Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மோடியை கேலி செய்த சீனா...! முடிவுகளைச் செயற்படுத்த ஞானம் வேண்டும் என கிண்டல்

Featured Replies

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செயற்பாட்டை சீனப்பத்திரிகை ஒன்று விமர்சனம் செய்துள்ளது.

சீனாவில் இருந்து வெளிவரும் Global times என்னும் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும், அதற்குப் பதிலாக புதிய 500 மற்றும் 2000ம் ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என்றும் கடந்த 8ம் திகதி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தியா முழுவதும் வாழும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.

இதற்கிடையில் இதுவரை இப்பணப் பிரச்சினையால் 40 பேருக்கும் அதிகமாக உயிரிழந்துள்ளனர்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பால், பல்வேறு நாடுகளும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துவருகின்றன.

உள்நாட்டிலேயே பலர், ஆதரவாகவும் எதிராகவும் கருத்து வெளியிட்டுவருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி அந்த முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும், நாட்டில் இருக்கும், கறுப்புப் பணம், கள்ள நோட்டுக்கள் இல்லாமல் செய்யப்படும் என்று அறிவித்திருக்கின்றார்.

எனினும் இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் சீனப்பத்திரிகை,

'மோடியின் அறிவிப்பு பாகுபாடற்ற மோசமான சதி, ஒரு காஸ்ட்லி அரசியல் ஜோக் என சொல்லலாம். தைரியமான முடிவுகளை எடுக்கும்போது, அதை செயல்படுத்த போதிய ஞானம் வேண்டும். மக்களுக்கு தகுந்த ஏற்பாடுகளை செய்வதில் மோடி அரசு தோற்றுவிட்டது.

குறிப்பாக உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலை மனதில் வைத்துதான் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

மோடி கறுப்புப் பணத்தை ஒழிக்கும் ஒரு ஹீரோ என்ற பிம்பத்தை நிலைநிறுத்தவே இந்த முடிவை எடுத்துள்ளார் என்று அப்பத்திரிகை தன்னுடைய கடும் விமர்சனத்தை வெளியிட்டிருக்கின்றது.

http://www.tamilwin.com/money/01/125046?ref=home

  • தொடங்கியவர்

மோடி அரசுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும் நிலை! அவசரமாக குடியரசுத் தலைவரைச் சந்தித்த பிரதமர்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் நரேந்திர மோடி அவசரமாகச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 08ம் திகதி இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபா நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நாடு முழுவதும் மக்கள் தமது பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காக வங்கிகளின் வாசல்களில் நீண்ட நேரமாக காத்துக்கிடக்கின்றார்கள். பிரதமரின் இந்த திடீர் அறிவிப்பால் பொருளாதாரத்திலும் கூட பல்வேறு சிக்கல்களை நாடு எதிர் கொண்டிருக்கின்றது.

சிறிய வியாபாரிகள் முதல், பெரிய வர்த்தகர்கள் வரை நாடுவழுவதும் உள்ள அத்தனை பேரும் இதனால் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள். எனினும் இந்தத்திட்டத்தை சிலர் வரவேற்று இருக்கின்றார்கள். பலர் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றார்கள்.

இந்நிலையில் இன்றைய தினம் நாட்டில் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கும் அபாயம் இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து நெருக்கடி நிலைகளை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து பிரதமர் நரேந்திரமோடி குடியரசுத் தலைவரைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதேவேளை மோடியின் இந்தச் செயல்திட்டத்தை சீனப் பத்திரிகை ஒன்று இது விவேகமற்ற, ஏமாற்றுச் செயல் என்று விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/india/01/125081?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பிரதமர்  நரேந்திர மோடி.... கறுப்புப் பணத்தை ஒழிக்க,   இரகசியம் காக்க வேண்டும் என்று...
குறிப்பிட்ட  தனது அரைகுறை ஆலோசர்களின் சொல்லைக் கேட்டு...
சரியான திட்டம் இல்லாமல்.... கொண்டு வந்த செயலை,
முன்பு ஆதரித்த.... இந்திய  மக்கள் கூட, இன்று பெரும் சிரமத்தை எதிர் கொள்கிறார்கள்.
இந்தச் செயல்... மோடிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றே... நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி :

இட்லி கடை முனியம்மாவுக்கு இதெல்லாம்.. தெரியுமா ..?

