Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க முடிவு.!

Featured Replies

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க முடிவு.!

EU-To-Remove-LTTE-From-Militants-List.jp

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.

விடுதலைப்புலிகள் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளையும் தடை பட்டியலில் இருந்து நீக்கவும், அவர்கள் மேல் சுமத்தப்பட்ட பயங்கரவாதிகள் என்ற முத்திரையை விலக்கிக் கொள்ளவும், முதல் தடவையாக ஐரோப்பிய யூனியன் முன் வந்துள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய நீதிமன்றத்தின் மூலம் நீதிபதிகளில் ஒருவர் இது தொடர்பான அறிக்கை ஒன்றை ஐரோப்பிய யூனியனுக்கு சமர்பித்தார்.

இதனை அடுத்து தடை நீக்கம் தொடர்பாக இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு ஏதாவது ஆட்சேபனை உள்ளதா.? என்றும் அப்படி இருப்பின் அதனை எழுத்து மூலம் அறிவிக்கும்படியும் கேட்டிருந்தது.

இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பை தடைப் பட்டியலில் இருந்து நீக்க, இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்க கூடாது என்று தெரிவித்து இருந்தது. இருப்பினும் இந்திய அரசு இது தொடர்பாக எந்த நெருக்கடியும் தரவில்லை.

இதனை அடுத்து இலங்கை மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளின் எதிர்ப்பு இருந்தாலும் கூட, தடைப் பட்டியலில் இருந்து இவ்விரு அமைப்புகளின் பெயர்களை நீக்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

இது தொடர்பான சுற்றிக்கை விரைவில் வெளியாகிறது. இந்த முடிவுக்கு இங்கிலாந்து கட்டுப்பட வேண்டும் என்று அங்கு வாழும் தமிழர்கள் அழுத்தம் கொடுத்தால் இங்கிலாந்தும் விடுதலைப்புலிகள் மீதான தடையை விலக்கும் வாய்ப்பு உள்ளது.

http://www.virakesari.lk/article/12962

  • கருத்துக்கள உறவுகள்

நல்லொரு செய்தி! ஆயினும் விடுதலைப்புலிகள் தடை நீங்கியதும்.... 'நாங்களே விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள்' என்று இதுவரைகாலமும் மக்களைக் கொள்ளையடித்துக் குபேரவாழ்கை வாழ்பவர்களை தமிழ்மக்கள் இனம்கண்டு தடைசெய்தலும் வேண்டும். :unsure::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்சின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். புலிகளின் பேரால் திடீர் பணக்காரராகிய எல்லோரையும் புலம் பெயர் தமிழ் மக்கள் இனம்கண்டு சமூகத்திலிருந்து ஒதுக்க வேண்டும். முடியுமானால் அந்தந்த நாட்டு காவல் துறையிடம் அவர்கள் மீதான குற்றச்சாட்டை தெரிவிக்கவேண்டும் (கைஎழுத்து வேட்டை  ஒறன்றை ஆரம்பித்து அதன் மூலம் குற்றச்சாட்டை சமர்பிக்க வேண்டும்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, Paanch said:

நல்லொரு செய்தி! ஆயினும் விடுதலைப்புலிகள் தடை நீங்கியதும்.... 'நாங்களே விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள்' என்று இதுவரைகாலமும் மக்களைக் கொள்ளையடித்துக் குபேரவாழ்கை வாழ்பவர்களை தமிழ்மக்கள் இனம்கண்டு தடைசெய்தலும் வேண்டும். :unsure::unsure:

நாம் தலைமைக்கும் போராளிகளுக்கும் மாவீரர்களுக்கும் தலைவணங்கி மதிப்பளித்ததை தவறாக பயன்படுத்திக்கொண்டார்கள். இவர்களை இனங்கண்டு வ்வொருவரையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தவேண்டியது எமது கடமை.

Edited by குமாரசாமி
ஒ ..

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

நாம் தலைமைக்கும் போராளிகளுக்கும் மாவீரர்களுக்கும் தலைவணங்கி மதிப்பளித்ததை தவறாக பயன்படுத்திக்கொண்டார்கள். இவர்களை இனங்கண்டு இவ்வொருவரையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தவேண்டியது எமது கடமை.

