Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஃபிடல் காஸ்ரோ காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, விசுகு said:

 இலங்கையிலும் தமிழ் மக்களால் பிடல் காஸ்ரோ மிகவும் மதிக்கப்பட்டார்.

ஆனால் பிடல் காஸ்ரோவின் கியூப அரசானது தமிழ் மக்களுக்கு விரோதமாக இலங்கை அரசின் இனப்படுகொலையை ஆதரித்தது.

பிடல் காஸ்ரோவின் கியூப அரசானது இலங்கை அரசின் இனப் படுகொலைக்கு வழங்கிய ஆதரவானது தமிழ் மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை மட்டுமல்ல முள்ளிவாய்க்கால் வலியைவிட அதிகமானது.

இந்த கசப்பான உண்மைகளை மறந்து பிடல் காஸ்ரோவை என்னால் போற்ற முடியவில்லை. என்னை மன்னித்து கொள்ளுங்கள்.

எனக்கு காஸ்ரோவைவிட என் தமிழ் இனம்தான் பெரிது. முக்கியமானது.

விசுகரின் கருத்தை ஆமோதிக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

15181272_668532893328498_9184644438339334001_n.jpg?oh=49cd03f26e8ba6da1f77f07f30c553c7&oe=58C1FFE6

 கியூபா, பனையால் விழுந்தவனை மாடேறி உலக்கின மாதிரி, துன்பப்பட்ட எங்களை திரும்ப திரும்ப ரஷ்யா, பாகிஸ்தான், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுடன் சேர்ந்து வஞ்சித்தார்கள்.

அது சரி, யாரிந்த கட்டு மரம் - புதுப்பெயராக இருக்கிறது  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Ahasthiyan said:

அது சரி, யாரிந்த கட்டு மரம் - புதுப்பெயராக இருக்கிறது  

கருணாநிதி

டெல்லியில் நடந்த அணி சேரா இயக்க மாநாட்டின் போது இந்திரா காந்தியிடம் காஸ்ட்ரோ வெளிப்படுத்திய பாசம்

 

 
இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் ஃபிடல் காஸ்ட்ரோ.
இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் ஃபிடல் காஸ்ட்ரோ.
 

அணி சேரா இயக்க மாநாட்டின் போது, இந்திரா காந்தியை எதிர்பாராத வேளையில் திடீரென ஃபிடல் காஸ்ட்ரோ கட்டியணைத்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

கடந்த 1980-களில் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. கடந்த 1983-ம் ஆண்டு மார்ச் மாதம் அணி சேரா இயக்க (நான் அலைன்ட் மூவ்மென்ட் -என்ஏஎம்) நாடுகளின் மாநாட்டை இந்தியா நடத்தியது. டெல்லி விக்யான் பவனில் மாநாடு நடைபெற்றது. அப்போது என்ஏஎம் தலைவராக கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ இருந்தார்.

டெல்லியில் நடந்த மாநாட்டில் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியிடம் என்ஏஎம் தலைவர் பொறுப்பை ஃபிடல் காஸ்ட்ரோ ஒப்படைக்க வேண்டும். அதற்கு முன்பு கடந்த 1979-ம் ஆண்டு அணி சேரா இயக்க மாநாடு கியூபா தலைநகர் ஹவானாவில் நடந்த போது ஃபிடல் காஸ்ட்ரோ பேசும்போது, ‘‘என்ஏஎம் தலைவர் பொறுப்பை என் சகோதரி இந்திரா காந்தியிடம் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்’’ என்று கூறினார்.

அதன்படி, தலைவர் பொறுப்பை ஒப்படைப்பதற்கு அடையாள சின்னமாக சிறிய சுத்தியலை இந்திராவிடம் காஸ்ட்ரோ ஒப்படைக்க வேண்டும். காஸ்ட்ரோ அந்த சின்னத்தை ஒப்படைக்க தயாரானார். அதைப் பெற்றுக் கொள்வதற்கு இந்திராவும் கைகளை நீட்டினார். ஆனால், இந்திராவிடம் அந்த சுத்தியலை காஸ்ட்ரோ கொடுக்காமல் புன்னகைத்தார். மறுபடியும் அதேபோல் செய்தார்.

அப்போது இந்திரா காந்தியை திடீரென இழுத்து அணைத்தார். அதன்பின் என்ஏஎம் தலைவர் பதவியை ஒப்படைப்பதற்கு அடையாளமாக அந்த சுத்தியலை இந்திராவிடம் ஒப்படைத்தார். இதில் சற்று இந்திரா காந்தி திடுக்கிட்டாலும், உடனடியாக காஸ்ட்ரோவிடம் இருந்து பின்னோக்கி விலகி மிகவும் நாகரிகமாக புன்னகையை மட்டும் வெளிப்படுத்தினார்.

