Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பி.பி.சி தமிழோசை வானொலி இனி இல்லை..!

Featured Replies

பி.பி.சி தமிழோசை வானொலி இனி இல்லை..! 

பி.பி.சி தமிழோசை வானொலி தனது 76 வருடகால சேவையை, இம்மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

150608135346_bbc_tamil_logo_512x288_bbc_

பிரித்தானிய அரச ஊடகமான பி.பி.சி, வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களை 1927ஆம் ஆண்டு முதல் நடத்திவருகின்றது. முதலில் ஆங்கிலம் மூலம் மாத்திரம் தொடங்கப்பட்ட சேவையானது, தற்போது 27 பிராந்திய மொழிகளில் ஒளிபரப்பு சேவைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் 1941 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பி.பி.சி தமிழோசை வானொலி சேவையானது, தனது 76 வருடகால சேவையை ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.  

p02y4mk6.jpg

உலக தமிழர்களிடையே நம்பகத்தன்மை மிகுந்த சேவையை தந்துவந்த பி.பி.சி. தமிழ் செய்திகள், தற்போதைய தொலைக்காட்சி மற்றும் இணையதளம் போன்ற நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளமையால், வானொலி ஒலிபரப்பை கேட்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கூறி அண்மையகாலமாக பல்வேறு பிராந்திய ஒளிபரப்புகளை நிறுத்தி வருகின்றது.

மேலும் இணைய தளம் மூலமாக பி.பி.சி தமிழோசை தொடர்ந்து ஒலிபரப்பப்படும் எனவும், இலங்கையில் மட்டும் தனியார் வானொலியுடன் இணைந்து பண்பலைவரிசை ஒலிபரப்பில் 5 நிமிட செய்திகள் மாத்திரம் ஒலி பரப்பப்படும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/18808

  • தொடங்கியவர்

பிபிசி தமிழோசை வானொலியின் சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தப்படுகிறது

பிபிசி உலக சேவை வரலாற்றில் மிக நீண்ட காலம் நடத்தப்பட்டு வந்த மொழிப் பிரிவுகளில் ஒன்றான தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு, இந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியோடு நிறுத்தப்படுகிறது.

தமிழோசை

கடந்த 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிபிசி தமிழோசை வானொலிச் சேவையின் சிற்றலை ஒலிபரப்பு, இந்த ஆண்டுடன் ஏறக்குறைய 76 ஆண்டுகளை தொடுகிறது.

சிற்றலை என்ற தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்படும் வானொலிச் சேவைகள், இந்தியா மற்றும் இலங்கையில் தொலைக்காட்சி, இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் ஆதரவை இழந்து வருவதே தமிழோசையின் ஒலிபரப்பு நிறுத்தப்படுவதற்கான காரணமாகும்.

ஆனால் தற்போது இலங்கையின் சக்தி எஃப் எம் மூலம் நடத்தப்பட்டு வரும் பிபிசி தமிழின் ஐந்து நிமிட பண்பலை ஒலிபரப்பு தொடரும்; அதில் எந்த மாற்றங்களும் இல்லை.

இணையதள சேவை விரிவாக்கம்

மேலும் பிபிசி தமிழின் சிற்றலை ஒலிபரப்புகள் நிறுத்தப்பட்டாலும் பிபிசி தமிழின் இணையதள சேவைகள் விரிவுபடுத்தப்படுகின்றன.

தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களுக்கு நேயர்கள் மாறிக் கொண்டிருக்கையில் அவர்களுடன் சேர்ந்து பிபிசி தமிழும் அந்த ஊடகங்களுக்கு மாறுகிறது.

தமிழோசை  

பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்புகள் 1980களிலிருந்து இலங்கையின் போர்க் காலத்தில் அப்பகுதி மக்களுக்கு ஓர் இன்றியமையாத முக்கிய சேவையை ஆற்றி வந்தன;

அந்த காலக்கட்டத்திலும், அதற்கு முன்னும் சங்கர் என்கிற சங்கரமூர்த்தி தலைமையில், ஷேக்ஸ்பியர் மற்றும் பெர்னாட்ஷா போன்றோரின் நாடக மொழிபெயர்ப்புகள் மற்றும் பிற சஞ்சிகை வடிவ நிகழ்ச்சிகளுக்கு பெயர் போனதாக பிபிசி தமிழோசையின் நிகழ்ச்சிகள் இருந்தன.

