Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விதையானால் முளையாகும்

Featured Replies

தமிழமுதத்தில் முதன் முதலாக என் கதை...

vithaiyaanaal.jpg

கண்விழித்து பார்க்கிறேன்.

அப்பாச்சி மெதுவா கதைக்கிற சத்தம். கொஞ்ச நாளா இப்படித்தான். கொஞ்சம் தள்ளி நாய் குலைக்கும். அப்பாச்சி எல்லாரையும் சத்தம் போடாம படுக்கச் சொல்லுவா. அம்மா எண்ட வாயை தன் கையால மூடிட்டு சொல்லுவா, “ரதி சத்தம் போடக் கூடாது.” இப்படிச் சொன்னாலே தெரியும் ‘ஆமிக்காரன்’ வாறான் என்று.

அம்மா சொன்னதும் பயமா இருக்கும். பக்கத்து வீட்டு ஆச்சி அடிக்கடி சொல்லுவா “கோதாரி பிடிச்சவங்களோட பெடி பெட்டையளை வச்சிட்டு இருக்க முடியுதே?”

அந்த ஐந்து வயதில் நான் பார்த்தவை, அனுபவித்தவை மனதை கீறியபடி இன்றும். ஊரில் எங்கள் வீடு இருக்கும் காணியில்தான் அம்மாவின் மூன்று சகோதரிகளின் வீடும், இரண்டு சகோதரர்களின் வீடும். அம்மாவின் தகப்பனாரின் ஏற்பாடு. சகோதரங்கள் ஒன்றாக இருக்க வேணுமாம்! இப்படி எத்தனை அம்மப்பாவின் கனவுகளை இந்த கொடிய அரசு கலைத்துள்ளது. இன்று எங்கள் குடும்பதிலேயே ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு நாட்டில் தஞ்சம் புகுந்து...!

கதவைத் தட்டும் சத்தமும், வீட்டைச் சுற்றிப் பல பேர் நடக்கும் சத்தமும் கேட்க, அப்பாச்சி “பிள்ளை வந்திட்டாங்கள் பாவியள், இவளுவள் பெட்டையள நித்திரைகொள்ளுற போலவே இருக்கசொல்லு. நான் போய் கதவை திறக்கிறன்.” அப்பாச்சி சொன்னபடி அம்மா செய்ய முதலே அப்பாச்சி கத்துற சத்தம்.

“அம்மா..” பயத்தில் நான் அம்மாவை இறுக்க கட்டிகொண்டு அழுத சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளயே வந்திட்டாங்கள். பிறகுதான் அப்பாச்சி சொன்னது மனதில இப்பவும் இருக்கு. “பொறுக்கி நாய்கள் பெண்டுகளை வாய் பார்க்க நான் தடுக்கிறன் என்று தள்ளிவிட்டுட்டாங்கள்.”

வந்தவங்கள் உயரமா, தாடி மீசை வைச்சிட்டு ஏதோ புரியாத மொழியில் கதைத்தார்கள். அக்காக்களை முறைச்சு முறைச்சுப் பார்த்தார்கள். ஐந்து வயதில் எனக்கு முறைப்பாக தெரிந்த ஒன்றிற்கு அர்த்தம் வேறு என்பது எனக்கு இப்பொழுதுதான் புரிகிறது.

பக்கத்து வீட்டு போஸ்ட்மாஸ்டர் மாமா வந்து ஏதோ கதைக்க, திரும்பவும் அப்பாச்சியிடம் ஏதோ கூறிவிட்டு போய்விட்டார்கள்.

காலையில் பக்கத்துவீட்டு ஆச்சி,

“வானரங்கள் வீட்டில இருக்கிற மாங்காய், தேங்காய் எல்லாத்தையும் வாரி கொண்டு போட்டுதுகள்."

"அடி பிள்ளை இவனுகள் அதோட போனா பரவாயில்லை. பெடிச்சியள வச்சு கொண்டு படுறபாடு."

அந்த வயதில் அப்பாச்சி சொன்னதின் அர்த்தம் சரியாக புரியாவிடினும், அக்காக்களை முறைச்சு பார்க்கிறதைதான் அப்பாச்சி சொல்லுறா போல என்று நினைத்ததுண்டு.

