Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலுக்கு தயாராகின்றனர்: கண்காணிப்புக்குழு

Featured Replies

விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலுக்கு தயாராகின்றனர்: கண்காணிப்புக்குழு

[புதன்கிழமை, 17 சனவரி 2007, 05:46 ஈழம்] [கொழும்பு நிருபர்]

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் மிகப்பெரும் தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர். தென்னிலைங்கையின் நிலமையைப் பொறுத்து அவர்களின் தாக்குதல்கள் ஆரம்பமாகலாம் என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது.

தென்னிலங்கையில் பெரும் சம்பவங்கள் நடைபெறும் போது கிளிநொச்சி பதற்றமாக காணப்படுகின்றது. எதிர்வரும் வாரங்களில் பெரும் சமர்கள் மூளக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இது தென்னிலங்கையில் ஏற்படும் முன்னேற்றகரமான சூழ்நிலைகளைப் பொறுத்து அமையும் என அது மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கொழும்பில் உள்ள கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தகவல் தருகையில்,

விடுதலைப் புலிகளின் போர் ஆயத்த நிலை தொடர்பாக எமக்கு மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. எமது குழுவினரால் மேற்கூறப்பட்ட தகவல்களை மட்டும் தான் சேகரிக்க முடிந்தது.

இந்த பலப்படுத்தல் நடவடிக்கை தென்னிலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டது. படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்தால் ஆட்கடத்தல்கள், படுகொலைகள் உட்பட ஏனைய வன்முறைகளும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் பாரிய தாக்குதலுக்கான ஆயத்த வேலைகளில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாக எமது புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலதிக போராளிகளும் அங்கு குவிக்கப்படுகின்றார்கள் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதே சமயம் ஜனவரி 1 ஆம் நாள் ஆரம்பமாகிய கலந்துரையாடல் பட்டறையில் கலந்து கொள்வதற்காக பெரும் தொகையான கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் கொழும்பில் உள்ளனர்.

எனினும் ஜனவரி இரண்டாம் வாரத்தில் இருந்து அவர்கள் யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு செல்கின்றனர். ஆனால் எப்போது நிரந்தரமாக அங்கு பணியாற்ற செல்வார்கள் என்பது தெரியாது என கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்புக் குழுவினர் இதுபோன்ற செய்திகளை எடுத்துச் சென்று மற்றவர்களுக்குக் கூறுவது வரவேற்கக் கூடிய ஒரு விடயமல்ல. இதுபோலவே நாம் மாறிச் சிந்தித்தால் சிறிலங்கா இராணுவம் தமிழருக்கெதிராகப் பெரிய போரொன்றை முன்னெடுக்க தெற்கில் ஆயத்தம் செய்கிறது என்ற செய்தியொன்றை பகிரங்கமாக இவர்களால் கூறமுடியுமா? அல்லது அதை கேட்டு சிறிலங்கா அரசும் சும்மா இருக்குமா? இவர்கள் உண்மையில் செய்யவேண்டிய காரியங்களை அல்லது கடமைகளைச் செய்யாமல் விட்டுவிட்டு வேறுவிடயங்களில் அதிகளவு அக்கறை கொள்வதுபோல் தெரிகிறது.

இவர்கள் என்ன கண்காணிப்புக் குழுவா காட்டிக் கொடுக்கும் குழுவா? கொழும்பில் சொகுசு ஹோட்டல்களில் இருந்து கொண்டு அரசின் புலனாய்வாளாகளாக செயல்படுகின்றர்ர்களா?

ஈழத்திலிருந்து

ஜானா

கண்காணிப்புகுழுவினருக்கு, தாம் ஏன் ஈழத்திற்கு வந்திருக்கிறோம் என்பது முற்றாகவே மறந்து விட்டது போல் இருக்கின்றது." கண்காணிப்புக்குழுவினர் வெட்கம் கெட்டவர்கள்" என்று JVP காரன் சொன்னது சரியாத்தான் இருக்கும் போல இருக்கு. :lol::lol::rolleyes:

கண்காணிப்புக் குழுவினர் சம்பளத்திற்கு சொகுசாக வேலை செய்பவர்கள். இவர்கள் பணி விரைவில் முடிந்துவிட்டால் நாடு திரும்ப வேண்டி வரும். ஆகவே தங்கள் வேலைக்கு வேட்டு வராமல் இருக்க எதயாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