பின்னர் 1990களின் பிற்பகுதியில் முழுமையான செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான செய்தி ஒலிபரப்பாக தமிழோசை மாறியது.

இந்த நீண்ட வரலாற்றில் பிபிசி தமிழோசைக்கு ஆதரவளித்து வந்த நேயர்களுக்கு பிபிசி தமிழ் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் தொலைக்காட்சி, இணையம் மற்றும் சமூக ஊடகம் போன்ற நவீன தளங்களில் பிபிசி தமிழை தொடர்ந்து ஆதரிக்குமாறு நேயர்களை கேட்டுக் கொள்கிறோம்.

http://www.bbc.com/tamil/global-39503877?ocid=socialflow_facebook

பிபிசி தமிழோசை..........! ஒரு காலத்தில் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து இருந்த வானொலி சேவை. மின்சாரம் இல்லாத யுத்த பொழுதுகளிலும் சைக்கிளை சுற்றி, டைனமோவை உருள வைத்து செய்தி கேட்டு இருக்கின்றோம். வானொலி அறிவிப்பாளர் ஆனந்தி அக்காவை ஒரு போதும் மறக்க முடியாது (தலைவரை நேரடியாக பேட்டி கண்டவர்களில் அவரும் ஒருவர்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருகாலத்தில் தமிழ் பிபிசியின் செய்திகள் தமிழ் உணர்ச்சியுடனே.....தமிழ் மணத்துடனேயே ஒலிபரப்பாகியது. அறிவிப்பாளர்களின்  அறிவுப்புத்திறனும் தமிழ்கலந்த இசையும் இன்னும் மெருகூட்டின. 

பிபிசி தமிழ் என்று கைமாறியதோ அன்றிலிருந்து நடுநிலமையற்ற செய்திகளும் தேவையில்லாத செய்திகளுமாகவே இருக்கின்றது.இவர்களுக்கு கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்குள் தமிழ்சார்ந்த முக்கிய செய்திகளை தவிர்த்து உல்லாச /ஒய்யார செய்திகளுக்குமே சம்பந்தப்பட்டவர்கள் இடம்கொடுக்கின்றார்கள்.
இந்த நிலையில் ரமில் பீப்பீசியை ஒட்டுமொத்தமாக  இழுத்து மூடினாலும் வரவேற்கத்தக்கதே.

Edited by குமாரசாமி
மாக

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வானொலியை  வைத்துக்கொண்டு 

எம்மை  காட்டிக்கொடுத்தும்

முதுகில் குத்தியும் அழிக்க உதவியது தான்  அதிகம்

16 minutes ago, விசுகு said:

இந்த வானொலியை  வைத்துக்கொண்டு 

எம்மை  காட்டிக்கொடுத்தும்

முதுகில் குத்தியும் அழிக்க உதவியது தான்  அதிகம்

எப்படி?
யாரால் ?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

எப்படி?
யாரால் ?

நடுநிலையாளர்கள் என்ற போர்வையை  போட்டுக்கொண்டு

சிறீலங்காவுக்கு சாதகமான விடயங்களையே பேசினார்கள்

வெளிக்கொண்டு வந்தார்கள்

இராணுவ மற்றும் 

போராளிகளின் பேட்டிகளில் கூட  இந்த போர்வை 

ஒரு தரப்பை தூக்கிவிடுவதாகவே இருந்தது

பல காலத்துக்கு முன்பே இதை கேட்பதை  நிறுத்திவிட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

ஒருகாலத்தில் தமிழ் பிபிசியின் செய்திகள் தமிழ் உணர்ச்சியுடனே.....தமிழ் மணத்துடனேயே ஒலிபரப்பாகியது. அறிவிப்பாளர்களின்  அறிவுப்புத்திறனும் தமிழ்கலந்த இசையும் இன்னும் மெருகூட்டின. 

