Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பிலிருந்து கே.கே.எஸ் வந்த புகையிரதம் விபத்து

Featured Replies

கொழும்பிலிருந்து கே.கே.எஸ் வந்த புகையிரதம் விபத்து
 
கொழும்பிலிருந்து கே.கே.எஸ் வந்த புகையிரதம் விபத்து
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற புகையிரதம் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது
1472873730_r1.jpg
புகையிரதத்தின் கட்டுப்பாட்டு கருவி(பிரேக்) செயலிழந்தமையே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1472873753_r2.jpg
 இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை புகையிரத திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
 
1472873774_r3.jpg

http://onlineuthayan.com/news/17102

  • தொடங்கியவர்

தண்டவாளத்தைவிட்டு விலகி வீதியில் பயணித்த ரயில் : யாழில் சம்பவம்

Published by Pradhap on 2016-09-03 11:52:10

யாழ். ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படவிருந்த உத்தரதேவி கடுகதி ரயில், தண்டவாளத்தைவிட்டு விலகி வீதியில் பயணித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

CrZ6nyTWEAAYlxD.jpg

குறித்த சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உத்தரதேவி கடுகதி ரயில் இன்று காலை 6.30 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படுவதற்கு காங்கேசன்துறையிலிருந்து யாழ். ரயில் நிலையத்திற்கு பயணித்த போதே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

CrZ6lDRXgAEHORb.jpg

தண்டவாள தடுப்புக்கள் செயலிழந்ததன் காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த விபத்தினால் உயிரச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த விபத்தின் காரணமாக சுன்னாகம் ரயில் நிலையம் வரையில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விபத்திற்குள்ளான ரயிலின் பெட்டிகளை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

CrZ6lDQXEAAZ95O.jpg

http://www.virakesari.lk/article/10920

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க புது என்ஜின் மாதிரித்தான் தெரியுது... இது இந்தியன் மிட்டல் இரும்பு அல்லவா? ..இரண்௶உம் இந்தியன் சாமான்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, alvayan said:

பார்க்க புது என்ஜின் மாதிரித்தான் தெரியுது... இது இந்தியன் மிட்டல் இரும்பு அல்லவா? ..இரண்௶உம் இந்தியன் சாமான்....

உலகத்திலை  உள்ள உக்கல் ஊத்தை  இரும்புகளை வாங்கிற  கோடீஸ்வர கும்பல் முழுக்க  வட இந்தியாவிலைதானே  இருக்கினம்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் தாங்கள் விரைவில் உலக வல்லரசு ஆகிடினம் என்றூ சொல்லுகினம்.....நம்பிட்டம்...இந்த ரெயின் விபத்தோடை..

12 hours ago, நவீனன் said:

உத்தரதேவி கடுகதி ரயில் இன்று காலை 6.30 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படுவதற்கு காங்கேசன்துறையிலிருந்து யாழ். ரயில் நிலையத்திற்கு பயணித்த போதே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

13 hours ago, நவீனன் said:
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற புகையிரதம் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது

தமிழ் ஊடகங்களின் நிலை மிக மோசமாக இருக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, போல் said:

தமிழ் ஊடகங்களின் நிலை மிக மோசமாக இருக்கின்றது. 

போல்...முகப்புத்தக செய்தியை கொப்பி அடித்தால்....அடி ..நுனி தெரியாது.....கனடாவில் இத் சர்வ்சாதாரணம்....சனமும்  பேப்பரை..சும்மா பொதுத் தேவைக்கு பாவிக்கும்....

Edited by alvayan

3 minutes ago, alvayan said:

போல்...முகப்புத்தக செய்தியை கொப்பி அடித்தால்....அடி ..நுனி தெரியாது.....கனடாவில் இத் சர்வ்சாதாரணம்....சனமும்  பேப்பரை..சும்மா பொதுத் தேவைக்கு பாவிக்கும்....

உண்மை தான்!

ஆனால் இந்த அடி - நுனி தெரியாமல் செய்திகளை தப்புத் தப்பாக பிரதிசெய்யும் ஊடகங்களைப் படித்து தான் சம்சும் கும்பலின் அரசியல் நகர்வது அதைவிடக் கொடுமையானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, போல் said:

உண்மை தான்!

ஆனால் இந்த அடி - நுனி தெரியாமல் செய்திகளை தப்புத் தப்பாக பிரதிசெய்யும் ஊடகங்களைப் படித்து தான் சம்சும் கும்பலின் அரசியல் நகர்வது அதைவிடக் கொடுமையானது.

எல்லாம் காலடியில் மலிந்து கிடக்கும் தொழில்நுட்பவசதிகளால் வரும் வினைகள். 
 
  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவில எதுதான் உருப்படியா இருக்குது..?! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.