மாவீரர் போராளிகள் தலைவரின் பெயரைச் சொல்லிக் கொண்டு காசு கேட்டு வாறவைக்கு கொடுக்காமல் விட்டால் போச்சு. அநேக மக்கள் இது விடயத்தில் தெளிவாகத்தான் இருக்கினம்.. பவுன் வாங்கின காலத்தில இருந்து. இயக்கம் வாங்கிற முறைக்கும்.. இயக்க வால்பிடிகள்... இயக்கத்தின் பெயரால் கொள்ளையர்கள்.. வாங்கிற முறைக்கும் பலத்த வேறுபாடுள்ளது.

மக்களில் பலர் இவர்களை இயக்கம் தீவிரமாக இயங்கிய போதே இனங்கண்டு ஒதுக்கிட்டினம். ஒரு சிலது அப்ப தீவிரம் போலக் காட்டிட்டு.. அப்புறம் நரி வேலை காட்டினதும் உண்டு. அப்பவே இயக்கத்தை சாட்டி பிழைச்ச ஜெயதேவன் போன்றதுகளையும் மக்கள் கண்டு வந்ததால.. இங்கிலாந்தில்.. மக்கள் பெருமளவில் எமாந்தார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால்... இயக்க தமிழின விரோதிகள் தான்.. உந்த விசயத்தை இப்ப பெரிசாக்கி அதில் ஆதாயம் தேடுவது. சொந்தக் காழ்புணர்வுகளை கொட்டித் தீர்க்கப் பயன்படுத்துவதாகப் படுகிறது. அதுகளுக்கு நாமே தீனிபோட்டு வளர்ப்பது நல்லதல்ல. 

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய ஒரே அமைப்பு என்றால்.. அது விடுதலைப்புலிகள் தான். அவர்கள் மீதான தடையை நீக்க வேண்டிய தார்மீகக் கடமை அவர்களையும் விடுதலை கேட்ட தமிழ் மக்களையும்.. சமாதானப் பொறிக்குள் இழுத்து அழிக்க உதவிய சர்வதேசத்தை சாரும். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம்.. மற்றும் இணைத்தலைமை நாடுகளைச் சாரும். :104_point_left:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, nedukkalapoovan said:

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய ஒரே அமைப்பு என்றால்.. அது விடுதலைப்புலிகள் தான். அவர்கள் மீதான தடையை நீக்க வேண்டிய தார்மீகக் கடமை அவர்களையும் விடுதலை கேட்ட தமிழ் மக்களையும்.. சமாதானப் பொறிக்குள் இழுத்து அழிக்க உதவிய சர்வதேசத்தை சாரும். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம்.. மற்றும் இணைத்தலைமை நாடுகளைச் சாரும். :104_point_left:

அது நூற்றுக்கு நூறுவீதம் உண்மைதான்.
ஆனால் கறுப்பு ஆடுகளை களையெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமும் அவசியமுமாகும்.

14 hours ago, Paanch said:

இதுவரைகாலமும் மக்களைக் கொள்ளையடித்துக் குபேரவாழ்கை வாழ்பவர்களை தமிழ்மக்கள் இனம்கண்டு தடைசெய்தலும் வேண்டும். :unsure::unsure:

பணத்தாசையும், பெண்ணாசையும் (காமமும்) பலரை மயக்கி கவிழ்த்ததை உலக வரலாற்றில் காணலாம்.

தமிழர்களின் உரிமைப் போராட்டம் என்ற உயர்ந்த நோக்கத்துக்கு தம்மை அர்ப்பணித்த சிலரும் இந்த விடயங்களில் மயங்கி வழிதவறிய சம்பவங்கள் உண்டு. இவர்கள் சமூகத்திலிருந்து களையெடுக்கப்பட வேண்டியவர்கள்.

