Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏழைகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்! பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைய வேண்டும்

Featured Replies

வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும்.

இதற்கு வன்னி மாவட்ட கூட்டமைப்பினர், ஒற்றுமையுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வன்னி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், வட பகுதிக்கான பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவில் அமைப்பதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும் அதனை வவுனியாவின் தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா அமைப்பது என கடந்த பல மாதங்களாக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

மத்திய அரசாங்கம் ஓமந்தையில் அமைக்க ஆரம்பத்தில் மறுத்திருந்த போதும் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்யும் இடத்தில் அமைக்க உறுதி மொழி வழங்கியுள்ளது.

இந்நிலையில் வடபகுதி (வவுனியா) விவசாயிகள் பலரும் ஓமந்தையில் இதனை அமைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனினும், அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், ஆகியோர் இதனை தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.

அதற்காக அவர்கள் பல காரணங்களையும் கூறுகின்றனர். முன்னர் நகரில் இருந்து 3 கிலோமீற்றர் தூரத்திற்குள் இருக்க வேண்டும் எனக் கூறி தாண்டிக்குளத்தை சிபார்சு செய்தனர்.

இடத்தை தெரிவு செய்து தாருங்கள் என அரசாங்கம், கூட்டமைப்பிடம் கூறியுள்ள நிலையில், ஓமந்தையில் உள்ள காணி பொருத்தமற்றது என இவர்கள் வாதாடி வருகிறார்கள்.

2010ஆம் ஆண்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் ஆளுனர் சந்திரசிறி ஆகியோரின் இணைத்தலைமையில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு என ஓமந்தையில் 18 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டது.

அதற்கான வரைபடங்கள் கூட தயாராகவுள்ளது. இந்நிலையில் அந்தக் காணிக்குள் புகையிரதக் கடவையை கடந்து போக வேண்டும் என கூறி அக்காணி பொருத்தமற்றது என தெரிவிக்கின்றனர்.

இது ஆரோக்கியமான வாதம் இல்லை. நாம் நாளாந்தம் பயணிக்கும் போது எத்தனை புகையிரதக் கடவைகளை கடக்கின்றோம்.

அதற்காக எமது வேலைகளையும், பயணத்தையும் நிறுத்துகின்றோமா? ஓமந்தையில் அமைக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் கூறும் காரணமே இது.

எனவே, இது தொடர்பில் உண்மை நிலையை அறிந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஓமந்தையில் விவசாயிகளின் விருப்பம் போல் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க முன்வரவேண்டும்.

நாம் வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளாக உங்களை தெரிவு செய்தது எமக்கு சேவை செய்யவும், எமக்காக குரல் கொடுக்கவுமே.

அதை உங்களால் செய்ய முடியாது என்றால் அமைதியாக இருந்து விடுங்கள். அதற்காக செய்பவர்களைக் குழப்பி ஏழைகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்.

இதற்காக பதில் சொல்ல வேண்டிய காலம் தொலைவில் இல்லை என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றோம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilwin.com/politics/01/110270

 

Edited by நிழலி
மூலச் செய்தியின் இடையில் இணைக்கப்படட சொந்த கருத்துக்கள் நீக்கப்படடன

