Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சந்தேகங்கள், ஆலோசனைகள், அறிவித்தல்கள்??

Featured Replies

  • தொடங்கியவர்

சபேசன் அண்ணை,

உதைத்தான் நக்கல் எண்டு சொல்லிறதாக்கும்! :icon_mrgreen:

  • Replies 281
  • Views 80.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் இல்லை எங்கின்ற நாத்தியத்துக்கும் பகுத்தறிவுக்கும் என்ன சம்பந்தம்.

தயவுசெய்து கடவுள் இல்லை என்ற அனுமானிக்கின்றவர்களை.. மதங்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்களை பகுத்தறிவுவாதிகள் என்ற வரையறைக்குள் அடக்குவதை முதலில் நிறுத்துங்கள்.

பகுத்தறிவு என்பது பகுத்தாயும் மனித அறிவாற்றல். மனித மூளையின் சிறப்புச் செயல். உடலாரோக்கியமுள்ள மனிதர்கள் எல்லோருக்கும் அந்த நிலை உண்டு.

தாய்க்கும் மனைவிக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணராமல் இரண்டும் பெண் தானே என்று சொல்லுற கூட்டத்துக்கும் தாய் மனைவி பெண்ணாக இருந்தாலும் இரண்டுக்கும் இடையில் நுட்பமான வேறுபாடுகள் உண்டு.. அது உணர்வியல் ரீதியானது என்பதை பகுத்துணரும் மனிதர்களுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உண்டு.

கடவுள் இல்லை என்பது போல இருக்கிறார் என்பது ஒரு நம்பிக்கை. அங்கு பகுத்தறிய ஏதும் இல்லை. காரணம்.. கடவுள் என்பதை காட்டவும் முடியாது... இல்லை என்று நிறுவமும் முடியாது.

மனித ஆற்றலுக்கு அப்பால் நடக்கும் சில அசாதாரணங்களுக்கு விளக்கங்கள் கிடைக்காத போது மனிதன் கடவுளை நம்புறான். சிலர் அதை நம்பவில்லை. அப்படி நம்பாதவர்கள் எப்படி பகுத்தறிவுவாதிகளாவர். அவர்கள் விடயத்தை பகுத்தறியவே இல்லை.. மாறாக இலகுவாக எதிர்நிலைப்பாடு எடுக்கின்றனர். உண்மையான பகுத்தறிவாளன்.. ஒன்றில் அறிவியல் கொண்டு ஒரு விடயத்தை பகுத்தாய்ந்து சொல்ல வேண்டும்.. இன்றேல்.. மெய்யியல் கொண்டு சொல்ல வேண்டும். இது இரண்டும் இல்லை. எடுத்ததுக்கெல்லாம்.. எதிர்நிலைப்பாடு கொள்ளுதல்.. என்பது பகுத்தறிவு நிலையல்ல. எனவே யாழ் களத்தில் எம்மைப் பொறுத்தவரை அறிவியல் அல்லது மெய்யியல் கொண்டு விடயங்களை அணுகாத எந்த கருத்தாளனும் பகுத்தறிவாளன் அல்ல. அப்படி விழிப்பது சமூகத்துக்கு தவறான அடையாளமிடலையே செய்யும்..!

அறிவியல் என்பது சமூக அறிவியலாக இருக்கட்டும்.. இயல்வியலாகட்டும்.. எது கொண்டும் இங்கு பகுத்தாய்ந்ததாக இல்லை.

சிலையை கடவுளாக் கும்பிடுறதை தப்பு எங்கிறார்கள்.. சிலை உதவிக்கு வருமா எங்கிறார்கள்.. மாமிசத்தை புசித்தால் என்ன.. தப்பா எங்கிறார்கள்..!

இவர்கள் மனம் என்ற ஒன்றின் ஒருங்கு நிலையின் ஒழுங்கு நிலையை கருத்தில் கொள்வதில்லை. அதற்கு மெய்யியல் அறிவு வேண்டும்.

சிலைகளை நோக்கி புலங்களைச் செலுத்துதல் என்பது தியானத்தின் ஒரு நிலை. கோவில்கள் அமைதியான சூழலில் கட்டப்பட்டிருக்கும். காரணம் என்ன.. மன ஒருங்குநிலையைப் பேணுவதற்குத்தான்.

யாழ் களத்தில் பிரார்த்தனைப் பக்கம் திறப்பதால்.. அதை எத்தனை பேர் சரியான வழிமுறையில் பாவிப்பர்..??!

முரண்பாடுகளை வளர்க்க முனைபவர்கள் தான் அதற்குள்ளும் பிச்சுப் பிடுங்குப்படுவர்.

எதனையின் பகுத்தாயும் வகையில் அணுகமாட்டார்கள். உடனவே எதிர்நிலைப்பாடு எடுத்து முழங்கித் தள்ளுவார்கள்.

கடவுளைப் பற்றி கதைத்தாலே அது கடவுளை வாழ வைப்பதாக சிலர் பதறியடிக்கின்றனர். இவர்கள் கடவுளை எதிர்க்க காவும் பதம் பகுத்தறிவு. ஆனால் உண்மையில் அவர்களுக்கு அந்தப் பதத்திற்கே அர்த்தம் புரியல்ல என்பதுதான் நிஜம். கடவுள் இல்லை என்று உரக்க கத்துவதிலும்.. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று பகுத்தாய்ந்து முடிவெடுக்க இவர்கள் வழிகாட்டுவதே இல்லை.

கோயிலில் வணங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை வன்புணர முயற்சிக்கும் குழுமத்தை சிலைகள் வந்து காத்தனவா என்று கேட்டு கடவுள் மறுப்பை போதிக்கும் கூட்டத்தினர்... கோயிலுக்கு வராது வீட்டில் இருக்கும் பெண்கள் மீது செய்யப்படும் வன்புணர்வைப் பற்றி அறிந்து அதற்கு எதனை குறை சொல்லப் போகின்றனர். வீட்டையா...???! ஏன் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகப் பெண்ணை ஒருவன் வன்புணர முடியாதா...???!