அளவுக்கு மீறிய, முறையற்ற பொருளாசை மற்றும் பாலியலிச்சை முடிவில் சம்பந்தப்பட்டவர்களின்  சீரழிவிலேயே முடிந்துள்ளது உலக வரலாறு. 

  • கருத்துக்கள உறவுகள்

தடை நீக்கத் தலைப்பிலும் காழ்ப்புணர்வைக் கொட்டுவதிலேயே நாம் குறியாக இருக்கின்றோம். ஆனால்,  மக்கள் தாயகத்திலும் புலத்திலும் தெளிவாகவே இருக்கின்றார்கள். தமிழினத்தின் பெயரால் பெற்ற பொருண்மிய வளங்களை கையகப்படுத்தி வைத்திருப்போரை  நேரடியாக அம்பலப்படுத்துவதே பொருத்தமும் தீர்வுமாகும். ஏனென்றால் தமது நேரம் பணம் வாகனமெனத் தேசிய செயற்பாட்டிலே அர்பணித்த பலரையும் நாம் சந்தேகத்தோடு நோக்க வேண்டியுள்ளது. யார் தவறுவிடுகின்றாரோ அவரை அம்பலப்படுத்துங்கள். அதனூடாக அடுத்தகட்டத்திற்கு விடயம் நகர்ந்துவிடும். 

புலிகளமைப்பு தமிழருக்குச் சொந்தமானது. தமிழினத்தால் கட்டிவளர்க்கப்பட்டது. தமிழரின் அடையாளத்தை உலகிலே நிறுவ பல அர்பணிப்புகளைத் தமதாக்கிய ஒரு தேசிய இயக்கத்தை பயங்கவாதமாகச் சித்தரித்து சிங்களமும் உலகும் தமது பிராந்திய சர்வதேச நலண்களைப் பேணத் தமிழினத்தையும் சேர்த்து இராணுவரீதியாக முள்ளிவாய்காலிலேஅழித்துவிட்டு, அரசியல் ரீதியாக முள்ளிவாய்கல் யுத்தம் 3ஐ சிங்கள அரசு தமிழரின்(வாக்குத்) துணையோடு முன்னெடுத்துச் செல்கிறது. (பார்க்க திரு மு.திருநாவுகரசு அவர்களின் „ இலங்கை அரசியல் யாப்பு) எனவே புலத்திலேயுள்ள தேசிய உணர்வாளர்கள் அறிவியலாளர்கள் ஒருகுடையின்கீழ் இணைந்து நிறுவனமயப்பட்ட ரீதியில் செயல்நெறியை வகுத்துச் செயற்படுவது காலத்தின் தேவையென்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எமக்குள் இழுபறிகளை வளர்ப்பது எதிரியை வலுப்படுத்தவதாகவே அமையுமென்பதை நாம் எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம். ஈழத்தமிழினத்தை அருங்காட்சியகத்திற்கு அனுப்பிவிட்டுத்தான் ஓய்வோமென்றால் அதுவே தமிழனின் விதியென்றிருப்பதைத் தவிர வேறில்லை.        
 
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

மாவீரர் போராளிகள் தலைவரின் பெயரைச் சொல்லிக் கொண்டு காசு கேட்டு வாறவைக்கு கொடுக்காமல் விட்டால் போச்சு. அநேக மக்கள் இது விடயத்தில் தெளிவாகத்தான் இருக்கினம்.. பவுன் வாங்கின காலத்தில இருந்து. இயக்கம் வாங்கிற முறைக்கும்.. இயக்க வால்பிடிகள்... இயக்கத்தின் பெயரால் கொள்ளையர்கள்.. வாங்கிற முறைக்கும் பலத்த வேறுபாடுள்ளது.