அப்ப நோர்வேக்காறர், அந்த, இந்த தூதுவர்கள் எல்லாரும் கிளிநொச்சிக்கு போய்க் துள்ளிக் குதிக்கப் போகினம் எண்டு சொல்லுங்க. நோர்வே சிறப்புத்தூதுவர் வன்னிக்குப் போறார் எண்டு செய்தி வந்திருக்க வேணுமே. :lol:

vantha valajai saija vakilla kurankukal etho saijuthukal oooval BF ikku than sarijanavankal

இவங்கள் அமெரிக்காவுக்கு கூட தகவல் கொடுக்க கூடிய ஆட்கள். சிங்கள இராணுவத்தின் போர் முன் எடுப்பை உலகத்திற்கு சொல்லாத கண்காணிப்புக்குழு .

கண்காணிப்பு குழு வந்த வேலையதவிர மிச்ச வேலை எல்லாம் வடிவாக்க செய்கிறார்கள்............

பகலிலே Intercooler இல் சுத்துவது இரவிலே கொத்துரொட்டிக்கடைகளில் வந்து கொத்துரொட்டி சாப்பிடுவது அதுபோக மாலையில் தெருக்களிலே உடற்பயிற்சி என இவர்களின் விடுமுறை ஓகோ என கழிகிறது. கேட்டால் நாங்கள் SLMM என்கிறார்கள் இவர்கள் அப்படி இங்கு என்ன தான் செய்கிறார்களோ?

உங்கள் கருத்துக்களை இவர்களுக்கு தெரிவியுங்கள்.

Edited by mathuka

கண்காணிப்புக் குழு வந்த வேலையைத்தான் அன்று முதல் இன்று வரை தவறாது செய்கிறது. அது வந்த வேலை என்ன என்பதில் நமக்குத்தான் பலருக்கு குழப்பம். அப்படியான குழப்பமான கனவில் மிதந்தவர்களிற்கு இது செய்தியாக இருக்கலாம்.

இருந்தாலும் இதை கண்காணிப்புக் குழு சொல்லிப் போட்டுது என்று ஏன் துள்ளிக் குதிக்கிறியள்? இதைத்தானே தமிழ் ஆய்வாளர்கள் பல வாரங்களாக மாதங்களா எழுதிவருகிறார்கள். புலிகள் பதுங்கிறார்கள் பெரிய பாச்சலுக்கு என்று. சூரியகதிர் ஜெயசுக்குரு முல்லைத்தீவு ஆனையிறவு என்று வரலாற்றை நீட்டி முளக்கி அக்கு வேறு ஆணிவேறாக ஆய்வு செய்திருக்கிறார்களே விரல்விட்டு எழுத முடியாத அளவிற்கு. அதாவது போராட்டத்தின் பரீட்சயம் குறைந்தவர்களிற்கு புலிகளின் சிந்தனைகள் மனவோட்டங்களை நகர்வுகளை உளவியலை ஓரளவு நாடிபிடித்துப் பார்க்கும் வேலையை மிக இலகுவாக்கிவிட்டிருந்தனரே. அதாவது களத்தில் இருந்து சிறு சிறு துணுக்குகளாக கசியும் புலநாய்வுத்தகவல்களை உறுதி செய்து இன்றய நிலையில் புலிகள் என்ன செய்வார்கள் என்ற முடிவுகளிற்கு வருவதற்கு எதிர்த்தரப்பிற்கு போட்டி போட்டு வகுப்பு எடுத்தார்கள் எமது ஆய்வாளர்கள்.

புலிகள் எவ்வளவு பலமாக இருக்கிறார்கள் என்றும் முன்னய நகர்வுகளை ஆதாரமாக காட்டி நீட்டி முழக்கி ஆய்வு செய்தார்களே.

அதையே இன்று கண்காணிப்புக் குழு சொன்னவுடன் ஏன் துள்ளுறியள்? தமிழ் ஆய்வாளர்கள் எழுதுவது தமிழர் அல்லாது ஒருவருக்கும் போய்ச் சேர வழி இல்லை என்றா இல்லை நீங்கள் மட்டுந்தான் புலிகள் பலமாக இருக்கிறார்கள் பதுங்குகிறார்கள் பெரிய ஒரு பாச்சலுக்கு தயாராகிறார்கள் என்று பீச்சியடிக்க தெரியும் என்ற கனவில் இருந்தீர்களோ?

