Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்தார் மாரியப்பன் தங்கவேலு

Featured Replies

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்தார் மாரியப்பன் தங்கவேலு

mariyappan2.jpg

ரியோ2016 : பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் இந்தியா தட்டிச் சென்றது. இந்திய வீர் வருண் சிங் பாடி வெண்கலம் வென்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89மீ., உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது ரியோ பாராலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கம். இவர் தமிழகத்திலுள்ள சேலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்துக்கு பெருமை  மாரியப்பன் 

சேலத்தில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் உள்ள பெரியவடுகம்பட்டி மாரியப்பனின் சொந்த ஊர். ஒரு நாள் காலை பள்ளிக்கு செல்வதற்காக சாலையோரம் சென்று கொண்டிருந்தான் மாரியப்பன். அப்போது அவன் வயது ஐந்து. அந்த வழியாக வந்த லாரி, மாரியப்பன் மீது மோத, மாரியப்பனின் வலது கால் நசுங்கியது. ‘டிரைவர் குடிபோதையில் இருந்ததாக சொன்னார்கள். என்ன சொல்லி என்ன பயன். மகனின் கால் போய் விட்டதே’ என்று சொல்லும் மாரியப்பனின் தாய் காய்கறி விற்றுப் பிழைப்பவர். மகனின் மருத்துவ செலவுக்காக வாங்கிய ரூ.3 லட்சம் கடனை இன்னுமும் கட்டி வருகிறார்.

mar.jpg


கால் இல்லை என்பதற்காக மாரியப்பன் முடங்கிவிட வில்லை. உயரம் தாண்டுதலில் முழு மூச்சில் ஈடுபட்டார். ‘ஆரம்பத்தில் என் நண்பர்கள் என்னால் தாண்ட முடியும் என நம்பவில்லை. முதல் முறையாக தாண்டியதும் அப்படியே அதிர்ச்சியடைந்தனர். அதன்பின், நான் பங்கேற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் எல்லோரும் ஆதரவு அளிக்கத் துவங்கினர்’ என்று சொல்லும் அந்த இளைஞனின் வயது 20.

2013ல் நடந்த தேசிய பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப்பில் மாரியப்பன் தாண்டிய விதம், கோச் சத்யநாராயணனுக்குப் பிடித்துப் போக அன்று முதல், மாரியப்பனை சார்ஜ் எடுத்துக் கொண்டார். பெங்களூருவில் வைத்து முழு மூச்சாக பயிற்சி கொடுத்தார். இதன் விளைவாக, துனிஸியாவில் நடந்த ஐபிசி கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் 1.78 மீ., உயரம் தாண்டி, ரியோ பாரா ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட்டை புக் செய்தார்.

http://www.vikatan.com/news/coverstory/68213-m-thangavelu-wins-indias-1st-gold-in-paralympic.art

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றுச் சாதனை: பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு

 

 
THANGAVELU_3005343_3005358f.jpg
 

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.

31-வது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சனிக்கிழமை காலை நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.

இந்த பிரிவில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய போட்டியாளர் வருண் சிங் பாட்டி வெண்கலம் வென்றுள்ளார்.

தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் தாண்டிய உயரம் 1.89 மீட்டர் ஆகும். அவரை எதிர்த்து போட்டியிட்ட சக போட்டியாளர் வருண் சிங் பாட்டி தாண்டிய உயரம் 1.86 மீட்டர் ஆகும்.

அமெரிக்காவை சேர்ந்த சாம் க்ரிவ் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

யார் இந்த மாரியப்பன் தங்கவேல்:

இவர் சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றேர் தங்கவேல்- சரோஜா. செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.