இப்பொழுது நினைத்தால் மனசை யாரோ குண்டூசியால் குத்துவது போல வலிக்குது.

"இவரிட்ட எப்படியாவது போய் சேர்ந்திட்ட பிரச்சனையில்லை கலா." எங்கட பெரியக்கா மாலா.

பெரியக்காவும், குமார் அண்ணாவும் காதலித்தார்கள். இரு வீடும் சம்மதிக்க, குமார் அண்ணா வெளிநாடு போய் இரண்டு வருடத்தில் கல்யாணம் என முடிவாகி இருந்தது.

"அண்ணா இல்லை ரதி, அத்தான்" என்று பெரியக்கா அப்பொழுதே எனக்கு உரிமையாய் அழைக்கக் கற்றுக் கொடுத்திருந்தார்.

எங்கள் வீட்டைச் சுற்றி சில கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். பொதுவாக நத்தார் காலப்பகுதியில் அந்த இடமே கோவில் திருவிழாபோல இருக்கும்.

அந்த வருடம் எதுவுமே இல்லை! ‘மானமும், உயிரும்தான் முதலில் என்ற நிலை.’ அம்மா பின்னர் சொன்னவ.

"ரதிகுட்டிக்கு யாரை பிடிக்கும்? பெரியக்காவையோ? என்னையோ?"

"ரெண்டு பேரும்."

"கெட்டிக்காரி."

மதிய உணவின் பின்னர், பாண்டி குண்டு விளையாடிக் கொண்டிருந்தோம், பகலில் இந்தியா ஆமிக்காரங்களின் தொல்லை குறைவு எனும் தைரியத்திலும், பக்கத்து வீட்டு ஆச்சி பார்த்துக் கொள்ளுவார் என்ற தைரியத்திலும். அம்மாவை அழைத்துக் கொண்டு பெரியம்மா மருத்துவரிடம் சென்றுவிட்டா.

"ரதி குட்டிக்கு தம்பி விருப்பமோ? தங்கா விருப்பமோ?" பெரியக்காவின் கேள்வி விளையாட்டுக்கு இடையில்.

"தம்பி.."

"ஏன்?"

"தம்பிதான் துவக்கால ஆமிக்காரனை சுடுவான்."

அந்த வயதில் ஆண்களையே அதிகம் துப்பாக்கிகளுடன் பார்த்த எனக்கு அப்படி மனதில் தோன்றிச் சொன்னது இப்பொழுது ஆச்சரியமாகத் தெரியவில்லை.

"என்ட ராசாத்தி, இஞ்ச வாடியம்மா. பெட்டையளோட கடைசியா நீ கதைச்சது இப்பவும் என்ட காதில.." பக்கத்து வீட்டு ஆச்சி பின்னொரு நாளில் பார்த்தபோது. நடந்தவை அனைத்தும் எனக்குத் தெரிய வந்ததும் ஆச்சி மூலமே!

"கலா ஆமிக்காரங்களடி.." மாலாக்காவின் வெளுத்த முகம்..

"ரதி ஷ்ஷ்ஷ்ஷ்... கலா ரதியைக் கொண்டு போய் சாமி அறையில இரு... நான் �“டிப் போய் ஜன்னலால குமுதாவை வீட்டுக்குள்ள போகச் சொல்லிட்டு வாறன்."

குமுதா அக்கா பக்கத்து வீட்டில் இருந்தவ, பெரியக்காட தோழி. ஒன்றாக படித்தவளை எச்சரிக்கப் போய் ஒன்றுமில்லாமல் போனவள் என் சகோதரி!

"ரதி,,," கலாக்கா என் வாயைத் தன் கையால் பொத்திக் கொண்டு அழுதவ. எனக்கும் அழுகை அழுகையாய்.. பயமாக இருந்தது...

வீட்டுக்குள் நிறைய ஆமிக்காரங்கள்.. சப்பாத்து சத்தமும்.. சிரிப்பு சத்தமும்.. புரியாத மொழியில் கதையும்..

சாமி அறைக்கு முன்னால் இருந்த ஹோலுக்குள் வரும் சத்தம். பின்னர் அக்காவின் குரல்..