மோட்டுச் சிங்கள ஆய்வாளர்கள் சிறீலங்கா படைகள் அடுத்து என்ன செய்யப் போகுது தாங்கள் எவ்வளவு பலமாக இருக்கிறம் என்று அதிபுத்திசாலி தமிழ் ஆய்வாளர்கள் மாதிரி பீச்சியடிக்கிறவங்களோ?

"எதிரி சதிகள் சூழ்ச்சிகள் மூலம் பிளவுபட்டு பலவீனமாகிவிட்டான் " என்பதற்கும் "நாங்கள் அந்த ஆயுதம் வைத்திருக்கிறம் என்று எதிரியே சொல்லிறான் " "இந்தந்த புதிய படைகளை எல்லாம் கட்டியெழுப்பிப் போட்டம்" என்று பிரச்சாரம் செய்யிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா ஆரம்பிச்சிட்டார்யா ஆரம்பிச்சிட்டார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு குறுக்காலபோனது,

டாக்டர் என்டால் ஒரு வீடு இப்படி கட்டனும் என்டு சொல்லேலாது.

கணக்கு வாத்தியார் கணக்கு பாடத்தில ஆங்கிலத்தை பற்றி படம் நடத்தலாமோ?

கண்காணிப்புக்குளு என்டா அவையளுக்கு என்டு ஒரு வேலை இருக்கு. அதை பாத்து முடிச்சு மிஞ்சி இருக்கிற நேரத்துக்கு இப்படியானதுவளை பாத்தால் தப்பில்லை. செய்ய வேண்டிய வேலையை தவிற மற்ற எல்லாம் செய்தால் சரியா?

நீங்கள் சொன்ன மாதிரி "தமிழ் ஆய்வாளர்கள்" இப்படி பேசலாம். ஒரு ஆய்வாளனின் வேலை ஒரு விடயத்தை ஆய்வு செய்வது. விழங்குகின்றதா?

ஆகா ஆரம்பிச்சிட்டார்யா ஆரம்பிச்சிட்டார்

உவங்களுக்கு உதுவே வேலையாப்போச்சு :huh::rolleyes::huh::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவங்களுக்கு உதுவே வேலையாப்போச்சு :huh::rolleyes::huh::D

I think it is a good thing.we all know Ltte will attack them soon.

The news is If Ltte start to attack on SL,it is not LTTE falut.

basically They tell the world that SL is starting the fight.

:huh:

வந்திட்டாய்யா வந்திட்டாய்யா குறுக்காலை போக வந்திட்டாய்யா !!

புலனாய்வு துறைக்கும், இராஜதந்திர அமைப்புக்களுக்கும் ஏற்கனவே தெரியாத எதையும் கண்காணிப்பு குழுவின் அறிக்கை கூறவில்லை.

இராணுவத்தில் உயர் பதவிகள் வகிப்போருக்கும், இந்த அறிக்கை, புதிதாக ஒன்றையும் கூறவில்லை. புலனாய்வுத் தகவல்கள் மூலம் இது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட விடயம் தான்.

இந்த அறிக்கையால் சில நன்மைகளும் இருக்கின்றன:

1. இராணுவத்தை விட்டு ஓடும் கீழ்மட்ட சிப்பாய்களின் எண்ணிக்கை கூடும். பெரும் யுத்தம் மூழும் போது

இந்த சிப்பாய்கள் தான் பலிக் கடாக்கள். கண்காணிப்பு குழுவின் அறிக்கை, இந்த கீழ்மட்ட

சிப்பாய்களின் மனநிலையில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும்.

2. இராணுவத்திற்கான புதிய ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை மேலும் கடினமாக்கும். இது ஏற்கனவே ஸ்ரீலங்கா அரசுக்கு தலைவலி தரும் விடயம் தான்

3. பெரும் யுத்தம் மூழும் சாத்தியம் உள்ளது என்று கண்காணிப்பு குழுவே சொல்லும் போது, முதலீட்டாளர்கள் பெரும் முதலீடுகள் செய்ய தயங்குவார்கள். இது ஏற்கனவே தள்ளாடும் ஸ்ரீலங்கா பொருளாதாரத்தை மேலும் சிக்கலில் தள்ளும். இப்படி எத்தனையோ!

