Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் மோதல்களை நிறுத்தப்பட்டு சமாதானம் ஏற்படவேண்டும் உலக வங்கியின் தெற்காசிய உபதலைவர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதுடன் கவனமும் செலுத்துகிறோம். இலங்கை சமாதானமும் அமைதியும் நிலவுமேயாயின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வர் என உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பிரதி தலைவர் பிரபல் பட்டேல் இன்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமாதானத்தை நிலை நிறுத்துவதை தவிர வேறு தேர்வு இல்லை. இலங்கையின் அபிவிருத்தி, புணரமைப்பு பணிகள் சமாதானத்தினை உண்டாக்குவதிலேயே தங்கியுள்ளது.

முழு இலங்கையில் அண்மைய மோதல்களால் மக்கள் இடம்பெயர்ந்து வீடுகளை,கல்வி மற்றும் போதியளவு சுகாதார வசதியின்றி சிரமப்படுகிறார்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் போதியளவு பாதிப்பில்லாத போதும் இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பட்டேல் தெரிவித்தார்.

தற்போது எம்மிடம் 750 மில்லியன் டொலர் திட்டமிட்டமுள்ளது. இதில் 25 % நிதி வடக்கு கிழக்கில் வீடமைப்பு பாதிக்கப்பட்ட நீர் விநியோகம் மற்றும் விவசாயம் என்பவற்றிக்கு முதலிடப்படவுள்ளது. எனவே இலங்கையிலுள்ள உள்நாட்டு மோதல்களை முடிவிற்கு கொண்டுவர வேண்டும் என பட்டேல் மேலும் தெரிவித்ததாக ஏ.எப். பி செய்தி தெரிவித்துள்ளது.

THANKS: WWW.VIRAKESARI.LK

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்து நிறுத்திவிடுங்கோவன்

ராஜபக்ஷ எதிர்பார்த்தது 1.5 பில்லியன். கிடைக்கப் போவதோ 0.75 பில்லியன். இதில் 25 வீதம் வடக்கு கிழக்குக்காம் !

மீதி இராணுவச் செலவிற்கே சரியாகும். பெரிய தொகை கிடைக்குமென்று 2000 பேரை வேறு புதிதாகச் சேர்க்கிறார்கள். அரசவையில் புதிய அமைச்சர்கள் வேறு. திண்டாட்டம்தான்.

No military solution possible in Sri Lanka: US

Mon Jan 29, 5:52 AM ET

.......

"We hope Sri Lanka will seize the opportunity to forge a power-sharing proposal that can form the basis for talks with the LTTE that could finally bring an end to conflict in Sri Lanka," he said.

....

http://news.yahoo.com/s/afp/20070129/wl_st...HE0BHNlYwN0bWE-

சமாதான வழிகளில் அரசியல் அதிகார பகிர்வு ஒன்றேதான் சிங்கள தரப்புக்கு மட்டுமல்ல தமிழர் தரப்புக்கும் முன்னுள்ள ஒரேஒரு அரசியல் மார்க்கம்.

Edited by SAMATHAANAM

No military solution possible in Sri Lanka: US

சமாதான வழிகளில் அரசியல் அதிகார பகிர்வு ஒன்றேதான் சிங்கள தரப்புக்கு மட்டுமல்ல தமிழர் தரப்புக்கும் முன்னுள்ள ஒரேஒரு அரசியல் மார்க்கம்.

உங்களுடைய தத்துவத்தை இலங்கை அரசிடம் சொல்லுங்கள். ஏனென்றால் அதிகாரப் பகிர்வு என்றால் அவர்களுடைய அரசியல் யாப்பிற்கும் நீதிமன்றத்திற்கும் என்னவென்று தெரியாது.

சமாதான வழிகளில் அரசியல் அதிகார பகிர்வு ஒன்றேதான் சிங்கள தரப்புக்கு மட்டுமல்ல தமிழர் தரப்புக்கும் முன்னுள்ள ஒரேஒரு அரசியல் மார்க்கம்.

ஐயா சமாதானம்,

நீங்கள் ஒவ்வொரு முறையும் யாழ் களத்தில் கருத்தை எழுதும் போதும் எங்கள் தலைவர் ஆனந்த சங்கரி ஐயாவே நேரில் வந்து தாண்டவக் கூத்து ஆடி சிவதரிசனம் தருவது போன்ற பிரமை எனக்குள் ஏற்படுகின்றது. நீங்கள் யதார்த்த நிலமைகள் விளங்காமல் விதண்டா வாதம் பேசுவதில் பிரயோசனம் இல்லை.

