Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புடன் கலந்தாலோசித்து பட்ஜட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை-மாவை குற்றச்சாட்டு

Featured Replies

கூட்டமைப்புடன் கலந்தாலோசித்து பட்ஜட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை-மாவை குற்றச்சாட்டு
கூட்டமைப்புடன் கலந்தாலோசித்து பட்ஜட்டில்  நிதி ஒதுக்கப்படவில்லை-மாவை குற்றச்சாட்டு

தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் கலந்தாலோசித்து மக்களின் தேவைகளை அறிந்து ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் நிதியை ஒதுக்குவதற்கு வரவு செலவு திட்டத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னர் மாவை. சேனாதிராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் நிதியமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம்  நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறுகின்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு  அவர் மேலும் உரையாற்று கையில்,

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்புவதற்கும், அபிவிருத்தியை மேற்கொள்வது தொடர்பா கவும், உதவி செய்வோம் என பிரதமர் தெரிவித்திருந்தார்.

இந்த நிதி ஒதுக்கீடு வரவுசெலவுத் திட்டத்திலே நாங்கள் அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்கள் அல்ல, அதுவல்ல எங்களு டைய நோக்கம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாண சபை, கிழக்கு மாகாண சபை களுடன் குறிப்பாக இந்த வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தை முன்வைத்து நிதி ஒதுக்கீடு தொடர்பில் பேசவேண்டும் என நாம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

முக்கியமாக நாங்கள் புதிய அரசியலமைப்பை முன்மொழிய இருக்கின்ற நேரத்தில், நீங்கள் பல நலத்திட்டங்களை அறிவித்திரு க்கின்றீர்கள், வடக்கு கிழக்கு பிரதேசம் உட்பட, ஆனால் குறித்த நலத்திட்டத்திலே, நிதிஒதுக்கீட்டிலே, அந்தந்த மாகாண ஆணைக்குழுவின் தேவைகளையும் முன்மொழிவுகளையும் கருத்திற்கொண்டு நிதியை ஒதுக்குவதில் ஒரு நடைமுறை இருக்கி ன்றது. 

இதுமாத்திரமன்றி நாங்கள் இந்த   நல்லாட்சியை கொண்டு வருவதற்கு வாக்களித்து, ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்கின்ற போது நாங்கள் அமைச்சரவையைில் இடம்பெறாதுவிட்டாலும், நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பிரதி நிதித்து வப்படு த்துகின்றபோது மாகாண சபை ஒன்று தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றபோது எங்களுடன் பேசி தேவைகளை அறிந்து மதிப்பீடு செய்து அதற்கான நிதியை நீங்கள் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

போரினால் அழிந்த பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இப்பொழுதும் மத்திய அரசாங்கம் நிதி ஒதுக்குகின்ற அதிகாரத்தை,  ஒவ்வொரு  அமைச்சரும் விரும்பியவாறு செயற்படுத்துவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு அரசியலமைப்பில் நிதி அதிகாரம் உட்பட பகிர்ந்தளிக்கப்படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தில் அதற்கு முன்னோடியாக அதிகார ங்கள் பகிரப்படுவதற்கு, நிதி அதிகாரங்கள் பகிரப்படுவதற்கு பாதகமாக முன்கூட்டியே நீங்கள் நிதி ஒதுக்கீடு செய்யவதை ஏற்றுக்கொள்ளவில்லை என மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

 

http://www.onlineuthayan.com/news/21210

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும்மிடம் பேசியிருப்பார்கள்.

அடிமைகளிடம் கலந்தலோசித்து எஜமான் செயற்ப்பட்ட வரலாறு உண்டா? என்னப்பா சுத்த வெவரம் கெட்ட ஆளா இருக்காரு. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, trinco said:

அடிமைகளிடம் கலந்தலோசித்து எஜமான் செயற்ப்பட்ட வரலாறு உண்டா? என்னப்பா சுத்த வெவரம் கெட்ட ஆளா இருக்காரு. 

ஒரு மூத்த அரசியல் ......................வாதி இது கூட புரியுமா இருக்குமா ?

நான் நினைக்கிறேன் 
பிச்சை ஒதுக்கீடு குறித்தும் 
பாத்திரகார்களிடம் இந்த முறை தெரிவிக்கவில்லை போல இருக்கிறது.


அவருடைய கோபம் நியாமானதுதானே ? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதாவது பாத்து செய்யுங்கப்பா....tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றில் கலந்தாலோசிக்க மாட்டார்கள் அல்லது செய்வதாக வெற்று வாக்குறுதிகளை கொடுப்பார்கள். மாவை 1977ல் இருந்து ஒரு அப்பாவி.:D::D:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.