மொத்தத்தில் இந்த அறிக்கையால் பாதிப்பு ஸ்ரீலங்கா அரசுக்கு தான்.

குறுக்கால போவான் சொல்லூறதுபோல எனக்கு தெரிந்தவரையிலை ஒரு ஆய்வாளரும் புலிகளின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை தெளிவாக சொன்னதாக எனக்கு தெரியவில்லை... புலிகளின் பலம் பற்றி சொல்கிறார்கள்தான் இல்லை எண்று யாரும் சொல்ல வில்லை.. ஆனால் அதை எல்லாருக்கும் தெரிந்த செய்திகள்... புலிகள் ஆட்லறிகள் வைத்து இருக்கிறார்கள் என்பதைக்கூட அரசாங்கம் சொன்னதாக சிங்கள ஆய்வாளர்கள்தான் சொன்னார்கள்.. அதேபோல தேமறிக் ஆயுதங்களை சிங்கள அரசு கொண்டு வந்துள்ளது எண்றும் சிங்கள ஆய்வாளர்கள்தான் சொன்னார்கள்... இன்னும் கப்பல் வருகுது சாமான் இறக்குது துருப்பிடிச்ச பிளேனின் பாகங்கள் எல்லாம் வருகுது எண்டும் சொன்னார்கள்..

இராணுவம் தயாராகுது மட்டக்களப்பை சித்திரைக்குள் பிடிப்பர்(இன்னும் 3மாதம் இருக்கு ) எண்டு எல்லாம் சிங்களம் தான் சொல்லுகிறது... அதுவரை என்ன செய்ய போகிறார்களோ எனக்கு தெரியாது.. இப்பிடி எல்லாம் கதை சொலல்ப்பட்டுக்கொண்டு இருக்கு...

புலிகளின் தாக்குதல் எங்கு இருக்கும் என்பதை அரசாங்கம் போன மாதமே அறிவித்து அது நிறைவேறாமல் இருக்க கிழக்கில் படை எடுப்பு எண்றும் அங்கு இடம்பிடிப்பு எண்றும் கதை சொல்லிகிறது.. இந்த கள ஜதார்த்தம்தான் தமிழ் ஊடகங்களை எழுத தூண்டுகிறது... முக்கியமான ஒண்ரை சொல்லவேணும் மறைந்த தாரகி அவர்கள் கூட தான் செய்யத வேலைகளில் இந்த படையியல் சம்பந்தமானதையும் சேர்த்து செய்து இருந்தார்..

புலிகள்கள் எங்கு சண்டை செய்ய போகிறார்கள் என்பதோ இல்லை எங்கிருந்து ஆரம்பிப்பர் என்பதோ யாராலும் இலகுவில் கண்டு பிடிக்க கூடியதானதாக நிச்சயமாக இருக்காது....

... இருந்தாலும் இதை கண்காணிப்புக் குழு சொல்லிப் போட்டுது என்று ஏன் துள்ளிக் குதிக்கிறியள்? இதைத்தானே தமிழ் ஆய்வாளர்கள் பல வாரங்களாக மாதங்களா எழுதிவருகிறார்கள். புலிகள் பதுங்கிறார்கள் பெரிய பாச்சலுக்கு என்று. ...

யாழ் தட்டெழுத்து அதிபுத்திசாலி அரசியல் ஆய்வாளர்களாகிய நாங்கள் என்ன வேண்டுமானாலும் பக்கம் பக்கமாக எழுதலாம். இது எமக்கு தோன்றும் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே.

ஆனால் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை சர்வதேச ரீதியாக கவனத்தில் கொள்ளப்படுகிறது. எதிரி இதனை ஆதாரமாக வைத்து அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

நாங்கள் துள்ளிக் குதிப்பது இருக்கட்டும் -

நீங்கள் புலி பதுங்கினாலும் சினுங்குகிறீர்கள்.

பாயப் போகுதென்று சொன்னாலும் சினுங்குறீர்கள்.