அதற்குள் புகைப்படக் கலைஞர்கள் சரளமாகப் புகைப்படம் எடுத்து தள்ளினர். அங்கிருந்த 140 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றாக கரவொலி எழுப்பி ஆரவாரித்தனர். அடுத்த நாள் அந்த படத்தை உலகமே பார்த்தது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் வெளியுறவுத் துறை முன்னாள் செயலருமான கே.நட்வர்சிங், ‘தி இந்து’வின் சிறப்பு பகுதிக்காக நினைவு கூர்ந்து கூறியதாவது:

கடந்த 1982-ம் ஆண்டு பாக்தாதில் நடக்க வேண்டிய அணி சேரா இயக்க மாநாடு போர் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன்பின் பல நாடுகளை பரிசீலித்த ஃபிடல் காஸ்ட்ரோ, கடைசியில் இந்தியாவை தேர்ந்தெடுத்தார். அப்போது வெறும் 6 மாதங்களே இருந்தன. அந்த குறுகிய கால கட்டத்தில் 140 தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தி காட்டினார் இந்திரா காந்தி. அதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்த காஸ்ட்ரோ, தனது அன்பை அப்படி வெளிப்படுத்தினார்.

யாசர் அராபத் கோபம்

இன்னொரு சம்பவமும் அன்று காலை நடந்தது. அப்போது இந்திராவுக்கு ஃபிடல் காஸ்ட்ரோ உதவினார். பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் மாநாட்டில் பங்கேற்றார். மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் ஜோர்டான் பிரதிநிதி பேசிய பிறகு அராபத்தை பேச சொன்னதற்காக அவர் கோபித்துக் கொண்டார். அதனால் டெல்லியை விட்டு புறப்படுவதாகக் கூறினார்.

அந்தத் தகவலை இந்திரா காந்தியிடம் உடனடியாக தெரிவித்தேன். அத்துடன், ‘மாநாடு பிற்பகல் நிகழ்ச்சிக்குப் பிறகுதான் முடிகிறது. அதுவரை அணி சேரா இயக்கத்தின் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோதான். எனவே, அவரிடம் இந்தப் பிரச்சினையைக் கூறுங்கள் என்றேன். அதன்படி சில நிமிடங்களில் விக்யான் பவனில் காஸ்ட்ரோவை சந்தித்து நிலைமையை விளக்கினார் இந்திரா.

சிறந்த தலைவரான ஃபிடல் காஸ்ட்ரோவிடம் நான் எல்லா விவரங்களையும் எடுத்துரைத்தேன். அதன்பின், விக்யான் பவனுக்கு அராபத்தை அழைத்தார் காஸ்ட்ரோ. அராபத்தும் வந்தார். இருவருக்கும் நடந்த உரையாடல்..

ஃபிடல் காஸ்ட்ரோ: இந்திராவுக்கு நீங்கள் நண்பரா?

அராபத் : நண்பர், நண்பர்தான். அவர் என் மூத்த சகோதரி. அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்.

ஃபிடல் காஸ்ட்ரோ: அப்போது, தம்பி போல் நடந்து கொள்ளுங்கள். பிற்பகல் மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள்.

இப்படிதான் உரையாடல் இருந்தது. அதன்பின், காஸ்ட்ரோ சொன்னது போல் அராபத்தும் பிற்பகல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இவ்வாறு நட்வர்சிங் தனது அனுபவங்களை நினைவு கூர்ந்தார்.

http://tamil.thehindu.com/world/டெல்லியில்-நடந்த-அணி-சேரா-இயக்க-மாநாட்டின்-போது-இந்திரா-காந்தியிடம்-காஸ்ட்ரோ-வெளிப்படுத்திய-பாசம்/article9391553.ece

8 hours ago, Ahasthiyan said:

அது சரி, யாரிந்த கட்டு மரம் - புதுப்பெயராக இருக்கிறது  

கருணாநிதி சொன்னார் "என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன் அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம் என்று.."

1 hour ago, MEERA said:

கருணாநிதி

சென்னையில்  வெள்ளம் வந்த போது புகழ் பெற்ற ஒரு டுவீட் இது.

" சென்னையில் கருணாநிதி வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது" - செய்தி

டுவீட் : கட்டுமரம் மிதக்குதான்னு பாக்க வந்திருக்கும். :grin:

ஃபிடல் காஸ்ட்ரோ- புரட்சி நாயகன் அல்லது கொடுங்கோலன் ?

ஃபிடல் காஸ்ட்ரோ

 

 இவரை நேசிப்போருக்கு, ஃபிடல் காஸ்ட்ரோ என்றால் கியூபா, கியூபா என்றால் ஃபிடல் காஸ்ட்ரோ என்பது தான் உண்மை

கியூபாவை ஒரு கட்சியால் ஆளப்படும் நாடாக அரை நூற்றாண்டு காலம் ஆட்சி செய்தவர் தான் ஃபிடல் காஸ்ட்ரோ.

உலகம் முழுவதும் கம்யூனிச ஆட்சிகள் வீழ்ச்சியடைந்த நிலையில், தன்னுடைய மிக பெரிய எதிரியான அமெரிக்காவின் வாயிலில் செந்நிறக் கொடி தொடர்ந்து பறந்து செய்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ.

தீர்க்கமான சிந்தனையுடையவராக, சோஷலிசனத்தின் ஜம்பவான் என்றும், கியூபாவை மக்களிடமே அளித்திருக்கிற படைவீரரான அரசியல்வாதி என்றும் காஸ்ட்ரோவின் ஆதரவாளர்கள் அவரை புகழ்கின்றனர்.