  • கருத்துக்கள உறவுகள்

1977 இனக்கலவரம் வரைக்கும்  யாழ்பாணம் மாவட்ட சந்தைகளுக்கு நேரடியாகவே சிங்கள பகுதிகளில் இருந்து  லாறிகளில் பொருட்கள் தங்கு தடையின்றி வந்தன. 1977க்கு பின் சந்தை மையம் சாவகச்சேரி கிழிநொச்சி என தெற்ௐகு நோக்கி நகர்ந்தன. 1983 இனக்கலவரத்துக்குப் பின் சந்தை கிழிநொச்சியென்று ஆகினது. தொடர்த யுத்தம் சந்தையை மேலும் தெற்க்கு நோக்கித் தள்ளியது. இறுதியில் வவுனியாவே தென்பகுதிச் சந்தைப் பொருட்களை வடக்குக்கு மாற்றும் பெருஞ்சந்தையாக உருவாகியது. போர் காரணமாக ஆரம்பத்தில் கொழும்பு நீர்கொழும்பு புத்தளம் என்று  தென்னிலங்கைக்குப் பெயர்ந்த மக்கள் பின்னர் வவுனியாவில் குடியமர ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம் முல்லைதீவில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களில் ஒருபகுதியினரும் வவுனியாவில் குடி யேறினார்கள்.  இன்றைய வௌனிய வளற்ச்சிக்கும் யுத்ததுக்கும் உள்ள சம்பந்தம் விரிவாக ஆரயப்பட வேண்டியது. இப்ப உள்ள சூழலில் மீண்டும் வர்த்தகமும் மக்களும்  வடக்கு நோக்கிய பெயர ஆரம்பிபார்கள் என்றே கருதுகிறேன்.

மேற்படி பின்னணியில் வவுனியா நகரம் மதவாச்சி மாவட்டத்துக்குள் தெற்காக வளராமல் வடக்கு நோக்கி வளருவது ஊக்குவிக்க படுதல் வேண்டும். வட மாகாண பொருளாதார "மத்திய" நிலையம்  ஓமந்தை பொருத்தமான தெரிவு. குறைந்த பட்சம் ஓமந்தை தாண்டிக்குள பகுதிக்குள் விவசாய பள்ளியை பாதிக்காமல் அமையலாம். 

ஓமந்தையில் அமைவதில் உள்ள நன்மை வவுனியாவும் ஓமந்தையும் வடக்கு நோக்கி இரட்டை நகரங்களாக வளர்ந்து மேன்மைபெறும். ஓமந்தையில் மையம் அமைவது தொடர்பாக முஸ்லிம் வர்தகர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் அதனை வடமாகாண சபையும் முஸ்லிம் வர்த்தகர்களும் நேரடியாகவும் தமிழ் முஸ்லிம் தலைவர்களூடாகவும் பேசி சமரசமாகவும் நீதியாகவும் தீர்க்க வேண்டும். 

ஒதுக்கப்பட்ட பணம் திட்டங்களில் முதலிடப்படாமல் திரும்பிச் செல்வது தலைவர்களின் அரசியல் ரீதியாகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமையின்மையாகவே கருதப்படும்.       

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, poet said:

முஸ்லிம் வர்தகர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் அதனை வடமாகாண சபையும் முஸ்லிம் வர்த்தகர்களும் நேரடியாகவும் தமிழ் முஸ்லிம் தலைவர்களூடாகவும் பேசி சமரசமாகவும் நீதியாகவும் தீர்க்க வேண்டும். 

அப்படி என்ன பெரிய பிரச்சனை முஸ்லீம் வியாபாரிகளுக்கு வரப்போகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தக முதலாளித்துவம் குறுகிய இடம் சார்ந்த நலன்களில் தங்கி இருப்பதாகும். யாழ்பாண பஸ்நிலையத்தை இடம் மாற்றும் பிரச்சினையில யாழ் தமிழ் வர்த்தகர்கள் மோதுவார்கள். இலங்கை முழுவதிலுமே இனவாதத்துக்கு நகரங்களில் ஏற்பட்ட இந்த வர்த்தக  இடப் பிரச்சினையும் தூண்டுதலாக அடிபடையாக இருந்திஉக்கு.

 

  • தொடங்கியவர்

இது எனது கருத்து இல்லை!

போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாய, வர்த்தக அமைப்புகளின் கருத்து.