"என்னை ஒண்டும் செய்யாதிங்கோ... ஐயோ அம்மா..." அக்காட குரல் அறைக்குள் இருந்த எங்களை மேலும் பயமூட்டியது.

"ஆச்சி ஆச்சி... வாங்கோ.. ஆச்சி... முருகா" திரும்பவும் அக்காவின் குரல்..

கொஞ்ச நேரத்தில் அக்காவின் குரல் கேட்க்கவில்லை... வேறு ஏதோ சத்தங்கள்.. ஆமிக்காரங்களின் குரல்கள்...

கலாக்காமட்டும் கதவிடுக்கினூடாகப் பார்த்தபடி அழுது கொண்டிருந்தார். எதுவுமே புரியாமல் அழுதபடி அக்காவின் மடியில் நான்.

நாய்கள் குரைத்து �“ய்ந்த பின், வெளியே போன பெரியம்மாவும், அம்மாவும் வீடு திரும்பி வந்து கத்தும் பொழுதுதான் கலாக்கா அறைக்கதவை திறந்து தானும் கத்தினா..

மண்டபத்தில் பெரியக்கா உடைகளேதுமின்றி, உயிரற்ற உடலாக...

"பெரியக்கா..." கிட்டப் போன என்னை "ரதிக்குட்டி வாடா" என்று சொல்லாமல் அக்கா...

"என்ட ராசாத்தியை நாய்களிப்படி குதறிட்டங்களே.. முருகா நான் விரதம் இருந்து பெத்த பிள்ளை.. இப்படி அலங்கோலப்பட பார்த்து கொண்டிருந்தியா?" பெரியம்மா கத்திக் கத்தி அழுதது..

பல நாய்கள் பலதரம் அக்காவைக் கடித்து குதறியதால் இறந்துவிட்டாவாம். அந்த வயதில் புரியாத அனைத்தும், இப்பொழுது புரிகிறது. வலிக்கிறது.

ஒவ்வொரு தடவையும் ஒரு சீக்கிய இந்தியனைப் பார்க்கும்போது அன்று நடந்தவைகள் நினைவுக்கு வர, அவ்வயதில் புரியாதவை இப்பொழுது புரிய கோபம் வருகிறது. கையில் அகப்படுவதால் எடுத்து அடித்து அவர்களை சாக்கொல்லலாம் போல மனதில் ஒரு வெறி வருகின்றது.

இத்தனை கதறல்கள், ஒப்பாரிகள், சாபங்களுக்கிடையே கலாக்காவின் அமைதி யாருக்கும் தெரியவில்லை. என்னை மடியில் இருத்தியபடியே இருப்பா.

பெரியக்கா இறந்து இரண்டு நாட்களில் ஒரு இரவு.

"ரதி நல்லா படிக்க வேணும். அக்கா போய்ட்டு வாறன்."

"வேணாம் ஆமிக்காரன் அடிப்பான்."

"அவன்களுக்கு நாங்கள் திருப்பி அடிக்கணும்."

காலையில் அக்காவைக் காணவில்லை. கடிதம் ஒன்று கிடைக்கவே வீட்டிலும் அமைதியாய் இருந்துட்டார்களாம்.

பல வருடங்களுக்குப் பின்னர் கலாக்காவை கையில் துப்பாக்கியுடன் பார்த்தேன். பழையவை நினைவில் வர அழுதேன், "நாம் அழுத காலம் போயாச்சு, எம்மை அழ வச்சவனை அழ வைக்கிற காலம் வந்தாச்சு" அக்காவின் பேச்சில் முதிர்ச்சி.

"ரதி....ரதி..." அம்மாவின் குரல் என்னை இன்றைய நாளுக்கு கொண்டு வர,

"என்னம்மா? வாறன்" என கூறி அம்மாவை நாடி போக..

"அத்தான் போனில..."

பெரியக்காவின் அத்தானேதான். நாங்கள் நியுசிலாந்துக்கு வந்துதான் அக்காவின் முடிவு சொல்ல. அத்தான் நடை பிணமாக சுற்றினவராம். அத்தானின் வலி எனக்கு சின்ன வயதில் புரியாவிடிலும் ஒரே வீட்டில் இருந்து அத்தான் அழுவதையும், இரவில் கதறுவதையும் பார்த்திருக்கிறேன்.. கேட்டிருக்கிறேன்..