ஆனால், எதிர்ப்புக்களை கொடுமையாக ஒடுக்கியது, கியூபாவின் பொருளாதாரத்தை முடக்கிய கொள்கைகள் தொடர்ந்து கடைபிடித்தது போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மீது வைக்கப்படுகின்றன.

ஒரு புரட்சியாளனின் வாழ்வில் -- முக்கிய நாட்கள்

பிறப்பு

ஸ்பெயினில் இருந்து கியூபாவுக்கு குடிபுகுந்திருந்த ஏங்கெல் மரியா பௌடிஸ்டா காஸ்ட்ரோ யி அர்கிஸ் என்பவருக்கு முறைகேடாக பிறந்த மகனாக, ஃபிடல் அலிஜான்டிரா காஸ்ட்ரோ ருஸ் 1926 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் நாள் பிறந்தார்.

பண்ணை தொழிலாளியாக இருந்த அவரது தாயான லினா ருஸ் கொன்ஸாலெஸ், அவருடைய தந்தைக்கு முறைகேடான துணைவியாக இருந்து, ஃபிடலின் பிறப்புக்கு பின்னர் மனைவியாக மாறினார்.

ஃபிடல் காஸ்ட்ரோ படிஸ்டா (இடது) அமெரிக்காவின் ஆதரவை பெற்றிருந்தார்

ஹவானாவில் இயேசு சபையினர் நடத்திய எல் கோலிஜியோ டி பிலெனில் பயில்வதற்கு முன்னால், சன்டியாகோவில் இருக்கும் கத்தோலிக்க பள்ளிகளில் காஸ்ட்ரோ கல்வி கற்றார்.

என்றாலும், விளையாட்டுக்களில் அதிக நேரத்தை செலவிட்டதால், கல்வியில் சோபிக்க தவறினார்.

1940-களின் நடுவில் ஹவானா பல்கலைக்கழகத்தில் அவர் சட்டம் படித்து கொண்டிருந்தபோது, மேடை பேச்சாளராக தன்னுடைய திறமைகளை கூர்மைப்படுத்தி ஓர் அரசியல் செயற்பாட்டாளராக மாறினார்.

கியூபா புரட்சியின் தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்தார்

மார்க்ஸிசம்

ஊழல் குற்றச்சாட்டுக்களில் மூழ்கியிருந்த அதிபர் ராமோன் கராவ் தலைமையிலான கியூபா அரசை சீர்படுத்துவதும் அவருடைய இலக்குகளில் உள்ளடங்கியது.

வன்முறை போராட்டங்கள் அன்றாட வழக்கமாயின. ஃபிடல் காஸ்ட்ரோ காவல்துறையினரால் தேடப்படும் நபரானார்.

டொமினிக்கன் குடியரசின் வலது சாரி தலைவர் ரபேல் ட்ரஜில்லோவின் ஆட்சியை கவிழ்க்கும் திட்டத்தின் ஒரு பகுதியானார் காஸ்ட்ரோ.

ஆனால், அமெரிக்க தலையீட்டால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

ஃபிடல் காஸ்ட்ரோ

 

 1953 ஆம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோ கைது செய்யப்பட்டார்

1948 ஆம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவின் ஒரு செல்வந்த அரசியல்வாதியின் மகளான மிர்டா டயஸ்-பலார்டை திருமணம் செய்தார்.

நாட்டின் மேல்தட்டு வர்க்கத்தோடு இணைவதற்கு மாறாக அவர் மார்க்ஸிசத்தால் அதிகமாக ஈர்க்கப்பட்டார்.

தடை இல்லாத முதலாளித்துவம் தான் கியூபாவில் தோன்றியிருக்கும் பொருளாதார பிரச்சனைகளுக்கு காரணம் என்றும், மக்களின் புரட்சியால் மட்டுமே இதனை முடிக்கு கொண்டு வர முடியும் என்றும் காஸ்ட்ரோ நம்பினார்.

பட்டப்படிப்புக்கு பின்னர் வழக்கறிஞராக பணியாற்றிய அவர், தொடர்ந்து கடனில் மூழ்கியதால், அப்பணியிலும் முன்னேற்றம் காணவில்லை.

அரசியல் செயற்பாட்டாளராகவே தொடர்ந்த அவர், வன்முறை போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.

1952 ஆம் ஆண்டு ஃபல்கென்சியொ படிஸ்டா நடத்திய ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பால், அப்போதைய கியூபா அதிபர் கார்லோஸ் பிரியோ ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.

தாக்குதல்

அமெரிக்காவோடு நெருக்கிய உறவை கொண்டிருக்கும், படிஸ்டாவின் கொள்கைகளும், சோஷலிச அமைப்புக்களை அடக்கி ஒடுக்குவதும் ஃபிடல் காஸ்ட்ரோவின் அடிப்படை அரசியல் நம்பிக்கைகளுக்கு எதிராக இருந்தன.

சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தோல்வியடைந்த பின்னர், படிஸ்டாவின் ஆட்சியை அகற்றிவிட மறைமுகமாக வேலைசெய்யும் "த மூவ்மென்ட்" (இயக்கம்) என்ற அமைப்பை ஃபிடல் காஸ்ட்ரோ உருவாக்கினார்.

பணக்காரர்களின் சித்து விளையாட்டுகளுக்கு புகலிடமாக கியூபா ஆகியிருந்தது. பெருமளவில் திட்டமிடப்பட்ட குற்ற பின்னணி குழுக்களும், விபச்சாரம், சூதாட்டம் மற்றும் போதை மருந்து கடத்தல் போன்றவையும் கியூபாவில் பரவியிருந்தன.

 

ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவாரா

 கெரில்லா போரின்போது சே குவேராவுடன் (வலது) ஃபிடல் காஸ்ட்ரோ (இடது)

ஓர் ஆயுதக் கிளர்ச்சிக்கு தேவையான ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காக, 1953 ஆம் ஆண்டு சன்டியாகோவுக்கு அருகில் இருந்த மொன்காடா படைத்தளம் மீது தாக்குதல் நடத்த ஃபிடல் காஸ்ட்ரோ திட்டமிட்டார்.

அந்த தாக்குதல் தோல்வியடைந்து, பல புரட்சியாளர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர்.

அந்த கைதிகளில் ஒருவராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோ, 1953 ஆம் ஆண்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

ராணுவத்தால் மேற்கொள்ளப்படும் அட்டூழியங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பாக, தன் மீதான நீதிமன்ற விசாரணையை ஃபிட்ல் காஸ்ட்ரோ பய்னபடுத்தி கொண்டது அவருக்கு புகழை உயர்த்தியது.

குறிப்பாக, இந்த விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தை அவர் பெற்றார்,

கெரில்லா போர்

ஃபிடல் காஸ்ட்ரோ 15 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். ஆனால், வெறும் 19 மாதங்கள் சற்றே வசதியான சூழ்நிலையில் சிறையில் கழித்த பின்னர், 1955 ஆம் ஆண்டு பொது மன்னிப்பின் பெயரில் விடுவிக்கப்பட்டார்.

அவர் சிறையில் இருந்த குறுகிய காலத்தில், தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து விட்டு, மார்க்ஸிய சித்தாந்தங்களில் மூழ்கினார்.

படிஸ்டா தன்னுடைய எதிரிகளை ஒடுக்குவதை தொடர்ந்ததால், கைதாவதில் இருந்து தவிர்க்க காஸ்ட்ரோ மெக்ஸிகோ தப்பி சென்றார்.

அங்கு தான் அவர் இளம் புரட்சியாளர் எர்னஸ்டோ "சே" குவாராவை சந்தித்தார்.

1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 12 பேரை சுமந்து செல்ல உருவாக்கப்பட்ட நீர் கசியும் செகுசு படகில், 81 ஆயுதம் தாங்கிய சகாக்களோடு, ஃபிடல் காஸ்ட்ரோ கியூபா திரும்பி வந்தார்.

 

சகாக்களுடன் ஃபிடல் காஸ்ட்ரோ

 1959 ஆம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோவின் படைப்பரிவுகள் ஹவானாவை வந்தடைந்தன

இந்த குழு சியர்ரா மாஸ்டிரா மலைகளில் அடைக்கலமானது. இந்த தளத்தில் இருந்து கொண்டு ஹவானாவில் நடைபெற்று வந்த ஆட்சிக்கு எதிராக அவர் கெரில்லா தாக்குதல்களை மேற்கொண்டு வந்தார்.

1959 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி, கிளாச்சியாளர் படை கியூபாவின் தலைநகரில் நுழைந்தது. அதிபர் பாடிஸ்டா பதவியை துறந்து ஓடிவிட்டது.

பாடிஸ்டாவின் நூற்றுக்கணக்கான முன்னாள் ஆதரவாளர்கள் விசாரணைகளுக்கு பின்னர் மரண தண்டனை வழங்கப்பட்டனர்.

இந்த விசாரணைகள் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு பார்வையாளர்கள் பலரால் குறிப்பிடப்பட்டுள்ளன.

சித்தாந்தம்

"புரட்சிவாத நீதி, சட்ட கொள்கைகளால் அன்றி, அறநெறி நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது" என்று வலியுறுத்தியதன் மூலம் ஃபிடல் காஸ்ட்ரோ தன்னுடைய இந்த செயல்பாட்டுக்கு நியாயம் கற்பித்தார்.

புதிய கியூபா அரசு நிலத்தை மக்களிடமே வழங்கவும், ஏழைகளின் உரிமைகளை பாதுகாக்கவும் உறுதி அளித்தது.

ஆனால், ஒரு கட்சியால் மட்டும் நாட்டை ஆளுகின்ற முறையை கியூபா அரசு அமல்படுத்தியது.

அரசியல் கைதிகளாக நூற்றுக்கணக்கான மக்கள் சிறைக்கும், கடுவூழிய முகாம்களுக்கும் அனுப்பப்பட்டனர்.

