Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

470675349_122180618936062669_40782070866

  • கருத்துக்கள உறவுகள்
Posted

images?q=tbn:ANd9GcTAAKywFgrDpbgiocw6PHN

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • என் எழுத்து                                       - சுப.சோமசுந்தரம்              என் பேச்சு (மேடைப் பேச்சு) பற்றி என்னைச் சார்ந்தோர் கருத்தை சமீபத்தில் யாழின் சமூகவலை உலகத்தில் பதிவு செய்தேன். என் எழுத்து பற்றி எனக்கே கருத்து இருப்பினும், என் நண்பர் ஒருவர் அனுப்பியதை இங்கே பதிவு செய்ய விழைவு. அதில் அவர் தம் கருத்தினைச் சொல்லவும் இல்லை; சொல்லாமலும் இல்லை.               எனக்குப் புதிதாக அறிமுகமான நண்பர் X எனது அரதப் பழசான (!) நண்பர் Y யிடம் எனது எழுத்து எப்படியிருக்கும் என்று கேட்க, "இப்படிதான் இருக்கும்" என்று நண்பர் Y அவருக்கு அனுப்பிவிட்டு எனக்கும் அனுப்பி வைத்தார். அது 'எனது நாத்திகம்' என்ற தலைப்பில் நான் முன்னர் எழுதிய கட்டுரையின் தொடக்கம் : ‘கடவுள் உண்டா இல்லையா ?’ என்ற அரதப் பழசான விவாதத்தை ஆரம்பித்து, வாசிப்போரின் கழுத்தில் நரம்பு புடைக்க வைப்பது சாமி சத்தியமாக(!) இவ்வெழுத்தின் நோக்கமல்ல. “உண்டென்பார்க்கு உண்டு, இல்லையென்பார்க்கு இல்லை” என்று ஏனையோரிடம் உரக்கச் சொல்லிவிட்டு, “ஆனால் எனக்குத் தெரியும் இல்லையென்று” என எனக்குள் சொல்லி ‘கடவுளைக்’ கடந்து செல்பவன் நான். (ஆகையால் அது ‘கட உள்’ தானோ?)
    • 19 DEC, 2024 | 07:22 AM (நெவில் அன்தனி) கத்தார் தேசத்தின் தலைநகர் தோஹாவில் நேற்று  இரவு நடைபெற்ற சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளன (FIFA) விருது விழாவில் அதி உயரிய விருதுகைளை வினிசியஸ் Jr, ஆய்ட்டான பொன்மாட்டி வென்றெடுத்தனர். பிரேஸில் முன்கள வீரர் வினிசியஸ் Jr. வருடத்தின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரராகவும் ஸ்பெய்ன் மத்திய கள வீராங்கனை ஆய்ட்டானா பொன்மாட்டி, வருடத்தின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாகவும் தெரிவாகினர். அற்புதமான கால்பந்தாட்ட ஆற்றலைக் கொண்டுள்ள பிரேஸில் தேசிய அணி வீரரும், ரியல் மெட்றிட் கழக விரருமான வினிசியஸ் ஜூனியர் (Jr.) முதல் தடவையாக வருடத்தின் அதிசிறந்த வீரருக்கான பீபா விருதை வென்றெடுத்தார். ரியல் மெட்றிட் கழகத்தின் நட்சத்திர வீரரான வினிசியஸ் Jr., உள்ளூர் கால்பந்தாட்டப் போட்டிகளிலும் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளிலும் கழகத்தின் வெற்றிகளில் பெரும் பங்காற்றி இருந்தார். வினிசியஸ் ஜூனியரின் கால்பந்தாட்ட வாழ்க்கையில் 2023-24 மிகச்சிறந்த பருவகாலமாக பதிவானது. இந்த பருவகாலத்தில் ரியல் மெட்றிட் கழகத்திற்காக 39 போட்டிகளில் விளையாடிய வினிசியஸ் 24 கோல்களைப் புகுத்தியிருந்தார். பொருசியா டோர்ட்மண்ட் அணிக்கு எதிரான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி வெற்றியில் ரியல் மெட்றிட் சார்பாக ஒரு கோலை புகுத்திய வினிசியஸ், சுப்பகோப்பா டி எஸ்பானா இறுதிப் போட்டியில் பார்சிலோனாவுக்கு எதிராக ஹெட்-ட்ரிக் முறையில் கோல்களைப் போட்டு அசத்தியிருந்தார். பிபாவின் அதிசிறந்த வீரருக்கான விருதை 2007க்குப் பின்னர் வென்றெடுத்த முதலாவது பிரேஸில் வீரர் என்ற பெருமையை வினிசியஸ் Jr. பெற்றுள்ளார். ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் மற்றும் லா லிகா ஆகிய இரண்டு சம்பியன் பட்டங்களை வென்றெடுத்த வினிசியஸ் ஜூனியர், அதிசிறந்த 2023 - 24 சம்பயின்ஸ் லீக் வீரர் என்ற விருதையும் தனதாக்கிக்கொண்டிருந்தார். அதிசிறந்த வீராங்கனை பொன்மாட்டி வருடத்தின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீராங்கனைக்கான பீபா வீருதை இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக ஸ்பெய்ன் மற்றும் பார்சிலோனாவின் சுப்பஸ்டார் ஆய்ட்டானா பொன்மாட்டி வென்றெடுத்து பலத்த பாராட்டைப் பெற்றார். தேசிய அணியிலும் கழக அணியிலும் அவர் வெளிப்படுத்திய அதிசிறந்த மற்றும் வெற்றிகரமான ஆற்றல்களுக்காகவே இந்த விருதை அவர் வென்றெடுத்துள்ளார். இந்த விருதை ஒரு தடவைக்கு மேல் வென்றெடுத்த வீராங்கனைகள் வரிசையில் மியா ஹாம், கார்லி லொய்ட், மார்த்தா, பேர்ஜிட் பிறின்ஸ், அலெக்சியா பியூட்டெல்லாஸ் ஆகியோருடன் இப்போது ஆய்ட்டானா பொன்மாட்டி இணைந்துகொண்டுள்ளார். 