Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் அனைத்திற்கும் காரணம் இவர்கள்தான்! ஆதாரத்தோடு நிரூபிக்க தயார்!

Featured Replies

யாழில் அண்மைக்காலமாக நிலவும் வாள்வெட்டு, மோசடி சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களுக்கு பின்னால் தொடர்புபட்ட அனைவரையும் தனக்கு தெரியும், இது தொடர்பிலான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், தொழிலதிபருமான தி.துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த இரண்டு வருட காலமாக எந்தக் காலத்திலுமில்லாத வகையில் இணையத் தள மோசடி குறித்ததொரு விமர்சனம் யாழில் காணப்படுகின்றது. அதனை இயக்கி வருகின்ற நபருடனான தொடர்பை இன்றிலிருந்து யாழ்.பலாலி படைத் தலைமையகம் கைவிட வேண்டும். இதனை நாங்கள் பலாலி இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்காவிடம் மிகவும் கெளரவமாகவும், விநயமாகவும் கேட்டுக் கொள்கின்றோம். யாழ்.பலாலி இராணுவத் தளபதியுடன் இணைந்து குறித்த நபர் தமிழ் மக்களுக்கெதிரான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதற்கு உறுதுணையாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றின் ஆசிரியர் செயற்பட்டு வருகிறார். குறித்த நபருக்குப் பின்புலமாக இராணுவம் காணப்படுகின்றது என்பதை நாம் முற்று முழுதாகக் கண்டறிந்துள்ளோம். குறித்த நபர் வடமாராட்சி மற்றும் நெல்லியடிப் பகுதிகளில் கட்டடம் நிர்மாணிப்பதாகத் தெரிவித்துப் பலரிடம் மோசடி செய்துள்ளார். குடாநாட்டில் நிலவும் அசாதாரண சம்பவங்களான வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் கழிவோயில் அடிக்கின்ற சம்பவங்கள், கப்பம் பெறுதல் உட்படப் பல்வேறு சம்பவங்களிலும் பின்னணியாகவிருந்து செயற்படுகிறார்.

அவருக்குப் பின்னால் ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட ஐவர் பின்னணியாகவிருந்து செயற்படுவதை நாங்கள் இனங்கண்டிருக்கிறோம். இது தொடர்பான பலமான ஆதாரங்களும், சாட்சிகளும் எம் மத்தியிலுள்ளது.

கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்கள் திட்டமிட்டு வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடுத்தப்பட்டார்கள். ஆனால், பொலிஸ் தரப்போ, பாதுகாப்புத் தரப்போ இவ்வாறான வாள்வெட்டுச் சம்பவங்களின் பின்னணி குறித்து அறிய முடியாதவாறு இன்று பல்வேறு தடைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இன்று கண்ணியமான பிராந்தியப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றனர். யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் ஆகியோர் தொடர்பில் மிகவும் அகெளரவமான முறையில் சில இணையத்தளங்கள் செய்திகள் பிரசுரித்து அவர்களை மாசுபடுத்தியிருக்கின்றன. இதனால், அவர்கள் மெளனிக்கப்பட்டிருக்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினைகளிலிருந்து மக்களை விடுவிப்பதற்கு முன்வர வேண்டும். குடாநாட்டு மக்களும், ஊடகவியலாளர்களும் இராணுவத்தைப் பார்த்து விரல் நீட்டிக் கதைப்பதற்குக் காரணமானவர்களாக எட்டு நபர்கள் காணப்படுகின்றனர்.

குடாநாட்டில் இயல்பு வாழ்க்கையைக் கொண்டு வருவதற்குத் தடையாகவிருக்கின்ற எத்தகைய நபர்களாயினும் சட்டத்துக்கு முன்னிறுத்த முன்வர வேண்டும்.

யாழ்.பண்ணை பேருந்து நிலையத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எவரும் சொகுசாக பயணிக்க முடியாத அசாதாரண நிலைமை ஏற்பட்டுள்ளது. வழித்தட அனுமதிப் பத்திரமில்லாமல் பயணிக்கின்ற சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட பேருந்துகள் தற்போது சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இவை தொடர்பான பின்னணிகளை நாம் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்.