"கலோ அத்தான்..."

"ரதிக்குட்டி, வேலை முடிஞ்சிட்டுது. வெளிக்கிட்டு நில்லுங்கோ. திவசத்திற்கு தேவையானதை வாங்கிடுவம்." அக்காவைப் போலவே என்னை ரதிக்குட்டி என்று அழைத்து தன் காதலிக்கு உயிர்கொடுக்கிறாராம்.

ஊரெல்லாம் நத்தார் கொண்டாடி, புது வருடத்தை வரவேற்க... எங்கள் வீட்டில் திதி குடுக்கிறோம்...

"சரி அத்தான்.." என சொல்லி தொலை பேசியை வைக்கும்போது எதிரில் சுவரில் அக்காவின் படம்..

அழகாய்தான் சிரிக்கிறாள்.. அதனால் தான் குதறப்பட்டாளோ???

-------------------------------------------------------

http://tamilamutham.net/amutham/index.php?...view&id=547

கதை எழுத என்னை ஊக்குவித்து, கதைக்கான படத்தையும் செய்து, "பார்த்து என் கதை போட்டு உங்கட சைட் கல் அடி வாங்க போது " என்று சொல்லியும் தைரியமாக என் கதையை பிரசுரித்த தமிழமுதம் ஆசிரியருக்கு என் நன்றிகள். :)

Edited by தூயா

இதயத்தை உருக்கும் நல்ல கதை. தூயாவுக்கு வாழ்த்துக்கள்!!

நல்ல ஆக்கம் இது கதை அல்ல எம் வாழ்க்கையின் வலி இந்திய இராணுவத்தின் கொடுமைகளில் பல

அண்மையில் கனாக்கண்டேன் படம் பார்த்தேன் அதில் மம்முட்டி கால் இழந்த இந்திய அமைதிப்படை காடையர் ஆக நடித்திருந்தார் அதை பார்க்கும் போதும் அவரின் புலம்பலை கேட்கும் போதும் கோபம் தலைக்கேறியது

சிறூவயதில் எனக்கு 3 அல்லது 4 வயதிருக்கும் இரவு 8 மணியளவில் செம்மணி பாலத்தில் நானும் எனது தந்தையாரும் சைகிளில் வரும் போது ஹெலி அடிக்க செம்மணி சுடலையில் பிரேதங்கள் ஏரிக்கப்படும் இடத்தில் பாதுகாப்பை பெறும் நோக்கில் படுத்திருந்ததும் எம்மை சுற்றி விழுந்த ரவை சத்தங்களை கேட்க்ககூடியதாக இருந்தது இன்னும் அந்தச்சம்பவம் மனதில் நிற்கின்றது எனது பெரியப்பாவையும் மச்சனையும் சுட்டுக்கொண்டதும் உவங்கள்தான் எம்மை லைனில நிக்கவச்சு கொல்ல வெளிக்கிட்டதும் உவங்கள்தான் யாழ்பானத்தவர் ஒவ்வொருவரும் உவங்களால் பாதிக்கப்பட்டார்கள்

என்னால் இந்திய ராணுவம் செய்த கொடுமைகள் மன்னிக்கபட்ட்முடியாதவை அதற்க்கான பதிலடியும் சரியானதே இந்திய இரானுவத்தை வெளியேற்ற தம்முயிரை கொடுத்த 800 மாவீரர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் என் வீரவணக்கங்கள்

மனது வலிக்கிறது..

யாரோ ஒருவன், தன் , வல்லரசுத்தனத்தை நிலை நாட்டுவதற்காக நாம் கொடுத்த உயிர் விலைகள் கொஞ்சமா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக உருக்கமான கதை தூயா

எங்களுக்கு சிங்களம் குத்தியது நெஞ்சில் என்றால், இந்தியா குத்தியது முதுகில். 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நடந்தபோது இந்திய ஊடகங்கள் தங்கள் இராணுவத்தை புகழ்ந்து புகழ்ந்து எழுதித் தள்ளியதைப் பார்த்தபோது எனக்கு எரிச்சலாக இருந்தது.

