Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் தினத்தை கார்த்திகை 27 இல் கொண்டாடக்கூடாது! மாவை சேனாதிராசா

Featured Replies

மாவீரர் தினத்தை கார்த்திகை 27 இல் கொண்டாடக்கூடாது! மாவை சேனாதிராசா

மாவீரர் நாள் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி கொண்டாடாது வேறொரு தினத்தில் கொண்டாடப்படவேண்டுமென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

ரெலோ கட்சியின் 33ஆவது அஞ்சலிக்கூட்டம், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழீழ மாவீரர் நாள் – கார்த்திகை 27இனை இல்லாமல் செய்து அதற்குப் பதிலாக, பிறிதொரு நாளைத் தேர்ந்தெடுத்து அன்றைய நாள் ரெலோ, ஈபிஆர்எல்எவ், ஈபிடிபி போன்ற அமைப்புக்களில் மரணித்த உறுப்பினர்களையும் நினைவுகூரவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

மாவை சேனாதிராசாவின் இச்செயலுக்கு தமிழ் மக்கள் தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

http://thuliyam.com/?p=36202

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கம் செத்த தினத்தில் ஈபிடிபி புளொட்டுக்கு இவர் விழா எடுக்கட்டும்..

மக்களுக்கான மரணித்த மக்களின் பிள்ளைகளுக்கு மக்கள் தேசிய தலைமையின் வழிகாட்டலின் கீழ் கார்த்திகையில் நினைவுகூறல் செய்வர். அதை எந்த சோனாதிராஜாவும் தடுக்க முடியாது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சோணாதி ஆகிவிட்டார்....அவ்வளவுதான்...

பதவிக்காக  படுக்கையும் பகிர்வதற்கு தயாராகிவிட்டினம்....கடைசி நேரம் கிடைகிற பெட்டிகளூக்கு பல்லிளீக்கிறார்.......சுவிசில் கூப்பிட்டு வடைமாலை போடுறவையள்...யோசியுங்கோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோனாதிராசாவுக்கு காட்டிக்குடுத்தவனையெல்லாம் மாவீரர் ஆக்கிற பிளான் போலை கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

தனிமனித வாழ்வோடு இருப்பவர்கள் தமது கடைசிகாலத்தில், தமது குடும்பத்துக்காக ஏதாவது செய்ய முடியாவிட்டாலும் அமைதியாகத் தமது நாட்களைக் கடந்துவிட எண்ணுவர்.  பொதுவாழ்வில் இருக்கும் பொதுநோக்குள்ளோர் தமது கடைசிகாலத்தில் தமது கடந்தகாலத்தை மீளாய்வு செய்து மிகுதிக்காலத்திலாவது மக்களுக்கு நல்லதைச் செய்ய முயல்வர். ஆனால் தமது இனத்தை விற்றுப்பிழைக்கும் பிழைப்புவாதிகள் இப்படித்தான் குழம்பி, குழப்பி மீன்பிடிப்பர். ஆனால் தொடர்ந்து மக்களை முட்டாளாக்கலாம் எனக் கனவு காண்பது நீடிக்காது. காலம் அனைத்தையும் கணித்தவாறு காத்திருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

மாவை போராடி இருந்தால் தானே அந்த நாளின் மகத்துவம் பற்றி தெரியும். 40 வருடமாக ஒரே ராகத்தை வாசித்துக் கொண்டு இருந்தால் ஒரு மண்ணும் விளங்காது.

இதற்காக ஏனைய இயக்கத்தில் போராடிய போராளிகளை அவமதிக்கவில்லை. அவர்கள் வேறு ஒரு நாளில் கொண்டாடுவதை பார்த்திருக்கிறோம். அவர்கள் அந்நாளை தேர்ந்தெடுத்தமைக்கு நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினத்தை 27´ம் திகதி  கொண்டாடக் கூ டாது என்று சொல்ல... இவருக்கு என்ன அருகதை இருக்கு?
தேவையில்லாத விடயத்தில் தலையிடாமல்... **************************************** இருப்பதே, மாவைக்கு நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

மாவையருக்கு மண்டைப்பழுது போல உடனடியாக அங்கொடைக்கு அல்லது கீழ்பாக்கத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும். 

ஈழ விடுதலைக்கு இவரின் பிள்ளையும் விதையாகியிருந்தால் அதன் வலியும் வேதனையும் அருமையும் புரிந்திருக்கும் காலம் முழுவதும் உசுப்பேத்தும் பணியையே செய்துவந்தவருக்கு மாவீரர்களை பற்றியோ மாவீரநாள் பற்றியோ பேச என்ன தகுதி இருக்கின்றது . 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.