பாய்ந்தால் என்ன செய்வீர்கள் ?

ம்ம்ம்ம்ம்ம்.... யத்த நிறுத்தம் ஏன் வந்தது! போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஏன் வந்தது? ... அது தனது கடமையை சரியாக செய்கிறதா? ... என்றால் அவைகள் என்ன நோக்கத்திற்காக வந்ததோ அந்தந்த வேலையை சரியாக செய்கிறது!!!!!!!!!

எமது ஊடகஙங்களும் எம்மை திருப்திப்படுத்த இப்படியான வாணவேடிக்கைகளை நடத்துகிறார்கள்.

ஆனால் நாம் ஏதோ ஒரு சர்வதேச மாயைக்குள் உட்பட்டு சிக்குகிறது போல தெரிகிறது.

நாளுக்கு நாள் விமானக் குண்டு வீச்சு, செல் வீச்சு, சுட்டுக் கொலை, காணாமல் போதல், கடத்தல், வேலையிமையால் வறுமை, மருந்துத் தட்டுப்படென்று .... அடுக்கடுக்காக போய்க் கொண்டிருக்கிறம்.

ஆனால் சிறீலங்காவோ, சர்வதேசமோ 87களிலிருந்து தமிழர்களின் இழப்பை 60,000 என்ற மாறா எண் கணக்கிலேயே வைத்திருக்கிறது. அவர்கள்தான் அப்படி சொல்கிறார்களென்றால் நாமும் 60,000 இலேயே நிற்கிறோம். நாமும் எம் உண்மை இழப்பை இன்றுவரை கணக்கிடவில்லை.

ம்ம்ம்ம்ம்........... 6 கோடி தமிழ் மக்களல்லவா!!!!!!!!!! இன்னும் எத்தனை 60,000 வந்தாலும் தாங்கும்!!!!!!!!!!!!????????.........

நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் நடக்க இருப்பவை நன்றாக நடக்கட்டும் நடந்து முடிந்தவற்றை நல்ல பாடமாக வைத்து இருக்கட்டும் அப்படி எடுத்துக்கொண்டால் நாம் எதற்கும் தயங்கத்தேவை இல்லை

எண்ணிக்கையில் இல்லை எமது இழப்பு வார்த்தையில், உணர்வில், உண்மையில், வாழ்க்கையில், வளத்தில், இழப்பில், பாசத்தில், பரிவில், பகுத்தறிவில், கல்வியில், காகிதத்தில், பிரிவில், பிணத்தில் இப்படியாக எமது இழப்பு கணக்கில் அடக்க முடியாதவை, வார்த்தையில் வடிக்க முடியாதவை, எழுத்தில் எழுத முடியாதவை அதனால் இழப்பு என்பது எமக்கே எனவே இனியும் இழக்க எம்மிடம் இருப்பு இருக்கக்கூடாது

தமிழனாய் வாழ வாழ்த்துகின்றேன்

கடந்த முகமாலைச் சமரிற்கு முன்னர் புலிகள் கண்காணிப்புக் குழு நோர்வே இணைத் தலமை நாடுகள் எல்லாருக்கும் பல தடவை அறிவித்தார்கள் சிறீலங்கா முகமாலை ஊடான நகர்விற்கு தயாராகிறது தடுத்து அழுத்தம் கொடுத்து நிறுத்துங்கள் என்று.

அப்பிடி இருந்தும் சிறீலங்கா அடிவேண்டினாப் பிறகு தனது வலிந்த நகர்வை நியாயப்படுத்த முனைந்தது புலிகள் தம்மை தாக்க தயாரானவர்கள் அதை குழப்ப முறையடிக்க தாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்து விட்டது என்று. ஆனால் அந்தப் பிரச்சாரத்திற்கு வெளிப்படையாக ஆதாரங்கள் எதுவும் பதிவாகவில்லை. மாறாக புலிகள் தான் இராணுவம் தயாராகிறது என்ற அறிவித்தது பின்னர் அதன்படி சிறீலங்காவும் ஆரம்பித்ததுமாக போயிருந்தது.