இதற்கும் மேலதிகமாக சட்ட விரோதமான ஆசனப் பதிவுகளை மேற்கொண்டு பிற்பகல் வேளையில் மதுபோதையில் பயணிகளுக்குப் பாலியல் தொந்தரவு, கப்பம் பெறுதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் போன்ற நிலைமைகள் நீடிக்கின்றன. இதனால் பயணிகளுக்கும், பயணிகள் போக்குவரத்துச் சேவை அனுமதிப் பத்திரமுள்ள பேருந்து உரிமையாளர்களுக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றன.

இதற்குப் பின்னணியில் தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவின் ஒரு சில அதிகாரிகளின் ஊழல்களும் காணப்படுவது எம்மால் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் வடமராட்சியிலிருந்து பயணிகள் சேவையில் ஈடுபடுகின்ற பேருந்தில் மொரட்டுவ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி நெல்லியடி மாலுசந்தியிலிருந்து பெற்றோர்கள் ஆசனப் பதிவு செய்து வழியனுப்பி விட்ட வேளையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட போதும் பொலிஸார் அந்தப் பெண்ணின் வாழ்க்கை பாழாகிவிடக் கூடாது என்பதற்காக குறித்த பிரச்சினையைத் தட்டிக் கழித்திருக்கிறார்கள்.

இவ்வாறான நிலையில் பேருந்துகளில் எவ்வாறு பயணிகள் பாதுகாப்பாகப் பயணிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. நான் கூறும் கருத்துக்கள் அனைத்தையும் நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்கள் என்னிடம் காணப்படுகின்றன.

குடாநாட்டில் பல இளைஞர்கள் தற்போது பிழையான வழி நோக்கித் திசை திருப்பப்பட்டு வருகின்றார்கள். பாடசாலைகளின் பரிசளிப்பு விழாக்களுக்கு ஐம்பதாயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் ரூபா வரையான பணத்தைச் செலுத்தி விட்டு எமது இளைஞர்கள் மத்தியில் சமூகச் சீர்கேடுகளை விதைத்து வருகிறார்கள்.

இதில் முன்னின்று செயற்படுவர் ஊடகவியலாளர் தராகி சிவராமின் கொலைச் சூத்திரதாரியான தர்மலிங்கம் சித்தார்த்தனுடன் நெருங்கிச் செயற்படும் ஆர். ஆர் என்பவராவார்.இவர்கள் வவுனியாவில் மலர் மாளிகையில், கோவில் குளம் உமாமகேஸ்வரன் சமாதியிலும், அங்குள்ள முகாமொன்றிலும் பல கொடூரங்களை அரங்கேற்றியவர்கள்.

யாழ். வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகிலுள்ள புளொட் முகாம் 1995 ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஜனாதிபதியாகவிருந்த காலப் பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதன் பின்னர் அந்த முகாமின் பின்பக்கத்திலுள்ள மலசலகூடக் குழியில் எத்தனை பேரை அடித்துப் புதைத்தார்கள்.

இவர்களெல்லாம் தமிழ்த் தேசியம் தொடர்பில் பேசி, சர்வதேச நீதி விசாரணைக்கு எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவார்கள்? அவ்வாறெனில் இவர்கள் செய்த கொலைகளை யார் விசாரிப்பது?, இவர்கள் செய்த அட்டுழியங்களை யார் விசாரிப்பது?, இனியாவது தமிழ்மக்களை நீங்கள் நிம்மதியாக வாழ விடுங்கள்.

எமது மக்கள் முன்னாள் அமரர் தர்மலிங்கத்தின் பெயரைத் தமது மனங்களில் வைத்திருக்கிறார்கள். அவருக்காகத் தான் எமது மக்கள் சித்தார்த்தனுக்கு வாக்களித்தனர்.

22 வரையான தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்கள் தான் தற்போதைய குடாநாட்டின் அசாதாரண சூழ்நிலைகளுக்கு மிகப் பெரும் சூத்திரதாரிகள்.

இவர்கள் தேர்தல்களின் போது எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மூடி மறைப்பதற்காக இவ்வாறான குற்றச் செயல்களுடாக மக்களைத் திசை திருப்பி வருகிறார்கள்.