21 வயதான மாரியப்பன் சேலம் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

மாரியப்பன் ஐந்து வயது இருக்கும்போது, வீட்டின் அருகேயுள்ள கோயில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பேருந்து மோதியதில் அவரது வலது கால் கட்டை விரலை தவிர மற்ற கால் பகுதிகள் சிதைந்து, ஊனமானார். விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார்.

mariyappan1_3005326a.jpg

வென்றது தன்னம்பிக்கை

பாரா ஒலிம்பிக் போட்டி குறித்து மாரியப்பன் சில தினங்களுக்கு முன்னர் அளித்திருந்த பேட்டியில், "பள்ளிப் பருவத்தில் உயரம் தாண்டுதலில் அசாத்தியமான எனது திறமையை அறிந்த உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், எனக்கு ஊக்கம் கொடுத்து பயிற்சி அளித்தார்.

மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றேன். கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்று சாதனை படைத்தேன்.

கடந்த முறை நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் அதிகபட்சமாக 1.74 மீட்டர் உயரமே தாண்டினர். இந்த முறை நான் 2 மீட்டர் உயரத்தை தாண்டி உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது" எனக் கூறியிருந்தார்.

அந்த நம்பிக்கையே அவருக்கு தற்போது தங்கப்பதக்கம் வென்றளித்திருக்கிறது.

http://tamil.thehindu.com/sports/வரலாற்றுச்-சாதனை-பாரா-ஒலிம்பிக்-உயரம்-தாண்டுதலில்-தங்கம்-வென்றார்-தமிழக-வீரர்-மாரியப்பன்-தங்கவேலு/article9093908.ece?homepage=true

 

  • தொடங்கியவர்

தங்கம் வென்ற தங்கவேலுக்கு ரூ.2 கோடி பரிசு! - தமிழக அரசு அறிவிப்பு

jaya.jpg

புதுடெல்லி: பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகையை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு, 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தையும், மற்றொரு இந்தியப் போட்டியாளரான வருண் சிங் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதில் மாரியப்பன் தங்கவேலு தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். பாராலிம்பிக் போட்டியில் தங்கமும், வெண்கலப் பதக்கமும் வென்ற இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்தபடி உள்ளது. இதில், மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா ரூ.2 கோடியை பரிசாக அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாராலிம்பிக்கில் மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்றது இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை. பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதன்முறை. மாரியப்பனின் சாதனை இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஊக்கத்தை அளிக்கும். தமிழக அரசு சார்பில் அவருக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

இதேபோல்  பாராஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ள இருவருக்கும், பிரதமர் மோடி, விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

மேலும், தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற வருண் சிங்குக்கும் மத்திய அரசு பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

அதன்படி, தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.75 லட்சம் பரிசுத்தொகையும், வெண்கலம் வென்ற வருண் சிங்கிற்கும் ரூ.30 லட்சம் பரிசுத்தொகையையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், பதக்கம் வென்ற வீரர்களின் சாதனையைக் கண்டு பெருமைப்படுவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்து உள்ளார்.

http://www.vikatan.com/news/india/68219-rio-2016-gold-medalist-thangavelu-to-get-rs2-crores-from-tn-govt.art

  • தொடங்கியவர்

தங்கம் வென்று பெருமை சேர்த்த மாரியப்பனுக்கு குவியும் பரிசும், பாராட்டும்

 

பிரேசிலின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு பரிசும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

 
160910013821_gold_medalist_mariyappan_th

தங்கப் பதக்கம் வென்றுள்ள மாரியப்பனுக்கு, இரண்டு கோடி ரூபாயை தமிழக அரசு பரிசாக அறிவித்துள்ளது. இந்திய விளையாட்டுத் துறை 75 லட்ச ரூபாயை பரிசாக வழங்கியுள்ளது.

பாராலிம்பிக் உயரம் தாண்டும் போட்டிகளில் இதுவரை இந்தியாவிலிருந்து தங்கம் வென்றதில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, மாரியப்பனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தங்கம் வென்ற மாரியப்பனுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், உள்ளிட்ட தலைவர்களும், திரையுலகப் பிரமுகர்கள், உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் செய்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அந்த மணல் சிற்பத்தில் மூவர்ண கொடியின் மேலே பதக்கம் இருக்க அந்த பதக்கத்தின் மீது நாயகர்களுக்கு பாராட்டுக்கள் என்று எழுதப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு மிகவும் எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்.