 

On 5/7/2016 at 11:02 AM, போல் said:

ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம்! முல்லை மாவட்ட ஒருங்கிணைந்த பண்ணையாளர் சங்கம் எச்சரிக்கை

விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த பொருளாதார மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதற்கான இடம் தொடர்பில் ஆராய்கிறார்கள். அதில் தாண்டிக்குளம், ஓமந்தை, மாங்குளம் என பரவலான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நூற்றுக்கு 99 வீதமான விவசாய அமைப்புக்கள், விவசாய மக்கள் ஓமந்தை என்ற இடத்தில் அமைய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இதனை அரச அதிகாரிகளுக்கும், எமது அரசியல் தலைமைகளிடமும் மக்கள் முன்வைத்து வருகிறார்கள். ஒரு சில அரசியல்வாதிகள் இதனை தனிநபர் முரண்பாடு காரணமாக செயற்படுகிறார்கள். விக்கினேஸ்வரன் ஐயா இவ்வாறு கூறுகிறார். அதனால் அவருக்கு எதிராக செயற்பட வேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுவதாக தெரிகிறது. இது தமிழினத்திற்கு பாராதூரமான ஒரு விளைவைத் தரும்.

தாண்டிக்குளம் பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் அங்கு விவசாய பண்ணை, விதை உற்பத்தி பண்ணை, விவசாய கல்லூரி என்பன இருக்கிறது. இந்த விவசாய கல்லூரி பல ஆண்டுகளாக பல போராட்டங்களுக்கு மத்தியில் தான் அவ்விடத்திற்கு வந்துள்ளது. கடந்த காலத்தில் தெற்கு பகுதியில் உள்ள விவசாய கல்லூரிகள் சென்று தான் எமது வடபகுதி மாணவர்கள் கற்றல் மற்றும் விவசாய ஆய்வுகளில் ஈடுபட்டனர். ஆனால், அங்கு பல இன்னல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்தார்கள். அதனால் ஒரு கட்டத்தில் வடபகுதியைச் சேர்ந்தவர்கள் தென்பகுதியில் சென்று கல்வி கற்காத, அங்கு போகாத நிலை இருந்தது. இதனால் முன்னைய அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் கடும் போராட்டம் நடத்தியதன் விளைவாக தான் வவுனியாவில் விவசாய கல்லூரியை அரசாங்கம் அமைத்தது. அந்த விவசாய கல்லூரிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பது எந்தவகையிலும் பொருந்தாது.

அந்த பகுதியில் உள்ள சத்தியலிங்கம் ஐயா, சிவமோகன் ஐயா அவர்களும் தாண்டிக்குளத்தில் தான் அமைக்க வேண்டும் என கோருகிறார்கள். உண்மையில் தாண்டிக்குளம் பொருத்தமில்லை. ஆனால், ஓமந்தையில் அமைப்பதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அங்கு போதியளவு காணி இருக்கிறது. வவுனியா மாவட்டம் கனகராயன்குளம் வரை வருகிறது. தாண்டிக்குளத்திற்கு அப்பால் ஓமந்தையில் இருந்து கனகராயன்குளம் வரை மாங்குளம் சந்தி நோக்கி நிறைய காணிகள் இருக்கிறது. அவ்வாறான இடத்தை தெரிவு செய்வதை விடுத்து தாண்டிக்குளத்தை தெரிவு செய்வது எவ்வகையிலும் பொருத்தமில்லை. இதனை செய்பவர்களது அரசியல் வாழ்க்கை கூட கேள்விக் குறியாகத் தான் இருக்கும்.

தமிழ் மக்களின் கோரிக்கைகளை பெறாது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் விருப்பத்தை பெற்று அதனை அமைக்கவுள்ளதாக சம்மந்தன் ஐயா தெரிவித்திருக்கிறார். ஆனால் மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். அவர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும். அதற்கேற்ப தான் அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும். ஆனால் அதைவிடுத்து ஒரு தனிநபர் போராட்டம் நடத்துவது மாதிரி தெரிகிறது. ஒரு சிலர் மீது கோபத்தை வைத்துக் கொண்டு அவர்கள் விரும்பும் இடத்தில் அமைக்க கூடாது என அவர்கள் கூறுவது போல் தான் போய் கொண்டு இருக்கிறது. ஆனால், எங்களுடைய அரசியல் தலைமைகள் சிந்திக்க வேண்டும். விவசாயிகளுக்கும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நன்மையளிக்கும் வகையில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும்..

http://www.tamilwin.com/economy/01/109962

தாண்டிக்குளத்திற்கு அப்பால் ஓமந்தையில் இருந்து கனகராயன்குளம் வரை மாங்குளம் சந்தி நோக்கி நிறைய காணிகள் இருக்கிறது. அவ்வாறான இடத்தை தெரிவு செய்வதை விடுத்து தாண்டிக்குளத்தை தெரிவு செய்வது எவ்வகையிலும் பொருத்தமில்லை.

