Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்தாண்டுகள் பூர்த்தியாவதற்குள் போர் நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்யவும் - ஜனாதிபதியிடம் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் வேண்டுகோள்.

Featured Replies

ஐந்தாண்டுகள் பூர்த்தியாவதற்குள் போர் நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்யவும் - ஜனாதிபதியிடம் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் வேண்டுகோள்.

தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தினர் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது ஒன்றியத்தின் சார்பில் பிக்குமார்களான பெங்கமுவே நாலக தேரர், தம்பர அமில தேரர், ஓமாரே கஸ்ஸப்ப தேரர் மற்றும் கலாநிதி குணதாச அமரசேகர, விமல் வீரவன்ச எம்.பி., சிரேஷ்ட சட்டத்தரணியான எஸ்.எல்.குணசேகர போன்றோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பாகவும் அரசின் எதிர்கால அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை விடுத்துள்ளது.

இதேநேரம், நாட்டின் தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்குவதற்காக சகலரினதும் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் வடக்கு, கிழக்கு மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்து அவர்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இந்த கலந்துரையாடலின்போது விஷேட கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியுடனான இச்சந்திப்பின் போது இலங்கையின் தேசிய பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தங்களது நிலைப்பாட்டை விளக்கும் கடிதமொன்றை ஜனாதிபதியிடம் ஒப்படைத்ததாக தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் தெரிவித்திருக்கிறது.

ஒன்றியத்தினர் ஜனாதிபதியிடம் ஒப்படைத்த கடிதத்தில், 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணைக்கு அமைய, சட்ட விரோதமான போர் நிறுத்த உடன்படிக்கைக்கு 5 ஆண்டுகள் பூர்த்தி அடைவதற்குள் அதை ரத்து செய்ய வேண்டும், சமாதான செயற்பாடுகளில் இருந்து நோர்வேயை உடனடியாக வெளியேற்ற வேண்டும், அதிகார பகிர்வினூடான சமஷ்டி முறை தீர்வை கொண்டு வருவதற்கான செயற்பாட்டை முற்றாக நிறுத்த வேண்டும், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்து, அவர்களை முற்றாக தோற்கடிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்ற 4 விடயங்களை நிறைவேற்றுமாறு கோரப்பட்டுள்ளது.

இவையனைத்தும் நிறைவேற்றப்படாத சூழ்நிலை ஏற்படுமானால், அதற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்குமெனவும் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் ஜனாதிபதிக்கான தனது கடிதத்தில் எச்சரிக்கை செய்துள்ளது.

-Tamilwin-

ஜேவிபி யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்க் எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

ஆனால் வழக்கை நீதிமன்றம் மார்ச் மாதமே விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

பெப்ரவரி 22 ற்கு முன் உடன்படிக்கையை இரத்துச் செய்ய வேண்டுமென்பதே இவர்களின் விருப்பம்.

உடன்படிக்கை பெப்ரவரி 22 ஐ தாண்டினால் என்ன ஆகுமோ தெரியாது.

ஆனால் இரத்து செய்தால் இன்னும் நல்லது.

உடன்படிக்கை பெப்ரவரி 22 ஐ தாண்டினால் என்ன ஆகுமோ தெரியாது.

ஆனால் இரத்து செய்தால் இன்னும் நல்லது."

எதைவைத்து சொல்கிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போர் மாயையில மண் விழுந்திட்டுது எனி ஐந்தாண்டு மாயை வளருங்கோ. இந்தப் புலம்பெயர்ந்த பித்துக்களுக்கு சாப்பிட்டு வீட்டில வெளில வேலை இல்லப் போல..!

இதையும் படியுங்கோ...