பிபிசி தமிழ் என்று கைமாறியதோ அன்றிலிருந்து நடுநிலமையற்ற செய்திகளும் தேவையில்லாத செய்திகளுமாகவே இருக்கின்றது.இவர்களுக்கு கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்குள் தமிழ்சார்ந்த முக்கிய செய்திகளை தவிர்த்து உல்லாச /ஒய்யார செய்திகளுக்குமே சம்பந்தப்பட்டவர்கள் இடம்கொடுக்கின்றார்கள்.
இந்த நிலையில் ரமில் பீப்பீசியை ஒட்டுமொத்தமாக  இழுத்து மூடினாலும் வரவேற்கத்தக்கதே.

ஐக்கிய நாடுகள் சபையையே கட்டுக்குள் வைத்திருந்த இந்தியாவுக்கு பிபிசி எம்மாத்திரம்?

18 minutes ago, விசுகு said:

நடுநிலையாளர்கள் என்ற போர்வையை  போட்டுக்கொண்டு

சிறீலங்காவுக்கு சாதகமான விடயங்களையே பேசினார்கள்

வெளிக்கொண்டு வந்தார்கள்

இராணுவ மற்றும் 

போராளிகளின் பேட்டிகளில் கூட  இந்த போர்வை 

ஒரு தரப்பை தூக்கிவிடுவதாகவே இருந்தது

பல காலத்துக்கு முன்பே இதை கேட்பதை  நிறுத்திவிட்டேன்

பி.பி.சி யின் அரசியல் என்பது பிரித்தானியாவின் அரசியலை ஒட்டியது. ஐரோப்பிய அரசியலை ஒட்டியது.  வெளி உலகிற்கு  சுதந்திர வானொலி என்று காட்டிக் கொண்டாலும் அதன் அரசியல் மைய நீரோட்டத்துக்கு அமைவாக தான் அமையும். இதை விட அதிகம் எதிர்பார்க்க முடியாது. அமரிக்காவுக்கு ஒரு சி.என். என்; பிரித்தானியாவுக்கு பி.பி.சி

ஆனால் பி.பி.சி  மட்டுமல்ல உலகில் உள்ள அநேக சர்வதேச ஊடகங்களும் இலங்கை அரசுக்கு ஆதரவாக தான் இயங்கின. பிபிசி யில் இருந்து அல் ஜஸீரா வரைக்கும். ஏனெனில் நாம் செய்த அரசியலின்  இலட்சணம் அப்படி இருந்தது

நாய் வாலை  நிமிர்த்தும் தந்திரம் எமக்கு   தெரிந்திருக்கவில்லைத்தான்..

அத்துடன் ஈழத்தில் எண்ணெய் இல்லையே..

விதி..??

  • கருத்துக்கள உறவுகள்

பி.பி.சி தமிழோசை வானொலி இனி இல்லை..  என்ற செய்தி...  மிகவும்... சந்தோசமான, விடயம்.
நிகழ்ச்சியின் ஆரம்பம்.. ஒரு வித நாதஸ்வர ஓசையுடன் ஆரம்பிக்கும் போதே... 
லண்டனிலிரிருந்து... சங்கர்....  என்று,  சங்கர்  அண்ணாவின் (தமிழ்நாடு)  வித்தியாசமான,  கரகரப்பான...  அருமையான  குரலில்,  ஒரு திருக்குறளுடன்... இனிமையாக  ஆரம்பிக்கும்.  
இடையில்.... ஆனந்தி அக்கா, மயில் வாகனம் அண்ணா போன்ற ஒலி  பரப்பாளர்கள் எல்லாரும் வந்து, தமது குரலில் கலந்து... பல்வேறு நாட்டு செய்திகளை தரும் போது... சுவராசியமாக இருக்கும்.

