Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எழுக தமிழை குழுப்ப சம்பந்தன் தலைமையில் மாட்டுப்பொங்கல்

Featured Replies

11041734_1607430059474650_1863613475829891988_n.jpg
 
15781653_352879661735877_8380402039985014937_n.jpg

எதிர்வரும் 21ஆம் திகதி கிழக்கில் இடம்பெறவுள்ள

மாபெரும் எழுக தமிழ் நிகழ்வை வலுவிழக்கச்செய்யும்பொருட்டு மட்டக்களப்பு தமிழரசுக்கட்சி ஏற்பாட்டில் ஊர்வலம் ஒன்று செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உடனடியாகவே அங்குள்ள தமிழ் சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுஅமைப்புக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


வடக்கில் ஏற்பட்ட மக்கள் எழிர்ச்சியால் சிங்களப் பேரினவாதம் மட்டுமல்ல சோரம்போன தமிழ் தலைமைகளுக்கும் பெரும் தலையிடி ஏற்பட்டிருந்தநிலையில் அது கிழக்கிலும் தொடரவிட்டால் தமது அரசியல் இருப்புக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை புரிந்துகொண்டு அந்த நிகழ்வை குழப்புவதற்காகவும் அந்த நிகழ்வில் மக்கள் அணி திரள்வதை குறைக்கும் நோக்குடனும் அந்த நிகழ்விற்கு இரு நாட்கள் முன்னதாக ஒரு நிகழ்வை பொங்கல் என்றபோர்வையில் மக்களை ஊர்வலமாக்க ஏற்பாடு நடைபெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

sm18.jpg

எழுக தமிழ் நிகழ்வு நடைபெறுவதற்கு முன்னர் ஓர் ஊர்வலத்தினை நடாத்தி தமிழ்மக்களின் தேவை மற்றும் அரசியல்விடயங்கள் சம்பந்தமாக தாம் மிகவும் சாதுரியமாக செயற்படுவதாகவும் சர்வதேச நாடுகளின் அனுசரணையோடு எல்லா விடயங்களையும் தாம் கையாள்வதாக மக்களுக்கு வழமையான அரசியல் உரையூடாக சொல்வதன் மூலம் அவர்களை நம்பவைத்து அடுத்தடுத்த தினங்களில் மக்கள் அணிதிரள்வதை குறைப்பதே இவர்களின் திட்டமெனவும் இதனால் அங்குள்ள இளைஞர்களிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இது தொடர்பில் அந்த பணிகளை முன்னெடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் தமிழரசுக்கட்சியின் முக்கிய தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சர் ஒருவரும் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தற்போது யாழ்ப்பாணத்தில் எழுக தமிழை குழப்புவதற்கு கடுமையாக உழைத்த உதயன் நிர்வாக இயக்குனரும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற  உறுப்பினருமான சரவணபவனுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

ஏற்கனவே யாழ்ப்பாண எழுக தமிழை குழப்புவதற்காக பத்திரிகை வாயிலாக பல பொய்யான செய்திகளை பரப்பியதோடு துளை ஆயுதக்குழுவான ஈ.பி.டி.பி மூலமாக அதே தினத்தில் ஒரு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதும் அதனை ஏற்பாட்டாளர்கள் சாதுரியமாக கையாண்டு அவர்களை வேறிடத்தில் செய்யுமாறு அனுப்பியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி


எழுக தமிழ் நிகழ்விற்கு முன்னைய நாட்களில் வர்த்தகர் சங்கம் ஆதரவில்லை என்ற படுமோசமான பொய்யினையும் எழுக தமிழ் நிகழ்விற்கு பொலீசார் அனுமதி வழங்கவில்லை என்ற செய்தியும் பின்னர் எழுக தமிழ் அன்று இன்று புரட்டாதிச் சனி இன்று எள்ளெண்ணை எரிக்காவிட்டால் 5வாரங்கள் காத்திரிக்கவேண்டும் என்று தலைப்பு செய்தியையும் வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் மிகுந்த கோபத்திற்கு உள்ளாகியிருந்த சரவணபவன் தனது மகளின் பிறந்தநாளை மைத்திரியை அழைத்து வீட்டில் கொண்டாடும் அளவிற்கு அரச செல்வாக்குடையவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