 

 

  • தொடங்கியவர்

வடக்கு மாகாணம் என்பது முள்ளிக்குளம், தலைமன்னார், நெடுந்தீவு, காரைநகர், காங்கேசன்துறை, பருத்தித்துறை, ஆழியவளை, முல்லைத்தீவு, மணற்காடு, நொச்சிக்குளம் பகுதிகளை ஆரமாக கொண்ட பிரதேசம்.

இவற்றில் பெரும்பாலான இடங்களில் இருந்து நேரடியாக வந்து செல்லக்கூடிய வீதித் தொடர்பை கொண்டுள்ள, ஓரளவு  மையமான இடம் மாங்குளமே.

இங்கு தான் பயன்படுத்தாத பெருமளவு அரச காணிகள் உண்டு. வட மாகாணத்தின் பொருளாதார மையம் சகல வசதிகளுடன் அமைய வேண்டும் என்றால் குறைந்தது 35 ஏக்கர் நிலம் வேண்டும். 50 ஏக்கர் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

எனவே வட மாகாணத்தின் பொருளாதார மையம் மாங்குளத்தை அண்மித்த பகுதிகளில் அமைவதே பொருத்தமானது.

இதில் இனமதவெறி பீடித்த அமைச்சர்களாக உள்ள முஸ்லிம் காடையர்களோ, சிங்கள-பௌத்த காடையர்களோ மிரட்டி சாதிக்க இடம் கொடுக்க முடியாது. ஏற்கனவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவர்களின் சதி முயற்சிகளை முறியடித்துவிட்டார்.

தற்போது முடிவு தமிழர் கைகளில். இதில் வட மாகாண நலன்களை மட்டும் (வவுனியா பிரதேச சுயநலன்களை அல்ல) கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும்.

அது மாங்குளமோ, ஓமந்தையில் வேறொரு பிரதேசமோ முதலமைச்சர் விக்னேஸ்வரனின் முடிவுக்கு விட்டுவிடுவதே சகலருக்கும் நல்லது.

எங்கள் நாட்டிலுள்ள அடிப்படையான பிரச்சனையே இதுதான். எல்லாம் அரசியல்மயம். இதை தீர்மானிப்பது வல்லுனர்களா அரசியல்வாதிகளா பொது மக்களா. பாதிக்கப்படும் வர்த்தகர்கள் அபிப்பிராயம் கவனத்துக்குரியது. ஆனால் இதில் கருத்து எழுதுபவர்களுக்கு எல்லாம் அரசியல்தான். அதுவும் இனவாத அரசியல்தான். அவர்களுக்கு தெரியாதது எதுவுமில்லை. எந்த விஷயமானாலும் வல்லுனர்களுக்கே ஆலோசனை வழங்கும் வித்தகர்கள். இவர்களிடமிருந்து நாட்டை ஒருவராலும் காப்பாற்றமுடியாது. 

  • தொடங்கியவர்

வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் அமைச்சர்களான றிசாட், ஹரிசன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுக்கு முதலமைச்சர் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

கபினட் அமைச்சரவைக் கூட்டம் இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டார்.

இதன்போது வவுனியா பொருளாதார நிலையம் அமைப்பதற்கு பொருத்தமான காணி வழங்கப்படாமையால் திட்டத்தை மதவாச்சிக்கு மாற்ற அனுமதி வழங்குமாறு கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் அமைச்சரவையிடம் கோரியுள்ளார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், இத்திட்டத்திற்கு பொருத்தமான காணிகள் எம்மால் வழங்கப்பட்டன. ஆனால் அக் காணிகள் தொடர்பில் ஏதோதோ காரணங்களைக் கூறி தட்டிக் கழிக்கப்பார்கிறீர்கள்.