பின்பு....  லண்டன் பி.பி.சி.  தலைமை செய்தியாளராக இருந்து, சங்கர் அண்ணா   ஓய்வெடுக்கும் காலங்களில்.. ஈழப் போரும், ஓரளவுக்குக்கு மும்முரமான கட்டங்களில் கூட.....  ஈழப் போராட்டத்துக்கு ஆதரவான செய்திகளே வந்து கொண்டு இருந்தது. அவர்... ஓய்வுக்கு சென்ற பின்.... அந்த தலைமை நிர்வாக இடத்தை,  ஒட்டுக்குழு  ஈழத் தமிழர் ஒருவர் எடுத்த பின்.... அது, லண்டன் பி. பி. சி. அல்ல,  களண்டவன்... பி. பி. சி. மாதிரி, ஈழத் தமிழர் போராட் ட  செய்திகளை புறக்கணித்து... ஸ்ரீலங்கா, இந்தியாவின்   ஊது குழல் செய்திகளை வெளியிடும் போது.... அதனை பார்ப்பதை குறைத்துக் கொண்டேன்.

இந்த நேரம்... லண்டன்  சிங்கள பி.பி.சி.... துணிவாக,  ஆணித்தரமான, நியாயமான  செய்திகளை, தமிழருக்கு ஆதரவாக.. வெளியிட்டு வந்ததை, என்றும் மறக்க முடியாது. அதனால்.... அந்த, சிங்கள தலைமை செய்தியாளருக்கு... ஸ்ரீலங்கா அரசிடம் இருந்து, பல கண்டனங்களும், அச்சுறுத்தலும்  வந்தது. எதனையும் அவர், பொருட்படுத்தவில்லை.  தனது,  கடமையை செய்தார். 

தான்... செய்த கெட்ட  வேலையால்,  உலகில் உள்ள  எட்டுக் கோடி தமிழனுக்கு.. தமிழ்  பி.பி.சி.  இல்லை.
ஒழுங்கான வேலை செய்த.. ஒரு கோடி சிங்களவனுக்கு, இன்னும் பி.பி.சி இயங்கிக் கொண்டு இருப்பதும் சந்தோசமே.

இனியாவது... நம்ம சனம், திருந்தட்டும்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
On 6.4.2017 at 9:00 PM, நவீனன் said:

பிபிசி தமிழோசை வானொலியின் சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தப்படுகிறது

பிபிசி உலக சேவை வரலாற்றில் மிக நீண்ட காலம் நடத்தப்பட்டு வந்த மொழிப் பிரிவுகளில் ஒன்றான தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு, இந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியோடு நிறுத்தப்படுகிறது.

தமிழோசை

கடந்த 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிபிசி தமிழோசை வானொலிச் சேவையின் சிற்றலை ஒலிபரப்பு, இந்த ஆண்டுடன் ஏறக்குறைய 76 ஆண்டுகளை தொடுகிறது.

சிற்றலை என்ற தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்படும் வானொலிச் சேவைகள், இந்தியா மற்றும் இலங்கையில் தொலைக்காட்சி, இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் ஆதரவை இழந்து வருவதே தமிழோசையின் ஒலிபரப்பு நிறுத்தப்படுவதற்கான காரணமாகும்.

ஆனால் தற்போது இலங்கையின் சக்தி எஃப் எம் மூலம் நடத்தப்பட்டு வரும் பிபிசி தமிழின் ஐந்து நிமிட பண்பலை ஒலிபரப்பு தொடரும்; அதில் எந்த மாற்றங்களும் இல்லை.

இணையதள சேவை விரிவாக்கம்

மேலும் பிபிசி தமிழின் சிற்றலை ஒலிபரப்புகள் நிறுத்தப்பட்டாலும் பிபிசி தமிழின் இணையதள சேவைகள் விரிவுபடுத்தப்படுகின்றன.

தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களுக்கு நேயர்கள் மாறிக் கொண்டிருக்கையில் அவர்களுடன் சேர்ந்து பிபிசி தமிழும் அந்த ஊடகங்களுக்கு மாறுகிறது.