14702288_311854942505016_2586476082045485211_n.jpg
எழுக தமிழுக்கு எதிராக உதயன் பத்திரிகை செய்தி
 
14432965_302240670133110_7652730224214291192_n.jpg
எழுக தமிழுக்கு எதிராக உதயன் பத்திரிகை செய்தி
 
 
 
14434878_301237506900093_8710626967016123255_o.jpg
உண்மையான செய்தி  வேறு பத்திரிகையில்

http://www.tamilkingdom.com/2017/01/456_4.html

  • கருத்துக்கள உறவுகள்

sm18.jpg

 

பொதுவாக எம் மனசு தங்கம்..
ஒரு போட்டின்னு வந்துவிட்டா சிங்கம்.
நான் உண்மைய சொல்வேன் ..நான் நல்லதை செய்வன்.
வெற்றி மேல் வெற்றி வரும் ..

ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவொம். ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே!

முன்னால சீறுது மயிலை காளை .. பின்னால பாயுது மச்ச காளை..

அடக்கி ஆளுது முரட்டு காளை.. முரட்டு காளை..

டிஸ்கி:

நாம யார் மனதையும் புண்படுத்த எழுதவில்லை  .. சல்லி கட்டு தொடர்பான பாடல் வரிகளை எழுதினன் :cool:

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் பொங்கல் என்றாலே சமாச்சாசாரம் அது தானே....

6 hours ago, Athavan CH said:

எழுக தமிழை குழுப்ப சம்பந்தன் தலைமையில் மாட்டுப்பொங்கல்

கூட்டமைப்பினர் என்ற பெயரில் தமிழரசுக் கட்சியினர் சம்பந்தனுக்கு பொங்கல் எடுக்கும் முயற்சியாக இருக்கலாம்!  

 

4736414.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

சொரணை கெட்ட உந்த மாடுகளுக்கு.. எதுக்கு மாட்டுப் பொங்கல். tw_blush: தப்பா நினைச்சுப் போடாதேங்கோ.. எங்க ஊர் மாடுகளைச் சொன்னம். :rolleyes:

  • தொடங்கியவர்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பொங்கல் விழா மூலம் எதனை சாதிக்கப்போகின்றது! மட்டு மக்கள் விசனம்

7081_1483614645_jjj.jpg

மட்டக்களப்பு மாவட்டத்தின் அண்மைய காலமாக இடம்பெற்றுவரும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாய்மூடி மௌனியாக செயற்பட்டுவருவது தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தினை ஏற்படுத்திவருகின்றது.

கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன என்ன விடயங்களுக்காக போராட்டங்களையும் கடுமையான வாதப்பிரதிவாதங்களையும் செய்துவந்ததோ அந்த விடயங்களை இன்று வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சென்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்தவரையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட பிரதேசமாகும்.

வடகிழக்கு மாகாணத்தினைப்பொறுத்தவரையில் கிழக்கு மாகாணம் விசேட தேவைகளைக்கொண்டிருப்பதை யாரும் மறுக்கமுடியாது.இந்த நாட்டில் தமிழ் மக்கள் உரிமைப்போராட்டத்தில் ஈடுபடுவதற்கு காரணமாக அமைந்தது வடக்கினை விட கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவந்த அடக்குமுறைகளே காரணமாக அமைந்தன.

அதன் காரணமாகவே அகிம்சை போராட்டங்களும் ஆயுதப்போராட்டங்களும் வடகிழக்கினை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டது.அந்த ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டன் பின்னர் அந்த போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைகளுக்கு சென்றது.இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைகளில் தமிழர்களின் நிலை உள்ள நிலையில் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவந்தாலும் தமிழர்களின் தனித்துவமான கட்சியாகவும் தமிழர்களின் குரலாகவும் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பே உள்ளது.