ஒரு கேள்வி, ஒரே ஒரு கேள்வி உங்களிடம் நான் கேட்கின்றேன். சமாதானமாகப் போவோம் என்று நினைத்துவிட்டு தமிழீழத்தேசியத்தலைவர் தானும் ஒரு சாதாரண தமிழனாக விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தொடங்காது தன்பாட்டில் வாழ்ந்து இருந்தால் இன்று தமிழன் மானத்தோடு ஸிறீ லங்காவில் வாழ்ந்திருக்க முடியுமா?

ஆயுதப்போராட்டங்களின் மூலம் மாபெரும் உயிர்த்தியாகங்களைச் செய்து பெற்ற வெற்றிகளே இன்று தமிழனைத் தமிழனுக்கும், உலகிற்கும் தான் யார் என்பதை உணர்த்தியுள்ளது. மிகச்சிறந்த நிர்வாகக் கட்டமைப்புள்ள தமிழீழ அரசை வன்னியில் உருவாக்கியுள்ளது.

தமிழ் மக்கள் ஆனந்த சங்கரி ஐயா போன்ற சுயநலவாதிகளின் கதையை அன்று கேட்டிருந்தால் இன்று தமது அடையாளங்களையே இழந்து அருமைநாயகம் அருமைநாயக்க என்றும், தமிழ்ப்பிரியன் தமிழ்ப்பிரிய என்றும் பெயர்களை மாற்றி சிங்களப் பெண்களை மணமுடித்து சிங்களவர்களாக வாழும் நிலமை தான் ஏற்பட்டிருக்கும்.

உம்மைப்போன்று வானவெடி விடுபவர்களைத்தான் ஸிறீ லங்கா அரசாங்கத்தில் ஆலோசகர்களாகத் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுடன் உமது சமாதானம் என்ற பெயரை சமாதானே என்று மாற்றிவிட்டு வேலையில் சேர்ந்தால் சொல்லி வேலையில்லை. ஐயா ஆனந்தசங்கரி போல் நீரும் இப்போது ஸிறீ லங்காவில் ஆனந்தத்தாண்டவன் ஆடலாம்.

Edited by மாப்பிளை

அதிகாரங்களை பகிர்ந்து அழித்தால் எதுக்கப்பு சண்டை, சண்டை பிடிக்கிறவனை முதலில் சொல்லுங்கோ சமாதானமா போகச்சொல்லி, சொல்லும் சொல்லி பாரும் காதைபொத்திதான் வேண்டுவீர், சும்மா அமைதியா இருப்பவர்களை பாத்து சமாதனத்துக்கு போ சமாதானதுக்கு போ.....என்று புலம்பிக்கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை. :D:icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கத் தூதுவர் முக்கியமாகச் சொன்ன இன்னொரு விடயம்..

"The United States, like Sri Lanka, is engaged in a sustained struggle against terrorism."

"We are a strong supporter in assisting Sri Lanka combat terror by helping to stop the financing and flow of arms to the LTTE, by providing law enforcement assistance, and by providing training and equipment to help the Sri Lankan military to defend itself."

தமிழர்கள் தலைக்குள் ஒன்றும் இல்லாதவர்கள் உங்களைப் போன்றோர் சிலர் தற்போதும் நம்புவது வேடிக்கையே...

  • கருத்துக்கள உறவுகள்

உலக வங்கி - அரசு போர் முனைப்பைக் கைவிட்டு தங்களின் பணிக்கு ஒத்துழைக்கும் வகையில் சூழலை உருவாக்க வேண்டும்.

சிறீலங்காவின் தலைவர் - புலிகளின் தாக்குவலுவை அழிக்க வேண்டும்.

அமெரிக்கா - ஒரே மேடையிலேயே

கொஞ்சம் முன் - அரசும் புலிகளும் யுத்த முனைப்புக்களை நிறுத்தி அதிகாரப்பரவல் மூலம் புலிகளுடன் பேசி நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டும்.

கொஞ்சம் பிந்தி - அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் சிறீலங்காவுக்கு அனைத்து வகையிலிம் பக்க பலமாக இருக்கும்.

இந்தியா - நாராயணன் - வடக்குக்கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த காந்தியின் சத்தியியாக்கிரக நூற்றாண்டு விழாவுக்கு வந்த சிறீலங்காப் பிரதமரிடம் கேட்கப்பட்டதா என்று நிருபர் கேட்க அப்படி ஒன்றும் விவாதிக்கப்படவில்லை.

ஜப்பான் மற்றும் இதர நாடுகள் - பிபிசி தமிழின் படி- அமெரிக்கா சொல்வதை வழிமொழிந்தன.

அமெரிக்காவின் அணுகுமுறை- விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்தி தீர்வைத் திணிப்பதே ஆகும்.