2023 - 24 பருவகாலத்தில் நடைபெற்ற ஐரோப்பிய மகளிர் நேஷன் லீக் கால்பந்தாட்டத்தில் சம்பியனான ஸ்பெய்ன் அணியிலும் ஐரோப்பிய மகளிர் சம்பியன்ஸ் லீக் ககால்பந்தாட்டத்தில் சம்பியனான பார்சிலோனா அணியிலும் முக்கிய பங்காற்றிய வீராங்கனைகளில் பொன்மாட்டியும் ஒருவராவார். ஐரொப்பிய மகளிர் சம்பியன்ஸ் லீக் பருவகாலத்தில் அதிசிறந்த வீராங்கனையாக 26 வயதுடைய பொன்மாட்டி தெரிவாகி விருது வழங்கப்பட்டது. அத்துடன் நேஷன்ஸ் லீக் இறுதி ஆட்ட நாயகி, சம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்ட நாயகி ஆகிய விருதுகளையும் வென்றெடுத்த பொன்மாட்டி, கோப்பா டி லா ரெய்னா விருது, சுப்பகோப்பா டி எஸ்பானா ஃபெமினினா விருது ஆகியவற்றையும் தனதாக்கிக்கொண்டார். ஏனைய விருதுகள் அதிசிறந்த ஆடவர் அணி பயிற்றுநர்: கார்லோஸ் அன்சிலோட்டி (ரியல் மெட்றிட்). முதல் தடவையாக இந்த விருதை வென்றெடுத்துள்ளார்.  ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக், லா லிகா, சுப்பகோப்பா டி எஸ்பானா ஆகிய மூன்று சம்பியன் பட்டங்களை ரியல் மெட்றிட் கழகத்திற்கு வென்கொடுத்த பயிற்றுநர். அதிசிறந்த மகளிர் அணி பயிற்றுநர்: எமா ஹெய்ன்ஸ் (செல்சி மற்றும் ஐக்கிய அமெரிக்கா). இந்த விருதை இரண்டாவது தடவையாக எமா வென்றெடுத்துள்ளார்.  மகளிர் சுப்ப லீக்கில் செல்சியை சம்பியனாக வழிநடத்திய எமா, பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா மகளிர் கால்பந்தாட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற ஐக்கிய அமெரிக்க அணியின் பயிற்றுநராகவும் செயற்பட்டிருந்தார். ஆண்களில் அதிசிறந்த கோல்காப்பாளர்: எமிலியானோ மார்ட்டினெஸ் (ஆர்ஜன்டீனா) பெண்களில் அதிசிறந்த கோல்காப்பாளர்: அலிசா நோயர் (ஐக்கிய அமெரிக்கா)   ஆண்களில் அதிசிறந்த கோலுக்கான புஸ்காஸ் விருது: அலெஜாண்ட்ரோ கானாச்சோ (மென்செஸ்டர் யுனைட்டட்). எவட்டன் கழகத்திற்கு எதிரான கால்பந்தாட்டப் போட்டியில் தலைக்கு மெலாக வந்த பந்தை நோக்கி உயரே தாவி அந்தரத்தில் இருந்தவாறு கானாச்சோ வலதுகாலால் பின்னோக்கி உதைத்து போட்ட கோல் அதிசிறந்த கோலாக தேர்வுசெய்யப்பட்டது. பெண்களில் அதிசிறந்த கோலுக்கான அங்குரார்ப்பண மார்த்தா விருது: பிரேஸில் முன்கள வீராங்கனை மார்த்தா வியரா டா சில்வா முதலாவது வீராங்கனையாக மகளிர் கால்பந்தாட்டத்தில் அதிசிறந்த கோலுக்கான விருதை வென்றெடுத்தார். இதில் ஒரு விசேடம் என்னவென்றால் தனது சொந்த பெயரில் அறிமுகமான விருதை அவரே வென்றெடுத்ததாகும்.  ஜெமெய்க்காவுக்கு எதிரான போட்டியில் எதிரணி வீராங்கனையால் நகர்த்தப்பட்ட பந்தை பெற்றுக்கொண்ட மார்த்தா,  அதனைத் தனியாக முன்னோக்கி நகர்த்திச் சென்று இடதுகாலால் உதைத்து போட்ட கோல் அதிசிறந்த கோலாக தேர்ந்தெடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/201611
    • ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையில் பொதுமக்கள் மீது வாகனத்தால் மோதிய நபர் – சவுதிமருத்துவர்- தனித்து செயற்பட்டுள்ளார் 21 DEC, 2024 | 08:15 AM ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையில் பொதுமக்கள் மீது காரை செலுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்திய நபர் தனியாக செயற்பட்டுள்ளார் என சம்பவம் இடம்பெற்ற சக்சனி அல்ஹாட் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது மாநிலத்திற்கும் அதன் தலைநகரிற்கும் துயரமான நாள்,இருவர் உயிரிழந்துள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளார் இவர் சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயது நபர்,2006 இல் ஜேர்மனிக்கு வந்த இவர் நிரந்தர வதிவிட ஆவணத்தை பெற்றவர் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் இவர் மக்டர்பேர்க்கிலிருந்து 35 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பேர்ன்பேர்க்கில் மருத்துவராக பணிபுரிந்திருந்தார். எங்களிற்கு கிடைத்த தகவலின்படி அவர் தனியாக இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளார்,வேறு எவரும் இணைந்து செயற்பட்டதாக தகவல் இல்லை,என சம்பவம் இடம்பெற்ற மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201779