சிறீலங்கா அரசாங்கத்தின் ஒரே நோக்கு தமிழர்களை தாயத்திலிருந்து விரட்டுவது - ஜெயானந்தமூர்த்தி

சிறிலங்கா அரசாங்கத்தின் ஒரே நோக்கு தமிழர்களை தாயகப் பகுதியில் இருந்து விரட்டியடித்து பல அவலங்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக உள்ளது. இந்த ஈனச் செயலுக்கு இராணுவம் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டுவருகின்றது. இந்நடவடிக்கையினை வன்மையாக கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு பகுதியில் மக்கள் வாழ்க்கின்ற குடியிருப்புக்கள் மீது இராணுவம் தொடர்ந்து ஆட்லறி மற்றும் விமானத் தாக்குதல்லை மேற்கொண்டதன் விளைவாக அங்கியிருந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் வாகரை பகுதியில் தஞ்சமடைந்தனர்.

அப்பகுதியிலும் தொடர்ந்து; அகதிகள் தங்கியிருந்த பகுதி குடிப்பு பகுதி மற்றும் வாகரை வைத்தியசாலையை சூழ உள்ள பகுதியை நோக்கி இராணுவம் மோட்டார் ஆட்லறி தாக்குதல் மேற்கொண்டது. இதன் காரணமாக சிலர் கொல்லப்பட்டும் மேலும் பலர் படுகாயமடைந்னர். இவ்வாறு மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதன் மூலம் அங்குள்ள மக்களை விரட்டியடித்து தமிழர்களின் தாயகப் பகுதியினை அபகரிக்கும் நோக்கியி;ல் அரசாங்ம் ஈடுபட்டுள்ளது.

இதற்காக இராணுவத்தினரையும் துணை இராணுவ குழுக்களையும் நன்கு திட்டமிட்ட பயன்படுத்திவருகின்றது. இராணுவ ஆக்கிரமிப்பினால் பொதுமக்கள் தமது சொந்த இடங்களை கைவிட்டது மாத்திரமல்லாது சொத்துக்கள் வளங்கள் அனைத்தும் இழந்து வெறும் கையுடன் தமது உயிர் தப்பினால் போதும் என்றளவுக்கு மக்கள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இது எந்த ஒரு நாட்டிலும் இடம்பெறாத மனித உரிமை மீறலாகும். மக்களின் நலன்களை எவ்விதத்திலும் கவனத்தில் கொள்ளாது சிறிலாங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் கண் மூடித்தனமான பயங்கரவாதத்தினை உடனடியாக நிறுத்த சர்வதேச தனது மௌனத்தினை களைக்க வேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜெயானந்தமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழர் தாயகப் பகுதியில் அமைதியான முறையில் வாழ்ந்த மக்கள் இன்று உணவு தண்ணீர் இன்றி சிறார்கள் வயோதிபாக்கள் கர்ப்பாணித்தாய்மார்கள் என அனைவரும் அங்குமிங்குமாக அலை மோதுகின்றாhகள். மழை வெயில் என வெட்டவெளியில் புழுங்குகின்றார்கள். அரசாங்கத்தின் இந்த மனிதாபிமான மற்ற செயல் முறையினை உடனடியாக நிறுத்த வேண்டும்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடர்க்கம் இன்றுவரைக்கும் கிழக்கு மாகாணத்தின் தமிழர்கள் பெரும் இன்னல்களை எதிர் நோக்கியுள்ளார்கள். அரசாங்கத்தின் பயங்கரவாத செயல் முறைக்கு முடிவு கட்டப்படுவதுடன் மக்கள் அகதி முகாங்களில் வாழ்கின்ற நிலை முற்றிலும் மாறி தமிழர் நிலப்பரப்பில் சுபிச்சமாகவும் நிம்மதியாகவும் வாழக் கூடிய சூழ் நிலையினை சர்வதேச சமூகம் மிகவிரைவில் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு.கொம்

கிழக்கு தீமோர் போலாகும் எண்ட கவலை பிக்குமாருக்கு வந்திட்டுது போல...

ஏன் 5ஆண்டுகளானால் என்ன? என்ன நடக்கும்?

ஏன் 5ஆண்டுகளானால் என்ன? என்ன நடக்கும்?