சிறீலங்காவின் அணுகுமுறை - உலக நாடுகளுக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டு பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்று இராணுவத் தீர்வை முன்னெடுப்பது. சாட்டுக்கு ஒரு அரசியல் தீர்வை முன்வைப்பது. எல்லாரும் ஏறிய குதிரையில் இந்தச் சக்கடத்தாரும்.

இந்தியாவின் அணுகுமுறை - என்னவாவது நடக்கட்டும் என் தலைக்கு ஆபத்தில்லாமல் நடந்தால் சரி.

இதர நாடுகளின் அணுகுமுறை - அமெரிக்க எஜமானரை மீறி வாய்திறக்க முடியாது என்பது. :P :D:rolleyes:

Edited by nedukkalapoovan

சிறீலங்காவின் வாகரை ஆக்கிரமிப்பு உட்பட அனைத்து நடவடிக்கைகளிற்கும் முதுகில் தட்டி அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கு.

சிறீலங்கா ஆரம்பித்ததை இன்னும் மூர்க்கமாக தொடரப்போகிறது.

2007 என்பது 2006 இன் நீட்சி மட்டுமல்ல மேலும் மோசமான நெருக்கடிகளை தமிழர் தரப்பு சந்திக்கும் என்பது உண்மையாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இப்படிச் சொல்லி பயப்படுத்துகின்றீர்களே.. எங்களின் மனங்களைக் குளிரப்பண்ண ஆயிரம் ஆயிரமாய் ஆமி சாகப்போகின்றான் என்று சொல்லுங்கோவன்..

நெடுக்ஸ் சரியாகச் சொன்னீர்கள்.

எம்மைச் சுற்றியுள்ளவர்களின் எந்த ஒரு அணுகுமுறையும் தமிழருக்கு நீதியைப் பெற்றுத்தரப்போவதில்லை. இவர்கள் எந்தத் தரப்பின் கை ஓங்குகிறதோ அதன்பக்கம்தான் சார்ந்திருப்பார்கள்.

இனி விடுதலைப் புலிகளின் அணுகுமுறையை விரைவில் பார்ப்போம்.

சண்டைக்கு அங்கிகாரம் என்றால் எங்களுக்கும்தானே, அப்ப 22 போர் தொடங்கப்போகுது, எனது ஆய்வுத்தகவல் படி பங்கர்கள் வெட்டும் வேலைகள் ஆரம்பமாகிவிட்டன, 22க்கு பிறகு மிக உக்கிரமான இறுதிப்போர் தொடங்கபோகிறது, எல்லோரும் கீபோட்டை துடைச்சு வைச்சிருங்கோ எனது ஆய்வை பற்றி வாழ்த்துப்பாடி சுடச்சுட செய்திகள் போட.:rolleyes::D

ஐயா சமாதானம்,

நீங்கள் ஒவ்வொரு முறையும் யாழ் களத்தில் கருத்தை எழுதும் போதும் எங்கள் தலைவர் ஆனந்த சங்கரி ஐயாவே நேரில் வந்து தாண்டவக் கூத்து ஆடி சிவதரிசனம் தருவது போன்ற பிரமை எனக்குள் ஏற்படுகின்றது. நீங்கள் யதார்த்த நிலமைகள் விளங்காமல் விதண்டா வாதம் பேசுவதில் பிரயோசனம் இல்லை.

ஒரு கேள்வி, ஒரே ஒரு கேள்வி உங்களிடம் நான் கேட்கின்றேன். சமாதானமாகப் போவோம் என்று நினைத்துவிட்டு தமிழீழத்தேசியத்தலைவர் தானும் ஒரு சாதாரண தமிழனாக விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தொடங்காது தன்பாட்டில் வாழ்ந்து இருந்தால் இன்று தமிழன் மானத்தோடு ஸிறீ லங்காவில் வாழ்ந்திருக்க முடியுமா?

ஆயுதப்போராட்டங்களின் மூலம் மாபெரும் உயிர்த்தியாகங்களைச் செய்து பெற்ற வெற்றிகளே இன்று தமிழனைத் தமிழனுக்கும், உலகிற்கும் தான் யார் என்பதை உணர்த்தியுள்ளது. மிகச்சிறந்த நிர்வாகக் கட்டமைப்புள்ள தமிழீழ அரசை வன்னியில் உருவாக்கியுள்ளது.