அப்போது என் அன்புக்குரிய பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் கார்கில் போரும் கச்சதீவும் என்ற தலைப்பில் மிக அற்புதமான கட்டுரை ஒன்றை எழுதினார். இந்திய இராணுவத்தை சாட்டையால் விளாசுவதுபோல் இருந்தது

என்னுடன் அஸ்ஸாம் மானிலத்தைச் சேர்ந்த பெண் படிக்கிறார். இந்திய இராணுவம் எங்கள் நாட்டில் செய்த கொடுமைகளைச் சொன்ன போது தங்கள் மண்ணிலும் இதே இராணுவம் இது போன்ற கொடுமைகளைச் செய்ததாகச் சொன்னார். தனது உறவுக்கார பெண்களை எல்லாம் இந்திய இராணுவம் வேட்டையாடிய நிகழ்ச்சிகளை பனித்த கண்களுடன் கூறினார். கஷ்மீரிலும் இதே கதைதான்.

பாராட்டுக்கள் தூயா தொடர்ந்து எழுதுங்கள்.

கதை எண்டு சொல்வதை விட உண்மையாய் நடந்த ஒரு சம்பவம் என்டே சொல்லலாம். இப்படி எத்தனை அட்டூழியங்கள். உயிரோட்டத்துடன் எழுதி இருக்கிறியள் பாராட்டுக்கள்.

Edited by Rasikai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மினத்தை கொடுமை புரியும் துன்பத்தின், உண்மை விலையை எம் உணர்வுகளுக்கு அப்படியே எடுத்தியம்பிய தூயாவின் மொழிப்புலைமைக்கு பாராட்டுக்கள்.

என்வாசிப்பனுபவம் பலமேதைகளின் மொழிநடைகளைக் கண்டது.

அத்தனைக்குள்ளும் இது ஒரு தனிரகமாய் என்னை மெய்சிலிர்க்க வைக்குது.

இன்னும் எத்தனையோ உறங்கு நிலையாய் இருக்கும் உண்மைகள் வெளிவர தூயாவின் பேனா உழைக்கவேண்டும் என்று உணர்வுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி தூயா.

துயாவின் இன்னுமோர் படைப்பு. வாசிக்க மனசு கலங்குது.நேற்றும் ஊரில இருக்கிற சித்தியோட கதைக்கும்போது தொட்டில தண்ணி நிறைச்சு வைக்கிறதைத் தெரிஞ்சு களவா ஆமிக்காரர் இரவில வந்து குளிச்சிட்டுப் போறாங்களாம் என்று சொன்னா.இந்தக் கதையை வாசிச்சாப்பிறகு கஸ்டமா இருக்கு.உங்கட வலைப்பதிவும் பார்த்தன்.ஈழம் பற்றிய தொடர் நன்றாக இருக்கு.அநேகமான சம்பவங்கள் எனக்குப் புதிதல்லாததால் வாசிக்க வாசிக்க பழைய ஞாபகங்கள் எல்லாம் வருது.

தூயாவின் விழிப்போடு உலகம் விழிக்குமா...

பாராட்டுகள்

  • தொடங்கியவர்

இதயத்தை உருக்கும் நல்ல கதை. தூயாவுக்கு வாழ்த்துக்கள்!!

நன்றி யாழ்வினோ :icon_idea:

மனது வலிக்கிறது..

யாரோ ஒருவன், தன் , வல்லரசுத்தனத்தை நிலை நாட்டுவதற்காக நாம் கொடுத்த உயிர் விலைகள் கொஞ்சமா...

உண்மை தான்..பதில் சொல்லிதான் ஆகவேண்டும் இதற்கு..அப்படி சொன்னால் கூட போன உயிர்களும் பெண்களின் மானங்களும் தான் திரும்பி வருமா :D

கருதெழுதியமைக்கு நன்றிகள் பல..

கதை எண்டு சொல்வதை விட உண்மையாய் நடந்த ஒரு சம்பவம் என்டே சொல்லலாம். இப்படி எத்தனை அட்டூழியங்கள். உயிரோட்டத்துடன் எழுதி இருக்கிறியள் பாராட்டுக்கள்.