தற்போதைய யுத்தநிறுத்த ஒப்பந்தம் தமிழர்தரப்பும் சிங்கள தரப்பும் குறிப்பிட்ட நிலப்பரப்பைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர் என்றும், அந் நிலப்பரப்புக்களுக்கு எல்லையும் உள்ளது என்பதை உறுதி செய்கிறது. இந்த ஒப்பந்தம் ஆகக் குறைந்தது 5 வருடங்களுக்கு அமுலில் இருந்தால், சர்வதேச சட்டத்திற்கமைய அப்பகுதிகள் அவர்களின் நிரந்தர பகுதிகளாக சட்டரீதியாக அங்கீகரிக்கப்படும். இக் கருத்தை நேற்று முன் தினம் ஜே.வி.பி யும் முன் வைத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால்தான் இந்த யுத்த நிறுத்தம் 5 வருடத்தை எட்டக்கூடாது என்பதற்காக ஜே.வி.பி அரசுக்கு ஆலோசனை கூறி மகிந்தரும் யுத்தத்தைத் தமிழர் தரப்பு மீது திணிக்கின்றார். அவர்களைப் பொறுத்த வரையில் எப்படியாயினும் புலிகளைச் சண்டைக்கு இழுத்து யுத்தநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் இலட்சியம். சிங்கள தரப்பின் இந்த நோக்கத்தை அறியாதது அல்ல தமிழர் தலைமை. அதனால் தான் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடு நிறுத்தி, தாம் இன்னும் யுத்தநிறுத்ததைக் கடைப்பிடிப்பதாக தமிழர் தரப்பு வலியுறுத்தி வருகிறது. என்னைப் பொறுத்த வரை சிங்கள அரசின் தந்திர வலைக்குள் வீழ்ந்து யுத்தநிறுத்தத்தை முறிக்காமல், மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடு இன்னும் ஒரு மாதத்தைக் கடத்த வேண்டும். பின்னர் யுத்தநிறுத்தத்திற்கு 5 வயதானதும் எமது பகுதியைப் பிரகடனப்படுத்தி சர்வதேச அங்கீகாரத்தை கோர வேண்டும். அப்போது சில நாடுகள் எம்மை அங்கீகரிக்கும். அதன் பின் மிச்ச தமிழ்ப்பகுதிகளையும் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும். B) B) B)

இது எதுவும் சரிவராவிட்டால் இறுதி யுத்தம்தான், முழுமையான மண் மீட்பிற்க்கு பின்னர்தான் பேச்சுக்கள், அதுவும் எல்லைகோடுகள் பற்றி மட்டுமே. :huh::huh::D

Edited by Birundan

  • கருத்துக்கள உறவுகள்

5 ஆண்டுகள் முடிந்ததும் போர் நிறுத்த உடன்படிக்கை 5 ஆண்டு காலத்தை பூர்த்தி செய்யும். பங்குனி 6 அல்லது கூடிய விரைவில் ஜே வி பி யினர் இவ் உடன்படிக்கையை நீதி(?) மன்றத்தின் மூலம் ரத்து செய்யப்படும். கண்காணிப்பு(?) குழுவினர் பெட்டியை கட்டுவார்கள். இதன் மூலம் இந்தியாவை கண்காணிப்பு போன்று செயற்பட மகிந்த வெற்றிலை வைப்பார்.தமிழர்கட்கு திருப்பி அடிப்பதை தவிர வேறொரு மார்க்கமும் மிகுதி இல்லை.

5 வருடக் கணக்கு சும்மா ஒரு பம்மாத்து! அதில் ஒன்றும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

5 வருடக் கணக்கு சும்மா ஒரு பம்மாத்து! அதில் ஒன்றும் இல்லை.

பிருந்தன் சொல்லியுள்ளதில் சில உண்மைகள் உள்ளன. JVP சில காரணங்களினால் தான் இந்த யுத்த நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என வாதாடி வருகிறது! என்கோ இது பார்த்துள்ளேன், ஆனால் இப்போது நினைவில் இல்லை. யாராவது இது பற்றி மேலும் தகவல்கள் தெரிந்தால் தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும்.

இன்று 22 ஆம் திகதி. அடுத்தமாதம் இன்னாள்வரை மாசி 22 எல்லா பொறுமையும் முடிவுக்கு வருமா?

