Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆரம்பமானது எழுக தமிழ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஜீவன் சிவா said:

 

அப்படியானால் இம்மூன்று அணிகளும் (நல்லூர், பல்கலைக் கழகம், ஸ்ரீதர் தியேட்டர்) ஒன்றாக சேரும்போது ஊர்வலமானது குறைந்தது 2 கிலோமீட்டராவது வந்திருக்குமென்றே நினைக்கின்றேன்.

இந்த பேரணி தோல்வியில் முடிந்தது என்று யாராவது சொல்லுவார்கள் என்றால் அது முழுமையான பொய்யே தவிர வேறொன்றும் இல்லை.

நேரடித் தகவலுக்கு.... நன்றி ஜீவன் சிவா.

  • Replies 56
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இனி இஞ்சை இருக்கிறவையள் என்ன சொல்லப்போயினமோ எண்டு என்ரை மனம் பதை பதைக்குது

புலம்பெயர்ந்தவர்களின் சொல்லுகேட்டு அவையள் ஆடியினம் ,ஆனால் எங்கன்ட தேசிய தலைவர் சம்பந்தனும்,உப தேசியத்தலைவர் சுமத்திரனும்  ஆதரவு கொடுக்கவில்லை.....என்று சொல்லுவோம்...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

இந்த பேரெழுச்சி உண்மையாக வெற்றிதான். இதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை என்னால் கணக்கிட முடியாவிட்டாலும் அவை பல்லாயிரக்கணக்கில்தான் உள்ளது. எனது சுய பாதுகாப்பு காரணமாக இவ்வாறான நிகழ்வுகளை படம் எடுப்பதில்லை - காரணம் எனது வதிவிட அனுமதியில் அரசியல் செயற்பாட்டிற்கு தடை என்றெழுதியிருந்தார்கள்.

சரி இனி விடயத்துக்கு வருவோம் (பகல் 10 மணி)
1 . யாழில் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்ந்த சகல கடைகளும் நேற்று பூட்டப்படிருந்தன.
     ஆட்டோக்களை, மினிபஸ்களையும் நகரில்  காண முடியவில்லை. அரச பஸ்களும் மிகவும் சொற்ப அளவிலேயே பஸ் நிலையத்தில் தென்பட்டது.

2. ஸ்ரீதர் தியேட்டர் முன்னால் ஸ்டான்லி வீதியால் செல்லமுடியாதளவு கூட்டம். ஸ்டான்லி வீதியில் மக்களை வேறு பகுதியில் இருந்து அழைத்து வந்த பஸ்கள் இரு புறமும் நிரம்பி இருந்தது. வெலிங்டன்  தியேட்டர் சந்தியிலிருந்து ஆரியகுள சந்திவரையும் ஒரு சைக்கிள் கூட போக முடியாதளவு கூட்டம்.

3. நல்லூர் அரசடி வீதி, பருத்தித்துறை வீதி சந்தியிலிருந்து (பாரதியார் சிலை) சிறிது தொலைவில் அரசடி வீதியில் ஊர்வலத்தை சந்தித்திருந்தேன். ஆயிரக்கணக்கில் மக்கள். சரியாக ஊர்வலம் என்னைக் கடக்க 13 நிமிடங்கள் பிடித்தது. இதிலிருந்து மக்கள் தொகையை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

4. யாழ் பல்கலைக் கழகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை நான் பார்க்கவில்லை. ஆனால் இம்மூன்றிலும் அதிகளவு மக்களை அது கொண்டிருந்ததாக கேள்விப்பட்டேன்.

அப்படியானால் இம்மூன்று அணிகளும் (நல்லூர், பல்கலைக் கழகம், ஸ்ரீதர் தியேட்டர்) ஒன்றாக சேரும்போது ஊர்வலமானது குறைந்தது 2 கிலோமீட்டராவது வந்திருக்குமென்றே நினைக்கின்றேன்.

இந்த பேரணி தோல்வியில் முடிந்தது என்று யாராவது சொல்லுவார்கள் என்றால் அது முழுமையான பொய்யே தவிர வேறொன்றும் இல்லை.

நன்றி ஜீவன். 