பெரும்பாலும் நடுத்தர வர்க்க ஆயிரக்கணக்கான கியூபா மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோடினர்.

ஃபிடல் காஸ்ட்ரோ, ரஷ்ய தலைவர் நிக்கிடா குரோஸ்சாஃப்

 

 ரஷ்யாவோடு உடன்பாடு ஏற்படுத்த வேணடிய சூழல் தனக்கு ஏற்பட்டதாக ஃபிடல் காஸ்ட்ரோ தெரிவிப்பு

தன்னுடைய சித்தாந்தம் முக்கியமாக கியுபத்தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்று ஃபிடல் காஸ்ட்ரோ வலியுறுத்தினர்.

"இங்கு கம்யூனிசம் அல்லது மார்க்ஸிசம் என்றில்லை. ஆனால், பிரதிநிதித்துவ ஜனநாயகம் மற்றும் சிறப்பாக திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தில் சமூக நீதி தான் இங்கு இருக்கிறது" என்று காஸ்ட்ரோ அப்போது கூறினார்.

1960 ஆம் ஆண்டு, கியூபா தீவில் அமெரிக்கா நடத்தி வந்த வர்த்தகங்கள் அனைத்தையும் ஃபிடல் காஸ்ட்ரோ தேசியமயமாக்கினார்.

இதற்கு பழிவாங்கும் விதமாக, அமெரிக்கா பொருளாதார தடையை கியூபா மீது விதித்தது. இந்த தடை 21 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது.

ஆக்கிரமிப்பாளர்கள்

சோவியத் ஒன்றியம் மற்றும் அதனுடைய தலைவர் நிக்கிடா குருஷேவிடம் உடன்பாடு ஏற்படுத்த வேணடிய சூழல் தனக்கு ஏற்பட்டு விட்டதாக ஃபிடல் காஸ்ட்ரோ கூறியுள்ளார்.

என்றாலும், சோவியத் ஒன்றியத்தின உறவை அவரே விருப்பமுடனே தழுவி கொண்டார் என்று சில விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

நிலமை எவ்வாறு இருந்தாலும், அமெரிக்க ரஷ்ய பனிப்போரின் போர்க்களமாக கியூபா மாறியது.

1961 ஆம் ஆண்டு, கியூபாவில் இருந்து வெளியேறியோரை வைத்து தனிப்பட்ட படையை உருவாக்க ஆளெடுத்து, அவர்களை வைத்து கியூபா தீவை ஆக்கிரமித்து, ஃபிடல் காஸ்ட்ரோவின் அரசை கவிழ்க்க அமெரிக்கா முயற்சித்தது.

ஃபிடல் காஸ்ட்ரோ

 

 பிக்ஸ் வளைகுடாவில் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போரிட்டபோது, டாங்கியில் இருந்து குதிக்கும் ஃபிடல் காஸ்ட்ரோ

பிக்ஸ் வளைகுடாவில் வைத்து பலரைக் கொன்றும், ஆயிரம் பேரை கைது செய்தும் ஆக்கிரமிப்பாளர்களை கியூபா படைப்பரிவுகள் பின்வாங்க செய்தன. உலக வல்லரசின் மூக்கை உடைத்த ஃபிடல் காஸ்ட்ரோவை, அமெரிக்கா ஒருபோதும் மன்னிக்காத நிலைமையை இந்த போர் உருவாக்கியது.

ஓராண்டுக்கு பின்னர், சோவியத் ஒன்றிய ஏவுகணைகள் கியுபாவுக்கு கொண்டு செல்லப்படுவதை அமெரிக்க உளவு விமானங்கள் கண்டறிந்தன.

உலக அளவில் திடீரென அணு ஆயதப் போர் உருவாக இது காரணமாகலாம் என்று நிலை உருவானது.

"சிறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தீவில் ஏவுகணை தாக்குதல் தளங்கள் பல தற்போது உள்ளன. மேற்கு உலக நாடுகளுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் திறனை வழங்குவது தான் இந்த தளங்களின் நோக்கமாக இருக்க முடியும்" என்று அப்போதைய அதிபர் ஜான் எப் கென்னடி எச்சரித்திருந்தார்.

விநோதமான கொலை முயற்சிகள்

இரண்டு வல்லரசுகளும் ஒன்றுக்கொன்று முட்டிக்கொள்ளும் நிலை ஆனால் குருஷேவ்தான் முதலில் இறங்கிவந்தார். அமெரிக்கா துருக்கியில் இருந்து அதனுடைய ஆயுதங்களை ரகசியமாக திரும்ப பெற்று கொண்டதை அடுத்து, ரஷ்ய அதிபர் நிக்கிடா குருஷேவ் கியூபாவில் இருந்து ஏவுகணைகளை திருப்பி பெற்றுகொண்டார்.

இப்போது, ஃபிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவின் முதல் எதிரியாகிருந்தார். ’ஆப்பரேஷன் மங்கூஸ்’ என்று பெயரிடப்பட்ட நடவடிக்கையை மேற்கொண்டு அவரை படுகொலை செய்ய அமெரிக்க உளவு துறை முயற்சி செய்தது.