ஆக கடவுள் நம்பிக்கை என்பதை தகர்க்க இவர்கள் எடுத்திருக்கும் எதிர்நிலைப்பாடு என்பது பகுத்தறிவல்ல. அது சாதாரண மனித எதிர்நிலைப்பாடு.

அந்த வகையில்.. இவற்றைப் பகுத்தறிவு என்பதை யாழிலும் விழிக்க வேண்டும் என்பது பொருத்தமாக இல்லை.

வருங்காலத்தில் யாழில் உள்ள மத மற்றும் கடவுள் மற்றும் பிராமண எதிர்ப்புவாதிகளை.. நாம் எதிர்மறையாளர்கள் அல்லது எதிர்நிலையாளிகள் என்று அழைக்க உள்ளோம். அவர்களைப் பகுத்தறிவுவாதிகள் என்று அழைப்பதை முற்றாக தவறென்று சுட்டிக்காட்டுவதுடன் தவிர்க்கவும் செய்யவுள்ளோம். :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி!

இது உங்களுக்கு விளங்கவில்லையா?

இன்றைக்கு ஐரோப்பாவை பாருங்கள். எவ்வளவு ஏழ்மையாக இருக்கிறது. எல்லோரும் பட்டினி கிடந்த சாகிறார்கள். கல்வி அறிவு என்பதே இல்லை.

ஆனால் தமிழர்களைப் பாருங்கள். கல்வியை பிரார்த்தனையோடு ஆரம்பித்தார்கள். கல்விக்கு என்று ஒரு கடவுளை வணங்கி தமது கல்வியை ஆரம்பித்ததன் விளைவு, இன்றைக்கு எல்லோரும் சிறந்த கல்விமான்களாக இருக்கிறார்கள்.

எந்தத் தொழிலை ஆரம்பித்தாலும் பிரார்த்தனையோடு ஆரம்பித்து, அதுவும் செல்வத்திற்கு என்று ஒரு கடவுளை வணங்கி, தினமும் பிரார்த்தனை செய்ததன் விளைவு, இன்றைக்கு அனைத்து தமிழர்களும் பெரும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். தமிழர்களின் அனைத்து தொழில் நிறுவனங்களும் கொடி கட்டிப் பறக்கின்றன.

பிரார்த்தனையால் பெற்ற பயனைப் பார்த்தீர்களா?

பிரார்த்தனை செய்து ராக்கெட்டை விண்ணில் ஏவினால் பறக்காது என்று யாராவது சொல்லினமா...??! நேர விரயத்தை தவிர பறக்கிற ராக்கெட் பறக்கத்தான் செய்யும். விழுகிறது விழத்தான் செய்யும். பிரார்த்தனை செய்வதால்.. மனிதன் மனதளவில்.. திருப்திப்படுகிறான்.. அமைதிப்படுகிறான். குழப்பங்களை சுமந்திட்டு திரியனும் என்ற நிலையில் இருந்து விடுபடுறான்.

ஐரோப்பாவில் பலர் மன அழுத்த நோய்க்கு ஆளாகியுள்ளனர். இப்போ ஐரோப்பிய மேற்குலக கலாசாரப் பாதிப்புகளுக்குள்ளான கிழக்கிலும் இதே நிலை தோன்றி வருகிறது. பிரார்த்தனை செய்வதால் மன அழுத்தம் குறைந்து வேலைகளை சுறுசுறுப்பாகச் செய்ய முடிகிறது என்று அண்மையில் அவுஸ்திரேலிய தொழில்நிறுவனம் ஒன்று தனது ஊழியர்கள் வேலை தொடங்கும் முன்னர் 15 நிமிடமாவது பிரார்த்தனை செய்து மன அடக்கம் செய்ய அனுமதித்தது..!

உங்களுக்கு ஒரு விடயத்தை ஆழ்ந்து நோக்க முடியல்லை என்பதற்காக.. அது எல்லாம் தவறென்பது அர்த்தமல்ல..! மனித அறிவாற்றல் கூட ஒரு எல்லைக்குள் தான் சுழன்று கொண்டிருக்கிறது. அறியப்படாமல் எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன. :lol::icon_mrgreen:

Praying 'aids mental health'

People who pray frequently are less likely to suffer from depression and anxiety, according to a study.

http://news.bbc.co.uk/1/hi/health/516350.stm

http://news.ufl.edu/2000/12/28/prayer/

Edited by nedukkalapoovan

ஐரோப்பாவில் பலர் மன அழுத்த நோய்க்கு ஆளாகி உள்ளார்கள். உண்மைதான்.

அதற்கு மனதை அடக்கி ஒருமித்து ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்கும்படி சொல்லப்படுகிறது. ஆனால் அது இங்கே கலைஞன் குறிப்பிட்ட பிரார்த்தனை அல்ல.

மன அழுத்த நோய்க்கு ஆளான யாரையும எந்த ஒரு மருத்துவரும் "ஜெபம்" செய்யச் சொன்னதாக நான் அறியவில்லை.

இங்கே கலைஞன் குமுதத்தில் வரும் பிரார்த்தனைப் பகுதியை உதாரணம் காட்டி ஏதோ ஒரு கடவுளை பிரார்த்தித்து கருத்துக்களை ஆரம்பிப்பது பற்றிச் சொன்னார்.

இந்தப் பிரார்த்தனை வேறு, நெடுக்காலபோவான் குறிப்பிடுகின்ற மனஒருங்கிணைப்பு பயிற்சி வேறு.

வேண்டுமென்றால் அவரவர் வீட்டில் இருந்தபடி நெடுக்காலபோவான் குறிப்பிடும் இந்தப் பயிற்சியை ஒரு குறிப்பிட்ட நேரம் செய்துவிட்ட கருத்துக்களை எழுதலாம். மனஅழுத்தம் குறையும்.

இன்னும் ஒன்றையும் சொல்லவேண்டும்

தமிழ் மக்கள் மத்தியில் பிரார்த்தனை இருப்பதால், அவர்களிடம் மன அழுத்த நோய் குறைவு என்பது போன்றும், பிரார்த்தனை இல்லாததால் ஐரோப்பியர்களிடம் மன அழுத்த நோய் அதிகம் என்பது போன்றும் பொருள் தரக்கூடிய கருத்தை நெடுக்காலபோவான் தந்திருக்கிறார்.