சேலம் மாவட்டத்தின் பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பனின் தந்தையான தங்கவேலு, செங்கல் சூளையில் பணியாற்றிவருகிறார். இவரது தாய் சரோஜா காய்கறி வியாபாரம் செய்துவருகிறார்.

160910014214_gold_medalist_mariyappan_th

 

21 வயதாகும் மாரியப்பன், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ. படித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரியும் இரண்டு சகோதரர்களும் உள்ளனர்.

மாரியப்பன் ஐந்து வயது இருக்கும்போது, வீட்டின் அருகேயுள்ள கோயில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் அவரது கால் பாதத்தின் பெரும்பகுதி சிதைந்தது.

பள்ளிப் பருவத்திலேயே மாரியப்பனின் திறமையை அடையாளம் கண்டு ராஜேந்திரன் என்ற உடற்கல்வி ஆசிரியர் அவருக்குப் பயிற்சியளித்து வந்தார்.

பள்ளி நாட்களிலிருந்தே விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடைய மாரியப்பன், 2007-08 ஆம் ஆண்டில், மாவட்ட அளவில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

அதற்குப் பிறகு 2011-ல் பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

2012 இல் நடந்த சர்வதேச உயரம் தாண்டும் போட்டியிலும் பதக்கத்தை வென்றார் மாரியப்பன்.

http://www.bbc.com/tamil/sport/2016/09/160910_mariyappan_thangavelu_wishes

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், தமிழா

  • கருத்துக்கள உறவுகள்

தங்கம் வென்ற மாரியப்பனுக்குப் பாராட்டுக்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

வாழ்த்துக்கள் மாரியப்பன்....tw_thumbsup:

தமிழன் என்ற வகையில் நானும் பெருமைப்படுகின்றேன்.

உண்மையில் அருமை, சூப்பர், விளையாட்டு வீரனுக்கு வாழ்த்துக்கள்~!

ஒலிம்பிக் 2016ல் இந்தியா இழந்த தங்கத்தை, பாரா ஒலிம்பிக் 2016ல் அதே ரியோவில் மீட்டெடுத்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துக்கள்!

  • தொடங்கியவர்

”மருத்துவக் கடனை அடைக்கவேண்டும்'': சாம்பியன் தங்கவேலுவின் கனவு!

mariyappan-thangavelu759.jpg

 

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்கவேலுவை தங்களது லட்சியப் பயணத்திற்கு ஆதர்சனமாக வைத்து ஒவ்வொரு இந்தியரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தங்கவேலுக்கு ஒரு கனவு இருக்கிறது. அந்த கனவு இப்போது கைகூடவும் போகின்றது. 


”என்ன கனவு என்று கேட்கிறீர்களா?'' அதை தங்கவேலின் வார்த்தைகளிலேயே சொல்கிறோம். ‘5 வயதில் எனக்கு விபத்து ஏற்பட்டபோது மருத்துவ செலவிற்காக எனது அம்மா 3 லட்சம் கடன் வாங்கியிருந்தார். 15 வருடம் கழிந்து அந்த கடனை அடைக்கபோகிறேன். இந்தத்தருணத்தில் தான் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று  உணர்ச்சி பொங்க கூறி இருக்கிறார் தங்கவேலு.

தங்கவேலு ஐந்து வயது குழந்தையாக இருந்தபோது, பஸ் விபத்தில் அவரது வலதுகால் உடைந்துபோனது. அப்போது தங்கவேலுவின் மருத்துவ செலவிற்காக அவரது அம்மா சரோஜா மூன்று லட்சம் கடன் வாங்கியிருந்தார். வீடு வீடாக சென்று காய்கறி விற்கும் சரோஜாவால் மூன்று லட்சத்தை கட்டமுடியவே இல்லை. இது நாள் வரை அதற்கு வட்டி மட்டுமே கட்டி வந்திருக்கிறார். பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்றதன் மூலம் கிடைக்கும் பரிசுதொகையை வைத்து அந்த கடனை கட்ட போகிறார் தங்கவேலு.