தமிழ் மக்கள் ஆனந்த சங்கரி ஐயா போன்ற சுயநலவாதிகளின் கதையை அன்று கேட்டிருந்தால் இன்று தமது அடையாளங்களையே இழந்து அருமைநாயகம் அருமைநாயக்க என்றும், தமிழ்ப்பிரியன் தமிழ்ப்பிரிய என்றும் பெயர்களை மாற்றி சிங்களப் பெண்களை மணமுடித்து சிங்களவர்களாக வாழும் நிலமை தான் ஏற்பட்டிருக்கும்.

உம்மைப்போன்று வானவெடி விடுபவர்களைத்தான் ஸிறீ லங்கா அரசாங்கத்தில் ஆலோசகர்களாகத் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுடன் உமது சமாதானம் என்ற பெயரை சமாதானே என்று மாற்றிவிட்டு வேலையில் சேர்ந்தால் சொல்லி வேலையில்லை. ஐயா ஆனந்தசங்கரி போல் நீரும் இப்போது ஸிறீ லங்காவில் ஆனந்தத்தாண்டவன் ஆடலாம்.

சமாதானத்துக்கான குரல்கள் தமிழர் மத்தியில் வலுவாக ஒலிக்காதவரை தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லை என்பதுதான் யதார்த்தம். அதை ஏற்றுக்கொள்ளாத நீர்தான் விதண்டாவாதம் செய்கின்றீர்.

ஆயுதப்போராட்டம் என்பது தமிழரின் அரசியல் கோரிக்கையை உலகுக்கு வலியுறுத்த ஒரு சாதனமே அல்லாமல் அதனால் இறுதி தீர்வை தமிழர்தரப்பு அடைய உதவாது. ஒருவகையில் தமிழருக்கு சாதகமாக இருந்த உலக அபிப்பிராயம் சிங்கள தரப்புக்கு நகர்ந்ததும் முடிவில்லாத போர் முனைப்பு எமது தரப்பில் இருப்பதினால் ஆகும்.

சிறீலங்காவின் வாகரை ஆக்கிரமிப்பு உட்பட அனைத்து நடவடிக்கைகளிற்கும் முதுகில் தட்டி அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கு.

சிறீலங்கா ஆரம்பித்ததை இன்னும் மூர்க்கமாக தொடரப்போகிறது.

2007 என்பது 2006 இன் நீட்சி மட்டுமல்ல மேலும் மோசமான நெருக்கடிகளை தமிழர் தரப்பு சந்திக்கும் என்பது உண்மையாகிறது.

மன்னார்-வவுனியா பிரதேசங்களில் பாரிய இராணுவதாக்குதல் ஒன்றின்பின் புலிகள் சமாதான பேச்சுவார்தையின் இரண்டாம் அத்தியாயத்துக்குள் நுழையலாமென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உலக வங்கியின் தெற்காசிய உபதலைவரைத் தொடர்ந்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித்தலைவரின் இவ்வாறு சொல்கிறார்.

மோதல்கள் ஆரம்பித்ததையிட்டு ஆசிய அபிவிருத்தி வங்கி விசனம்; பேச்சு மேசைக்கு வருமாறு இருதரப்புக்கும் அழுத்தம்

இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே மோதல்கள் ஆரம்பித்ததையிட்டு ஆசிய அபிவிருத்தி வங்கி கவலையடைந்துள்ளதாக வங்கியின் பிரதித் தலைவர் லிக்கியூன் ஜீன் தெரிவித்துள்ளார்.காலியில் இடம்பெற்ற மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,2002ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் அரசிற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் உள்நாட்டு முரண்பாடு ஒரு முடிவிற்கு வரும் என நாம் அனைவரும் நம்பியிருந்தோம்.2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது இராணுவத்தினரும் விடுதலைப்புலிகளும் இன, மத வேறுபாடுகளின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண வேலைத் திட்டங்களையும் மீட்பு பணிகளையும் முன்னெடுத்தது ஒரு வரலாற்று சிறப்புமிக்க திருப்பு முனையாக அமைந்தது.

இந்த நாட்டின் எதிர்காலச் சிறப்பிற்கு இது ஒரு வரலாற்று மாற்றமாக இருக்கும் என உண்மையிலேயே நம்பினோம்.ஆனால் 2006ஆம் ஆண்டில் மீண்டும் ஆரம்பித்துள்ள மோதல்களையிட்டு ஆசிய அபிவிருத்தி வங்கி மிகவும் கவலையடைகின்றது. மீண்டும் ஆரம்பித்துள்ள மோதல்கள் சுனாமிக்குப் பிந்திய கட்டுமானப் பணிகளை வடக்குகிழக்கில் பாதித்துள்ளதுடன் மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கான மீள் கட்டுமானப் பணிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இரு தரப்பும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பவேண்டும்,

- வீரகேசரி நாளேடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.