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

இந்திய பிரதமர்  நரேந்திர மோடி.... கறுப்புப் பணத்தை ஒழிக்க,   இரகசியம் காக்க வேண்டும் என்று...
குறிப்பிட்ட  தனது அரைகுறை ஆலோசர்களின் சொல்லைக் கேட்டு...
சரியான திட்டம் இல்லாமல்.... கொண்டு வந்த செயலை,
முன்பு ஆதரித்த.... இந்திய  மக்கள் கூட, இன்று பெரும் சிரமத்தை எதிர் கொள்கிறார்கள்.
இந்தச் செயல்... மோடிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றே... நினைக்கின்றேன்.

முதல் தவறு... 2000 மட்டுமே பெறலாம் என்றது. 20,000 மட்டுமே வங்கியில் வைப்பிலிடலாம் என்பது.

பொருளாதாரம் வளர்ந்த நிலையில், 2000 தான் வங்கியில், ATM மெஷினில் எடுக்கலாம் என்பது, யானைப் பசிக்கு சோளப் பொரி போடட கதை தான்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Nathamuni said:

முதல் தவறு... 2000 மட்டுமே பெறலாம் என்றது. 20,000 மட்டுமே வங்கியில் வைப்பிலிடலாம் என்பது.

பொருளாதாரம் வளர்ந்த நிலையில், 2000 தான் வங்கியில், ATM மெஷினில் எடுக்கலாம் என்பது, யானைப் பசிக்கு சோளப் பொரி போடட கதை தான்.

இதில் பெரும் பிரச்சினை என்னவென்றால்....
அவர்களின்  பணத்தை, மாற்றுவதற்கு... அவர்கள் வேலைக்கு  லீவு போட்டு  வந்தும், 
வங்கிகள் முன்பு வரிசை கட்டி... நாள் முழுக்க நின்றும், அவர்களுக்கு கொடுக்கும் பணம் வங்கிகளில் இருக்கவில்லை.
நாளாந்தம் உழைத்து சம்பாதிக்கும் மக்களும், 
சாதாரண குடும்ப வாழ்க்கை நடாத்தும் அரச ஊழியர்கள் கூட  விரக்திக்கு போய் விட்டார்கள்.

அது மட்டுமல்லாது... கடந்த பத்து நாட்களாக,
மக்களிடம் புதிய பணம் இல்லாததால்...... கடைகளில்  வியாபாரம் படுத்து விட்டது.

இந்த மக்களின்  வெறுப்பு..... அடுத்த தேர்தலில், . ராஜீவ் காந்தி தம்பியை, 
இந்திய பிரதமாராக்கி விடுமோ... என்று, எனக்கு பயமாக... உள்ளது. :grin:

Edited by தமிழ் சிறி

1 hour ago, தமிழ் சிறி said:

 

இந்த மக்களின்  வெறுப்பு..... அடுத்த தேர்தலில், . ராஜீவ் காந்தி தம்பியை, 
இந்திய பிரதமாராக்கி விடுமோ... என்று, எனக்கு பயமாக... உள்ளது. :grin:

எனக்கும் அது தான் தலையை சுத்துது!!!! எம்மை பொறுத்தவரை ப.ஜ.க தான் நல்லம்.

1996 - 2004  வரை தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தின் பொற்காலம்.
 அதன் பின் காங்கிரஸ் வந்தது. முழு அழிவு தான்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

கைப்பற்றப்பட்ட ரூ. 6 கோடி புதிய நோட்டுகள் தொடர்பாக கர்நாடக அரசு அதிகாரிகளிடம் தீவிர விசாரணை: ஈரோடு, சென்னையை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் சிக்குகிறார்கள்

 

கர்நாடகாவில் அரசு அதிகாரிகளிடம் கட்டு கட்டாக கைப்பற்றப்பட்ட பழைய நோட்டுகள், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்கக் கட்டிகள்.
 
கர்நாடகாவில் அரசு அதிகாரிகளிடம் கட்டு கட்டாக கைப்பற்றப்பட்ட பழைய நோட்டுகள், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்கக் கட்டிகள்.

