Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் காணி வாங்குவதற்கான தடை நீக்கம்

Featured Replies

இலங்கையில் காணி வாங்குவதற்கான தடை நீக்கம்
 
 
இலங்கையில் காணி வாங்குவதற்கான தடை நீக்கம்
இலங்கையில் வெளிநாட்டவர்கள் காணி வாங்குவதற்காக போடப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. 
 
இலங்கையை பொறுத்த வரையில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பணத் தேவை அதிகம் தேவைப்படுவதாக  நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க நாடாளுமன்றத்தில்  தெரிவித்துள்ளார். 
 
2014இல் வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணி, வீடுகள் வாங்குவதைத் தடைசெய்யும் சட்டம் அமுலுக்கு வந்ததமை குறிப்பிடத்தக்கது. 

http://www.onlineuthayan.com/news/20022

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கலாம்....... முதலீடு செய்யலாம்........ ஆனால் திருப்பி எடுக்கேலாது.. கண்டியளோ!

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணி, வீடுகள் வாங்குவதற்கான சட்டம் உருவானதை ஏன் இன்னமும் புத்தரின் வாரிசுகள் எதிர்க்கவில்லை என்பது சந்தேகமாக உள்ளது! அத்துடன்  வெளிநாட்டவர்களுக்கான சுற்றுலாத்துறைகளில் நுளைவுச்சீட்டின் விலையானது தலையைச் சுற்றவைப்பது போல, வெளிநாட்டவர்கள் காணி, வீடுகள் வாங்கும்போது செலுத்தவேண்டிய வரித்தொகையும், தலையைச் சுற்ற வைக்கலாம்!!
 

4 minutes ago, Paanch said:

அத்துடன்  வெளிநாட்டவர்களுக்கான சுற்றுலாத்துறைகளில் நுளைவுச்சீட்டின் விலையானது தலையைச் சுற்றவைப்பது போல, வெளிநாட்டவர்கள் காணி, வீடுகள் வாங்கும்போது செலுத்தவேண்டிய வரித்தொகையும், தலையைச் சுற்ற வைக்கலாம்!!
 

அது தான் காரணம், புலம்பெயர் மக்களின் பணத்தை அடிக்க சிங்களவனின் இன்னுமொரு திட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Dash said:

அது தான் காரணம், புலம்பெயர் மக்களின் பணத்தை அடிக்க சிங்களவனின் இன்னுமொரு திட்டம்.

நமது காணிகளை காப்பாற்றமுடியுமல்லவா??

ஒவ்வொரு புலம் பெயர்ந்த தமிழரும்

ஆளுக்க 10 ஏக்கர் நிலத்தை வன்னியிலோ கிழக்கிலோ வாங்கி விட்டாலே

பெருமளவு காணிகள் எம்மிடம் வந்துவிடுமல்லவா?

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நமது காணிகளை காப்பாற்றமுடியுமல்லவா??

ஒவ்வொரு புலம் பெயர்ந்த தமிழரும்

ஆளுக்க 10 ஏக்கர் நிலத்தை வன்னியிலோ கிழக்கிலோ வாங்கி விட்டாலே

பெருமளவு காணிகள் எம்மிடம் வந்துவிடுமல்லவா?

வாங்கி யார் அதை பராமரிப்பது??? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

வாங்கி யார் அதை பராமரிப்பது??? 

எல்லைகளை போட்டு எவரையாவது குடியமர்த்தலாமே.....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நமது காணிகளை காப்பாற்றமுடியுமல்லவா??

ஒவ்வொரு புலம் பெயர்ந்த தமிழரும்

ஆளுக்க 10 ஏக்கர் நிலத்தை வன்னியிலோ கிழக்கிலோ வாங்கி விட்டாலே

பெருமளவு காணிகள் எம்மிடம் வந்துவிடுமல்லவா?

காணிகளை... வாங்கினாலும், அதனை உரியவர் அங்கு இல்லாமல்,  பராமரிப்பது.... கடினம் விசுகு.

  • கருத்துக்கள உறவுகள்

வாங்குவது நீங்கள் பராமரிப்பது நாங்கள். கூலியை அனுப்புங்கள். பிறகு சொந்தம் எல்லாம் சொல்லிக்கொண்டு கடைசி நேரத்தில வரக்கூடாது. கனடா பிரஜைக்கு நடந்தது தெரியுந்தானே.

இவ்வளவு நடந்தும் சிங்களவனை நம்பி இறங்க ஒரு கூட்டம் இருக்கும் எண்டால் அது பேராசைக் கூட்டமாகத்தான் இருக்கும்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காணி வாங்க வசதியுள்ளவர்கள் வாங்குவது நல்ல விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

காணி வாங்க வசதியுள்ளவர்கள் வாங்குவது நல்ல விடயம்.

'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.'

சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுப் பின்பு போராட்டத்தின்போது கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் தவறவிட்டுவிட்டோமே என்று இன்று புலம்புவதுபோல் புலம்பவேண்டியும் வரலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.