வெடிபொருட்கள் நிறைக்கப்பட்ட சிக்ரெட்டை புகைக்க செய்வதன் மூலம் காஸ்ட்ரோவை படுகொலை செய்வது ஒரு திட்டமாக இருந்தது.

ஃபிடல் காஸ்ட்ரோ

 

பிற முயற்சிகள் இயற்கைக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. அவற்றில் ஒன்று, .பிடல் காஸ்ட்ரோவின் தாடியின் முடிகளை விழ செய்து, அவரை கேலிக்குரிய ஓர் உருவமாக மாற்றுவதாகும்.

சோவியத் ஒன்றியம் கியூபாவில் பணத்தை வாரி இறைத்தது. அதனால் தீவில் விளைந்த சர்க்கரையை பெருமளவில் ரஷ்யாவுக்கு கொண்டு சென்றது.

இதற்கு கைமாறாக, அமெரிக்கா விதித்திருந்த பொருளாதார தடையை தோல்வியடைய செய்யுமளவுக்கு, மிகவும் இன்றியமையாத பொருட்களால் ஹவானா துறைமுகத்தை ரஷ்யாவின் கப்பல்கள் நிறைத்தன.

சோவியத்தின் உதவியை சார்ந்து இருந்த பின்னரும், புதிதாக உருவாகிய அணி சேரா நாடுகளின் தலைமையில் கியூபாவை காஸ்ட்ரோ நிலைநிறுத்தினார்.

தட்டுப்பாடுகள்

இருப்பினும், அவர் பக்கசார்பான நிலைப்பாடுகளையும் எடுத்தார். ஆப்ரிக்காவிலுள்ள அங்கோலா மற்றும் மோசாம்பிக்கில் மார்ஸிய கெரில்லாக்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக படைப்பிரிவுகளை அனுப்பினார்.

1990 ஆம் ஆண்டுகளில் உலக அளவில் புவி-அரசியல் சூழ்நிலைகள் மாறின.

வெளிப்படையான ஆட்சியை அமைத்தல் மற்றும் கட்டமைப்புத் திருத்தம் போன்றவற்றை கொண்டு வந்த அதிபர் மிகையில் கோர்பச்சோஃபின் காலமாக அது இருந்தது.

இந்த நிலை கியூபாவின் புரட்சிக்கு மிகவும் பேரழிவான காலமாக அமைந்துவிட்டது.

கியூபாவில் விளையும் சர்க்கரையை இனிமேலும் எடுத்துகொள்ள போவதில்லை என்று ரஷ்யா அறிவித்துவிட்டது.

 

போப் இரண்டாம் ஜான் பால், ஃபிடல் காஸ்ட்ரோ

 கியூபாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை விமர்சனம் செய்ய, தன்னுடைய கியூபா பயணத்தை போப் இரண்டாம் ஜான் பால் பயன்படுத்தி கொண்டார்

இன்னும் அமெரிக்க பொருளாதார தடை நீடிக்கும் வேளையில், வாழ்வாதாரத்தை வழங்கிய சோவியத்தின் தொடர்பு அறுந்துபோக உணவுக்கு தீவிர தட்டுப்பாடுகள் ஏற்பட்டன.

மக்களின் கட்டுப்பாட்டு மனநிலை குறைகின்ற வேளையில், உணவு தேவைக்கான வரிசை வளர்ந்து கொண்டே சென்றது.

உலகத்திலேயே மிகவும் முன்னேற்றம் அடைந்த நாடு என்று ஃபிடல் காஸ்ட்ரோவால் கூறப்பட்ட நாடு, உண்மையில், மாட்டு வண்டிகளின் காலத்திற்கு திரும்பியது.

1990-களின் மத்தியில், பல கியூபா மக்களுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

முன்னதாக அரசியல் காரணங்களுக்காக நாடு கடந்து சென்றவர்கள், இப்போது, பொருளாதார காரணங்களுக்காக சிறந்த வாழ்க்கையை தேடி ஆயிரக்கணக்கானோர் கடல் கடந்து ஃப்லோரிடாவுக்கு நாடு கடந்தனர்.

பலர் வழியிலேயே கடலில் மூழ்கினர். ஃபிடல் காஸ்ட்ரோவிடம் நம்பிக்கை இல்லாதை இது வெளிப்படுத்தியது.

கரிபியன் கம்யூனிஸம்

கியூபா, கவனத்தை ஈர்க்கின்ற சில உள்நாட்டு சாதனைகளையும் நிகழ்த்தியிருந்தது.

சிறந்த மருத்துவ பராமரிப்பு அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. கியூபாவில் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை உலகிலேயே மிகவும் சொகுசான சமூகங்களோடு ஒப்பிடுகையில் குறைவாக இருந்தது.

பிந்தைய ஆண்டுகளில், ஃபிடல் காஸ்டேரோ மிகவும் தணிவடைந்து இனிமையானவராக தோன்றினார்.

உலகம், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் எதிர்பார்க்க முடியாத நிகழ்வு ஒன்று 1998 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

அப்போதைய போப் இரண்டாம் ஜான் பால்,அந்த ஆண்டு கி்யுபா வந்தார்.