நடந்த பல உண்மை சம்பவங்களின் கோர்வை தான் ரசிகை...நன்றி

Edited by தூயா

  • தொடங்கியவர்

நல்ல ஆக்கம் இது கதை அல்ல எம் வாழ்க்கையின் வலி இந்திய இராணுவத்தின் கொடுமைகளில் பல

அண்மையில் கனாக்கண்டேன் படம் பார்த்தேன் அதில் மம்முட்டி கால் இழந்த இந்திய அமைதிப்படை காடையர் ஆக நடித்திருந்தார் அதை பார்க்கும் போதும் அவரின் புலம்பலை கேட்கும் போதும் கோபம் தலைக்கேறியது

சிறூவயதில் எனக்கு 3 அல்லது 4 வயதிருக்கும் இரவு 8 மணியளவில் செம்மணி பாலத்தில் நானும் எனது தந்தையாரும் சைகிளில் வரும் போது ஹெலி அடிக்க செம்மணி சுடலையில் பிரேதங்கள் ஏரிக்கப்படும் இடத்தில் பாதுகாப்பை பெறும் நோக்கில் படுத்திருந்ததும் எம்மை சுற்றி விழுந்த ரவை சத்தங்களை கேட்க்ககூடியதாக இருந்தது இன்னும் அந்தச்சம்பவம் மனதில் நிற்கின்றது எனது பெரியப்பாவையும் மச்சனையும் சுட்டுக்கொண்டதும் உவங்கள்தான் எம்மை லைனில நிக்கவச்சு கொல்ல வெளிக்கிட்டதும் உவங்கள்தான் யாழ்பானத்தவர் ஒவ்வொருவரும் உவங்களால் பாதிக்கப்பட்டார்கள்

என்னால் இந்திய ராணுவம் செய்த கொடுமைகள் மன்னிக்கபட்ட்முடியாதவை அதற்க்கான பதிலடியும் சரியானதே இந்திய இரானுவத்தை வெளியேற்ற தம்முயிரை கொடுத்த 800 மாவீரர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் என் வீரவணக்கங்கள்

எங்கள் வாழ்வில் இப்படி எத்தனை துயர சம்பவங்கள் :icon_idea: நான் உயிரற்ற உடல்களிடுனேயே இருந்திருக்கின்றேன்.. வாசித்து கருத்தெழுதியமைக்கு நன்றிகள் சகோதரா..

மிக உருக்கமான கதை தூயா

எங்களுக்கு சிங்களம் குத்தியது நெஞ்சில் என்றால், இந்தியா குத்தியது முதுகில். 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நடந்தபோது இந்திய ஊடகங்கள் தங்கள் இராணுவத்தை புகழ்ந்து புகழ்ந்து எழுதித் தள்ளியதைப் பார்த்தபோது எனக்கு எரிச்சலாக இருந்தது.

அப்போது என் அன்புக்குரிய பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் கார்கில் போரும் கச்சதீவும் என்ற தலைப்பில் மிக அற்புதமான கட்டுரை ஒன்றை எழுதினார். இந்திய இராணுவத்தை சாட்டையால் விளாசுவதுபோல் இருந்தது

என்னுடன் அஸ்ஸாம் மானிலத்தைச் சேர்ந்த பெண் படிக்கிறார். இந்திய இராணுவம் எங்கள் நாட்டில் செய்த கொடுமைகளைச் சொன்ன போது தங்கள் மண்ணிலும் இதே இராணுவம் இது போன்ற கொடுமைகளைச் செய்ததாகச் சொன்னார். தனது உறவுக்கார பெண்களை எல்லாம் இந்திய இராணுவம் வேட்டையாடிய நிகழ்ச்சிகளை பனித்த கண்களுடன் கூறினார். கஷ்மீரிலும் இதே கதைதான்.

பாராட்டுக்கள் தூயா தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி இளங்கோ..

நம்ப வச்சு கழுத்தறுத்தவர்களாயிற்றே..