 

கர்நாடக அரசு அதிகாரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ. 6 கோடி புதிய நோட்டுகள் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அண்மையில் சோதனை நடத்தியது. இதேபோல கடந்த செவ்வாய்க்கிழமை முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமான மூத்த ஐஏஸ் அதிகாரி மோகன் சக்ரவர்த்தி உட்பட 2 அரசு அதிகாரி களின் வீடுகளில் சோதனை நடத்தப் பட்டது.

இந்தச் சோதனையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கர்நாடக அரசு சாலை மேம்பாட்டுத் துறை யின் முதன்மை திட்ட அலுவலர் ஜெயசந்திராவின் பெங்களூரு வீட்டில் சோதனை நடத்தினர். அவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம், பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தினர்.

இதுமட்டுமில்லாமல் ஜெய சந்திராவின் மகனும் தொழிலதிபரு மான பிரிஜேஷ் ஜெய‌சந்திராவுக்கு சொந்தமாக சென்னை, ஈரோட்டில் உள்ள‌ இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு 2 சூட்கேஸ், 3 மூட்டை ரொக்கப்பணம், 5 கிலோ தங்கக் கட்டிகள், 6 கிலோ தங்க, வைர நகைகள் கைப்பற்றப்பட்டன. இந்த ரொக்கப்பணம், நகைகளை மதிப்பிடும் பணி பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் ரூ. 4.7 கோடி மதிப்பி லான புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளும், ரூ. 30 லட்சம் மதிப் பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளும் இருந்தன. அதே போல கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகள் மற்றும் தங்க வைர நகை களின் மதிப்பு ரூ. 5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடக காவிரி நீர் வாரிய கழகத்தின் முதன்மை பொறியாளர் சிக்கராயப்பாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. பெங்களூரு, மைசூரு, சென்னை ஆகிய இடங்களில் நடந்த சோதனை யில் ரூ.1.3 கோடி மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்கின. மேலும் ரூ.152 கோடி மதிப் பிலான சொத்துகளின் முக்கிய ஆவணங்களும் 3 ஆடம்பர கார் களும் கைப்பற்றப்பட்டன. இது தவிர பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.90 லட்சம் அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வருமான வரித்துறை சோதனை யில் சிக்கியுள்ள கர்நாடக அரசு அதிகாரிகள் ஜெயசந்திரா, சிக்க ராயப்பா பிரிஜேஷ் ஜெய சந்திரா ஆகியோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப் பட்டுள்ளனர்.

பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்று வதற்கு உதவிய பல்வேறு வங்கி அதிகாரிகளும் முக்கிய அரசியல் தலைவர்களும் திரைப்பட தயாரிப் பாளர்களும் சிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுமட்டுமில்லாமல் வருமான வரித்துறையின் வலை யில் சிக்கியுள்ள அரசு அதிகாரிகள் இருவரும் முதல்வர் சித்தராமையா, பொதுப்பணித் துறை அமைச்சர் மகாதேவப்பா ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படுகிறது.

எனவே முக்கிய அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் கறுப்புப் பணத்தை அரசு அதிகாரிகள் மாற்றும் பணியில் ஈடுபட்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. இதில் சென்னை, ஈரோடு, கோவை ஆகிய இடங்களை சேர்ந்தவர் களுக்கும் தொடர்பு உள்ளது. அங்குள்ள தனியார் வங்கிகளின் மூத்த அதிகாரிகள், தனியார் மருத்துவமனைகளின் தலைவர்கள் ஆகியோரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வருமான வரித்துறை திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.

இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி.பரமேஷ்வர் கூறியபோது, “சட்டவிதிகளை மீறுவோருக்கு சட்ட ரீதியாக தண்டனை வழங்கப் படும். விசாரணையில் சிக்கியுள்ள‌ அரசு அதிகாரிகள் மீதான நடவடிக்கை குறித்தும் அவர்களை பணி இடைநீக்கம் செய்வது தொடர்பாகவும் முதல்வர் சித்தராமையா முடிவு செய்வார்'' என்றார்.

http://tamil.thehindu.com/india/கைப்பற்றப்பட்ட-ரூ-6-கோடி-புதிய-நோட்டுகள்-தொடர்பாக-கர்நாடக-அரசு-அதிகாரிகளிடம்-தீவிர-விசாரணை-ஈரோடு-சென்னையை-சேர்ந்த-முக்கிய-பிரமுகர்களும்-சிக்குகிறார்கள்/article9408059.ece

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.