 

ஃபிடல் காஸ்ட்ரோ

தன்னுடைய தனி சிறப்புமிக்க கரிபியன் கம்யூனிஸத்தை உருவாக்கியிருந்த ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு, தன்னுடைய புரட்சியை காத்துகொள்ள அவருடைய கடைசி ஆண்டுகளில் சில சுதந்திர வர்த்தக சீர்திருத்தங்களை மேற்கொள்வது கட்டாயமாகியது.

காணொளி

   

2006 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் நாள் தன்னுடைய 80-வது பிறந்த நாளுக்கு சில நாள்களுக்கு முன்னர், அவசர குடல் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு, அதிகாரத்தை தற்காலிகமாக தன்னுடைய சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் அவர் வழங்கினார்.

அவருடைய உடல் நலம் நலிவடைய தொடங்கியது. 2008 ஆம் ஆண்டு தொடக்கத்தில், அடுத்த தேசிய பேரவை கூட்டத்தில் அதிபர் மற்றும் தலைமை தளபதி பதவிகளை ஏற்றுகொள்ள போவதில்லை என்று ஃபிடல் காஸ்ட்ரோ அறிவித்தார்,

"தீவிரமாக செயல்பட வேண்டிய மற்றும் முழு அர்ப்பணத்தையும் வழங்க வேண்டிய பொறுப்பை ஏற்கும் உடல் நலத்தோடு இல்லாத நிலையில், அதனை ஏற்பது என்னுடைய மனசாட்சிக்கு எதிரானதாக அமையும்" என்று அவரை மேற்கோள் காட்டி கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தாளில் வெளியான கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பொது வாழ்வில் இருந்து பெரும்பாலும் ஒதுங்கியே இருந்த அவர், "தோழர் ஃபிடலின் சிந்தனைகள்" என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதி வெளியிட்டு வந்தார்.

டில்லியில் காஸ்ட்ரோ ( காணொளி)

 

 

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை அன்போடு கட்டியணைத்த ஃபிடல் அரிய காணொளி

உடல் நலமற்று போன பின்னர், மீண்டும் 2010 ஆம் ஆண்டு முதலாவது முறை பொதுவில் தோன்றிய அவர், தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, தொலைக்காட்சி பேட்டியும் அளித்தார்.

அதில், இரானோடும், வட கொரியாவோடும் அமெரிக்கா கொண்டுள்ள முறுகல் நிலையை பற்றி கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து வந்த மாதம், நான்கு ஆண்டுகளில் முதலாவது உரையை தேசிய பேரவையில் அவர் ஆற்றினார். அப்போது இரான் அல்லது வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என்று பேசிய காஸ்ட்ரோ, முறுகல் நிலை தொடர்ந்தால் அணு ஆயுத பேரழிவு ஏற்படும் என்று எச்சரித்தார்.

ஃபிடல் காஸ்ட்ரோ மீண்டும் அரசில் நுழைவாரா? என்று கேட்டபோது, "ஃபிடல் காஸ்ட்ரோ எப்போதும் கியூபாவின் அரசியலில் இருக்கிறார். ஆனால், அவர் அரசில் இல்லை. இது பற்றி அவர் மிகவும் கவனமாக இருக்கிறார். அவருடைய பெரும் பொராட்டமே சர்வதேச விவகாரங்கள் தான்" என்று கியூபாவின் கலாசார துறை அதிபர் அப்துல் பிரியடோ பிபிசியிடம் தெரிவித்தார்.

பிடல் காஸ்ட்ரோவின் புரட்சிகர வாழ்வு - புகைப்படங்களில்

கடந்த 2014 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கியூபா மீதான பொருளாதார தடையையும், பிற தடைகளையும் முடிவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்தது, இரு நாடுகளுக்கு இடையே அரை நூற்றாண்டாக நிலவி வந்த வெறுப்புணர்வை கரைத்துவிடுகின்ற மாற்றத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது.

"இந்த பிராந்தியத்தில் அமைதி ஏற்பட நேர்மறையான செயல்பாடு" என்று இதனை வரவேற்றிருக்கும் ஃபிடல் காஸ்ட்ரோ, அமெரிக்க அரசை நம்பபோவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

பல கியூபா மக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஃபிடல் காஸ்ட்ரோவை வெறுத்தாலும், பிறர் உண்மையிலேயே அவரை நேசித்தனர்.

அமெரிக்கா என்ற கொலையாத்திற்கு எதிராக நின்ற டேவிட்டை போலவும், அமெரிக்காவுடனான சச்சரவுகளில் வெற்றி பெற்றவராகவும் ஃபிடல் காஸ்ட்ரோவை அவர்கள் பார்த்தனர்.

அவர்களை பொறுத்தமட்டில், காஸ்ட்ரோ என்றால் கியூபா, கியூபா என்றால் காஸ்ட்ரோ என்பது தான் உண்மை.

http://www.bbc.com/tamil/global-38117728

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Ahasthiyan said:

15181272_668532893328498_9184644438339334001_n.jpg?oh=49cd03f26e8ba6da1f77f07f30c553c7&oe=58C1FFE6

 கியூபா, பனையால் விழுந்தவனை மாடேறி உலக்கின மாதிரி, துன்பப்பட்ட எங்களை திரும்ப திரும்ப ரஷ்யா, பாகிஸ்தான், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுடன் சேர்ந்து வஞ்சித்தார்கள்.