இந்த நிலையில் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புகளினை அவர்கள் எந்தளவு அக்கரையுடன் செயற்படுகின்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருந்துவருகின்றது.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் அவ்வாறான ஒரு நிலையே இருந்துவருகின்றது.பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை உட்பட அக்கட்சினை Nசுர்ந்தவர்கள் மாற்றந்தாய் மனப்பான்மையுடனேயே நோக்கிவருவதாக மட்டக்களப்பு தமிழ் மக்களினால் பகிரங்கமாக குற்றஞ்சாட்டும் நிலையேற்பட்டுவருகின்றது.

இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு பாரிய பங்களிப்பினை செய்தவர்கள் தமிழர்கள் என்ற ரீதியில் மட்டக்களப்பிலும் ஏதாவது நடக்கும் என்றால் இன்னும் அதற்கான அடிகூட எடுத்துவைக்கப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்த அதே அரச நிர்வாகமும் அதே அரசியல்வாதிகளும் மீண்டும் ஆளும் நிலையே இருந்துவருகின்றது.அத்துடன் தமக்குள்ள செல்வாக்கினைப்பயன்படுத்தி கடந்த காலத்தில் தமிழர்களை எவ்வாறு அடக்கியாள முற்பட்டார்களோ அதனைவிட இன்று அதிகளவில் செயற்படுவதை காணமுடிகின்றது.ஆனால் கடந்த காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையாக எதிர்த்துவந்த நிலையில் இன்று அவற்றினை வேடிக்கை பார்க்கும் நிலையே இருந்துவருகின்றது.

குறிப்பாக சொல்லப்போனால் இன்று ஒரு மாவட்ட அரசாங்க அதிபரையே மாற்றுவதற்கு திராணியற்றவர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உள்ளது மட்டக்களப்பு தமிழ் மக்களை கடுமையாக விசனமடையவைத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் கடந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று பொட்டிப்பாம்பாகவுள்ளனர்.அண்மைக்காலமாக அரச அதிபர் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் முறைகேடுகள் இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணை செய்யுமாறு கூட இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கவில்லை.அவ்வாறானால் அரசாங்க அதிபர் மேற்கொள்ளும் முறைகேடுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் பங்கு உள்ளதா எனவும் தமிழ் மக்கள் கேள்வியெழுப்பும் நிலையுள்ளது.

அண்மையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாமல் பொலிஸாரைக்கொண்டு தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அது தொடர்பில் பிரதியமைச்சர் அமீர்அலி மூன்று அரச அதிகாரிகள் கடந்த கூட்டத்தினை முகப்புத்தகம் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்ததாகவும் அதன் காரணமாகவே ஊடகவியலாளர் அனுமதிக்கப்படவில்லையென்று கூறியிருந்தார்.பின்னர் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் தேவையற்ற விடயங்களை தெரிவிப்பதன் காரணமாகவே மாவட்ட அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக தாங்கள் இந்த தீர்மானத்தை எடுத்ததாக கூறியிருந்தார்.

இவ்வாறான முன்னுக்கு பின்னு முரணாண கருத்துகளை கூறி கடந்த எதனை மறைப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரவில்லை.இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தடுத்து நிறுத்துவதற்கு யார் உள்ளனர் என்பதே இன்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களுக்கு உள்ள கவலையாகவுள்ளது.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமுடியாத நிலையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் 19ஆம் திகதி பொங்கல் விழாவினை மட்டக்களப்பில் ஏற்பாடுசெய்துள்ளது.