கண்காணிப்புக்குழு இன்னமும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருப்பதாக சொல்லிய பின்னணியில் இந்திய வெளிவிகார அமைச்சரின் விஜயத்திற்கு பின்னர் சடுதியாக பேச்சளவில் சிறீலங்கா மிகவும் அடக்கி வாசிக்கும் தன்மையின் பின்னணியில் பார்த்தால் இது பாதகமானது. அண்மையில் புலிகளை வெளியேற்றப் போகிறோம் கிழக்கில் இருந்து என்ற வெளிப்படையான பேச்சுகள் அரச தரப்பு பிரதிநிதகளிடமிருந்தோ (அமைச்சர்கள் பேச்சாளர்கள்) இராணுவா தரப்பிடமிருந்தோ வருவது நின்றுவிட்டது. மாறாக புலிகளின் தாக்குதல் திட்டங்களை குழப்ப தற்பாதுகாப்பு தாக்குதல் நடத்துவதாகவும் புலிகளின் தாக்குதலிற்கு பதில் தாக்குதல் நடத்துவதாகவும் தான் வெளிப்படையாக கதைவிடப்படுகிறது. இந்த பின்னணியில் கண்காணிப்புக்குழு புலிகள் பாரிய தாக்குதலிற்கு தயாராகுவதாக கூறியது சிறீலங்காவிற்கு வருமுன் காப்பு தாக்குதல் ஒன்றை வலிய ஆரம்பிப்பதற்கும் அதற்கான சர்வதேச மட்டத்திலான அரசியல் இராஜதந்திர ஆதரவை தக்கவைத்துக் கொள்ளவும் உதவும். வடக்கு கிழக்கில் இருந்து கண்காணிப்புக்குழுவினர் விலகி கொழும்பிற்கு சென்றபின்னர் இந்த அறிக்கை வந்திருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

கிழக்கை ஆக்கிரமிக்க மோட்டுத்தனமான பேச்சுகள் அறிக்கைகளோடு ஆரம்பித்த திட்டம் தற்பொழுது விமர்சனங்கள் கவனத்தை இழுக்காது மாத்திரமல்ல நியாயப்படுத்தக் கூடிய முறையில் பக்குவமாக முன்னகர்த்தப்படுகிறது பல்வேறுபட்ட சக்த்திகளின் துணையுடன்.

புலநாய்வு என்பது ஒரு புதிர் போன்று கிடைக்கும் சிறு தகவல்கள் துணுக்குகளை வைத்து புதிருக்கான விடை ஊகிப்பது ஊகித்ததை கட்டம் கட்டமாக உறுதி செய்வது. கண்ட விடையை சாதகமாகப் பயன் படுத்தி தமது நிகழ்ச்சி நிரல்களிற்கு ஏற்ப சொந்த நலன்களை முன்னெடுப்பது. அந்த முயற்சியில் எதிர் கொள்ளு வேண்டிய அரசியல் இராஜதந்திர சவால்கள் விமர்சனங்களை எப்படிக் கைய்யாழுவது பிரச்சாரத்தை முடுக்கிவிடுவது நியாப்படுத்துவது ஆதாரங்களை முன்வைப்பது என்று வரும் பொழுது எப்படியான எழுத்துக்கள் துணைபோகும் என்று சிந்தித்தால்.... அப்படி எல்லாம் சிந்தித்து ஏன் வில்லங்கப்படுவான்

அலலூய... அலலூயா... அதிர்ச்சி வைத்தியம்....

அலலூய... அலலூயா... அகல கால்வைக்கப போறாங்கள்

அலலூயா... அலலூய... வைச்சதும் மின்னல் தாக்குதல்...

அலலூய... அலலூய... மிக நீண்ட ஒரு பாச்சல்....

அலலூய அலலூய 1990 களில் இருந்தே நீர்மூழ்கிக் கப்பல கட்ட வெளிக்கிட்டா இப்ப என்ன எல்லாம் கட்ட முடியும்...

அலலூய அலலூய... 1995 இலேயே 45 நொட்ஸ் ஸ்ரெல்த் படகு வைச்சிருந்தா இப்ப என்ன எல்லாம் முடியும்...

அலலூய அலலூய பதுங்கி பதுங்கிப் பாச்சல்...

அலலூய... அலலூய... குறிவைச்சிட்டம் அந்தா பாயப்போயினம் இந்தா பாயப்போயினம்....

அலலூயா... அலலூய... network warfare...