இல்லை அதில் இருந்து யுத்த நிறுத்தவிதிப்படி 14 நாட்கள் அவகாசம் கொடுத்துப் பார்த்தால் பங்குனி 08.

மீண்டும் ஒரு முறை வரலாற்றை மீட்டிப்பாத்தால் புலிகள் எப்பவும் எண் சாஸ்திரப்படி 8 சம்பந்தப்பட்ட திகதிகளில் களில் தாக்குதல் நடத்துவது வழமை.

அப்படிப்பாத்தால் பங்குனி 08 பரவலான கனரக பாச்சல் ஆரம்பமாகும். புலம்பெயர்ந்த இணைய செய்தித் தளங்களிற்கு செய்தி வந்து சேர முதலே பல எதரியின் தளங்கள் துவசம் செய்யப்பட்டுவிடும். network warfare என்ற புதுவித முறை தாக்குதல் நடத்தப்படும். எல்லாப்படையணிகளும் ஒரே அடியாக பாயும். புட்பக விமானங்கள் கூட பயன்படுத்தப்படலாம். சிங்களப்படைகள் பொலநறுவையை கூட விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள்.

இயங்கு நிலையில் பெருமளவான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்படும். அளவுக்கு அதிகமாக தேவையில்லை என்று பரந்தனில் நடந்தது போல் கைப்பற்றி அழிக்கப்படும். சித்திரை வருடப்பிறப்பிற்கு யாழின் கொடியேற்றலிற்கு பழிவாங்கலாக அம்பாந்தோட்டையில் கொடியேற்றப்படும்.

பின்னர் நீர்கொழும்பிற்காக பேரம் பேசப்பட்டு அம்பாந்தோடை கைய்யளிக்கப்படும். சர்வதேசம் பாக்கும் நீங்கள் செரியான பலமாக இருக்கிறியள் என்று உடனை அங்கீகரிக்கும் ஆனி ஆடி அளவில. எங்கடை கோடை விடுமுறைக்கு வழி பிறந்துவிடும். புலிக் கொடி பறக்கும் கட்டுநாயக்காவிலேயே போய் இறங்கலாம்.

இதுகளை நினைச்சா சிங்களவனுக்கு சலம் மலம் 2 உம் ஓரே அடியா போகுதாம். அது தான் 5 வருடம் அடைய விட வேண்டாம் என்று அழுறானாம். பலவீனமான சிங்கள தேசத்திற்கு சர்வதேசம் பிச்சை போடுமா? இல்லவே இல்லை நாங்கள் பலமாக இருப்பதாக எழுதுவதால் எங்கடைபக்கம் தான் சர்வதேசம் சாயும். அதற்கான அறிகுறியாகத்தான் யேர்மனியும் ஜரோப்பிய ஒன்றியமும் தடையை நீக்கி எங்களை அங்கீகரித்துவிட்டது மிகவிரைவில் சிறீலங்காவை தடை செய்யப்போகுதாம். தூதுவராலங்கள் எல்லாத்தையும் மூடப்போகுதாம். சிறீலங்கா பலத்த நெருக்கடியில் இருக்கிறது. மகிந்தவிற்கு ஒரே தலைவலி. சித்தலெப்பை தடவி விடயாரும் முன்வருவார்களா? யுத்தம் உங்களை அழித்துவிடும் கைவிட்டுவிடுங்கள் என்றம் கேட்டியளே. இஸ்ரேல் என்று நீங்கள் நினைத்தியள் ஆனா நாங்கள் தான் பொத்தனை அமத்தி அமத்தி எல்லாத்தை முடிச்சுப்போட்டம் ஒரு இழப்பும் இல்லாமல்....

:huh:

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா அடிச்சுப் போட்டு முகிலுக்குள்ளால போட்டு வந்தமாதிரி இருக்கு.. :huh:

தேனீயின் அரசியல் விஞ்ஞான அலசல்களின்படி பெப்ரவரி 22 உடன் 14 நாட்களைக் கூட்டினால் மார்ச் 8 !