தமிழோசை  

பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்புகள் 1980களிலிருந்து இலங்கையின் போர்க் காலத்தில் அப்பகுதி மக்களுக்கு ஓர் இன்றியமையாத முக்கிய சேவையை ஆற்றி வந்தன;

அந்த காலக்கட்டத்திலும், அதற்கு முன்னும் சங்கர் என்கிற சங்கரமூர்த்தி தலைமையில், ஷேக்ஸ்பியர் மற்றும் பெர்னாட்ஷா போன்றோரின் நாடக மொழிபெயர்ப்புகள் மற்றும் பிற சஞ்சிகை வடிவ நிகழ்ச்சிகளுக்கு பெயர் போனதாக பிபிசி தமிழோசையின் நிகழ்ச்சிகள் இருந்தன.

பின்னர் 1990களின் பிற்பகுதியில் முழுமையான செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான செய்தி ஒலிபரப்பாக தமிழோசை மாறியது.

இந்த நீண்ட வரலாற்றில் பிபிசி தமிழோசைக்கு ஆதரவளித்து வந்த நேயர்களுக்கு பிபிசி தமிழ் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் தொலைக்காட்சி, இணையம் மற்றும் சமூக ஊடகம் போன்ற நவீன தளங்களில் பிபிசி தமிழை தொடர்ந்து ஆதரிக்குமாறு நேயர்களை கேட்டுக் கொள்கிறோம்.

http://www.bbc.com/tamil/global-39503877?ocid=socialflow_facebook

மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப BBC தமிழ் எடுத்த முடிவு நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழ் சிறி said:

இடையில்.... ஆனந்தி அக்கா, மயில் வாகனம் அண்ணா போன்ற ஒலி  பரப்பாளர்கள் எல்லாரும் வந்து, தமது குரலில் கலந்து... பல்வேறு நாட்டு செய்திகளை தரும் போது... சுவராசியமாக இருக்கும்.

ஆனந்தி ஒலிபரப்பிய காலங்களில் அவவின் செய்தி கேட்பதற்காக காத்திருந்த காலங்கள்.ஒரு மன நிறைவு.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

காற்றில் கலந்த தமிழோசை

tamilosai_3160168f.jpg
 
‘அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்’ என்ற சங்கரண்ணாவின் கம்பீரக் குரலுக்குத்தான் எத்தனை எத்தனை ரசிகர்கள்

பிபிசி தமிழோசை ஏப்ரல் 30-ல் தனது 76 ஆண்டு கால சிற்றலை ஒலிபரப்பை நிறுத்தியிருக்கிறது. அதே சமயம், தெலுங்கு மற்றும் குஜராத்தியில் இணைய வழி சேவையைத் தொடங்கவுள்ளது. ஏற்கெனவே, இந்தி மற்றும் வங்காளியில் ஒலிபரப்பிவருகிறது. தமிழ் தொலைக்காட்சி சேவை தவிர, மற்ற அனைத்து சேவைகளையும் தமிழோசையானது லண்டனிலிருந்து புது டெல்லிக்கு மாற்றிக்கொண்டது. பவளவிழா ஆண்டில் சிற்றலை ஒலிபரப்பை பிபிசி தமிழோசை நிறுத்திக்கொள்ள என்ன காரணம்?

பிபிசி உலக சேவை வானொலியானது பிபிசியின் சாம்ராஜ்ய சேவையாக 1932-ல் தொடங்கியது. அந்தக் காலத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருந்த சிற்றலை ஒலிபரப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தொலைதூரப் பிரதேசங்களுக்கு இந்த வானொலி ஒலிபரப்பப்பட்டது. உண்மையில், ‘இந்த வானொலியில் வரும் செய்திகள் சிறப்பாகவோ, சுவாரசியமாகவோ இருக்காது’ என்றே பிபிசியின் அந்நாளைய தலைமை இயக்குநர் ஜான் ரீத் கணித்திருந்தார். அவரது கணிப்பு பொய்யானது, லண்டனின் ‘பிராட்காஸ்டிங் ஹவு’ஸில் இருந்து ஒலிபரப்பப்பட்ட இந்த வானொலிக்கு நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்தன.