அலலூயா... அலலூயா... எதிரிக்கு எல்லப்பக்கத்தாலையும் ஒரே அழுத்தம்...

அலலூயா... அலலூயா... எதிரி பலவீனம் அடைகிறான் அந்தா வழி பிறக்குது இந்தா வழி பிறக்குது...

அலலூயா... அலலூயா... இந்தா தடை எடுபடுது அந்தா தடை எடுபடுது...

அலலூய... அலலூய பல புதிய புதிய அணிகள் புதிய புதிய முறைகள்...

அலலூய... அலலூயா... வாடர்ஜெட்டில ஒலிகன் பூட்டிக் காட்டினவை எண்டா...

அலலூயா... அலலூயா... மழைகாலம் வருகுது இயங்கு நிலையில் டாங்கிகள் சேத்தில் புதையப்போகுது...

அலலூய... அலலூயா... வான்கோழி ஆடுது...

அலலூய... அலலூய...

இந்த அலலூயாவுகள் எல்லாம் ஓதினது களத்தில இருக்கிற மக்களை யுத்தத்திற்கு தயார்படுத்த இல்லை வெளிநாடுகளில் கொழுக்க திண்டது செமிக்கிற ஓய்வு நேரத்தில புதினம் வாசிக்கிறவைக்கும் கேக்கிறவைக்கும்.

Edited by kurukaalapoovan

இலங்கை ஒரு ஜனநாயக நாடாக இருக்கும்வரையில், அங்கு உடனடியாக அமைதியைக்

கொண்டுவரவேண்டுமென உலக வல்லரசுகளும் இணைத்தலைமை நாடுகள் மற்றும்

சிறிலங்காவுக்கு உதவும் நாடுகளும் உண்மையாகவே விரும்பினால் அதற்கான

திறவுகோலை தங்கள் கைவசம் என்றுமே அவை வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

வறியநாடுகளும் இனப்பிரச்சினையில் சிக்கி சின்னாபின்னப்படும் இலங்கை போன்ற

சிறிய நாடுகளும் தான் உலக வல்லரசுகளுக்கும் இதர செல்வந்த நாடுகளினதும்

வேட்டைக்கு வேண்டிய பலிக்கடாக்கள். இதில் ஒவ்வொரு நாடும் தனது வசதியையும்

பொருளாதார இலாபங்களையுந்தான் முதன்மைப்படுத்திச் செயலாற்றும் என்பதில்

எதுவித ஐயமுமில்லை. இதற்கு நோர்வே நாடு கடந்த ஆண்டுகளில் சிறிலங்காவுடன்

என்ணை அகழ்வாராச்சி சம்பந்தமாகச் செய்துகொண்ட ஒப்பந்தமே சான்றாகும்.

இவ்வொப்பந்தத்தின் பலாபலன்கள் நாட்டின் அனைத்து மக்களுக்கும் - குறிப்பாகச்

சொல்லப்போனால் தமிழ்மக்களுக்குச் சமமான பலனை வழங்கப்போவதில்லை

என்பதையும், சிறிலங்காவின் இனவாத அரசுக்கு இப்படியான பொருளாதார வசதிகளை

ஏற்படுத்திக் கொடுப்பதனால் அது இனப்பிரச்சினையைக் காலாதி காலத்துக்கு

தீர்வு எதுவுமின்றி இழுத்துச் செல்லும் என்பதையும் நோர்வேயின் கொள்கைவகுப்பாளர்கள்

நன்கு தெரிந்திருந்துவைத்திருந்த போதிலும் முற்றிலும் தமது நாட்டின் இலாபத்துக்காகவே

முண்டியடித்து இவ்வொப்பந்தத்தைச் சிறிலங்கா அரசுடன் செய்திருந்தனர்.