    • பல ஆண்டுகாலமாக அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் எவ்வாறு நிதியளிக்க முடியும் - ஜாமுனி காமந்த துஷார Published By: DIGITAL DESK 2   21 DEC, 2024 | 09:57 AM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நன்கொடை அல்லது நிதியுதவி பெற வேண்டுமாயின் குடும்ப உறுப்பினர்களின் மாத வருமானம் 1 இலட்சத்துக்கும் குறைவானதாக காணப்பட வேண்டும் என்ற நிபந்தனை காணப்படுகின்ற  நிலையில் பல ஆண்டுகாலமாக அரசியலில் செல்வாக்கு செலுத்திய அரசியல்வாதிகளுக்கு எவ்வாறு கோடிக்கணக்கில்  நிதியளிக்க முடியும். முறையற்ற இந்த செயற்பாடு குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு வழங்கிய நிதியை மீளப்பெற வேண்டும் என இலஞ்ச, ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார தெரிவித்தார். 2005 முதல் 2024 வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 10 இலட்சம் முதல் கோடி கணக்கில் நிதி பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் வெளியிட்டார். இவ்விடயம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (20) முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வறுமை நிலையில் உள்ள மக்களின் நலன்புரி தேவைகள் மற்றும் வாழ்வியல் மேம்பாட்டுக்காகவே ஜனாதிபதி நிதியம் 1978 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.  1978 ஆம் ஆண்டு  07 ஆம் இலக்க ஜனாதிபதி நிதியச் சட்டத்தில்   நன்கொடை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டிய தரப்பினர் தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இதற்கமைய ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், கல்வி மற்றும் புலமை தேர்ச்சி, மத மேம்பாடு, தேசியத்துக்காக சேவையாற்றியவர்களுக்கான நன்கொடை மற்றும் ஜனாதிபதி அல்லது நிதிய சபையின் தீர்மானத்துக்கு அமைய என்ற அடிப்படையில் நன்கொடை வழங்கப்பட வேண்டும். சாதாரண மக்கள் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நன்கொடையை பெற்றுக்கொள்வது இலகுவானதொன்றல்ல, நிதியத்தில் இருந்து நிதி பெறுவதற்கு எதிர்பார்க்கும் நபரின் குடும்ப உறுப்பினர்களின் மாத வருமானம் 1 இலட்சத்துக்கு குறைவானதாக காணப்பட வேண்டும், சிகிச்சைக்கு நிதி பெறுவதாயின் சிகிச்சையின் 50 சதவீதத்தை பிறிதொரு தரப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பல நிபந்தனைகள் விதிக்கப்படும். கடந்த காலங்களில் தகுதி உள்ளவர்களில் பலருக்கு நிதியத்தில் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கப் பெறவில்லை.  2005 முதல் 2024 ஆம் ஆண்டு வரை பல ஆண்டுகாலம் அமைச்சு, இராஜாங்க அமைச்சு உட்பட அரசாங்கத்தின் உயர் பதவி வகித்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நிதிய சபையின் தலைவர்களாக பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமக்கு இணக்கமானவர்களுக்கு மாத்திரம் நிதி வழங்கியுள்ளார்கள். பல ஆண்டுகாலமாக அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் எவ்வாறு நிதியளிக்க முடியும். முறையற்ற இந்த செயற்பாடு குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு வழங்கிய நிதியை மீளப்பெற வேண்டும்.கடந்த கால ஆட்சியாளர்கள் தமது அரசியல் இருப்புக்காக இவ்வாறு முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளார்கள் . நாட்டு மக்களும் இவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/201751
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.