மக்களைச் சிந்திக்க விடுவதுமில்லை. நல்லாட்சியில் இருக்கின்ற பலன்களை அனுபவிக்க விடுவதுமில்லை. ஆகவே, நல்லாட்சி அரசின் எஞ்சிய மூன்று வருட காலத்தில் நன்மையான விடயங்கள் நடப்பதற்கு இவ்வாறானவர்கள் தடையாகவே காணப்படுகின்றனர், என மேலும் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/politics/01/136307?ref=rightsidebar

  • தொடங்கியவர்
On 23/2/2017 at 6:06 AM, போல் said:

அவருக்குப் பின்னால் ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட ஐவர் பின்னணியாகவிருந்து செயற்படுவதை நாங்கள் இனங்கண்டிருக்கிறோம். இது தொடர்பான பலமான ஆதாரங்களும், சாட்சிகளும் எம் மத்தியிலுள்ளது.

இவரின் அண்ணா மகேஸ்வரனை அரச பயங்கரவாதிகளுடன் இணைந்து கொலைசெய்த டக்ளஸ் கும்பல் இன்னமும் சுதந்திரமாக. 

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ள மக்களுக்கும் இதெல்லாம் தெரியும். ஆனால் அவர்களால் இவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனை உலகின் முன் சொல்லி.. இனங்காட்டி.. உலகத்தாரின் உதவியோடு தான் கட்டுப்படுத்தனும். அதனை புலம்பெயர் மக்கள் தான் செய்ய முடியும். குறிப்பாக மாணவர்கள். 

  • தொடங்கியவர்

துவாரகேஸ்வரனுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வர்த்தகருமான தி.துவாரகேஸ்வரனுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களால் இன்று மாலை  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் தொடர்பில் தனது முகநூல் ஊடாக வசைபாடுவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வைரத்தை பெற்ற தியாகராசாவே ஏன் இந்த வைரஸை பெற்றாய், கொள்ளைக்காரனே உனக்கு பேஸ்புக் எதற்கு?, துவாரகேஸ்வரனின் பேஸ்புக்கை தடை செய்,போன்ற பதாகைகளை தாங்கியிருந்ததுடன் கோஷங்க ளையும் எழுப்பினர்.

யாழ்.பண்ணை சந்தியிலிருந்து ஆரம்பமான இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ் பொதுநூலக வீதி வழியாக வந்து மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தது.

16977098_1295741213872734_719904349_n.jpg

16976992_1295741217206067_1086528487_n.jpg

16933495_1295741240539398_356337226_n.jpg

16977002_1295753250538197_187852638_n.jpg

16976544_1295753180538204_2142282312_n.jpg

http://www.onlineuthayan.com/news/24332

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, போல் said:

துவாரகேஸ்வரனின் பேஸ்புக்கை தடை செய்,

மாபெரும்  ஆர்ப்பாட்டம்  தான்

4 ரௌடிகள் சேர்ந்தால் ஆர்ப்பாட்டம்????

வேற ஒண்டுமில்லை  குளிர் விட்டுப்போச்சு...

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

துவாரகேஸ்வரனின் பேஸ்புக்கை தடை செய்,

மாபெரும்  ஆர்ப்பாட்டம்  தான்

4 ரௌடிகள் சேர்ந்தால் ஆர்ப்பாட்டம்????

வேற ஒண்டுமில்லை  குளிர் விட்டுப்போச்சு...

15 பேர் செய்த மாபெரும் ஊர்வலத்தை...
4 பேர் என்று, குறைத்து கூறியதை.... மிக வன்மையாக கண்டிக்கின்றோம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் பேஸ் புக்கில் வந்து நிற்கிறது  tw_confused:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அத்தனைபேர்களையும் உள்ளே பிடித்துப் போட்டுவிட்டால் போதும், குற்றச்செயல்கள் வெகுவாகக் குறைந்துவிடும்போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, போல் said:

மக்கள் வெள்ளம்  எண்டால்   என்னவெண்டு தெரியாத ஆக்கள் இந்த படங்களை பார்த்து தெரிஞ்சு கொள்ளுங்கோ...:grin:

  • தொடங்கியவர்
8 hours ago, Paanch said:

இங்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அத்தனைபேர்களையும் உள்ளே பிடித்துப் போட்டுவிட்டால் போதும், குற்றச்செயல்கள் வெகுவாகக் குறைந்துவிடும்போல் தெரிகிறது.