இந்த பொங்கல் விழாவில் மட்டக்களப்பு தமிழ் மக்களை கலந்துகொள்ளுமாறு என்னத்தை கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைக்கப்போகின்றது.மட்டக்களப்பு மாவட்டத்தையே பல்வேறு வழிகளில் பறிகொடுத்துக்கொண்டிருக்கும்போது எதுவித நடவடிக்கையும் எடுக்காத தமிழ் தேசிய கூட்டமைப்பு பொங்கல் விழா மூலம் எதனை சாதிக்கப்போகின்றது என்று மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த ஒருவரை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்குமாறு கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையிடம் விடுக்கப்பட்ட சிறிய கோரிக்கையினைக்கூட நிறைவேற்றமுடியாத தலைமை எந்த முகத்துடன் மட்டக்களப்பு தமிழ் மக்களை சந்திக்கவரப்போகின்றது என்பதை அவர் உணர்ந்துகொள்ளவேண்டும்.

http://battinaatham.com/description.php?art=7081

  • தொடங்கியவர்

எழுக தமிழ் போராட்டம் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரான போராட்டம் அல்ல! (காணொளி)

7085_1483639716_cccc.jpg

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காகவும் அவர்களது நலன்களுக்காகவும் ஜனனாயகரீதியாக பாடுபடுவது அதனுடைய முக்கிய பணியாகும்.
அப்பணியை சிறப்பாக திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக பல்வேறு உபகுழுக்கள் அமைக்கப்பட்டு அவை செயற்பட்டு வருகின்றன.

என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி கிழக்கின் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் வியாழக் கிழமை (05) மாலை மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியிலமைந்துள்ள கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது தமிழ் மக்கள் பேரவையின் தமிழ் எழுக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. இதன்போது அக்குழு மேலும் தெரிவித்ததாவது....


தமிழ் மக்கள் பேரவையில், கலை கலாச்சார உபகுழு தமிழ் பேசும் மக்களின் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை வளர்ப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளது.

பொருளாதார உபகுழு வடகிழக்குக்கான முதன்மைத் திட்டம் ஒன்றினை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

அரசியல் உபகுழு வடகிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றினைத் தயாரித்து அரசுக்கும் சர்வதேசத்துக்கும் கையளித்துள்ளதோடு அத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை அமுலாக்கம் செய்வதற்கு உந்துதலையும் அழுத்தத்தையும் கொடுப்பதற்காக அது பல்வேறு திட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

அத்திட்டங்களில் ஒன்றுதான் எழுக தமிழ் நிகழ்வு.

இதனூடாக வடகிழக்கு மக்களின் அரசியல் அபிலாசைகளை இந்நாட்டு அரசுக்கும் சர்வதேசத்துக்கும் குறிப்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கும் உரத்துச் சொல்ல முடியும் என்பது தமிழ் மக்கள் பேரவையின் திடமான நம்பிக்கை.

எதிர்வரும் பங்குனி மாதம் ஜெனிவாவில் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் பேரவையில் நமது  பிரச்சினைகளில் காட்டப்படுகின்ற அக்கறை நீர்த்துப் போகாமலும் அதனுடைய கூர்மை மழுங்கிப் போகாமலும் இருப்பதற்காக குரல் எழுப்ப வேண்டியது தங்களது கடமை என வடகிழக்கு மக்கள் நினைக்கின்றார்கள்.

அதன் அடிப்படையில்த்தான் கடந்த புரட்டாதி 24 அன்று வடக்கில் யாழ்ப்பாணத்திலே எழுக தமிழ் நிகழ்வு முதன்முதலாக நடாத்தப்பட்டது. அந்நிகழ்வில் ஏறக்குறைய இருபத்தைந்தாயிரம் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது அபிலாசைகளை உலகுக்கு உரத்துக் கூறினர்

கடந்த காலங்களில் தங்கது பிரச்சினைகளை மற்றும் அபிலாசைகளை தங்களது தலைவர்கள்தான் சம்பந்தப்பட்டோரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் அவற்றை நிறைவேற்றப்பாடுபடல் வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் இப்போது நிலமை மாறிக் கொண்டு வருகின்றது.