முதலில் இவ்வாறான திட்டங்களை வடக்கில் அமைக்க அமைச்சருக்கு விருப்பம் இருக்கா என தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். அமைச்சரால் கோராப்பட்ட தாண்டிக்குளம் காணி பொருத்தமில்லை என துறைசார் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதனால் மாற்றுக் காணியை வழங்கியுள்ளோம். நகரில் கூட ஒரு காணியை வழங்கியுள்ளோம் என முதலமைச்சர் தெரிவித்த போது அமைச்சர் ஹரிசன் நகரில் தந்த மற்றைய காணி நீண்டகால குத்தகையில் வழங்கப்பட்டுள்ளது. அதனை பெற முடியாது எனத் தெரிவித்தார்.

இதற்கு தொடர்ந்து பதிலளித்த முதலமைச்சர், அந்தக் காணி குத்தகைக்கு வழங்கப்படவில்லை. அந்த காணி தொடர்பாக பரிசீலித்து பார்த்தேன். அது தற்போதும் அரச காணியாகவே உள்ளது என பதிலளித்தார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ரிசாட், இத் திட்டத்தை தாண்டிக்குளத்தில் அமைக்க வடமாகாண சபை முடிவெடுத்து விட்டது. முதலமைச்சர் தான் இதை குழப்புகிறார் எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், வவுனியாவில் இடம்பெறும் குழப்பங்களுக்கு எல்லாம் காரணம் ரிசாட் அமைச்சர் தான். அதை நான் இங்கு விபரமாக குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் நாம் பொருத்தமான காணியை வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்.

இக்குழப்பத்தை பார்த்த ஜனாதிபதி, இவ்விடயம் தொடர்பில் முதலமைச்சரையும் பிரதமரையும் கலந்துரையாடி ஒரு வாரத்திற்குள் சாதகமான முடிவெடுக்குமாறு தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/108494

7 hours ago, போல் said:

வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும்.

இதற்கு வன்னி மாவட்ட கூட்டமைப்பினர், ஒற்றுமையுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வன்னி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், வட பகுதிக்கான பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவில் அமைப்பதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும் அதனை வவுனியாவின் தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா அமைப்பது என கடந்த பல மாதங்களாக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

மத்திய அரசாங்கம் ஓமந்தையில் அமைக்க ஆரம்பத்தில் மறுத்திருந்த போதும் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்யும் இடத்தில் அமைக்க உறுதி மொழி வழங்கியுள்ளது.

இந்நிலையில் வடபகுதி (வவுனியா) விவசாயிகள் பலரும் ஓமந்தையில் இதனை அமைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனினும், அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், (சிவசக்தி ஆனந்தன்) ஆகியோர் இதனை (வவுனியா விவசாயக் கல்லூரியை விவசாயப் பண்ணையை அழித்து, சீரழித்து) தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.

அதற்காக அவர்கள் பல காரணங்களையும் கூறுகின்றனர். முன்னர் நகரில் இருந்து 3 கிலோமீற்றர் தூரத்திற்குள் இருக்க வேண்டும் எனக் கூறி தாண்டிக்குளத்தை சிபார்சு செய்தனர்.

இடத்தை தெரிவு செய்து தாருங்கள் என அரசாங்கம், கூட்டமைப்பிடம் கூறியுள்ள நிலையில், ஓமந்தையில் உள்ள காணி பொருத்தமற்றது என இவர்கள் வாதாடி வருகிறார்கள்.

2010ஆம் ஆண்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் ஆளுனர் சந்திரசிறி ஆகியோரின் இணைத்தலைமையில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு என ஓமந்தையில் 18 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டது.

அதற்கான வரைபடங்கள் கூட தயாராகவுள்ளது. இந்நிலையில் அந்தக் காணிக்குள் புகையிரதக் கடவையை கடந்து போக வேண்டும் என கூறி அக்காணி பொருத்தமற்றது என தெரிவிக்கின்றனர்.