பெரும்பாலான தமிழர்கள் மன அழுத்த நோயால் துன்புறுகிறார்கள். துன்பம் வந்தால் கடவுளிடம் பிரார்த்தனை செய்வார்கள். துன்பம் தீராத பொழுது கடவுளையும் நான்கு வார்த்தை ஏசி மன அழுத்தத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள். இதை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.

தமிழர்களோடு ஒப்பிடும் போது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பியர்கள் வெகு குறைவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு மனிதனையும் சீண்டியபிற்பாடுதான் உண்மையான தெளிவான கருத்துக்கள் வெளி வருகின்றது சபேசன் ஐயா,நெடுக்கு சாமி இருவருக்கும் நல்லதோ கெட்டதோ தொடர்ந்து சமூகத்துக்கு தேவையான அறிவுபூர்வமான கருத்துக்களை முன்வைக்கின்றீர்கள் உங்களைப்போன்றவர்கள் இங்குள்ள ஒவ்வொரு பகுதியிலும் கருத்துக்களை முன் வைத்தால் ஒரு சில கிருமிகள் தானாக விலகிவிடும் . அறுத்துறுத்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஆ..........இங்கு என்ன நடக்குது. பிராத்தனை பத்தியா?

தமிழீழ மக்கள் படும் துயர் தீர , ஒருமித்து பிரார்த்தனை செய்வோம்

வலைஞன் விளக்கத்திற்கு நன்றி!

---------------------------------------------------------------------------------------------------------------

ஒரு யோசனை:

புதிய உறுப்பினர்களை நாற்சந்திப் பகுதியில் எழுதுவதற்கு அனுமதித்தால் என்ன? சிலர் முன்பு களத்தை துஷ்பிரயோகம் செய்து எழுதியதால், மேலும் அது யாழ் முகப்பு பக்கத்தில் வெளிக்காட்டப்பட்டதால் புதிய நடைமுறை பயன் தந்தது.

ஆனால்..

நாற்சந்தியில் எதை எழுதினாலும், கள உறுப்பினர்களை தவிர வேறு ஒருவரும் பார்க்கமுடியாது. முகப்பு பக்கத்திலும் வெளிக்காட்டப்படாது. எனவே, நாற்சந்தியில் புதியவர்களையும் எழுத அனுமதிப்பதால் பாதகமான விளைவுகள் ஏற்பட சந்தர்ப்பம் இல்லை என நினைக்கின்றேன்.

இதன் மூலம் புதியவர்களிற்கு கருத்து எழுதுவதில் சிறிது சுதந்திரம் கிடைக்கின்றது. புதிய உறுப்பினர்களும் அதிக எண்ணிக்கையில் இணைய முன்வரக்கூடும்..

இதைவிட, யாழ் அரிச்சுவடி பகுதியை நாற்சந்திக்கு நகர்த்துவதும் நல்லது என நினைக்கின்றேன்.

ஏனென்றால், இப்போது யாழ் அரிச்சுவடியை அனைவரும் பார்வையிட முடியும். ஏன் எல்லாருக்கும் எம்மை அறிமுகம் செய்யவேண்டும்? சக கள உறுப்பினர்களிற்கு எம்மை அறிமுகம் செய்தால் போதும் தானே? விருப்பம் உள்ள விருந்தினர்கள் யாழில் உறுப்பினர்களாக இணைந்து கள உறவுகளை பற்றிய மேலதிக தகவல்களை பார்வவயிடலாம் தானே?

நாற்சந்திக்கு நகர்த்தப்படும்போது நாம் சில விசயங்களை புதியவர்களுடன் ஓரளவு மனம் திறந்து கதைக்கலாம் என்று நினைக்கின்றேன். இதேபோல் புதியவர்களுக்கும் இது சிறிதளவு பாதுகாப்பாக இருக்கும்.

இதுபற்றி நிருவாகம், மற்றும் கள உறவுகள் என்ன நினைக்கின்றீர்கள்??

புதிய உறுப்பினர்களை (அதாவது கருத்துக்களத்தில் புதிதாக பதிவு செய்தவர்கள்) நாற்சந்தி பகுதிக்குள் எழுத அனுமதிக்க முடியாது. யாழ் அரிச்சுவடி பகுதி தனியே அறிமுகப் பகுதி மட்டுமல்ல. தமிழில் தட்டச்சு செய்யத் தெரியாதவர்கள் எழுதிப் பழகுவதற்கான பகுதியும் கூட. யாரும் இங்கே உண்மையான அறிமுகத்தை செய்வதில்லை. அல்லது முழுமையான அறிமுகத்தை செய்வதில்லை. அப்படி உண்மையான, முழுமையான அறிமுகத்தை செய்ய விரும்பும் கருத்துக்கள உறுப்பினர்கள், நாற்சந்தி பகுதிக்குள் அதனை செய்துகொள்ளலாம். :lol:

புதிய உறுப்பினர்களை (அதாவது கருத்துக்களத்தில் புதிதாக பதிவு செய்தவர்கள்) நாற்சந்தி பகுதிக்குள் எழுத அனுமதிக்க முடியாது. யாழ் அரிச்சுவடி பகுதி தனியே அறிமுகப் பகுதி மட்டுமல்ல. தமிழில் தட்டச்சு செய்யத் தெரியாதவர்கள் எழுதிப் பழகுவதற்கான பகுதியும் கூட. யாரும் இங்கே உண்மையான அறிமுகத்தை செய்வதில்லை. அல்லது முழுமையான அறிமுகத்தை செய்வதில்லை. அப்படி உண்மையான, முழுமையான அறிமுகத்தை செய்ய விரும்பும் கருத்துக்கள உறுப்பினர்கள், நாற்சந்தி பகுதிக்குள் அதனை செய்துகொள்ளலாம். :lol:

வலைஞன் அண்ணா அப்போ இனிமேல் உண்மையான அறிமுகத்தை செய்ய விரும்பும் புதுமுகங்கள் நாற்சந்திக்கு நேரடியாக்வே உள்நுழையலாமா? ;)

வலைஞன் அண்ணா அப்போ இனிமேல் உண்மையான அறிமுகத்தை செய்ய விரும்பும் புதுமுகங்கள் நாற்சந்திக்கு நேரடியாக்வே உள்நுழையலாமா? ;)
புதியவர்கள் அல்ல. ஏற்கனவே இணைந்து யாழ் அரிச்சுவடி பகுதியில் சாதாரண அறிமுகத்தை செய்துகொண்டு, ஏனைய பகுதிகளிலும் எழுத அனுமதி பெற்ற கருத்துக்கள உறவுகள் - தங்களை சக கருத்துக்கள உறவுகளுக்கு முழுமையாக அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பின் - கருத்துக்கள உறவுகள் அல்லாத ஏனையவர்கள் அதனை வாசிப்பதை விரும்பாவிடின் - யாழ் நாற்சந்தி பகுதிக்குள் அதனை செய்துகொள்ளலாம்.

மட்டறுத்துனர்கள், அல்லது நிருவாகிகள் ஏதாவது பிழை செய்வது போல் இருந்தாலே புதிய தலைப்பு ஒன்றை திறந்து நியாயம் கேட்க டன், நெடுக்காலபோவான், புசுக்குட்டி... இப்படி வீரர்கள் பலர் ஆயத்தமாக இருக்கும் விசயம் உங்களுக்கு தெரியாதோ? ;) ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் - ஒருவர் யாழில் தடை செய்யப்பட்டால் அவரது status.. தமிழில் எப்படி சொல்லுவது -- நிலை - தடைசெய்யப்பட்டோர் என்று காட்டப்படும் இல்லையா? இல்லாதுவிடின் கருத்துக்கள உறவுகள் அல்லது கருத்துக்கள உறுப்பினர்கள் அல்லது validating இப்படி காட்டப்படும்.ஆனால், நேற்று என்று நினைக்கின்றேன், காவல்துறை கவிதைப் பூங்காட்டு பகுதியில் வன்னிமைந்தன் எழுதியதாக சொல்லி ஒரு கவிதையை ஒட்டி இருந்தார். அங்கு அவர் வன்னிமைந்தன் தான் யாழில் தடைசெய்யப்பட்டுள்ளதாக தனக்கு தனிமடல் அனுப்பி இருந்தார் என்று கூறி இருந்தார். உடனே, நான் வன்னிமைந்தனின் புரபைலுக்கு போய் அவரது யாழ் status ஐ பார்த்தேன். அதில் கருத்துக்கள உறவுகள் என்று இருந்தது. அப்படியாயின் காவல்துறை வன்னிமைந்தன் யாழில் தடை செய்யப்பட்டு உள்ளதாக கூறியது தவறா? எங்கே பிழை நடந்தது என்று விளங்கவில்லை..இதுதான் அந்த லிங்க்: http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=338492
யாரையும் தடைசெய்தால் அவருக்கு நாம் முதலில் அறியக் கொடுப்போம். அதுதவிர நீங்கள் குறிப்பிட்டது போல் அவரது நிலை "தடைசெய்யப்பட்டோர்" என்று காண்பிக்கப்படும். வன்னி மைந்தன் தடை செய்யப்படவில்லை. அவரால் ஏன் எழுதமுடியாதிருந்தது என்று தெரியவில்லை. அவர் தடைசெய்யப்பட்டிருந்தால் அவர் எழுத முற்படும்போது "You do not have permission to view this board" என்று அவருக்கு காண்பிக்கும். அவரால் தனிமடல் கூட யாருக்கும் அனுப்பமுடியாது. கருத்துக்களத்தை பார்வையிடக்கூட முடியாது.

யாராவது தொடர்ந்தும் பண்பற்ற முறையில் அதாவது கருத்துக்கள விதிமுறைகளை மீறும் வகையில் கருத்துக்களை எழுதினால் அவர் எழுதும் கருத்துக்கள் கருத்துக்கள நிர்வாகத்தால் மட்டுறுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும். அப்படியான சந்தர்ப்பங்களில் அவரால் கருத்துக்களை எழுதமுடியும், ஆனால் அவை உடனடியாக வெளியிடப்படாது. நிர்வாகத்தினர் பார்வையிட்டபின்னரே வெளியிடப்படும். வன்னி மைந்தனுக்கு அப்படியும் செய்யப்படவில்லை. எனவே, அவருக்கு எதனால் கருத்துக்களை எழுதமுடியவில்லை என்பதை அவர்தான் தெளிவுபடுத்தவேண்டும். :lol:

தடை செய்யப்பட்டு இருந்தால் தடைசெய்யப்பட்டோர் என்று எழுதப்பட்டு இருக்கும்! நான் இதை எங்கோ பார்த்துள்ளேன்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு யோசனை:

குமுதம் சஞ்சிகையில் பார்த்து இருப்பீங்கள் பிரார்த்தனை என்று ஒரு பகுதி உள்ளது. இதுபோல் யாழிலும் பிரார்த்தனை பகுதி ஒன்றை உருவாக்குவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

அதாவது பிரார்த்தனைக்காக இரண்டு கருத்தாடல் தலைப்புக்களை ஆரம்பிக்கலாம்..

ஒன்று குறிப்பிட்ட சிலருக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வது போல செய்யலாம். உதாரணமாக, குறிப்பிட்ட ஒருவருக்கு உடல் சுகம் அடைந்து பூரண சுகம் கிடைக்க வேண்டும் என்று..

மற்றது, தினமும் எமது அலுவல்களை ஆரம்பிக்க முன் பிரார்த்தனை செய்வது போல் யாழுக்கு தினமும் நாம் வந்ததும் முதலாவதாக ஒரு பிரார்த்தனை கருத்து ஒன்றை எழுதிவிட்டு எமது கருத்தாடலை ஆரம்பிக்கலாம். இதற்கு என்று இன்னொரு தலைப்பை உருவாக்கலாம்.

இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

அதாவது யாழில் பிரார்த்தனை செய்தல்??

ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான கடவுளை பிரார்த்தித்து கருத்து எழுதலாம்..

உதாரணமாக இன்று முதலாவது கருத்தை பிரார்த்தனை பகுதிக்கு நான் சென்று அதில் ஒரு வேதவாக்கியத்தை அல்லது தேவாரம் ஒன்றை எழுதிவிட்டு மிகுதி களத்தில் இறங்கலாம். அதாவது ஆண்டவனை பிரார்த்தித்தபின் கருத்தாடலில் ஈடுபடல். ஸ்கூலில் பிரார்த்தனை செய்தபின் பாடம் துவங்கிவது மாதிரி. இதன் மூலம் பல மன உலைச்சல்கள் தவிர்க்கப் படக்கூடியதாக இருப்பதோடு, வீண் சச்சரவுகள் குறையும் என்று நினைக்கின்றேன். மூளையும் - மனமும் கொஞ்சம் சாந்தி அடையும்..

உங்கள் விருப்பம் என்ன மாதிரி?

பிரார்த்தனைக்கான ஒரு தலைப்பைத் தொடங்குவதை யாழ் கருத்துக்கள நிர்வாகம் அனுமதிக்காது. கடவுள் நம்பிக்கை, நம்பிக்கையின்மை அல்லது மத ஈடுபாடு, ஈடுபாடின்மை என்பவற்றுக்கு அப்பால்: பிரார்த்தனை என்பது மனம் சார்ந்த விடயமாக நீங்கள் கருதின், அது நீங்கள் கருத்துக்களத்தில் பிரார்த்தனையை எழுதுவதால் தான் நிறைவேறும் என்றில்லை. மன உளைச்சல், வீண் சச்சரவுகள் தவிர்க்கப்படுவதற்கு தனிமனித ஒழுக்கமும், சுய கட்டுப்பாடுமே உதவும். எனவே, அதனை அவரவர் தனிப்பட்ட முறையில் செய்துகொள்ளலாம். கருத்துக்களத்தில் மதம் சார்ந்த செயற்பாடுகளுக்கு அனுமதியில்லை. இது ஓர் கருத்தாடற் களம். இங்கு அனைவரும் கருத்தாடலாம். கடவுள் நம்பிக்கையாளரும் கருத்தாடலாம் - கடவுள் நம்பிக்கை அற்றவர்களும் கருத்தாடலாம். பொதுவுடைமை வாதிகளும் கருத்தாடலாம் - முதலாளித்துவ வாதிகளும் கருத்தாடலாம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கையுள்ளவர்களும் கருத்தாடலாம் - தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எதிர்ப்பவர்களும் கருத்தாடலாம். எல்லோரும் கருத்தாடலாம். அனைவரும் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம். ஆனால்,

1. பண்பற்ற கருத்துக்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

2. தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், அதை முன்னெடுக்கும் போராளிகளையும் கொச்சைப்படுத்துகிற கருத்துக்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

3. மதம் சார்ந்த பிரச்சாரப் பதிவுகளும், செயற்பாடுகளும் அனுமதிக்கப்படமாட்டாது. (குறிப்பாக மத அடிப்படைவாதம் பேசுகிற கருத்துக்கள், வழிபாடு அடிப்படையிலான கருத்துக்கள்)

அதேநேரத்தில், மதங்கள் பற்றிய விவாதங்களுக்கு கருத்துக்களத்தில் அனுமதியுண்டு. மதங்களில் போதிக்கப்பட்டிருக்கிற நல்ல கருத்துக்கள் பற்றி கருத்தாடலாம். மானுட நேயம் பற்றிக் கருத்தாடலாம். மதச் சீர்திருத்தம் பற்றிக் கருத்தாடலாம். வரவேற்கப்படுகின்றன.

ஓ உங்கள் விளக்கத்துக்கு நன்றிகள்.

வன்னிமைந்தனின் பிரச்சினை அவருக்கு தான் தெரியும்.

  • தொடங்கியவர்

வலைஞன் உங்கள் விளக்கத்திற்கு நன்றி!

---------------------------------------------------------------------------------------------------------------------------

நீங்கள் யாழில் பிரார்த்தனை என்ற பகுதியில் ஒரு தலைப்பை உருவாக்குவதற்கு கூறிய விளக்கம் எனக்கு சரியாகப்படவில்லை. நீங்கள் கூறிய விளக்கம் யாழின் பலவீனத்தையே காட்டி நிற்கின்றது.

மேலும் நான் என்ன கூறவந்தேன் என்பதை பலரும் சரியாக விளங்கவில்லை என்று நினைக்கின்றேன்.

எனினும், இதற்கு இவ்வளவு எதிர்ப்பு வருவதால் எனது இந்த யோசனையை நான் வாபஸ் வாங்கிக்கொள்கின்றேன் என்பதை அறியத்தருகின்றேன். நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழுக்கு வரும் உறவுகளுக்கு கொடுக்கப்படும் மரியாதை

திரு: கலைஞன் அவர்களின் இந்த அறிவுத்தலைப்பற்றி என்ன நினக்கின்றீர்கள்

எச்சரிக்கை:மனநலம், அறிவுவளர்ச்சி குறைந்தவர்கள், மற்றும் 16 வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள் எனது ஆக்கங்களை பார்வையிடுவதை அல்லது அவற்றுக்கு பதில்கருத்து எழுதுவதை தவிர்க்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

அச்சா குஞ்சு

  • தொடங்கியவர்

கு.சா அண்ணா இதென்ன பழக்கம்??? சேம் சைட் கோல் போடுறீங்கள்?