எமக்கான அரசியல்தீர்வு மறுக்கப்பட்டால் மாற்றத்தின் சக்தியாக “எழுக தமிழ்”மாறும் எழுச்சிப் பேரணியில் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டு

தமிழ் தேசத்தின் எதிர்காலத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தியாக \\\\\\\'எழுக தமிழ்” மக்கள் எழுச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் \\\\\\\'எழுக தமிழ்” மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் நேற்றைய தினம் யாழில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.முற்றவெளியில் நடைபெற்ற நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ் மக்களாகிய நாம் முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். இக் காலகட்டத்தின்  முக்கியத்துவத்தை சரியாக விளங்கிக்கொள்ள வேணடும். 2, 3 மாதங்களில் எமது பேரை பயன்படுத்தி அரசிய லமைப்பு கொண்டுவரப்படவுள்ளது. 

இதற்கு காரணம், ஒரு கொடூர யுத்தத்தை நடத்தி பயங்கரவாதத்தை அழிப்பதாக கூறி ஒரு இனத்தை அழித்து அந்த இனத்துக்க உரிய தீர்வை  கொடுப்போம் என உலகிற்கு வாக்குறுதி கொடுத்த நிலையில்தான் இன்று இரகசியமாக அரசியல் அமைப்பு தயாரிக்கப்படுகிறது.  

ஏனைய நாடுகளில் அரசியல் அமைப்பு என்பது மக்களுடன் பேசி மக்களின் கருத்தை உள்வாங்கி அரசியலமைப்பு உருவாக்கப்படும் அத்துடன் நாட்டின் அனைத்து மக்களும்  ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும். ஆனால் இன்று 65 வருடங்களுக்கு மேல் பல தியாகங்கள் செய்து இரத் தம் சிந்தி  அழிந்து போய் உள்ள  மக்களுக்கு நீதி கொடுப்பதாக கூறி கொண்டுவரப்போகும் அரசியல் அமைப்பில் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படப்போகிறதென்பது கேள்விக் குறியாகவுள்ளது. 

அப்படி இருக்க காரணம் எமது அபிலாசைகள் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளப்பட கூடியதாக இருந்தால் ஏன் இரகசியமாக மேற்கொள்ளவேண்டும். 
65 வருடங்களாக எமது அபிலாசைகள் பற்றி கூறியுள்ளோம்.  ஆனால் அதற்கு மாறாக இன்று சிங்கள தலைவர்கள் ஒற்றயாட்சி தீர்வு வழங்கப்படும் என கூறி வருகிறார்கள். 

ஒரு கொடூரயுத்தம் நடத்தி இனத்தை அழித்து நீதி கேட்கும் இனத்தின் முதுகெலும்பை உடைத்து எம்மை அமைதியாக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் இப்பேரணி ஊடாக மிகத்தெளிவான பதிலை இன்று கூறியுள்ளோம். 

அரசியல் அமைப்பில் எமது அபிலாசைகள் பூர்த்தி செய்யாவிட்டால் இப்பேரணி வளரும் தமிழ் தாயகத்தில் உள்ள ஒவ்வொரு இடத்துக்கும் செல்லும் என வெற்றிகரமாக தெரிவித்துள்ளோம். இப்பேரணி  தமிழ் தேசத்தின் எதிர்காலத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத் தக்கூடிய சக்தியாக அமைந்துள்ளது. 

எதிர்காலத்தில் இந்த இனம் நீதி கேட்கவும் அபிலாசைகளை நிறைவேற்றவும் அரசியல் தலைவர்களை நம்பியிருக்காத இனம் என தனது பலத்தை காட்டி வெற்றி பெறும் என அவர் மேலும் தெரிவித்தார். 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=11779&ctype=news

தமிழ் மக்கள் உரிமைக்காக யாழ்ப்பாணத்தில் பேரணி

எழுக தமிழ் பேரணி
எழுக தமிழ் பேரணி

வடக்கு கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்தமயமாக்கலை உடன் நிறுத்த வேண்டும். தமிழ் மக்களுக்கான இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையில் சமஸ்டி முறையிலான ஓர் அரசியல் தீர்வு வேண்டும், யுத்தக்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று இன்று சனிக்கிழமை நடத்தப்பட்டிருக்கின்றது.

 

யாழ்ப்பாணத்தில் பேரணி

உரிமைகளுக்காக போராட்டம்

எழுக தமிழ் என்ற மகுடத்தில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்திருந்தது. சிவில் சமூக அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளை உள்ளடக்கியதே தமிழ் மக்கள் பேரவையாகும்.