இப்போது மக்கள் தலைவர்களை முந்திக் கொண்டு தீர்மானம் எடுக்கவும் செயற்படவும் முற்படுகின்றனர்.

ஏனெனில் தலைவர்களுடைய தீர்மானங்களும் செயற்பாடுகளும் தடுமாற்றம் நிறைந்து இருப்பதாக மக்கள் எண்ணுகின்றார்கள்.

இது வரைகாலமும் தலைவர்களுக்குப் பின்னேதான் மக்கள் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது மக்கள் முன்னே போக தலைவர்கள் பின்னே செல்ல வேண்டிய நிலமை ஏற்பட்டு வருகின்றது.

இப்போது இடம் பெற்று வருகின்ற பல நிகழ்வுகளை அதற்கு உதாரணங்களாக நாம் கொள்ள முடியும்.

தலைவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டு பார்த்துக் கொண்டிருக்க மக்கள் இப்போது தயாராக இல்லை. தலைவர்களால் மட்டும் பொறுப்புக்களை சுமக்க முடியாது என்பதை மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டனர்.

எனவே தங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தாங்களும் முழுமையான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என மக்கள் முன்வரத் துவங்கியுள்ளனர்.

அதன் வெளிப்பாடுதான் தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் எழுக தமிழ் நிகழ்வும்

எழுக தமிழ் நிகழ்வினூடாக அரசுக்கும் சர்வதேசத்துக்கும் வடகிழக்கு மக்கள் பின்வருவனவற்றை அழுத்திக் கூற முற்படுகின்றனர்.

1.    வடக்கும் கிழக்கும் இணைக்கப்படல் வேண்டும்.

2.    தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளக்கூடிய சமஷ்டி முறையிலான தீர்வு வேண்டும்;.

3.    வடகிழக்கிலே திட்டமிட்ட குடியேற்றங்களும் பௌத்தமயமாக்கலும் நிறுத்தப்படல் வேண்டும்.

4.    போர்க்குற்ற விசாரணை சர்வதேச பொறிமுறையினூடாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.

5.    விசாரணையின்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் காலதாமதமின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.

6.    காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினைக்கு முடிவுவொன்று விரைந்து காணப்படல் வேண்டும்.

7.    போரின் விளைவாக உருவான பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான  தகுந்த வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

8.    இடம் பெயர்ந்து வாழும் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும்.

9.    ஏனைய பிரதேசங்களுக்குச் சமனாக வடகிழக்கிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

10.    ஏனைய மக்களுக்குக் கிடைப்பது போன்ற தொழில் வாய்ப்புக்கள் வடகிழக்கு மக்களுக்கும் கிடைக்க ஆவன செய்யப்படல் வேண்டும்.

11.    வடகிழக்கில் உள்ள உயர் கல்வி நிலையங்களில் பிறரின் ஆதிக்கம் இல்லாத நிலை உருவாக்கப்படல் வேண்டும்.

கேட்காமல் எதுவும் கிடைப்பதில்லை, கேட்பது நமது தலையாய கடமை. எங்களுக்கு எது தேவை என்பதை நாம்தான் சொல்லியாக வேண்டும். அதையும் உரத்துச் சொல்லுதல் வேண்டும் , தலைவர்கள் மட்டும் சொல்லி இதுவரையில் பெரிய பயன் விளையவில்லை , எனவே தலைவர்களோடு இணைந்து மக்களும் குரல் எழுப்பி எங்கள் தேவையை உலகறியச் செய்தல் வேண்டும்.

இதற்கான அரிய சந்தர்ப்பம் ஒன்றுதான்  தை 21 இல் கிழக்கின் மட்டக்களப்பிலே நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வு.