நான் இவ்வாறு அறிவித்தல் கொடுத்தமைக்கான காரணங்கள்:

1. அண்மையில் ஒருவர் தான் 6, 7 வயது பிள்ளைகளிற்கு யாழ் இணையத்தினை அறிமுகம் செய்து வைத்து உள்ளதாகவும், அவர்கள் எனது ஆக்கங்களை பார்த்து கெட்டுப் போகப் போவதாகவும் கூறி இருந்தார். யாழ் இணையத்தில் 16 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு சிறுவர் பகுதி உள்ளது தானே? கருத்தாடல் தளத்தை 16 வயதுக்கு கீழ்ப்பட்ட பிள்ளைகள் பயன்படுத்துவது வரவேற்கத் தக்கதா? எனவேதான், நான் அவர்களிற்கு அவ்வாறு எச்சரிக்கை செய்தேன். வேண்டுமானால் பெற்றோரின் அனுமதியுடன் அவர்கள் பார்க்கட்டும்.

2. மனநலம், அறிவு வளர்ச்சி குறைந்தவர்கள் என்று கூறியதும் மேற்குறிப்பிட்ட நபர் இவ்வாறு தான் எனது ஆக்கங்களை வாசிப்பதால் தான் ஒரு சைக்கோவாக அல்லது நோயாளியாக மாற சந்தர்ப்பம் உள்ளதாகவும், இதனால் தான் இனி யாழுக்கு வரப்போவதில்லை என்றும் கூறி இருந்தார். எனவே, இவ்வாறு மனம் பலவீனமானவர்கள், மற்றும் அறிவு முதிர்ச்சி அற்றவர்களை அவர்களின் நல்லதுக்காக எனது ஆக்கங்களை பார்க்கவோ அல்லது பதில் கருத்து எழுதவோ வேண்டாம் என எச்சரிக்கை செய்தேன்.

3. நான் நவீன உலகின் வேகத்தில் சென்று கொண்டு இருக்கின்றேன். நவீன உலகுடன் சேர்ந்து சிந்திக்க முடியாதவர்களிற்கு, பழமைவாதத்தை மட்டுமே தெரிந்தவர்களிற்கு நான் கூறும் கருத்துக்கள் பெரும் குழப்பதை ஏற்படுத்தகூடும். எனவே, இவ்வாறானவர்கள் ஏன் நான் எழுதுபவற்றை வாசித்துவிட்டு மனம் குழம்ப வேண்டும்? பேசாமல் மற்றைய பகுதிகளை, ஆக்கங்களை வாசிக்க வேண்டியது தானே? எனவேதான், இவர்களின் நல்லதுக்காக இவர்களிற்கு மேற்கூறிய அறிவித்தலை விடுத்தேன்.

  • தொடங்கியவர்

சில சந்தேகங்கள்:

1. யாழில் இப்போது login செய்து உள்ளே வராவிட்டால் தனிநபர்களின் profile களை பார்க்க முடியவில்லை. இதேபோல் Overall top 20 posters ஐயும் பார்க்க முடியவில்லை. நான் பெரும்பாலும் வெளியில் நின்றே ஆக்கங்களை பார்வையிடுவேன். கள உறவுகளின் profile களிற்கு சென்று அவர்கள் எழுதியுள்ளவற்றையும் வாசிபேன். ஆனால், இப்போது login செய்தால் மட்டுமே இவற்றை பார்வையிடக்கூடியதாக உள்ளதால் இப்போது என்னை பிடித்து இருட்டு அறை ஒன்றினுள் அடைத்துவிட்டது போன்ற உணர்வு வருகின்றது. ஏன் இப்படி செய்தீர்கள்? யாழ் வாசர்களிற்கும் இந்த புதிய மாற்றம் சலிப்பை ஏற்படுத்தக்கூடும். எங்கள் profile களில் பெரும்பாலும் ஒருவரும் உண்மைத் தகவல்களை கூறுவது இல்லை. அங்கு இருப்பது எல்லாம் பச்சைப் பொய். நிலமை அவ்வாறு இருக்க, பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு நீங்கள் இவ்வாறு செய்தீர்கள் என்று சொன்னால் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய பதிலாக இருக்காது. நீங்கள் இப்படி மாற்றம் செய்ததும் எனக்கு மீண்டும் மகர சிறைச்சாலையில் இருட்டு அறையில் வைத்து அடைத்துவிட்டமாதிரி ஒரு உணர்வு வருகின்றது. இப்படியான உணர்வு மற்றைய கள உறவுகளிற்கும் வந்திருக்ககூடும் என்று நினைக்கின்றேன். முன்பு போல் Settings ஐ மாற்றிவிடமுடியாதா?

2. யாழில் இணைவதற்கு வயதுக்கட்டுப்பாட்டை கொண்டுவருவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? அதாவது ஆகக்குறைந்த வயது எல்லையாக 16 வயதை வைத்தல். மற்றைய கருத்தாடல் தளங்களில், மற்றும் ஒரு ஈ மெயில் முகவரியை உருவாக்குவதற்கு ஆககுறைந்த வயது எல்லை எதிர்பார்க்கப்படுகின்றது. சிறுவர்கள் சிறுவர் பகுதியை பார்வையிடலாம் தானே! அவர்கள் ஏன் பெரியவர்கள் கதைக்கும் பெரிய விசயங்களை பார்வையிட வேண்டும். இது என்ன விசுவின் அரட்டை அரங்கமா, சின்னப் பொடியனுகள் கிழடுகள் மாதிரி கதைப்பதற்கு?? நிருவாகம் யாழ் பிரதான கருத்தாடல் தளத்தை பயன்படுத்த - அதாவது உறுப்புரிமை பெற வயது எல்லையை அறிமுகப்படுத்துவது சிறந்தது என்று நினைக்கின்றேன். உறுப்புரிமையை பெறும்போது ஒருவர் பொய் சொன்னால் அது அவரது குற்றமே, யாழின் குற்றமல்ல. ஆனால், உறுப்புரிமையை கொடுக்கும்போது வயதுக்கட்டுப்பாடு வைக்காவிட்டால் அது யாழின் குற்றமாகவே அமையும்.