பிபிசி உலக சேவை

பிரிட்டிஷ் மாமன்னரோ மகாராணியோ தமது சாம்ராஜ்யப் பிரஜைகளிடம் பிபிசி உலக சேவையின் சிற்றலை ஒலிபரப்பு மூலமாக கிறிஸ்துமஸ் உரையாற்றுவது என்பது ஒரு பாரம்பரியமாகவே மாறிப்போனது. 1940-ல் ஜெர்மனியின் ஹிட்லர் தலைமையிலான நாஜிப் படைகளிடம் பிரான்ஸ் சரணடைய நேர்ந்தது. அப்போது பிரான்ஸை விட்டு வெளியேறிய பிரெஞ்சு ராணுவத் தளபதி சார்ல் த கோல் லண்டன் ‘பிராட்காஸ்டிங் ஹவு’ஸில் இருந்தபடிதான் பிரெஞ்சு மக்களுக்கு உரையாற்றிவந்தார். ஒவ்வொரு நாளும் ஐந்து நிமிடங்கள் எனத் தொடர்ச்சியாக நான்கு வருடங்களுக்கு அவரது உரை பிபிசி உலக சேவையின் சிற்றலையில் ஒலிபரப்பப்பட்டு வந்தது.

1960-களில் டிரான்ஸிஸ்டர் தொழில்நுட்பத் தின் வரவால் கையில் எடுத்துச் செல்லக்கூடிய அளவுக்குச் சிறியதாகவும், மின்கலங்களின் சக்தியைக்கொண்டே இயங்கக்கூடியதாகவும் வானொலிப் பெட்டிகள் உருமாறின. எல்லோர் கைகளிலும் வானொலி புழங்க ஆரம்பித்தது. உலகெங்கிலும் ஏராளமான புதிய நேயர்கள் கிடைக்க, கடல் கடந்த சேவை பிபிசியின் உலக சேவையாக புதுப் பெயரும் புதுப் பொலிவும் பெற்றது.

பிபிசி உலக சேவையானது (ஆங்கிலப் பிரிவு) தனது 85 வருட சரித்திரத்தில் 68 மொழிகளில் சிற்றலை ஒலிபரப்புகளைச் செய்துள்ளது. இந்த 85 ஆண்டுகளில் நிகழ்ந்த பல வரலாற்றுச் சம்பவங்கள் பற்றியும் அந்தந்த இடங்களிலிருந்து உடனடியாகச் செய்தி வழங்கும் ஒரு சேவையாக பிபிசி உலக சேவை விளங்கிவந்துள்ளது. பெர்லின் சுவர் விழுந்த சமயத்தில் அங்கும் பிபிசி உலக சேவையின் செய்தியாளர் இருந்தார்.

அதிர்வுடன் தொடங்கிய தமிழ்ச் சேவை

இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தினால் பிபிசி சாம்ராஜ்ய சேவை, பிபிசியின் கடல் கடந்த சிற்றலை வானொலிச் சேவையாகப் புதிய பெயர் பெற்றது. அரபு மொழி, தென் அமெரிக்கர்களுக்கான ஸ்பானிய மொழிச் சேவை, ஜெர்மன், பிரஞ்சு, போர்ச்சுக்கீசியச் சேவை மற்றும் பல புதிய மொழிகளில் ஒலிபரப்புகள் சிற்றலையில் ஆரம்பிக்கப்பட்டன. 1940-ன் இறுதியில் பிபிசி கடல் கடந்த சேவையில் மொத்தம் 34 மொழிச் சேவைகள் இருந்தன.

பிராட்காஸ்டிங் ஹவுஸுக்கு வெளியே 1940 டிசம்பரில் ஒரு நிலக்கண்ணி வெடித்து தீ மூண்டு, கட்டிடம் சேதம் அடைய, பிபிசி கடல் கடந்த சிற்றலை சேவை புஷ் ஹவுஸுக்கு 1941-ல் இடம் மாறியது. அந்த மாற்றத்தை ஒட்டி புதிதாகத் தமிழ்ச் சேவையான தமிழோசையும் சிற்றலையில் ஆரம்பிக்கப்பட்டது. அது முதல் கடந்த 76 வருடங்களாக இந்நிறுவனத்தின் தலைமையகமாக விளங்கிவருவது புஷ் ஹவுஸ்தான்.