மக்களில் பலர் இவர்களை இயக்கம் தீவிரமாக இயங்கிய போதே இனங்கண்டு ஒதுக்கிட்டினம். ஒரு சிலது அப்ப தீவிரம் போலக் காட்டிட்டு.. அப்புறம் நரி வேலை காட்டினதும் உண்டு. அப்பவே இயக்கத்தை சாட்டி பிழைச்ச ஜெயதேவன் போன்றதுகளையும் மக்கள் கண்டு வந்ததால.. இங்கிலாந்தில்.. மக்கள் பெருமளவில் எமாந்தார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால்... இயக்க தமிழின விரோதிகள் தான்.. உந்த விசயத்தை இப்ப பெரிசாக்கி அதில் ஆதாயம் தேடுவது. சொந்தக் காழ்புணர்வுகளை கொட்டித் தீர்க்கப் பயன்படுத்துவதாகப் படுகிறது. அதுகளுக்கு நாமே தீனிபோட்டு வளர்ப்பது நல்லதல்ல. 

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய ஒரே அமைப்பு என்றால்.. அது விடுதலைப்புலிகள் தான். அவர்கள் மீதான தடையை நீக்க வேண்டிய தார்மீகக் கடமை அவர்களையும் விடுதலை கேட்ட தமிழ் மக்களையும்.. சமாதானப் பொறிக்குள் இழுத்து அழிக்க உதவிய சர்வதேசத்தை சாரும். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம்.. மற்றும் இணைத்தலைமை நாடுகளைச் சாரும். :104_point_left:

2 hours ago, nochchi said:

தடை நீக்கத் தலைப்பிலும் காழ்ப்புணர்வைக் கொட்டுவதிலேயே நாம் குறியாக இருக்கின்றோம். ஆனால்,  மக்கள் தாயகத்திலும் புலத்திலும் தெளிவாகவே இருக்கின்றார்கள். தமிழினத்தின் பெயரால் பெற்ற பொருண்மிய வளங்களை கையகப்படுத்தி வைத்திருப்போரை  நேரடியாக அம்பலப்படுத்துவதே பொருத்தமும் தீர்வுமாகும். ஏனென்றால் தமது நேரம் பணம் வாகனமெனத் தேசிய செயற்பாட்டிலே அர்பணித்த பலரையும் நாம் சந்தேகத்தோடு நோக்க வேண்டியுள்ளது. யார் தவறுவிடுகின்றாரோ அவரை அம்பலப்படுத்துங்கள். அதனூடாக அடுத்தகட்டத்திற்கு விடயம் நகர்ந்துவிடும். 

புலிகளமைப்பு தமிழருக்குச் சொந்தமானது. தமிழினத்தால் கட்டிவளர்க்கப்பட்டது. தமிழரின் அடையாளத்தை உலகிலே நிறுவ பல அர்பணிப்புகளைத் தமதாக்கிய ஒரு தேசிய இயக்கத்தை பயங்கவாதமாகச் சித்தரித்து சிங்களமும் உலகும் தமது பிராந்திய சர்வதேச நலண்களைப் பேணத் தமிழினத்தையும் சேர்த்து இராணுவரீதியாக முள்ளிவாய்காலிலேஅழித்துவிட்டு, அரசியல் ரீதியாக முள்ளிவாய்கல் யுத்தம் 3ஐ சிங்கள அரசு தமிழரின்(வாக்குத்) துணையோடு முன்னெடுத்துச் செல்கிறது. (பார்க்க திரு மு.திருநாவுகரசு அவர்களின் „ இலங்கை அரசியல் யாப்பு) எனவே புலத்திலேயுள்ள தேசிய உணர்வாளர்கள் அறிவியலாளர்கள் ஒருகுடையின்கீழ் இணைந்து நிறுவனமயப்பட்ட ரீதியில் செயல்நெறியை வகுத்துச் செயற்படுவது காலத்தின் தேவையென்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எமக்குள் இழுபறிகளை வளர்ப்பது எதிரியை வலுப்படுத்தவதாகவே அமையுமென்பதை நாம் எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம். ஈழத்தமிழினத்தை அருங்காட்சியகத்திற்கு அனுப்பிவிட்டுத்தான் ஓய்வோமென்றால் அதுவே தமிழனின் விதியென்றிருப்பதைத் தவிர வேறில்லை.        
 
நன்றிகள் இருவருக்கும்...

நான் எழுத வந்ததை அப்படியே தந்ததற்கு...

வெளியில் நின்று எதற்கும் தீர்வை தொடமுடியாது

வராது.

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.