இதை நான் ஏன் சொல்கின்றேன் என்றால் அண்மையில் ஒருவர் தான் யாழை 6, 7 வயது குஞ்சு, குறுமான்களிற்கு அறிமுகம் செய்து வைத்ததாக கூறினார். சிறுவர் பகுதி அல்லாத மற்றைய பகுதிகள் குழந்தைகளிற்கு உகந்தன அல்லவே. முதலில் புலத்தில் உள்ள குழந்தைகளால் இவற்றை எழுத்துக்கூட்டி வாசித்து இங்கு கூறப்பட்டுள்ள விசயங்களை விளங்கிக்கொள்ளவே முடியாது என்பது அடுத்த பிரச்சனை. ஆனால், தற்செயலாக அந்தக் குழந்தைகள் தமிழில் புலமை பெற்று இருந்தால் கருத்தாடல் தளத்தை அவை பார்ப்பது நல்லது அல்லவே!

இங்கு காதல், பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை, என்று சகல விசயங்களும் கருத்தாடல் செய்யப்படுகின்றன. எனவே, குழந்தைகள் இவற்றை பார்வையிடுவது நல்லது அல்லவே! எனவே, உறுப்புரிமை பெறும்போது வயதுக்கட்டுப்பாட்டை அறிமுகம் செய்வது நல்லது தானே! இதன் மூலம் பெற்றோரும் கொஞ்சம் புரிந்துணர்வை பெறுவார்கள்.

இது பற்றி எமது மக்கள் செல்வங்கள் என்ன நினைக்கின்றீர்கள்??

நன்றி!

யாழுக்கு வரும் உறவுகளுக்கு கொடுக்கப்படும் மரியாதை

திரு: கலைஞன் அவர்களின் இந்த அறிவுத்தலைப்பற்றி என்ன நினக்கின்றீர்கள்

கு.சா தாத்தா எனக்கு இதை பார்க்க கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று திரையரங்களிள் போட்டிருக்கும் அது தான் எண்ணத்தில் வருகிறது :P .................திரையரங்களில் அவ்வாறு போடுவது நல்லது ஏன் என்றா இல்லாட்டி நான் அங்கே தான் நிற்பேன் அது வேற கதை :D ...........அதை மாதிரி இதுவும் இருக்கலாம் என்று நினைகிறேன் தாத்தா ;) ............எனக்கு 5 வயசு தான் ஆனா அதை வாசித்து கவலை எல்லாம் இல்லை ஏன் என்றா கண்டிப்பாக வயது வந்தவர்களிற்கு மட்டும் என்று போட்டா நிச்சயம் நான் அந்த பக்கம் போயிற்று தான் வருவேன்............ :D

ஜெனரல் அவர்களே நான் அந்த பக்கம் வரலாமோ எனக்கு 5 வயசு தான்.............கு.சா தாத்தாவிற்கு எத்தனை வயசு........... :P

ஜெனரல் அவர்களே!!

1)என்ன உங்களை இருட்டறையில் தள்ளின மாதிரி இருக்கா வேண்டும் என்றா மெழுகுதிரி கொண்டு வருவா ஜெனரலே :P .........புரோபைலைலில் உண்மை தலவலை என்னை தவிர ஒருத்தரும் கொடுக்கிறதில்லை என்று நினகிறேன் குருவே..............மகர சிலையில் அடைத்த உணர்வா அப்ப யாழ் சிறைச்சாலை என்று ஜெனரல் எழுத முன்னம் செட்டிங்கை மாற்றுவதை பற்றி பரிசீலனை செய்யுங்கோ நிர்வாகத்தினரே.............. :D

2)அட வயது எல்லையை கூட்டினா தற்போது என்னை மாறி இருக்கும் குழந்தைகள் என்ன செய்வது அவர்கள் போக தேவையில்லையா குருவே அப்படியாயின் சரி என்னை போக சொன்னா பிறகு அழுதுடுவன் :P .........ஆனால் சிறிய வேண்டுகோள் மற்றவர்களை பற்றி தெரியா இங்கே உள்ள தமிழ் சிறுவர்கள் அதிகமானோர் யாழிற்கு தற்போது வர ஆரம்பித்து இருகிறார்கள் அவுஸ்ரெலியாவில் இருந்து அவர்கள் இங்கே வருவது தமிழ் பாடசாலைகளிற்கு தேவையான சில பிரயோசனாமன விடயங்களை பெற்று கொள்ள ஆகவே அவ்வாறு வருபவர்களிற்கு இது ஒரு பிரச்சினை என்று கூறலாம் B) ........வயது எல்லையை வைக்காவிட்டால் அது யாழின் குற்றம் ஆகும் என்பதுடன் ஓத்து போகிறேன் ஆனால் இவ்வாறு வருபவர்களிற்கு அது பாதிப்பாகா அமையாதா குருவே??ஏன் எனில் அவுஸ்ரெலியாவை பொறுத்தவரை தற்போது " யாழ்" இணையதளம் வேகமாக பரவி வருகிறது சிறுவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை ஆகையால் இந்த நேரத்தில் அப்படி ஒரு மாற்றம் தேவையா ஜெனரலே!!!!

அத்துடன் ஏனையவற்றை விட இந்த களத்தில் மேல் உள்ள ஒரு நம்பிகையும் பலர் வர காரணமாக இருகிறது என்று சொல்லமுடியும்..........ஆகவே எதற்கும் மற்றைய மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு அதன் பின் இதை பற்றி பரீசீலனை செய்து முடிவறிக்கயை சமர்பிபோம்!! :D

நன்றி

  • தொடங்கியவர்

சிறுவர்கள் யாழுக்கு அதிகளவில் வருகின்றார்களா? யாழில் இருந்து தகவல்கள் பெறுகின்றார்களா?

யாழில் ஆகவும் மேலே போனால்..

முற்றம் | கருத்துக்களம் | ஒளித்தடம் | விம்பகம் | தேடி | அரட்டை | உதவி

இப்படி இருக்குத்தானே? அங்கு சிறுவர்பகுதியையும் இப்படி இணைத்தால் என்ன?

முற்றம் | கருத்துக்களம் | ஒளித்தடம் | விம்பகம் | சிறுவர்பகுதி | தேடி | அரட்டை | உதவி

சிறுவர்பகுதிக்கும் சிறுவர்களுக்கு உரிய வகையில் என்னால் ஆக்கங்களை நேரம் கிடைக்கும்போது கவனமாக உருவாக்க முடியும். ஆனால், இப்போது சுட்டி தவிர வேறு ஒருவரும் அங்கு ஆக்கங்களை ஒட்டமுடியாதே!