இலங்கையில் அமைதியான சூழல் நல்லதா அல்லது பிரச்சினை ஓயாது நீண்டு

சென்றால் நல்லதா என்று இந்நாடுகள் காலத்துக்குக் காலம் அக்கறை(?)யுடன்

அலசி ஆராய்ந்து கொண்டுதானிருக்கின்றன. உலகின் மட்டுப்படுத்தப்பட்ட இயற்கை

வளங்களையும் பொருளாதாரப் பயன்பாட்டு முறைகளையும் புதிய நாடுகளுடன்

பகிர்ந்துகொள்ள செல்வந்த நாடுகள் விரும்பவில்லை. உதாரணமாக உலகில்

வாழும் அனைத்து மக்களும், அதாவது அனைத்து நாட்டவரும் எண்ணை

வளத்தைப் சமமாகப் பயன்படுத்தத் தொடங்கினால் உலகில் இன்று உற்பத்தி

செய்யப்படும் எண்ணை தேவைக்குப் போதாமல் எண்ணைப்பஞ்சம் உருவாகி

விலையும் அதிகரிக்கும்.

கடந்த காலங்களில் தென்னமெரிக்காவில் பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டதால்

இயற்கைச் சமநிலை பாதிப்படைந்து அது உலகளாவிய பரந்த பாதிப்புகளை

எதிர்காலத்தில் ஏற்படுத்துமென்று உலகமே ஏங்கிக்கொண்டிருந்தபோது, அமெரிக்காவோ

காடுகள் அழிக்கப்பட்டதால் அங்கு மாடுகள் வளர்ப்பதற்கு வேண்டிய வசதிவாய்ப்பு

குறைந்து தென்னமெரிக்க நாடுகளிலிருந்து தமது நாட்டுக்கு இறக்குமதியாகும்

மாட்டிறைச்சியின் விலை கூடிவிடுமென்று சொன்னதுமல்லாமல் அமெரிக்காவில்

"கம்பேர்கர்" Hamburger உணவின் விலை கூடிவிடுமோ என்றும் பயந்து கொண்டிருந்தார்கள்.

ஒரே விடயமாயிருந்தும் வேறுபட்ட விதமான அங்கலாய்ப்புகளுடன் தான் ஒவ்வொரு

நாடும் அதை நோக்கும் என்பதற்கு இது நல்லதொரு உதாரணம்.

தமிழர் பிரச்சினையில் எப்போது மற்றை நாடுகள் மூன்றாவது பங்காளிகளாகத்

தலையை நுழைத்தார்களோ அன்றே அதற்கு நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ வேறொரு

பரிமாணம் கொடுத்தாகிவிட்டது. இதனால் தமிழருக்கு என்ன நன்மை?

நன்மை உண்டோ இல்லையோ அது எங்களை ஒரு எதிர்பாராத பாதையில்

பயணிக்க நிர்ப்பந்தித்துவிட்டது என்பதுதான் உண்மை.

இப்பாதை எங்கே முடியும், எங்கே செல்லும்?

எவருக்கும் ஆயுள் அதிகமில்லை!

எனினும் பொறுத்திருந்து பார்ப்போம்.

...

அலலூய... அலலூயா... அதிர்ச்சி வைத்தியம்....

அலலூய... அலலூயா... அகல கால்வைக்கப போறாங்கள்

அலலூயா... அலலூய... வைச்சதும் மின்னல் தாக்குதல்...

அலலூய... அலலூய... மிக நீண்ட ஒரு பாச்சல்....

அலலூய அலலூய 1990 களில் இருந்தே நீர்மூழ்கிக் கப்பல கட்ட வெளிக்கிட்டா இப்ப என்ன எல்லாம் கட்ட முடியும்...

அலலூய அலலூய... 1995 இலேயே 45 நொட்ஸ் ஸ்ரெல்த் படகு வைச்சிருந்தா இப்ப என்ன எல்லாம் முடியும்...

அலலூய அலலூய பதுங்கி பதுங்கிப் பாச்சல்...

அலலூய... அலலூய... குறிவைச்சிட்டம் அந்தா பாயப்போயினம் இந்தா பாயப்போயினம்....

அலலூயா... அலலூய... network warfare...

அலலூய... அலலூய பல புதிய புதிய அணிகள் புதிய புதிய முறைகள்...

அலலூய... அலலூயா... வாடர்ஜெட்டில ஒலிகன் ப+ட்ட காட்டினவை எண்டா...

அலலூயா... அலலூயா... மழைகாலம் வருகுது இயங்கு நிலையில் டாங்கிகள் சேத்தில் புதையப்போகுது...

அலலூய... அலலூயா...

...

ஆள் பியர் அடிச்சிற்ரார் எண்டு நினைக்கிறன். :huh::rolleyes::huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.