வீரர்களுக்கான வானொலி

பிபிசி தமிழோசையின் வரலாறு வித்தியாச மானது. மற்ற வானொலிகள் போன்று இது நேயர்களுக்காகத் தொடங்கப்பட்ட வானொலி அல்ல. பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியிலிருந்த தமிழகப் படை வீரர்களுக்காகத் தொடங்கப்பட்டது. வானொலிக்குப் பெயர் வைத்தது, வானொலியின் குறியீட்டில் உள்ள தனித்தன்மை போன்றவை அனைத்தும் வானொலி நேயர்களால் என்றைக்குமே மறக்க முடியாதவை.

சங்கர் சங்கரமூர்த்தி (சங்கரண்ணா) பொறுப்பாளராக இருந்த காலகட்டத்தில் தொடங்குகிறது தமிழோசையின் தனித்தன்மை. ‘அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்’ என்ற சங்கரண்ணாவின் கம்பீரக் குரலுக்குத்தான் எத்தனை எத்தனை ரசிகர்கள். அதே காலகட்டத்தில் புகழ் பெற்ற சிற்றலைத் தமிழ் வானொலியான வெரித்தாஸில் ‘இனிய இதயங்களே’ எனப் பாசத்தோடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து அழைத்தார், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் ரபி பெர்னார்டின் தந்தை ஆரோக்கியசாமி. வத்திகான் வானொலியின் தமிழ்ப் பிரிவு ‘அன்புள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம்’ என்றது. இப்படி, நேயர்கள் வேறு யாருமல்ல, அவர்கள்தான் நம் குடும்பம், அவர்களுக்காகத்தான் நாமே ஒழிய.. நமக்காக அவர்கள் இல்லை என்ற மாதிரியான ஒரு காலகட்டமும் இருந்தது.

குறைந்த நேயர்கள்

சிற்றலை ஒலிபரப்பினை நிறுத்துவதற்கான காரணமாகக் கூறப்படுவது, சிற்றலை ஒலிபரப்புகளை யாரும் கேட்பதில்லை என்பது. ஒரு சில நேயர்களுக்காகப் பல லட்சங்கள் செலவு செய்து ஒலிபரப்பு செய்வது இயலாத ஒன்று. எந்த ஒரு வானொலிக்கும் அதன் நேயர்கள் ஒரு பெரிய பலம்.

பிபிசி தமிழோசைக்கும் ஒரு காலத்தில் அந்தப் பலம் இருந்தது. நாளடைவில் நேயர்களின் எண்ணிக்கை குறைந்தது. இன்றைய காலகட்டத்தில் யாரும் வானொலிகளைக் கேட்கத் தயாராக இல்லை. அதுவும் சிற்றலையில் கேட்க வேண்டுமாயின் மிகவும் பொறுமைசாலியாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், இன்று சிற்றலை வானொலிப் பெட்டிகள் கடைகளில் கிடைப்பதும் இல்லை.

சிற்றலை வானொலி கேட்கும் நேயர்களுக்கு ஒன்று தெரிந்திருக்கும். குறிப்பிட்ட வானொலி அலைவரிசையைத் தேடிக் கண்டுபிடித்துக் கேட்பதற்கே ஐந்து நிமிடங்கள் தேவைப்படும். அடுத்த பத்து நிமிடங்களில் தமிழ் நிகழ்ச்சி நிறைவடைந்துவிடுகிறது. வெளிநாட்டு நேயர்களிடம் இருப்பது போன்ற ‘டிஜிட்டல்’ வானொலிப் பெட்டிகள் எல்லாம் சாதாரண கிராமப்புற நேயர்களிடம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. முன்பு 30 நிமிடங்களாக இருந்த பிபிசி தமிழோசை சிற்றலை, பின்னர் 15 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டது. இன்றைக்கு முற்றிலும் நிசப்தமாகிவிட்டது!

http://tamil.thehindu.com/opinion/columns/காற்றில்-கலந்த-தமிழோசை/article9675768.ece?homepage=true&theme=true

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரோடு ஒன்றித்திருந்த வானொலி. மேற்கிலே பிபிசி தமிழ் கிழக்கிலே வெரித்தாஸ் என்று ஒருகாலத்தில் எப்போது என்று காத்திருந்த காலங்கள் மறக்கமுடியாதவை.