அது சரி, யாரிந்த கட்டு மரம் - புதுப்பெயராக இருக்கிறது  

அவர் வலதுசாரி கட்டுமரம் இவர் இடதுசாரி கட்டுமரம்:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கனடிய பிரதமரின் இரங்கல் செய்தி..

Statement by the Prime Minister of Canada on the death of former Cuban President Fidel Castro 

  1. News
  2. Statement by the Prime Minister of Canada on the death of former Cuban President Fidel Castro
 
  •  
  •  
  •  
  •  
Antananarivo, Madagascar
November 26, 2016

The Prime Minister, Justin Trudeau, today issued the following statement on the death of former Cuban President Fidel Castro:

“It is with deep sorrow that I learned today of the death of Cuba’s longest serving President.

“Fidel Castro was a larger than life leader who served his people for almost half a century. A legendary revolutionary and orator, Mr. Castro made significant improvements to the education and healthcare of his island nation.

“While a controversial figure, both Mr. Castro’s supporters and detractors recognized his tremendous dedication and love for the Cuban people who had a deep and lasting affection for “el Comandante”.

“I know my father was very proud to call him a friend and I had the opportunity to meet Fidel when my father passed away. It was also a real honour to meet his three sons and his brother President Raúl Castro during my recent visit to Cuba.

“On behalf of all Canadians, Sophie and I offer our deepest condolences to the family, friends and many, many supporters of Mr. Castro. We join the people of Cuba today in mourning the loss of this remarkable leader.”

 

http://pm.gc.ca/eng/news/2016/11/26/statement-prime-minister-canada-death-former-cuban-president-fidel-castro

  • தொடங்கியவர்

கனடிய பிரதமரின் மேலே உள்ள அறிக்கை சர்ச்சையை இங்கு தோற்றுவித்து இருக்கு

 

---------------

Trudeau statement on Castro death causes controversy

 

The Prime Minister is facing criticism for his statement expressing “deep sorrow” about the death of former Cuban president Fidel Castro.

Justin Trudeau, who recently returned from a diplomatic visit to Cuba, made the statement early Saturday after the late-night announcement that Castro had died at the age of 90.

Trudeau remembered the late president as a “larger-than-life leader”, who made significant improvements to Cuba’s education and health-care systems.

“A legendary revolutionary and orator, Mr. Castro made significant improvements to the education and health care of his island nation,” Trudeau said.

“I know my father was very proud to call him a friend,” he added.

 

 

More: Trudeau offers condolences at Castro’s death

But others in Canada were less generous in their description of the controversial leader.

Opposition leader Rona Ambrose said in a written statement that under Castro’s rule, thousands of people were impoverished, imprisoned and executed.

“My thoughts and prayers are with the people of Cuba who continue to endure his long and oppressive regime, even after his death,” she wrote.

And many people – particularly members of the Conservative Party – are condemning the prime minister’s statement, pointing out human rights violations during Castro’s half-century regime.

Conservative leadership hopeful Lisa Raitt wrote on Facebook that Trudeau should be ashamed of himself after his remarks.

“With those words, Justin Trudeau has placed himself on the wrong side of history – against the millions of Cubans yearning for freedom. The Prime Minister should be ashamed of himself. He must retract this statement and apologize,” she wrote.

Another hopeful, Kellie Leitch, wrote on her Facebook page that Trudeau should have called Castro’s administration “brutal, oppressive, and murderous”, rather than describing him “as if reading from a storybook.”

Robert Wright, who wrote the book “Three Nights in Havana” about the relationship between Castro and Pierre Trudeau, said it made sense Trudeau would express warm condolences for Castro.

“He has to walk a knife’s edge,” he said. “Canadians have a long, rather proper diplomatic relationship with revolutionary Cuba.”

“On the one hand Justin Trudeau has his family inheritance: his father’s very, very warm friendship with Fidel Castro, and Justin’s own warm rapport with the Cubans,” Write said. “And on the other hand, he has to face criticism when Raul Castro says Cuba will take its own time on democratic reforms and won’t be rushed by Obama or Justin Trudeau or anyone else.”

Maxime Bernier, who is also running for Conservative leadership, called Trudeau’s statement “repugnant.”

“He persecuted gay people, he was against freedom of speech and repressed free expression. He was not a president. He’s a dictator. So I’m not very comfortable with that press release,” he told The Canadian Press.

And while former prime minister Stephen Harper hasn’t weighed in, his son Ben Harper has.

The younger Harper tweeted, “Castro was a monstrous leader, and the world is better off now he’s dead.”

He also tweeted that Trudeau’s statement is “an embarrassment for Canada.”

In his statement, Trudeau offered his condolences “on behalf of Canadians”.

Wright said that would likely upset some Canadians who wouldn’t want to be included in such “warm remarks.”

 

http://www.macleans.ca/politics/trudeau-statement-castro-controversy/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.