 

யாழ்ப்பாணத்தில் பேரணி

எழுக தமிழ் பேரணி

இந்தப் பேரணியின் மூலம், நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் பல பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் வழங்கப்படவில்லை என்பதை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்துவதற்காகவே இந்தப் பேரணி நடத்தப்படுவதாக தமிழ் மக்கள் பேரவை கூறியிருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் பேரணியாழ்ப்பாணத்தில்

வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவருமாகிய விக்னேஸ்வரனின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் சிவில் சமூக அமைப்புக்களைச் சேர்நதவர்கள், தொழிற்சங்கவாதிகள், யாழ் பல்கலைக்கழக சமூகம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகிய ஈபிஆர்எல்எவ், புளொட் ஆகியவற்றுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈபிடிபி ஆகிய கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன.

எழுக தமிழ் பேரணிஎழுக தமிழ் பேரணி

இடம்பெயர்ந்தோர், காணாமல் போனோரின் உறவினர்கள், தமிழ்க் கைதிகளின் குடும்பங்கள், உறவினர்கள், இராணுவம் கைப்பற்றி நிலைகொண்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் உள்ளிட்ட பொது மக்களும் பெரும் எண்ணிக்கையில் இந்தப் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

எழுக தமிழ் பேரணிஎழுக தமிழ் பேரணி

யாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஓர் அணியும் நல்லூரில் இருந்து ஓர் அணியுமாக இரு முனைகளில் இருந்து பேரணியாக வந்தவர்கள் யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஒன்று கூடினர். அங்கு, கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.

http://www.bbc.com/tamil/sri-lanka-37460961

வடக்கு கிழக்கை இணைக்கவே நாம் அரசுடன் போராடுகிறோம் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் வசந்தராஜா கருத்து

11778.jpg

வேறுபாட்டுடன் இருக்கும் தலைவர்களே நாம் செய்யும் காரியங்களை பாராட்ட மனமில்லை என்றால், அமைதியாக இருந்து நாம் போகும் பாதைக்கு வழிவிடுங்கள் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களுள் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்துள்ளர். 
 
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் \\\\\\\'எழுக தமிழ்\\\\\\\' மாபெரும்  மக்கள் எழுச்சி போராட்டம் நேற்றைய தினம் யாழில் முன்னெடுக்கப்பட்டது. 
முற்றவெளியில் நடைபெற்ற இறுதி நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
நாங்கள் கிழக்கில் இருந்து வடக்குடன் இணைவதற்காக வந்துள்ளோம். நாங்கள் நீங்கள் வேறானவர்கள் அல்ல. வடக்கையும் கிழக்கையும்  மீண்டும் இணைத்து தரும்படி தான் நாம் அரசிடம்  கேட்கிறோம். இதை நாங்கள் அவர்களிடம் கேட்கும் சந்தர்ப்பத்தில் வடகிழக்கு மக்கள் மனதாலும் செயலாலும் ஒன்று சேர்ந்து  நிற்க வேண்டும்.
 
வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டும் என்பது எல்லோராலும் உணரப்பட  வேண்டும். 
தமிழ் மக்களின் உரிமைகளை நோக்கமாக கொண்டு கடந்த ஆண்டு ஆரம்பமாகிய தமிழ் மக்கள் பேரவை ஒரு இலட்சியத்தை மனதில் வைத்து தனது நகர்வுகளை புத்திசாலித்தனமாக நகர்த்திக்கொண்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் இலட்சியப்பாதையில் தனது  இலக்கை நோக்கி  நகர்ந்து கொண்டு இருக்கிறது. 
 
அதன் முதற்கட்டமாக, 60 வருடமாக எமது கையில் இல்லாமல் எந்த தலைவராலும் உருவாக்கப்படாத தீர்வுத்திட்டத்தை ஆவண வடிவமாக உருவாக்கி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்  சமர்ப்பித்துள்ளது,
அடுத்த கட்ட நகர்வாக  வடக்கு கிழக்கை கலை மற்றும் மொழியினால்  இணைப்பதற்காக முத்தமிழ் விழாவை அண்மையில் நடத்தியிருந்தோம். 
 
மூன்றாவதாக  தமிழ்  மக்களின் மொத்த பிரச்சினைகளையும் சர்வதேசத்துக்கும் அரசுக்கும் ஒருமித்து  எடுத்துக்கூறி அதற்கான தீர்வை பெறுவதற்காக ஆரம்பகட்ட நடவடிக்கையை இப்பேரணி ஊடாக ஆரம்பித்துள்ளோம். 
 