-------------------------------------------------------------------------------------------------------------------------------

ஓம் நீங்கள் சொன்னது உண்மைதான். இப்போது இருட்டு அறையினுள் இருப்பது போல் தான் உள்ளது. நிருவாகம் செங்கற்களை நீக்குமா? அல்லது இன்னும் செங்கற்களை நிரப்பி பாதாள அறையினுள் தள்ளிவிடுமா?

  • தொடங்கியவர்

மேலுமொரு யோசனை:

இங்கு யாழில் பலருக்கு ஈ மெயில் இருக்கு தானே? எனது முகவரி kalainjan@yarl.com இதுபோல் பலரும் யாழ் மின்னஞ்சல் வைத்திருக்க கூடும். அல்லது இவ்வாறு மின்னஞ்சலை நிருவாகிகளை தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

எனது பிரச்சனை என்னவென்றால் இந்த ஈ மெயில் சேவையை பெறுவதற்கு தேவையான விலாசம் - அதாவது எங்கே போய் login செய்வது என்பது மறந்துவிட்டது. நான் அண்மையில் எனது கணனியை துப்பரவு செய்தபோது favorites அழிபட்டுவிட்டது.

நான் கேட்பது என்னவென்றால் அல்லது எனது யோசனை என்னவென்றால் இந்த மின்னஞ்சலை யாழிலேயே login செய்யக்கூடியவாறு நிருவாகம் எமக்கு வசதியை ஏற்படுத்தி தரமுடியுமா? வழமையாக ஏனைய தளங்களில் இவ்வாறு வசதி உள்ளது.

இப்போது இந்த மின்னஞ்சலை பாவிக்க கூகிளில் எங்கோ ஒரு விலாசத்திற்கு போகவேண்டியுள்ளது. யாழிலேயே இதன் இணைப்பை ஒரு மூலையில் போட்டு இங்கு இருந்தே நாம் யாழ் மின்னஞ்சலை பாவிக்க வசதி ஏற்படுத்தி தந்தால் உங்களுக்கு புண்ணியமாய் போகும்!

நன்றி!

எனக்கு 5 வயசு தான் ஆனா அதை வாசித்து கவலை எல்லாம் இல்லை ஏன் என்றா கண்டிப்பாக வயது வந்தவர்களிற்கு மட்டும் என்று போட்டா நிச்சயம் நான் அந்த பக்கம் போயிற்று தான் வருவேன்............ :)

:):) சிறுவர் பகுதிகளாஇ தவிர ஏனைய பகுதிகளுக்கு சிறுவர்களை அனுமதிக்கபடமாட்டாது என சட்டம் வந்தால் வயது கூடிடும் ஜம்முவுக்கு :D

"உண்மையைச் சொல் உத்தமனாவாய்" :D

வணக்கம் கலைஞன்,

குழுமங்களில் அண்மையில் மாற்றங்கள் செய்யப்பட்டதை அறிந்திருப்பீர்கள். அதன்போது, உறுப்பினர்கள் அல்லாதவர்கள் கருத்துக்கள உறுப்பினர்களின் விபரங்களை பார்க்க முடியாதபடியான நிலை ஏற்பட்டுவிட்டது. இது மீண்டும் சரிசெய்யப்பட்டுள்ளது.

யாழ் கருத்துக்களத்தில் இணையும் போது வயது எல்லை பற்றிக் குறிப்பிடப்படவேண்டும். விதிமுறைகளை இணைக்கும்போது அது தவறவிடப்பட்டுவிட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. சாதாரணமாக இப்படியான கருத்துக்களங்களின் வயது எல்லை 13 க்கு மேற்பட்டதாகக் குறிப்பிடப்படுவதுண்டு. இதுபற்றி ஆராய்ந்து முடிவெடுக்கிறோம். கருத்துக்கள உறவுகளும் எந்த வயதெல்லையைக் கொடுக்கலாம் என்று கருத்துக் கூறவும்.

யாழ் இணையத்தின் சிறுவர் பகுதி மீளமைப்பு செய்யப்பட இருக்கிறது. அப் பகுதி மட்டுமல்ல, யாழ் இணையம் முற்றுமுழுதாக மீளமைப்பு செய்யப்பட இருக்கிறது. அப்போது, சிறுவர் பகுதியில் ஆக்கங்கள் இணைப்பதற்கான குழுமம் உருவாக்கப்படும்.

அதேபோன்றே, யாழ் இணைய கூகிள் மின்னஞ்சல் சேவைக்கான உள்நுழையும் பகுதியை முகப்பில் இணைப்பதை புதிய தள வடிவமைப்பின் போது கவனத்தில் கொள்கிறோம்.

நன்றி

  • தொடங்கியவர்

நன்றி வலைஞன், ஆனால் இன்னும் கூட லொகின் செய்யாமல் புரபைல்கள், Overall top 20 posters, members போன்றவற்றை பார்க்க முடியவில்லையே!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் உறவுகளே

சில தலைப்புக்களில் கள உறுப்பினர்களை சீண்டுவது போன்று கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. சக கள உறவுகளை சீண்டும் முகமாக கருத்து எழுதுவதை தவிர்க்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதை மீண்டும் கவனத்தில் எடுக்குமாறு வேண்டுகிறோம்.

நன்றி.

  • தொடங்கியவர்
:):o:huh: ஐயோ நான் ஒண்டும் எழுதவில்லை. எனது சீடர்கள் யாராவது அப்படி எழுதினார்களோ தெரியாது. பிரதம சீடனை ரெண்டு நாளாக காணவில்லை. நான் உங்களை யாரவாது கிண்டல் பண்ணி இருந்தால் அல்லது ஏதாவது தவறு நடந்து இருந்தால் அறியத்தரவும். நன்றி!

நான் சரியான user name,password கொடுத்தும் login பண்ண முடியவில்லை இதனால் இரு தடவை password மாற்றிவிட்டேன், என்ன காரணம் என்று யாராவது கூறுங்களேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.