Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிவடக்கில் மீள்குடியேறிய மக்களையும் சந்தித்தார் ஐ.நா.பொதுச்செயலர்

Featured Replies

வலிவடக்கில் மீள்குடியேறிய மக்களையும் சந்தித்தார் ஐ.நா.பொதுச்செயலர்
 
 
வலிவடக்கில் மீள்குடியேறிய மக்களையும் சந்தித்தார் ஐ.நா.பொதுச்செயலர்
 
வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து அண்மையில் மீள்குடியேறிய பிரதேசத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேரில் சென்று பார்வையிட்டு ள்ளார்.
 
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீமூன் இன்று யாழ். குடாநாட்டிற்கு சென்று இருந்தார்.
1472828456_a1.jpg
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், வட மாகாண முதலமைச்சரையும், அமைச்சர்களையும் சந்தித்து அவர் கலந்துரையாடியிருந்தார்.
 
அதன்பின் வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து அண்மையில் மீள்குடியேறிய மக்களின் வீட்டுத்திட்டங்களையும், மக்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் அவதானம் செலுத்தும் வகையில் அவர் பளை வீமன்காமம் கிராமத்தின் மத்திய பகுதிக்கு விஐயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
1472828469_a2.jpg
இவ்விஜயத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நாயகம் பான்கீ மூன் தலைமையிலான ஏழுபேர் கொண்ட குழுவினர்கள் பங்கேற்றிருந்தனர்.
 
இதன் போது அந்தப் பகுதி மக்களுடனான சினேகபூர்வமான கலந்துரையாடலையும் ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் நாயகம் மேற்கொண்டார்.
 
மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் வீட்டுத் திட்டங்கள் மற்றும் அடிப்படைத் தேவைகள் தொட ர்பில் ஆராய்ந்தார்.தங்களின் எதிர்காலப் எதிர்பார்ப்புகள் தொடர்பாக மக்கள் இதன் போது தமது கருத்துக்களை ஐ.நா பொதுச் செயலாளரிடம் முன்வைத்தனர்.
1472828482_a3.jpg
இந்த விஜயத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் மாவட்டச் செயலகத்தின் காணி மேலதிக செயலாளர் ப.முரளிதரன், வலி வடக்குப் பிரதேச செயலாளர் ஸ்ரீ.மோகன், மற்றும் மீள்குடியேற்ற மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

http://onlineuthayan.com/news/17099

பான் கீ மூனின் வருகைக்காக நாள் முழுவதும் சிறை வைக்கப்பட்ட பளை வீமன்காமம் மக்கள்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இன்று யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட பளை வீமன்காமம் மத்திய பகுதிக்கு இன்று மாலை அவர் விஜயம் செய்திருந்தார்.

பான் கீ மூனின் வருகையின் காரணமாக காங்கேசன்துறை வீதி மற்றும் தெல்லிப்பளை சந்தியிலிருந்து வீமன்காமம் பகுதி வரை விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் இணைந்து கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதன் அதி உச்சமாக வீமன்காமம் பகுதி மக்கள் இன்று முழுவதும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பான் கீ மூனின் பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி, அப்பகுதி மக்களின் சுதந்திரமான நடமாட்டம் முற்று முழுதாக மறுக்கப்பட்டிருந்தமை தொடர்பில் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், நாங்கள் அன்றாடம் கூலித் தொழிலை நம்பியே பிழைத்து வருகிறோம். ஒருநாள் கூலி வேலைக்குப் போகாமல் விட்டால் எங்கள் பிள்ளைகளும், நாங்களும் பட்டினிதான்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இன்று காலை முதல் இந்தப் பகுதியிலிருந்து கூலி வேலைகளுக்குச் செல்வதற்கோ, அல்லது எங்களது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கோ வெளியில் செல்ல பொலிஸார் அனுமதிக்கவில்லை.

ஐ.நா பொதுச் செயலாளர் 30 நிமிடம் வந்து பார்வையிட்டுச் செல்வதற்கு நாங்கள் நாள் முழுவதும் சிறைக் கைதிகள் போன்று வீடுகளுக்குள் முடக்கப்பட்டு வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்? எனவும் கேள்வியெழுப்பினர்.

அந்தப் பகுதியின் வேறு சில மக்களிடம் பான் கீ மூன் பங்கேற்ற நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையா? என வினாவிய போது ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட குறிப்பிடப்பட்ட சிலரே கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டனர் என கவலை வெளியிட்டுள்ளனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/116268

625.0.560.320.500.400.197.800.1280.160.95.jpg

625.0.560.320.500.400.197.800.1280.160.95.jpg

625.0.560.320.500.400.197.800.1280.160.95.jpg

625.0.560.320.500.400.197.800.1280.160.95.jpg

625.0.560.320.500.400.197.800.1280.160.95.jpg

http://www.tamilwin.com/community/01/116268

 

0025.png

ஆமா இந்த வட்டத்துக்குள்ள இருக்குறது பளையா?

இந்த வட்டத்தால் குறிப்பிட்ட இடம் சீமெந்து  தொழிற்சாலைக்கு முன்னே கே கே எஸ் வீதிக்கும் புகையிரத தண்டவாளத்துக்கும் இடைப்பட்ட பகுதி.

இது உண்மையாயின் கொஞ்சம் விசாரித்தபின் பதில் தருகின்றேன்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தைக் கொண்டு முழுவீச்சில் இதைக் கட்டிவிக்க ஆரம்பிச்சு.. அதனை சந்திரிக்கா.. மங்களவைக் கொண்டு.. பிரச்சாரப்படுத்தினது.. பாங்கி மூனுக்கு படம் காட்டத்தான் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

எனி அடுத்த முறை அடுத்த ஐநா செயலர் வரும் போது தான் இத்திட்டம் தூசு தட்டப்படும்... போலவே தெரிகிறது.

சிங்களவன் புலிகள் காலத்திலையே தமிழ் மக்களை ஏமாற்றினவன்.. இப்ப கேட்பார் யாரும் இல்லை காலத்தில்.. சோர தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகளை வைச்சுக் கொண்டு அவனை ஒன்னும் புடுங்க முடியாது. தான் நினைச்சபடி ஆடுறான் சிங்களன். 

தமிழர்கள் இலவுதான் காக்க முடியும். :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, போல் said:

இன்று காலை முதல் இந்தப் பகுதியிலிருந்து கூலி வேலைகளுக்குச் செல்வதற்கோ, அல்லது எங்களது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கோ வெளியில் செல்ல பொலிஸார் அனுமதிக்கவில்லை.

ஐ.நா பொதுச் செயலாளர் 30 நிமிடம் வந்து பார்வையிட்டுச் செல்வதற்கு நாங்கள் நாள் முழுவதும் சிறைக் கைதிகள் போன்று வீடுகளுக்குள் முடக்கப்பட்டு வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்? எனவும் கேள்வியெழுப்பினர்.

பன்னா---  பன் கி மூனும் அவங்கள் கூட்டிக்கொண்டு போய் காட்டினதை பார்த்திட்டு வெரி குட் எண்டு சொல்லிட்டு போயிருக்கும்.tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லிட்டாரல்ல் அண்ணே....சம் ..சும் இற்கு ...டெயிலி அப்பம்தான்....பிறவிப் பயன் அடைந்திட்டினம்..

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.