Edited by தூயா

  • தொடங்கியவர்

எம்மினத்தை கொடுமை புரியும் துன்பத்தின், உண்மை விலையை எம் உணர்வுகளுக்கு அப்படியே எடுத்தியம்பிய தூயாவின் மொழிப்புலைமைக்கு பாராட்டுக்கள்.

என்வாசிப்பனுபவம் பலமேதைகளின் மொழிநடைகளைக் கண்டது.

அத்தனைக்குள்ளும் இது ஒரு தனிரகமாய் என்னை மெய்சிலிர்க்க வைக்குது.

இன்னும் எத்தனையோ உறங்கு நிலையாய் இருக்கும் உண்மைகள் வெளிவர தூயாவின் பேனா உழைக்கவேண்டும் என்று உணர்வுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி தூயா.

தேவன்,

உங்கள் பதிலை வாசித்த போது "அப்படியா?" என்ற கேள்விதான் என் மனதில் எழுந்தது..

யாழ் தான் என்னை எழுத தூண்டியது..என்னை வளர்த்தும் விட்டது..

உங்கள் கருத்து மிகவும் உற்சாகம் ஊட்டுவதாக அமைகிறது.

மிக்க நன்றி :icon_idea:

  • தொடங்கியவர்

துயாவின் இன்னுமோர் படைப்பு. வாசிக்க மனசு கலங்குது.நேற்றும் ஊரில இருக்கிற சித்தியோட கதைக்கும்போது தொட்டில தண்ணி நிறைச்சு வைக்கிறதைத் தெரிஞ்சு களவா ஆமிக்காரர் இரவில வந்து குளிச்சிட்டுப் போறாங்களாம் என்று சொன்னா.இந்தக் கதையை வாசிச்சாப்பிறகு கஸ்டமா இருக்கு.உங்கட வலைப்பதிவும் பார்த்தன்.ஈழம் பற்றிய தொடர் நன்றாக இருக்கு.அநேகமான சம்பவங்கள் எனக்குப் புதிதல்லாததால் வாசிக்க வாசிக்க பழைய ஞாபகங்கள் எல்லாம் வருது.

ஆமிக்காரனில் சிங்கள ஆமி என்ன, இந்திய ஆமி என்ன "அனைத்தையும்" களவாடுவது தானே அவர்கள் நோக்கம்..

நன்றி சிநேகிதி...

தூயாவின் விழிப்போடு உலகம் விழிக்குமா...

பாராட்டுகள்

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றிகள் கவி :icon_idea:

Edited by தூயா

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவத்தின் கொடுமைகளைப் பற்றி சாத்திரி அவர்களும் 'நிழலாடும் நினைவுகள்..! ' என்ற தலைப்பில் (கதைகள் பகுதியில்) எழுதிக் கொண்டு வருகிறார். தூயாவின் இவ் ஆக்கத்தினை வாசிக்க நெஞ்சு வலிக்கிறது. நம்பவைத்து ஏமாற்றி விட்டானே இந்திராவின் மகன். இதனால் தான் துடுப்பாட்டப் போட்டிகளில் என்னை அறியாமல் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் அணி வெல்ல வேண்டும் என மனம் விரும்புகிறது. எத்தனை கொடுமைகளைச் செய்து விட்டு உலக அரங்கில் அகிம்சை என்று பொய் வேடமிட்டு நடிக்கிறது. இந்தியா இராணுவ காலங்களில் ஒரு ஊரில் இந்தியா இராணுவத்தினால் நடந்த கொலை, கற்பளிப்பு, களவுகள் பக்கத்து ஊருக்குத் தெரியாமல் செய்தித் தணிக்கையினால் மூடி மறைக்கப் பட்டுள்ளது. பலருக்கு இந்தியா இராணுவம் ஈழத்தினை விட்டு சென்றபின்பு தான் உரும்பிராய்ப் படுகொலை, வல்வைப் படுகொலை, யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் ஊடகங்களில் படிக்கும் போது தெரியவந்தது. இப்படியான இந்திய இராணுவப் படுகொலைகள் எல்லாவற்றியும் தொகுத்து புத்தகமாக வரவேண்டும். எமக்கு நடந்த அனியாயங்கள் வெளிவரவேண்டும்.