 

527496-paralympics-gold-mariyappan.jpg

''நான் இப்போது  உலகின் நம்பர் 1 ஆக இருக்கலாம். ஆனால், என்னுடைய வாழ்க்கை மிக கடுமையானதாக இருந்தது. விளையாட்டு எனக்கு உயிர்! ரியோவில் பதக்கம் வெல்ல முடியவில்லை என்றால், நிதி பற்றாக்குறையால்  விளையாட்டில் இருந்தே நான் வெளியேறி இருப்பேன். இதுதான் என்னுடைய கடைசி பிரம்மாஸ்திரமாக இருந்தது. உயரம் தாண்டுதல் விளையாட்டின் மூலம்  இதுநாள் வரை நான் சம்பாதித்தது இல்லை. கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வென்றபோதும் நான் எதையும் பெறவில்லை. மாதம் ரூ.5000 சம்பாதிக்கும் என் அம்மாவால் ரூ.3 லட்சம் கடனை எப்படி அடைக்க முடியும்? அதனால் தான் எப்படியாவது இந்தப்போட்டியில் வென்றுவிட வேண்டும் என்கிற லட்சிய வெறியோடு விளையாடினேன். தற்போது கிடைக்கவுள்ள பரிசு பணம் மூலம் முதலில் எனது  கடன் அடைக்க வேண்டும். இவ்வுளவு வறுமையிலும் எனது கனவுகளுக்கு உதவிய என்  அம்மாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை எற்படுத்தி கொடுக்க வேண்டும்'' என கனத்த இயத்துடன் தனது பால்ய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார் தங்கவேலு.மருத்துவ கடனை அடைத்தபிறகு, ஒரு வீடு கட்டுவதும்,  உயரம் தாண்டுதலில் உலக சாதனை செய்ய வேண்டும் என்பதும் தங்கவேலுவின் மற்றொரு லட்சியம். இதற்கான பயிற்சிகளை எடுக்க இந்தப் பணம் உதவும் என தங்கவேலு நம்புகிறார்.

thaaa66.jpg

 ''நான் சாதித்ததை தொலைக்காட்சியில் பார்த்த பிறகு எனது அம்மா என்ன  விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருப்பார் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். 'இப்போது நம்மால் ஒரு வசதியான வாழ்க்கை நாம்  வாழ முடியும்' என்று அம்மாவை ஆரத்தழுவி சொல்ல வேண்டும்.  நான் வீட்டுக்கும் எந்த உதவிகளையும் செய்யாமல் நாள் முழுக்க பயிற்சி எடுத்து இருக்கிறேன். என்னால் எனது குடும்பத்தினர் நிறைய இழந்திருக்கிறார்கள். இனி அவர்களுக்கு நான் திருப்பி கொடுக்க வேண்டும். இந்தியா நமது சாதனைகளை அங்கீகரிக்கும் உறுதியாக நம்பிகிறேன். எனவே இந்தியர்கள் இனி  பாரா-விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற தீவிரம் காட்ட வேண்டும் '' என்று தம்ஸ் அப் காட்டுகிறார் தங்கவேலு.

http://www.vikatan.com/news/tamilnadu/68239-my-dream-is-to-pay-medical-loansays-thangavelu.art

  • கருத்துக்கள உறவுகள்

தங்கவேலு தங்கத்துக்கான பாதையை இந்தியாவுக்கு திறந்து விட்டுள்ளார். அடுத்த ஒலிம்பிக்கிலாவது ஏதாவது தங்கம் கிடைக்கிறதா என பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

14264993_1081098651958225_11442177608570

வாழ்த்துக்கள், தமிழா.

  • கருத்துக்கள உறவுகள்

14292315_1315438678468548_36176756884574

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.