறுகின்றன.

எனவே மடு அன்னையின் பூர்வீக வதிவிடமாகிய மாந்தை மாதா ஆலயத்தை காத்து பராமரித்து வருவது எமது கடமை என்பதை வர்புறுத்திக் கூறுகின்றோம்.

அடுத்தவர்களின் உரிமையை அபகரிக்க நாம் முயலவில்லை எமது உரிமைகளை பாதுகாக்க மட்டுமே நாம் செயற்படுகின்றோம் என்பதை சம்மந்தப்பட்ட சகோதரர்களுக்கு அன்புடனும் அமைதியுடனும் தெரிவிக்கின்றோம் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/statements/01/108913

  • கருத்துக்கள உறவுகள்

3ஏக்கர் காணி-சிறு துண்டுtw_dizzy:

30 minutes ago, நந்தன் said:

3ஏக்கர் காணி-சிறு துண்டுtw_dizzy:

எனக்கு தெரிய 48 பரப்பு எண்டு நினைக்கிறேன்.தவறாயின் தெரியப்படுத்தவும்.  ரொம்ப சின்னன்தான் :grin:

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய மதப் பிரச்சனைக்கு அடி கோலுகிறார்கள்...கடைசியில் விட்டுப் கொடுப்பவர்கள் எப்பவும் போல இந்துக்களாத் தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி உதுல ஒரு புத்தர் சிலையை கொண்டுவந்து வைத்தால் இந்து மாமன்றம் இவ்வளவுக்கு துணிந்து கண்டி கொழும்பு என்று  போராடுவார்களா?ஏன் வடமாகாணத்திலயே போராட முன்வரமாற்றார்கள்.புத்தர் கோவில்கள் எவ்வளவோ கட்டிக்கொண்டு வருகின்றார்கள் அதற்கு ஒரு எதிர்ப்பும் இதுவரை தெரிவிக்காத இந்து அமைப்பு இதற்கு மட்டும் போர்கொடி தூக்குவதின் பின்னனி என்ன ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 தமிழ்பிரதேசங்களிலை சிறுசிறு குழப்பங்களை உருவாக்கி சாம்பாராக்கி விட்டால்.......சிங்களம் தன்ரை நடவடிக்கையை  முன்னெடுக்கிறது வலு சுலபம்.

  • தொடங்கியவர்
6 hours ago, குமாரசாமி said:

 தமிழ்பிரதேசங்களிலை சிறுசிறு குழப்பங்களை உருவாக்கி சாம்பாராக்கி விட்டால்.......சிங்களம் தன்ரை நடவடிக்கையை  முன்னெடுக்கிறது வலு சுலபம்.

100% உண்மை. புதிய பிரச்சினைகளை கிளப்புபவர்கள் இதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைத்து, போலி வரலாற்றை புனைந்து சில ஆயிரம் வருடங்கள் பழமையான கோவில் காணியை, சிங்கள-பௌத்த இனமதவெறி இராணுவத்தின் சிங்கள-பௌத்த இனமதவெறி பிக்குகளின் அதே பாணியில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து, இரவுடன் இரவாக சிலை வைக்கும் சர்வதேச மாபியாக்கள் இதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

பெரிய மதப் பிரச்சனைக்கு அடி கோலுகிறார்கள்...கடைசியில் விட்டுப் கொடுப்பவர்கள் எப்பவும் போல இந்துக்களாத் தான் இருக்கும்.

ரதி மன்னார் பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று இருக்கிறது அதாவது ஒரு இந்து கோவிலின் பேனர் ஒன்று கோவில் விசேஷ நாள் ஒன்றில்  கட்டுவதற்கு அனுமதி தரவில்லை ஒரு பகுதியில் வசிக்கும் மக்கள் என்னத்தைசொல்ல இதுக்குள்ள நமக்கு தீர்வு வந்து  ம்கும் ??

இது கிழக்கில் ஒன்று மூளையில் மதம் என்ற மலத்தை மட்டுமே வைத்து காவித்திரியும் என்று நினைக்கிறேன் சரஸ்வதி பூசைக்கு பிள்ளையை ஏன் அனுப்பவில்லை அண்ணே நான் கேட்க அந்த அறி வே இல்லாதது சொல்லிச்சு நாங்கள் உங்கள் சாமிக்கு படைத்த உணவு கள் சாப்பிட மாட்டோம் என்று சொல்லியும் உங்கள் சாமி பெயர் கூட சொல்ல மாட்டோம் என்றும் சொல்லியது ஆட்கள் என் பக்கத்தில் கன பேர் நின்றபடியால் ஒரு கேள்வி மட்டும் கேட்கிறன் என்று சொல்லி நான் கேட்டேன் அண்ணேய் உங்கள் பிள்ளையை படிப்பிக்கும் சேர் பெயர் என்ன என்று கேட்க குமரன் என்று சொன்னார் நான் சொன்னது அதுவும் எங்க சாமி பெயர் தான்  என்று சொல்ல அவரால் எதுவும் பேச முடியவில்லை 

இவர் தொண்ணூராம் ஆண்டளவில் கிழக்கு கலவரத்துக்கு ஆளாகி ஊரில் உள்ள ஆலயத்தில் சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக வாழ்ந்தவர் என்பது எனக்கு தெரியும் ஆனால் அவருக்கு என்னை தெரியாது 

சுனாமியின் பிறகு தான் இவர் இலவசங்களுக்கு விரும்பி வீடு கட்டி கொடுக்கப்பட்டது பிறகு இவர் மதம் மாறி இப்பவும் பலரை இலவசங்களை காட்டி மாற்றம் செய்து வருகிறார் சில ஊர்களில் 

கிறிஸ்தவ நண்பர்கள் மன்னிக்கவும் இவரை நான் மனிதன் என்று கண்டு கொள்ள வில்லை  எல்லா மதமும் மனிதனை நல்வழிப்பாதையில் செல்லவேண்டும் என்று சொல்கிறது.  முதலில் நல்ல மனிதர்களாகள் இருப்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.