On 7.4.2017 at 9:41 PM, தமிழ் சிறி said:

பி.பி.சி தமிழோசை வானொலி இனி இல்லை..  என்ற செய்தி...  மிகவும்... சந்தோசமான, விடயம்.
நிகழ்ச்சியின் ஆரம்பம்.. ஒரு வித நாதஸ்வர ஓசையுடன் ஆரம்பிக்கும் போதே... 
லண்டனிலிரிருந்து... சங்கர்....  என்று,  சங்கர்  அண்ணாவின் (தமிழ்நாடு)  வித்தியாசமான,  கரகரப்பான...  அருமையான  குரலில்,  ஒரு திருக்குறளுடன்... இனிமையாக  ஆரம்பிக்கும்.  
இடையில்.... ஆனந்தி அக்கா, மயில் வாகனம் அண்ணா போன்ற ஒலி  பரப்பாளர்கள் எல்லாரும் வந்து, தமது குரலில் கலந்து... பல்வேறு நாட்டு செய்திகளை தரும் போது... சுவராசியமாக இருக்கும்.

பின்பு....  லண்டன் பி.பி.சி.  தலைமை செய்தியாளராக இருந்து, சங்கர் அண்ணா   ஓய்வெடுக்கும் காலங்களில்.. ஈழப் போரும், ஓரளவுக்குக்கு மும்முரமான கட்டங்களில் கூட.....  ஈழப் போராட்டத்துக்கு ஆதரவான செய்திகளே வந்து கொண்டு இருந்தது. அவர்... ஓய்வுக்கு சென்ற பின்.... அந்த தலைமை நிர்வாக இடத்தை,  ஒட்டுக்குழு  ஈழத் தமிழர் ஒருவர் எடுத்த பின்.... அது, லண்டன் பி. பி. சி. அல்ல,  களண்டவன்... பி. பி. சி. மாதிரி, ஈழத் தமிழர் போராட் ட  செய்திகளை புறக்கணித்து... ஸ்ரீலங்கா, இந்தியாவின்   ஊது குழல் செய்திகளை வெளியிடும் போது.... அதனை பார்ப்பதை குறைத்துக் கொண்டேன்.

இந்த நேரம்... லண்டன்  சிங்கள பி.பி.சி.... துணிவாக,  ஆணித்தரமான, நியாயமான  செய்திகளை, தமிழருக்கு ஆதரவாக.. வெளியிட்டு வந்ததை, என்றும் மறக்க முடியாது. அதனால்.... அந்த, சிங்கள தலைமை செய்தியாளருக்கு... ஸ்ரீலங்கா அரசிடம் இருந்து, பல கண்டனங்களும், அச்சுறுத்தலும்  வந்தது. எதனையும் அவர், பொருட்படுத்தவில்லை.  தனது,  கடமையை செய்தார். 

தான்... செய்த கெட்ட  வேலையால்,  உலகில் உள்ள  எட்டுக் கோடி தமிழனுக்கு.. தமிழ்  பி.பி.சி.  இல்லை.
ஒழுங்கான வேலை செய்த.. ஒரு கோடி சிங்களவனுக்கு, இன்னும் பி.பி.சி இயங்கிக் கொண்டு இருப்பதும் சந்தோசமே.

இனியாவது... நம்ம சனம், திருந்தட்டும்.

 தமிழ்சிறியவர்களே!
பெரியதொருவிடத்தை மிகச்சுருக்கிய ஆய்வாக படைத்தமை அருமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.