  • தொடங்கியவர்

ம்ம் உண்மை தான் கந்தப்பு...வலி இன்னும் அதிகமாகி கொண்டே தான் போகின்றது..இல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதயத்தை உருக்கும் நல்ல கதை. தூயாவுக்கு வாழ்த்துக்கள்!!

தூயா அவர்களே,

இப்போதுதான் வாசித்தேன். யதார்த்ததை படம் பிடித்துக் காட்டி இருக்கும் உங்கள் ஒவ்வொரு வரிகளும் நெஞ்சைப் பிழிகின்றன. திருமலை நகரத்தில் இருந்தமையால் நாங்கள் அவ்வளவாக இந்தியன் ஆமியால் பாதிக்கப் படவில்லை ஆனால் நீங்கள் சொல்லிய ஒவ்வொரு நிஜத்தையும் ஒவ்வொருவர் வாயாலும் அறிந்த போது அதிர்ந்து போனோம். ஆனால் பெண்களை ஆயுதம் தூக்க வைத்த பெருமை அவர்களையே சாரும்!. அன்றுதான் எங்கள் பெண்ணினம் விழித்துக் கொண்டது. !.......

  • தொடங்கியவர்

வணக்கம் தமிழ்தங்கை..உண்மை தான்...எத்தனை கொலைகள், பாலியல் வல்லுறவுகள்....இவை எல்லாம் எங்கள் சகோதர தேசத்து மகன்களால் நடத்தப்பட்டது தான் இன்னும் கொடுமை...

பதிவுக்கு நன்றி..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தமிழ்தங்கை..உண்மை தான்...எத்தனை கொலைகள், பாலியல் வல்லுறவுகள்....இவை எல்லாம் எங்கள் சகோதர தேசத்து மகன்களால் நடத்தப்பட்டது தான் இன்னும் கொடுமை...

பதிவுக்கு நன்றி..

<<<

சகோதர தேசத்து மக்கள்....அதை விடுங்கோ சகோதரனே....அண்ணன் பாசறைக்குள் இருந்து போனவனே துரோகியானனே..அவனால் எத்தனை பேரை இப்ப இழந்து போய் நிற்கிறம். .அதை நினைக்கேக்க இதெல்லாம் பெரிசா தெரியிறதில்லை எனக்கு!.....

உங்கள் கதையின் தலைப்பு மிக அருமை!! ரொம்ம்ப்ப்ப் பிடிச்சிருக்கு.. எனக்கு ஒரு கவிதை எழுதத் தூண்டுகின்றது !!....

இந்திய இடியமின்கள் செய்த அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் கதையாக எழுதும் போது சனங்கள் பெரும்பாலும் நம்பாதுகள். கதையாகவே நினைக்குங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய இடியமின்கள் செய்த அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் கதையாக எழுதும் போது சனங்கள் பெரும்பாலும் நம்பாதுகள். கதையாகவே நினைக்குங்கள்.
<<<

நான் அப்படிச் சொல்லவே இல்லையே!!மாப்பிள்ளை....! இதையெல்லாம் கதை என்று நினைச்சால் அதோ கதிதான்!!...

  • தொடங்கியவர்

தமிழ்தங்கை, எழுதுங்கள்...வாசிக்க காத்துகொண்டிருக்கின்றோம்...

உண்மை தான் மாப்பில்லை...தவறை எப்பொழுதுமே யாரும் ஒத்துகொள்வதில்லையே

  • 1 month later...

வணக்கம் தமிழ்தங்கை..உண்மை தான்...எத்தனை கொலைகள், பாலியல் வல்லுறவுகள்....இவை எல்லாம் எங்கள் சகோதர தேசத்து மகன்களால் நடத்தப்பட்டது தான் இன்னும் கொடுமை...

பதிவுக்கு நன்றி..

இங்கே சகோதரர்களே சொந்த தேசத்து அகதிகளக இருக்கும்போது "சகோதர தேசத்து" வெறும் கர்பனையே.

எமது நலங்கள் இந்திய அரசியல் வாதிகளாலும் அரசாங்கத்தாலும் கிடைக்கப்போவதில்லை. அதை நாமேதான் மீட்டெடுக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.