Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லசந்தவின் கொலையாளி மரணம்

Featured Replies

லசந்தவின் கொலையாளி மரணம்
 
 

article_1476448340-300.jpgசண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாக, கொலைக்குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர், அது தொடர்பான கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் ஒருவரே, இந்தக் கொலைக் குற்றத்தை ஏற்றுக்கொண்டவராவார்.

அவர் எழுதிவைத்துள்ள கடிதத்தில், “தெரிந்துகொள்ள வேண்டியவர்கள் தெரிந்துகொள்வதற்காக” என்று தலைப்பிட்டுள்ளார். இக்கடிதம், அவரது காற்சட்டை பொக்கெட்டில் இருந்துள்ளது.

லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாகவும் தன்னுடைய நண்பன் மலிந்த உதலாகம, குற்றவாளி அல்ல என்றும், அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilmirror.lk/183964/லசந-தவ-ன-க-ல-ய-ள-மரணம-

  • தொடங்கியவர்

“லசந்தவை கொலை செய்தது நானே” ; தற்கொலை செய்துக்கொண்ட முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி

 

“ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது நானே, என கடிதம் எழுதிவைத்தவிட்டு முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரியொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

 

 

கேகாலை கரடுபன - தெஹிபிடிய பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

மேலும் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரியான மலிந்த உதலாகமவை விடுதலை செய்யுமாறும், இந்த கடிதத்தை புலனாய்வு பிரிவினருக்கு ஒப்படைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/12387

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை செய்ய வைக்கப்பட்டுள்ளார் என நம்பலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறு பிள்ளைகளையும் குண்டுபோட்டுக் கொன்றுவிட்டு, அவர்கள் பயங்கரவாதிகள் என்று உலகையே நம்பவைக்கும் பலே கில்லாடிகளுக்கு அதிகாரி தற்கொலை என்று நம்பவைப்பது ஒரு விடயமா? :(

  • கருத்துக்கள உறவுகள்

ramkumar_13.png

மின் கம்பியை... கடித்து, செத்தான்.... 
என்று நம்பும், உலகத்தில் வாழும்... மூடர் கூட்டம்  நாம்.

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் இன்னொரு படுகொலை!

21ம் நூற்றாண்டின் மிக மோசமான சிங்கள-பௌத்த பயங்கரவாதி கோத்தபாயவை காப்பாற்ற இன்னும் பல சதி முயற்சிகளில் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரம் இறங்கும் எனத் தெரிகிறது.

அண்மையில் மைத்திரியின் கூற்று இதை வலுப்படுத்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பாலும் தேனும் ஓடும் எண்டாங்கள்?இப்போ ரத்தமா ஓடுதே?

தற்கொலை செய்து கொண்ட நபர் உண்மையில் லசந்தவை கொலை செய்தவரா?

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் உண்மையான கொலையாளிகள் தப்பிப்பதற்காக மற்றுமொரு கொலை செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது தான் எனக் கூறி கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்துக்கொண்ட ஒருவரின் சடலம் இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டது.

லசந்த கொலை வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆனந்த உதலாகம என்ற இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் பிரேமானந்த உதலாகம, இந்த கொலை செய்யவில்லை எனவும் அவரை விடுதலை செய்யுமாறும் தற்கொலை செய்து கொண்ட நபர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை கரடுபான தெஹிபிட்டிய வீதியில் வசித்து வந்த 51 வயதான எதிரிசிங்க ஜயமான்ன என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை, தனது வீட்டின் சமையல் அறையில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். இந்த நபர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி எனவும் இவரது மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நபரின் இடுப்பில் சொருக்கப்பட்டிருந்த நிலையில், கடிதம் ஒன்று காணப்பட்டது.

லசந்த விக்ரமதுங்கவை நானே கொலை செய்தேன். ஆனந்த உதலாகம அல்ல. இதனை புலனாய்வு பிரிவினரிடம் கொடுங்கள் என் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. எவ்வாறாயின் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், லசந்தவை கொலை செய்ததாக கூறி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லசந்தவை கொலை செய்த உண்மையான குற்றவாளிகளை தப்பி வைக்கும் முயற்சியாக இந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாமே என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நபர் தற்கொலை செய்து கொண்ட போது வீட்டில் எவரும் இருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

முடிவடைந்து வரும் விசாரணைகளை திசை திருப்பும் நோக்கில் இந்த புதிய சம்பவம் நடந்துள்ளதாக சட்டத்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த நபர் லசந்தவை உண்மையில் கொலை செய்திருந்தால், உண்மையை கூறி பொலிஸாரிடம் சரணடைந்திருக்கலாம். அதனை விடுத்து ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது கேள்வியை எழுப்பியுள்ளது.

http://www.tamilwin.com/politics/01/121063?ref=editorpick

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15.10.2016 at 2:10 AM, தமிழ் சிறி said:

ramkumar_13.png

மின் கம்பியை... கடித்து, செத்தான்.... 
என்று நம்பும், உலகத்தில் வாழும்... மூடர் கூட்டம்  நாம்.

கிட்டத்தட்ட உதே மாதிரி ஜேர்மனியிலையும் ஒரு விசயம் நடந்திருக்கு தெரியுமோ...:grin:

image-1059229-200_thumbbiga_4x3-twyu-1059229.jpg

http://www.zeit.de/politik/deutschland/2016-10/politiker-al-bakr-selbstmord-reaktionen

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

கிட்டத்தட்ட உதே மாதிரி ஜேர்மனியிலையும் ஒரு விசயம் நடந்திருக்கு தெரியுமோ...:grin:

image-1059229-200_thumbbiga_4x3-twyu-1059229.jpg

ஓம்... நாலு பேர் காவல் காக்க, அந்த சிரியாக்காரன் தூக்கு மாட்டி செத்துப் போனான். :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.