:huh::huh::D நல்ல கற்பனை குறுக்ஸ் :D:D:lol:
  • கருத்துக்கள உறவுகள்

:huh::huh::D நல்ல கற்பனை குறுக்ஸ் :D:D:lol:

நீங்கள் எப்ப திருந்தினனீங்கள். கிளாஸ்கோ மேல லவ் வந்த பிறகா.

உவர் குறுக்காலபோறவர் இருக்கிறாரே அவர் எப்பவுமே ஜோக்கர்தான். ஒன்றில் இப்படி எழுதுவார் இல்லா விட்டால் தமிழ் ஆங்கிலம் என்று விளாசிக்கட்டி அமெரிக்காவுக்கு அரோகரா என்றிட்டு தனர முழுத்திறமையால சனம் குனிஞ்ச தலை நிமிர்த்திட்டு என்று கொலரை இழுத்திட்டுப் போவாராம்..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன காணும் அலம்பிறீர்.ஒரு காலத்தில் ஆலாலசுந்தரம் என்றொரு தண்ணிச்சாமி தமிழர் விடுதலைக்கூட்டணிக்காக மேடையில் அலம்புவார். நீர் அவரை தான் நினைவு படுத்துகின்றீர்.தயவு செய்து அலம்பாதையும்.தண்ணியைப் போட்டால் பேசாமல் படும்.

5 ஆண்டுகள் அல்ல 7 ஆண்டுகள் ஒரு உடன்படிக்கை தொடர்ந்து அமுலில் இருந்தால் அது நிலையானதாக மாறி தனிநாட்டுக்குறிய ஒரு சாசன்மாக மாற்றப்படும் என்பது ஐ.நா வில் உள்ள ஒரு சரத்து. அதற்காக தான் பொடியள் காத்திருக்கிறார்கள் என்று மெல்பேனில் ஒரு முக்கியமான ஒரு ஆள் சொன்னதாக ஒரு நினைவு.

ஐநாவில் அப்படி ஒரு சரத்தும் இல்லை.

இவைகள் சிங்கள இனவாதிகள் சிங்கள மக்களை பீதிக்கு உள்ளாக்குவதற்காக கிளப்பி விட்ட வதந்தி!

அது பொய் அப்படி ஒண்டுமில்லை ஜநா வில்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் 5 ஆண்டு கணக்கை கைவிரலில எண்ணிக் கொண்டு இருங்கோ.. சிங்களவன் போரா சமாதானமா என்று சவாலே விட்டிட்டான். எனி அடிக்கிற அடில தொப்பிக்கல பிளக்கப் போகுது. ஓடவும் இடமில்ல..! கண்காணிப்புக்குழு அறிக்கை விட்டிட்டு குறட்டை அடிக்குது.

கிழக்கை மறந்திட்டு.. எனி வடக்கை என்றாலும் பாதுகாக்க முனையுங்கோ ஐந்தாண்டு பிறக்கிறத்துக்கிடையில..!

ஐநா சபை தன்ர பங்குக்கு மனித உரிமைகள் காக்க கத்திட்டு இருக்குது. செயலில தான் ஒன்றுமில்ல..! :rolleyes:

ஐநாவில் அப்படி ஒரு சரத்தும் இல்லை.

இவைகள் சிங்கள இனவாதிகள் சிங்கள மக்களை பீதிக்கு உள்ளாக்குவதற்காக கிளப்பி விட்ட வதந்தி!

ஒன்றும் இல்லாதற்க்கா இவ்வளவு ஆரவாரம்?..தாங்களும் குழம்பி அடுத்தவரையும் குழம்ப வைக்க்றார்கள்!

இன்று 22 ஆம் திகதி. அடுத்தமாதம் இன்னாள்வரை மாசி 22 எல்லா பொறுமையும் முடிவுக்கு வருமா?

இல்லை அதில் இருந்து யுத்த நிறுத்தவிதிப்படி 14 நாட்கள் அவகாசம் கொடுத்துப் பார்த்தால் பங்குனி 08.

மீண்டும் ஒரு முறை வரலாற்றை மீட்டிப்பாத்தால் புலிகள் எப்பவும் எண் சாஸ்திரப்படி 8 சம்பந்தப்பட்ட திகதிகளில் களில் தாக்குதல் நடத்துவது வழமை.