நாம் எல்லோரும் இணைந்தால் ஒற்றுமைப்பட்டால்  நமது இலக்கை நாம் அடைந்தே தீருவோம் என்பது  உறுதி. கேட்காமல் எதுவும் கிடைக்காது . கேட்காத சமூகம் பெறுவதற்கு தகுதியற்ற சமூகம்;. முயலாத சமூகம் வெற்றியை அனுபவிப்பதற்கு தகுதியற்ற சமூகம்.
 
இந்த சந்தர்ப்பத்தில் கேட்க வேண்டாம் என சிலர் கூறுகிறார்கள். முயல வேண்டாம்  என கூறுகிறார்கள். கேட்காமல்  இருந்தால் எதுவும் எமக்கு கிடைக்காது. உரத்துக்கேட்போம். அதற்காகத்தான் இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளோம். 
 
இது தொடர்சியாக இடம்பெறவேண்டும். அப்போதுதான் மற்றவரின் தலை திரும்பி எமது பக்கம் அவர்களின் பார்வை விழும். எனவே  தொடர்ந்து  போராட வேண்டும். 
பகிரங்கமாக நாம் கேட்கிறோம். மக்கள் அத்தனை பேரும் ஒன்றிணைய வேண்டும். நாம் பிரதேசத்தால் வேறுபட்டவர்கள் என்ற எண்ணம் வேண்டாம் அவ்வாறு தலைவர்கள் கூறுவதை கேட்கவும் வேண்டாம். நாம் ஒன்றாக இல்லாவிட்டால் எமது விடுதலைக்கு வெகு காலம் எடுத்தேயாகும்;. 
 
வேறுபாட்டுடன் இருக்கும் சில தலைவர்களே! எங்கள் பக்கம் வாருங்கள்.  நாம் செய்யும் காரியங்களை குறை சொல்ல வேண்டாம். நல்லதை செய்தால் பாராட்டுங்கள். பாராட்ட மனமில்லை என்றால் அமைதியாக இருங்கள்.அமைதியாக இருந்து நாம் போகும் பாதைக்கு வழிவிடுங்கள், ஒற்றுமையாக இருந்தால் வெற்றி நிச்சயம் என அவர் மேலும் தெரிவித்தார். 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=11778&ctype=news

 

 

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25.9.2016 at 3:35 AM, nedukkalapoovan said:

இதே பொங்கு தமிழ் என்று பெயர் வைத்திருந்தால்.. மக்கள் வந்திருப்பார்கள்.. கடைசி வரை தமிழனை காட்டிக் கொடுத்து அழித்த பெருமைக்குரிய ஒட்டுக்குழுக்கள் ஓடி மறைஞ்சிருக்கும்.

இது காட்டிக் கொடுத்தவன்.. எதிரிக்காக கொலை செய்தவன் எல்லாம்.. மக்களோடு மக்களா கொடிபிடிக்கிற நிலைக்கு கொண்டு வந்திருக்குது.

ஏதோ ஒற்றுமையின் பெயரால்.. காக்கவன்னியன்களையும் பாதுகாக்க வேண்டிய அவல நிலையில் மக்களும் மண்ணும். 

அதை விடக் கொடுமை.. சம் சும் கும்பலின் எஜமான விசுவாசம்.. அப்பட்டமாக வெளிப்பட்டமை. :rolleyes:tw_angry:

எதுஎப்படியோ மக்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்த அமையும் சந்தர்ப்பங்களை பாவிக்க தவறவில்லை. 

இது சம் சும் கும்பலின் தேர்தல் வெற்றி.. குறித்தும் சந்தேகங்களை எழுப்புகிறது. :rolleyes:

இதைத்தான் நானும் சொல்ல வருகின்றேன்.


கூனோ குருடோ என்று பாராமல் மக்கள் தங்கள் உணர்வுகளையும் ஆதங்கங்களையும் தெரிவுபடுத்த ஒரு வழி அவசியம் தேவைப்படுகின்றது.

சம்சும் கொம்பனியை இனியும் நம்பிக்கொண்டிருந்தால் என்ன நடக்கும் என்பதை சிறுபிள்ளைக்கும் தெரிந்த விடயம். ஏன் சர்வதேசத்துக்குமே தெரிந்த விடயம்.tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.