இது ஆரோக்கியமான வாதம் இல்லை. நாம் நாளாந்தம் பயணிக்கும் போது எத்தனை புகையிரதக் கடவைகளை கடக்கின்றோம்.

அதற்காக எமது வேலைகளையும், பயணத்தையும் நிறுத்துகின்றோமா? ஓமந்தையில் அமைக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் கூறும் காரணமே இது.

எனவே, இது தொடர்பில் உண்மை நிலையை அறிந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஓமந்தையில் விவசாயிகளின் விருப்பம் போல் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க முன்வரவேண்டும்.

நாம் வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளாக உங்களை தெரிவு செய்தது எமக்கு சேவை செய்யவும், எமக்காக குரல் கொடுக்கவுமே.

அதை உங்களால் செய்ய முடியாது என்றால் அமைதியாக இருந்து விடுங்கள். அதற்காக செய்பவர்களைக் குழப்பி ஏழைகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்.

இதற்காக பதில் சொல்ல வேண்டிய காலம் தொலைவில் இல்லை என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றோம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilwin.com/politics/01/110270

 

 

எனவே இப்போது சர்ச்சையில் சிக்கிய வடமாகாண பொருளாதார மையம் அனைவருக்கும் பொதுவான, மையமான மாங்குளத்தில் அமையட்டும்.

போல்,

செய்திகளை இணைக்கும் போது மூலச் செய்தியில் உங்கள் சொந்த கருத்துக்களை இடையிலோ அல்லது முடிவிலோ இணைப்பதை தவிர்க்கவும்.

  • தொடங்கியவர்
8 minutes ago, நிழலி said:

போல்,

செய்திகளை இணைக்கும் போது மூலச் செய்தியில் உங்கள் சொந்த கருத்துக்களை இடையிலோ அல்லது முடிவிலோ இணைப்பதை தவிர்க்கவும்.

செய்தியை இணைத்த பிறகு, அடுத்ததாக சில சொந்தக் கருத்துக்களை பதியும் போது அவை தானாகவே, செய்திகளுடன் சென்று இணைந்து கொள்கிறது / சங்கம் ஆகிறது. இதை தவிர்ப்பது எப்படி?  இடையில் வழமையாக இணைப்பதில்லை. இனி அதை தவிர்க்கலாம்.
நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடியே புடுங்குப்பட....புடுங்குப்பட விசயம் அநுராதபுரத்திலை போய் நிக்கும் போலை கிடக்கு:unsure:

  • தொடங்கியவர்

பொருளாதார மத்திய நிலையத்திற்கான காணியை நேரில் சென்று பார்வையிட்ட கூட்டமைப்பு

வவுனியாவில் அமையவுள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்காக ஓமந்தை பகுதியில் ஒதுக்கப்பட்ட காணியை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு இன்று பார்வையிட்டது.

பொருளாதார மத்திய நிலையத்தினை வவுனியாவில் தாண்டிக்குளத்திலா? ஓமந்தையிலா? அமைப்பது என்ற இழுபறி நிலை காணப்பட்டு வந்த நிலையில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை கொழும்பில் கூடி ஒதுக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டு முடிவெடுப்பது என தீர்மானித்திருந்தனர்.

இந்நிலையில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா சட்டத்தரணிகள் சங்க தலைவர் அன்ரன் புனிதநாயகம், வவுனியா விவசாயிகள் சம்மேளனத் தலைவர் ரங்கன் ஆகியோர் அடங்கிய குழு ஓமந்தை பகுதியில் 2010 ஆம் ஆண்டு அபிவிருத்திகுழு கூட்டத்தில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு என ஒதுக்கப்பட்ட 18 ஏக்கர் காணி மற்றும் மாணிக்கவளவு காணி உட்பட தாண்டிக்குளம் காணியையும் பார்வையிட்டிருந்தனர்.

இதன் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதியராஜா நாளை வட மாகாண முதலமைச்சரை நேரில் சந்தித்து காணி விடங்களை எடுத்துக்கூறவுள்ளதுடன் இரு நாட்களுக்குள் முடிவினை அறிவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/economy/01/110424

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.