Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத இயக்கத்துடன் சம்பந்தனுக்கு தொடர்பு, ஆபத்தில் அரசாங்கம்

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளின் உதவியுடன் தனது கூட்டணியை இயங்கவிடாமல் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் உறவு கொண்டிருப்பது அனுதாபம் அளிக்கும் விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இதனை தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று அவர் அனுப்பியுள்ள கடிதமொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனநாயக கோட்பாடுகளுக்கு அமைவாகவும், அகிம்சையை கடைப்பிடித்து வந்த மிகவும் நம்பிக்கைக்குரிய கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியை, விடுதலைப் புலிகளுடன் இணைந்து இயங்க விடாது இரா.சம்பந்தன் செய்துள்ளார்.

அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்று உறவுகளை கொண்டிருப்பது தமக்கு அனுதாபமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகியன சர்வதேச சமூகத்தின் மத்தியில் மிக வேகமாக நம்பிக்கையை இழந்து வருகின்றது.

இதேவேளை, இலங்கை தமிழர் ஒருவரின் அகதி அந்தஸ்துக்கான விண்ணப்பம் கனேடிய நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டதாக ஆனந்த சங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தீர்ப்பு கனேடிய சமஷ்டி நீதிமன்றத்தினால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும், இலங்கை தமிழரசு கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பயங்கரவாத இயக்கமாக கருதப்படுகின்ற விடுதலைப் புலி இயக்கத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இலங்கை தமிழரசு கட்சிக்கும் ஆதரவு வழங்கிய காரணத்திற்காகவே அந்த இலங்கை தமிழரின் அகதி அந்தஸ்த்து மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகிய இரு அமைப்புகளும் சர்வதேச அரங்கில் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவை என மிக விரைவில் சர்வதேசம் வெளிப்படுத்தும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான தொடர்புகள் குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/120590?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

ஆடின காலும்....பாடின வாயும்...சும்மா இருக்காது!

  • கருத்துக்கள உறவுகள்

வாயில வருது.. சொல்லிப்போடுவன்.. அப்புறம் பாத்துக்க ஆமா.

  • கருத்துக்கள உறவுகள்

கொசுத் தொல்லை தாங்க முடியல

  • கருத்துக்கள உறவுகள்

இது புலிகள் காலத்தில சம்பந்தர் வன்னி போய் வரேக்க எழுதினது.

மாறாட்டத்தில, பழய கடதாசிய முத்திர ஒட்டி போட்டுட்டார்.. :224_monkey:

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனுக்கு அஞ்சலி.. முன்னாள் போராளிகள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு.. இதெல்லாம்.. ஆனந்த சங்கரி என்ற நரியின் வெளி வேசம். இவரை பயன்படுத்த நினைக்கும்.. முன்னாள் போராளிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில்... இந்தக் காட்டிக்கொடுப்பாளர்கள்.. இனத்துரோகிகள்.. இன அழிப்பாளர்கள் எப்பவும் தங்கள் தொழிலைக் கைவிடப் போவதில்லை. :rolleyes:

  • தொடங்கியவர்

அடிவருடி எட்டப்ப அரசியலை உடும்புப் பிடியாக பிடித்துள்ள ஆனந்தசொங்கரி! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.