அப்படிப்பாத்தால் பங்குனி 08 பரவலான கனரக பாச்சல் ஆரம்பமாகும். புலம்பெயர்ந்த இணைய செய்தித் தளங்களிற்கு செய்தி வந்து சேர முதலே பல எதரியின் தளங்கள் துவசம் செய்யப்பட்டுவிடும். network warfare என்ற புதுவித முறை தாக்குதல் நடத்தப்படும். எல்லாப்படையணிகளும் ஒரே அடியாக பாயும். புட்பக விமானங்கள் கூட பயன்படுத்தப்படலாம். சிங்களப்படைகள் பொலநறுவையை கூட விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள்.

இயங்கு நிலையில் பெருமளவான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்படும். அளவுக்கு அதிகமாக தேவையில்லை என்று பரந்தனில் நடந்தது போல் கைப்பற்றி அழிக்கப்படும். சித்திரை வருடப்பிறப்பிற்கு யாழின் கொடியேற்றலிற்கு பழிவாங்கலாக அம்பாந்தோட்டையில் கொடியேற்றப்படும்.

பின்னர் நீர்கொழும்பிற்காக பேரம் பேசப்பட்டு அம்பாந்தோடை கைய்யளிக்கப்படும். சர்வதேசம் பாக்கும் நீங்கள் செரியான பலமாக இருக்கிறியள் என்று உடனை அங்கீகரிக்கும் ஆனி ஆடி அளவில. எங்கடை கோடை விடுமுறைக்கு வழி பிறந்துவிடும். புலிக் கொடி பறக்கும் கட்டுநாயக்காவிலேயே போய் இறங்கலாம்.

இதுகளை நினைச்சா சிங்களவனுக்கு சலம் மலம் 2 உம் ஓரே அடியா போகுதாம். அது தான் 5 வருடம் அடைய விட வேண்டாம் என்று அழுறானாம். பலவீனமான சிங்கள தேசத்திற்கு சர்வதேசம் பிச்சை போடுமா? இல்லவே இல்லை நாங்கள் பலமாக இருப்பதாக எழுதுவதால் எங்கடைபக்கம் தான் சர்வதேசம் சாயும். அதற்கான அறிகுறியாகத்தான் யேர்மனியும் ஜரோப்பிய ஒன்றியமும் தடையை நீக்கி எங்களை அங்கீகரித்துவிட்டது மிகவிரைவில் சிறீலங்காவை தடை செய்யப்போகுதாம். தூதுவராலங்கள் எல்லாத்தையும் மூடப்போகுதாம். சிறீலங்கா பலத்த நெருக்கடியில் இருக்கிறது. மகிந்தவிற்கு ஒரே தலைவலி. சித்தலெப்பை தடவி விடயாரும் முன்வருவார்களா? யுத்தம் உங்களை அழித்துவிடும் கைவிட்டுவிடுங்கள் என்றம் கேட்டியளே. இஸ்ரேல் என்று நீங்கள் நினைத்தியள் ஆனா நாங்கள் தான் பொத்தனை அமத்தி அமத்தி எல்லாத்தை முடிச்சுப்போட்டம் ஒரு இழப்பும் இல்லாமல்....

:rolleyes:

எங்கட மக்கள கடைசிவரைக்கும் நம்பிக்கை இழக்கவிடக்கூடாது இப்படியான ஆய்வாளர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கவேண்டும். கடைசிதுண்டு நிலம் பறி போகும் வரைக்கு சனம் நம்பிக்கை இழக்க விடாமல் வைத்திருக்க இப்படியான ஆய்வாளரின்ர பங்கு பேருதவியாக இருக்கும்.

அதுசரி குறுக்ஸ் ராச பக்சாவுக்கு சித்தாலேப தடவிவிட அவற்ற மனிசி இருப்பாதானே ஏனாம் எங்க போயிட்ட அவா?இந்த அதிமுக்கிய கேள்விக்கு நீர் கட்டாயம் பதில் சோல வேண்டும். :mellow::lol::lol: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.