உண்மை தான்!
ஒரு 50% ஆன குற்றச்செயல்கள் நின்றுவிடும். 

ஆனால் இவர்களின் பின்னணியில் இருப்பது சிங்கள அரச பயங்கரவாதிகள்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

உண்மை தான்!
ஒரு 50% ஆன குற்றச்செயல்கள் நின்றுவிடும். 

ஆனால் இவர்களின் பின்னணியில் இருப்பது சிங்கள அரச பயங்கரவாதிகள்!

போல் அவர்களே! ஆனாலும் தமிழ் அரச பயங்கரவாதிகளை விட்டுவிட்டீர்களே!! :shocked:  

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு சிங்கள அரச பயங்கரவாதிகள் பின்புலம் உள்ளார்கள் என்று சக கருத்தாளர்கள் எழுதும் போது, அதை மறுதலித்து சிறீலங்கா அரசுக்கு முண்டு கொடுக்கும், அரசின் பிரதிநிதிகள் போன்று எழுதும் கருத்துக்கள மாணிக்கங்கள் இப்போது கப்சிப்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, MEERA said:

யாழில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு சிங்கள அரச பயங்கரவாதிகள் பின்புலம் உள்ளார்கள் என்று சக கருத்தாளர்கள் எழுதும் போது, அதை மறுதலித்து சிறீலங்கா அரசுக்கு முண்டு கொடுக்கும், அரசின் பிரதிநிதிகள் போன்று எழுதும் கருத்துக்கள மாணிக்கங்கள் இப்போது கப்சிப்.

மீரா உங்களுகுமா இது விளங்க வில்லை இலங்கையில் தமிழார்களின் பாதுகாப்புக்காக  பல இயக்கங்கள் உருவாகியது தாங்கள் அறியாமல் இல்லை கடைசியில் பல தடைகளை தாண்டி முன் நின்றது விடுதலை புலிகள் இயக்கம் ஆனால் புலிகள் முன்வர பல இயங்கங்கள் காணாமல் போனது சிலது அழித்து ஒழிக்கப்பட்டது ஆனால் அந்த இயங்கங்களில் இருந்து இறந்தவர்கள் கொல்லப்பட்டவர்களின் சொந்தங்கள்  தமிம் ம‌க்களுக்கும் (ஒட்டு மொத்த தமிழர்களுக்கும்) எதிராக செயற்படுகிறார்கள் என்பதை சிலர் புரிய மறுக்கும் போது என்னத்தை சொல்வது அவர்கள் ஏன் கைக்கூலிகளாக செயற்பட முடியாது  அவர்கள் தான் செய்கிறார்கள் என்றும் உறுதிப்படுத்த முடியாது அதற்க்கு இன்னும் சிலரும் காரணம்  கூட்டிக்கழித்து பார்த்தால் அங்கே ஆரம்பம் தெரிவது அதுவும் நம்ம தமிழர்களே

ஆகமொத்தத்தில் சிங்களவன் அவரை கூட்டிக்கொண்டு வா என்றால் நம்ம தமிழன் அடித்து உதைத்து கூட்டிக்கொண்டு போன ஞாபகங்கள் இருக்கும்  என நினைக்கிறேன்   tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, முனிவர் ஜீ said:

முனிவர் அன்று தொடக்கம் இன்று வரை இந்த கூ(கா)ட்டிக் கொடுப்பாளர்களால் தான் இவ்வளவும்,

  • கருத்துக்கள உறவுகள்
Just now, MEERA said:

முனிவர் அன்று தொடக்கம் இன்று வரை இந்த கூ(கா)ட்டிக் கொடுப்பாளர்களால் தான் இவ்வளவும்,

ஆனால் இவர்களை மறந்து மற்றவனுக்கு நாம் அம்பு விடுகிறோம்  நமக்குள் இருக்கும் கோடாரி காம்புகள் அது அதிகரித்து கொண்டே போகிறது இங்கு  காசுக்கும் சொத்துக்கும் சுகத்துக்கும்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.