எனவே அந்நிகழ்வில் இன, மத, கட்சி வேறுபாடுகளை விடுத்து வடகிழக்கைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை பகிரங்கமாக  அழைப்பு

http://battinaatham.com/description.php?art=7085

  • கருத்துக்கள உறவுகள்
ரம்பை அனேகமாக அமெரிக்க மக்கள் விரும்பவில்லை! ஆனால் அவர்தான் அமெரிக்க சனாதிபதி.
சசியை தமிழக மக்கள் விரும்பவில்லை! ஆனால் அவர்தான் பொதுச் செயலாளர். அடுத்து முதலமைச்சரும் ஆவார்.
சம்பந்தரை ஈழத்தமிழர் விரும்பவில்லை! ஆனால் அவர்தான் ஈழத்தமிழர்களின் தலைவர்.
 
புதியதோர் உலகம் செய்வோம் என்று பாரதி கூறியது இதைத்தானோ....... :(:(
 
  • தொடங்கியவர்

சம்பந்தன் ஐயாவின் கொடும்பாவியை யாரும் எரிக்கக்கூடாது

15781653_352879661735877_8380402039985014937_n%2B%25281%2529.jpg

வவுனியாவில் எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தனின் படத்தை எரித்து இருக்கின்றார்கள்.  இது மிகமோசமான செயலாகும் யாரும் அவ்வாறு செய்யக்கூடாது என தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜாசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலை கமநல சேவை நிலையத்தில் விவசாயிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் எழுகதமிழ் நிகழ்வு இடம்பெறுவதை குழப்பும் நோக்கில் தமிழரசுக்கட்சியால் ஏற்பாடுசெய்யப்பட்ட மாட்டுப்பொங்கல் ஊர்வலத்தால் அங்கு இளைஞர்களிடையே பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்துகொண்ட மாட்டுப்பொங்கல் ஏற்பாட்டாளரான தமிழரசுக்கட்சி செயலாளர் துரைராஜசிங்கம் அவர்கள் மேற்படி கருத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அவர் மேலும் பேசுகையில் சம்பந்தன் ஐயாவா காணாமல் ஆக்க செய்தார் அவர் அதனை செய்யவில்லை என்றும் அதனை செய்தவர்கள் வேறுநபர்கள் என்றும் அவர்கள் த.தே.கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இப்போதும் எங்களுடனேயே இருப்பதாகவும் ஐயா எவ்வளவு கஸ்டங்களை தாங்கிக்கொண்டு எங்களுக்காக செயற்படுகின்றார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilkingdom.com/2017/01/45_5.html

  • தொடங்கியவர்

எழுக தமிழை குழப்ப அன்றைய நாளை பாடசாலை நாளாக அறிவிப்பு

Thandayuthapani.jpg

எதிர்வரும் 21ஆம் திகதி கிழக்கில் இடம்பெறவுள்ள
தைப்பொங்கலை முன்னிட்டு கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு (தேசிய பாடசாலைகள் தவிர) எதிர்வரும் 13.01.2017 வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் EP/3/1/AO/01 எனும் இலக்க விசேட கடிதம் மூலமாக அறிவித்துள்ளார்.

இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 21.01.2017 ம் திகதி சனிக்கிழமை பதில் பாடசாலை நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுடள்ளது.

இதன் முதற்கட்டமாக எதிர்ப்புகள் எழும் என்பதை கருத்திற்கொண்டு தமிழரசு கட்சியின் வடமாகாண கல்வி அமைச்சரால் வடக்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டு
 இன்று கிழக்கிலும் தமிழரசுகட்சி திருகோணமலை மாவட்ட தலைவரும் கல்வி அமைச்சருமான தண்டாயுதபாணியால் அமுலுக்கு வரும்முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுக தமிழில் கல்விச் சமூகம் கலந்துகொள்வதை தடுப்பதற்கு தமிழரசுக்கட்சி கடுமையாக பாடுபட்டுவருவதை ஏற்பாட்டாளர்கள் கடும விசனத்துடன் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilkingdom.com/2017/01/456_13.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.